கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ஏதோ சொல்ல நெஞ்சம் துடிக்குதே - அத்தியாயம் 7

Mrithula Ashwin

Moderator
Staff member



அத்தியாயம் - 7


தன் தொழில் தொடர்பில், உருவாகிய எதிரி, தன்னை அழிக்க வல்ல பொறிகளை ஆராய்ந்து, திட்டம் வகுத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாத அனு, தன் வேலைகளை செவ்வனே நடத்திக் கொண்டிருந்தாள்.

ஹரிஷிடம் கூறியதுப் போல, இரு நாட்கள் கழித்து, அவனோடு வெளியே செல்வதால், இன்று முக்கியமான விடயத்துக்காக, அபாயம் இருந்தாலும், துணிந்து செயலாற்ற வேண்டிய தருணம் என்பதை உணர்ந்து, செயலில் இறங்கினாள்.

"ஆன்ட்டி, என் வேலை விஷயமா வெளியேப் போறேன்... வர எப்படியும் லேட்டாகும்.. அண்ட் போன் சைலெண்ட்ல போட்டிருப்பேன்.. கூடுமான வரைக்கும் எனக்கு கால் பண்ணிடாதீங்க" என்று அனு, கூறியபடியே வெளியே செருப்பை மாட்ட,

சாரதா, "பார்த்து பத்திரமா இரு.. ஜாக்கிரதை.. பெப்பர் ஸ்பிரே.. ஸ்டன் கன் எல்லாம் எடுத்துக்கிட்டியா?" என்று எச்சரிக்கை கலந்த கவலையுடன் வினவ, அவளோ சிரித்தாள்.

"ஐயோ ஆன்ட்டி, இத்தனை வருஷம் என்னை நானே தான் பாத்துக்கிறேன்.. இனிமேலும் அப்படித் தான்.. அதனால, அனாவசியமா கவலைப்படாம இருங்க..." என்றவள், மாலையில் கிளம்பிவிட்டாள்.

அவள் கிளம்பிய ஒருமணி நேரத்தில், வீடு வந்து சேர்ந்தான் யாழ்.

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன், புத்தகம் வாசித்துக் கொண்டிருந்த அன்னையிடம், "அவ எங்கம்மா?" என்று கேட்க, அவரோ, கூர்மையாக பார்த்தவர்,

"யாரு?"

"ம்ம்ம் இந்த வீட்டுல, மூன்றாவதா ஒரு ஜீவன் வந்துச்சே...(!)"

"எனக்கு தெரியாம நாய்க்குட்டி, பூனைக்குட்டி ஏதும் வளர்க்கிறியா என்ன?"

அதைக் கேட்டு, தலையைக் கோதி, அன்னையை முறைத்தான்.. அவரும் சளைக்காமல் அவன் முறைப்பை ஏற்று, 'நீ ஜித்தன்னா, நான் எத்தன் டா' என்று நினைத்துக் கொண்டார்.

"அம்மா...."

"என்னடா? உனக்கு இப்ப எந்த வேலையும் இல்லையா?? என்னை வந்து நோண்டிட்டு இருக்க? இந்த டைம் க்கு, நீ தான் கையில கட்டடம் கட்டப் (muscle build) போவியே??!! போகலை??" என்று கேட்டார் கிண்டலுடன், அபரிமிதமான ஆச்சரியத்துடனும்.

அவன் தலையில் அடித்துக் கொண்டாலும், உள்ளுக்குள், அனுலேகா எங்கே என்று தெரிந்துக் கொண்டே ஆக வேண்டும் என்று ஏனோ பிடிவாதம் எழுந்தது..

"விளையாடாம, உங்க மருமக எங்க போயிருக்கா?"

"எனக்கு மருமக ன்னா, உனக்கு யாரு?" என்று அப்போதும் சாரதா விடவில்லை...

"அம்மா தாயே... அ... அனுலேகா எங்கன்னு தயவு செஞ்சு சொல்றீங்களா??" வேறுவழியின்றி அவனும் தழைந்தான்.

"ம்ம்ம் அப்படி வா வழிக்கு!! அனு வேலை விஷயமா வெளியே போயிருக்கா... வர லேட்டாகும்னு சொன்னா.."

"எதுக்கு இந்த நேரத்துக்கு வெளிய போனா? அப்படி என்ன தலைப் போற வேலை?" என்றான் இனம் புரியாத ஆத்திரத்துடன்; கைபேசியை பட்டென, டீபாயில் எறிந்தான்...

அதை கேட்டு சாரதா, "யாழ்.. இதென்ன இப்படி ஒரு ரியாக்ஷன் உனக்கு...? நீ ஆஃபீஸ் விஷயமா போனா, எந்த வித நேரங்காலமும் பார்க்க கூடாது... ஆனா அவ மட்டும் பார்க்கணுமா??" என்று அவர் ஆட்சேபித்துப் பேச,

அப்போது அழையா விருந்தாளியாக, அவன் அன்னையை மேலும் கோபம் கொள்ளும் விதமாக, அவன் அலைபேசி தன்னிருப்பை உணர்த்த, தடுக்க இயலாமல், பார்த்தான் யாழ்.

அவன் அன்னையும் அழைப்பது யாரென பார்க்கும் படியாக, அலைபேசியை வைத்ததைப் பற்றி சத்தமில்லாமல் நொந்துக் கொண்டான்.

"யாழ் உனக்கு கல்யாணம் ஆனது ஐஸ்வர்யா க்கு தெரியுமா?" என்றார் குரலில் சினம் தெறிக்க..

அவனோ, அழைப்பை எடுக்கப்போக, அவன் கையைப் பிடித்துத் தடுத்தார். "என் கேள்விக்கு இப்பவே பதில் வந்தாகனும்!!"

"தெரியாது ம்மா"

"நீ பண்றதுக்கு பேர் என்ன தெரியுமா?.. துரோகம்... நீ ரெண்டு பொண்ணுங்களுக்குமே உண்மையா இல்ல.."

"அம்மா... அனு.. இல்ல ஐஸ்வர்யா எனக்காக வெய்ட் பண்றா ம்மா.."

"சோ வாட்...? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, அனு உன்கிட்ட சொல்லாம போனதுக்கு தாம்தூம் ன்னு குதிச்ச?! இப்ப ஐஷ்வர்யா போன் பண்றான்னு ஓடற.... இதுல எது உண்மை?"

"...."

"உன் வாழ்க்கையில இனிமே நம்ம அனு மட்டும் தான் மனைவி... அதை மறந்து, யோசனை செய்யாம எந்த காரியத்தையும் பண்ணாத..."

"மனசுல ஒருத்தியை வெச்சுட்டு.. இன்னொருத்தியை எப்படி மனைவியா நினைக்க முடியும்..?"

"இந்த சினிமாட்டிக் டயலாக்ஸ் எல்லாம் என்கிட்ட செல்லுபடி ஆகாது..."

"ஆமா... உங்களுக்கு டயலாக் மாதிரி தான் தோணும்... பட் எல்லாத்துக்கும் காரணமே நீங்க தான்.. உங்களுக்காக தான் நான் அனுலேகாவை கல்யாணம் பண்ணேன்.. இப்ப ரெண்டு பக்கமும் மாட்டிட்டு முழிக்கிறேன்.."

இதைக் கேட்டு, அதிர்ச்சியா, ஆத்திரமா என்று சொல்லொணா உணர்வில் சிக்கினார் சாரதா.

"என்னது நான் காரணமா?? உன் வாழ்க்கையை முடிவு பண்ணது நீ தான்.. உன்னை கல்யாணம் பண்ணிக்க மட்டும் தான், நான் வலியுறுத்தினேன்... யாரை கல்யாணம் பண்ணனும்னு நீ தான் முடிவு பண்ணே... அண்ட் நாட் மீ...

ஒரு நாள், நீயா ஐஷ்வர்யாவை லவ் பண்றேன்னு சொன்ன... சரி ன்னு கல்யாணம் பண்ணி வெக்க சம்மதிச்சேன். அங்க கப்பலுக்கு வரலை ன்னதும், கல்யாணத்த நிறுத்த வந்த அனுவை, கட்டிகிட்ட... இதுல எது என் தப்பு..? நான் அன்னிக்கே சொல்லிட்டேன் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காத ன்னு.."

"...."

"ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துராத... எல்லா தப்புக்கும் நீ தான் பொறுப்பு... நானோ, அனுவோ காரணமில்ல... ஒரு வகையில், முக்கியமான தருணத்தில் கம்பி நீட்டின, ஐஷ்வர்யா கூட தப்பு தான்..."

"...."

"கடைசியா சொல்றேன்... ஐஷ்வர்யா கிட்டப் பேசி, அவளோட மனசை மாத்திக்கிட்டு, வாழ்க்கையைப் பார்க்க சொல்லு" ,என்று எச்சரித்தார்.

கூடவே, "இதுக்கப்புறமும் ஏதாவது ஏடாகூடமா யோசிச்சு குளறுபடி பண்ண, பையன்னு கூடப் பார்க்க மாட்டேன்... உருட்டுக் கட்டையால பொலந்துருவேன்." என்றுக் கூறி நகர்ந்தவரை,

"இவங்க என் அம்மாவா இல்ல மாஃபியா கும்பல் தலைவியா... இப்படி மிரட்டிட்டுப் போறாங்க??!!" என்று வெளிப்படையாகவே முணுமுணுத்தான்.

மீண்டும், ஐஷ்வர்யா அழைக்கவே, அதை ஏற்றவன், "ஹலோ.."

"என்ன இனியன்?.. ஏன் குரல் ஒரு மாதிரி சோர்வா இருக்கு? கொஞ்சம் நேரம் முன்ன, கால் பண்ணேன்.. எடுக்கவேயில்ல.. சரி ஆஃபீஸ் விட்டு இன்னும் வரலைன்னு நினைச்சேன்" என்றாள் ஐஷ்வர்யா குரலில் ஏற்ற இறக்கங்களுடன்.

"ம்ம்ம் அது... ஆமா.. கொஞ்சம் டயர்டா இருக்கு.. வேற ஒன்னுமில்ல.. நீ சொல்லு.. நீ எப்படி இருக்க? ஷூட்டிங் முடிஞ்சதா?"

"ம்ம்ம்.. எப்படி சொல்ல.. உங்களை பார்க்கணும் போல இருக்கு.. கிளம்பி வரணும் ஆசையா இருக்கு.. பேசாம நான் கிளம்பி வராம கல்யாணத்த பண்ணிருக்கலாம்னு தோணுது இனியன்.." என்றாள் ஏக்கமாக.!

யாழினியன், ஒரு கணம் போனை காதிலிருந்து எடுத்து, மீண்டும் ஒற்றினான்.

"முடிஞ்சதை நினைச்ச ஒன்னும் பண்ண முடியாது... நீ....."

"கரெக்ட் தான்.. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க.. இந்த படத்தை முடிச்சிட்டு சீக்கிரம் வந்துடறேன்.. படம் ஹிட்டாகும் (!!)... அதுக்காக தான் இப்ப வர சில பட வாய்ப்பை எடுக்காம இருக்கேன்.. அப்ப தானே, என் மார்க்கெட் உயரும் சோ தைரியமா டீல் பேசலாம்.. ஆனா உடனே கல்யாணம் பண்ண முடியாது இனியன்..

நீங்க எனக்காக வெய்ட் பண்ணுவீங்க தானே.. அந்த நம்பிக்கையில தான்.. நான் இப்படி ஒரு முடிவு எடுத்து இந்த ஸ்டேஜ் க்கு வந்திருக்கேன்.." அவள் பேச பேச, இவனோ என்ன செய்வது, சொல்வது என்றறியாமல், தலை சொறிந்தான்.

கூடவே இன்னொன்றும் தோன்றியது... 'இது அவளோட தற்பெருமை, தன்னலம் அழைப்பா அல்லது, காதல் ஏக்க அழைப்பா.. இல்லையென்றால், காதல் ஏக்கம் போல பேசி, என்னை வசப்படுத்தும் நோக்கமா?'.

ஒருவழியாக, ஐஷ்வர்யா வுடன் பேசி முடித்து அறைக்குள் சென்றான்.
எதை யோசிப்பது என்ன முடிவெடுப்பது என்று குழம்பினான்.

இதற்குள் இன்னொரு அழைப்பு வர, எரிச்சலுடன் போனை எடுத்துக் காதில் வைத்தான்.

"என்னடா.. சொல்லித் தொலை"

"பிரதர் ரொம்ப சூடா இருக்கீங்க ன்னு நினைக்கிறேன்.. சரி நான் மேட்டரை சொல்லிடறேன்.."

"ஆர்ட் எக்சிபிஷன் அண்ட் ஆக்ஷன் (auction) க்கு நீ வருவியா? டிக்கெட் ரிசர்வ் பண்ணனும்.."

"நான் எந்த புண்ணாக்கு ஆக்ஷனுக்கும் வரலை" என்றவன், போனை அணைக்கப் போக,

"ஓகே.. அப்ப அனுக்கு மட்டும் டிக்கெட் போடறேன்" என்று சொல்லி வைத்ததை நினைத்து, யாழினியனுக்கு மேலும் ரெண்டு குவளை பச்சை மிளகாய் ஜூஸ் குடித்ததைப் போல உணர்ந்தான்.

"ஆண்டவா... ஒய் மீ??" என்று புலம்பி, அயர்ச்சியில் தரையில் மல்லாக்கப் படுத்து சுழலும் காத்தாடியைப் பார்த்திருந்தான்.

சற்று நேரம் தன்னையும் அறியாமல் கண் அயர்ந்தவன்; திடீரென முழிப்பு வந்ததில், தன்னிச்சையாக கையில் வைத்திருந்த போனில் மணி பார்த்தான்.

அனு இன்னும் வரவில்லை என்ற எண்ணம் உதித்து, அவளுக்கு அழைப்பு விடுத்தான். ஆனால் நீண்ட நேரம் ஒலியெழுப்பியும் பலனின்றி ஓய்ந்தது. அவள் சைலெண்ட் மோடில் வைத்திருப்பதுத் தெரியாமல், முயன்று, முயன்று, இயலாமையின் வெளிப்பாடாக சினம் தலைக்கு ஏறியது அவனுக்கு.. (எத்தனை சினம்!!!)..

அங்கே அவளோ, உசைன் போல்ட் க்கே (இல்ல allyson felix என்றும் சொல்லலாம்) கடுமையான போட்டிக் கொடுக்கும் அளவுக்கு, தப்பிக்க ஓடிக் கொண்டிருந்தாள்.

பின்னே, இரண்டு மூன்று நபர்கள் அவளை துரத்த, "டேய் பிடிங்க டா... அவளை விட்டுடக் கூடாது..." என்று கத்தியப் படியே விரைய,
பிழைக்க அவள் ஓட, மூளை அதி விரைவாக வழிகளை ஆராய்ந்தது.

ஒரு கட்டத்தில் தன் உடல் பலத்தை நம்பியே ஆக வேண்டும் என்று உறுதியாக, சுவர் ஏறி குதித்து, சந்து பொந்து, இண்டிடுக்கு என வளைந்து நெளிந்து ஓடி, அவர்கள் கண்ணில் சிக்காமல், அபார்ட்மெண்ட்டின் பின்பக்க நுழைவு வாயிலை அடைந்து விட்டாள். உயிரைப் பறிக்க ஓடுபவனை விட, உயிரைக் காப்பாற்றிக்க வேண்டி ஓடுபவனின் வேகம் மிகையாக இருக்கும் (டாம் & ஜெர்ரி லாஜிக்).

அந்த நேரத்தில், செக்யூரிட்டி கார்டு இல்லாதது அவளுக்கு வசதியாகிப் போனது. இல்லையென்றால் ஏனைய கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் சொல்லி மாளாது.

எப்படியோ, வீட்டுச்சாவிப் போட்டு, கதவை திறந்து, சத்தமின்றி தங்கள் அறைக்கு செல்ல, அடுத்த அதிர்ச்சியாக, பின்பக்கமாக அவளின் கைகள் கட்டப்பட, வாய் மேல், பேக்கஜிங் டேப் ஒட்டப்பட, கத்த முடியாமல், எதிர்த்தாக்குதல் நடத்தவும் சிரமப்பட்டாள்.

'ம்ம்ம் ம்ம்ம்ம்' என்று மட்டுமே அவளால் குரல் கொடுக்க இயல, சட்டென வெளிச்சம் பிறந்தது. அதில் யார் அதிர்ச்சியானார்கள் என்று சொல்வதற்கில்லை!!..

யாழ், "நான் நினைக்கிறது கரெக்ட் தானா? நீ அனுலேகா தானே... என்னடி இது கோலம்??" என்று கேட்க,

அவளோ, தன் ஷு காலால் அவன் பாதத்தில் ஓங்கி மிதிக்க, "அம்மா... ஆஆ.. ஆஅ" என்று கத்தினான்.

அவன் கத்தலை குறைக்க எண்ணி, அவள் அருகே செல்ல, அவனோ "என்னடி இப்படி மிதிக்கிற... ஆஅ வலிக்குதே.. என்னை கொல்லப் பார்க்கிறாளே.." என்று சிக்கன் வார் கேமில் (ஒரு காலை வளைத்து மற்றொரு காலில் நின்று எதிராளியுடன் சண்டையிட வேண்டும்) நிற்பதுப் போல நின்றுப் புலம்ப, அவள் திரும்பி நின்று தன் கைகளை அவன் எதிரே நீட்ட, அவனும் புரிந்துக் கொண்டு, உடனே கைக்கட்டை நீக்கினான்.

டேப் ஒட்டியதை, அவளே கழட்ட, இப்போது தைரியமாக அவள் மூக்கு கீழ் ஒட்டிய மீசையை அவன் உருவ, அது வருவேனா என்று அடம் பிடித்தது.. 'ஸ் ஸ்ஸ்' அவள் முனக, "சாரி சாரி" என்றும் கூறினான்.

இந்த மன்னிப்பு என்கிற வார்த்தை, பஞ்சாட்ஷரம் போலவே தம்பதிகளுக்குள் வலிமை மிக்கது. பொங்கி வரும் பாலை தண்ணீர் தெளித்து அடக்குவதுப் போல, ஈகோ, ஊடல் போன்ற சண்டை சச்சரவுகள், நொடிக்குள் காணாமல் போய்விடுவது என்ன விந்தையோ!!

அவன் கேட்ட மன்னிப்பு அவளை அமைதிப்படுத்த, இப்போது மெதுவாக இழுத்தான் அந்த ஒட்டு மீசையை.

"ஒட்டு மீசையில இந்தளவுக்கு பசை இருக்குமா? நல்லாருக்கே" என்க,

அவளோ, "அது நானே பண்ண ஒட்டு மீசை.. டெய்லி உதிரும் முடியை சேர்த்து வெச்சு ஒட்டிட்டு, மேலே ஐ லேஷ் க்ளு, போட்டு ஒட்டிப்பேன்..

அவள் சொன்னதைக் கேட்டு, விசித்திரமான பார்வை ஒன்றை வீசி, "நீயென்ன சுதந்திர தின மாறுவேடப் போட்டிக்கா போயிட்டு வர?"என்று நக்கலாக கேட்டான்.

"எந்த மாக்கான் நைட் போட்டி வெக்கிறான்... ?? இது துப்பறியும் மூளையோட சாகசம்.. புலனாய்வு இதழியல் தான் என்னோட வேலையே.. அதுக்கு சில ரிஸ்கியான இடத்துக்கு போக வேண்டியது வரும்.. ஒரு பொண்ணா போறதை விட, பையனா போனா பெட்டர் ன்னு தோணிச்சு.. அதுக்கு தான் இந்த காஸ்ட்யூம் எஃபெக்ட்ஸ்" என்றாள் பெருமிதமாக..

அவனோ, "எல்லாம் சரி தான்.. எனக்கு பல விஷயம் புரியல... அதைப் பத்தி அடுத்து வரேன்... இருந்தாலும், ஒரு சில டிசைன்ஸ், என்னதான் வேஷம் போட்டாலும், பொண்ணா தான் தெரியும்... அப்படி தான் நான் இப்ப கண்டுபிடிச்சேன்.. அது என்னன்னா??.... "

"டேய்" என்று கத்தி, அவனது இன்னொரு பாதத்தையும் பதம் பார்த்துவிட்டாள் அனுலேகா.
 

Deepa

Active member
1st
யாழ் அனுவா ஐஸ்யா முடிவெடுக்க முடியாமயிருக்கதே.
 

Mrithula Ashwin

Moderator
Staff member
1st
யாழ் அனுவா ஐஸ்யா முடிவெடுக்க முடியாமயிருக்கதே.
Athe thaan... ஒரே சமயத்தில் இரட்டை குதிரையில் பயணிக்க முடியாதே..

Thank you sis 😍😍
 
Top