கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கண்களால் கைது செய் - பகுதி - 5

அடுத்த நாள் இவர்களுக்கு ஒரு நல்ல விடிவாக இருக்கட்டும் என்று அழகாய் புலர்ந்தது அக்காலை பொழுது.டிபன் சாப்பிட்டுவிட்டு சதாசிவத்திடம் வந்த மஹா

" அண்ணா.. உங்களுக்கு நிறைய வேலை இருக்கும்..என்னை கொஞ்சம் அந்த வீடு ப்ரோகர் வீட்டுக்கு மட்டும் கொண்டு விடறீங்களா "

" ஏன் மா.. நேத்து தானே வந்தீங்க..ஏற்கனவே ரொம்ப கஷ்ட பட்டுடீங்க.. ஒரு வாரம் பொறுத்து வீடு பாக்கலாமே "

" இல்ல.. அது சரியா வராது அண்ணே "

" சரி மா அப்றம் உன் இஷ்டம் .. இப்போ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. அத முடிச்சிட்டு வந்து போலாம் மா.. அது வரைக்கும் என் மனைவி மலர் கூட இருங்க .. பொழுது போறதே தெரியாது "

" சரிங்கண்ணே "

பெண்கள் அனைவரும் கதைக்கத் தொடங்கினர். சதா சொன்னது போல் நேரம் போனதே தெரிய வில்லை.வாசலில் சதாவின் குரல் கேட்டதும் தான் மணியை பார்த்தனர்...

" மலர் கொஞ்சம் தண்ணி கொண்டா "

" ஐயயோ சொன்ன மாறி நேரம் போனதே தெரில " என்று சிரித்துக்கொண்டனர்..தண்ணீர் குடித்து முடித்து நந்துவை கூப்பிட்டார்..

" அம்மா நந்தினி இங்க வா மா "

" சொல்லுங்க அங்கிள் "

" 12த் அப்றம் என்ன மா படிக்கணும்னு நினைச்ச "

" அது எதுக்கு அங்கிள் இப்போ.. எல்லாம் முடிஞ்ச கதை "

" சும்மா சொல்லுமா "

" எனக்கு இங்க்லிஷ் படிக்க தான் ஆசை இருந்துச்சு.. நுனி நாக்குல பேசறவங்கள பாத்தா ஆசையா இருக்கும் " என்று பெறு மூச்சு விட்டுக்கொண்டாள்.

" ம்ம்ம்ம்ம்... சரி மா.. இந்தா இத வாங்கிக்கோ " என்று ஒரு கவரை நீட்டினார்.

அதை வாங்கி பார்த்தவளின் கண்கள் ஙே என சுறுங்கியது..

" என்ன அங்கிள் இது... என் பெயருக்கு வந்துருக்கு, ஆன உங்க அட்ரஸ் போட்டுருக்கே .. அப்போ இப்டி ஆகும்னு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா " என்றாள் சற்று கோபமாக...

" நந்து என்ன இது... பெரியவங்க கிட்ட இப்டி தான் பேசறதா " அதட்டினார் மஹா...

" நீயே கேளு பின்ன.. " என்று கவரை மஹா கையில் திணித்தாள்..

" என்ன அண்ணா இது " என்றார்...

" மா அவசர படாம நான் சொல்றத கேளுங்க ... அத நந்து வ பிரிச்சு பாக்க சொல்லுங்க.. உங்களுக்கு நல்லது தான் செய்யறேன் " என்றார் வறுத்தமாக...அவர் முகத்தில் இருந்த தெளிவு கலந்த வறுத்தம் மஹாவிற்கு புரிந்தது..

" நந்து மா மொதல்ல இத பிரி.. அப்றம் பேசிக்கலாம். சதாசிவம் அண்ணன எனக்கு ரொம்ப வருஷமா தெரியும்.. நான் அவர நம்பறேன் மா "

சலித்துக்கொண்டே கவரை வாங்கி பிரித்துப் பார்த்தவளின் கண்கள் கோலிகுண்டை போல் விரிந்தது..கண்ணில் இருந்து நீர் வழிய நின்று இருந்தவளின் கைகளில் இருந்து வாங்கிய மஹாவின் கண்களும் விரிந்தன. கேள்வியுடன் சதாவை பார்க்க

" அம்மா மஹா இப்போ ஏதும் சொல்ற நிலமையில நான் இல்ல மா "

கண்களை மூடிய நந்துவின் மனதில் வந்தது அதே கண்கள்.. இம்முறை உடனே மறையாமல் தன்னை "வா " என்று அழைப்பது போல் இருந்தது..மெல்ல கண்களை திறந்தாள் ஒரு முடிவுடன்.. மஹாவை பார்த்ததும் சற்று வறுத்தமாக இருந்தது..

" அம்மா மஹா .. இந்தா இந்த கவர் உனக்கு " என்று அவளிடம் ஒரு கவரை நீட்ட, அதை வாங்கி பார்க்க மேலே அதிர்ச்சிக்கு உள்ளாகினர் தாயும் மகளும்...

" அண்ணா, என்ன இது ஏதும் சொல்லாம இப்டி குண்டை தூக்கி போடறீங்க... எங்களுக்கு அங்க யாரை தெரியும்.. மொழி கூட தெரியாது " என்று வருத்தப்பட்டார்..

" நீங்க ஒன்னும் கவலை பட வேண்டாம்.. உங்கள கூட்டி போக , ஆள் கரெக்ட்டா வரும் "

" என்னமோ எனக்கு பயமா இருக்கு "

" அம்மா நம்ம போலாம் "

" என்ன பேசறனு புறிஞ்சு தான் பேசறியா "

" எல்லாம் புறியுது.. ஏதோ நல்லதுக்கு தான்னு தோணுது . ஒன்னும் இல்லாம இங்க நடு தெருவில நிக்கறத்துக்கு, அங்க போலாம்.அங்க நம்மள தெரிஞ்சவங்க யாரோ தான் இத அனுப்பி இருக்கணும்."

" அங்கிள் நாங்க போறோம்.. எப்போ கிளம்பணும் "

" நாளைக்கு மா "

" சரி அங்கிள் "

" அம்மா வா பேக் பண்ணலாம் "

அந்நாளும் அவ்வாறே கழிய இதோ காலை விடிந்ததும் புறப்பட்டனர்..காரில் ஏறி போய் இறங்கிய இடம் சென்னை...

சென்னை விமான நிலையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பலகையை பார்த்ததும் மஹாவிற்கு வயிற்றில் புளியை கறைத்தது..

" நந்து என்ன நினைச்சு நீ இப்டிலாம் பண்ற.. எந்த தைரியத்துல போறோம்னு சொன்ன " என்று கத்தினாள்

" அம்மா, அப்பா போன அப்பறம் என்னை ஒத்த ஆளா நின்னு வளர்த்துருக்க... நீ குடுத்த நம்பிக்கையும் தைரியமும் தான் "

“எதயாது சொல்லி என் வாய அடைச்சிடு "

" சரி வா " என்று இமிகிறேஷன் கௌன்டர் நோக்கி சென்றனர். சதா மஹாவிடம் கொடுத்த கவரில் இருந்து பாஸ்போர்ட் , விசா, டிக்கெட் என அனைத்தையும் காண்பித்து சரி பார்த்துக்கொண்டனர்.செக்கிங் முடிந்து காத்திருந்தனர்..

அறிவிப்பு வர விமானத்தில் ஏறி விமான பணிப்பெண்ணின் உதவியுடன் தமது இருக்கைகளில் அமர்ந்து தங்கள் புது வாழ்வு எப்படி இருக்க போகிறதோ என்ற பயம் கலந்த எதிர்பார்ப்புடன் வானில் சிறகடித்து பறந்தனர் விடியலை நோக்கி...
 
Top