Malini Sundar
Member
உன் கேள்விக்கு விடையாக நான் இருக்க போகிறேன் என்று அந்நாள் நந்துவை எழுப்பியது.. குளித்து முடித்து வெளியே வந்தவள் தாயை தேடிச்செல்ல மஹா அவளுக்கு காபி கொடுத்து விட்டு
" நந்து இத கௌசி தம்பிக்கு குடுத்துடு மா "
" என்ன...... "
" என்ன என்ன... போ தம்பி அந்த மேல் ரூம் ல எக்சர்சைஸ் பண்ணிட்டு இருப்பாரு .. போய் குடு "
ஹ்ம்ம்ம்ம் என்று அலுத்துக்கொண்டே படி ஏறி அந்த ரூமை அடைந்தவள் அப்படியே நின்றுவிட்ட்டாள் ..அவன் இவளுக்கு முதுகு காட்டிய படி , கை இல்லா பனியன் அணிந்து புஷ் அப்ஸ் செய்து கொண்டிருக்க எதிரே உள்ள கண்ணாடியில் தெலிவாய் அது தெரிய, ஸ்தம்பித்து போனாள் ...
" கௌசி " என மனம் அடித்துக்கொண்டது.. சட்டென திரும்பி நடக்க எத்தனித்தவளை அவன் குரல் நிறுத்தியது ..
" ஓய் பொந்து... நில்லு "
கலங்கிய தன் கண்களை துடைத்தபடி திரும்பியள் மேலும் அதிர்ச்சிக்குள்ளானாள் ..கௌசி நின்றுகொண்டு ரிஸ்ட்பேன்ட் அணிந்த தன் புறங்கையால் தன் முகத்தை துடைக்க, கையை முகத்தில் மூக்கின் முன் வைத்தவன், நந்துவின் விரிந்த கண்களை பார்த்ததில் கையை எடுக்காமல் அப்படியே புருவத்தால் " என்ன " என்று கேட்க....முடிந்தது.. புரிந்தது... காப்பியை அங்கு வைத்து விட்டு ஓடியே விட்டாள் தன் அறைக்கு அழுது கொண்டே... இதை பார்த்த இரு ஜோடிக் கண்கள் சந்தோஷப்பட்டன...
ரூமிற்கு வந்தவள் முதலில் தேடி தான் கொண்டு வந்த குடும்ப ஆல்பத்தை எடுத்து பார்க்க அதிர்ந்து தான் போனாள் ...
தன்னிடம் பல உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தவள் அதற்கு ஒரு காரணம் இருக்கும் என்று யோசிக்க தவறினாள் ...
மீண்டும் அறையில் பார்த்தது மனதில் வந்தது... புஷ் அப் செய்து கொண்டிருந்த கௌசி அதில் மும்முறமாக இருக்க, எதிரே உள்ள கண்ணாடியில் தெரிந்தது அவன் நெஞ்சில் உள்ள தழும்பு....
" கௌசி... என் கௌசி " என்று மனம் குதூகலித்தது.. ஏன் கௌசி எங்கள விட்டுட்டு போன.. என்ன விட்டுட்டு போக உனக்கு எப்படி மனசு வந்தது..." என்று தனக்குள் பிதற்றிக்கொண்டிருந்தாள் , ராம் அவளை கூப்பிடும் வரை ..
" நந்து .. கொஞ்சம் அம்மாவ கூட்டிட்டு என் ரூமுக்கு வா மா "
" சரி அங்கிள்... "
" அம்மா... இங்க வா அங்கிள் கூப்பிடறார் "
" தோ வரேன் நந்து "
ராமின் அறையில் அவர்கள் நுழைந்ததும்,
" கதவ சாத்திட்டு வாங்க மா "
" சொல்லுங்க அங்கிள் "
" நான் சொல்ல போறது உனக்கு அதிர்ச்சியா இருக்கும் நந்து மா . ஆன நான் சொல்றது எல்லாமே உண்மை " என்று அவர்களை தன் மனைவியின் படத்தின் முன் நிறுத்தி பல விஷயங்களைக் கூற இருவரும் ஆடித்தான் போனார்கள்...
அனைத்தையும் கூறி முடித்து மஹாவிடம்
" நான் சொன்னதுக்கு உனக்கு சம்மதமா மஹா "
" எனக்கு பரிபூர்ண சம்மதம்... ஆன நந்து என்ன நினைக்கறான்னு... "
" எனக்கும் இதுல சம்மதம் தான் மாமா... இனி கௌசி என் பொறுப்பு.. அதே மாறி சம்மதம் வாங்க வேண்டியது உங்க பொறுப்பு " என்று கூறி சிரித்தாள் ..
" அத நான் பாத்துக்கறேன் மா... ஆனா நியாபகம் வெச்சுக்கோ, நான் சொன்ன எதுவும் கௌசிக்கு தெரியவேண்டாம்.. நீங்க யாருங்கறது உட்பட "
" சரிங்க மாமா... "
" நீ இப்படி கூப்பிட்டறது எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா... ம்ம்ம்ம்ம் சீதாக்கு தான் இத பாக்க குடுத்து வைக்கல "
" அவங்க இங்க தான் மாமா இருக்காங்க "
" ம்ம்ம்ம. சரி நீங்க கிளம்புங்க.. கௌசி பாத்தா சந்தேகம் வரும் " என கூற இருவரும் வெளியேறினர்.