கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் 2021 - அறிவிப்பு 4 - எழுத்தாளார்களுக்கு

siteadmin

Administrator
Staff member
அன்புடையீர் வணக்கம்,


சங்கமம் போட்டியில் கலந்து கொள்ளும் எழுத்தாளர்களுக்கான விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பார்த்து சந்தேகம் ஏதும் இருப்பின் எங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.


1. உங்கள் கதையை எக்காரணம் கொண்டும் நீங்களே பதிவிடக்கூடாது. ஏற்கனவே சொன்ன விதிமுறையின் படி அட்மினுக்கு மெயில் அனுப்ப வேண்டும்.


2. எந்த சூழ்நிலையிலும் உங்கள் கதையின் பெயரையோ அல்லது எண்ணையோ யாருக்கும் தெரிவிக்கக் கூடாது.


3. ஒரு நாளில் கதையின் ஒரு அத்தியாயம் மட்டுமே பதிவிட முடியும்



4. முதல் அத்தியாயம் கூடுமானவரை செப்டம்பர் 16ஆம் தேதி பதிவிட முயலுங்கள். அப்போது தான் திரியை ஆரம்பிக்க ஏதுவாக இருக்கும். இரண்டாம் அத்தியாயத்தில் இருந்து எழுத்தாளரின் விருப்பம் போல் போட்டி முடியும் முன்னர் எப்போது வேண்டுமானாலும் பதிவிடலாம். எனவே முதல் அத்தியாயத்தை செப்டம்பர் 15ஆம் தேதி இரவு ஒன்பது மணிக்குள் அனுப்பிவிடுங்கள்.


5. உங்கள் கதையின் அத்தியாயங்களை பதிவிட வேண்டிய முதல் நாள் இரவு ஒன்பது மணிக்குள் அட்மினுக்கு மெயில் அனுப்பிவிடுங்கள். அப்போது தான் அடுத்த நாள் அந்த அத்தியாயம் தளத்தில் சரிவர பதிவிட முடியும்.


6. எழுத்தாளர்கள் மற்ற போட்டியாளர்களின் கதைகளை படித்து தளத்தில் மட்டுமே கருத்திட முடியும். மற்றபடி வேறு எங்கும் கருத்திட முடியாது.


7. குறிப்பிட்ட காலத்தில் ஆரம்பித்து அதன் படியே முடிக்கும் கதைகளே போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.


8. கதையின் வார்த்தைகளின் எண்ணிக்கையும் 30000 முதல் 40000 வரை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அத்தியாயங்களின் வார்த்தைகள் எண்ணிக்கை குறைந்தபட்சம் ஆயிரம் வார்த்தைகளாவது இருத்தல் அவசியம்.


9. தினமும் பதிவிடப்படும் அத்தியாயங்கள் அனைத்தும் தளத்தைத் தவிர இன்றைய பதிவு என்ற முகநூலில் சங்கமம் நாவல்ஸ் பக்கத்திலும் அறிவிக்கப்படும். மேலும் வாரம் ஒருமுறை ஒவ்வொரு கதையும் எத்தனை அத்தியாயங்கள் கடந்துள்ளது என்பதும் அறிவிக்கப்படும்.


10. மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை சரிவர பின்பற்றி உங்கள் திறமையை சரி வர நிரூபியுங்கள்.


11. இப்போட்டி கால ஓட்டத்திலும், பரபரப்பிலும் விடுபட்டு போன பல திறமையான எழுத்துக்களை வெளி கொணர்வதற்குத் தொடங்கப்பட்டதாகும். எனவே போட்டி வெற்றிகரமாக நடந்து முடிய அனைவரின் ஒத்துழைப்பையும் அவசியம் தேவை.


மனமார்ந்த நன்றிகள்

வாழ்த்துக்களுடன்
சங்கமம் குழுமம்.















 
Top