போட்டி விவரங்கள்:
- போட்டி நடைபெறும் காலகட்டம் – ஆகஸ்ட் 15 (2021) முதல் டிசம்பர் 31 (2021) வரை.
- போட்டிக்கு பதிவு செய்ய கடைசி தினம் ஆகஸ்ட் 14 2021.
- அதற்குப்பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.
- பதிவு செய்துவிட்டு குறிப்பிட்டக்காலகட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
- முதல் அத்தியாயம் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை எப்போது வேண்டுமானலும் போடலாம். ஆனால் இந்த ஒரு மாதத்திற்குள் திரியில் கதையின் முதல் அத்தியாயமோ அல்லது ஒரு சின்ன டீசரோ போட்டிருத்தல் அவசியம்.
- ஒரே நாளில் முழுக்கதையையும் பதிவு செய்வது ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது.
- அத்தியாயங்கள் வரிசையாக வெவ்வேறு நாட்களில் பதிவிடல் வேண்டும். ஒவ்வொருஅத்தியாயமும் குறைந்த பட்சம் 1200 வார்த்தைகளிலிருந்து அதிகபட்சம் 2500 வார்த்தைகள் அளவில் இருத்தல் வேண்டும்.
- பதிவேற்றும் பொறுப்பை எழுத்தாளர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- Ms-Word டாகுமெண்ட்டில் 10 புள்ளிகளில் கதை இருத்தல் வேண்டும் (பின்னாளில் எங்களுக்கு டாக்குமெண்ட் கொடுப்பதற்கு).. தயவுசெய்து, தளத்தில் நீங்கள் பதிவு செய்யும் போது, 18 புள்ளிகள் அல்லது 22 புள்ளிகளில் போட வேண்டும்.. இது வாசிப்பவர்களுக்கு படிக்க சுலபமாக இருக்கும்.
- மொத்தக் கதை குறைந்த பட்ச வார்த்தைகள் எண்ணிக்கை 40000 முதல் அதிக பட்சம் 50000. அதற்கு மேலோ கீழோ இருந்தால் நிராகரிக்கப்படும்.
- ஏற்கனவே புத்தகமாகவோ, வேறு வடிவிலோ, ஆடியோ அல்லது மின் வடிவிலோ (e-book), தொடராக வேறு தளத்திலோ, இருக்கும் புத்தகங்கள் ஏற்கப்பட மாட்டாது.
- உங்கள் சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும்.
- காதல் என்கிற பெயரில், வன்புணர்வு, துன்புறுத்தல், சித்திரவதை, ஆபாசப்பேச்சுக்கள், படங்கள், காமக்கதைகள் , பொருந்தாக் காதல்(இன்செஸ்ட்) இருத்தல் கூடாது.
- எந்த பிரிவில் எழுத விரும்புகிறீர்களோ அதை தெளிவாக விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
- திகில் கலந்த காதல், அமானுஷ்யம், அறிவியல், பூர்வ ஜென்மம், ஃபேன்டசி, கிராமியம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நம் குடும்பத்தினர் வாசிக்கும் வகையில் இருத்தல் வேண்டும்.
- எந்த மதத்தையும் இழிவு படுத்தியோ, பிரிவினையைத் தூண்டும்படியோ அல்லது நிஜமான அரசியல் கட்சிகளின் பெயர் சொல்லியோ, கதை எழுதுதல் கூடாது.
- ஒருவர் அதிகபட்சம் 2 கதைகளைப் பதிவேற்றலாம். வெவ்வேறு பிரிவுகளில் இருத்தல் அவசியம்.
- பிழையில்லாமல் இருத்தல் மிக முக்கியம். அதற்கென்று ஒரு சில மதிப்பெண் உண்டு.
- கதையின் பல்வேறு விஷயங்களைக் கருத்தில்கொண்டு மதிப்பளித்தல் நடைபெறும். பிழையின்மை, கதைக்கரு, கையாளும் விதம், மொழித்திறமை என்று பல கட்டங்களில் மதிப்பளித்தல் உண்டு. வாசகர்களின், கருத்துக்கள், விருப்பக்குறியீடுகளின் எண்ணிக்கை கருத்தில் கொள்ளப்படும்.
- கதாசிரியரின் பெயர் எந்த ஒரு இடத்திலும் போட்டி நடைபெறும் காலகட்டங்களில் வெளியிடப்படமாட்டாது, அது போல் கதாசிரியர்களும் வெளியிடக்கூடாது..இதன் நோக்கம் புதுத் திறமையாளர்களை ஊக்குவிப்பதற்கே ஆகும். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒரு எண் குறியீடு அளிக்கப்படும். அதை வெளிப்படுத்துதல் கூடாது.
- முதல் கட்டத் தேர்வு மார்ச் 1 2022 நடைபெறும்.
- அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வுசெய்யப்பட்ட கதைகள் நடுவர் பார்வைக்கு அனுப்பப்படும்.
- இரண்டாம் கட்டத் தேர்வு, மார்ச்1 துவங்கி் ஏப்ரல் 30 வரை.
- முடிவு மே 1 ம் தேதி உழைப்பாளர் தினத்தன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
- காலதாமதம் இருந்தால் நிச்சயம் முன் கூட்டியே அறிவிப்பு அளிக்கப்படும்.
- ஏற்கனவே சொல்லியிருந்தப்படி வாசகர்களுக்கும் பரிசுகள் நிச்சயம் உண்டு.
- வாசகர்கள், ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் கருத்துக்களை அடுத்த அத்தியாயம் பதிவு செய்வதற்கு முன்பே சொல்லியிருத்தல் அவசியம்,
- அதிக பட்ச கதைகளை இடைவெளியில்லாமல் வாசித்து தங்கள் கருத்துக்களை ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் பதிவிடுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கருத்துக்கள் ஒரு வரியாவது அந்த அத்தியாயத்தைப் பற்றி அவசியம் இருத்தல் வேண்டும். வெறும் ‘நைஸ், குட், சூப்பர்’ இதெல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டாது.
- சிறந்த ஒரு முழு கதையின் விமர்சனமும் ஒவ்வொரு கதைக்கும் முடிவில் இருத்தல் வேண்டும்.
- மிகச்சிறந்த வாசகர்களுக்கும் பரிசு உண்டு.. ஆறுதல் பரிசாக ஸ்ரீ பதிப்பகத்தின் புத்தகங்கள் 10 நபர்களுக்குப் பரிசளிக்கப்படும். இதைத்தவிர வாசகர்களுக்கான போட்டிகள் சென்ற முறை போல, அவ்வப்பொழுது அறிவிக்கப்படும்.
- கதாசிரியர்கள் தங்கள் கதைக்கு தாங்களே கருத்து தெரிவித்தல் கூடாது.. ஆனால் பிற கதைகளுக்கு தாராளமாக விமர்சனங்களை தெரிவிக்கலாம். ஆனாலும் அவர்கள் வாசகர்களுக்கான போட்டியில் இடம் பெற முடியாது. இது சக எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டே
- பரிசுப்பணம் எந்த காரணத்தைக் கொண்டும் பகிர்ந்தளிக்கப்பட மாட்டாது. தவிர்க்க முடியாக் காரணங்களால் ஒருவருக்கு மேல் பரிசிற்குத் தகுதி பெற்றால் அவர்களுக்குமே அதே அளவு பரிசுப் பணம் தரப்படும் பகிர்ந்தளித்தல் கிடையாது. இதை நாங்கள் உறுதியளிக்கிறோம். அதே மாதிரி தகுதி வாய்ந்த கதைகள் மேலும் ஒருவேளை பரிசுக்குத் தேந்தெடுக்கப்பட்டால், கூடுதல் பரிசுகளும் கொடுக்கப்படும்.
- பரிசு வென்றவர்கள் கதைகள் அனைத்தும் ஸ்ரீ பதிப்பகம் நிச்சயம் அச்சிட்டு வெளியிடும். இதைத்தவிர எழுத்தாளர்களுக்கான தனிப்பட்ட ஊக்கத் தொகை என்று எதுவும் அக்கதைகளுக்குக் கிடையாது.
- .இறுதி சுற்றிற்கு தேர்ச்சி பெறாத கதைகள், போட்டி முடிந்தவுடன் திரியிலிருந்து நீக்கப்பட்டுவிடும் உங்கள் விருப்பத்தின் பேரில்.
- நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.
- விண்ணப்பங்கள் ஜுலை 13ம் தேதி முதல் கேட்டவர்களுக்கு அனுப்பித்தரப்படும்.
ஸ்பெஷல் ஜூரி அவார்ட்
கதை சங்கமம் 2022 போட்டியில் உள்ள ஸ்பெஷல் ஜூரி அவார்ட்டிற்கான விவரங்கள் மேலும் உங்களுக்குக்காக.
நடுவர் தேர்ந்தெடுக்கும் கதைகளுக்கு வழக்கம் போல் முதல் பரிசு, இரண்டாம் பரிசு மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். அதனைத் தவிர இம்முறை ஸ்பெஷல் கேட்டகரியில் ஸ்பெஷல் ஜூரி அவார்ட் இடம் பெற்றுள்ளது( விருப்பமுள்ளவர்கள் இதில் பங்கு பெறலாம்)
இச்சிறப்பு பரிசான ஸ்பெஷல் ஜூரி அவார்ட், எழுத்தாளர்களே அவர்களின் சக எழுத்தாளர்களை வோட்டிங் முறையில் தேர்ந்தெடுத்து ஊக்குவிக்கும் பரிசாகும்.
கதை சங்கமம் போட்டியில் பங்குபெறும் எழுத்தாளர்கள் தலா நூறு ரூபாய் ( ஒரு கதை தலைப்புக்கு ரூ. 100) கொடுத்து தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்(ஆப்ஷனல்/ உங்கள் விருப்பத்தின் பேரில்மட்டுமே). உதாரணத்திற்கு நூறு எழுத்தாளர்கள் தலா நூறு ரூபாய் கொடுத்து பதிவு செய்தால் பத்தாயிரம் வரும், அதே அளவிலான பணத்தை சங்கமம் தளமும் கொடுக்கும். அதனால் மொத்தம் இருபதாயிரம் கணக்கில் வரும். இப்பணம் ஸ்பெஷல் ஜூரி அவார்ட் வாங்கும் கதையின் எழுத்தாளருக்கு ஒருபகுதியும், மற்றும் சிறப்பு பரிசாக மற்றொரு பகுதி தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர்களுக்கும் சமமாய் பிரித்துக் கொடுக்கப்படும். எத்தனை கதைக்கு ஸ்பெஷல் ஜூரி அவார்ட் வழங்கப்படும் என்பதை சங்கமம் தளம் பின்னர் தீர்மானிக்கும்.
விண்ணப்பத்தில் உங்கள் பதிலை சரியாகக் குறிப்பிடவும். இதில் கலந்துகொள்ள விருப்பமிருப்பின் ஆம் என்று குறிப்பிடவும். அவர்களுக்கு எந்த வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என்பதை தெரிவிக்கிறோம். உங்களுக்கான அனுமதிச் சீட்டில் விவரங்கள் இருக்கும்.
விருப்பமுள்ளவர்கள் பணம் செலுத்தினால் போதுமானது கட்டாயமில்லை. எனினும் நூறு ரூபாய் கொடுத்து பதிவு செய்தவர்களின் கதைகள் மட்டுமே ஸ்பெஷல் ஜுரி அவார்டிற்கு பரிசீலக்கப்படும். அவர்கள் மட்டுமே வோட்டிங்கும் இந்த சிறப்பு பரிசுக்கு செய்யலாம்.
வாருங்கள் எழுத்தாளத் தோழமைகளே! வாசகப் பெருமக்களே! உங்கள் மேலான ஆதரவை கதைசங்கமம் 2022 க்குத் தந்து, இம்முறையும் சங்கமம் தளத்தை சிறப்பிக்க அழைக்கிறோம். அனைவரும் கைகோர்த்து இணைந்து நடப்போம்.
நன்றி.
Last edited: