கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கதை சங்கமம் 2022- நாவல் போட்டி அறிவிப்பு 10

Latha S

Administrator
Staff member
கதை சங்கமம் நாவல் போட்டி 2022

அறிவிப்பு 10

ஸ்ரீ பதிப்பகம் அறிவித்த கதை சங்கமம் நாவல் போட்டியில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு அற்புதமான கதைகளைப் படைத்த எழுத்தாளர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அருமையாகக் கதைகளை முடித்த எழுத்தாளர்களுக்கு எங்களது வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

ஒவ்வொரு பிரிவிலும் விதவிதமான கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. இனிமையான காதல் கதைகள், சுவாரஸ்யமான குடும்பக் கதைகள், சமுதாயத்திற்குத் தேவையான நீதிகளைச் சொல்லும் சமூகக் கதைகள், அச்சுறுத்தும் அமானுஷ்யக் கதைகள், பக்தி ரசம் சொட்டும் ஆன்மிகக் கதைகள், ஆதார பூர்வமான சரித்திரக் கதைகள், பிரமிக்க வைக்கும் அறிவியல் கதைகள், வினோதமான ஃபேண்டஸி கதைகள், மிரட்டும் திகில் கதைகள் என்று அனைத்துக் கதைகளும் அட்டகாசமாகப் படைத்திருக்கிறார்கள் நமது ஆசிரியர்கள். வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் ஈடுபாடும், நற்பணியும்!

நாங்கள் ஏற்கனவே அறிவித்திருந்தபடி எடுத்துக் கொண்ட கதைக்கரு, மொழி நடை, பிழையில்லாத எழுத்து, கற்பனை வளம் இவற்றின் அடிப்படையில் எந்தவித பாரபட்சமுமின்றிக் கதைகள் தேர்வு செய்யப்படும். எழுத்தாளர்களே, உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் நிச்சயமாகக் கிடைக்கும் என்று உறுதியாகக் கூறுகிறோம்.

இறுதி தேதிக்குள் கதையைத் தவிர்க்க முடியாத காரணங்களால் முடிக்க முடியவில்லையா? கவலை வேண்டாம். இப்போது கூட நீங்கள் நினைத்தால் கதைகளை முடிக்கலாம். கதைகளை முடிக்க விருப்பமுள்ளவர்கள் எங்களை அணுகினால், தனித்திரி ஆரம்பிக்கப் படும். ஆனால் இறுதி தேதிக்குப் பிறகு முடிக்கப்படும் கதைகள், போட்டிக்குத் தகுதியானவையாக எடுத்துக் கொள்ள மாட்டோம். ஆனாலும், உங்கள் கதைக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருந்த வாசகர்களுக்காக நீங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளலாம்.

போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த எழுத்தாளர்களுக்கு மீண்டும் எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

முடிவுற்ற கதைகளுக்கான லிங்க், எங்களது முகநூல் பக்கத்தில் கதையின் பிரிவு வாரியாகத் தொகுக்கப்பட்டுத் தரப்பட்டிருக்கிறது. வாசகர்களே, கதைகளைப் படித்து உங்கள் பொன்னான கருத்துகளை அள்ளி வழங்குங்கள். எங்கள் எழுத்தாளர்களை ஊக்குவித்து உற்சாகப் படுத்துங்கள்.

நன்றி,

ஸ்ரீ பதிப்பகம்,
06/01/2022.
 
Top