கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கனவின் மொழி முடிவு

அர்பிதா

Moderator
Staff member

அருள் தனக்கு தெரிந்தவற்றை விலகி கொண்டு இருக்கும் போதே...

ஆம்... எனக்கு பொறாமை தான்... அங்கு இருப்பவர் அதிரும் வண்ணம் கத்தினாள் ப்ரியா.....


எனக்கு இருவது வயசு இருக்கும் போது.. நான் இந்த வள்ளியை விட அழகாக தான் இருந்தேன்... எவனோ ஒருவன் காதலிக்குறேன்னு பின்னாடியே சுத்துனான்... நான் பதில் தராம போக... முகத்தில் ஆசிட் அடிச்சிட்டான்....

அது என்னோட தப்பா...நான் அவன் கண்ணுக்கு அழகாய் தெரிஞ்சா அது என் தப்பா... அவனுக்கு என் மேல் காதல் வந்தா என் தப்பா... இல்லை அவன் மேல் காதல் வராதது என் பிழையா....

அதற்கு தண்டனையாக நான் காலம் முழுவதும் என் முகத்தை இழந்து... அடையாளம் இழந்து..... தனிமை நோயில் சகா வேண்டுமா... ஆனால் அவன்... என் இத்தனை துயரத்திற்கு காரணமான அவன்... வெளியில் மிகவும் சுதந்திரமாக சுற்றி கொண்டு இருக்கிறன்... அதுவும் வேறு ஒரு பொண்ணை காதலிப்பதாக கூறி கொண்டு...

பெண்ணாய் பிறந்ததற்கு தான் இந்த தண்டனையா.... காதலித்தால் பெற்றவர்கள் கொலை செய்வதும்... காதலிக்காமல் போனால் இப்டி தண்டிக்க பட்டு ஒதுக்க பட்டு வாழ்வதும்... இது இந்த சமுதாயம் எங்களுக்கு அளித்த சாபமா....

எனக்கு அறுவை சிகிச்சை நடந்த பிறகு... என்னை அழகு என்று பார்த்த கண்கள் அனைத்தும் என் தங்கையை அழகு என்று பார்க்க துவங்கியது...அதனால் தான் நாங்க இந்த ஊருக்கு மாறிக்கிட்டு வந்தோம்...

இங்க வந்தும் எதுவும் இங்க மாறல..... இங்கயும் எல்லாரும் அவளையே அழகுன்னு சொன்னாங்க... அது எனக்குள்ள ஒரு வன்மத்தை உண்டாக்குச்சு..... அந்த வன்மம் வெறியாக மாறியது அந்த பார்ட்டியில் தான்... அதன் கோவத்தில்... வீட்டிற்கு வந்த பிறகு அது அவள் மேல் கொலை வெறியாக மாறி.. அவளை கொன்று விட்டேன்....


மற்ற ஏழு பேரையும் கொன்றதற்கு இது... இந்த அழகு தான் காரணம்.... ஒவ்வொருத்தரும் அழகாய் வாழ எதையோ ஒன்றை கற்று வைத்து கொண்டு இருந்தனர்...

நான் இவ்வுலகில் அழகிழந்து வாழ்ந்து கொண்டு இருக்கும் போது... அழகுடன் அவர்கள் வாழ்வதா என்ற கோவத்திலேயே கொன்றேன்...

எந்த தப்பும் இல்லாத வள்ளியை கொன்றது தப்பு தான்... ஆனால் அழகை உள்ளத்தை விட்டு முகத்திலும் செய்யும் காலையிலும் தேடுவது இந்த சமுதாயத்தின் குற்றம்... அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.... பேச்சில் திமிர் குறையாது பேசினால்....

கேட்டு கொண்டு இருந்தவர்களுக்கு அவளின் பேச்சு ஒரு புறம் நியமாகவே பட்டாலும்.... அதற்கு கொலை செய்வது மிகுதிக்கு மிக அதிகமாகவே தோன்றியது அனைவர்க்கும்....


ஆனால் ப்ரக்யாவின் யோசனை மட்டும் வேறு எங்கோ தான் இருந்தது....

ஆனால் "என்னை எதற்கு"என்று பலமுறை அவளுள் இந்த கேள்வி எழ.. அவளையே அவள் கேட்டு கொண்டு இருக்க... அவள் வாய் விடும் வெளியே வந்தது அந்த கேள்வி...


"ஏன் அவளை ஒவ்வொரு முறை நீ பார்க்கும் போதும் உன் கண்ணில் அவளுக்கான அன்பை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.... அது மட்டும் இல்லை இன்று இவளை நான் கொண்டு விட்டால்.... இந்த ஊரில் என்னை விட அழகும்... இளமையும் இருக்கும் பெண்கள் யாரும் இருக்க மாட்டார்கள்"....

"அது நிறைவேறும் முன் வந்த உன்னையும் விட மாட்டேன்... அவளையும் விட மாட்டேன்"... கோவத்தில் கர்ஜித்தாள் ப்ரியா

"இவளை இப்போ என்ன அருள் பண்றது... அர்ரெஸ்ட் பண்ணி போல்ஸ் ஸ்டேஷன் கொண்டு போகலாமா " கேட்ட விக்ரமிற்கு

வேண்டாம் விக்ரம்... இவளுக்கான தண்டனை காவல் நிலையத்தில் இல்லை...

நீண்ட பெருமூச்சுடன் யோசித்தவன்....இவளை இங்கேயே விட்டுட்டு போகலாம்.... என்றவனின் பேச்சு அங்கு இருந்த யாருக்கும் புரியாமல் போக... இருந்தும் தன் முடிவை திடமாய் அறிவித்தான் அருள்....

அவளை மேஜையில் கட்டிய நிலையில்.... அந்த வீட்டை விட்டு வெளியேறிய அனைவரும்... வீட்டின் கதவை வெளிப்புறமாக தாழிட்டு.... அந்த வீட்டை காவல் பொறுப்பில் இருப்பதாக அறிவிக்கை பலகையையும் வைத்து விட்டு சென்றனர் அனைவரும்...

அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் அந்த வீட்டையே இரண்டாக்கி... கதை குளிக்கும் அந்த பயங்கர சத்தத்துடன் அவ்விடம் அமைதியானது.....


கனவு 12


இரண்டு வாரத்திற்கு பிறகு...

அந்த ஏழு கொலைகளை செய்தது பிரியா தான் என்றும்... அவரின் சொந்த வாக்குமூலத்தை நீதிபதியின் முன் சமர்ப்பித்த அருள்....


வாக்குமூலத்திற்கு பிறகு... அவரை காண வில்லை என்றும்.... அவரை தேடும் பணியில் சில காவலர்கள் அனுப்ப பட்டனர் என்றும் கூறி.... குன்னூர் ஏழு பேர் கொலை வழக்கின் பைலும் இதோடு மூட பட்டது....

"காணாமல் போனதுனா எப்படி அருள்.... வேறு ஊருக்கு தப்பிச்சி போய்ட்டாங்களா? ஆனால் நாம போட்ட காவல் பாதுகாப்பை மீறி எப்படி போக முடியும்?" இத்தனை நாள் மண்டையை குடைந்த விஷயத்தை கேட்டான் விக்ரம்....

"முடியும்டா" ஒற்றை வார்த்தையை பதிலாய் அளித்தவன்..... சென்று கொண்டு இருந்தது அந்த காட்டு பாதையில் அமைந்து இருந்த அந்த குகைக்கு தான்....

அந்த குகையின் முன் இரண்டு நிமிடம் நின்றவன்.... அதையே விசித்திர பார்வை பார்த்து கொண்டு இருந்தவனை

என்னடா பன்ன வந்து இருக்க இங்க.... நடந்த எல்லாத்தையும் பார்த்த அப்றம் இங்க வரவே பயமாக இருக்குடா... இங்க என்ன இருக்குனு இங்க வந்து இருக்க? கேட்ட விக்ரமை

குறுநகையுடன் பார்த்த அருள் "உனக்கு சொன்னா புரியாது மச்சா" என்றவன் அதன் பிறகு மறந்தும் கூட அந்த குகை பக்கம் வர வில்லை....

மூன்று மாதம் கழித்து:


குன்னூர் காட்டு பத்துகுதியின் குகை ஒன்றில் இரண்டு பிணங்கள் கண்டு பிடிக்க பட்டதாகவும்... அவற்றை பிணம் தின்னி கழுகுகள் கொத்தி போட்டதால் அவற்றை அடையாளம் கண்டு கொள்ளவது கடினமாக உள்ளதாக காவல் துறை தகவல்....


இதை பார்த்து கொண்டு இருந்த விக்ரமிற்கு எதோ புரிந்தது போல் இருக்க... அருளோ அனைத்தும் அறிந்த நமட்டு சிரிப்புடன் தேநீரை அருந்த ஆரம்பித்தான்


👻👻👻முற்றும்👻👻👻

-அர்பிதா💖


 

Sundarji

Active member
அருமையான த்ரில்லர் சிறுகதை. ரொம்ப நன்றாக இருந்தது. சூப்பர் சூப்பர். வாழ்த்துக்கள் 🌷
 
Top