கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கனவின் மொழி 4, 5

அர்பிதா

Moderator
Staff member
கனவு 4

கடந்த ஒரு மாதத்தில் ஏழு பேர் காணாமல் போனதாக புகார்கள் வந்து இருக்க... அவற்றையும் விக்ரமிடம் கொடுத்து... ஆக்டோபசி ரிப்போர்டுடன் ஒத்து போகிறதா என்று பார்க்கும் படி சொன்னான்....

சிறிது நேரத்தில் விக்ரமிடம் இருந்து அழைப்பு வர... எடுத்தவன்...

"ரிப்போர்ட் வந்துடுச்சிடா "

"ரெண்டு ரிபோர்டுன் ஒத்து போகுது அதானே " என்றான் அருள்.. விக்ரமை பேச விடாமல்....

முதலில் துகைத்தவன்... பின்

"இன்னொரு விஷயம்டா... அந்த பொண்ணு மஞ்சரி... அவள் நேத்து தான் இறந்து போனதாக ரிப்போர்ட் சொல்லுதுடா...அப்போ நேத்து ராத்திரி உனக்கு... " பேச போனவனை இடையில் நிறுத்தியவன்...

"எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்... சாயங்காலம் பாப்போம் " என்று தன் வேலையை தொடர்ந்தான் அருள்....

இறந்த அந்த ஏழு பேரின் வீட்டினரை விசாரரித்து... வேறு ஏதும் துப்பு கிடைக்கிறதா என்று பார்த்தவனுக்கு எதுவும் கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது...

இவர்களின் விசாரணை ஒரு புறம் நடந்து கொண்டு இருக்க.... மறுபுறம் அருளை மேல் அதிகாரி அழைத்து இதை பற்றிய விவரம் கேட்டு அறிந்தார்...

தொடர்ந்து இவர்களுக்கு உதவியாக ஒரு டிடெக்ட்டிவ் ஒருவரை நியமிப்பதாகவும் கூறினார்....


இமை திறவா விழியில் பார்த்தவன்..... எதோ ஒரு இருள் சூழ்ந்த... அழுகை ஓலம் சூழ... நடுவில் தான் மாட்டிக்கொண்டு இருப்பதை உணர்ந்தான் அருள்..... அது அதே ஏரி தான்... ஏரியில் நடுவில் முட்டி வரை நீர் இருக்க... அங்கே அவன் அவளை கண்டான்.... கொஞ்சம் உற்று பார்க்க... மீதம் இருந்த ஆறு பேரும் தெரிந்தனர்... அனைவரும் அவன் அருகில் வந்து அவனை சுற்றி வளைக்க...

அதில் மஞ்சரி மட்டும் அவனுக்கு மிகவும் அருகில் வந்து... அவனிடம் எதோ கூறுகிறாள்... அவளின் குரல் கேட்கா விட்டாலும்... அவள் தன் கைகளை அசைத்து எதையோ வேண்டாம் என்கிறாள்... அவள் கூற வருவதை புரிந்து கொள்ள முயற்சிக்கும் போதே அவர்கள் அனைவரும் அருளின் அருகே வந்து ஒரு சேர கத்த...அந்த பயத்தில் கண் விழித்தவன் மணியை பார்க்க அது ஆறை காட்டியது....


கனவு 5

காலை டிடெக்ட்டிவ் குன்னூர் காவல் நிலையம் வருவதால்... அருள் சீக்கிரமே கிளம்பி கொண்டு இருந்தான்.... ஆக்டோபசி பதிவுகளை எடுத்து கொண்டு விக்ரமும் அவனுடன் காவல் நிலையம் சென்றான்...


காவல் நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டு விசாரணையில் மூழ்கி இருந்தனர் அருளும், விக்ரமும்....


அருள் எதோ விசாரிப்பில் மூழ்கி இருக்க... அவன் பின் நோக்கி ஒரு கார் வேகமாக புயலை கிளப்பி கொண்டு வந்து நிற்க....அதன் சத்தத்தால் திரும்பி பார்க்க...

அதில் இருந்து பெண் ஒருவர் இறங்க... கட்டான உடல் வாகுடன்.... சராசரி உயரத்தில்... காலில் ஹீல்ஸ் அனிந்து இருக்க... அது அவளை இன்னும் உயரமாக கட்ட.... ஜீன்ஸ் பான்ட், Tஷர்ட்... அதை மறைத்த படி அதன் மேல் ஒரு ஜாக்கெட்... முடியை முழுவதும் தூக்கி தன் உச்சியில் கொண்டையிட்டு கொண்டு.... முகத்தில் நெற்றியை மறைக்கும் படி முடி முன்னே வந்து அடி கொண்டு இருக்க... அதை தன் காதின் பின் பதுக்கியவள்... தன் கண் கண்ணாடியை தூக்கி அவ்விடத்தை பார்வை இட்டவள்... கண்ணாடியை முடியில் அமர்த்தி.... தனக்கே உரிய ராஜா தோரணையில் நடந்து வந்தாள்..... "ப்ரக்யா"


அவளை பார்த்த விக்ரம் அசந்து நிற்க... அருளோ அவளை கண்டு அதிர்ந்து நின்றான்...

வந்தவள் காவல் உடையில் இருந்த அருளை கண்டு...

"நான் ப்ரக்யா.....டிஸ்பி அனுப்பிவெச்ச டிடெக்ட்டிவ்.... மஞ்சரி கேஸ் விஷயமா உங்களுக்கு உதவி பண்ண அனுப்பி இருக்காங்க " உதட்டில் சிரிப்பு இல்லாமல்... அதிகார தோரணையில் தன்னை பற்றி கூறினாள்....


அவளை அசந்து போய் ஆஆவென பார்த்து கொண்டு இருந்த அருள்... அவள் பேசி முடித்ததும் விக்ரமை அறிமுகம் செய்தவன்... அவளை உள்ளே சென்று அமர சொல்ல... அவளும் அவ்விடம் விட்டு உள்ளே சென்றாள்....

செல்பவளையே பார்த்து கொண்டு இருந்த அருளின் பக்கம் திரும்பியவன்.....

"என்னடா இப்டி பாக்குறே....பாத்தால என்ன ஒரு அதிகாரம்னு.... நீ இப்டி பாக்குறத மட்டும் அவ பாக்கணும்.... கண்ணுலயே எரிச்சிடுவா உன்ன" எச்சரித்தான் விக்ரம்....

"நான் இவளை ஏற்கனவே பார்த்து இருக்கேன்டா... அன்னைக்கு இந்த ஊருக்கு வரும் போது ஒரு கனவு வந்தது.....அதுல ஒரு பொண்ணு வந்தானு சொன்னேன்ல... அது இவ தாண்டா" ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியில் கூறினான் அருள்

பின் உள்ளே சென்று... ப்ரக்யாவிடம் கேஸ்ஸை பற்றி அணைத்தையும் கூறினான் அருள்(முதலில் கனவில் கண்டது... பின் அவ்விடத்தை அடைந்தது... கனவில் வரும் கட்சிகள் என அனைத்தும்.... )

"அதாவது உங்களுக்கு கனவுல அந்த ஆத்மாக்கள் வந்து சொல்லிட்டு போகுது... அதை நீங்க போய் பார்த்து தான் இவ்வளவும் கண்டு பிடிச்சதா சொல்லுறீங்க... அப்டி தானே" கேள்வியாய் அருளை பார்த்தாள்

ஆம் என்பது போல் அவன் தலை அசைக்க....

"அப்போ மீதி இருக்க கேஸ்ஸுகும் அந்த ஆவிகலையே கேட்டுகோகலேன்.... நான் எதுக்கு தேவை இல்லாமல்... அந்த ஆவிகளே உங்களுக்கு மொத்த உதவியும் பண்ணிடுமே " கேள்வி போய் நக்கல் அதிகமாய் தெரிந்தது அவளின் பேச்சில்....

அதில் கடுப்பான அருள்... அவளை உற்று பார்க்க... ஆதரித்து போனான்


அவள் பின்னால் ஒரு உருவம்... கரு நிறம் என்று கூற முடியாது.... காற்றில் அலை பாய்கிற ஒரு உருவம்... உருவம் அற்ற நிழல் போல் ஒரு வடிவம்... . அதை உற்று பார்க்கிறான்... அது.... அவளின்... முகம்.... ஹையோ இது மஞ்சரி... அவனுக்குள்ளேயே வியந்து போய் பல முறை கூறி கொள்கிறான்...

அவள் ஏன் இங்கு வர வேண்டும்... எதோ மறுபடியும் கூற முயற்சிக்கிறாள்... சத்தம் கேட்க வில்லை.... அழுகிறாள்... கத்துகிறாள்... ஆனால் அவள் கூற வருவதை இவனால் புரிந்து கொள்ள முடிய வில்லை....

குழப்பத்தில் ஆணி அடித்தார் போல்... ப்ரக்யா பின்னால் தெரியும் அவளை வெறித்து பார்க்கிறான்... அவளை புரிந்து கொள்ள முயற்சிக்கிறான்....

அவள் வேறு யார் கண்ணிற்கும் தெரிய வில்லை என்பது அவனுக்கு நன்கு புரிந்து விட்டது....

ஹையோ... எனக்கு மட்டும் ஏன் இது... அவள் கூற வருவது என்ன....

விடை புரியாத கேள்விகளுக்குள் சிக்கி கொண்டான்....


தொடரும்....

-அர்பிதா💖
 
Top