கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கனவின் மொழி 6, 7

அர்பிதா

Moderator
Staff member
கனவு 6

ப்ரக்யா அவனை அழைப்பதும் தெரியாதா வண்ணம் மூழ்கி இருந்த அவனை விக்ரம் தான் தட்டி நிஜத்திற்கு கொண்டு வந்தான்...

முகம் முழுக்க குழப்பமும், படபடப்பும் மிகுதியாகவே தெரிந்தது அவனுக்கு....

பின் இறந்த பெண்களின் வீட்டினரை சந்திக்க வேண்டும் என்று அவள் கூற... கான்ஸ்டபிளை அவளுடன் அனுப்பிவைத்தவன்....

தானும் அமர்ந்து அவர்களின் பைலை புரட்ட அராம்பித்தான்....

அந்த பைலை திருப்பி பார்க்க பார்க்க... அவனுக்கு அதில் இருந்து ஒரு துப்பு கிடைக்க... உடனே அதை விக்ரமிடமும், ப்ரக்யாவிடமும் கூற வேண்டும் என்று அவர்களை அழைக்க....

அடுத்த அரைமணி நேரத்தில் மூவரும் சந்தித்தனர்.....

அந்த பைலைல புரட்டிக்கிட்டு இருக்க அப்போ... அது எல்லாத்துலயும் ஒரு விஷயம் மட்டும் பொதுவா இருக்கு..... அது"பார்ட்டி".... என்றான் அருள்


"பார்ட்டியா " இருவரும் ஒரு சேர கேட்க.....

""ஆமாம்.... அதாவது இந்த ஊருல இருக்கவங்க எல்லாரும் வாரத்துக்கு ஒரு முறை... எல்லாரும் ஒண்ணா சேர்ந்து சமைச்சி சாப்பிட்டு விளையாடின்னு சந்தோசமா இருப்பார்களாம்""


""அதிலயும் கொள்ள பட்ட இந்த ஏழு பெண்களுமே அந்த பார்ட்டியில் பங்கேற்த்த அடுத்த நாள் தான் காணாமல் போயிருக்காக.... காணாம போனா இரண்டாவது நாள் அவுங்கல கொன்னு போட்டு இருக்காங்க"" முடித்தான் அருள்

இவற்றை கேட்டு கொண்டு இருந்தவருக்கு கேள்விகள் பல எழுந்தாலும்.... குறுக்கிட்ட ப்ரக்யா

"நான் அவுங்க வீடுகளுக்கு சென்ற போது... எனக்கு ஒரு விஷயம் வித்யாசமா பட்டது... அது இந்த கேஸ்ஸில் பயன் படுமானு தெரியல" என்று தயங்குபவளை

மேலே கூறு என்பதை போல் இருவரும் சைகையில் அனுமதி அளிக்க.... தொடர்ந்தவள்.....

"கொலை செய்ய பட்ட அனைவருக்குமே அழகு கலைகள்ல ஆர்வம் இருக்கு... அதாவது ஒருத்தருக்கு தையல்... ஒருத்தருக்கு வீட்டு அலங்காரம்... ஒருத்தருக்கு சிகை அலங்காரம்... ஒருத்தருக்கு மண் பொம்மைகள் செய்வது இப்டி எதோ ஒன்று"... முடித்தாள் ப்ரக்யா

"இறுதியாக இறந்தவள்...... மஞ்சரிக்கு கூட... அழகு கலையில் ஆர்வம் இருந்து... அந்த படிப்பை முடித்தவள் தானே"... தனக்கு தெரிந்த சிறு தகவலை கூறினான் விக்ரம்

விசாரணையை தொடரலாம்... இது கண்டிப்பாக தற்கொலை கிடையாது... கொலை தான் என்பது மட்டும் உறுதியாக புரிந்தது மூவருக்கும்.....

முதலில் அந்த பார்ட்டிக்கு சென்றவர்கள் யார் யார் என்ற விவரத்தையும்.....அதில் யாரேனும் புதியவரோ இல்லை சந்தேக படும் படி எவரேனும் வந்தார்களா என்று யோசிக்க ஆரம்புத்தனர்.....

அந்த நாள் மூவருக்கும் நீண்ட நாளாய் அமைய... வீட்டிற்கு வந்த உடனே உணவையும் மறந்து தூங்கி போயினர் விக்ரமும், அருளும்....

நீண்ட அரண்மனையின் முற்றம் போல் ஒரு பாதை... பாதையின் நடுவே பெரிய தூண்களுடன்.... இருண்டு, மேடும் பள்ளமுமாக இருக்கும் பாதை...

உத்திரத்தில் தொங்கும் மின் விளக்குகள்... பக்க செவுருக்களில் இருக்கும் உடைந்த சிறு விளக்குகள்....

அவற்றில் ஒளி விட்டு விட்டு எரிய.... அதை உற்று பார்த்து கொண்டு இருக்கும் போது... காதை கிழிக்கும் எதோ ஒரு வீர்ர்ர்ர்ர் என்ற சத்தம்....

சத்தம் வந்த வழி இவனும் நடக்க... இவன் முன்னேறி செல்ல செல்ல பாதையில் வெளிச்சம் தானாக மின்ன ஆரம்பித்தது...

அந்த முற்றத்தை கடந்து அருகில் இருக்கும் ஒரு அறையில்.... யாரோ ஒரு பெண்.... முடிகள் கலைந்து... கட்டி இருக்கும் புடவை கலைந்து.... கை கால்களில் ரத்தம் வடிய... தரையில் எழவும் தெம்பில்லாமல் கிடக்கிறாள்

அவளை உற்று பார்க்க... அன்று அவன் பார்த்த அதே பச்சை நிற புடவை... அதே மல்லிகையும் ரோஜாவும் சேர்த்த பூங்கொத்து.... அன்று அவள் அணிந்து இருந்த அதே ஆபரணங்கள்....

மேலும் அவளை நெருங்கி பார்க்க... ஹையோ... நீயா..... இவளா... இல்லை இல்லை... அவளாக இருக்காது... இருக்கவும் கூடாது... இது என்ன அனத்தம்.... வேண்டாம் வேண்டாம் என்று அவன் விலகி சென்று அந்த அறையின் வாசலில் நின்று கொள்கிறான்... அதன் கதவை பற்றி கொண்டு.....

அங்கு... அவள்... ப்ரக்யா....ஹையோ என்று அலறியது ஒரு மனம்....

திடீரென ஒரு புயல் போல் ஒரு காற்று.....பார்வை அனைத்தயும் மறைக்கும் அளவிற்கு புகை....

எங்கே அவளை இழந்து விடுவோமோ என்ற தவிப்பில் இவன்.... தன் கண்களை துடைத்து கொண்டு அங்கு நடப்பவற்றை பார்க்க முயற்சிக்கிறான்....

அங்கு... அதோ... அவள்... அதே நிலைமையில்... படுத்து இருக்கிறாள்... ஆனால் அவள் எங்கே வெறித்து பார்த்து கொண்டு இருக்கிறாள்... என்று யோசித்தவாறே பார்வையை சுழற்றினான் அவன்....

இது என்ன கொடுமை.... அவள் முன் இரண்டு உருவமற்ற புகை போல் இரண்டு உருவம்.... இன்று காவல் நிலையத்தில் அவன் பார்த்தது போல....

அவளிடம் எதையோ சொல்கிறார்கள்... இல்லை இல்லை... கத்துகிறார்கள்... ஒருவர் தலையில் அடித்து கொண்டு அழுகிறாள்... மற்றொருவர் விரலை நீட்டி எதோ எச்சரிக்கிறாள்....

ஆனால் ப்ரக்யாவிற்கு புரிய வில்லை போல... சத்தம் கேட்க வில்லை போல... அவர்களையே வெறுத்து மருண்டு பார்த்து கொண்டு இருக்கிறாள்...

இருவரும் வாய் அசைவில் எதையோ மறுபடியும் மறுபடியும் கூறுகிறார்கள்....

அதில் ஒருவர் இவனின் பக்கம் திரும்புகிறாள்... அவனை நோக்கி வருகிறாள்.... அவளை உற்று பார்த்தாள்... இவளா... மறுபடுயுமா... மஞ்சரி.... வாய் விட்டே அவளின் பெயரை கூறினான்...

அவனை நெருங்கிவள்.... அவனிடமும் எதையோ கூறுகிறாள்.... எதையோ கத்தி உரைக்க முயற்சிக்கிறாள்... அவனுக்கு கேட்க வில்லை...


ப்ரக்யாவை காட்டி எதையோ கூறுகிறாள்... மன்றாடுகிறாள்... இறுதியில் இறுக்கமான முகத்துடன் எச்சரிக்கிறாள்.... அவளின் வாய் அசைவை மட்டும் படிக்க முயற்சிக்கிறான் அவன்....

ப்ரக்யாவிடம் பேசி கொண்டு இருக்கும் பெண்ணின் வாய் அசைவை பார்க்கிறான்... படிக்க முயற்சிக்கிறான்....

அவள் கூறுவதை உணர்ந்தவன்.... அதிர்கிறான்.....

""நீயும் கொள்ள படுவாய்""என்றனர் இருவரும்.... ப்ரக்யாவிடம்

மஞ்சரியை பார்க்கிறான்... அவளோ... """இவளையும் இழப்பாய் """ என்றாள் அருளிடம்

கண் விழிக்க...மணி ஆறு


கனவு 7

வியர்வை வடிய.... படபடத்து அவன் எழுந்து அமர... மணி ஆறு...


என்ன கனவு அது.... அதில் பிரக்யா ஏன்... அவளுக்கு எதுவும் நேர கூடாது... அவளுக்கு இவற்றில் என்ன சம்மந்தம்... அவள் ஏன் கொள்ள பட வேண்டும்... யோசித்தவனுக்கு மனதில் பயம் குடி கொள்ள ஆரம்பித்தது....


உடனே மனம் பிராகியவை நினைத்து கவலை கொள்ள... அவளுக்கு உடனே அழைத்தவன்....


"சொல்லுங்க Mr.அருள்... இவ்ளோ காலைல கூப்பிட்டு இருக்கீங்க... எதாவது அவசரமா... இயல்பாக பேசினாள் அவள்"....


அவளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை அதில் புரிந்து கொண்டவன்...


"ஒன்றும் இல்லை Ms. ப்ரகியா.... இன்னைக்கு நீங்க எத்தனை மணிக்கு காவல் நிலையம் வருவீங்க.... எட்டு மணி போல் வந்தாள் நன்றாக இருக்கும்" எதோ பேசி சமாளித்தான் அருள்


சரி என்று கூறி அவள் தயாராக போக...


இங்கோ..... பயம் கலந்த குழப்பத்தில் அமர்ந்து இருந்தான் அருள்


"என்னடா... டீ ஆறுது பாரு... இன்னும் குடிக்காம இருக்க... என்ன அச்சு" கேட்டான் விக்ரம்


கனவு ஒன்னு.... அதை பத்தி தான் யோசிச்சிகிட்டு இருக்கேன் என்றான் அருள்... எங்கோ கவனத்தை வைத்து கொண்டு


அவனின் முகத்தை பார்த்தவனுக்கு... அதில் பயம் தெரிய... கனவு என்றால் இதுவரை படபடப்பையே அருளின் முகம் காண்பித்து இருக்க... இன்று புதிதாய் பயத்தை காண்பிக்க... உடனே அமர்ந்து அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டான்....


"கண்டிப்பா அந்த பொண்ணு ப்ரக்யா தானாடா " வேற யாராவதா இருக்க போறாங்க? "


அவள் தான் என்று உறுதியாக கூறினான் அருள்... பின் இதை பற்றி அவளிடம் கூற வேண்டாம் என்று முடிவெடுத்தவர்கள்... பணிக்கு கிளம்பினர்.....


எட்டு மணி போல் காவல் நிலையம் வந்து சேர்ந்த ப்ரக்யா.... மீண்டும் அந்த குடி இருப்பு பகுதியில் விசாரணைக்கு செல்ல வேண்டும் என்று கூற... அவளை தனியாய் அனுப்ப விருப்பம் இல்லாமல்.... அருளும் விக்ரமும் அவளுடன் சென்றனர்...


அங்கு சென்ற அரைமணி நேரமாக ப்ரக்யாவுடன் விசாரணை செய்து கொண்டு இருந்தனர் இருவரும்...


வந்ததில் இருந்து தனிமையில் இருக்கும் அந்த ஒற்றை வீடு அருளை உறுத்தி கொண்டு இருக்க...


வீர்ர்ர்... என்று எதோ ஒரு சத்தம்.... அதிர்ந்து வியந்து சுற்றி பார்த்தான் அருள்.... அவனை தவிர மற்ற அனைவரும் அவர் அவர் வேலையில் இருக்க... விக்ரமிடம் வந்தவன்...


"உனக்கு எதாவது சத்தம் கேட்டுதாடா... யாராவது கத்துற மாதிரி" வேறு யாருக்கும் கேட்காத குரலில் விக்ரமை கேட்டான்...


அவன் இல்லை என்பதை போல் தலை ஆட்ட... அமைதியாய் தன் வேலையை தொடர்ந்தவனுக்கு....


யாரோ தன்னை அழைப்பது போல தோன்ற... சுற்றி பார்க்க... அந்த வீடு... அது எதோ வித்யாசமாக தெரிந்தது அவனுக்கு... யாரோ அங்கிருந்து அவனை கூப்பிடுவதை போல்.... அருகில் வர சொல்லி அழைப்பது போல்...


அங்கு சென்று உண்மையை கண்டுபிடித்ததாக வேண்டும் என்ற உறுதியுடன் அவ்விடம் செல்ல முயன்றவனை.... தாங்களும் அவனுடன் வருவதாக கூறி விக்ரமும், ப்ரக்யாவும் சேர்ந்து கொண்டனர்.....


மூவரும் அந்த வீட்டின் கதவை தட்ட.....ஒரு பெண் ஒருவர் கதவை திறந்தார்....


இங்க விசாரணைக்காக வந்தோம்.... உங்களோட வீடு தனியாவும் அழகாகவும் இருக்க... உங்களை பார்த்துட்டு போகலாம்னு வந்தோம் என்றவர்களை உள்ளே வரவேர்த்தார் அந்த பெண்....


தன் பெயர் ப்ரியா என்று அறிமுகம் செய்து கொண்டாள் அவள்...


குடிக்க தண்ணீர் கொண்டு வர உள்ளே செல்ல.... அவர் வரும் வேளையில் எதோ ஒரு வீர்ர்ர் என்ற சத்தம்....


தனக்கு மட்டும் தான் மறுபடியும் கேட்கிறது என்று அருள் நினைத்திருக்க... அதை பொய்யாகும் விதமாக...


"அது என்ன அந்த சத்தம்... வீட்ல வேற யார் இருக்கா" விசாரித்தாள் ப்ரக்யா....


அது ஒன்றும் இல்லை... இப்டி பட்ட சத்தங்கள் அடிக்கடி இங்கு கேட்க தான் செய்யும்... என்று அவள் கூறி விட்டு அவள் சமையல் அறை செல்ல எத்தனித்த நேரம்....


வீட்டின் விளக்குகள் அனைத்தும் விட்டு விட்டு எரிய ஆரம்பித்த நேரம்.....அதுவரை அருளிருக்கு மட்டுமே எதோ விபரீதம் தட்டு பட பதட்டத்துடன் அமர்ந்து இருந்தான்... இப்பொது அந்த பதட்டம் மற்ற இருவரையும் தொற்றி கொள்ள...


ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு அமர்ந்து இருந்த நேரம்


மற்றும் ஒரு காதை கிழிக்கும் சத்தம் அவர்களை தாக்க.... அது அந்த வீட்டின் கடைசி அறையில் இருந்து வந்தது என்பதை புரிந்து கொண்டனர்....


அருள் அந்த சத்தம் வந்த திசையை நோக்கி நடக்க எத்தனிக்கை... மற்ற இருவரும் அவனுடன் செல்ல முயல....


நீங்க ஏன்டா வறீங்க? நான் போய் பாத்துட்டு வரேன்...என்று செல்ல முயன்றவன் கூற வருவதை துளியும் காதில் வாங்க வில்லை ப்ரக்யா....


"இவள் வேறு" என்று சலித்து கொண்டாலும்... வேறு வழி இன்றி மூவரும் எழ... ப்ரியாவை தேடியவர்கள்...


அவ்ளோ அதற்குள் முற்றத்தில் பாதியில் இருந்தாள்....


அவளை பின் தொடர்ந்து செல்லும் வேலை... எங்கிருந்தோ வீசியது புயல் காற்று... காற்று மட்டும் இல்லாமல் அது தூசியையும் சேர்த்து கொண்டு வீட்டில் வீச...


நகர்ந்து கொண்டு இருந்த மூவரும் அதன் தாக்கத்தால் சிறிது தடுமாறினாலும்... ஒருவரை ஒருவர் பற்றி கொண்டு அங்கு இருந்த சுற்றரில் பதுங்கி நிற்க....


அருளோ ஒரு புறம் விக்ரம்... மறு புறம் ப்ரக்யா என்று இருவரையும் பற்றி கொண்டு இருந்தான்.... பிராகியவை தன்னோடு அணைத்த படி நின்றான் என்று தான் கூற வேண்டும்...


சிறிது நேரத்தில் புயலின் தாக்கம் கொஞ்சம் குறைய...கண்ணில் விழுந்த தூசியை துடைத்த படி சுவற்றின் பின்னால் இருந்து எட்டி பார்த்தாள் ப்ரக்யா....


பார்த்தவள் கண்கள் இரண்டும் விரிந்து.... எங்கோ ஆணி அடித்தார் போல் பார்வையை நிலை கொள்ள செய்து, பயமும் மிரட்சியுடனும் அவள் பார்க்கும் திசை நோக்கி சுவற்றின் பின்னால் இருந்து வெளியே வந்த இருவரும் பார்க்க, வேடவேடத்து போயினர்....


முற்றத்தில் நடுவில் புயலில் சிக்கி கொண்ட ப்ரியா அங்கு இருந்து நகர முயற்சிக்க... அவளை நகர விடாமல் எதோ ஒன்று அவளை பற்றி இருக்க...


கண் இம்மைக்கும் நேரத்தில் ஜன்னலை உடைத்து கொண்டு ஒரு நீண்ட கயிற் இன்று உள்ளே வர... அடுத்த நொடி அது ப்ரியாவின் கழுத்தை இறுகி...அவளை சுவாசத்திற்கு தவிக்கும் படி செய்தது...


அவள் தன்னை நிலை படுத்தி கொள்ள பக்கத்தில் இருந்த மேசையை ஒரு கையில் பற்றி மறு கையால் கயிற்றை தளர்க்க முயற்சித்து கொண்டு இருந்த நேரம்... கயிற்றின் மறு முனையால் அவள் இழுக்க பட்டு பக்கத்து அறைக்குள் கொண்டு செல்ல பட்டாள்...


நடப்பதை யூகிக்கும் முன் அனைத்தும் நடந்து விட... கயிற்றால் அவள் இழுக்க படும் போது... அவளை காப்பாற்ற தாங்கள் இடம் விட்டு ஓட ஆரம்பித்த மூவரும்... அறையின் வாசலை அடையும் முன் அந்த அறையின் கதவு மூட பட்டது....


கதவை திறக்க பல முறை முயற்சி செய்தும்... முடியாமல் போக... அதை உடைக்கும் முயற்சியில் இறங்கினான் அருள்....


அதற்குள் வீட்டின் பின் புறம் சென்று கனமான இரும்பு கம்பி ஒன்றுடன் வந்தாள் ப்ரக்யா....


அதை வைத்து கதவின் பூட்டை உடைக்க அருள் முயற்சிக்க... அந்த பூட்டோ இம்மியும் அசையாமல் இருந்தது.....


காத்திருப்பதை தவிர வேறு வழி இல்லை என்பதை உணர்த்த மூவரும் ஆளுக்கொரு இடத்தில் சுவற்றில் சாய்ந்து நிற்க...


சிறிது நேரத்தில் பூட்ட பட்ட கதவில் இருந்து "தம் தம்"என்ற சத்தம் கேட்க....


சத்தம் கேட்டதால் அருள் மட்டும் அருகே சென்று கதவை திறக்க முயற்சிக்க... அது திறந்தது...


அந்த கதவை திறந்து கொண்டு மூவரும் உள்ளே செல்ல.... அந்த அறை முழுவதும் மயான அமைதியுடன்... முழு இருட்டுடன்.... பாதை தெரியாமல் இருக்க...


தீடிரென அந்த அறையின் விளக்குகள் விட்டு விட்டு எரிய.. அந்த அரைகுறை வெளிச்சத்தில் பிரியவை கண்டு கொண்டனர் மூவரும்....


மயக்க நிலையில்... ரத்தம் வடிய... முகத்திலும் கைகளிலும் கீறல்களுடன் காயங்கள் இருக்க.... அங்கு நடப்பது புரியாமல் மிரண்டு போய் நிற்க...


ப்ரியாவை காப்பாற்ற வேண்டும் என அவளை தூக்கி அவளுக்கு முதல் உதவி வழங்கினான் விக்ரம்... ஆனால் அவள் மயக்கம் தெளியாமல் அங்கு படுத்து இருக்க...


மூட பட்ட வீட்டின் கதவையும் திறக்காமல் போக... ப்ரியாவும் மயக்கத்தில் இருந்து எழாமல் போக..... மூவரும் அங்கு நடப்பது புரியாமல் மாட்டிக்கொண்டனர்....



 

Sundarji

Active member
கோயிங் ரொம்ப அருமையாக. சூப்பர் சூப்பர்
 
Top