கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கனவின் மொழி 8, 9, 10

அர்பிதா

Moderator
Staff member
கனவு 8


அடுத்த நாள் காலை பொழுது விடியவும்..... பிரியா கண் விழிக்கவும் சரியாக அமைந்துவிட....

கண் விழித்த அவளை இப்பொது எதுவும் கேட்க வேண்டாம் என்று பிரிந்துரை செய்தான் விக்ரம்.... அவனின் ஆலோசனை படி... ப்ரியாவை அங்கு இருந்து அழைத்து கொண்டு வெளியேறினார் மூவரும்....

மருத்துவமனை அழைத்து சென்று அவளுக்கு தேவையான சிகிச்சை அளிக்க பட்டு வர... வேறு வழி இன்றி அமைதி காத்தான் அருள்.....

பயந்து மருண்டு போய்....உருவமற்ற எதற்கோ அவள் பயப்பட... யார் அவளை நெருங்கினாலும் கண்ணில் பயமும் நடுக்கமும் அவளுள் நிலைத்து குடி கொண்டது...

அவளை அமைதி படுத்தி... சமாதானம் செய்தது ப்ரக்யா தான்.... அவள் அருகிலேயே அமர்ந்து இருக்க... ப்ரக்யாவை, அவள் அருகில் விட்டுவிட்டு செல்ல மனம் இல்லாத அருள் cctv கேமரா மூலம் அவர்கள் இருக்கும் அறையை கண்காணித்த படியே இருந்தான்...

உண்மை தெரிந்தவன், உணர்ந்தவன் அவன் ஒருவன் தானே... சிங்கம் தானாக கூண்டில் சிக்கும் வரை தன்னவர்களுக்கு எதுவும் நேர்ந்து விட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தான்....

மாலை போல் ப்ரியாவை காண சென்ற அருளும், விக்ரமும்...கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர் .....

அங்க என்ன நடந்தது... யார் அந்த உருவம் இல்லாத நிழல்? உங்களுக்கும் அவுங்களுக்கு என்ன சம்மந்தம்? வினவினான் அருள்

"நாங்க பார்த்தது நிஜமா இல்லை கணவானு கூட தெரியல.... நீங்க எதோ ஆபத்துல மாட்டிகிட்டு இருக்கீங்கனு மட்டும் தெரியுது.... எங்க கிட்ட நடந்ததை சொல்லுங்க... எங்களால முடிஞ்ச உதவியை செய்யுறோம்" உறுதி அளித்தாள் ப்ரக்யா...

தன் மௌனத்தை உடைத்த பிரியா,

அது... நீங்க பார்த்த அந்த உருவம்.... அது ஒரு ஆவியோடது.... அதுவும் நான் கொன்ன பொண்ணோட ஆவி.... என்னோட கூட பிறந்த தங்கையோட ஆவி....

இரு கால்களையும் மடக்கி.... முகத்தை மறைத்து அழ ஆரம்பித்து விட்டாள்....

"நீங்க கொலை செய்தீர்களா.... எப்போ நடந்தது இது... அதுவும் உங்க தங்கையை ஏன்"?

கேள்விகள் பறந்தது ப்ரக்யாவிடம் இருந்து

நாங்க இங்க வந்து ரெண்டு மாசம் ஆகுது...நாங்க பிறந்ததுல இருந்து ரொம்பவே பாசமாக தான் வளர்க்க பட்டோம்... என்னை விட அவள் நான்கு வயது சிறியவள்...... பெயர் கீதா

எனக்கு இருபது வயது இருக்கும் போது... அதாவது அவளுக்கு பதினாறு வயது இருக்கும் போது அவளை காதலிப்பதாக கூறிய ஒருவன்.. அவள் மறுத்ததால்... அவளின் முகத்தில் ஆசிட் ஊற்றி... அவளின் முகத்தை நாசம் ஆகினான்...

அன்றில் இருந்து அவள் வீட்டில் இருந்தே வெளியே வராமல்.... அறைக்குளேயே.. அமைதியாக... உணவு உண்ணாமல்... தூக்கம் இன்றி.... ஒரு வருடம் அவதி பட்டாள்....

பின் மருத்துவர் ஒருவரின் உதவியோடு அவளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் மூலம் அவளுக்கு வேறு முகம் அளிக்க பட்டது... சிறிது காலம் அவளின் அந்த புது முகம் அவளுக்கு பிடிக்காமல் போக..... காலம் போக.. அவள் அதை ஏற்று கொண்டு வாழ ஆரம்பித்தாள்...

ஆனால் அக்கம் பக்கம் வீட்டினரின் பேச்சுகளும்..... நக்கல் நையாண்டிகளும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது... அது அவளை காய படுத்த ஆரம்பிக்க... அது கால போக்கில் தீராத வடுவாக மாற துவங்குவது...

அதனால் மாற்றம் தேடி நாங்கள் இருவர் மட்டும் இங்கு வந்து தங்க... வீட்டினர் பின்னால் வருவதாக கூறி அனுப்பி வைத்தனர்...

அன்று... ஒரு வாரத்திற்கு முன்... இங்கு நடந்த பார்ட்டியில்.. எங்களையும் கலந்து கொள்ள சொல்லி பக்கத்து வீட்டினர் வற்புறுத்த... நாங்களும் கலந்து கொண்டோம்....

பார்ட்டியில் பல விஷயங்களை பற்றி நாங்கள் பேசி மகிழ்ந்து... பின் வீடு திரும்பினோம்.... வீடு வந்த பின்னர் கோவபமாகவே அமர்ந்து இருந்தாள் கீதா...

பலமுறை கேட்டும் பதில் வராமல் போக... அவளின் அருகில் சென்று அவளை தொட...

திடீரென ஆக்ரோஷம் ஆனவள்... பக்கத்தில் இருந்த அந்த பெரிய மர துண்டால் என்னை தாக்க ஆரம்பித்தாள்....

இங்க வந்தும் உன்னோட இந்த முகத்தை வெச்சி... எல்லார் முன்னாடியும் நீ தான் அழகுன்னு சொல்ல வெச்சிட்ட இல்ல.... என்னை குறைச்சி, என்னை அசிங்க படுத்தும் உன்னுடைய முகம் இனி உனக்கு வேண்டாம்... அதை பார்க்க எனக்கு விருப்பம் இல்லை...

என்று கூறி கொண்டே என்னை தாக்கினாள்.... அவளை கட்டு படுத்த முயற்சித்தும்.... அவளால் முடியாமல் போக..... தன்னை தற்காத்து கொள்ளும் பொருட்டு அவளை தள்ளி விட்டு... மேஜை மேல் கையில் கிடைத்த கத்தியை எடுத்து வீசினாள் பிரியா...

அது நேரே அவளின் கழுத்தை போய் பதம் பார்த்து... ரத்தம் ஆறாக ஓட துவங்கியது... பேச்சு மூச்சற்று அவள் கீழே விழ....

தான் செய்த அனத்தம் அப்போது தான் அவளுக்கு புரிந்தது....பதற்றத்தில் அவளின் அருகில் சென்று பார்க்க... அவள் இறந்து கிடந்தாள்....

வேறு வழி இன்றி அவளை, அந்த யாரும் செல்லாத காட்டு பாதையில் உள்ள ஒரு குகை போல் ஒன்றிற்குள் தள்ளி விட்டு வந்து விட்டேன்...


ஆனால் இதை நான் வேண்டும் என்றே செய்யவில்லை...என்னை மன்னித்து விடுங்கள் என்று மறுபடியும் அழ ஆரம்பித்தவளை.... தேற்றிய ப்ரக்யா... அவள் கீதாவை அப்புறப்படுத்திய இடத்தை அவளால் அடையாளம் காண்பிக்க முடுயுமா என்று கேட்க...

ப்ரியாவும் முடியும் என தலை அசைக்க... அவ்விடம் செல்ல முடிவெடுத்தனர்....

பிரியா தன்னுடைய கதையை கேட்ட விக்ரமிற்கு, ப்ரக்யாவிற்கும் இந்த கேஸ் எதை நோக்கி போகிறது என்பது இன்னும் புரியாமல் இருக்க...

அருள் மட்டும்... உதட்டில் புண் முறுவலுடன்... 'நீ இறுதியாய் கூற விரும்புவதை கூறிக்கொள்'என்பது போலவே நின்று இருந்தான்....

ஆனால் அந்த குகை பகுதிக்கு செல்லும் முன் ப்ரக்யாவை தனியே அழைத்தவன்... 'ஜாக்கிரதையாக இரு' என்பதை மட்டும் அழுத்தி கூறினான்...

"அதை கேட்டு நடந்துவிட்டாள், அவள் தான் ப்ரக்யா இல்லையே"... 'நீ கூறுவதை கூறி கொள், நான் கேட்ம போவது இல்லை' என்ற மிடுக்குடனே இருந்தாள்... அவளின் போக்கு தெரிந்த அருளும் அவளின் மேல் ஒரு பார்வையை வைத்து இருக்கவும் தவற வில்லை....

அந்த காட்டு பாதைக்கு பிரியாவுடன் அருள் காவல் வாகனத்திலும்... ப்ரக்யா, விக்ரம், மற்றும் இரண்டு காவல் அதிகாரிகள் ப்ரக்யா வண்டியிலும் புறப்பட்டனர்....

அடர்ந்த காட்டு பகுதி... இங்கு மனிதர்கள் இருப்பது கடினம் என்பதை விட இயலாத காரியம் என்பது, அதான் தோற்றத்திலேயே புரிந்தது...

அடர்ந்து... சூரியனின் ஒளி கதிர்கள் கூட உள்ளே போக முடியாமல்... குயிலும் குருவியும் சத்தம் போட்டு கொண்டு... வானில் வௌவால் கூட்டம் காட்டை எப்போதும் வட்டம் போட்டு கொண்டு இருக்க....

தவளைகளும், ஓநாய்களும் சத்தம் போட்டு தான் கூட்டாளிகளை கூப்புட....எந்த மரக்கிளையில் எந்த பாம்போ, எந்த பூச்சியோ இருக்குமோ என்ற பயத்தை குடுக்கும் வண்ணம் மரங்கள் அடர்ந்து ஒன்றை ஒன்று கட்டி கொண்டு இருக்க....

எங்கோ ஒலிக்கும் சிங்கத்தின் கர்ஜனை, மான் ஓட்டம் எடுக்கும் சத்தம் என அந்த காட்டை பார்ப்பவருக்கே பயத்தில் உச்சி முதல் பாதம் வரை வெடவெடுக்க....

அந்த காட்டில் இறங்கி நடக்க ஆரம்புத்தனர் அனைவரும்....

அருளின் பார்வை பாதையின் மேல் இருப்பதை விட ப்ரக்யா மேல் தான் அதிகம் இருந்தது....

சிறிது தூரம் நடந்து இருக்க... ப்ரியா கூறிய குகை வந்து விட...

அந்த குகை காட்டை விட அதிகம் திகிலாகவே இருந்தது....

அவள் கூறிய இடத்தை சுற்றி வளைத்து... அந்த சிறிய நுழைவு கொண்ட குகைக்குள் சென்றால் தான் கீதாவின் சடலத்தை எடுக்க முடியும் என்பதால் உள்ளே செல்ல இருவர் தயாராக...

அருளும் விக்ரமும் குகையை சுற்றி வேறேதும் தடயமோ ஆதாரமோ கிடைக்குமா என்று பார்க்க செல்ல.... சென்றவர்கள் திரும்பும் போது... பார்வையை சுழற்றி பார்த்து அருளிற்கு ப்ரக்யா அவ்விடத்தில் இல்லை...

மேலும் ஆராய... ப்ரக்யா பிரியா இருவரும் இல்லாமல் போனது புரிய... கீதாவை விட்டுவிட்டு... ப்ரக்யாவிற்காக ஓடினர் அனைவரும்....



கனவு 9


ப்ரக்யா அவ்விடம் இல்லாமல் போக... கூடவே ப்ரியாவும் இல்லாமல் போக... அதில் பதறியவன்.....

இனி நடக்க போகும் விபரீதம் ஒரு அளவிற்கு புரிந்து போனது அருளிற்கு... முடிந்த வரை வண்டியை வேகமாக ஓட்டினான்.... அந்த தோட்டத்தின் பாதையில் சீறி பாய்ந்து கொண்டு இருந்த அருளின் வாகனம்....

ப்ரியாவின் வீட்டின் அருகே ப்ரக்யாவின் வண்டி நிற்பதை கண்டு... அவளின் வீட்டின் வாசலில் கொண்டு போய் வண்டியை நிறுத்தினான்...

வண்டியில் இருந்து இறங்கிய அருளும், விக்ரமும் ப்ரியாவின் வீட்டிற்கு விரைய... அது உள் இருந்து பூட்ட பட்டு இருந்தது....

பல முறை தட்டியும்... குரல் கொடுத்தும் யாரும் திறக்காமல் போக... நேரத்தை வீண் அடிக்க நினைக்காத அருள்... அந்த வீட்டிற்கு பின் புறம் வாசல் இருப்பது நினைவிற்கு வர...அதை நோக்கி ஓடினான்....

செல்லும் வழியில் வீட்டின் முற்றத்தை ஒட்டினார் போல் ஒரு ஜன்னல் ஒன்று இருக்க... அதை திறக்க முயற்சிக்க... அதுவும் திறந்து கொள்ள... அவ்வழி அவன் கண்ட காட்சி மிரளவே வைத்தது அவனை....

முற்றத்தில் ஒரு கைத்து கட்டில் ஒன்று இருக்க... அதில் ப்ரக்யா படுக்க வைக்க பட்டு... இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி கட்டிலின் இரு புறமும் கயிற்றால் கட்டிவைக்க பட்டு இருந்தது....

கால்களும் அதே போல் கட்டிலின் மறு முனையில் கட்ட பட்டு இருக்க... அதன் பிடியில் இருந்து தப்பிக்க அவள் இரு புறமும் நன்கு அசைய... அந்த காட்டிலே அவள் ஆட்டிய படி இரு புறமும் சாயும் நிலைக்கு வந்து மீண்டது....

அவளின் சத்தம் கேட்காமல் இருப்பதற்காக வாயில் எதோ ஒரு துணியை வைத்து அடைத்து... அதை மேலும் இருக்க... வாயை சுற்றி மற்றொரு வெள்ளை துணியால் இருக்க கட்ட பட்டு இருந்தது....

அவளை மேலும் ஆராய... அவள் அணிந்திருந்த மேல் சட்டையில் சில இடங்களில் ரத்த கரையும்.... பல இடங்களில் கிழிந்தும் தொங்கியது....உதட்டில் வேறு சிறு கீறல்கள் இருக்க... கண்ணில் இருந்த மை கரைந்து அது கண்ணை சுற்றி பரவி இருக்க...

அதை மொத்தமாய் பார்த்த அருளிற்கு.... அன்று அவன் கனவில் வந்த ப்ரக்யாவின் தோற்றத்தை போலவே இப்போதும் அவள் தோற்றம் இருக்க...

அன்று இருந்ததை போலவே துவண்டு, மருண்டு அவள் இருப்பதை பார்த்தவனுக்கு... அந்த இரு ஆத்மாக்கள் கூறியது தான் நினைவிற்கு வந்தது...

நான் கனவில் கண்டது நடந்தது என்றால்.... இவள் கொள்ள படுவாள் என்று அவர்கள் கூறியதும் நடக்குமோ... நிதர்சனத்தை புரிந்தவன்....

உடனே பின் பக்க கதவை திறக்க முயற்சிக்க... அதுவும் உள் இருந்து பூட்ட பட்டு இருக்க...... கதவை உடைக்கும் முயற்சியில் அவன் இருக்க...

அதற்குள் விக்ரம் காவல் நிலையத்திற்கு தகவல் அழைத்து... அனைவரையும் இந்த இடத்திற்கு வரும் படி கூற... சில வினாடிகளில் அனைவரும் வர... அந்த வீட்டை மொத்தமாக தங்கள் காவலில் எடுத்து கொண்டனர்....

தன் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து... அம்புலன்ஸ் ஒன்றையும்... மருத்துவ உதவியாளர்களை உடனே வரவழைத்தான் விக்ரம்...

மறுபுறம் கதவை உடைக்க அருள் போராடி கொண்டு இருக்க....

முற்றத்திலோ.... கட்டிலை ஒட்டிய மாடி படிக்கட்டில் இருந்து.....


கருத்த ஆவி போல்... உடல் எங்கும் கறுப்பு உடை அணிந்து... தலையை மறைக்க அதே கருப்பு நிறத்தின் துணியால் மூடி இருக்க... முகத்தில் எதோ உருவம் பதித்த மாஸ்க் ஒன்றை அணிந்து கொண்டு... ஒரு கையில் காய்கறி வெட்டும் கத்தியும்... மறு கையில் அறிவாலும் வைத்து கொண்டு... ப்ரக்யாவை நெருங்கினர்... அந்த நபர்...

முதலில் அவரை ஜன்னல் வழியே பார்த்து கொண்டு இருந்த விக்ரம் பேய் என்று நினைத்து கொள்ள... உற்று பார்க்கும் போது தான் அவர் தன் கால்களில் கருத்த சாக்ஸ் மற்றும் அதே கருப்பில் ஷூ ஒன்றையும் அணிந்திருக்க.... கைகளின் ரேகை பதியாமல் இருக்க... இரு கைகளிலும் க்ளோவ்ஸ் போட்டு கொண்டு... கொடூர நடையுடன் ப்ரக்யாவை நெருங்கும் போதே புரிந்து கொண்டான் அது ஆவி இல்லை ஆள் என்று....

நடப்பவற்றை அருளிடம் கூற அவ்விடம் விட்டு விக்ரம் நகர்ந்த அடுத்த நொடி... அந்த கருப்பு உருவம் கொண்ட நபர்... பிராகியவை நெருங்கி... கோரமான சிரிப்பொன்றை சிரித்தவர்....

காய் கறி நறுக்கும் கத்தியால் அவளின் கன்னத்தில் ஒரு கோடு போட... அதான் வலி தங்க முடுயாமல் ப்ரக்யா இரு புறமும் துடிக்க... மேலும் அந்த காயத்தில் இருந்து ரத்தம் வடிய ஆரம்பிக்க... அதை ரசிப்பு பார்வை பார்த்தவர்....

அதற்குள் வீட்டின் பின் கதவு எதாலேயோ பெரிதாக தாக்க பட... அதில் நடப்பவற்றை புரிந்து கொண்டவர்

தன் கையில் இருந்த அதே கத்தியை அவளின் கழுத்தின் அருகே கொண்டு செல்லும் நேரம்.... மீண்டும் வீசியது அதே தூசியுடன் கூடிய அதே புயல்.....


அந்த புயலின் தாக்கத்தால் அந்த நபர் இரண்டடி பின் நோக்கி சென்று பின் சுதாரித்து, நிலை கொண்டு நின்றவர்...

எங்கே தன் காரியம் இடையில் தடை பட்டு விடுமோ என்ற பயத்தில்... பிராகியவை நோக்கி தன் கையில் இருக்கும் கத்தியை ஓங்கி அவளை குத்த பாயும் நேரம்....

அந்த வீட்டின் உணவருந்தும் மேசையில் இருந்த பீங்கான் தட்டுகள் அனைத்தும் அவரின் மீது சரமாரியாக வீசி தாக்க பட... அதில் ஒன்று இரண்டு அவரின் கையை கிழிக்கவும் செய்தது... அவர் நிலை தடுமாறிய நேரம்.... காற்றின் பலம் மேலும் அதிகரிக்க.... தடுமாறிய நின்றவர்... மேலும் தடுமாறி பின்னால் இருந்த மேஜையில் மோதிய படி அதில் அமர்ந்தார்....

அந்த நேரம் கதவை உடைக்க போராடி கொண்டு இருந்த அருள் கதவை வெற்றிகரமாக திறந்து விட..... உள்ளே ஓடி வந்தவன்... முதலில் அடைந்தது கட்டிலில் கட்ட பட்டு இருந்த ப்ரக்யாவை தான்.......


கனவு 10



அவனுடன் மத்த காவல் துறையினரும் உள்ளே வந்து விட... இமைக்கும் நொடியில்...

தடுமாறி மேஜை மேல் அமர்ந்தவரை அந்த மேஜையோடு சேர்த்து அவரை கயிற்றால் கட்டி வைக்க... அப்போதும் அந்த புயல் ஓயவில்லை....

பின் ப்ரக்யாவை அந்த கட்டிலில் இருந்து விடுவித்தவன்... அவளை பாதுகாப்பாக விக்ரமிடம் இருக்கும் படி கூறி விட்டு.... அங்கு இருந்த சேரில் அமர்த்தினான்...

பின் அந்த கருப்பு நிறத்து ஆளிடம் வந்தவன்... எதையோ பேச எத்தனிக்க.... அப்போது புயலின் வேகம் அதே போல் இருந்தாலும்... அதனின் சத்தம் கோரமாக, அதிக வீரியத்துடன் உருவெடுக்க...

அதன் சத்தத்தால் அதனின் பக்கம் திரும்பிய அருளிற்கு ஆச்சர்யம் என்றால்... அங்கு இருந்த அனைவர்க்கும் அதிர்ச்சி கலந்த பயமே....

புயல் அதன் வேகத்தில் சுழல... அந்த சுழட்சி வேகத்தில் வீட்டின் பொருட்கள் அனைத்தும் அந்த சூழலில் மாட்டி கொள்ள... சுழட்சியின் இறுதியில் அந்த பொருட்கள் மொத்தமும் ஒன்று சேர்ந்து... அது எதோ ஒரு உருவம் போன்ற ஒன்றாய் உருவெடுக்க.... அது.... அது உருவம் அல்ல... ஒருவரின் முகம் என்பதை பின்னே உணர முடிந்தது....


அது... எதோ ஒருவரின் முகம் என்று நினைத்திருக்க... அது... அது... ஒரு பெண்ணின் முகம் என்பதே சிறிது நேரத்திற்கு பின் தான் புரிய வந்தது....

அது யார் என்ற குழப்பத்தில் அனைவரும் அதன் மேல் கவனமாய் இருக்க... அருளோ மேஜையில் கட்டி வைக்க பட்டு இருந்த அந்த நபரின் மேல் கவனமாய் இருந்தான்....


அசைய துவங்கிய அந்த புயல் முகம்...மேஜையை நெருங்கி... அங்கு கட்ட பட்டு இருக்கும் நபரின் அருகில் இருக்கும் கத்தியை கையில் எடுத்து... அந்த நபரை குத்த ஓங்கி... கழுத்துவரை சென்ற போது....

வேணாம் வள்ளி...இப்போ இதை நீ பணிடாத... நீ அப்பாவி... உன் மேல் தவறு ஒன்றும் இல்லைனு எனக்கு தெரியும்... உனக்கு நடந்த அநீதிக்கு தகுந்த தண்டனை குடுக்க படும்... அதையும் நானே நிறைவேற்றி வைப்பேன்...

சில உண்மைகள் அனைவர்க்கும் புரியும் வரை நீ கொஞ்சம் பொறுமையாய் இரு...


இவன் எதோ பல நாள் பழகிய தோழன் போல்... அந்த ஆத்மாவும் தன் புயல் வேகத்தை குறைத்து கொண்டு... அமைதி காத்தது.....

என்ன... வள்ளியா... அவள் தான் செத்து விட்டாலே... அப்போ இது அவளோட ஆ.. ஆ... ஆ... ஆவியா....பேச சக்தி இல்லாத போதும் தனக்குள் ஏற்பட்ட பிரமிப்பை தவிர்க்க முடுயாமல் வாய் விட்டே புலம்பினாள் ப்ரக்யா....

"அவள் வள்ளினு உனக்கு எப்படி தெரியும்... அவளை ஏன் அப்பாவி என்றாய்.. இது அனைத்தும் உனக்கு தெரியும் என்றால்... ஊரில் நடந்த ஏழு கொலைகளையும் யார் செய்தார் என்று உனக்கு தெரியுமா"


ஒரே போல் சிந்தனைகள் விக்ரமிற்கு, ப்ரக்யாவிற்கும்
 

Sundarji

Active member
சூப்பர் சூப்பர். ரொம்ப நன்றாக அருமையாக செல்கிறது
 
Top