அத்தியாயம்—10
கனவு மலர்கள்
கல்யாணம் முடிந்ததும் தாயம்மா மனம் படக் படக் என்று அடித்துக் கொண்டது. அவள் என்ன காரியம் செய்துவிட்டாள்? குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்கள். யாரோ ஒரு வேலைக்காரியிடம் இதோ வந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறாள். தாலிக் கட்டிக் கொண்டு புது புருஷனை பிடித்துக் கொண்டு வந்துவிட்டாள் என்று கேலி செய்ய மாட்டார்களா?
“ஃப்ரெண்ட்ஸ் நாம புது மன தம்பதிகளை தனியா விடுவோம். ரிஷி, ஹோட்டல் ஸ்வாகத்தில் உங்களுக்கு ரூம் புக் பண்ணியிருக்கேன். பத்து நாள். எல்லாத்தையும் மறந்து மனைவியோடு சந்தோஷமா இருக்கணும்...”
“ஹேய்...” என்று ஆரவாரித்தது ஃப்ரெண்ட்ஸ் கூட்டம் “என்ஜாய்...” என்று சொல்லிவிட்டு கிளம்பினர். காரில் அவர்களை ஏற்றிக் கொண்டு ஹோட்டல் ஸ்வாகத் முன் போய் நிறுத்தினான் சந்தானம். லிப்டில் ஏறி அவர்கள் அறையை காட்டினான்....
“ரிஷி....தாயம்மா சிஸ்டர் உனக்கு ஏத்த ஜோடி. வீணையும் நாதமும் போல் இணைந்து வாழ என் வாழ்த்துக்கள்...” என்று மனமார வாழ்த்தினான். ரெண்டு பெரும் திரு திரு வென்று விழித்தார்கள்.
இதுவரை தாயம்மாவை தோழியாக நினைத்து பழகியது வேறு. இப்போ மனைவியாக.....ரிஷிக்கு வெட்கமாக இருந்தது. அவர் அன்புடன் மனைவியை பார்த்தார். திடுக்கிட்டார். அவள் கண்கள் கலங்கி இருந்தன. கண்ணீர் முத்துக்கள் இறங்கிக் கொண்டிருந்தது.
“தாயம்மா என்னாச்சு ஹனி? சந்தோஷமா இருக்க வேண்டிய நேரமிது...”
“உங்களுக்கு என்ன ஆண். அதுவும் ஒற்றை ஆள். நான் அப்படி இல்லை ரிஷி. பெண், அதுவும் இரண்டு குழந்தைகளுக்குத் தாய். பிள்ளைகளை விட்டுவிட்டு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு ஏளனம் பேசுவாங்க...தப்பு பண்ணிட்டேன். மதி மயங்கிப் போச்சு. அப்படியே பூமி என்னை விழுங்கி விடாதான்னு தோணுது...எனக்கு எனக்கு...” உடைந்து போய் அழும் மனைவியை மெல்ல அணைத்துக் கொண்டார்.
“இதோ பார் அம்மாடி.....நீ குடிகார மனுஷனோடு போராடிட்டு இருந்தபோது எந்த ஆளும் பேரும் உனக்கு ஆதரவா இருந்தாங்க? அப்பவும் உன்னைத் தான் கிண்டல் செய்தாங்க. இந்த சமுதாயம் வாழ வழி சொல்லாது. சாக வழி காட்டும். உள்ளத்தால் நீ செத்து செத்து அழுவது ஒன்று தான் அதுக்கு பிடிக்கும். பண்பாட்டை நீ காப்பாத்திட்டேன்னு புகழும்....உனக்கு ஒரு பழைய பாட்டு தெரியுமா? “மங்கை இதயம் நல்ல துணைவன் வரவு கண்டே மகிழ்ந்திடும்.
உறவு கொண்டால் இணைந்திடும்.
அதில் உன்மை இன்பம் விளைந்திடும்....துள்ளாத மனமும் துள்ளும்..”
பட்டுக்கோட்டையார் அப்பவே இதுக்கு பதில் சொல்லிட்டார்...”
“அது ஒரு கன்னிப் பெண்ணின் கனவு...நான் கன்னிப் பெண் இல்லையே?”
“அப்ப..இந்தப் பாட்டைக் கேளு.
காற்றுகென்ன வேலி?
கடலுக்கென்ன மூடி?
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?
சீர் கொண்டுவா சொந்தமே இன்று தான் பெண்மை கொண்டேன்.
பிள்ளை பெற்றும் பிள்ளையானேன். கோவில் விட்டு கோவில் போவேன்.....
கண்ணதாசனின் பாடல். இதை கன்னிப் பெண் பாடவில்லை. உன்னை மாதிரி கல்யாணத்தில் தோற்ற பெண்ணின் இதய துடிப்பு இது. நீ காதலிக்கலாம். கல்யாணம் பண்ணிக்கலாம். தடை சொல்ல யாருக்கும் உரிமை இல்லை தாயம்மா...புரிந்து கொள்....” அவர் கொடுத்த நீண்ட விளக்கம் கேட்டு தாயம்மா கொஞ்சம் சமாதானம் அடைந்தாள். “இருந்தாலும்...எனக்கு பயமா இருக்கு ரிஷி.”
நாலு நாட்கள் அவர்கள் அவர்களுக்கென்றே செலவழித்தனர். அந்த மலைவாத்சல்யம் அவர்கள் மனசை இளமை ஆக்கியது.
மோகனிடம் போன் பண்ணி
“கண்ணா அம்மா ஒரு வாரம் கழிச்சு வரட்டுமா?” என்று கேட்டாள். பத்து வயது மோகன் சொன்ன பதில் அவளுக்கு இதமாக இருந்தது.
“சரிம்மா...நான் தங்கச்சியை பார்த்துக்கிறேன். நீங்க லேக்லே போடிங் எல்லாம் போயிட்டு வாங்க...” மகளிடம் பேசினாள்.
“ஒ எஸ். அம்மா வரும் போது எனக்கு என்ன வாங்கிட்டு வருவே?”
“உனக்கு என்ன வேணும்?”
“சொலட்டா...அப்பா வேணும். ரிஷி அப்பா...”
அந்த நிமிஷம் தாயம்மாவின் சஞ்சலம் எல்லாம் பறந்து போயிற்று. அவள் குற்ற உணர்வின்றி ரிஷியுடன் கனிந்து ஒன்றினாள். தனக்கு வாழ்வு கொடுத்த பிள்ளைகளை நினைத்து மனசுள் கோவில் கட்டினாள்.
குறிஞ்சி ஆண்டவர் கோவிலுக்குப் போனார்கள்.
“இது யாரால் கட்டப்பட்டது தெரியுமா தாயம்மா?”
“ஏதாவது ஒரு பாண்டிய மன்னனாக இருக்கும்.”
“அது தான் இல்லை. இது ஆங்கிலேய பெண்மணி கட்டியதாக்கும்.”
“நிஜமாவா? பொய் சொல்றீங்க...”
“சுற்றிலும் அழகான மலைச் சாரல். தூரத்தே பழனி மலை தெரியுது. இங்கு இந்தக் கோவில் அமைந்தது எவ்வளவு பொருத்தம் பார்த்தியா? இதை கட்டியது ஹிந்துவாக மாறிய ஒரு ஆங்கிலேய பெண்மணி தான். அவங்க ராமநாதன் அப்படின்னு ஒருவரை கல்யாணம் பண்ணிக் கொண்டாங்க. ஆயிரத்தி தொளாயரத்தி முப்பத்தி ஆறில் கட்டியதாம்...”
“நீங்க எனக்கு ஒரு தாஜ்மஹால் கட்டுவீங்களா?”
“அது எதுக்கு? உனக்கு கோவிலே கட்டுவேன்...இதய கோவில்....”
“எப்படி தப்பிக்கிறீங்க.....சும்மா உடான்ஸ் தானே?”
“இல்லே...நாம இங்கே நாலு நாள் தனியா என்ஜாய் பண்ணியாச்சு...இப்ப நம்ம கூட கெஸ்ட் வராங்க..”.
“கெஸ்ட்டா யாரு?”
“கெஸ்ட்டோடு ஹனி மூன் கொண்டாடறோம்...வா ஹோட்டலுக்கு போவோம்.
அங்கே கெஸ்ட்டை பார்க்கலாம்...”
தாயம்மா யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே வந்தாள். முருகனை கும்பிடும் போதும் அவளுக்கு அதே நினைவு தான். யாராக இருக்கும்? சந்தானம்-காமினியாக இருக்குமோ?
“முருகா எனக்கு ஒரு நல்ல துனையை கொடுத்திட்டே. உனக்கு நன்றி. குறிஞ்சி மலர் அபூர்வமான மலர். அது மாதிரி இவர் ஒரு அபூர்வமான மனிதர்..எனக்கே எனக்குன்னு கொடுத்திருக்கே....நன்றி நன்றி...” குறிஞ்சி ஆண்டவரிடம் நன்றி சொன்னாள் தாயம்மா. அவள் கண்கள் பனித்தது.
“என்ன...அய்யாவுக்கு நன்றி சொல்லிட்டு இருக்கியா?” ரிஷி கேட்டான்.
“யார் சொன்னது? நீங்க தான் எனக்கு நன்றி சொல்லணும்...தெரியுமா?”
“உண்மை தான். நான் நிலவை கையிலே புடிச்சிட்டேன்...”
பேசிக் கொண்டே ஹோட்டலை அடைந்தனர். தங்கள் அறைக்குச் செல்ல, கதவு உள் பக்கம் தாழ் போட்டிருந்தது.
“என்னங்க இது? நம்ம ரூமுக்குள்ளே யாரு? உங்க கெஸ்ட் அநாகரிகமானவங்க போலிருக்கு. கெஸ்ட்டா? திருடனா?”
“திருடன் தான்....ஏய் கதவைத் திறங்க...”
ஒ என்ற சத்தம். தொடர்ந்து கலகல சிரிப்பு. கதவு திறந்து வெள்ளைப் புறாக்கள் போல் ஓடி வந்தனர் மோகனும் அமிர்தாவும்.
“அம்மா....”என்று பாய்ந்து அவளைக் கட்டிக் கொண்டனர். தாயம்மா மனம் சந்தோஷத்தில் திம் திம் என்று குதித்தது.
அவளுக்கு பேச்சே வரவில்லை. ரிஷியை பார்த்து கை கூப்பினாள்.
“என்ன இது அம்மாடி....இப்ப நாம பிள்ளைகளோடு ஹனிமூன் கொண்டாடறோம்.”
“உண்மையில் நீங்க எனக்கு கோவில் கட்டிவிட்டீங்க. அந்த ஆங்கிலேய பெண்மணி கட்டியது வெறும் கற்கோவில்...நீங்க கட்டியது இதய கோவில்.”
சந்தோஷமாக இருந்தது. ஆண்டவன் நமக்கு நல்லது தான் செய்திருக்கார். குடிகார புருஷனோடு அவள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. பெற்ற பிள்ளைகளுக்கு விஸ்கியை ஊற்றி கொடுத்த அந்த சண்டாளன் எங்கே? தன் பிள்ளைகள் இல்லாட்டியும் அவர்களை ஹனிமூன் நேரத்தில் கூட அழைத்து வர ஏற்பாடு பண்ணிய ரிஷி எங்கே? அவள் தான் அவருக்கு கோவில் கட்டி கும்பிட வேண்டும். அவர்களை அழைத்து வந்தது சந்தானம் தான்.
“குடும்பத்தோடு ஹனிமூன் கொண்டாடுங்க...” என்று வாழ்த்தி விட்டுச் சென்றான். ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்...என்று பாடாத குறை தான். அவர்கள் நால்வரும் கொடைகானலை ஒரு வழி பண்ணிவிட்டுத் தான் ஊர் திரும்பினர்.
வீடே கொடைக்கானல் ஆயிற்று. அத்தனை குளுகுளு.
“அப்பா...எங்கே இருக்கீங்க?” கண் விழித்தவுடன், கண்ணை இரண்டு புறங்கையாலும் மறைத்துக் கொண்டு வருவாள் அமிர்தா. அப்பா முகத்தில் தான் முதலில் விழிக்க வேண்டுமாம். “ஸ்வீட் ஹார்ட்...இங்கே இருக்கேன்..” என்று அவர் அள்ளிக் கொள்வார். தாயம்மா இதை கண்கள் பனிக்க ரசிப்பாள்.
“அப்பா...அம்மா எனக்கு ஐஸ்கிரீமே வாங்கித் தர மாட்டேங்கரா...” மூக்கை சிந்திக் கொண்டு வருவாள் அமிர்தா. உடனே கார் கிளம்பிவிடும். வரும்போது நாலு பாக்ஸ் முழுக்க ஐஸ்கிரீம் வாங்கி வருவார் ரிஷி.
“ஸ்வீட் ஹார்ட் இந்தா...உனக்கு பிடிச்ச ப்ளேவர் எல்லாம் எடுத்து வந்திருக்கேன். பிஸ்தா...வெண்ணிலா...ஸ்ட்ராபெரி....மேங்கோ...”
“தாங்யூ அப்பா...” குதியாட்டம் போட்டுக் கொண்டு ஓடுவாள் அமிர்தா.
“இப்படி செல்லம் கொடுக்றேங்களே.....இது டூ மச்...”
“தாயம்மா...பொன் குழந்தைகளுக்கு செல்லம் கொடுப்பதில் தப்பில்லை. ஏன் தெரியுமா? அடுத்த வீட்டுக்கு போற வரைக்கும் தான் அவள் நம் பிள்ளை. பிறகு அவ நமக்கு சொந்தமில்லை.....ஒரு மனைவியா தாயா அவள் பொறுப்பு ஏத்துக்கும் போது அவளை பேண யாரும் இருக்க மாட்டாங்க. அப்ப அவ நினைச்சுப் பார்ப்பா பொறந்த வீட்டு சீராடல் பத்தி...அவளுக்கு அது தைரியம் கொடுக்கும்.”
“இதெல்லாம் எப்படி புரிஞ்சுக்கிட்டீங்க? உங்களுக்கு தங்கச்சி இருந்தாங்களா.? அவங்களை பார்த்த அனுபவமா?”
“அதெல்லாம் இல்லை. ஆனா எதிர் வீட்டில் ஒரு பெண் குழந்தை இருந்தா. நானும் அப்ப சிறுவன் தான். அவளுக்கு அம்மா இல்லை. அம்மா இல்லாட்டி கூட பரவாயில்லை. கொடுமைக்கார சித்தி இருந்தாங்க. அவள் அம்மா இல்லாமல் அழுத அழுகை எனக்கு என்னமோ மாதிரி இருந்தது. அவள் தான் என் சின்ன வயது தோழி. அவளை திருப்தி படுத்த என்னவெல்லாமோ செய்தேன். அவளுக்கு பின்னல் பின்னி விடுவேன். ஐஸ் வாங்கித் தருவேன். அவளுக்கு காட்பரிஸ் வாங்கித் தருவேன்....பிடிச்ச பொம்மை....ஸ்கிப்பிங் ரோப்...”
“ஆமா...நீங்களே சிறுவனாக இருக்கும்போது எப்படி வாங்கித் தந்தீங்க? ஏது காசு? திருடினீங்களா?” என்று விளையாட்டாக கேட்டாள்.
“எங்க வீட்டுக்கு வரும் மாமாக்கள் சித்தப்பாக்கள் எல்லாம் பாக்கட் மணி கொடுப்பாங்க. அதை சேர்த்து வைத்து தான் அவளுக்கு வாங்கிக் கொடுப்பேன்.”
வியப்புடன் அவனைப் பார்த்தாள்.
“உங்களுக்கு அது வாங்கிக்கணும் இதை வாங்கிக்கணும்னு ஆசை இருக்கும் வயது. அப்படி இருக்கும் போது அதை அந்த சிறுமிக்கு வாங்கி கொடுத்தீங்களே..
யூ ஆர் கிரேட்...”
ஜன்னல் வழியே தெரிந்த வானத்தின் சிவப்பை பார்த்துக் கொண்டே ரிஷி சொன்னார்...”கிரேட்...அது பெரிய வார்த்தை தாயம்மா. நான் எளிமையானவன். எனக்கு மனுஷாளின் மனம் ரொம்ப முக்கியம். ஆனா அவளுக்கும் அதே மாதிரின்னு நான் நினச்சது தான் தப்பு. அங்கே தான் ஏமாந்துட்டேன்...அது கூட நல்லதுக்கு தான்னு சொல்வேன்...”
வானம் ஜன்னலின் கட்டத்துக்குள் சிறை பட்டது போல் ஒரு தோற்றம் தெரிந்தது. அவளுக்குத் தோன்றியது உண்மையில் சிறை பட்டிருப்பது சிலரின் மனம் தான். ஆனால் அது அவர்களுக்கேத் தெரியாது.
“நீங்க என்ன சொல்றீங்க எனக்குப் புரியலையே...” என்றாள்.
“நேரம் வரும்போது சொல்றேன்...இப்ப நாம பிருந்தாவனத்தில் இருக்கோம். எதுக்கு பாலைவனம்?”
சரி என்று தலையாட்டினாள் அவள். ஆனால் உள்ளுக்குள் எதுவோ குறுகுறுத்தது. ரிஷியின் கடந்த கால வாழ்க்கை கசப்பானதாக இருக்குமோ?
ரிஷிக்கு அவரின் அம்மா ஞாபகம் வந்தது. அம்மா சிவகாமி முகம் லட்சுமிகரமாக இருக்கும். வீடெங்கும் அந்த லட்சுமீகரத்தை அவள் பரப்பி விட்டிருப்பாள். கண்ணாடி போல் வீட்டை வைத்திருப்பாள். அவனுக்கும் அதை சொல்லிக் கொடுத்திருந்தாள். சமையல் செய்யும் போது இடுப்பில் ஏப்ரன் கட்டிக் கொள்வாள். மாஸ்க் அணிந்து கொண்டு தான் சமையல் செய்வாள்.
“நாம் சமைக்கும் போது தும்மலோ இருமலோ வந்துவிட்டால் அது சமையல் பொருளில் தெறித்து விடக் கூடாது பாரு...அதான்...” என்று விளக்கம் சொல்வாள். முயல் மாதிரி சுறுசுறுப்பு. பேச்சும் கோவில் மணியோசை தான்.
“ரிஷி...நாம வீட்டை மட்டும் சுத்தமா வச்சிருந்து பிரயோஜனமில்லை. மனசையும் சுத்தமா வச்சிருக்கணும்...”
“அதெப்படி? டெட்டால் போட்டு மனசை சுத்தம் பண்ணணுமா?” என்று கிண்டல் பண்ணுவான். அவனுக்கு அப்போ பத்து வயது இருக்கும்.
“டேய் முட்டாள். கிண்டல் பேச்சு இருக்கட்டும். மனுஷாளுக்கு உதவி பண்ணனும். அன்பா இருக்கணும். இயன்ற உதவியை செய்யனும்.”
“நான் பெரியவனா ஆனதும் சம்பாரிச்சு ஏழைக்கு உதவி செய்வேன்மா.
“அது அப்ப...இப்ப என்ன செய்யணும் தெரியுமா?”
“என்ன செய்யனும்?...ம்ம் புரிஞ்சு போச்சு. என் பழைய டிரெஸ்ஸை ஏழைகளுக்கு கொடுக்கணும். பெரியவங்க கிட்டே பணிவா இருக்கணும். அவங்க சொல்ற காரியத்தை அன்போடு செய்து உதவியா இருக்கணும்...”
“கரெக்ட்...அது மட்டும் இல்லாம. மனசாலே கஷ்டப்படறவங்களுக்கு ஆறுதலா இருக்கணும். அன்பா பேசணும். அப்ப நம்ம மனசு டெட்டால் போட்டு கழுவின மாதிரி சுத்தமா ஆயிடும்...பாவம் எதிர் வீட்டு சிறுமி சந்திரிகா...சித்தி படுத்தற பாடு....அவ படிப்பை நிப்பாட்டி வீட்டு வேலைக்கு போடப் பார்த்தா. உங்கப்பா தான் தலையிட்டு அவ அப்பாக்கிட்டே பேசி மேலே படிக்க வச்சாரு. அவர் மட்டும் சொல்லலைன்னா இன்நேரம் அவ வீட்டிலே பாத்திரம் கழுவிட்டு இருப்பா....அவ உன்னை விட ரெண்டு வயசு சின்னவ. அவ கிட்டே அன்பா இருடா பாவம்...மனசுக்கு இதமா அன்பான வார்த்தை சொல்றதிலே என்ன குறைந்து விடப் போறோம்?”
அம்மா அப்படி சொன்ன பிறகு அவர் சந்திரிகாவிடம் பரிவும் அன்பும் அக்கறையும் காட்டினார். அது எவ்வளவு பெரிய விபரீதத்தில் முடிந்தது...
கனவுகள் தொடரும்