கனவு மலர்கள்
அத்தியாயம்---12
அமிர்தா நிரம்பவே மாறியிருந்தாள். இப்பொழுது பேச ஆரம்பித்திருந்தாள். மித்ரா அதுக்கு பயிற்சி அளித்தாள். பிரம்ம பிரயத்தனம் எடுத்து பேச வைத்திருந்தாள். அமிர்தா அடிக்கடி தோட்டத்தில் உலவினாள். மித்ராவிடம் எதையோ சொல் நினைத்து தயங்கியது போல் இருந்தது.
“மித்ரா....நீ மோகன் அண்ணாவை லவ் பண்ணிறியா?” கடைசியில் கேட்டேவிட்டாள். மித்ரா இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் சிரித்தாள்.
“சிரிக்காதே....பதில் சொல்லு...”
“எனக்கு லவ் பண்ணத் தெரியாது...”
“அப்ப அன்னிக்கு ராத்திரி அவனோட பேசும் போது அவ்வளவு ஒளி உன் முகத்திலே தெரிஞ்சுதே....பொய் சொல்லாதே...”
“பணக்காரங்களை லவ் பண்ணி ஏமாற எனக்கு பயித்தியமா? ஒரு அட்ராக்க்ஷன் இருப்பது உண்மை...அது டீப் லவ்வா மாற சான்ஸ் இருக்கு...”
அந்த சமயம் தோட்டத்து மதில் சுவர் ஏறி ஒருவன் வந்து தோட்டத்துக்குள் குதித்தான். அமிர்தா கத்தினாள்.
“ஏய்...யார் நீ? மித்ரா இவன் ரேப் பண்ண வந்திருக்கான். பயமா இருக்கு இப்ப என்ன பண்றது?” அவள் குழந்தை முகத்தில் கலவவரம். மித்ரா குதித்தவனை பளீரென அறைந்தாள்.
“இங்கே எங்கடா வந்தே? உனக்கு அறிவிருக்கா?”
அமிர்தா ஆச்சர்யமாகக் கேட்டாள்.
“இவனை உனக்குத் தெரியுமா?”
“தெரியும்...”
“யாரு...உன் பாய் ஃப்ரெண்டா?”
“சீ....அமிர்தா இவன் என் தம்பி. டேய் நீ இப்படி வீட்டுக்குள் முறை தவறி வந்தது தெரிஞ்சா நான் இங்கு வேலை பார்க்க முடியாது. சீக்கிரம் ஓடிப் போயிடு.”
“நேர் வழியில் வர முடியலை கூர்க்கா விடலை. அக்கா....நீ எப்படியிருக்கேன்னு தெரிஞ்சுக்க வந்தேன். உன்னை நல்லா ட்ரீட் பண்றாங்களா? நீ வீட்டுக்கு வந்து நாளாச்சு. எப்படியிருக்கேன்னு பார்க்க வந்தேன்....ஏதாவதுன்னா சொல்லுக்கா...நான் இருக்கேன் உனக்கு பாதுகாப்பு.”
“போதும் பிரபு.....டோன்ட் பீ சில்லி. உன் படிப்புக்கு நான் தான் உதவனும். நீ இப்படி வந்தா என் வேலை போயிடும்டா...”
“இதோ போயிடறேன்....யாருக்கும் தெரியாம வரணும்னு நினைச்சேன். இந்த பொண்ணுக்குத் தான் உடம்பு சரியில்லையா?....இல்ல மனசு சரியில்லையா? ஏய் பொண்ணே நீ என் அக்காவை துன்புறுத்தக் கூடாது. புருஞ்சுதா?”
“மித்ரா...” குரல் கொடுத்தான் மோகன். அவனுக்கு பிரபு நிற்பது கண்ணுக்குத் தெரியவில்லை. சப்போட்டா மரம் மறைத்திருந்தது.
“டேய்..வந்த வழியே ஓடிடு. யார் கண்ணிலும் நீ படவேண்டாம்.”
மீண்டும் சுவர் ஏறி அவன் போகும் முன்
“அக்கா....உன்னை பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு. ஏதாவதுனா போன் பண்ணு, நான் ஓடிவந்திடுவேன்...” சொல்லிக் கொண்டே அவன் சுவற்றின் அந்தப்பக்கம் குதித்து மறைந்துவிட்டான்.
“அமிர்தா..ப்ளீஸ் இதை யார்கிட்டவும் சொல்லாதே...கெஞ்சிக் கேக்றேன்...”
“உன் தம்பி உன் மேலே இவ்வளோ அன்பா இருக்கானே...” வியப்புடன் கேட்டாள். அவளுக்கு என்னவோ மனம் நெகிழ்ந்தது.
இவர்களைத் தேடிக் கொண்டு அங்கு மோகனே வந்துவிட்டான்.
“கூப்பிட்டு எவ்வளவு நேரமாகுது...இங்கே என்ன பண்ணிட்டிருக்கீங்க ரெண்டு பேரும்? அம்மா இன்னிக்கு இங்கே தான் சாப்பிடப் போறாங்க. சமையலை ஆரம்பிக்கணும் மித்ரா...வா சீக்கிரம்...”
அமிர்தா முகம் சுளித்தாள்.
“அம்மா.....இன்னும் அவளை அம்மான்னு கூப்பிடறயா?” என்றாள் அமிர்தா.
“அப்படி சொல்லாதேடி. என்ன இருந்தாலும் அவங்க நம்ம பெத்தவங்க.”
“பெத்தா மட்டும் போதுமா? எவனோ ஒரு பொறுக்கியை சப்போர்ட் பண்ணறாங்க. மித்ரா.....நீ வந்ததாலே எனக்கு ஒரு வெளிச்சம் கிடைச்சிருக்கு. நீயே சொல்லு...இப்படிப்பட்ட ஒருத்தனை அந்த தாயம்மா இடுக்கிக்கிட்டு வரா...ஐ ஹேட்..” அமிர்தா முகம் சிவ்வென்று சிவந்தது. கண்களில் அப்படியொரு வெறுப்பும் ஆங்காரமும்.....புயல் போல் அவள் ஓடினாள். அவள் தன் அறைக்குச் சென்று கதவடைத்துக் கொள்ளும் சத்தம் கேட்டது.
“சரி வாங்க...நாம சமையலை ஆரம்பிப்போம்.”
மோகனுக்கு அமிர்தாவை பற்றியே யோசனை. அவள் ஓரளவு தேறிவிட்டாள் என்று நினைத்தால், இப்படி மூர்க்கமாக அம்மாவை வெறுக்கிறாளே...
அவர்கள் தோட்டப் பாதையை கடந்து பின் வாசல் படியை அடைந்தனர்.
“மித்ரா...எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை. அம்மாவுக்கும் அமிர்தாவுக்கும் நடக்கும் பனிப் போர் உள்ளுக்குள் குமறிகிட்டு இருக்கு. என்னைக்கு வெடித்து சிதறப் போகுதுன்னு கவலையா இருக்கு.”
மித்ரா பதில் ஏதும் சொல்லவில்லை. அடுக்களைக்குள் நுழைந்தனர்.
“அம்மாவுக்கு பாலக் கீரைன்னா ரொம்பப் பிடிக்கும். நாங்க இந்த மூணு மாசமா அதெல்லாம் சாப்பிட்டதே இல்லை. ரெஸ்டொரண்ட சாப்பாடு தான். உனக்கு கீரை மசியல் செய்யத் தெரியுமா?”
“தெரியுமாவா? சூப்பரா செய்வேன்....”
“அப்ப....நான் குடுத்து வச்சவன்....”
“அதெப்படி நீங்க குடுத்து வச்சவன்னு சொல்றீங்க?”
“பின்னே இல்லையா? இந்த வீட்டு மருமகள் நீதானே...”
“வீணா கனவு காணாதீங்க. எனக்கு நம்பிக்கையில்லை...”
“நம்பிக்கை இல்லாமல் தான் காதலிக்கிறியா?”
“முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைபடக் கூடாது. உங்களை நான் காதலிக்கலாம். அதுக்கு எனக்கு உரிமை இருக்கு. ஆனா கல்யாணம் பண்ணிக்க...அது என் கையிலும் இல்லை...உங்க கையிலும் இல்லை...பார்க்கலாம்.”
கீரையை அவன் கழுவிவிட்டு நறுக்க ஆரம்பித்தான்.
“இந்தக் கீரையை கழுவி விடுவது போல் நீங்க என்னை கை கழுவி விடலாம். அதுக்கும் என் மனசை தயார் பண்ணி வச்சிருக்கேன். “ மித்ரா தக்காளி பழத்தை கழுவி நறுக்க ஆரம்பித்தாள். அவள் இதழில் இளநகை.
“தக்காளியை நறுக்குவது போல் என் மனசை நறுக்கிட்டே. உன்னை கல்யாணம் பண்ணாம விட மாட்டேன்...பார்த்திட்டே இரு...இந்த தக்காளி கன்னத்தில் முத்தம் கொடுத்து ப்ராமிஸ் பண்ணட்டுமா?”
“ரொம்ப சுலபமா சொலீட்டீங்க. உங்க தங்கச்சி என்ன சொன்னா தெரியுமா?”
“என்ன சொன்னா?”
“நான் உங்களை காதலிக்கிறேனான்னு கேட்டா...”
அவன் அவளை பார்த்தான். “நீ என்ன சொன்னே?”
“அந்த முட்டாளை நான் காதலிக்கலைன்னு சொன்னேன்...”
“ஏய்...என்ன ரொம்ப திமிராப் போச்சா?”
“உங்க வீட்டிலே இருக்கிற சிக்கலை தீர்க்க எந்த முயற்சியும் செய்யாம இருந்தா...முட்டாள்னு சொல்லாம வேறு என்ன சொல்றது? அழுது வடிஞ்சுக்கிட்டு....ஒருத்தரை ஒருத்தர் பார்க்காம நவக்கிரகம் மாதிரி எப்படித்தான் இருக்கீங்களோ? நான் வேறு வழியில்லாம என் குடும்பத்தை பிரிஞ்சு இருக்கேன். பணப் பற்றாக்குறை எங்களை பிரிச்சு வச்சிருக்கு. உங்களுக்கு என்ன கேடு? பணம், அந்தஸ்து ஆளு அம்பு சேனைன்னு எல்லாம் இருக்கு. உங்களாலே ஒத்துமையா சந்தோஷமா வாழ முடியலை..எப்படி வாழ்க்கையை அபியூஸ் பண்றீங்க.....”
குக்கர் விசில் அடித்தது. நாலு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டாள் மித்ரா. பருப்பு வெந்துவிட்டது. சாம்பாரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வைத்தாள். மல்லித் தழை போட்டதும் வாசனை தூக்கியது. கீரை மசியலுக்கு தேங்காயை அரைத்து முடித்தாள்.
பெரிய குக்கரில் அரிசி களைந்து வைத்துவிட்டு மித்ரா கையை கழுவினாள்.
“உன்னை டிஸ்மிஸ் பண்ணப் போறேன். உனக்கு நான் ரொம்ப இடம் கொடுத்திட்டேன்.....என்ன பேசறே நீ? இந்த சூழ்நிலையிலே எப்படி நிம்மதியா இருக்க முடியும்? தங்கச்சி இன்னும் அந்தக் காயத்தை மறக்கலை....அம்மா கவலையை மறக்க இழுத்து போட்டு பிசினஸ் பிசினஸ்ன்னு அலைறாங்க. யாரு அமிர்தாவை பார்க்கறது? படிச்சி முடிச்சிட்டு வேலைக்கு போகாம தண்டமா உக்காந்திருக்கேன். ஏதோ நீ ஆறுதலா இருக்கியேன்னு பார்த்தா எங்களை குத்தம் சொல்றே....சொல்லு எங்க குடும்பத்திலே உள்ள குழப்பம் எப்படி சரியாகும்? உனக்கு என்ன தோணுது?”
“நான் உங்க கிட்டே கேக்ற கேள்விக்கு நீங்க ஒழுங்கா பதில் சொன்னா நான் ரெமடி சொல்வேன். அப்புறம் பாலைவனம் நந்தவனம் ஆகும்.”
“சரி...நாம இன்னி ராத்திரி எல்லா வேலையும் முடிஞ்சதும் தோட்டத்திலே உக்காந்து பேசுவோம்.....என்னதான் ஐடியா கொடுக்கப் போறேன்னு பாக்றேன்.”
சரியாக ஒரு மணிக்கு தாயம்மா சாப்பிட வந்தாள்.
“என்ன ஒரே வாசனையா இருக்கு? மித்ரா அப்படி என்ன சமச்சிருக்கே?”
சாப்பாட்டு மேஜை மேல் எல்லாத்தையும் கொண்டு வந்து பரப்பினாள்.
“அம்மா....உங்களுக்கு புடிச்ச ஐட்டமா தான் பண்ணியிருக்கோம்....”
“அப்ப என் மகனை நளன் ஆக்கிட்டே போலிருக்கு. நல்லது தான். நீ ஓடிப் போயிட்டா இனிமே சாப்பாட்டுக்கு கஷ்டப்படவேண்டும்...”
“அம்மா...விளையாட்டுக்கு சொல்றீங்கன்னு நினைக்கிறேன். எத்தனை நாளைக்கு உங்க மகனை இப்படி வீட்டோட வைக்கப் போறீங்க? வினையே ஆடவருக்கு உயிரேன்னு நம்ம சங்க கால இலக்கியமே சொல்லுது. இந்த காலத்திலே உங்க பையனை இப்படி சமையல்காரனா நர்ஸ்சா ஆக்கிட்டீங்க. நல்லதில்லை...”
“நீ சொல்றது சரிதான்...”
“அம்மா...இன்னொன்னு....அமிர்தாவை சாப்பிடக் கூப்பிடுங்க...”
“யாரு? நானா? அவ நான் கூப்பிட்டா வரமாட்டா. என் முகத்திலேயே அவள் விழிக்க விரும்பலை. நான் என்ன பண்ணட்டும் மித்ரா?”
“மூணு மாசமா நீங்க இதை மாத்த முயற்சிக்கலை...அப்ப என்ன அம்மா நீங்க? கிவ் அப் பண்ணவே கூடாது....நம்பிக்கையை விடவே கூடாது. போய் கூட்டி வாங்க...”
மித்ரா கட்டளை போல் சொன்னாள். மோகன் அம்மாவை பயத்துடன் பார்த்தான். முன்பு ஒரு முறை அமிர்தாவை பார்துக்க வந்த ஒரு வயதான நர்ஸ்....அம்மாவுக்கு இப்படித்தான் அட்வைஸ் பண்ணினாள். அது அவன் நினைவுக்கு வந்தது. அம்மா அப்படியே கொதிச்சு போனதும் நினைவில் நிற்கிறது. இங்கே உங்க வேலை அமிர்தாவை கவனிக்கறது தான். என்னை அப்படி நட இப்படி நடன்னு சொல்லறது இல்லே.....அன்றே அவளை டிஸ்மிஸ் பண்ணிவிட்டாள் அம்மா. இப்பொழுது மித்ராவுக்கும் அந்த கதி தான். போச்சு...
“வேணாம் மித்ரா. காட்டு கத்தல் கத்துவா. கையில் எது கிடைத்தாலும் போட்டு உடைப்பா. அவ நான் கூப்பிட்டா வரமாட்டா. கண்டபடி பேசுவா. அதான் நான் கூப்பிடறதை, பேசறதை நிறுத்திட்டேன்.”
“இப்படியே போனா எப்பதான் உங்க சண்டை தீர்ந்து நீங்க பேச ஆரம்பிப்பது? நான் சொல்றேன் கேளுங்க. விடாம ட்ரை பண்ணுங்க. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் அவள் வழிக்கு வருவா. அப்ப மனசு விட்டுப் பேசுங்க. சரியாயிடும்.”
“இல்லே...எனக்கு துணிச்சல் இல்லை. பயமா இருக்கு.”
“நான் இருக்கேன் அம்மா உங்களுக்கு. அவ என்னதான் செவ்வான்னு பாக்றேன். அவளுக்கு என் மேல் ஒரு பரிவு இருக்கு. நான் தான் கூப்பிடச் சொன்னேன்னு சொல்லுங்க. எந்திரிங்க. போங்க....”
சாப்பிட உட்கார்ந்திருந்த தாயம்மாவை வலுக் கட்டாயமாக எழுப்பிவிட்டாள். மாடி நோக்கி தள்ளிவிட்டாள்.
“போங்க..போய் மகளை உங்களோட சாப்பிட கூப்பிடுங்க...ம்ம் போங்க.”
“சரி...நீ சொல்றதும் சரிதான். இன்னியோட எங்க சண்டை ஓயட்டும். நீ கொடுத்த தைரியத்தில் போறேன்...”
மோகன் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போனான். என்னடா அதிசயம்? அம்மா கத்தவில்லை...போறேன்னு வேறு சொல்றாங்க.
“அம்மா வேண்டாம் அம்மா. இப்பதான் அவ பேச அரம்பிச்சிருக்கா. கொஞ்ச நாள் போகட்டும்.” என்றான் அவனுக்கு மித்ரா வற்புறுத்துவது பிடிக்கவில்லை. தாயம்மா அவன் சொன்னதை காதில் போட்டுக் கொள்ளவில்லை. மாடிப் படி ஏறியபடி நின்று திரும்பிப் பார்த்து
“நீயம் வாயேன் மித்ரா.” என்றாள். மித்ரா வலதும் இடதுமாக தலையை ஆட்டினாள்.
“நீங்க மட்டும் தான் போணும். அமிர்தா என்ன கத்தினாலும் நீங்க கேட்டுக் கிட்டு தான் ஆகணும்.”
தாயம்மா மெல்ல சென்று அமிர்தாவின் அறைக் கதவை தட்டினாள். பதில் இல்லை. திரும்பத் திரும்ப தட்டினாள். கடைசியில் உள்ளிருந்து அமிர்தா கத்தினாள். “யாரது?” குரலில் அதட்டல் இருந்தது. தாயம்மாவுக்கு காதில் தேன் பாய்ந்தது போல் இருந்தது. மகளின் குரலைக் கேட்பதே சந்தோஷமாக இருந்தது. அமிர்தா பேச ஆரம்பித்துவிடாளா? அவள் கண்களில் நீர் சுரந்தது. யாழ் இனிது குழல் இனிது...அதை விட அமிர்தாவின் யாரது அதட்டல் இனிது என்று அவளுக்குத் தோன்றியது. மெல்ல குரல் கொடுத்தாள்.
“நான்தான் அமிர்தா..அம்மா.”
“ஒ....உங்க ரோமியோவை போய் கூப்பிடுங்க.....நான் மித்ரா வந்து கூப்பிட்டால் தான் வருவேன்...”
அமிர்தாவின் பதில், அவள் நெஞ்சில் ஒரு குத்து விட்டது போல் இருந்தது. அதை மறைத்துக் கொண்டு மீண்டும் கூப்பிட்டாள்.
“ப்ளீஸ் அம்ரு...”
அவள் அப்படி கூப்பிட்டு வாய் மூடவில்லை அமிர்தா கத்தினாள்
“நோ...அப்படி கூப்பிடாதே...அந்த கேடு கெட்ட ரிஷி கூப்பிடற மாதிரி கூப்பிடாதே..”
தொடர்ந்து எதை எதையோ அமிர்தா தூக்கி எரியும் சப்தம் கேட்டது. அவள் அறையில் தான் மீன் தொட்டி இருந்தது. அதை போட்டு உடைக்கிறாளோ?
“சரி சரி...அப்படி கூப்பிடலை....அமிர்தா காம் டவுன்....கதவை திற. சாப்பிட வா. மித்ரா அருமையா சமச்சிருக்கா...வா ஸ்வீட் ஹார்ட்...”
மறுபடியும் சாமான்கள் உடையும் சப்தம்....
“ஸ்வீட் ஹார்ட்டுன்னு கூப்பிடாதே...” கூப்பாடு போட்டாள் அமிர்தா.
அப்பொழுது தான் தாயம்மாவுக்கு நினைவுக்கு வந்தது. ரிஷி ரொம்ப பிரியமான சமயத்தில் மகளை அப்படி கூப்பிடுவது வழக்கம். நாக்கை கடித்துக் கொண்டாள்.
“தப்பு தப்பு...அமிர்தா கண்ணு வெளியே வா. சாப்பிட வா...”
வேகமாக மகள் நடந்து வரும் சப்தம் கேட்டது. படாரென்று கதவு திறந்தது. உள்ளே உடைந்து கிடந்த சாமான்களை பார்த்தாள் தாயம்மாள். வால் கிளாக். கண்ணாடி வாஸ், அவள் ஓவியம் வரையும் கான்வாஸ் ஸ்டாண்ட்...இன்னும் பேப்பர்...கண்ணாடி டேபிள் வெயிட்....துணி மணி....முகம் பார்க்கும் கண்ணாடி..எல்லாம் அறை எங்கும் சிதறிக் கிடந்தது...நல்ல வேளை மீன் தொட்டியில் மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. அவளுக்கு கோபம் வந்தது.
“ஆரம்பிச்சிட்டியா? நீ திருந்தவே மாட்டியா? இப்படி போட்டு உடைக்கிறே...”
“இது உடைஞ்சது உனக்கு பெரிசா தெரியுது இல்லே. என் மனசு உடஞ்சிருக்கு உனக்கு அது பெரிசா தெரியலை இல்லே....நீயெல்லாம் ஒரு அம்மாவா? போ....போ...அந்த பொறுக்கியை கொஞ்சு போ...”
கிழே அவர்களின் உரையாடல் தெளிவாக கேட்காவிட்டாலும் அமிர்தாவின் கூப்பாடும் கோபமும் செவிகளை தாக்கவே செய்தது.
“மித்ரா...இப்படித்தான் அம்மா கூப்பிட்டால், அமிர்தா ரியாக்ட் பண்ணுவா. அம்மா பல முறை அடி கூட வாங்கி இருக்காங்க. என்ன...இப்ப வாய் பேசறா. அப்ப உறுமுவா...அதான் அம்மா போறதையே விட்டிட்டாங்க. இப்ப பாரு உன்னாலே..”
“ஸோ...அப்படியே அவள் ஊமையா....டாக்டர் கொடுக்கிற சேடடிவ்வை எடுத்துக்கிட்டு இப்படியே இருட்டில் உக்காந்திருக்கனும்னு சொல்றீங்க. ஏன்னா அது உங்களுக்கு சௌகர்யம்...இது சுயநலம் மோகன்...”
“நீ என்ன வேணா சொல்லிட்டுப் போ...நான் அம்மாவை வரச் சொல்லப் போறேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் அம்மா ஜோவியலா பேசினாங்க. அதை நீ கெடுத்திட்டியே....அம்மா, அம்மா போதும் நீங்க சாப்பிட வாங்கம்மா....”
“வராதீங்க அம்மா...நீங்க அமிர்தாவோட தான் வரணும்.” மித்ரா குரல் ஓங்கி ஒலித்தது. மோகன் அவளை கடுமையாகப் பார்த்தான்.
“நோ..இதை நான் அனுமதிக்க முடியாது. அமிர்தா வரவும் மாட்டா அவள் அம்மாவோடு காம்பிரமைஸ் பண்ணிக்கவும் மாட்டா. அது தெரிந்த விஷயம். போதும் உன் விஷப் பரிட்சை...” மோகன் கடகடவென்று மாடிப் படி ஏறிப் போனான். அவன் அங்கு போனதும் திகைத்துப் போனான்,
“அமிர்தா...நீ சாப்பிட வரலைன்னா நான் உண்ணாவிரதம் இருப்பேன்...”
“இரு....எனக்கென்ன? நான் உன்னோடு வரப்போவதில்லை. வழக்கம் போல் மித்ராவை எனக்கு உணவு கொண்டு வரச் சொல்...”
“அமிர்தா...நான் உன்னோட அம்மாடி.....எனக்கு உன் மேல் அக்கறை இருக்காதா?”
இந்த நேரத்தில் தான் மோகன் அங்கு சென்றான்.
“அக்கறை....சொல்லாதே அப்படி. உனக்கு அந்த ரிஷி மேலே தான் அக்கறை அன்பு. காதல் எல்லாம். அவன் என்னை நாசம் பண்ண வந்தான். அது பத்தி உனக்கு அக்கறை இல்லை. நீ என்னிடம் கெஞ்சிக்கிட்டு இருக்காதே. உன் ரிஷியோடு போலாம். இங்கிருந்து ஓடிப் போய்விடு....”
“ரிஷி நல்லவர் அம்ரிதா. நீ தப்பா புரிஞ்சிட்டு இருக்கே..”
“ஒ....மூணு மாசம் கழிச்சும்...உன் மகள் இந்த கதிக்கு ஆளான பிறகும் உனக்கு அவன் மேல் உள்ள மோகம் போலே இல்லே?”
“நீ வீணா அவர் மேல் பழி போடறே..நான் சொல்றதை கேள்....”
“அப்படியா? நீ என் அம்மாவே இல்லை....ரிஷியின் பொண்டாட்டி..போ...போயிடு.”
அமிர்தா அம்மாவை பிடித்து தள்ளினாள். தாயம்மா இதை எதிர்பார்க்கவில்லை. மகள் தள்ளிய வேகத்தில் தாயம்மா கடகடவென்று படிகளில் உருண்டு விழுந்தாள். கொஞ்சம் கூட கலங்காமல் வேடிக்கை பார்த்தாள் மகள்.
“அடிப் பாவி......நீயெல்லாம் ஒரு மகளா? உனக்கு வெறி பிடிச்சிடுத்தா? எதுக்கு அம்மாவை பிடிச்சு தள்ளின?...” மோகன் கத்திக் கொண்டே விழுந்து கிடந்த அம்மாவிடம் சென்றான். நெற்றியிலிருந்து ரத்தம் கொட்ட மயங்கி விட்டிருந்தாள் தாயம்மா....மித்ரா ஓடிச் சென்று தாயம்மாவை தாங்கினாள். .
ஒரு வாரம் கழித்து கண் விழித்திருந்தாள் தாயம்மா. அருகிலேயே இருந்த மோகன் முகம் மலர “அம்மா...அம்மா...எப்படி இருக்கீங்க?” என்று கேட்டான்.
“மித்ரா எங்கேடா?”
“அவ எக்கேடும் கெட்டு போகட்டும். அம்மா அவளை துரத்தி விடப் போறேன். அவளால் வந்த வினை தான் இது. கடவுள் புண்ணியத்தில் உங்களுக்கு ஆபத்து ஒன்றுமில்லை. மண்டையில் ஏற்பட்ட காயத்துக்கு பதினாறு தையல் போட்டிருக்கு. நீங்க ரெஸ்ட் எடுக்கணும் அம்மா. மனசுக்கும் ரெஸ்ட் தேவை..இப்ப கொஞ்சம் ஜூஸ் பிழிந்து தரவா?” படபடவென்று பேசியபடி மோகன் ஆரஞ்சு பழங்களை பிழிய ஆரம்பித்தான்.
நர்ஸ் உள்ளே வந்து பிபி செக் செய்து...கட்டு பிரித்து புதிதாக போட்டு விட்டு, மாத்திரைகளையும் கொடுத்து விட்டு சென்றாள். போகும் முன்...
“டாக்டர் ரௌண்ட்ஸ் வருவார். நீங்க அதிகம் பேசக் கூடாது...” எச்சரித்துவிட்டுப் போனாள். அம்மாவை மெல்ல சாய்தபடி அமர வைத்து ஜூஸை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தான் மோகன். ஆயாசத்துடன் மெல்ல பேசினாள் தாயம்மா.
“மோகன்...மித்ராவை அனுப்பிவிடாதே....அவ கூட நான் பேசணும். அமிர்தா எப்படியிருக்கா? இப்ப அவளுக்கு மித்ராவின் துணை ரொம்ப அவசியம்...” இதை சொல்லி முடிப்பதற்குள் அவளுக்கு மூச்சு வாங்கியது. அயர்ச்சியுடன் கண் மூடினாள். மோகனுள் ஆத்திரம் பீறிட்டது. அவன் மித்ராவுடன் முகம் கொடுத்து பேசி ஒரு வாரத்துக்கும் மேலாகிவிட்டது. அம்மா விழுந்த அன்று பேசியது தான். அவனுக்கு மித்ராவின் மேல் அசாத்திய கோபம் இன்னும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.
அன்று நடந்தது நினைத்து மனம் நடுங்கியது.
ஆஸ்பத்திரி வெராண்டாவில் அவன் கவலையுடன் நின்றிருந்தான். மித்ரா அங்கு வந்தாள். அவள் முகம் அழுது சிவந்திருந்தது.
“இப்படி நடக்கும்னு நான் நினைகலை...” என்று மித்ரா முணுமுணுத்த போது
“இந்தக் குடும்பத்துக்கு நீ யமனா வந்திட்டே. ஏதோ நாங்க நவகிரகம் மாதிரி இருந்தாலும் என்றாவது பனி விலகும்னு இருந்தோம். இப்ப முதலுக்கே மோசம் வந்திடும் போலிருக்கே. நீ போய் விடு மித்ரா. உனக்கென்ன? பணத்துக்காக குடும்பத்தை விட்டு இருக்கவும் துணிஞ்சவ தானே நீ? பாசம் பத்தி என்ன தெரியும்?..எங்கம்மாவை கொன்னுடுவே போலிருக்கே.” சுடு சொற்களை வீசினான். மித்ராவை எரித்துவிடுவது போல் பார்த்தான்.
“மன்னிச்சுடுங்க மோகன்...அம்மாவுக்கு இப்படி நேரும்னு நான் நினைக்கலை..”
“வேறு என்ன எதிர்பார்த்தே? நான் தான் சொல்லிட்டே இருந்தேனே. நிச்சயம் இது வொர்க் அவுட் ஆகாதுன்னு....பெரிய சைக்கியாட்ரிஸ்ட்டுன்னு நினைப்பு. அம்மாவுக்கு ஏதாவது ஆகட்டும்...அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது...” வெறுப்புடன் கூறினான். முறைத்துப் பார்த்தான்.
“அப்படி பார்க்காதீங்க...எனக்கு பயமா இருக்கு. மோகன்...ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க. உங்க கோபம் நியாயமானது. ஆனா...”
“ஆனாவும் இல்லை ஆவன்னாவும் இல்லை...நீ உன் வீட்டுக்கு இப்பவே போறே. கெட் அவுட்...உனக்கு ரெண்டு நாள் டைம் தரேன். அதுக்குள்ளே போயிடு”
“போயிடறேன்...நீங்க அமிர்தாவையும் பார்த்துக்கணும். அதனாலே நான் ஆஸ்பத்திரியிலேயே இருந்து அம்மாவை பார்த்துக்கிறேன். குணமாகி வீட்டுக்குப் போனதும் போயிடறேன்.”
மோகன் விருட்டென்று போனான். கண்ணீர் வழிந்த கண்களோடு நின்றாள் மித்ரா. நல்லது செய்யப் போய்...அது அவளுக்கே விணையாக முடிந்துவிட்டது.
கனவுகள் தொடரும்