கனவு மலர்கள்
அத்தியாயம்...13
தாயம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்த மறுநாள்...
அமிர்தா கண் கலங்கியபடி உட்கார்ந்திருந்தாள். ஒரு பொட்டலத்தை எடுத்து வந்தான் மோகன். அன்பான குரலில் கனிவாக சொன்னான்.
“உனக்கு சூடா பொங்கல் கொண்டு வந்திருக்கேன். வா சாப்பிடு அமிர்தா..”
“வேண்டாம் அண்ணா...”
“ஏன்டா? அம்மா நல்லாத்தான் இருக்காங்க. எல்லாம் சரியாயிடும். டாக்டர் காப்பாத்திடலாம்னு சொன்னார்....நான் ரத்தம் கொடுத்திட்டு வந்திருக்கேன்.”
“நான் எவ்வளவு பெரிய அரக்கி? எப்படி தள்ளிட்டேன்?...” மடேர் மடேர் என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
“நீ என்ன செய்வாய்? எல்லாம் அந்த மித்ராவினால் வந்தது...அவளை பார்க்க பார்க்க எரியுது. பேய்....நம்ம குடும்பத்தோடு விளையாடிட்டா...”
“எனக்கு கஷ்டமா தான் இருக்கு. எனக்கு குரல் வர அவ தான் காரணம். அதே சமயம் நம்மை தூண்டிவிட்டு விபரீதம் நடக்க வழி வச்சிட்டா...அண்ணா எனக்கு சாப்பிடவே பிடிக்கலை....”
“கொஞ்சமாவது சாப்பிடு அமிர்தா. அம்மாவுக்கு ஒண்ணுமில்லை. ஸ்டிச்சஸ் போட்டிருக்காங்க. குணமாயிடுவாங்க....சாப்பிடு.”
“இது ரெஸ்டாரென்ட் சாப்பாடு மாதிரி இருக்கு...மித்ராவுக்கு சமைக்க கூட வலிக்குதா? அவள் ஒரு டைப்பா இருக்கா.”
“அவள் அம்மாவை பார்க்க போயிருக்கா. அவளை நான் தான் சமைக்க வேண்டாம்னு சொல்லிட்டேன். பச்சை தண்ணி கூட உன் கையால் குடிக்க மாட்டேன்னு கத்திட்டேன். இரவு முழுக்க உக்காந்து அழுதேன், தூங்கவேயில்லைன்னு டிராமா போட்டா. நான் கண்டுக்கலை. உனக்காக பொங்கலும் வடையும் ஆர்டர் பண்ணினேன்...சாப்பிடு.”
அவன் அன்போடு ஊட்டிவிட அவள் நீர் தேங்கின விழியுடன் சாப்பிட்டு முடித்தாள். போதும் போதும் என்று அவள் சொல்லச் சொல்ல அவன் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று சொல்லி சொல்லி அவளை முழுவதும் சாப்பிட வைத்துவிட்டான்.
“அண்ணா.....மதியத்துக்கு வத்தக் குழம்பு வச்சு...வடகம் பொரிச்சு தரச் சொல்லு அந்த மித்ராவை. எதுக்கு தண்டத்துக்கு இருக்கா?”
“அதெல்லாம் வேண்டாம்..... நானே சமைக்கறேன். நீ ரெஸ்ட் எடு....”
அவளை படுக்க வைத்து போர்த்திவிட்டு சென்றான் அவன். சிங்கில் தட்டை போட்டுவிட்டு அவன் நிமிர்த்த போது மித்ரா வந்திருந்தாள்.
“அம்மாவை பார்தாச்சில்லே....கொட்டிக்கிட்டு போயிடு...”
“பேய் எப்படி போனா உங்களுக்கு என்ன? தள்ளிவிட்டது உங்க தங்கச்சி. ரெண்டு பேரையும் பேச வைக்க பாடுபட்ட என்னை திட்டி என்ன பிரயோஜனம்? எனக்கு ஒன்னும் சாப்பாடு வேண்டாம்?”
“நீ சாப்பிடலைன்னு யாரும் அழலை. செய்யறதையும் செஞ்சிட்டு மனம் சரியில்லாத பிள்ளை மேல் பழி போடறியா?”
“அம்மா உருண்டு விழும் போது ஓடி போய் தடுக்காம சிலை மாதிரி நின்னுட்டு இருந்தீங்க. நான் தான் போய் தாங்கினேன். இல்லே...என்ன ஆகியிருக்கும்? மாடிப்படியோட கைப்பிடி மேலே நங்குன்னு விழுந்தாங்க...அதான் மண்டையில். அடிப்பட்டு ரத்தம் வந்தது. பயந்துட்டேன் தெரியுமா? அம்மாவை பார்த்திட்டு தான் வரேன். அவங்களுக்கு ஒன்னும் ஆகாது.....நீங்க எல்லோரும் ஒத்துமையா இருந்தா அதுவே போதும். பெத்த தாயோட அருமை தெரியாதவங்க நீங்க.”
ஆத்திரத்துடன் அவன் அவளை நோக்கி வந்தான். பளாரென்று ஒரு அடி வைத்தான்.
“தெருவிலே போற நாயை குளுப்பாட்டி நடு வீட்டில் வச்சதுக்கு நல்ல பலன் கிடச்சுது....ச்சே உன்னைப் போய் வத்தக் கொழம்பு வச்சு வடகம் பொரிச்சு தரச் சொன்ன என் தங்கைக்கு அறிவில்லை....உங்கையால் சாப்பிட இனிமே எங்களுக்கு பயித்தியமா என்ன? விஷம் வச்சு கொடுத்தாலும் கொடுப்பே. நான் அம்மாவை பார்க்கப் போறன். நான் வரதுக்குள்ளே போயிடு.“
ஆத்திரத்தில் அவன் வாய்க்கு வந்தபடி பேசினான்.
அவன் பைக் சீறிக் கொண்டு கிளம்பியதில் அவன் கோபம் தெரிந்தது.
மோகன் ஆஸ்பத்திரிக்குப் போய் நிற்க...அங்கே அம்மாவை ஆப்பரேஷன் தியேட்டருக்கு எடுத்துப் போயிருப்பது தெரிந்தது. மூன்று மணி நேரம் கழித்து டாக்டர் வந்தார்.
“அம்மாவுக்கு எப்படி இருக்கு டாக்டர்?” அவர் முகத்தில் சின்ன புன்னகை.
“ரத்தம் அதிகம் போயிருக்கு. ரத்தம் கொடுத்து காப்பாத்தி இருக்கோம். தலையில் ட்வெல்வ் ஸ்டிச்சஸ் போட்டிருக்கோம். ஷி வில் பீ ஆல்ரைட். இன்னும் பத்து நாள் ஆஸ்பத்திரியில் இருக்கணும்...”
“தாங்க்யூ டாக்டர்...இப்ப அம்மாவை பார்க்கலாமா?”
“நோ.....வார்டுக்கு வந்ததும் பாருங்க...”
இரவு ஒன்பது மணிக்குத் தான் தாயம்மா தனி வார்டுக்கு மாற்றப் பட்டாள். மயக்கத்தில் இருந்தாள். அவளுடன் பேச முடியவில்லை. அம்மாவின் கன்னத்தை தடவியும் தலையை கோதியும் திருப்திப் பட்டுக் கொண்டான் அவன். நல்ல வேளை அம்மாவுக்கு ஒன்னும் ஆகலை...கடவுளே உனக்கு நன்றி. ஆனாலும் அவனுக்கு மித்ரா மேல் உள்ள கோபம் போகலை.
தன்னிடம் உள்ள சாவியை வைத்து கதவு திறந்து வந்த மோகன் நேரே தங்கையை பார்க்கச் சென்றான்,
“அண்ணா...அம்மா எப்படி இருக்காங்க?”
அவள் நன்றாக இருக்கிறாள் என்று சொல்லிவிட்டு
“ஸாரி அமிர்தா. அம்மாவுக்கு ஆப்பரேஷன் நடந்தது அதான் வீட்டுக்கு வரமுடியவில்லை. மதியம் சாப்பிட்டியா? அந்த முகரை உனக்கு வத்தக் குழம்பு வச்சு கொடுதிச்சா?”
“எல்லாம் செய்து வச்சிட்டு மித்ரா ஓடிப் போயிட்டா. நான் சமைக்கச் சொன்னதே உனக்காகத் தான் அண்ணா. நீ ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைச்சிட்டு இருக்கே. அப்புறம் சமைக்க ஏது நேரம்? நீ நல்ல சாப்பிட்டு நல்லபடியா இருந்தா தானே என்னையும் அம்மாவையும் கவனிக்க முடியும்? இந்த லெட்டரை எழுதி வச்சிட்டு போயிட்டா...” என்று அமிர்தா ஒரு துண்டு பேப்பரை கொடுத்தாள். முத்து முத்தான கையெழுத்து அவன் கண்ணைக் கவர்ந்தது. ஆள் தான் அழகு என்று பார்த்தால் பயபுள்ளைக்கு கையெழுத்தும் நல்லாதான் இருக்கு....போயிட்டாளா? சொரேர் என்றது அவனுக்கு. அவ்வளவு ரோஷக்காரியா? சரி போய் தொலையட்டும். விட்டது சனி...
அவள் எழுதியிருந்ததை படித்தான்.
“நாய் நன்றி உள்ளது. அதே சமயம் இந்த நாயிக்கு கொஞ்சம் ரோஷம் ஜாஸ்தி. அம்மாவையும் அமிர்தாவையும் நல்ல பார்த்துக்கோங்க. முயற்சி செய்யாமல் பலன் கிடைக்காது மிஸ்டர் மோகனப்ரியன்.......எங்கிருந்தாலும் வாழ்க....இப்படிக்கு நன்றியுள்ள நாய்.
“திமிரைப் பார்த்தியா அமிர்தா. நான் சமாளிச்சுக்கிறேன். நீ கவலைப் படாதே. நைட் உனக்கு பூரி செய்து தரேன்..”
“எனக்கு விதம் விதமா நீ சமைத்து கஷ்டப் படவேண்டாம். அம்மா இருக்கும் நிலைமையில் சாப்பிட தோணலை. என்னால் தான் எல்லாம்.”
தங்கையை சமாதானப்படுத்திவிட்டு கீழே இறங்கி வந்தவன் தன் அறைக்குச் சென்று சில நிமிடங்கள் மலைத்து நின்றான்.
மித்ராவை கோபித்துக் கொண்டது தப்போ? ச்சே ச்சே அதெல்லாம் இல்லை. அவளின் அதிகப்பிரசங்கிதனம் தானே இந்த சம்பவத்துக்கு காரணம். தலைகனம் பிடித்தவள். வத்தக் குழம்பும் வடகமும் ருசியாகத் தான் இருந்தது. அவள் சமைத்ததை சாப்பிடக் கூடாதுன்னு அவன் கொன்ட வைராக்கியம், குழம்பின் வாசனை தகர்த்துவிட்டது. தங்கையிடம் சொல்லிக் கொண்டு மீண்டும் ஆஸ்பத்திரிக்கு சென்றான். நல்ல கவனிப்பும் மருந்தும் வேலை செய்ய தாயம்மா பத்து நாளைக்குப் பின் கண் விழித்தாள். அவள் கேட்ட முதல் கேள்வியே மித்ரா எங்கே என்பதாகத் தானா இருக்க வேண்டும்? விஷயம் தெரிந்ததும் அவள் இட்ட கட்டளை
“அவளை போய் கூட்டிக் கொண்டு வா...” என்பதே.
தாயம்மாவை ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு போனதும் தன் வீட்டுக்கு வந்தாள் மித்ரா.
“அக்கா வா வா. என்ன ஆச்சர்யம்? நீ இப்ப வந்திருக்கே. அடுத்த மாசம் தானே டியூ. பரவாயில்லை என் பிறந்த நாள் நாளை வருது. நீ இல்லாமல் கொண்டாடனுமேன்னு வருத்தமா இருந்துச்சு...” தங்கை அளந்து கொண்டு போக தமக்கை எரிந்து விழுந்தாள்.
“போதுமடி...எல்லாம் முடிஞ்சு போச்சு. நீ வேற எரிச்சலை மூட்டாதே.”
அம்மா ஓடி வந்தாள். அவள் முகத்தில் கலவரம்.
“என்னைச்சு மித்ரா? வேலைய நீ விடலையே?”
“நான் எங்கு விட்டேன்? துரத்தப்பட்டேன்.”
சிறிது நேரம் இருவரும் பேசவில்லை. இடி விழுந்தது போல் இருந்தது.
“தம்பி எங்கே?”
“அவன் வாட்டர் கேன் போடப் போயிருக்கான்.”
“என்ன சொல்றீங்க?”
“அதை ஏன் கேக்றே மித்ரா. நீ கல்லூரியில் சேர்த்துவிட்டே. மிச்ச செலவுக்கு? விமலா அதை உன் அக்காவிடமே கேட்டுக்கோன்னு சொல்லிட்டா. எக்ஸாம் ஃபிஸ் கட்டணும். அதான் உன்னை தொந்தரவு பண்ணவேண்டாம்னு அவன் பார்ட் டைம்மா வீடு வீடா தண்ணிக் கேன் கொண்டு போய் போடறான்...”
“அண்ணி இப்படி தண்ணி காட்டுவாங்கன்னு நினைக்கலை அக்கா.”
“உங்கப்பாவின் கண் ஆப்பரேஷனுக்கு அப்பாயின்மென்ட் வாங்கியாச்சு. அடுத்த வாரம் செய்யனும்? முன்பு ஒரு கண் முடிச்சாச்சு. இப்ப இன்னொரு கண் பண்ணனும்....இப்படி கல்லைத் தூக்கிப் போடறயே?...”
மித்ரா தொப்பென்று தரையில் சரிந்து உட்கார்ந்தாள்.
“உன் அண்ணி வரும் நேரம். அதுக்குள்ளே நடந்ததை சொல்லு மித்ரா. நான் வேணா அந்த அம்மாவிடம் கெஞ்சிப் பார்க்கட்டுமா? உனக்கு இவ்வளவு சம்பளம் தாராங்கன்னு உங்க அண்ணிக்கு பொறாமை. அந்தப் பொறாமையிலே வீட்டு செலவுக்கு அவ ஒன்னும் தர்றதில்லை...இப்ப என்ன பண்றது?”
“நமக்கெல்லாம் ரோஷம் ஒரு கேடா? அவ கிட்டே கையேந்த வேண்டியது தான்.” என்றாள் மித்ரா. இதை கேட்டுக் கொண்டே விமலா வந்துவிட்டாள்.
“என்ன பேச்சு ஒரு மாதிரியா இருக்கு. புரியுது. மிஸ் மித்ரா உன் ஆட்டம் குளோசா? ஏய் வாண்டு எனக்கு சூடா காப்பி கொண்டு வா...அப்படியே முக்கு கடையிலே வடை வாங்கிக் கிட்டு வா. பயப்டாதே இந்தா காசு...” விமலா சோபாவில் உட்கார்ந்து கொண்டு ஹான்ட்பேக்கில் இருந்து ரெண்டு நூறு ரூபாய் தாளை தூக்கிப் போட்டாள். மாலா முறைத்தாள்.
“என்னால் முடியாது.”
“பொறுகிட்டுப் போ மித்ரா மேடம்.....உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது. என்னாச்சு மேடம் உங்க அருமை பெருமையான வேலை? கல்தா கொடுத்திட்டாங்களா?”
இதுவரை மாமியாரும் சின்ன நாத்தனாரும் சேர்ந்து கொண்டு அவளை அலட்சியப் படுத்தியதற்கு இது தான் தண்டனை என்று அவள் உள்ளம் எக்காளமிட்டது. சுய கௌரவம்னு ஒண்ணு இருக்கு...அது நமக்கும் சாதியப்படும்னு கஸ்தூரியும் மாலாவும் மௌனம் சாதித்தனர்.
“என்ன காது கேக்கலை?...”
“கேட்டுச்சு...ரூபாயை நீங்களே பொறுக்கி எடுத்து என் கையிலே கொடுங்க நான் வாங்கிட்டு வரேன்...” என்றாள் மாலா.
“சரி ரொம்ப சந்தோசம். நீங்க வாங்க வேண்டாம். உங்களுக்கு எப்படியும் அந்தப் பணம் தேவைப்படும். நான் போன பிறகு பொறுக்கிக்கோங்க. செலவுக்கு வசுக்கோங்க. இன்னும் வேணும்னா கேளுங்க.....தூக்கி எறியறேன். இப்ப குளிக்கப் போறேன்....” விமலா வெற்றி கண்ட வீராங்கனையாக தன் அறைக்குச் சென்றாள். மூவரும் அடித்து வைத்த சிலை போல் நிற்க சுதாரித்துக் கொண்டு மித்ரா அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு
“நான் வடை வாங்கி வரேன். மாலா நீ சூடா காப்பி போடு...”
மாலா எதுவோ பேச முயன்றாள்.
“நீ எதுவும் பேச வேண்டாம். அண்ணி என்றால் தாயார் ஸ்தானம்...வடை வாங்கி வரேன். இப்ப எதுக்கு முறைப்பும் கொழுப்பும்? ”
கீழே கிடந்த ரூபாய் நோட்டுக்களை பொறுக்கும் போது மித்ராவின் கண்களில் இருந்து இரு சொட்டுக் கண்ணீர் அந்த தாளில் விழுந்தது. தாளில் இருந்த காந்தி படம் பொக்கை வாய் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தது. ஏழைகளின் நண்பன், ஆறுதல் சிரிப்பு தான் சிரிக்க முடியும். கம்பீரத்தையா கொடுக்க முடியும்? பணமில்லாதவர்கள் அவமானப் பட்டு தான் ஆகணும். அது தான் நிதர்சனம். ஆனா இந்த நிலையை நான் மாத்துவேன்...சபதம் செய்து கொண்டாள் மித்ரா.
கனவுகள் தொடரும்