அத்தியாயம்—2 கனவு மலர்கள்
நீல வண்ண சூடிதார். கருப்பு வெல்வெட் பூக்கள் சிந்தி இருக்க, ரோஜா நிற துப்பட்டா.....கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டாள் மித்ரா.
“அக்கா...சின்ட்ரெல்லா மாதிரி இருக்கே. என்ன அந்த மோகன ரங்கன் மயக்கம் போடுவானா தெரியலை. ஆனா சான்ஸ்சே இல்லை.....நீ போகுமிடமெல்லாம் ரோமியோக்கள் மயக்கம் போட்டு விழப் போறாங்க...” மாலா கலகல சிரிப்புடன் சொல்லிவிட்டு அக்காவின் கன்னத்தில் ஒரு இச் வைத்தாள்.
“மோகன ரங்கன் இல்லேடி. மோகனப்ரியன்...”
“அடே.....சொல்லும்போதே உன் முகம் சிவக்குதே! அதுக்குள்ளே கரெக்ட் பண்ணிட்டியா? கில்லாடி தான். உன் அழகை கண்டுகொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்...அப்புறம் அந்த மோகனப்ரியனுக்கு வராதா?”
“சூ...எதாவது உளறாதே. அக்கா காதில் விழுந்தால் என்னை சட்னி ஆக்கிடுவா. ஆம்பளைங்க பார்க்கணும்னே மினுக்கிக்கிட்டு போறது...அப்புறம் அவன் பார்த்தான் இவன் கையை பிடிச்சு இழுத்தான்னு கத்தவேண்டியதுன்னு திட்டுவா. மாலா எனக்கு ஒரு உதவி செய்வியா? ப்ளீஸ்...”
“என்ன உதவி? மோகனுக்கு காதல் கடிதம் எழுத உதவி செய்யவா?”
“போடி.....எப்பப்பார் சில்லி ரொமான்ஸ் பேச்சு தானா? உன்னை சொல்லி குத்தமில்லை. உன் வயசு அப்படி. நான் இனிமே இங்கே வரமாட்டேன். மாசம் ஒரு விசிட் தான். அதனாலே நீ தான் அம்மாவை பார்த்துக்கணும்...”
இதுவரை ஜாலியாக பேசிக் கொண்டிருந்த மாலா, அக்கா அருகே வந்து அவளைக் கட்டிக் கொண்டாள். “நான் போக விட்டால் தானே? நீ எங்கும் போகக் கூடாது. அப்படித்தான் போகணும்னா, இந்த வேலையே உனக்கு வேண்டாம்.”
சோபாவில்.....பழைய சோபா. யாரோ ஒரு பணக்கார குடும்பம் வீட்டை காலி செய்துகொண்டு போகும் போது இனாமாக கொடுத்தது....தொப்பென்று உட்கார்ந்தாள் மித்ரா. அவளுக்கு கண்ணீர் முட்டியது. பேச்சு தொண்டையில் சிக்கியது. இந்த சமயம் அண்ணி விமலா அறைக்குள் எட்டிப் பார்த்தாள்.
“என்ன அக்காவும் தங்கையும் என்ன சதி திட்டம் போடறீங்க? விடிஞ்சும் விடியாமலும் கொஞ்சலும் குலாவலும் அதிகமா இருக்கு. ஏய் மாலா. அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அக்காவை போகவிடாம பண்ணிடாதே. நீ கல்லூரி எல்லாம் சேரணும்னா அவள் வேலைக்கு போய் தான் ஆகணும்...புரியுதா?”
இருவரையும் உறுத்துப் பார்த்தாள். சொன்னபடி கேக்கலை இருக்கு உங்களுக்கு என்று எச்சரித்தது அந்தப் பார்வை. மித்ரா மனதை கலைத்து அவளைப் போகவிடாமல் பண்ணிவிடுவாளோ இந்த மாலா என்ற பயம் அவள் கண்களில் தெரிந்தது. மாலாவுக்கு பொறுக்க முடியவில்லை.
“உங்க தங்கச்சி மட்டும் வாரம் ஒரு முறை இங்கு வந்து டேரா போடலாம். என் அக்கா மட்டும் வீட்டை விட்டுப் போணுமா? அக்கா நீ போகாதே....எனக்கு நீ வேண்டும். ஒரு நிமிஷம் கூட நீ இல்லாமல் இந்த வீட்டில் இருக்க மாட்டேன்.”
கல்யாணி அம்மாள் காப்பி போட்டுக் கொண்டு வந்து மருமகள் கையில் கொடுத்தாள். “என்ன அண்ணியோடு சண்டை போடறீங்க?. அண்ணன் பொண்டாட்டின்னு ஒரு மரியாதை வேண்டாம்...” என்றாள். கல்யாணி அந்த வீட்டில் விமலாவுக்கு ஜால்ரா தட்டும் வேலை தான் செய்து கொண்டிருந்தாள்.
“ஏம்மா...அந்த ராட்சசியை ஒரு வார்த்தை கேக்கமாட்டியா? எப்ப பார் சலாம் போட்டுகிட்டு...” என்று அம்மாவிடம் தனியாக, மித்ராவும் மாலாவும் நிறைய தரம் சொல்லியிருக்கிறார்கள். கல்யாணியின் ஒரே பதில் “அவளை நம்பித் தானே உங்க எதிர்காலம் இருக்கு.”
அந்த வீட்டின் ஏடிஎம் அவள் தான் என்பது பரிதாபத்துக்குரிய உண்மை. கஸ்தூரியும் அம்மாவுடன் சேர்ந்துகொண்டு தாளம் போடுவாள். இவ்வளவுக்கும் கஸ்தூரி விமாலாவை விட இரண்டு வயது பெரியவள். அதில் விமலாவுக்கு ஒரு தற்பெருமை. வேண்டுமென்றே கஸ்தூரியை மதனி மதனி என்று கூப்பிட்டு தான் அவளை விட இளையவள் என்று காட்டிக் கொள்வாள். கஸ்தூரி அவளுக்கு மரியாதை கொடுத்து வாங்க போங்க என்று தான் சொல்வாள்.
“உணக்கு சின்னவங்க தானே அண்ணி? அப்புறம் பெயர் சொல்லி கூப்பிட வேண்டியது தானே?” என்பாள் மாலா. கஸ்தூரி சிரிப்பாள்.
“எனக்கு இந்த வீட்டில் பபூன் வேஷம். யார் என்ன சொன்னாலும் எதிர்த்து பேசிவிட முடியாது. கோமாளி சிரிப்பு சிரித்துக் கொண்டு சமாளிக்க வேண்டும். உங்களுக்கென்ன இள வட்டங்கள், துள்ளி குதிப்பீங்க...” என்று சொல்லிவிடுவாள்.
மாமியார் கொடுத்த சூடான காபியை ரசித்து உறுஞ்சி குடித்துக் கொண்டே சோபாவில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டாள் விமலா. சோபாவில் உட்கார்ந்திருந்த மித்ரா எப்பொழுதோ எழுந்து நின்று கொண்டிருந்தாள். விமலா ராணி மாதிரி உட்கார்ந்திருக்க அங்கே பல்லை தேய்த்துக் கொண்டே வந்த பிரம்பநாயகம் “என்ன டிஸ்கஷன்?” என்று பேஸ்ட் வாயுடன் குளறிக் கேட்டான்.
“ஏண்டா இவனே....பல்லை தேச்சுட்டு ஹாலுக்கு வந்தா என்னடா?” என்று அதட்ட நினைத்த கல்யாணி வாயை கூட அசைக்கவில்லை. எல்லாம் மைன்ட் வாயிஸ் தான். கல்யாணமாகி தலைக்கு மேலே உசந்த பிள்ளையை அதட்டவா முடியும்? அதுவும் விமலா முன்னால்? தொலைத்து கட்டி விடுவாள். அவள் தன் கணவனை கோபத்தில் ஒருமையில் பேசுவாள் ஆனால் மற்ற யாரும் அவனை எதுவும் சொல்லிவிடக் கூடாதாம்....
“பதிபக்தி பிடுங்கிக்கிட்டுப் போவுது. புருஷனை சேவகன் மாதிரி வச்சுக்கிட்டு நாம மட்டும் அவனை லார்ட் மாதிரி மதிக்கணும்னு ஆர்டர் பண்றா. அம்மா எங்கேயிருந்துமா இந்த மாதிரி பெண்ணை வீட்டுக்கு கொண்டு வந்தே?” என்று மாலா யாரும் இல்லாத போது சத்தம் போடுவாள்.
“அடி போடி கிறுக்கச்சி. சோறு போடறவங்க கை ஓங்கி தான் இருக்கும். வெத்து வேட்டுகள் தலையாட்டிட்டு தஞ்சாவூர் பொம்மை மாதிரி தான் இருக்கணும். உங்கப்பா உடம்பு முடியாம வியாரெஸ் வாங்கி வீட்டோடு வந்த பிறகு நாம துள்ளியா குதிக்க முடியும்? அடங்கி கிடங்க. உங்களுக்கும் ஒரு காலம் வரும். அப்ப நிமிந்துக்கோங்க. அப்ப இந்த அம்மா ராணி மாதிரி இருப்பா.”
“நல்ல ராணியா இருக்கனும்மா. இம்சைபடுத்தாத. கர்வம் இல்லாத ராணியா, அன்பே உருவா இருக்கணும். இந்த வீடே அன்பென்னும் ஊஞ்சலில் ஆடணும்..” என்பாள் மித்ரா. அந்த நாளுக்காக அவர்கள் கனவு கண்டு கொண்டிருந்தார்கள்.
“இத பாருங்க.....கஸ்தூரி மதனிக்கு இருபத்தெட்டு வயசாச்சு. இனிமேலா வரன் அமையப் போகுது? இருந்தாலும் முயற்சி செய்திட்டு தான் இருக்கேன். அவங்களைவிட நான் சின்னவ...என் நிலைமையை பாருங்க......நான் பிள்ளை பெத்துக்காம அவங்களுக்கு வரன் பார்க்றேன். நான் இங்கே வந்து நாலு வருஷம் ஆச்சு. நான் ஏன் பிள்ளை பெதுக்கலை தெரியுமா? இந்த வீட்டின் முழு பாரத்தையும் நானே சுமக்க வேண்டியிருக்கு. இதில் பிள்ளை வேறு பிறந்து விட்டால் உங்களுக்கு சோறு போடவோ நல்லது கெட்டது செய்யவோ முடியுமா?....” இந்த இடத்தில் நிறுத்தி கண் கலங்கி நிற்பாள் விமலா. அடித்து பிரண்டு கல்யாணி அம்மாள் ஓடி வந்து மருமகள் கண்ணை துடைத்து ஆறுதல் சொல்வாள்.
“வருத்தப்படாதே விமலா. உன் தியாகம் எங்களுக்குப் புரியுது. என்ன செய்யறது. எல்லாத்துக்கும் நேரம் காலம் வரவேண்டாமா? உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்...” விமலா அவர்களுக்காக குழந்தை பெத்துக்காமல் இருக்கவில்லை. இயற்கையாகவே அவளுக்கு இது நாள் வரை அந்த பாக்கியம் கைகூடி வரவில்லை. இது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம் தான். இருந்தாலும் விமலா தன்னை தியாகி என்று சொல்லிக் கொள்ளும்போது அதை மறுக்க யாருக்கும் தைரியம் இருக்கவில்லை. “தியாகமாம்...ஏம்மா? வாயிலே என்ன கொழுக்கட்டையா வச்சிருக்கே? ஒவ்வொரு மாமியார் என்னவெல்லாம் பேசறாங்க? உனக்குத் தான் தெரியலன்னா எத்தனை சீரியல் விழுந்து விழுந்து பாக்றே...அதிலே இருந்து கத்துக்க வேண்டாம்?” என்று பொரிந்து தள்ளுவாள் மாலா.
“ஆமாடி. சீரியலை பார்த்துக் கத்துக்கணும். எப்படி கொலை செய்ய ஆள் அமத்றது?. எப்படி விஷம் கொடுத்து கொல்லப் பாக்கறது?, எப்படி கடத்றது...இந்தக் கன்றாவியெல்லாம் கத்துக்கணும். குடும்பம் உருபட்டிடும். விமலாவை குறை சொல்லி என்ன பிரயோஜனம்? அவளுக்கு இந்த பெரிய குடும்பத்தில் வந்து உழச்சு கொட்டனும்னு விதி இருக்கு. அவளுக்கும் ஆசா பாசங்கள் இருக்கும்....பணத்தை ஷேர் பண்ணிக்கணும்னா கஷ்டமாத் தான் இருக்கும். நாம தான் அனுசரிச்சுப் போகணும். உங்க அண்ணி தனிக் குடித்தனம் போயிருந்தா இந்த சாப்பாடு கூட கிடைக்காது தெரிஞ்சுக்கோங்க..வேலைக்குப் போய் உங்க கால்லே நில்லுங்க.” கல்யாணி அம்மாள் உள்ளதை உள்ளபடி சொல்லி அவர்களுக்கு யதார்த்தம் புரிய வைப்பாள். சம்பாதிக்கிறவர்களுக்கும் உக்காந்து திங்கிறவர்களுக்கும் என்ன ஒட்டுதல் இருக்க முடியும்? மரியாதை கேக்கும் வர்க்கம் சம்பாதிக்கும் கூட்டம். பொறுத்துப் போவது திங்கிற கூட்டம். இதை நன்கு புரிந்து வைத்திருக்கிறாள் கல்யாணி அம்மாள். அதைத் தான் அவள் செவ்வனே செய்து கொண்டிருந்தாள். அந்தக் குடும்பத்தின் பசை அவள் தான். மோதல் வரும்போது “பொறுமையா இருங்கடி” என்பது தான் அவளின் கீதை.
பிரம்பநாயகம் நல்ல மனசு உடையவன் இல்லை. சுயநலம் மிக்கவன். சம்பாதிக்கிற மனைவி கிடைத்ததும் கழட்டிக் கொண்டு தனிக் குடித்தனம் போகத் தான் துடித்தான். விமலா அதற்கு சம்மதிக்கவில்லை.
“அதெல்லாம் வேண்டாம்..”
“ஏண்டி? அப்பா சம்பாதிக்கிறார். அவர், அவர் குடும்பத்தை பார்த்துக்கட்டும். யாரு இத்தனை பெத்துப் போடச் சொன்னது? கஸ்தூரி பிறந்ததும் நிப்பாட்டி இருக்கவேண்டியது தானே? மூத்த மகன் என்ன பொதி சுமக்கும் கழுதையா? இப்ப நாம புட்டுக்கலன்னா அப்புறம் பெயர்ந்து போகவே முடியாது...”
“துப்புக்கெட்ட மாதிரி பேசாதீங்க. எனக்கு ப்ரமோஷன் கிடைத்ததும், நாம சொந்த வீடு வாங்கிப் போயிடுவோம். அதுவரை இந்த வீட்டில் இருப்போம். இல்லை வாடகை கொடுத்து மாளாது. அப்புறம் புள்ளை பிறந்தா பார்த்துக்க ஆள் வேணும். உங்க அம்மா தான் மூணு பெத்து போட்டிருக்காங்களே...அதுங்க பார்த்துக்கட்டும். நமக்கு கேர் டேக்கர் செலவு மிச்சம்...பேசாம இருங்கோ. எப்ப போணும்னு நான் சொல்றேன். அதுமட்டும் வாயை திறக்காதீங்க...”
கணக்கு போட்டு கூட்டுக் குடும்பமாக இருக்க நினைத்தாள் விமலா. இறைவன் வேறு கணக்கு போட்டுவிட்டான். அப்பா வேல்முருகன் விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு வீட்டில் இருக்கும்படி ஆகிவிட்டது. அதன் பின் எல்லாம் மாறிவிட்டது. இரண்டு தங்கைகளும், தம்பியும் வளர வேண்டியவர்கள். பெரிய தங்கையின் கல்யாண வேலை தலைக்கு மேல் பயமுறுத்தியது. இந்த சமயம் தனிக்குடித்தனம்.....பெரிய கனவாக முடிந்ததில் விமலாவை விட நாயகத்துக்கு வருத்தம் அதிகம்.
“என்ன சம்பாதிச்சாலும் பத்தலை. ஆசைப்பட்டதை வாங்கிக்க முடியலை. வீடு வாங்க முடியலை. கார் வாங்க முடியலை. மூணு தங்கச்சிகள் முதுகிலே உக்காந்திருக்குதுகள்...” என்று அவன் புலம்புவது தங்கைகளுக்கும் அரசல் புரசலாக தெரிந்து தான் இருந்தது. பாரமாக நினைக்கும் அண்ணனின் சம்பாதியத்தில் உட்கார்ந்து சாப்பிட அவர்களுக்கு பிடிக்கவே இல்லை. அன்பில்லாதவன் பராமரிப்பில் இருப்பது முள்ளின் மேல் இருப்பது போல் இருந்தது. எனவே தான் இந்த வேலையின் நிபந்தனைக்கு கட்டுப்பட்டு கிளம்பிக் கொண்டிருந்தாள் மித்ரா. “எனக்கு ஒரே ஒரு சந்தேகம்...” என்று ஆரம்பித்தாள் விமலா.
“என்ன சந்தேகம்? அக்காவுக்கு உண்மையில் வேலை கிடைச்சுதா இல்லை எவனோடவாவது ஓடிப் போகப் போகிறாளான்னு சந்தேகமா?” மாலாவின் துடுக்கு கேள்வி. நாயகம் தங்கையை அடிக்க கையை ஓங்கினான். ஒரு நாளைக்கு பத்து முறையாவது கை ஓங்குவது அவன் வழக்கம். அடி விழாமல் தடுப்பது கல்யாணியின் வழக்கம். இப்பொழுதும் அப்படித்தான்.
“விடுடா.....எதுக்கு கை ஓங்கற?. ஓங்கின கை நிக்காதுன்னு சொல்வாங்க. உனக்கே முழு பாரமும் இருக்கக் கூடாதுன்னு தானே அவ வேலைக்குப் போறா?”
“என்ன வேலை? ஆயா வேலை? இதுக்குத் தான் பி.காம் பட்டம் வாங்கினாளா?”
“அண்ணா...இப்ப இந்தப் பட்டத்துக்கு அந்த வேலை தான் கிடைக்கும். எஞ்சினீர் படித்தவங்க தெரு கூட்டும் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கிறாங்க தெரியுமா உனக்கு? அக்கா சிஏ படிக்கிறேன்னு சொல்லுச்சு நீ விட்டியா?” மாலா மறுபடியும் சட்டம் பேசினாள். நாயகம் கண்ணில் பொறி பறக்க தங்கையை உற்றுப் பார்த்தான்.
“உங்க செல்லப் பொண்ணு எப்படிப் பேசறா பாருங்க?”
மித்ரா ஒரு சின்ன பெட்டியுடன் ஹாலுக்கு வந்தாள்.
“அம்மா நான் போயிட்டு வரேன். என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க. அண்ணா அண்ணி நீங்களும் தான்...” மித்ராவின் பணிவில் சாந்தமான நாயகம் ஆசீர்வாதம் பண்ணினான். “நல்லாயிரு....நீ உண்டு உன் வேலை உண்டுன்னு இருக்கணும் எந்த வம்பு தும்புக்கும் போகக் கூடாது. புரியுதா?” என்று எச்சரித்தான்.
கல்யாணி கண் கலங்கி நின்றாள். பணம் என்ற மாய அஸ்திரம் இல்லாததால் வயதுக்கு வந்த கல்யாணம் ஆகவேண்டிய பெண்ணை தனியாக வெளியே அனுப்ப வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. அதுக்காக வருந்தினாள்.
“மாசம் ஒரு முறையாவது தவறாம வந்திடு மித்ரா..”
மித்ரா வாசற்படி தாண்டினாள். அவள் சந்திக்கப்போகும் இன்னல்களை பற்றி அப்பொழுது அவள் அறிந்திருக்கவில்லை. மாலா கண்ணீருடன் கையசைத்தாள்
கனவு தொடரும்