அத்தியாயம்—3 கனவு மலர்கள்
மித்ரா அந்த வீட்டுக்கு வந்து பதினைந்து தினங்கள் ஆகிவிட்டன. ஒரு சிறையிலிருந்து இன்னொரு சிறைக்கு வந்த மாதிரி முதலில் உணர்ந்தாள் அவள். இருள் மூழ்கி இருந்த ஹாலில் ஜன்னல் திரைகளை விலக்கி வைத்தாள். அன்று நடந்த போர் இன்றும் உடம்பை நடுங்க வைத்தது. வந்த முதல் நாளே பௌர்ணமி கத்திற்று. பயத்துடன் பார்த்தாள் மித்ரா.
“யாரைக் கேட்டுக் கொண்டு ஸ்கிரீனை திறந்து வச்சே?” பௌர்ணமி எங்கிருந்தோ வந்து அவள் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டது. வெலவெலத்துப் போனாள் அவள். வீட்டுக்கு வெளிச்சம் வேண்டாம் என்று சொல்லும் அதிசய மனிதர்களை அவள் இப்பொழுது தான் பார்க்கிறாள்.
“இதோ பார்....உன் இஷ்டத்துக்கு எது வேணா செய்யலாம்னு நினைக்காதே. ஒரு துரும்பை நகட்டுவது என்றாலும் என்னிடம் கேட்டு தான் செய்ய வேண்டும்.” வந்த வேகத்திலேயே சென்றுவிட்டாள். கன்னத்தை பிடித்துக் கொண்டு அவள் அழுகையை அடக்கியபடி நின்றாள். சம்பளத்துக்கு தான் வேலைப் பார்க்கிறாள், அதற்காக இப்படியா நடத்துவது? கூப்பிட்டு வச்சு எது செய்யலாம் எது செய்யக் கூடாதுன்னு ஒரு லிஸ்ட் கொடுக்க வேண்டியது தானே? என்ன ஆணவம்? பணக்கார திமிர். அவளுள் வெறுப்பு மூண்டது. ச்சே...ஒன்றும் வேண்டாம்.....இந்தாம்மா பௌர்ணமி நீயாச்சு உன் வேலையாச்சு, வேறு ஆள் பார்த்துக்கோன்னு சொல்லிவிடத் துடித்தாள். அவள் கண்முன் அவள் குடும்பம் வந்து தொலைத்தது.....அவமானத்தை மென்று விழுங்கினாள். இன்னும் அமிர்தாவை கண்ணில் காட்டவில்லை.....என்னதான் அவள் செய்வது? வீட்டில் வேறு வேலைக்காரர்கள் ஒருவரையும் காணும். அடுப்படிக்கு சென்றாள். நவீன அடுப்படி. காய்கறி வெட்ட ஒரு மேடை நட்ட நடுவில் அமைந்திருந்தது. என்ன அழகான வேலைப்பாடு நிறைந்த கப்போர்டுகள்! சிங்கில் முகம் பார்க்கலாம் போல் இருந்தது. ஆனால் என்ன இது....அடுப்படியில் பூனை தூங்குதுன்னு ஏழை வீட்டு அடுப்படியை சொல்வார்கள்...வசதி நிறைந்த இந்த வீட்டில் கூடவா பூனை தூங்கும்? அடுப்படியில் சமையல் நடந்ததாகவே தெரியலையே....இந்த வீட்டு ஆட்கள் சாப்பிடுவார்களா மாட்டார்களா? வாட் நான்சென்ஸ் இஸ் திஸ்? அவள் எண்ணிக் கொண்டிருக்கும்போதே புன்னகை மன்னன் ஆஜார்.
“உங்க அடுப்படி என்ன டூப்பா? சமையல் செய்த சுவடே தெரியலையே?” வியப்புடன் கேட்டாள் மித்ரா. அவன் முறுவல் இந்த முறை சோகமாக இருந்தது.
“முதலில் உன் கிட்டே ஸாரி கேட்டுக்கிறேன். அம்மா உன்னை அடித்தது எனக்கு வலித்தது. கண் கலங்கிட்டேன் தெரியுமா?”
“நம்பிட்டேன். அடுப்படி ஜன்னலும் சாத்தியே இருக்கு. உங்களுக்கு எல்லாம் இயற்கை வெளிச்சம் அலர்ஜியா? உங்க புன்னகை, மின்னல் வெளிச்சம் தரும்னு நம்பிக்கையோ?”
“அதை விடு உனக்கு சமைக்கத் தெரியுமான்னு கேட்டேனே. நியாபகம் இருக்கா?” என்றான் குழைவாக.
“இருக்கு இருக்கு....முட்டாள்தனமான கேள்வி....அதுக்கு என்ன இப்போ?”
அவன் அவள் அருகில் வந்தான். அவளை உற்றுப் பார்த்தான். அந்த பார்வையின் பொருள் புரியாமல் அவள் தடுமாறினாள். சற்று பின் நகர்ந்தாள். சட்டென்று அவள் கையைப் பிடித்து அழுத்தினான். “விடுங்க...என்ன இதெல்லாம்?” அவள் மெல்லிய குரலில் சொல்லியது அவனுக்கு கேட்கவில்லையோ? கையை அவன் விடவில்லை. இரண்டு அறை விடாமல் அவள் ஏன் இப்படி நெளிந்து கொண்டிருக்கிறாள் என்று அவளுக்கேத் தெரியவில்லை. அவனிடமிருந்து சுகந்தமான நறுமணம் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது தான் குளித்து விட்டு வந்திருப்பான் போலிருக்கு. அவள் கீழுதட்டை கடித்து தன் நிலையை நிதானத்துக்கு கொண்டு வர முயன்றாள்.
“மித்ரா...உன்னை நான்...”
ஐயோ....நேசிக்கிறேன் என்று சொல்லிவிடப் போகிறானோ? என்ன இது கண்டவுடன் காதலா? சீதையை பார்த்ததும் ராமன் விட்ட பார்வை போல் இருக்கே. அன்னல் நோக்கிவிட்டான். அவளுக்குத் தான் நோக்க பயமாக இருந்தது. ஆனால் அவள் எதிர்பார்த்த ஒன்றும் அவன் சொல்லவில்லை....
“மித்ரா நான் உன்னை நர்சாக நினைக்கவில்லை. என் அம்மாவா நினைக்கிறேன்.” என்றான். மித்ரா திடுக்கிட்டு நிமிர்ந்தாள். அவள் கண்களில் வியப்பும் ஏமாற்றமும் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தது. எது அதிகம் தெரிகிறது என்று பட்டிமன்றம் வைத்தால் சுவாரஸ்யமாக இருக்கும். அவ்வளவு பெண்மை அதில் விளையாடிக் கொண்டிருந்தது. படபடத்த கண்களை அவன் மேல் நாட்டினாள்.
“நான் நல்ல சாப்பிட்டு மூணு மாசம் ஆகுது....இந்த அடுப்படியில் இட்லி பானை எரிந்து வாரக் கணக்கில் ஆகிறது....” சொர்கத்தை பார்த்துவிட்டு அதை இழந்தவன் நிலையில் அவன் இருந்தான் என்று அவன் கண்கள் காட்டியது.
“நீங்க என்ன சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியலை...” அவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே வாசலில் கார் புறப்படும் சத்தம் கேட்டது.
“அம்மா கிளம்பிட்டாங்க...” அவன் முக இறுக்கம் தளர்ந்தது. பார்க்க சுடர் எரிவது போல் இருந்தது. அவள் அவனின் எழில் முகத்தை ரசித்தாள். ஆழகு எங்கிருக்கோ அதை ரசிப்பதில் என்ன தவறு? என்று சமாதானம் செய்து கொண்டாள்.
“இந்த வீட்டில் வெளிச்சம் வராது...வேறு என்ன என்ன வராது என்று நீ கேக்றதுக்கு முன்னாலே நானே சொல்லிடறேன். இங்கே ஜன்னல்கள் மட்டும் அடைந்திருக்கவில்லை. வாய்களும் அடைத்துக் கொண்டிருக்கிறது. அம்மா பேசுவதே அபூர்வம். அமிர்தா பேசுவதே இல்லை....அப்பா வீட்டுக்கு வருவதே இல்லை. விருந்தினர், சொந்தங்கள் வருவதில்லை. முதல் முதலாக உணர்வும் அழகுமாக நீ வந்திருக்கே. அம்மா சமைத்து போட்டு சாப்பிட்ட நாட்கள் கனவு போல் இருக்கு. அதான் கேட்டேன் நீ சமைப்பியா என்று? தோசை மாவு வாங்கி வரேன்...இட்லி அவித்து தருவியா?”
அவன் கேட்டபோது அவளுக்குள் ஒரு தாய்மை உணர்வு பீறிட்டது. அவனை தோளில் சார்த்தி, தட்டிக் கொடுக்க வேண்டும் போல் இருந்தது. அவன் அவளை அம்மாவாக நினைக்கிறேன் என்று சொன்னதன் அர்த்தம் புரிந்தது.
“இட்டிலி தான் வேணுமா? பர்கர்...பிஸ்ஸா...”
வாசலில் மணி அடிக்க மோகனப்ரியன் எழுந்து சென்றான். திரும்பி வந்தபோது அவன் கையில் பார்சல்கள் இருந்தது. “கேட்டியே, பர்கர்...பிஸ்ஸா...வந்திடுச்சு ...” இதெல்லாம் தான் அவன் தினம் சாப்பிடுகிறான் போலும். அதான் ஏங்கிப் போய் இட்லி கேட்டிருக்கான். இன்னொன்றும் புரிந்தது. அடுப்படி, அக்னி தேவன் எட்டிப் பார்க்காத மூலையாக இருந்தது. இங்கு நளபாகத்தை கொண்டு வந்து விடணும்....சமையல் செய்து இந்த இடத்தையே அடுப்படியாக லட்சனமாக ஆக்கிடனும். தினமும் இங்கு ஜுமாட்டோ தயவில் பசியாறுகிறார்கள். என்ன கொடுமை! பௌர்ணமி குடித்தனம் நடத்தவில்லை. ஹாஸ்டல் மாதிரி இருந்தது. ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள்!
“இதை குப்பையில் போடுங்கள். நான் போய் மாவு வாங்கி வரேன். சமையல் பொருட்கள் கொஞ்சம் வாங்கி வரேன். சட்னியும் சாம்பாரும் எள்ளு பொடியும் தொட்டுக்க வைக்கவா? போதுமா இன்னும் ஏதாவது வேணுமா?”
அவன் அப்படியே சூரியனை கண்ட தாமரையாக மலர்ந்தான். “நிஜமாவா...இது கனவில்லையே? சீக்கிரம் செய்யேன். நா ஊருது.” ஓடிப் போய் காசும் பையும் எடுத்து வந்து கொடுத்தான். அடுத்த அரை மணிக்குள் அக்னி தேவன் ப்ரியமுடன் வந்து ஒளியும் சூடும் கொடுக்க சாம்பார் மணத்தது. சட்னி, கிண்ணத்தை நிறைத்தது. எள்ளுப் பொடி மணம் ஊரையே தூக்கியது. சுடச் சுட இட்லியுடன் எல்லாம் பருமாறினாள். அவன் சப்பணமிட்டு உட்கார்ந்து நாகரீகம் பார்க்காமல் வழித்து வழித்து எட்டு இட்லிகளை உள்ளே தள்ளினான். பசியை மட்டும் ஆண்டவன் வைக்கவில்லை. கூடவே ருசியையும் வைத்துவிட்டானே...செத்துப் போன நாக்கு அன்று உயிர் பெற்று எழுந்து கொண்டது. சாப்பிட்டு எழுந்தவுடன் அவன் நன்றி மிகுந்த கண்களுடன் அவளைப் பார்த்தான்.
“தேவி என் தேவி...நன்றி நன்றி...வானம் வரை நன்றி...”
“போதும் போதும்...சமைக்கத் தெரியுமான்னு கேட்டேங்க சரி. பாடத் தெரியுமா, ஆடாத் தெரியுமான்னு எதுக்கு கேட்டீங்க? அதெல்லாம் என்னிடம் எதிர்பார்க்காதீங்க. எனக்கு சுத்தமா தெரியாது....”
“சும்மா ஜோக்குக்காக கேட்டேன்...”
அதற்குள் அய்யோ என்று அலறியபடி மாடிக்கு ஓடினான். “என்னாச்சு?” இதுவரை நன்றாகத் தானே பேசிக் கொண்டிருந்தான்...இப்படி திடீரென எதுக்கு கத்திக் கொண்டு ஓடுகிறான்? அவளும் பின் தொடர்ந்தாள். அவன் பின்னே போனவள் அமிர்தாவை பார்த்தாள். இவள் தான் அமிர்தாவா? குச்சிக்கு உடை அணிந்தது போல் இருக்கிறாள். முடி மட்டும் காடு போல் விரிந்து இருந்தது. சரியாக பராமரிக்கப் படாததால் சிக்கும் பரட்டையுமாக மருதாணிக் கலரில் இருந்தது. அவள் கண்கள் உள்வாங்கி குழிக்குள் கோலி கூண்டு போல் இருந்தது. பணக்கார வீட்டுப் பெண் பஞ்சத்தில் அடிபட்டது போல் இருக்கிறாள்.
“அம்ரு...சாரிடா. உனக்கு பசிக்குமே. நான் ஒரு கோட்டிக்காரன். காணாததை கண்டது போல் இட்லியை முழுங்கிய ஆர்வத்தில் உன்னை மறந்துவிட்டேன்...மித்ரா ப்ளீஸ்...கொஞ்சம் ஒரு தட்டில் இட்லி சாம்பார் எடுத்து வரியா?”
அவள் ஓடிப் போய் எடுத்து வந்தாள். அம்ருதாவுக்கு அவன் ஊட்டிவிட்டான். ஊட்டிவிடும்போது அவன் கண்களில் ததும்பிய பாசத்தையும் ஒரு வித சோகத்தையும் பார்த்தாள். அஸ்தமிக்கும் சூரியனும் உதயமாகும் சந்திரனும் ஒரு சேர வந்தது போல் அந்தக் காட்சி இருந்தது. பாசம் அவள் சாப்பிடுவதைக் கண்டு. சோகம் அவள் இன்னும் குழந்தையாகவே இருக்கிறாளே என்று நினைத்து. தங்கையின் வாயை தண்ணீர் கொண்டு துடைத்து துண்டால் ஒற்றி எடுத்தான்.
“:அம்ரு…..இது தான் மித்ரா. உன்னை கவனிக்க வந்த நர்ஸ். மித்ரா....இது தான் என் தங்கை. இவளை ஒரு பத்து மணி வாக்கில் வெந்நீரில் குளிக்க வை.” என்று அவன் சொன்னதும் அவள் வியப்படைந்தாள்.
“இந்த வெயில் காலத்தில் கூடவா?”
“எவ்வளவு சூடு வேணாலும் தாங்குவா. குளிர் தான் அவளுக்கு ஆகாது.”
“உங்க அம்மா பேர் என்ன?”
“எதுக்கு கேக்ற?”
“உங்க பெயர் மோகனப் பிரியன். அழகாகவும் இருக்கீங்க. ப்ரியமாகவும் இருக்கீங்க. உங்க தங்கை முகம் பால் போல் வெகுளியா இருக்கு. அமிர்தம்ங்கற பெயர் பொருத்தம் இருக்கு. அதான் உங்க அம்மா பெயர் கேட்டேன்..”
“அவங்க பெயருக்கும் அவங்களுக்கும் சம்பந்தமே இல்லை....”
“அப்படி என்ன பெயர்?”
“தாயம்மாள்....”
தாய்மைக்குரிய அழகான பெயர். அப்ப...அவள் தாயாக இல்லை என்கிறானா? அதெப்படி? ஒரு தாய், தான் பெற்ற குழந்தைகளுக்கு தாய்மையை காட்டாமல் இருப்பாளா? அது சரி சில தாய், பேய்கள் போல் இந்தக் காலத்தில் இருக்கிறார்களே! பெற்ற குழந்தைகளை கொலை செய்துவிட்டு காதலனுடன் ஓடுகிற பிறவிகளை இந்த ஜன்மத்திலே பார்க்கும் துர்பாக்கியம், இந்த தலை முறையினருக்கு வந்துவிட்டது. பௌர்ணமியைப் பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லையே! எந்தப் புற்றில் எந்தப் பாம்போ? எல்லாம் புது தினுசாக இருக்கே...இவ்வளவும் அவள் யூகித்துக் கொண்டிருக்க...அவன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்கு உரைத்ததும்
“எதுக்கு அப்படி பார்க்கிறீங்க?.....கண் விழுந்திடப் போவுது...”
“விழட்டும்....உன்னைப் பார்க்கும் பாக்கியம் பெற்ற கண்கள் பிறகு பார்வை இழந்தாலும் பரவாயில்லை...”
“ஆனால் நான் பாக்கியம் செய்யவில்லையே..”
“என்ன குறை தங்களுக்கு மேடம்?”
“இங்கே வெளிச்சமில்லை...உயிரோட்டம் இல்லை..களை இல்லை. கலை இல்லை. மொத்தத்தில் இது நரகம். சொர்க்கம் போன்ற நரகம்.”
“எல்லாத்தையும் சரி செய்ய தான் நீ வந்திருக்கியே. புலம்பாதே. நான் உனக்கு டானிக் மாதிரி. பலவீனம் அடையும் போதெல்லாம்...” என்று அவன் அவளை நெருங்கினான். அவள் எழுந்து கொண்டாள்.
“அமிர்தாவுக்கு என்ன? முதல் நாளே இப்படி ஒரு சோகத்தை பார்க்க கஷ்டமா இருக்கு. என் வேலை என்ன? தெளிவா சொல்லுங்க..”
“தெளிவா? எங்களுக்கே குழப்பமா இருக்கு. அவளுக்கு பல கற்பனைகள். யாரோ அவளை எதுவோ செய்ய வருகிற மாதிரி....அப்பாவை கண்டாலே வெறுக்கிறாள். அமிர்தா அவரை கண்டு ஏன் பயப்படுகிறாள் என்றே தெரியவில்லை. அப்பா ரிஷி மேல் அவள் உயிரையே வைத்திருந்தாள். இப்ப எல்லாம் மாறிவிட்டது. கடந்த மூணு மாசமாக நாங்க நரகத்தை பார்க்கிறோம்.”
”உங்க அப்பா ரிஷி இப்போ எங்கே?”
“அவரா? எல்லாத்துக்கும் காரணமான அவர் குஷாலாக தன் மகன் வீட்டில் இருக்கார்...நாங்க கிடந்து அவஸ்த்தைப் படுகிறோம்.”
“என்ன சொல்றீங்க? மகன் வீட்டில் இருக்காறா? எனக்கு ஒன்னும் புரியலை.”
“அவர் என்னைப் பெற்ற தந்தை இல்லை.”
“பின்னே?”
“மை ஸ்டெப் ஃபாதர். அம்மாவின் இரெண்டாவது புருஷன்...”
“அப்படியா? உங்கப்பா?”
“காணாமல் போனவர் தான். போனவன் போனான்டி. அது பத்தி எங்களுக்கு கவலையில்லை. குடிகார கேப்மாரி அப்பா எப்படி போனால் என்ன?.”
மித்ரா திக்கென்று உணர்ந்தாள். இதற்குப் பெயர் தான் ப்ரோக்கன் ஃபாமிலி என்பதோ? அடடா...அவலச் சுவை நிறைந்த, ஒரு மர்ம கதை கேப்பது போலிருக்கு. மேலும் மர்மங்கள் இருக்கு என்று அவளுக்கு அப்பொழுது தெரிந்திருக்க நியாயமில்லை. இரண்டு வாரம் ஓடியும் அவளுக்கு இன்னும் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலவே இருந்தது.
காவுகள் தொடரும்