கனவு மலர்கள் அத்தியாயம்—6
அன்று வீடு பரபரப்பாக இருந்தது. கஸ்தூரியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வரப் போகிறார்கள். கஸ்தூரிக்கு முகமெல்லாம் பூரிப்பு. தனக்கு கல்யாணமே நடத்காது என்று அவள் தீர்மானித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. எந்த வரணும் நகை வேண்டாம் வரதட்சணை வேண்டாம் என்று வரவில்லை. கடைசியாக வந்த வரன் கஸ்தூரிக்கு பிடித்திருந்தது. மத்திய சர்காரில் வேலை. மாப்பிள்ளை போட்டோவில் நல்ல லட்சணமாக தெரிந்தார். ஆசையை அடக்க மாட்டாமல் கல்யாணி விமலாவிடம் பேசினாள்.
“விமலா...காரைக்குடியிலிருந்து ஒரு வரன். பையன் போஸ்ட் ஆபிசில் நல்ல வேலை...கஸ்தூரியை பார்க்க வரச்சொல்லவா?”
தயங்கித் தயங்கி மாமியார் பேசியதைக் கேட்டு மருமகள் முகம் சுளித்தாள். மறுபடியும் ஆரம்பித்து விட்டார்களா? நாயகம் கேட்டுக் கொண்டிருந்தான். எதுவும் பேசவில்லை.
“முதல்லே எவ்வளவு சீர் கேப்பாங்கன்னு சொல்லுங்க. அப்புறம் அவங்க வரலாமா வேண்டாமான்னு சொல்றேன்.” என்றாள்.
“நாப்பது பவுன் கேக்றாங்க. கல்யாணம் அவங்க பண்ணிவிடுவாங்களாம். கையிலே கேஷ் இரண்டு லட்சம் தந்தா போதுமாம். முன்னே பின்னே இருந்தாலும் பரவாயில்லை முடிச்சிடலாம் விமலா...”
“முடிச்சிடுங்க...நானா வேண்டாம்கறேன்?. உங்க மகனுக்கு இப்ப நெருக்கடி. லோன் போட முடியாது. என்னாலும் இந்த அளவு செலவு பண்ணமுடியாது. வேணா அம்பதாயிரம் தரேன். அவ்வளவு தான் முடியும்.”
“இப்படி சொன்னா எப்படி விமலா? பார்த்து செய்...அவளுக்கும் வயசாயிட்டே இருக்கு...” என்று கல்யாணி இழுத்தாள்.
“அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? வயசாவதை தடுக்க முடியுமா? அத்த நீங்க இந்த வரனை முடியுங்க. கடனோ உடனோ வாங்குங்க. இல்லை உங்க பணக்கார அண்ணனிடம் கெஞ்சி கூத்தாடி பாருங்க....அவருக்கும் செய்ய வேண்டிய பாத்தியதை இருக்கில்லே...”
அலட்சியமாக சொல்லிவிட்டு நகர்ந்து விட்டாள். பெண் பார்க்க வராமலேயே நிறைய வரன்கள் நழுவின. காலம் ஓடிவிட்டது. வெறும் பெண்ணை யார் கல்யாணம் பண்ண தயாராக இருக்கிறார்கள்? அண்ணனே தன் மகனுக்கு பணக்கார இடமாகப் பார்த்து கல்யாணம் செய்துவிட்டான்.
“பஞ்சப் பாராரி குடும்பமான உங்க தங்கச்சி மகளை முடிக்க நினைத்தால் நான் தூக்குப் போட்டுப்பேன்...” என்று பயமுறுத்தி இருந்தாள் அண்ணி மயிலம்மா. அப்புறம் எப்படி அண்ணனிடமிருந்து உதவி கிடைக்கும்? கல்யாணி ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தாள். இந்த வரன் தட்டிப் போகக் கூடாது. கஸ்தூரிக்கு இருபத்தெட்டு வயதாகிவிட்டது. இனியும் தாமதித்தால் இரெண்டாம் கல்யாணம் தான் பண்ண வேண்டி வரும்.
“ராட்சசி...ஈவு இரக்கம் இல்லாதவ..” என்று மாலா பொருமினாள்.
“அவளை சொல்லி என்ன பயன்? உன் அண்ணனே இதுக்கு உடந்தை. உங்கப்பாவுக்கு கரோனா வைரஸ் பத்தி, பத்தி பத்தியா படிக்கவும் பேசவும் தெரியும். இங்கே பத்தி எரியிற விஷயம் புரியாது. நான் என்ன பண்ணுவேன்?” என்று கல்யாணி புலம்பினாள். அவள் கண்கள் குளமாகின.
“அம்மா...அவர் கிடக்கிறார் விடு. மித்ரா அக்காகிட்டே சொல்லு. அவ ஏதாவது ஏற்பாடு செய்வா?” என்றாள் மாலா.
“அவ இப்பதானே வேலையில் சேர்ந்திருக்கா. முதல் மாச சம்பளம் கூட வாங்கலை. எப்படி அவளால் இவ்வளவு பெரிய தொகையை தரமுடியும்?”
“கேட்டுப் பாரும்மா...”
கல்யாணிக்கு சங்கடமாக இருந்தது. பொறுப்பான தந்தை எனக்கென்ன என்று இருக்கும்போது மகளிடம் பாரத்தை சுமத்துவது நியாயமா? வேறு வழி இல்லாமல் மித்ராவுக்கு போன் செய்தாள்.
“அம்மா எப்படி இருக்கீங்க? மாலா, கஸ்தூரி அக்கா, தம்பி பிரபு எல்லாம் நலமா?” என்று மகள் படபடப்புடன் விசாரித்தாள். அவளுக்குத் தான் இவர்கள் மேல் எவ்வளவு அன்பு? தகவல் சொல்லவே தயக்கமாக இருந்தது.
“என்னம்மா? ஏதாவது பிரச்னையா?”
“அதெல்லாம் இல்லை மித்ரா. கஸ்தூரிக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு..”
“அப்படியா? ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. மாப்பிள்ளை என்ன பண்றார்? குடும்பம் எப்படி? பார்க்க நன்றாக இருக்காரா? அக்காவுக்கு பொருத்தமா?...”
அடுக்கடுக்கான ஆர்வக் கேள்விகள் கல்யாணிக்கு தெம்பைத் தந்தது. எல்லா விவரமும் சொன்னாள்.
”நாப்பது பவுன் போடணுமாம். உன் அண்ணி அம்பதாயிரம் தரதா சொன்னா...மற்றபடி என் கிட்டே இருபது பவுன் இருக்கு. மேற்கொண்டு என்ன செய்யறதுன்னு தெரியலை...”
“அம்மா...கவலைப் படாதே. எப்படியாவது இந்த வரனை முடி. மாப்பிள்ளை வீட்டாரை அக்காவை பார்க்க வரச் சொல்லுங்க. அவங்க கேட்டபடி போட்டிடலாம். நான் ஏற்பாடு பண்றேன்...”
“மித்ரா..இது விளையாட்டில்லை. நீயே அங்கு வேலையில் சேர்ந்து ஒரு மாசம் கூட ஆகலை. எப்படி பணம் கிடைக்கும்? வாக்கு கொடுத்துவிட்டு பின்னால் அசிங்கப்பட்டு விடக் கூடாது. ஆதங்கமா இருந்தது அதான் உன் கிட்டே சொன்னேன்.” கல்யாணி பெருமூச்சுடன் சொல்லி முடித்தாள்.
“அம்மா...யாரும் கையிலே பணத்தை வச்சுக்கிட்டு கல்யாணம் முடிவு பண்ணறதில்லை. பெரிய பணக்காரங்க கூட பணத்துக்கு ஏற்பாடு பண்ண வேண்டிதான் இருக்கும். நிலத்தை விப்பாங்க. வங்கியில் லோன் போடுவாங்க. இப்படித் தான் சமாளிப்பாங்க. நீ கவலைப்படாதே நான் வங்கியில் லோன் போட்டுத் தரேன். முதல்லே மாப்பிள்ளையை வரச் சொல்லு.”
“நிஜமாத் தான் சொல்றியா? லோன் கிடைக்கலைன்னா?”
“அக்கா கல்யாணம் நடக்கும். அண்ணி விமலா வியக்கும் வண்ணம் ஜாம் ஜாம்னு நடக்கும். நீ ஆகவேண்டியதைப் பார்.”
மித்ரா இப்படி சொல்லிவிட்டு அண்ணி விமலாவிடம் பேசினாள்.
“அண்ணி....நீங்க அக்கா கல்யாணத்துக்கு நகை போடுறீங்க. நான் இரண்டு லட்சத்துக்கு ஏற்பாடு பண்றேன்...சரியா?”
“ஒ...எனக்கு ஆர்டர் போடறியா? நான் அம்பதாயிரம் தரேன். அதுக்கு மேலே ஒரு பைசா தர மாட்டேன். இருபது பவுன் என்ன வெலைன்னு தெரியுமா உனக்கு? என்னை என்ன இளிச்ச வாயின்னு நினைச்சியா?”
“அண்ணி...உங்களுக்கு வேறு வழி இல்லை. நீங்க போட்டு தான் ஆகணும். போட வைப்பேன். பிறகு அந்தக் கடனை நான் கொஞ்சம் கொஞ்சமா அடைப்பேன். ஸோ உங்களுக்கு என்ன கஷ்டம்?”
“நீ அடைப்பியா? பெரிய கவர்மென்ட் வேலே பார்கிறே. நாளைக்கே உன்னை துரத்திட்டா.....எங்கிருந்து அடைப்பே? நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன். என்னை நம்பி நீங்க வாக்கு கொடுக்காதீங்க. கல்யாணம் நின்றுவிடும்.” என்று எச்சரித்தாள். இந்தப் பெண்ணுக்கு எவ்வளவு திமிர்!
“பார்க்கலாமா? பொண்ணு பார்க்க வரவங்க கிட்டே நீங்களே நகை போடறேன்னு ஒதுக்க வைக்கிறேன்..” என்று சவால் விட்டாள் மித்ரா.
“இந்த ஆண்டின் சிறந்த ஜோக். ஒரு காலும் நடக்காது.”
“நடக்கும்...” சொல்லிவிட்டு ஃபோனை வைத்து விட்டாள் மித்ரா. கல்யாணிக்கு இதெல்லாம் தெரியாது. மித்ராவுக்கும் விமலாவுக்கும் நடந்த சவால் பற்றி அவள் அறியவில்லை கல்யாணிக்கு நம்பிக்கை இல்லை தான்....இருந்தாலும் வேறு வழி இல்லாமல், கடவுள் மேல் பாரத்தை போட்டு தரகரிடம் தாங்கள் இந்த டீலுக்கு ஒத்துக் கொள்வதாகச் சொல்லி பெண் பார்க்க ஏற்பாடு பண்ணச் சொன்னாள். இதோ அவர்கள் வரும் நேரமும் நெருங்கிவிட்டது.
வாசலில் கார் வந்து விட்டது. மாப்பிள்ளை இறங்குவதைப் பார்த்தாள் மாலா. பிரபுவும் பார்த்தான். மாப்பிள்ளையின் அப்பா கம்பீரமாக இறங்கி வந்தார்..
“அவர் என்னவோ பாடியபடி வராரே.” என்றான் பிரபு.
“வேறு என்ன பாடுவார்? வேல் முருகனுக்கு மொட்டை ஒண்ணு போடப் போறேண்டி...நம்ம அப்பா பேர் தான் வேல்முருகனாச்சே...மொட்டை அடிக்க வந்திருக்கும் கும்பல்..” மாலா வெறுப்புடன் சொன்னாள்.
“அந்த அம்மாவை பார்...அசல் பீரங்கி உருண்டு வரா மாதிரி இல்லை?”
“கரெக்டா சொன்னேடி....ரோடு ரோலர்னு கூட சொல்லலாம்.”
அங்கே வந்த கஸ்தூரி தானும் ஜன்னல் வழியே பார்த்தாள். அவளுக்கும் சிரிப்பு வந்தது. இருந்தாலும் அடக்கிக் கொண்டு சொன்னாள்.
“ஏய் வால்களா...போய் அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணுங்க. இங்கே நின்னு அநாகரீகமா விமர்சனம் பண்ணிக்கிட்டு. உத வாங்குவீங்க.”
“அடடா...வருங்கால மாமியாரையும் மாமனாரையும் சொன்னதும் கோபம் பொத்துக்கிட்டு வருது அக்காவுக்கு...” என்று கேலி செய்தனர்.
“பின்னே நீங்கள்ளாம் தான் என்னை துரத்த ஏற்பாடு பண்றீங்க. அவங்க தானே எனக்கு காலமெல்லாம் உறவா இருப்பாங்க..”
விமலா வந்து சேர்ந்தாள். “பார்ட்டி நல்ல வசதின்னு தெரியுது. மாப்பிள்ளை பையன் ஷோக்கா இருக்கான். வால் மாதிரி அவன் நண்பன் கூட வரான். நான் சொல்றேன் இவங்க கஸ்தூரியை வேண்டாம்னு சொல்லப் போறாங்க. இந்தக் கல்யாணம் நடக்காது. நீங்க என்ன சொல்றீங்க?”
விமலாவின் மனம் பொறாமையில் வெடித்துக் கொண்டிருந்தது. அவளை இது நாள் வரை துதி பாடிக் கொண்டிருந்தவர்கள் இன்று நிமிர்ந்துவிட்டார்கள். அவள் இன்றி அணுவும் அசையாது என்ற நிலையிலிருந்து எல்லாமே மாறிவிட்டது. தன் பிடி போய்விட்டதில் விமலா உள்ளுக்குள் பொருமினாள். மித்ராவை வேலைக்கு அனுப்பியதற்காக இப்பொழுது வருந்தினாள். நாலு காசு சம்பாத்தியம் வந்ததும்...அது கூட இன்னும் முதல் மாதச் சம்பளம் கூட வரவில்லை இந்த தர்பார் பண்ணுகிறார்களே! வயத்தெரிச்சல் தாளாமல் அவள் அப்படி சொன்னதை யாரும் சட்டை செய்யவில்லை.
“திமிரை பார்த்தீங்களா உங்க தங்கச்சிகளுக்கு...” என்று கணவனிடம் கிசுகிசுத்தாள். அந்த மடையன்
“பார்ப்போம் இந்த இடம் எப்படி செட்டாகிறதுன்னு? கலச்சிட மாட்டேன்...”
இதற்குள் மாப்பிள்ளை வீட்டார் உள்ளே வரவேற்கப்பட்டு உபசாரம் தொடர்ந்து நடக்கிறதை பார்த்தாள் விமலா. கஸ்தூரி காப்பி கொடுத்து வணங்கி விட்டு சென்றாள்.
“பொண்ணை பிடிச்சிருக்கு...முகூர்த்த நாள் குறிக்கலாம்...” மாப்பிள்ளை வீட்டார் மகிழ்ச்சியுடன் சொல்ல கல்யாணி நல்ல நாள் பார்க்க பஞ்சாங்கம் தேடி ஓடுகிறாள். விமலா தொண்டையை கணைத்துக் கொண்டு,
“லௌகிக விஷயங்கள் பேச வேண்டாமா? அப்புறம் பிரச்சனை ஆகிடக் கூடாதில்லையா?” என்று சாமர்த்தியமாக பேச்சை ஆரம்பித்தாள். மாப்பிள்ளையின் அம்மா கனகவல்லி புன்னகையுடன் விமலாவைப் பார்த்தாள்.
“விமலா.....உன் ஒன்று விட்ட சித்தப்பா சந்தானம் வழி சொந்தம் நாங்க. அப்புறம் உன்னுடன் வேலை பார்க்கிற சௌந்தரம் எங்க நாத்தனார் பொண்ணு ரேவதியோட அண்ணி. நாம நெருங்கிட்டோம்...” என்றாள். விமலாவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. சௌந்தரம் போல் வாயாடி அந்த அலுவலகத்தில் யாரும் இல்லை. எல்லோர் வீட்டு விஷயத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து விடுவாள். விமலாவுக்கு அவள் வாயில் விழுந்து விடக் கூடாதே என்று எப்பவும் ஓரு பயம உண்டு. அவளுக்கு சுத்தி வளைச்சு சொந்தமா இதுகள் என்று சோர்வுடன் நினைத்தாள். பயத்தை அடக்கிக் கொண்டு,
“அப்படியா...ரொம்ப சந்தோஷம். இருக்கட்டும். நகை நாப்பது பவுன்...”
“அம்மா விமலா...நீ ரொம்ப பெரிய மனசுடையவ. உன் நாத்தனார் மித்ரா எல்லாம் சொன்னாள். நீ இருபது பவுன் போடறதா சொல்லி இருக்கியாமே. உன் புருஷன் தங்கை கல்யானதுக்குகாக இரண்டு லட்சம் தருவதா சொல்லிட்டாராமே! இவ்வளவு பாசமான குடும்பத்தை பார்த்து அசந்துட்டேன். இங்க தான் சம்பந்தம் பண்ணிக்கணும்னு முடிவே பண்ணிட்டேன்...”
விமலா பெரிதாக அதிர்ச்சி அடைந்தாள். அந்தம்மாள் மேலும் மேலும் புகழ்ந்து தள்ளினாள். தடுமாறிப் போனாள் விமலா. இந்த சமயம் சௌந்தரம் போன் பண்ணினான்.
“விமலா...இப்ப தான் கேள்விப் பட்டேன் உன் நாத்தனார் மித்ரா சொன்னாள். உன் பெரிய நாத்தனார் கல்யாணத்துக்கு இருபது பவுன் போடறதா ஒத்துக்கிட்டியாமே? இங்கே எல்லோருக்கும் உன் நல்ல மனசை பத்தி சொன்னேன். போ....உனக்கு ஒரே புகழ் மாலை தான். உன் கணவர், தங்கைக்காக இரண்டு லட்சம் தர்றதா சொல்லியிருக்கார். உன்னை நினச்சா பெருமையா இருக்கு....இப்ப தான் கனகவல்லி அம்மா சொன்னங்க. சரி வச்சிடவா. வந்ததும் ஒரு பார்ட்டி கொடுக்கணும்...”
விமலாவுக்கு வேறு வழி இருக்கவில்லை. அவள் ஒத்துக் கொள்ளாவிட்டால் அலுவலகத்தில் அவள் மானம் போகும். அந்த சித்தப்பா சந்தானம் ஆல் இண்டியா ரேடியோ....இந்நேரம் இந்த நியூஸ் நாலாப் பக்கமும் பரவி இருக்கும். விமலா செய்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையை எவ்வளவு சாமர்த்தியமாக மித்ரா உருவாக்கி விட்டாள். தேதி குறித்துவிட்டு அனைவரும் சந்தோஷமாக விடை பெற்றனர்.
“விமலா...வரோம்மா. உன்னைப் போல் மருமகள் எல்லோருக்கும் கிடைச்சா மாமியார் மருமகள் சண்டையே இருக்காது. கஸ்தூரி எங்க மருமகளா கிடைக்க நாங்க கொடுத்து வச்சிருக்கணும். நல்ல குடும்பம். அருமையான மனிதர்கள். இதை விட வேறு என்ன வேண்டும்?”
புகழ்ந்துவிட்டு அவர்கள் சென்றதும் விமலா முகம் கோபத்தால் சிவந்தது. விருட்டென்று தன் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள். கணவனுடன் கூட பேசவில்லை. அவமானமும் தோல்வியும் அவளை நிலைகுலைய வைத்தது. மித்ரா ஃபோன் செய்தாள்.
“அண்ணி ரொம்ப தேங்க்ஸ். நகை போடவும் பணம் கொடுக்கவும் ஒத்துக்கிட்டீங்களாம். இப்ப தான் கஸ்தூரி அக்காவின் வருங்கால மாமியார் சொன்னாங்க...”
“எல்லாம் உன் வேலை தானே?. தெரியும். என்னை கானர் பண்ணிட்டதா பெருமை பட்டுக்காதே. உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா அந்த சௌந்தரம் கிட்டே பேசி என்னை சம்மதிக்க வச்சிருப்பே... இதுக்கு நீ ஒரு நாள் படுவே. உன்னை சும்மா விட மாட்டேன். ஐ வில் மேக் யூ பே பார் இட்.”
“அண்ணி...நான் இப்படியெல்லாம் செய்து உங்களை மாட்டிவிடணும்னு நினைக்கலை. உங்க கடமையை நீங்க செய்திருந்தால் நான் ஏன் இப்படி செய்திருக்கப் போறேன்?. ஏதாவது தப்பா செய்திருந்தா என்னை மன்னிச்சிடுங்க.”
“ஆகா...என்ன ஒரு நல்ல மனசு. பாம்பு நியாபகம் தான் வருது. விஷத்தை கக்கிட்டே. பார்த்துக்கிறேன். ஒண்ணு நியாபகம் வச்சுக்க. அந்தக் கடனை நீ அடைக்கறதா ஒத்துக்கிட்டே. எனக்கு ப்ரோ நோட்டு எழுதிக் கொடுக்கணும். பத்து மாசத்திலே அடைக்கணும் இல்லே நீ ஜெயிலுக்கு தான் போணும். உன் மேல் கேஸ் போட்டிடுவேன். ஜாக்கிரதை.....”
“கண்டிப்பா அடைச்சிடுவேன். மறுபடியும் தேங்க்ஸ் அண்ணி. ஒரே ஒரு வேண்டுகோள்.”
“என்ன?”
“ஏதாவது செய்து கல்யாணத்தை நிறுத்திடாதீங்க. என் தலையை அடகு வச்சாவது உங்க கடனை அடைச்சிடுவேன். பிளீஸ் அண்ணி...”
“நான் அவ்வளவு சீப்பானவ இல்லை. நான் கஸ்தூரி கல்யாணத்துக்கு கொடுக்கும் நகையையும் பணத்தையும் நீ பத்து மாசத்துக்குள் திருப்பிக் கொடுக்கணும். ஏமாத்தலாம்னு பிளான் போட்டே......உன்னை கோர்டுக்கு இழுப்பேன்.”
“அப்படி ஒரு நிலைமை வரவே வராது. மறுபடியும் தேங்க்ஸ் அண்ணி.”
கஸ்தூரி கல்யாணம் சிறப்பாக நடந்து முடிந்தது.
“மித்ரா உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. நீ இல்லாட்டி எனக்கு கல்யாணமே நடந்திருக்காது.” தங்கையின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் மல்க சொன்னாள் கஸ்தூரி. விமலா இதை வெறுப்புடன் பார்த்தாள். பணம் கொடுத்தது நானு. நன்றி அவளுக்கா? என்று பொருமினாள்.
கனவுகள் தொடரும்