கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காதலின் மாயவிசை... அத்தியாயம் 08... கதை திரி

Arjun

Moderator
Staff member
காதலின் மாயவிசை 08...

தளபதியுடன் சென்ற குழலி தளபதியிடம் இருந்து பருவியை பெற்று கொண்டு பருவியில் அமர்ந்து சிவியை பின்தொடர்ந்து கொண்டிருந்தாள். சிவியின் மீது அமர்ந்து வந்த சித்தார்த் அடிக்கடி குழலியை திரும்பி பார்த்து கொண்டே வந்தான். சிவி பாய்ந்து செல்லும் வேகத்தில் அதன் மீது அமர்ந்திருக்கவே சித்தார்த் கஷ்டப்பட லியாடோவோ சிவியின் மீது சுற்றப்பட்டிருந்த கயிறை இறுக்கமாக பற்றி கொண்டு சிவியின் மீது சாதாரணாமாக அமர்ந்திருந்தான். சித்தார்த் குழலியை பார்ப்பதை கவனித்த லியாடோ "நண்பா நீ அடிக்கடி குழலியை பார்ப்பதை மட்டும் அவள் கண்டாள் பருவியிலிருந்தவாறே அவள் வீசும் கத்தி உன் இரு விழிகளையும் குருடாக்கிவிடும்"..

சித்தார்த்திற்கு லியோடோவை பார்த்தவுடன் ஏனோ பிடித்து போனது. அதனால் "அட ஏன் நண்பா பாவம் அந்த பொண்ணை அந்த தளபதி ரொம்ப அழ வச்சுட்டான் அதா திரும்பி பார்த்தே. வேற ஒண்ணுமில்ல".. லியாடோவிற்கும் சித்தார்த் குழலியின் மீது அக்கறை எடுத்து கொண்டதை பார்த்து சித்தார்த்தை பிடித்து போனது.

இருவரும் தங்களின் உலகை பற்றி பேசிக் கொண்டே வர சித்தார்த் மற்றும் லியாடோவிற்கு இடையில் ஒரு நட்பு உருவாக ஆரம்பித்தது. இவர்களின் பயணம் அமைதியாய் சுவான் ராஜ்ஜியத்தை நோக்கி தொடர்ந்து கொண்டிருக்க சுவான் ராஜ்ஜியத்திலோ முக்தா மற்றும் லியாடாவிற்கு எதிரான சதி வலைகள் பின்னப்பட்டுக் கொண்டிருந்தது. சுவான் ராஜ்ஜியத்தின் கோட்டையில் சுவான் இன இளவரசர்களில் ஒருவனான சுகீர் கோபத்தின் உச்சியில் இருந்தான். சுகீர் தன் எதிரே இருந்த மாய கண்ணாடியில் தெரிந்த மைஜித்தை பார்த்து கோபமாக திட்டி கொண்டிருந்தான்.

சுகீர் "உன்னிடம் கூறிய ஒரு சிறு வேலையை கூட உன்னால் சரியாக செய்ய முடியாதா. நான் உன்னிடம் என்ன கூறினேன். மதிலை இளவரசியை கைது செய்து நல்லவன் போன்று நயவஞ்சகமாக பேசி அவளின் நம்பிக்கையை பெற்று அவளோடு உன் வீரர்களில் ஒருவனை அனுப்பி வை என்று தானே கூறினேன். இந்த சின்ன வேலையை கூட சரியாக செய்யாமல் உனது தம்பியை அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளாய். அவனை பற்றி உனக்கே தெரியும் அவன் மட்டும் இங்கே வந்தால் ஏதாவது செய்து நமது திட்டங்கள் அனைத்தையும் கெடுத்து விடுவான். பிறகு நான் மட்டுமல்ல நீயும் உன் ராஜ்ஜியத்தை இழக்க நேரிடும்"..

மைஜித் தன் குடிலிலுள்ள மந்திர கண்ணாடியின் வழியாக அவனும் பேச ஆரம்பித்தான் "சுகீர் நான் என்ன செய்ய எல்லாம் சரியாக தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் எதிர்பாரா நேரம் லியாடோ வந்துவிட்டான். அப்போதும் கூட நான் சமாளித்து பார்த்தேன் அதற்குள் மதிலை வீரர்கள் எங்களை சுற்றி வளைத்து விட்டனர். அதற்க்கு மேல் நான் என்ன செய்ய முடியும்". என்பவனை பார்த்து ஆத்திரத்தோடு சுகீர் மந்திரத்தை கூற கண்ணாடியில் தெரிந்த மைஜித்தின் உருவம் மறைந்தது. கோபம் கொண்ட சுகீர் கையில் கிடைத்த அனைத்தையும் உடைக்க ஆரம்பித்தான்.

இளவரசன் சுகீர் சுவான் இன மக்களுக்கே உரிய பதின்மூன்று வயது சிறுவனை போல் மூன்றடி உயரத்தில் உடல் முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்திலிருந்தான். அவன் தலையிலுள்ள முடியானது மஞ்சள் நிறத்தில் மிளிர முகத்தில் புருவத்தை தவிர வேறு எங்கும் ரோமங்கள் இன்றி சிறுவனின் முகத்தை போன்று இருந்தது. கரு விழிகளும் உடலில் ஆங்காங்கே வளர்ந்திருந்த ரோமங்களும் அடர் மஞ்சள் நிறத்தில் பிரகாசிக்க உயரத்தில் பதின்மூன்று வயது சிறுவனை போன்று இருப்பினும் உடலானது கட்டுமஸ்தாக மாபெரும் வீரனை போன்ற தோற்றத்தில் காட்சியளித்தான்.

சுகீர் "ராஜகுரு நான் உங்களிடம் எத்தனை முறை கூறினேன். அந்த மைஜித்தை நம்பாதீர்கள் அவன் எதற்கும் உதவாத மூடன் என்று ஆனால் நீங்கள் தான் என் பேச்சை கேட்காமல் அவனை நம்பினீர்கள். இப்போது பாருங்கள் முக்தாவுடன் சேர்த்து அவன் வீரர்களில் ஒருவனை அனுப்ப சொன்னால் அவனது தம்பி லியாடோவை அனுப்பி உள்ளான். அந்த மூடன் மைஜித் செய்த செயலால் நமது திட்டங்களை நிறைவேற்றுவது என்பது மிகவும் கடினமாகிவிட்டது".

ராஜகுரு "இளவரசே தாங்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. லியாடோ இங்கு வருவதால் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உங்களின் மந்திர சக்திகளின் முன்பு அவன் ஒரு சிறுவன். நீங்கள் தைரியமாக இருங்கள் நாம் எதிர் பார்த்ததை விட வேகமாக சூழ்நிலை நமக்கு சாதகமாக மாறும்" என்று கூறி சுகீரை சமாதானப் படுத்த முயன்றார்.

ராஜகுரு கூறியதில் சமாதானம் ஆகாத சுகீர் "ராஜகுரு நீங்கள் லியாடோவை பற்றி சரியாக தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறீர். லியாடோ ஒரு கிறுக்கன் அவன் எப்போது என்ன செய்வான் என்று யாருக்கும் தெரியாது. முட்டாள் தனமாக அவன் செய்கிறான் என்று எண்ணும் பல காரியங்கள் இறுதியில் அவனுக்கு சாதகமானதாகவே இருக்கும். லியாடோவை பற்றி நான் நன்கு அறிந்ததால் தான் மைஜித்திடம் பலமுறை கூறினேன் உன் வீரர்களில் ஒருவனை அனுப்பு எந்த சூழலிலும் உனது சகோதரனை அனுப்பாதே என்று ஆனால் இறுதியில் லியாடோவையே அனுப்பி வைத்து விட்டான். இனிமேல் நமது திட்டங்களை மிகவும் கவனமாக செயல் படுத்த வேண்டும்"..

ராஜகுருவும் லியாடோவை பற்றி இதற்கு முன்பே கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால் தன்னை விட ராஜதந்திரி சார்ஸ்டின் உலகத்தில் யாருமில்லை என்ற அகந்தை அவரது கண்ணை மறைத்தது. எனவே லியாடோவை தவறாக எடை போட்டார். இருந்தும் சுகீரின் மன திருப்திக்காக ராஜகுரு "சரி இளவரசே நீங்கள் கூறியதை போன்று நான் மிகவும் கவனமாக நடந்து கொள்கிறேன் தாங்கள் எண்ணுவது போல் தாங்களே சுவான் மக்களின் அடுத்த அரசர்".. என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினார்.

நீண்ட தூரம் பயணிப்பதால் சிவி சோர்வத்தை உணர்ந்த முக்தா காட்டின் நடுவே இருந்த சமவெளி பகுதியை கண்டு சிவியை அங்கு நிறுத்தினாள். இவர்களை பின் தொடர்ந்த குழலி பருவியையும் இவர்களின் அருகில் தரை இறக்கினாள். முக்தா பின்னால் திரும்பி "நண்பர்களே சிவிக்கு ஓய்வு தேவை நாமும் உணவை உண்டு விட்டு ஓய்வெடுத்துவிட்டு சிறிது நேரம் கழித்து நாம் நமது பயணத்தை தொடரலாம்".. என்று கூறியவுடன் பச்சை கம்பளம் போர்த்தியவாறு இருந்த சமவெளியில் அனைவரும் அருகருகே ஒன்றாக அமர்ந்தனர்.

முக்தா தனது பையிலிருந்து நாவல் பழம் அளவிலுள்ள வெள்ளை நிறத்தில் சிறிய பந்து வடிவிலிருந்த பழங்களை எடுத்து அனைவருக்கும் பிரித்து கொடுத்தாள். சிவியும் அருகிலிருந்த பச்சை மரங்களை தன் துதிக்கையால் இரண்டாக உடைத்து சாப்பிட ஆரம்பித்தது. பருவியும் அருகில் உள்ள மரங்களின் பழங்களை சாப்பிட ஆரம்பித்தது. குழலி பழங்களை உண்டு கொண்டே சித்தார்த்தை பார்க்க அவனோ சாப்பிட மனமின்றி பழங்களையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான். குழலி சித்தார்த்தை பார்ப்பதை உணர்ந்த லியாடோ முகிலனிடம் "நண்பா சாப்பாட்டை பார்த்தால் மட்டும் பசி தீராது. அதை சாப்பிட்டால் தான் பசி தீரும் வேகமாக சாப்பிடுங்கள்" என்று கூறி கொண்டே குழலியிடமிருந்து ஒரு பழத்தை எடுத்து தன் வாயில் போட்டான். லியாடோ தன்னை பார்ப்பதை அறிந்து கொண்ட குழலி சித்தார்த்தை பார்க்காமல் பழத்தை பார்க்க ஆரம்பித்தாள்.

சித்தார்த்தின் மனம் முழுவதும் தன் நண்பர்கள் சாப்பிட்டார்களோ இல்லையோ அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று தெரியாமல் தவிக்க முக்தாவிடம் "முக்தா என்னோட நண்பர்களுக்கு ஒன்னும் ஆகாதுல" என்று கலங்கிய விழிகளுடன் கேட்டான். முக்தாவிற்கு சித்தார்த்தின் விழியில் தெரியும் வலி ஏதோ செய்தது. முக்தா கனிவான பார்வையுடன் "நீங்கள் கவலைப்படாமல் உணவை உண்ணுங்கள். உங்களது நண்பர்களை கண்டுபிடித்து கொடுப்பது என்னுடைய பொறுப்பு".. முக்தாவின் பதிலில் சித்தார்த்தின் மனம் சற்று நிம்மதியடைந்தது.

முக்தா புறம் திரும்பிய லியாடோ "இளவரசி எனக்கு சொந்தமான இசை கருவி தங்களிடம் உள்ளது அதை என்னிடம் திரும்ப தர இயலுமா".. என்று கேட்டவுடன் முக்தா புன்னகையுடன் தன் இடுப்பில் சுற்றியுள்ள துணியில் சுருட்டி வைத்திருந்த அந்த சிறிய இசை கருவியை எடுத்து லியாடோவின் கையில் கொடுத்தாள்.

முக்தா லியாடோவிடம் "ஏன் இந்த இசை கருவியை எனது கையில் கொடுக்காமல் அங்கு வைத்துவிட்டு சென்றாய்".. என்று கேட்டவுடன் என்ன நடக்கிறது என்று புரியாமல் சித்தார்த் லியாடோவையும் முக்தாவையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

லியாடோ "இளவரசிக்கு இங்குள்ளவரின் மீது நம்பிக்கை உள்ளதா என்ன ராஜ காரியம் என்று தெரிந்தும் அனைவர் முன்னிலையிலும் பேசுகிறீர்கள்" என்று கேட்டவுடன் முக்தாவோ "எனக்கு மட்டுமல்ல உனக்குமே இவர்களின் மீது நம்பிக்கை உள்ளதால் தானே இவர்கள் இருவரின் முன்னிலையில் உன் இசை கருவியை என்னிடம் கேட்டாய். நம்பிக்கை இல்லையென்றால் யாருக்கும் தெரியாமல் தானே கேட்டிருப்பாய்"..

லியாடோ "சித்தார்த்திடம் பேசி பார்த்த பின் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. உனக்கும் சித்தார்த்தின் மீது நம்பிக்கை உள்ளதா என்று சோதித்தேன் அவ்வளவு தான்".. முக்தா "சரி விஷயத்தை கூறு லியாடோ உனது தமையன் என்ன திட்டம் தீட்டியுள்ளான். நீ எவ்வாறு நேற்று அங்கு வந்தாய்"..

லியாடோ "முக்தா நாங்கள் யாரும் எதிர்பாரா நேரத்தில் அரக்கர்கள் தாக்குதல் நடத்தினர். ஆனால் மைஜித் இதை முன்னமே எதிர் பார்த்ததை போன்று அவனது விலைமதிக்க முடியாத பொருட்களை அரக்கர்களின் தாக்குதல் நடப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே பாதுகாப்பான இடத்தில் பதுக்கி வைத்துள்ளான். அதுவே என் மனதில் பல கேள்விகளை உண்டாக்க நீங்கள் வந்ததும் உங்களிடம் மைஜித் நடந்து கொண்டதை பற்றி என் ஒற்றன் கூறியவுடன் நிலைமையை புரிந்து கொண்டேன். இதற்க்கு பின்னால் ஏதோ சதித்திட்டம் உள்ளது என் மனதில் தோன்றியது. அதனால் தான் இரவே உங்களை தேடி வந்தேன். ஆனால் மைஜித்தின் நம்பிக்கைக்கு உரிய காவலர்கள் உங்களை கண்காணித்துக் கொண்டிருந்தனர். அதனால் காவலர்கள் உங்களை கண்காணிப்பது தெரிந்ததும் நீ மட்டும் அறிய வேண்டும் என்று இசை கருவியை வாசித்து நானும் இங்கு தான் உள்ளேன் என்று உன்னை உணர செய்தேன்.

நீயும் என்னை கண்டு கொண்டாய் ஆனால் உன்னோட ஒரு வீரனை என் தமையன் சுவான் தேசத்திற்கு அனுப்புவான் என்று நான் எண்ணவில்லை. நீங்கள் என் தமையனிடமிருந்து விடை பெற்று சென்றதும் உங்களை பின்தொடர்ந்து வந்து உங்களுடன் இணையலாம் என்பதே என் திட்டம். ஆனால் என் தமையனின் கண்ணெதிரே உங்களோடு சேர்ந்து வர வேண்டிய நிலை வந்துவிட்டது"..

குழலி "லியாடோ உன் தமையன் எதற்காக உங்கள் வீரனை எங்களோடு சுவான் ராஜ்ஜியத்திற்கு அனுப்ப நினைத்தான்"..

லியாடோ "குழலி நாளை நடக்க போகும் அனைத்தும் இன்றே தெரிந்து விட்டால் வாழ்க்கையின் மீது உள்ள சுவாரசியம் குறைந்து விடும். அதனால் நடக்க போவது அனைத்தும் நன்மைக்கே என்று வேடிக்கை பார்ப்பதே நல்லது".. லியாடோ கூறுவதை கேட்ட குழலி அதற்க்கு மேல் கேள்வி கேட்கவில்லை. இதற்கு மேல் கேட்டாலும் அவனிடமிருந்து வரும் பதில் கண்டிப்பாக உண்மையாக இருக்காது என்று குழலிக்கு நன்கு தெரியும். லியாடோ கூற விரும்பினால் மட்டுமே அவனிடமிருந்து தகவல் கிடைக்கும் இல்லையென்றால் யார் நினைத்தாலும் அவனிடமிருந்து தகவலை பெற முடியாது என்பது குழலிக்கும் முக்தாவிற்கு நன்றாகவே தெரியும்.

இவர்கள் பேசிக்கொள்வதை கவனித்த சித்தார்த்து லியாடோவிடம் "நீங்க மூனு பேரும் இதுக்கு முன்னாடி இருந்தே நண்பர்களா".. சித்தார்த்தின் கேள்வியில் சிரித்த லியாடோ "சித்தார்த் நாங்கள் மூன்று பேரும் சிறு வயது முதல் தோழர்கள்".. என்று கூறினான்.

சித்தார்த் லியாடோவின் கையிலிருந்த இசை கருவியையே பார்த்தவன். அந்த இசை கருவி பார்க்க வித்தியாசமாக இருக்கவும் சித்தார்த் லியாடோவிடம் அதை வாசிக்குமாறு கேட்டான். சித்தார்த் கேட்டவுடன் இசை கருவியை லியாடோ வாசிக்க ஆரம்பித்தான். அந்த கருவியின் துளைகளில் லியாடோ தன் இதழ்களை வைத்து மெதுவாக ஊதியவாறு அதன் மீது இருந்த ஓட்டைகளை தன் வளைந்த விரல்கள் கொண்டு மூடி மூடி திறக்க அவனது மூச்சுக்காற்றானது அந்த கருவியின் உதவியால் அற்புதமான இசையாக உருமாறி வெளியாகியது.

லியாடோ இசை கருவியை வாசித்து கொண்டே குழலியை பார்க்க அவளது விழிகள் சித்தார்த்தை சுற்றியே வட்டமிட மெதுவாக இசைப்பதை குறைத்து கொண்டே வந்தவன் வாசிப்பதை நிறுத்தினான். லியாடோ வசித்து முடித்தவுடன் சித்தார்த் "வாவ் லியாடோ சூப்பரா வாசிச்ச" என்று கூறி கைதட்டி சத்தமாக விசிலடித்தான். லியாடோ சித்தார்த்தை பார்த்து நன்றி கூறிவிட்டு "குழலி எப்படி இருந்தது என் இசை" இன்று கேட்க குழலி அதை கவனித்தால் தானே பதில் கூற அவளோ சித்தார்த்தின் முகத்தை அல்லவா ஆராய்ந்து கொண்டிருந்ததாள். எனவே சமாளிப்பாக "நன்றாக இருந்தது லியாடோ உன் அளவு இந்த கருவியை வாசிக்க சார்ஸ்டின் உலகத்திலேயே யாருமில்லை" என்று கூறினாள்.

குழலியின் பதிலில் அவளது கவனம் இதிலில்லை என்பதை உணர்ந்த சித்தார்த் தளபதி அவளை திட்டியதால் தான் குழலி சோகமாக இருக்கிறாள் என்று எண்ணியவன். "குழலி அந்த கருப்பு காண்டாமிருகம் மாதிரி இருந்த தளபதி திட்டுனதுக்கு ஏன்..." என்று அவன் கூற வந்த வாக்கியத்தை முடிக்கும் முன்பே தனது வாளை குழலி சித்தார்த்தின் கழுத்தில் வைத்திருந்தாள். குழலி "இன்னொரு முறை என் தந்தையை பரிகாசம் செய்யுமாறு பேசினால் உனது உடலிலிருந்து தலையை துண்டித்து விடுவேன் ஜாக்கிரதை".. குழலியின் வாள் சித்தார்த்தின் கழுத்தில் சிறு கீறலை உருவாக்கியது. குழலி தன் வாளை சித்தார்த்தின் கழுத்திலிருந்து எடுத்தவள் தன் உறையில் சொருகி கொண்டு அனைவரையும் விட்டு விலகி வேகமாக சிறிது தூரம் சென்று புல்வெளியில் அமர்ந்து கொண்டாள். முக்தாவும் குழலியை பின்தொடர்ந்து அவளருகில் சென்றாள்.

தளபதி தான் குழலியின் தந்தை என்று தெரிந்ததாலும் தன் கழுத்தில் கத்தியை வைத்தாலும் சித்தார்த் அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தான். சித்தார்த்தின் அருகில் வந்த லியாடோ "சித்தார்த் வார்த்தையை பிரயோகிக்கும் முன்பு சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அது இப்படி விபரீதத்தில் தான் முடியும்".

லியாடோ கூறியதை கேட்ட சித்தார்த்திற்கு தளபதி குழலியின் அப்பா என்பதால் தான் தளபதியின் மீது கோபம் கொண்ட போது லியாடோ தன்னை தடுத்தான் என்பது புரிந்தது. லியாடோ புறம் திரும்பியவன் "லியாடோ முன்னாடியே ஒரு வார்த்தை சொல்லிருந்தா நா பேசமா பழத்தை சாப்பிட்டுக்கிட்டு இருந்திருப்பேன்ல. நல்ல வேளை கொஞ்சம் விட்ருந்தா இந்நேரம் எனக்கு சங்குதா".. என்று உண்மையான பயத்துடன் தன் கழுத்திலிருந்த கீறலை தொட்டு பார்த்துக் கொண்டே கூறினான்.

லியாடோ "நண்பா கவலை கொள்ளாதே இப்போது ஒன்றும் அவ்வளவு பெரிய பிரச்சனை நிகழ்ந்து விடவில்லை. நீ குழலியிடம் மன்னிப்பு கேட்டாள் போதும் உடனே குழலி உன்னை மன்னித்து விடுவாள்"..

லியாடோ கூறியதை கேட்ட சித்தார்த்தின் மனம் "வேண்டாம்டா சொன்னா கேளு அந்த பொண்ணு இப்பவே உன்னை பாவம்ன்னு விட்டுட்டு போய்ட்டா. நீ இனிமே குழலி பக்கம் உன்னோட தலைய திருப்பவே திருப்பாத. நாம எப்படியும் இன்னும் ரெண்டு மூணு நாள்ல வேகமா நம்ம உலகத்துக்கு போயிரலாம் அதனால் நமக்கு யாரு மன்னிப்பும் நட்பும் வேண்டாம்".. என்று மனதிற்குள் கூற சித்தார்த் குழலியிடம் பழகுதவதை குறைத்துக் கொள்ள நினைத்தான்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே முக்தா குழலியை சமாதானம் செய்து அழைத்து வந்தாள். பின் சித்தார்த்தும் குழலியும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. சிவியும் பருவியும் தங்களுக்கு போதுமான அளவு சாப்பிட்டு விட்டு இவர்களை காக்க வைக்காமல் வேகமாக இவர்களின் அருகில் வந்தது.

இவர்களின் பயணம் இப்படியே அடுத்த நான்கு நாட்கள் எந்தவொரு பிரச்சனையும் இன்றி செல்ல கிடைக்கும் இடங்களில் தங்கி கிடைத்ததை உண்டனர். சித்தார்த் சார்ஸ்டின் உலகிற்கு வந்து ஏழு நாட்கள் முடிவடையும் நிலையில் நிலவு மகள் நடு வானில் உலா சென்று கொண்டிருந்த நள்ளிரவு நேரம் ஒரு கடற்கரையை வந்தடைந்தனர். நீலவண்ண கடல் பேரலைகளை உண்டாக்கி பாறையில் மோத செய்து இரைச்சலை ஏற்படுத்தி கொண்டிருந்தது. கடற்கரையில் இருந்து சற்று தள்ளி உறங்குவதற்கு தேவையான ஏற்பாட்டை செய்தவர்கள் நெருப்பை மூடிவிட்டு இருவர் மாற்றி இருவர் காவல் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். முதலில் சித்தார்த்தையும் குழலியையும் காவலிருக்குமாறு கூறிவிட்டு மற்ற இருவரும் உறங்கினர்.

குழலி சுற்றியெங்கும் தன் இருவிழிகளை மாறி மாறி சுழற்றி கவனமாக கண்காணித்து கொண்டிருந்தாள். சித்தார்த் முடிந்த அளவு தூங்காமல் சமாளித்து பார்த்தவன் இதற்கு முன்பு இரவுகளில் அதிக அளவு முழித்திருந்து பழக்கமில்லை என்பதால் உடகாந்தவாறு தூங்கி விழுந்து கொண்டிருந்ததாள். இதை கண்ட குழலி "சித்தார்த் நீங்கள் வேண்டுமென்றால் உறங்குங்கள் நான் பார்த்து கொள்கிறேன்" என்று கூற சித்தார்த் குழலியின் முகத்தை பார்க்காமல் "இல்லை நான் பார்த்துகுறேன்" என்று மறுத்தவன் சிறிது நேரத்தில் உட்காந்தவாறே தூங்கி போனான்.

தூங்கி கொண்டிருக்கும் சித்தார்த்தின் அழகிய முகத்தை அருகில் வந்து கண்ட குழலி அவனது கழுத்தில் தான் வைத்த கத்தி தடத்தை பார்த்தவள். "என்னை மன்னித்து விடு சித்தார்த்" என்று கூறி காயத்தை தொட்டு பார்க்க சித்தார்த் கொஞ்சம் அசையவும் வேகமாக தன் இடத்திற்கு வந்து அமர்ந்து கொண்டாள். பின் சிறிது நேரத்திற்கு பிறகு சித்தார்த்தை மெதுவாக தரையில் சாய்த்து படுக்க வைத்துவிட்டு ஒரு சால்வையை அவனது கழுத்து வரை போர்த்திவிட்டாள்.

சித்தார்த் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல அருகில் அமர்ந்து அவனது அழகிய முகத்தை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு இந்த இரவு விடியா இரவாக தொடர வேண்டும் என்று மனம் ஏங்கியது. குழலி தான் காவல் காக்கும் நேரம் முடிந்த பிறகும் மற்றவரை எழுப்பாமல் சித்தார்த்தின் முகத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள். பின் லியாடோ தானாக தூக்கம் கலைந்து எழ அதை கண்ட குழலி காவல் காப்பதை போன்று நடித்தாள்.

நீண்ட நேரம் தான் உறங்கி விட்டதை உணர்ந்த லியாடோ குழலியை உறங்க கூறிவிட்டு தான் காவல் காக்க ஆரம்பித்தான். குழலியோ மனதிற்குள் லியாடோவை வசைப்பாடிக் கொண்டே உறங்க சென்றாள்.

இதுவரை என்னுடைய கதைக்கு கருத்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏...
 
Last edited:

Nagubalu

Active member

நீண்ட நேரம் தான் உறங்கி விட்டதை உணர்ந்த லியாடோ குழலியை உறங்க கூறிவிட்டு தான் காவல் காக்க ஆரம்பித்தான். குழலியோ மனதிற்குள் லியாடோவை மனதிற்குள் வசைப்பாடிக் கொண்டே உறங்க சென்றாள்.

இதுவரை என்னுடைய கதைக்கு கருத்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏...
Liyado nallavan than pola. Super saho
 
elakkiya subramaniyan

Well-known member
லியோடாவை பாக்கும் போது i mean character எனக்கு கேப்டன் jacksparrow வை நியாபகப்படுத்துது! குழலியின் தந்தை தளபதி unexpected twist ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ சித்துவுக்கு முக்தா or குழலி யார் ஜோடி....😢 குழலிக்கு சித்துவை புடிச்சு போச்சு...Enna nadakumo..
Nice going writer ji 😍😍😍 waiting for next episode
 
Top