கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காதலின் மாயவிசை... அத்தியாயம் 09... கதை திரி

Arjun

Moderator
Staff member
காதலின் மாயவிசை 09...

ஆதவன் கடலன்னையின் மடியிலிருந்து துயில் கலைந்து எழுந்த நேரம் நான்கு பேரும் தூக்கம் கலைந்து எழுந்தனர். நான்கு பேரும் தங்களின் முன்னால் பிரகாசத்துடன் மிளிரும் ஆதவனை பார்க்க ஆதவனோ ஆர்ப்பரிக்கும் கடலிலிருந்து வெளியே வரும் பொன்னிற முத்தை போன்று கடலன்னையில் இருந்து வெளிய வர ஆதவனின் ஒளி பட்டு கடலன்னை மிளிர்ந்தாள். அந்த அற்புதமான காலை பொழுது அனைவர் மனதிலும் ஒரு புதுவித புத்துணர்ச்சியை உருவாக்கியது.

சார்ஸ்டின் உலகில் தன்னுடைய எட்டாவது நாளில் அதிகாலையில் சூரிய உதயத்தின் அழகை ரசித்தவாறு சித்தார்த் எழுந்தான். அனைவரும் தங்கள் உடமைகளை எடுத்து கொண்டு ஆண்கள் பெண்கள் தனித்தனியாக பிரிந்து சென்று தங்கள் வேலைகளை முடித்து கொண்டு கடலில் குளித்தனர். பின் லியாடோ தாங்கள் இந்த இடத்தில் தங்கியதற்கான அடையாளங்களை அழிக்க அனைவரும் தங்களின் பயணத்திற்கு தயாராக ஆரம்பித்தனர்.

குழலி கடலில் குளித்து விட்டு காரிருள் மேகம் போன்ற தன் கூந்தலை காயவைத்து பின்னலிட்டு கொண்டிருக்க அவளை கண்ட சித்தார்த் குழலியிடம் பேசலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருந்தான். பின் தைரியத்தை வரவழைத்து கொண்டு குழலியின் அருகில் சென்றவன் "குழலி" என்று அழைத்தவுடன் அவனை திரும்பி பார்த்தவளின் விழிகளில் நேற்று இரவிலிருந்து எந்த ஒரு உணர்வுமில்லை.

குழலியின் பார்வையிலிருந்து எதையும் உணர முடியாதவன். குழலியிடம் "நேத்து இரவு எப்படி தூங்குனேன்னு தெரியல என்னை மன்னிச்சிருங்க நீங்க தனியா முழிச்சிருந்திருப்பீங்க. அதோட அன்னைக்கு தளபதிதா உங்க அப்பான்னு தெரியாம வேற கொஞ்சம் மரியாதை இல்லாம பேசிட்டேன். அதுக்காகவும் என்னை மன்னிச்சிருங்க".. என்று கூற சித்தார்த் தன்னிடம் பேசியதில் குழலியின் மனது மகிழ்ச்சியில் துள்ளியது. இருந்தும் எதையும் வெளியே காட்டிக் கொள்ளாதவள். "பரவாயில்ல".. என்று ஒரு வார்த்தையுடன் நிறுத்திக் கொண்டாள். குழலி பெண் என்ற காரணத்தினால் தான் அவளது தந்தை அவளை மட்டம் தட்டி வந்தார். ஆனால் சித்தார்த் எந்தவொரு கர்வமுமின்றி தன்னிடம் மன்னிப்பு கேட்டது குழலிக்கு சித்தார்த்தின் மீதுள்ள அன்பை அதிகரிக்க செய்தது.

குழலியின் வாள் தங்களின் தேகத்தை தீண்டாமலிருக்க பலர் ஆண் என்பதையும் மறந்து குழலியிடம் மண்டியிட்டு உயிர் பிச்சை கேட்டு கெஞ்சியதுண்டு. ஆனால் முதல் முறை எந்த ஒரு நிர்பந்தமுமின்றி சித்தார்த் தன்னிடம் மன்னிப்பு கேட்டது குழலிக்கு வியப்பளித்தது. மதிலை தேசத்தில் பெண்களுக்கு சம உரிமை இருந்த போதும் பெண்கள் என்றால் பலர் மரியாதையின்றி நடத்தினர். தன் தந்தை உட்பட பலர் ஆண் என்கிற அகந்தையில் பெண்களை புழுவாக நினைக்கும் சூழலில் வளர்ந்தவளுக்கு ஆண் என்ற கர்வமின்றி தன்னிடம் மன்னிப்பு கேட்க்கும் சித்தார்த் மற்ற ஆண்களிலிருந்து மிகவும் வித்தியாசமாக தெரிந்தான்.

குழலிடம் பேசிவிட்டு குளிக்க சென்ற சித்தார்த் கடலில் குளித்து விட்டு வெளியே வந்தவன் ஜீன்ஸ் பேண்ட் மட்டும் அணிந்து கொண்டு தன் மற்ற ஆடைகளை அலசி பாறையில் காய வைத்தான்.

சித்தார்த் ஜீன்ஸ் பேண்ட் மட்டும் அணிந்து கொண்டு தன் ஒரு கையால் தலைமுடியை கோத்தியவாறு முக்தாவை நோக்கி நடந்து சென்றான். சித்தார்த் தினமும் உடற்பயிற்சி செய்ததன் அடையாளமாய் இறுகிய சதைகளோடு தன் கட்டுமஸ்தான தேகத்தை காட்டியவாறு நிற்க்க அவனது உடலில் படிந்திருந்த நீர் துளிகள் ஆதவனின் ஒளிபட்டு வைரமென மின்னியது. கடலலைகள் அவனின் பாதம் உரச அதை ரசித்துக் கொண்டே அலைகள் காலில் மோதுமாறு கடலின் ஓரத்தில் நடந்து வருபவனை கண்ட முக்தா தன்னை மறந்து அவனை ரசித்தாள்.

மதிகெட்டான் சோலைக்குள் முதல் முறை யாரென்று அறியாத தன்னை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த போதே முக்தாவிற்கு சித்தார்த் மீது ஒருவித அன்பு உண்டானது. பின் காட்டில் தன் உயிரை காக்க கோடாலியை சித்தார்த் தன் மார்பில் வாங்கிய நொடி முக்தாவிற்கு தன் இதயத்தை யாரோ வெட்டி எடுத்தது போன்ற வலி உண்டாகியது.

நிலவு மலரின் உதவியினால் சித்தார்த்தின் காயம் சரியான பிறகே முக்தாவின் போன உயிர் திரும்பி வந்தது. அந்த நொடியே முக்தாவின் மனதில் சித்தார்த் மீது அசைக்க முடியாத நேசம் உண்டானது. இறுதியாக மைஜித்தின் இடத்தில் இரவில் சித்தார்த்தின் தோளில் சாய்ந்திருந்த போது தன் தாயின் அன்பையும் தந்தையும் பாதுகாப்பையும் ஒரு சேர சித்தார்த்திடம் உணர்ந்தாள்.

சித்தார்த் தனக்கு கிடைத்தால் தன் வாழ்வில் தான் இழந்த அத்தனை உறவுகளும் தனக்கு திருப்பி கிடைத்ததுக்கு சமம் என்று எண்ணினாள். சித்தார்த்தும் அவளை நேசிக்கிறான் என்று மனம் கூறினாலும் அவளது மூளையோ உன்னால் உனது மக்களை விட்டு அவனோடு செல்ல முடியுமா..? இல்லை அவனால்தான் அவனின் குடும்பதையும் அவனுக்காக உயிரை பணயம் வைத்து இங்கு வந்த அவனது நண்பர்களையும் விட்டு உன்னோடு இங்கு இருந்திட முடியுமா..? என்று கேட்க மனதிற்கும் முளைக்கும் நடந்த யுத்தத்தில் இறுதியில் மூளையே வென்றது.

தன் அன்பு கொண்ட நெஞ்சத்தை மறைத்த பேதையவள் இனிமேல் சித்தார்த்தின் புறம் தன் கவனத்தை திருப்ப கூடாது என்று உறுதி எடுத்து கொண்டாள். ஆனால் பெண்களை மயக்கும் பேரழகனாய் தன் தேகத்தின் வனப்பை காட்டியவாறு நடந்து வருபவனை கண்டவள் தன்னை மறந்து அவனையே பார்க்க அவள் மனதை போன்று அவளின் உறுதியும் காற்றில் பறந்தது.

தீடிரென பெரிதாக வந்த கடலலை முக்தாவின் பாதத்தை தொட தன்னிலை அடைந்தவள். தன் தலையை சிலுப்பி கொண்டு தான் செய்த செயலை எண்ணி நொந்து கொண்டாள். தான் தன் மக்களை காப்பேன் என்ற நம்பிக்கையில் தன்னுயிரை காப்பதற்காக அரக்கர்களின் வாளிற்கு இரையான குருதி படிந்த தன் தந்தையின் முகம் நினைவிற்கு வர முக்தாவின் முகத்தில் தானாக கடினம் குடி கொண்டது.

முக்தாவின் அருகில் வந்த சித்தார்த் "முக்தா நாம அடுத்த இடத்துக்கு எப்ப கெளம்புறது".. என்று கேட்பவனின் முகத்தை காண முடியாமல் முக்தா வேறு புறம் திரும்பிக் கொண்டாள். பின் கடினபட்டு வரவழைத்த இறுகிய குரலில் "அடுத்த இடத்திற்கு நீங்கள் எங்களுடன் வரப்போவதில்லை. நான், லியாடோ, குழலி மூன்று பேர் மட்டும்மே செல்ல போகிறோம். நீங்கள் எங்களுக்காக இங்கயே காத்திருங்கள்".. என்றவளின் குரலிலிருந்த கடுமையும் தன் முகம் காண விரும்பாமல் முகத்தை திருப்பி கொண்டு பதில் கூறியதையும் பார்த்த சித்தார்த் ஏன் இந்த ஒதுக்கம் என்று புரியாமல் குழம்பினான்.

முக்தாவின் ஒதுக்கத்தை உணர்ந்த போதும் தன்னை பற்றி மட்டும் கவலைப்படும் நிலையில் தான் இல்லை. இப்போது தனது நண்பர்களை காப்பாற்றும் பொறுப்பு தனக்குள்ளது என்று உணர்ந்தவன். "ஏன் என்னை மட்டும் இங்க விட்டுட்டு நீங்க மூனு பேரும் தனியா போறீங்க. திடிர்னு அந்த அரக்கப் படை வந்தாலோ இல்ல வினோதமான வேற ஏதாவது மிருகம் என்ன தாக்க வந்தாலோ என்னால தனியா என்ன பண்ண முடியும்"..

இருவரும் பேசிக்கொண்டிருக்க இவர்களின் அருகில் வந்த மற்ற இருவரும் சித்தார்த்தை பார்த்து முக்தா கடுமையுடன் பேசுவதை கண்டனர். "சித்தார்த் நீங்கள் இங்கு தனியாக இருக்க போவதில்லை. உங்களுடன் சிவியையும் துணையாக விட்டுவிட்டு தான் செல்ல போகிறேன். நாங்கள் ஒன்றும் உங்களை விட்டு ஓடிவிட போவதில்லை. நான் உங்களை இங்கிருந்து பாதுகாப்பாக உங்கள் உலகத்திற்கு அனுப்புவதாக வாக்கு கொடுத்துள்ளேன். என் வம்சத்தினர் உயிரை கொடுத்தாவது கொடுத்த வாக்கை காப்பாற்றுவோம்".. என்று கோபத்துடன் கூறினாள்.

சித்தார்த்திற்கு முக்தாவின் இந்த திடீர் கோபமும் விலகளும் ஏன் என்று புரியாமல் குழம்பினான். ஆனால் இதற்க்கான காரணத்தை அறிந்து கொண்ட லியாடோ சித்தார்த்திடம் "சித்தார்த் நாங்கள் இப்போது செல்வது மிகவும் ஆபத்தான இடம். எனவே நீ அங்கு வருவது பாதுகாப்பல்ல. நீ இங்கு சிவியுடன் பாதுகாப்பாக இரு. நாங்கள் மூவரும் நமக்கு தேவையானதை எடுத்து கொண்டு வேகமாக திரும்பி வந்து விடுகிறோம்"..

லியாடோ கூறியதை பற்றி யோசித்த சித்தார்த் "லியாடோ நீங்க சிவியவும் கூட கூட்டிட்டு போங்க ஆபத்தான இடம்ன்னு வேற சொல்றீங்க உங்க கூட சிவியும் இருந்தா உங்களுக்கும் பாதுகாப்பா இருக்கும். நீங்க வார வரையும் நா இங்க எங்காவது பாதுகாப்பான இடத்துல இருக்கேன்"..

தான் எவ்வளவு கோபமாக பேசினாலும் சித்தார்த் தங்களின் மீது தொடர்ந்து அக்கறை காட்டுவதை கண்ட முக்தாவினால் கோப முகமுடியை நீண்ட நேரம் அணிந்திருக்க முடியவில்லை. எனவே தன் முகத்தை சாதாரணமாக மாற்றியவள் "சிவி உங்களுடனே இருக்கட்டும் சிவியை அங்கு அழைத்து சென்றால் சிவியின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். நாங்கள் செல்ல போவது நீங்கள் அந்த காட்டில் கண்ட குள்ளர்கள் வாழும் இடத்திற்கு அவர்கள் இதற்க்கு முன்பு உங்களின் முகத்தை பார்த்துள்ளனர். எனவே அவர்கள் உங்களின் மீது மிகுந்த கோபத்தில் இருப்பார்கள். அதனால் தான் உங்களை அங்கு வர வேண்டாம் என்று கூறினேன். இந்த காரணத்திற்காக தான் அன்று நான் என் முகத்தை துணியால் மறைத்திருந்தேன். சிவியையும் தூரத்தில் நிறுத்தியிருந்தேன். ஆனால் முகத்தில் கிளைப்பட்டு நான் அணிந்திருந்த துணி விலகி அவர்கள் என் முகத்தை பார்த்து விட்டனர். அதோடு அவர்கள் நம்மை சுற்றி வளைத்ததும் வேறு வழியின்றி சிவியை அழைக்க வேண்டியதாகி விட்டது. இப்போது அவர்கள் நமது மூவரின் மீதும் மிகுந்த கோபத்தில் இருப்பார்கள். அதனால் நீங்கள் சிவியோடு இங்கு பாதுகாப்பாக இருங்கள் நாங்கள் வேகமாக எங்கள் வேலையை முடித்து கொண்டு திரும்பி வருகிறோம்".

முக்தா கூறிய அனைத்தையும் கேட்ட சித்தார்த் "அப்படின்னா அவுங்க உங்க மேலையும் தான கோபமா இருப்பாங்க நீங்களும் அங்க போறது ஆபத்து தான"..

சித்தார்த்தின் அக்கரைக்கு அவனது விழியில் தெரியும் கனிவும் முக்தாவை சித்தார்த்தின் புறம் வெகுவாக கவர்ந்தது. "எனக்கு ஒன்றும் நேராது. அந்த குள்ள மனிதர்களின் கிராம தலைவரின் மகன் ஜிங்குவின் உயிரை நான் ஒரு முறை காப்பாற்றினேன். அதனால் நாங்கள் இருவரும் நண்பர்களானோம் அப்போது பேசிக்கொண்டிருக்கும் போது தான் ஜிங்கு நிலவு மலரை பற்றி கூறினான். இப்போதும் அவன் உதவியால் தான் நமக்கு தேவையான பொருளை அவர்களிடமிருந்து பெற போகிறோம். எனவே நான் பாதுகாப்பாக தான் இருப்பேன். நான் வரும் வரை சிவியை மட்டும் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்"..

சித்தார்த்திடம் பேசிவிட்டு சிவியின் அருகில் சென்றவள். சிவியின் துதிக்கையில் கைவைக்க சிவி முக்தாவின் மலர் கரங்களை தன் துதிக்கையால் மென்மையாக சுற்றியது. மெதுவாக சிவியின் துதிக்கையிலிருந்து கையை விடுவித்தவள். சிவியின் துதிக்கையை தடவி கொண்டே "சிவி உன்னை நம்பியே இவரை இங்கு விட்டு செல்கிறேன். நீ தான் இவரிடம் யாரும் நெருங்காமல் பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டும்".. என்று கூறிவிட்டு நகர முயல சிவியோ தன் துதிக்கையால் மீண்டும் முக்தாவின் கரத்தை பற்றி மெதுவாக பிளிறியது.

முக்தா மீண்டும் சிவியின் அருகில் வந்து சிவியின் துதிக்கையில் தன் இதழ் பதித்தவள் "நான் விரைவில் திருப்பி வருகிறேன் அது வரை இவர் உன் பொறுப்பு சிவி".. என்று கூறிவிட்டு சித்தார்த்தை பார்த்து தலையசைத்தாள். குழலியும் சித்தார்த்தை பிரிந்து செல்லும் கவலையுடன் பார்க்க சித்தார்த்தின் விழிகளோ முக்தாவையே தொடர்ந்து கொண்டிருந்தது. இதை கண்ட குழலியின் மனதில் சிறு வலி உண்டாக வேகமாக திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

பின் மூவரும் குள்ளர்கள் இருப்பிடம் நோக்கி நடக்க ஆரம்பித்தனர். பருவியோ வானத்தில் இவர்களை பின் தொடர்ந்து கொண்டு இவர்களை சுற்றி ஏதேனும் ஆபத்து இருக்கிறதா என்று பார்த்து கொண்டே வந்தது. சித்தார்த்தின் மனதில் முக்தா தன்னை ஒரு முறையாவது திரும்பி பார்க்க மாட்டாளா என்ற ஏக்கம் தோன்றியது. அவர்கள் மூவரும் கண்ணை விட்டு மறையும் வரை ஏக்கமாக பார்த்து கொண்டிருந்தவன் அவர்கள் மூவரும் கண்ணை விட்டு மறைந்தவுடன் கடற் கரையின் அருகில் சென்று அமர்ந்தான்.

முக்தா தன்னை விட்டு சென்றதால் சிவியோ சோகத்தோடு கடல் அலைகள் படாதவாறு மணலில் படுத்திருந்தது. இதை கண்ட சித்தார்த் சிவியின் அருகே சென்றான். யானையை விட நான்கு மடங்கு பெரிதாக காட்சியளிக்கும் பிரமாண்ட உருவமும், கூரிய நகங்களையும் கொண்ட சிவியை முக்தா அருகில் இன்றி பார்க்கும் போது சித்தார்த்தின் மனதில் தானாக சிறிய அளவில் பயம் உண்டாக்கியது. இருந்தும் ஆறு நாட்களாக சிவியின் மீது பயணிப்பதால் சித்தார்த்திற்கு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சிவியின் அருகில் சென்றான்.

சித்தார்த் அருகே சென்றவுடன் சிவி அவனை நோக்கி தன் விழியை திருப்பி ஒருமுறை சித்தார்த்தை பார்த்துவிட்டு மீண்டும் அசையாமல் படுத்தது. சித்தார்த்தோ மெதுவாக அதன் துதிக்கையில் கை வைக்க சிவியோ துதிக்கையை இழுத்து தன் காலுக்குள் மடக்கி படுத்து கொண்டது. அதை கண்டவன் எப்படியும் முக்தா தன்னை பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறியதால் சிவி தன்னை கண்டிப்பாக தாக்காது என்ற நம்பிக்கையுடன் சிவியை சீண்டி விளையாட எண்ணினான்.

கடல் அலைகள் தன் மீது படாதவாறு சிவி அலைகள் வரும் இடத்தை விட்டு சற்று தள்ளி படுத்திருக்க அதை கண்டவன் சிவி காட்டிற்குள்ளிருந்த நீர் வீழ்ச்சியிலுள்ள நீரில் மகிழ்ச்சியாக விளையாடியது நினைவு வந்தது. உடனே கடலின் அருகே சென்ற சித்தார்த் கடல் நீரை அள்ளி சிவியின் மீது தூவி விளையாட சிவி முதலில் உடலை நகர்த்தி நகர்த்திப் படுத்தது.

சித்தார்த்தோ சிறிது நேரம் நீரை ஊற்றிவிட்டு "தடி மாடு சிவி எந்திரி வா கொஞ்சம் இந்த இடத்தை சுத்தி பாக்கலாம்" என்று மறுபடியும் நீரை அள்ளி சிவியின் முறம் போன்ற காதின் மீது தெளித்தான். அவன் சிவி என்றவுடனே எழ நினைத்த சிவி காதின் மீது நீரை தெளித்தவுடன் வேகமாக எழுந்து அதுவும் தன் துதிக்கையால் கடல் நீரை எடுத்து சித்தார்த்தின் மீது பாய்ச்சி அடித்தது.

சித்தார்த் தன் இரு கைகளை குவித்து கொஞ்சம் நீரை எடுத்து தெளிக்க ஆனால் சிவியோ தன் துதிக்கையால் இருபது லிட்டருக்கும் மேல் நீரை உறிஞ்சி அடிக்கவும் வெள்ளமென பாய்ந்து வந்த நீரில் சித்தார்த் முழுவதுமாக நனைந்தான். தீடீரென நடந்த இந்த நிகழ்வை எதிர் பார்க்காத சித்தார்த் முழுவதுமாக நனைத்து பேயறைந்ததை போன்று நின்றான்.

சித்தார்த் "பாவி சிவி கொஞ்சம் தண்ணி எடுத்து ஊதுனத்துக்கு என்னை இப்படி முழுசா குளிப்பாட்டிடியேடா. உன்னை சும்மா விட மாட்டேன்" என்று கூறி கொண்டே மீண்டும் தண்ணீர் எடுத்து சிவியின் மீது தெளித்தான். சிவியும் முக்தாவை மறந்து கொஞ்ச நேரத்தில் மகிழ்ச்சியுடன் சித்தார்த்தின் மீது தண்ணியடித்து விளையாட ஆரம்பித்தது.

இருவரும் மகிழ்ச்சியோடு விளையாடி கொண்டிருக்க தீடிரென அருகிலிருந்த பாறையின் பின் புறத்திலிருந்து குண்டூசியை விட சிறியதாய் குண்டூசியின் கால்ப்பகுதி அளவே உள்ள சிறிய ஊசிகள் சில சித்தார்த்தின் கழுத்தில் தாக்க சித்தார்த் நீரில் நின்றவாறே மயங்கி விழுந்தான்.

சிவி என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் தீடிரென நூற்றுக்கணக்கில் ஊசிகள் வந்து சிவியையும் தாக்க துவங்கியது. ஊசி வரும் திசை நோக்கி செல்ல நினைத்த சிவி சித்தார்த்தை திரும்பி பார்க்க ஒரு பெரிய அலை அவன் மீது மோதி சித்தார்த்தை கடலுக்குள் இழுத்து சென்றது.

சிவியின் காதில் உள்ளே உள்ள மெல்லிய சவ்வு பகுதியில் பல ஊசிகள் குத்தி நிற்க்க சிவியும் தள்ளாட ஆரம்பித்தது. தள்ளாட்டத்துடன் விரைந்து சென்று சித்தார்த்தை கடலலை இழுத்து செல்லாமல் தன் துதிக்கையால் சித்தார்த்தை பிடித்து இழுத்தது. தன் காதில் குத்தப்பட்டிருக்கும் ஊசியில் உள்ள மருந்தின் வீரியத்தால் சிவி கொஞ்சம் கொஞ்சமாக நினைவிலக்க ஆரம்பித்தது. தன்னால் முடிந்த அளவு போராடி சித்தார்த்தை வெளிய எடுத்து வந்த சிவி சித்தார்த்தை பாதுகாப்பாக கிழே வைத்து விட்டு நிற்க்க முடியாமல் மிக பெரிய மலையே சரிவதை போல் பெரிய சத்தத்துடன் கீழே விழுந்தது.

🙏🙏🙏
போன பதிவிற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
 
Nagubalu

Active member

Oruvela antha kullarkal marupadi inga vanthutangalo. Epdi thapika porangalo therilaye
 
Top