கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காதலின் மாயவிசை... அத்தியாயம் 11... கதை திரி...

Arjun

Moderator
Staff member
காதலின் மாயவிசை 11...

சிவியும் சித்தார்த்தும் மயங்கி இருக்க இருவரையும் மரங்கள் இழுத்து வருவதை கண்டு முக்தா அதிர்ச்சி அடைந்தாள். முக்தா இருவரின் அருகிலும் செல்ல முற்பட மரங்கள் அவளின் கைகளை இறுக்கி பிடித்தன. முக்தா கோபத்துடன் துள்ளியவாறு "மரியாதையாக என் நண்பர்களை விட்டுவிடுங்கள் இல்லையென்றால் அதற்க்கான விளைவுகளை நீங்கள் அனுபவிக்க நேரிடும்".. என்று ஜிங்குவை பார்த்து கத்தி கொண்டே அவர்களிடமிருந்து விடுபட முயற்சித்தாள்.

முக்தாவை பார்த்து ஏளனமாக சிரித்த ஜிங்கு "அவர்களை விட வில்லையெனில் என்ன செய்வாய் எங்களை உன்னால் என்ன தான் செய்ய முடியும். முக்தா உன் ராஜ்ஜியம் அழிந்த போதிலும் உன் ஆணவம் அழியவில்லையே. ஒழுங்காக உன் வாயை மூடி கொண்டு நீ அமைதியாக இருந்தால் வலியில்லாத மரணமாவது உனக்கு கிடைக்கும். இல்லையென்றால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவாய் ஜாக்கிரதை".. என்று மிரட்டி விட்டு நிலவு மலர் இருக்கும் பெரிய பாறையை நோக்கி வவ்வாலில் பறந்து சென்றான்.

இவர்கள் கைது செய்து வந்திருப்பதை பார்த்த குள்ள இன குழந்தைகள் தங்கள் கண்களுக்கு ராட்சசர்களாக தெரிபவர்களை சுற்றி நின்று அதிசயமாக பார்த்து கொண்டிருந்தனர். முக்தா தன் நண்பர்களின் நிலை கண்டு தவித்தவள் இங்கிருந்து எவ்வாறு தப்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். தன்னருகே கேட்ட முனங்கல் சத்தத்தில் அவள் திரும்பி பார்க்க மரம் லியாடோவின் அடிவயிற்றில் அடித்ததால் லியாடோ வலியில் முனங்கிக் கொண்டிருந்தான். முக்தா இவர்களுக்கு காவலாக வவ்வாலில் பறந்து கொண்டிருந்த காவலர்களை பார்த்து "காவலர்களே என் நண்பன் வலியால் துடிக்கிறான். அவனுக்கு குடிக்க சிறிது நீர் தாருங்கள்"..

முக்தா நீர் கேட்டவுடன் அங்கிருந்த காவலர்கள் முக்தாவை பார்த்து நக்கலாக சிரித்தனர். அதில் அவர்களின் தலைவனை போன்று இருந்த ஒரு காவலன் "ஜிங்கு கூறியது உண்மைதான் போல மதிலை தேசத்து இளவரசிக்கு அவர்களின் ராஜ்ஜியம் அழிந்தும் ஆணவம் சிறிதும் குறையவில்லை. நம் கிராமத்திற்குள் இருந்து கொண்டு நமக்கே கட்டளையிட இவளுக்கு எவ்வளவு துணிவு இருக்க வேண்டும். இவனுக்கு தானே என்னை சேவகம் செய்ய சொன்னாய்.".. என்று லியாடோவை காட்டி அவன் தோள்பட்டையின் மீது குதித்தான். பின் தன் குண்டூசி அளவிலிருந்து வாளை எடுத்து லியாடோவின் தோள்பட்டையில் ஒரே பாய்ச்சில் முழுதாக உள்ளே இறக்கினான்.

லியாடோ வலிதாங்க முடியாமல் அலற இதுவரை இவர்களை கூட்டமாக சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த குழந்தைகள் "அய்யயோ அரக்கன் தப்பிவிட்டான்" என்று அலறி கொண்டு ஓடி தன் சிறிய அட்டைப்பெட்டி அளவிலிருந்து வீடுகளுக்குள் சென்று அடைந்து கொண்டனர்.

லியாடோ தோளின் மீது நின்ற குள்ள இன வீரன் வஞ்சகத்தோடு முக்தாவை பார்க்க அவள் இதற்க்கு மேலும் தான் ஏதாவது பேசினால் தன் நண்பர்கள் தான் பாதிக்க படுவார்கள் என்பதால் அமைதியாக தலையை குனிந்து கொண்டாள். முக்தா தலை குனிந்தவுடன் அதை கண்டு வெற்றி சிரிப்பு சிரித்த அந்த வீரன் "மதிலை தேசத்து இளவரசி நம் முன்னே தலை குனிந்து விட்டார்" ஹே... ஹே... ஹே.... என்று உரக்க ஒலியெழுப்பியவாறு மகிழ்ந்தான். லியாடோவை அசைய கூட முடியாதவாறு மரங்கள் தங்கள் கிளைகளால் இறுக்கி பிடித்திருந்ததால் லியாடோவும் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருந்தான்.

பாறையை நோக்கி சென்ற ஜிங்கு பாறைக்கு அடியில் வவ்வாலை இறக்கி தரையில் குதித்தான். பின் பாறைக்கு கீழே வாயில் போன்று அமைக்க பட்டிருந்த ஒரு துவாரத்தின் வழியே பாறைக்குள் நுழைந்தான். ஜிங்கு துவாரத்திற்குள் சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் பாறையிலிருந்து ஜிங்குவின் முக அமைப்போடு ஐம்பது வயது மதிக்கத்தக்க அவர்களின் இன தலைவர் வெளியே வந்தார். ஜிங்குவும் அவருக்கு பின்னால் வெளியே வந்தான்.

அவர்கள் இனத்தின் தலைவரை கண்டவுடன் மக்கள் அனைவரும் அவரை வணங்கினர். மரத்தில் தொங்கி கொண்டிருந்த ராட்சச வவ்வால் ஒன்று குள்ள இன தலைவன் வெளியே வந்ததை அறிந்ததும் அவர் அருகில் வந்து நின்றது. வவ்வாலின் அருகே கம்பீரமாக நடந்து வந்தவர் தன் கையிலிருந்த ஒரு சிறிய பழத்தை வவ்வாலின் வாயில் ஊட்டிவிட்டுவிட்டார். பின் அதன் தலையை தடவிவிட்டுவர் இளைஞனை போன்று அதன் மீது தாவி அமர்ந்தார்.

ராட்சச வவ்வாலில் முக்தாவை நோக்கி அவர் பறந்து வர அவரை வீரர்கள் பலர் வவ்வாலில் அமர்ந்தவாறு பின்தொடர்ந்தனர். முக்தாவின் அருகில் வந்தவர் முக்தாவை ஆழமான பார்வையுடன் ஆராய்ந்தார். பின் தன் கூர் விழிகளை அவளின் விழிகளில் பாய்ச்சி "என் மகனின் உயிரை காப்பாற்றியதற்காக உனக்கு மரியாதை தரவா..? இல்லை எங்கள் இனத்தின் இரட்டை பொக்கிஷத்தில் ஒன்றை நீ திருடியதற்காக உன்னை தண்டிக்கவா..? நான் என் மகனிற்கு தந்தை என்பதை விட இந்த கிராமத்தின் தலைவன் என்பதே முதன்மை கடமையாக எண்ணுகிறேன். இப்போது உன்னிடம் நிலவு மலர் இல்லை அதனால நீ அதை எங்களிடம் திருப்பி தர வரவில்லை. இருந்தும் நீ எங்கள் இடத்திற்கு வந்திருக்கிறாய் என்றால் கண்டிப்பாக எங்களிடமிருந்து எதையோ எதிர் பார்த்தே வந்திருக்கிறாய். நீ எங்களை தேடி வந்ததன் காரணமென்ன".. என்று தன் கத்தி முனை போன்ற பார்வையை அவளின் விழிகளில் பதித்தவாறு கேட்டார்.

குள்ள இன தலைவனின் விழிகளை கண்ட முக்தா அதிசயித்து நின்றாள். ஆறடி உயரத்திலிருக்கும் தன் தந்தையின் விழிகளில் கூட அவள் இதுவரை கண்டிராத கம்பீரமும் எதிராளியை கட்டியிழுக்கும் ஈர்ப்பும் அரையடி உயரத்தில் நெல்மணிகள் அளவிலிருக்கும் சிறிய விழிகளில் கண்டவளுக்கு பேச நாவு எழவில்லை. அவர் முக்தாவை பார்த்து தன் ஒற்றை புருவம் உயர்த்த முக்தா கஷ்டப்பட்டு பேச ஆரம்பித்தாள்.

முக்தா "குள்ள இனத்தின் தலைவரே, தீடிரென எங்களை பைஜர் இனத்து மக்கள் தாக்கியதால் எங்கள் வீரர்கள் மட்டுமின்றி பெண்கள் குழந்தைகள் என்று சாதாரண மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் மக்களை காக்க எனக்கு வேறு வழி தெரியாததால் தான் நான் நிலவு மலரை திருட வேண்டியதாகி விட்டது. இப்போது நாங்கள் சுவான் மக்களின் உதவியை நாடி சுவான் ராஜ்ஜியம் நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். எங்களின் கப்பல்கள் அனைத்தையும் முன்பே அந்த அரக்கர்கள் சுக்குநூறாக்கி விட்டனர். அதனால் சுவான் ராஜ்ஜியம் செல்ல எங்களுக்கு இருக்கும் ஒரே வழி குவின் பறவைகள் மட்டுமே. அதனால் தான் குவின் பறவைகளை கட்டுப்படுத்த நீங்கள் வவ்வால்களை கட்டுப்படுத்த பயன்படுத்தும் திரவத்தை பெற வந்தேன்".

முக்தா கூறியதை கேட்டு சிரித்த குள்ள இனத்தின் தலைவர் "அதாவது எங்கள் பொக்கிஷத்தை திருடிய உனக்கு நான் எங்கள் முன்னோர்களின் அறிய கண்டுபிடிப்பை கொடுத்து எங்கள் தேசத்திலிருந்து உன்னை வழியனுப்ப வேண்டும். என்னை பார்த்தால் உனக்கு சித்தம் கலங்கியவனை போன்று தெரிகிறதா இல்லை உனக்குத்தான் சித்தம் கலங்கி இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறாயா" என்று கேட்க வீரர்கள் அனைவரும் முக்தாவை பார்த்து ஏளனமாக சிரித்தனர்.

அவர்களின் சிரிப்பை கண்டுகொள்ளாத முக்தா "நான் சொல்வதை தயவுசெய்து கேளுங்கள் இன்று நீங்கள் எனக்கு உதவவில்லை என்றால் நாளை உங்களுக்கு உதவ இங்கு யாரும் இருக்க மாட்டார்கள். அரக்கரின் படைகள் சார்ஸ்டின் உலகத்திலுள்ள ஒவ்வொரு உயிரையும் தங்களுக்கு அடிமையாக்க வேண்டும் என்ற வெறியிலுள்ளனர். இன்று எங்களை தாக்கியவர்கள் நாளை உங்களையும் தாக்குவார்கள். நீங்கள் எனக்கு உதவி செய்தால் நாம் இணைந்து அரக்க படைகளை அழித்துவிடலாம். இல்லையென்றால் எங்கள் மக்களை போன்று நாளை உங்கள் மக்களும் அரக்கரிடம் அகப்பட்டு மரணிப்பது உறுதி".

முக்தா கூறும் அனைத்தையும் அலட்சியத்துடன் கேட்டுக்கொண்டிருந்த குள்ள இன தலைவன் "மதிலை இளவரசியே அரக்கர்கள் எங்களை கடந்து தான் உங்களின் ராஜ்ஜியம் நோக்கி வந்தனர். ஆனால் அவர்கள் எங்கள் கிராமத்தின் எல்லையை கூட நெருங்கவில்லை. ஏன் என்றால் எங்களின் பலத்தை பற்றி அரக்கர்கள் நன்கு அறிவர். அரக்க இனம் மட்டுமல்ல இந்த சார்ஸ்டின் உலகத்திலுள்ள எந்த ஒரு இனமும் எங்கள் கிராமத்தின் அருகில் கூட நெருங்க மாட்டார்கள். எங்களின் எல்லைக்குள் ஒரு பெரிய படையே நுழைந்தாலும் எங்களின் வன காவலர்களிடம் சிக்கி நொடி பொழுதில் சிதைந்து விடுவார்கள். அதனால் தாங்கள் எங்கள் மக்களை பற்றி கவலை கொள்ள வேண்டாம்."

முக்தவிடம் பேசிவிட்டு ஜிங்குவின் புறம் திரும்பிய குள்ள இன தலைவன். "ஜிங்கு இவர்களை கிராமத்தை விட்டு இன்னும் சிறிது தூரம் தள்ளி பாதுகாப்பாக கட்டி வையுங்கள். மதிகெட்டான் சோலையிலுள்ள நிலவு மலர் களவாடபட்டதால் அதற்கான பரிகார பூஜைகளை செய்ய நான் இரவு நமது மக்களோடு அந்த உலகத்திற்கு செல்லகிறேன். எனவே நீயும் சில வீரர்களும் வன தேவதைகளின் உதவியுடன் இவர்களை பாதுகாப்பாக வைத்திருங்கள் வரும் அமாவாசை அன்று இவர்களை நிலவு மலர் பீடத்துக்கு பலியிடலாம். அன்று இரவே இவர்களுடன் இருக்கும் குட்டி குவின் பறவையையும் யாளியையும் வெட்டி சமைத்து நமது கிராமத்துக்கே விருந்தாக்கலாம்" என்று கொடூர புன்னகையுடன் கூற சுற்றி இருந்த குள்ள வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

தன்னோடு சேர்த்து தன் நண்பர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றபடும் என்று கூறியதும் அதிர்ந்த முக்தா "நான் தான் நிலவு மலரை திருடியது. இதற்கும் என் நண்பர்களுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை. அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை தயவுசெய்து செய்து அவர்களை விட்டு விடுங்கள்" என்று கோபத்தோடு கத்த குள்ள இன தலைவரோ "அவர்கள் அனைவரும் உன்னோடு இங்கு வந்தது தான் அவர்கள் செய்த தவறு. அவர்களின் தவறுக்கான தண்டனை அமாவாசை அன்று வழங்கப்படும்." என்று கூறிவிட்டு ராட்சச வவ்வாலில் ஏறி பறந்து சென்று விட்டார்.

குள்ள இன தலைவன் சென்றவுடன் மற்றவர்கள் மயக்கத்திலிருந்ததால் முக்தாவிற்கும் லியாடோவிற்கும் மட்டும் மயக்க மருந்து கொடுத்து இருவரையும் மயக்கமடைய செய்தனர். பின் மரங்கள் அனைவரையும் தூக்கி சென்று கிராமத்திலிருந்து சிறிது தள்ளி அனைவரையும் ஒரே இடத்தில் கட்டி வைத்தன. ஆதவன் தன் பயணத்தை முடித்து கொண்டு மலைகளின் மடியில் தஞ்சம் கொள்ள வெண்ணிலா தன் பயணத்தை தொடங்க ஆரம்பித்தாள்.

வெண்ணிலவு நடு வானில் பயணித்து கொண்டிருந்த நேரம் மயக்கத்திலிருந்து அனைவரும் மெது மெதுவாக கண்விழிக்க ஆரம்பித்தனர். மயக்கம் தெளிந்த சிவி எழுந்து கொள்ள முயற்சிக்க மரங்களின் வேரானது சிவியை அசையவே முடியாதவாறு அதன் மீது படர்ந்திருந்தது. பருவியோ தன் இறகுகளை விரிக்க முடியாதவாறு தன் மீது படர்ந்திருந்த வேர்களை தன் அலகினால் கொத்தி எடுக்க பார்த்து முடியாமல் சோர்த்து கிடந்தது.

சித்தார்த் மெதுவாக மயக்கம் தெளிந்து எழுந்தவன் சுற்றி பார்க்க இவர்களை சுற்றிலும் மரங்கள் நான்கு அடி இடைவெளியில் வரிசையாக நின்று கொண்டு தங்கள் கிளைகளை நீட்டி ஒன்றோடு பிணைத்து இவர்களை சுற்றி நான்கு புறமும் வேலியை போன்று அமைத்து அடைத்து வைத்திருந்தது. இருபதடி நீளமும் இருபதடி அகலமும் கொண்ட ஒரு சிறிய கூண்டில் இருப்பதை போன்று இவர்களை சிறை வைத்திருந்தனர்.

சித்தார்த்தின் பின்னந்தலை பாரமாக உணர தன் தலையை பிடித்து கொண்டே மரத்தின் கிளையின் அருகே வந்து நின்றவன் வேர்களின் அடியில் அகப்பட்டு அசைய முடியாமலிருந்த சிவியை கண்டான். சிவியும் தன் யானை முகத்திலிருக்கும் பெரிய விழிகளால் தன்னை மீட்குமாறு பாவமாக சித்தார்த்தை பார்த்துக் கொண்டிருந்தது. சித்தார்த் மரங்களின் கிளைகளை தள்ளி கொண்டு வெளிய செல்ல முயற்சிக்க கிளைகள் அனைத்தும் மிகவும் பலமாகவும் அசைக்க கூட முடியாதவாறும் இருந்தன.

தான் எங்கு இருக்கிறோம் என்று புரியாமல் ஆராய்ந்து கொண்டிருந்தவன் தன் வலது புறம் கிடந்த குழலியை கண்டான். மயங்கி கிடந்த குழலியை கண்டவன் விரைந்து சென்று அவளை பார்க்க குழலியோ அசைவற்று கிடந்தாள். அசைவற்று கிடந்தவளை தன் மடியில் கிடத்தி "குழலி குழலி" என்று பதட்டத்துடன் அவளின் கன்னத்தை தட்ட துளியும் அசைவற்று கிடந்தவளை கண்டவனுக்கு மனதில் பயம் தொற்றிக் கொண்டது. சித்தார்த்தை மேலும் பயம் கொள்ள செய்யாமல் குழலி மெதுவாக கண் விழித்தாள். குழலியின் உடல் பனியால் குளிர்ச்சியாக இருக்க தன் சட்டையை கழட்டியவன் அதை அவளின் உடலை சுற்றி போர்த்தி விட்டான்.

கண்விழித்த குழலி தான் சித்தார்த்தின் மடியில் படுத்தவாறு அவன் ஆடையை தன் மீது போர்த்தி இருப்பதை கண்டவள் பதறி எழ முயன்றாள். குழலி எழ முயன்றதும் அவளின் தலையில் பட்ட காயத்தால் அவள் முகம் சுளிக்க அதை கண்டவன் "என்ன ஆச்சு குழலி".. என்று கேட்டு கொண்டே மெதுவாக அவளை தரையில் அமர வைத்தான். குழலியோ "ஒண்ணுமில்ல கொஞ்சம் தலை வலிக்குது அவ்வளவுதா".. என்று தலையில் கைவைத்தாள்.

தீடிரென குளிர்ந்த காற்று வேகமாக வீச குளிர்ச்சியாக இருந்த குழலியின் உடல் கொஞ்சம் நடுங்க தொடங்கியது. அவளின் உடலின் நடுக்கத்தை கண்டவன் குழலியின் இரு பாதங்களை மடியிலேந்தி கையால் தேய்த்து விட்டான். குழலி அவன் செய்த செயலில் ஒரு நொடி அதிர்ந்தவள். "வேண்டாம் விடுங்கள் ஒரு ஆண் பெண்ணின் கால்களை தொட கூடாது" என்று தடுக்க பார்த்தாள்.

சித்தார்த் உடனே குழலியை முறைக்க குழலி அவனின் முறைப்பை கண்டு அமைதியாகவும் அவளின் இரு பாதங்களையும் மாறி மாறி தேய்த்து விட்டவன். அவளின் கைகளையும் தேய்த்து விட்டான். சித்தார்த் குழலியின் மீது கை வைக்கும் போது தோழி என்ற உணர்வை தவிர அவனுள் எந்தவொரு கெட்ட எண்ணமுமில்லை. அவன் அவளின் கை கால்களை தேய்த்து விட இந்த உறவு ஆயுள் வரை தொடராத என்று குழலியின் மனம் ஏங்கியது. அவளின் கை கால்களை நன்றாக தேய்த்து விட்டவன் அவளின் உடலில் சூடு பரவியதாய் உணரவும் தேய்த்துவிடுவதை நிறுத்தினான்.

குழலி சித்தார்த்தின் செயலால் தன்னை மறந்து அவனை பார்த்தாள். அதை கவனித்தவன் தன் ஒரு புருவத்தை உயர்த்தி என்ன என்று கேட்க மங்கையவளின் மான் விழிகள் இரண்டும் என்ன செய்வதென அறியாமல் தவிக்க அவளின் தலை தானாக கவிழ்ந்தது. பின் "குழலி நீ எப்படி இங்க வந்த முக்தா லியாடோலா எங்க என்று கேட்க அப்போது தான் அவளுக்குமே அவர்கள் இருவரின் நியாபகம் வந்தது.

சித்தார்த் கேட்டவுடன் அவளும் இருவரையும் தேட இருவருமே இவளை விட்டு சற்று தள்ளி மயங்கி கிடந்தனர். குழலியும் சித்தார்த்தும் எழுந்து சென்று இருவரையும் எழுப்பி விட லியாடோ வலியில் வயிற்றை பிடித்தவாறு எழுந்து அமர்ந்தாள். மயக்க தெளிந்து எழுந்த முக்தாவிற்கு லியாடோவின் முகத்தை பார்க்கவே கஷ்டமாக இருந்தது. முக்தா லியாடோவின் நிலையை பார்த்து "என்னை மன்னித்துவிடு லியாடோ உங்கள் இருவரையும் அழைத்து வருவதில் ஆபத்துள்ளது என்று தெரிந்தும் உங்களை அழைத்து வந்து உங்கள் இருவரையும் கஷ்டப்படுத்தி விட்டேன்" என கூறி வருந்தினாள்.

தன் தோழியின் முகம் வாட கண்ட லியாடோ "முக்தா இதில் உன் தவறு எதுவுமில்லை. தேவையின்றி எதையும் நினைத்து மனதை குழப்பி கொள்ளாதே. ஜிங்கு உதவுவான் என்று எண்ணியே எங்களை அழைத்து வந்தாய். ஆனால் இப்படி நிகழும் என்று நீயும் நினைத்திருக்க மாட்டாய். நடந்ததை எண்ணி வருந்தி பயனில்லை நடக்க போவதை பற்றி சிந்திப்போம்" என்று முக்தாவிற்க்கு நம்பிக்கையளித்தான்.

சித்தார்த்தை பார்த்த முக்தா "சித்தார்த் நீங்கள் எவ்வாறு இவர்களின் கையில் அகப்பட்டீர்கள்".. சித்தார்த் "எனக்கு தெரியல முக்தா. திடீர்ன்னு ஏதோ ஊசி மாதிரி எங்க மேல வந்து குத்துச்சு அப்படியே கடல் கரையில மயங்கி விழுந்தேன். அப்பொறம் என்ன நடந்துச்சுனே தெரியல"..

குழலி நடந்த அனைத்தையும் நினைவு படுத்தி கொண்டிருந்தவள் பருவியின் நினைவு வர "பருவி எங்கே" என்று கத்தி கொண்டே பதட்டத்துடன் தன் பார்வையை சுழல விட்டாள். அவளின் கரம் பற்றிய அவளை அமைதி படுத்திய சித்தார்த் "குழலி அமைதியா இரு பருவி நல்லாதா இருக்கு அதை நமக்கு பக்கத்துல பிடிச்சி வச்சிருக்காங்க பொறுமையா இரு".. என்று சமாதானம் செய்தான்.

குழலியும் சித்தார்த் தன் கரத்தினை பிடித்தவுடன் அதை தட்டி விடாமல் இருந்ததோடு சித்தார்த்தின் பேச்சை கேட்டு அமைதியாக பருவியை போய் பார்த்தாள். இதை கண்ட முக்தாவிற்கும் குழலியின் மீது கோபம் தோன்றியது. பின் தன் எண்ண போக்கை எண்ணி முக்தாவிற்க்கே தன் மீது கோபம் வந்தது. வேர்களின் அடியில் அகப்பட்டு அசைய முடியாமல் தவித்த பருவியை கண்ட குழலியின் மனம் வெகுவாக வருந்தியது. அனைவரின் நிலையையும் கண்ட முக்தா எவ்வாறு இங்கிருந்து தப்பிப்பது என்று சிந்தித்து கொண்டிருக்க லியாடோவோ "முக்தா அங்கு பார் அந்த கல்மேடையின் நடுவே இருந்த பெரிய நிலவு மலர் இப்போது அங்கு இல்லை" என்று காட்டியவுடன் அனைவரும் அந்த பக்கம் திருப்பி பார்த்தனர்.

அனைவரும் மரத்தின் கிளையின் அருகே வந்து லியாடோ காட்டிய திசையை பார்க்க அங்கு கல்மேடையில் நிலவு மலர் கொடி படர்ந்திருந்தது. அதில் மலராத சிறு மொட்டுகள் மட்டுமே இருந்தன நடுவே மலர்ந்திருந்த நிலவு மலர் அங்கு இல்லை. சித்தார்த் குழப்பத்தோடு "இந்த பாறை எப்படி இங்க வந்துச்சு இது மதிகெட்டான் சோலைக்குள்ள தான இருந்தது. அங்க இருந்த செடியோட இங்க எப்படி வந்துச்சு" என்று குழப்பத்தோடு கேட்டான்.

முக்தாவின் முகத்தில் குழப்பம் குடி கொண்டிருக்க சித்தார்த் "என்ன ஆச்சு முக்தா என்ன யோசிக்கிற உனக்கே இது தெரியாத".. என கூறியவன் லியாடோ புறம் திரும்பி "லியாடோ நீதான அங்க நிலவு மலர் இல்லன்னு சொன்ன. அப்போ உனக்கு எப்படி தெரியும் இதுக்கு முன்னாடி அங்க நிலவு மலர் இருந்தது" என்று குழப்பத்தோடு கேட்டான். இதே கேள்வி குழலி மனதிலும் இருக்க லியாடோ இருவரும் இவர்கள் மயக்கத்திலிருந்து போது நடந்த அனைத்தையும் கூறினான்.

அனைவருக்கும் தாங்கள் மாட்டிக்கொண்டிருக்கும் பிரச்சனையின் வீரியம் புரிய எப்படி இங்கிருந்து தப்பிப்பது என்று அனைவரும் யோசித்து கொண்டிருந்தனர். முக்தாவோ பாறையின் மையத்திலிருந்து நிலவு மலர் எங்கே என்று தெரியாமல் குழம்பி கொண்டிருக்க "முக்தா" என்ற ஜிங்குவின் குரல் கேட்டு அனைவரும் சத்தம் வந்த திசை நோக்கி திரும்பினர்.

போன பதிவிற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏
 
Last edited:

Nagubalu

Active member

Superrrrrrrrr sago
 
Top