கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காத்திருந்த காதல் முடிவு

Akila vaikundam

Moderator
Staff member
24

மழையில் எப்படி செல்வது என்று படி வீட்டிற்கு வெளிப்புறமாக மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றவளைப் பார்க்க ஸ்ரீதருக்கு பாவமாகத்தான் இருந்தது

காரை எடுத்துக் கொண்டு வெளிப்புறம் வந்தவன் எதுவும் பேசாமல் காரின் கதவைத் திறந்து விட குழப்பத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருக்க அவனோ ரோட்டை பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தான்


சிறிது குழப்பத்திற்கு பின் மெதுவாக அவன் இருக்கைக்கு பக்கத்தில் இருக்கையில் அமர்ந்தவள் காரின் கதவை சாத்திவிட்டு அவனைப் பார்க்க


அவனோ சாரி என் அம்மா சார்பா உன்கிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் அதுக்காக நீ எனக்கு செஞ்சது இல்ல சரினு ஒத்துக்க முடியாது என்று எங்கோ பார்த்தபடி கூறினான்‌

ம்ம் தேங்க்ஸ் என்றவள் அதன் பிறகு எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.

ஒரு இடத்தில் மழை நீர் அதிகமாக செல்ல சிறிதளவு ட்ராபிக் ஆகியிருந்தது வாகனங்கள் அனைத்தும் மிக மெதுவாக நகர்ந்து செல்ல ஸ்ரீதர் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தியபடி காத்திருக்க ஆரம்பித்தான்

அவனுக்கு டிராபிக்கில் ஊர்ந்து செல்வதெல்லாம் பிடிக்காத விஷயம் குழப்பத்துடன் பார்த்த வானதியிடம் ஒரு டென் மினிட்ஸ் கழிச்சா இந்த ட்ராபிக் குறைஞ்சிடும் அதுக்கப்புறம் ரிலாக்ஸா கொஞ்சம் வேகமாகவே வண்டி ஓட்டலாம்
நடுவுல ஊர்ந்து ஊர்ந்து போயிட்டு தேவையில்லாத டென்ஷன் தான் வரும் என்று கூற


சரி என்பது போல் தலையசைத்தவள் ஏதோ கேட்பதற்காக வாய் திறந்தவள் இவன் திரும்பிப் பார்க்கவும் கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்

மறுபடி சில நேரம் கழித்து தனது தொடையில் வைத்து தாளமிட்டவள் அவனை பார்க்க அவன் என்ன என்பது போல் இவளை பார்க்கவும் மீண்டும் அமைதியாகிவிட்டாள்

இப்படியே செய்வதை பார்த்துக் கொண்டிருந்தவன் என்ன வானதி எதோ கேக்கனும்னு நினைக்கிற எதுவா இருந்தாலும் கேளு என்று கூற


வாழ்த்துக்கள் சார் என்றாள்


எதுக்கு


உங்க கல்யாணத்துக்கு


என்னது கல்யாணமா….
ம்ம் …அப்புறம் என்று அவளையே ஆழப்பார்வை பார்த்து கேட்க


அப்புறம் உங்க வைஃப்பை கூட கூட்டிட்டு வரலையா காலையிலிருந்து நான் பார்க்கவே இல்லை கல்யாணமாகி ஒரு பத்து நாள் தான் இருக்கும் பத்து நாளுக்குள்ளயே தனியா விட்டுட்டு வந்து இருக்கீங்க இது தப்பில்லையா


அதனால இனிமே அவங்கள எங்கேயும் விட்டுட்டு தனியா வராதீங்க உங்க வைஃய்ப் ரொம்ப அழகா இருந்தாங்க உங்களுக்காகவே பொறத்த மாதிரி அவங்க மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்றதுக்கு நீங்க ரொம்ப குடுத்து வெச்சிருக்கணும் ஸ்ரீ என்று அவனின் முகத்தை பார்த்து சொன்னாள்


அவர் சொன்னவற்றை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தவனின் முகம் யோசனையில் ஆழ்ந்தது ஸ்டீரிங்கில் இருந்து கையை எடுத்து நெற்றியை நீவியபடி


என் கல்யாணத்தை நான் யார்கிட்டயும் சொல்லலை உனக்கெப்படி தெரியும்…
அதும் சக்தி ரொம்ப அழகுன்னு பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி கல்யாணத்துக்கு வந்தியா என்ன என்று கேட்க…

மெதுவாக ஆம் என்று தலையை ஆட்டினாள்


உடனே அவன் என்ன கல்யாணத்துக்கு வந்தியா எப்போ

ரிசப்ஷனுக்கு வந்தேன் உங்க ரெண்டு பேரோட ஜோடிப் பொருத்தத்தை பார்த்து அப்படியே திகைச்சிட்டேன் அவ்வளவு கச்சிதம்
காலையில கல்யாணத்துக்கு இருக்க முடியல உங்க கல்யாணத்த பார்க்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை ஆனா முடியல என்று கூற


அவள் சொன்னதைக் கேட்டவன் என்ன வானதி மூணாறு வந்தாளா அதுவும் என் கல்யாணத்துக்கு முதல் நாள் வந்தான்னா மறுநாள் எனக்கு கல்யாணம் நின்ன விஷயம் இவளுக்கு தெரியல இப்போதைக்கு தெரியாமலே இருக்கட்டும்


இவ மனசுல என்ன தான் இருக்கு என்று யோசித்தவன் எதுவுமே பேசாமல் வாகனத்தை வேகமாக இயக்கி அவளை வீட்டில் இறக்கி விட்டான்

பிறகு மறக்காம நாளைக்கு வேலைக்கு வந்துடு என் அம்மா ரொம்ப பிடிவாதகாரங்க இப்பதான் கொஞ்சம் இயல்புக்கு மாறிட்டு இருக்காங்க குழந்தை மாதிரி ரொம்ப அடம் பண்ணுவாங்க

இந்த ஒரு வாரம் மட்டும் வா அதுக்குள்ள நான் வேறு யாரையாவது வேலை பார்க்கறேன் என்று கூறிவிட்டு அவளின் பதிலுக்கு காத்திருக்காமல் வீடு வந்து சேர்ந்தான்

வீட்டின் உள்ளே வந்தவன் நெற்றியை தடவியபடி வர மீனாட்சி

என்னாச்சுடா ஏன் உன் முகம் சரியில்லை என்று கேட்க


ஒன்னும் இல்லமா மழையில போய்ட்டு வந்தது கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருக்கு சூடா ஒரு ஃகாபி கிடைக்குமா என்று கேட்க

இன்னும் நைட் டிபன் சாப்பிடல டா நீ சாப்பிடற டைம்ல காபி குடிச்சா அப்புறம் எப்படி சாப்பிடுவ

பரவால்ல அம்மா எனக்கு ஒரு காபி மட்டும் போதும் டிபன் வேணாம் நீங்க சாப்பிடுங்க என்றவனுக்கு அன்றைய இரவு தூங்கா இரவானது.

மறுநாள் காலை எழுந்ததுமே வானதியை தான் எதிர்பார்த்துக் காத்திருந்தான்

சொல்லி வைத்தது போல் எட்டு மணி அளவில் வந்து விட்டாள்

தனது தாயை தனிமையில் அழைத்து அம்மா ப்ளீஸ் அவளை நேத்து மாதிரி டார்ச்சர் பண்ணாதீங்க அவ என்ன வேலை செய்யறாளோ செய்யட்டும் சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரமா அனுப்பி வைங்க நான் வர லேட் ஆனா மட்டும் துணைக்கு வச்சிக்கோங்க நான் வந்ததும் அவளை அனுப்பிக்கலாம் என்றவன்

ப்ளீஸ்மா எனக்காக என்றான் மீண்டும் தனது தாயைப் பார்த்து

சரி போடா நான் பார்த்துக்கிறேன் என்று அவனை அனுப்பி வைத்தவர் அதன்பின் வானதியை எதுவுமே சொல்லவில்லை


எல்லா வேலையிலும் துணைக்கு அழைத்துக் கொண்டார்

அவளும் மிகப் பொறுமையாகவும் வேலையை அழகாகவும் நேர்த்தியாகவும் செய்தாள்

வீட்டையே சற்று மாற்றி அமைத்தாள் இதையெல்லாம் பார்க்கப் பார்க்க மீனாட்சிக்கு தான் மனம் ஆறவே இல்லை


தனது மகளை திருமணம் செய்து இந்த வீட்டின் முதலாளியாக உரிமையுடன் செய்ய வேண்டியதை வேலைக்காரி போல் நின்று செய்து கொண்டிருக்கிறார்களே என்று


இப்படியாக ஒரு வாரம் மெதுவாக கடந்து கொண்டிருந்தது ஆனால் இங்கு ஸ்ரீதரோ முதலில் பள்ளியில் சென்று வானதியைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் சேகரிக்கத் தொடங்கி இருந்தான்

அவளைப் பற்றிய செய்திகள் ஒவ்வொன்றும் பூதம்போல் வெளிவரத் தொடங்கி இருந்தது

அவள் முதலில் வேலை செய்த கம்பெனியில் சென்று கேட்க அவளுக்கு
திருட்டு பட்டம் கட்டியது மர்ம நபரால் காப்பாற்றப்பட்டது எல்லாம் தெரிந்தது
ஆனால் காப்பாற்றப்பட்டது யாரென விசாரிக்கும் பொழுது அது யார் என்று சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கே தெரியவில்லை அவளின் பழைய முதலாளியிடம் விசாரிக்கும் பொழுது அவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதுடன் தன்னை ஒரு காவல் நிலைய அதிகாரி தான் எச்சரிக்கை செய்தார் என்று கூறிவிட்டார்


பிறகு பள்ளிக்கு வந்தவன் அவளுக்கு யார் வேலையை வழங்கியது என்று விசாரிக்க வழக்கமாக நன்கொடை செய்யும் ஒரு ஐடி அவளது ரெஸ்யூமை அனுப்பி அவளுக்காக வேலைக்கு பரிந்துரைத்தது அதன்பிறகு அவள் இங்கு வந்து வேலை கேட்டது அவளின் சம்பளம் இப்படி பல விஷயங்கள் தெரிந்தது.



அவளை ஒருவர் வந்து பள்ளியிலேயே வந்து சந்தித்து அழைத்து சென்றிருக்கிறார் அதன் பிறகு இரண்டு நாள் விடுமுறை கேட்டிருக்கிறாள்


ஆனால் எடுத்தது ஒரு வாரத்திற்கும் மேல் தான் வரும் நாளன்றுதான் அவள் வேலைக்கு வந்து இருக்கிறாள்


அவள் லீவ் எடுத்த இரண்டாம் நாள்தான் தனக்கு திருமணம் என்று சொல்லப்பட்ட நாள் அப்படி என்றால் முதல் நாள் அவள் விடுப்பு எடுத்து தேடிவந்தது என்னைத்தான்


அங்கு தனக்கு திருமணம் என்று தெரியவும் எதுவும் பேசாமல் ஊர் திரும்பியிருக்கிறார் அந்த மன கஷ்டத்தில் மீண்டும் ஒரு வாரம் விடுமுறை எடுத்து இருக்கிறாள் என்று ஸ்ரீதருக்கு ஒவ்வொன்றாக விளங்க தொடங்கியிருந்தது

வேலைக்கு வந்தவள் ஸ்ரீயை பார்த்ததும் வேலையை விட்டு நின்று இருக்கிறாள்

இப்பொழுது அவனுக்கு தெரிய வேண்டியதெல்லாம் ஒன்றுதான் அவளை யார் காவல் நிலையத்தில் காப்பாற்றியது

அவளுடைய வேலைக்கு யார் சிபாரிசு செய்தது

அவளை பள்ளிக்கு வந்து சந்தித்து அழைத்துச் சென்றது இப்படி ஒவ்வொன்றையும் சேகரிக்கத் தொடங்கி இருந்தான்


இடையில் ஒருநாள் கோவில் செல்ல கோவிலின் குருக்கள் இவனிடம் மிகவும் பாசமாக பேசிவிட்டு வானதியை பற்றி கூறினார்

வாரம் தவறாமல் இந்த பொண்ணு வந்து காத்து கிடக்கும் என்னமா ஸ்ரீதருக்கா காத்திருக்கனு கேட்டா சிரிச்சுகிட்டே போகும் தம்பி அந்த பொண்ணுக்கு தான் உங்க மேல எவ்ளோ பாசம் அவசரப்பட்டு கல்யாணத்தை நிறுத்திடுச்சி

அதுக்காக ரொம்ப வருத்தப்படுது கொஞ்சம் பெரிய மனசு பண்ணி மன்னிச்சு கல்யாணம் பண்ணிக்கோங்க என்று அவர் கூற அவரைப் பார்த்து சிரித்து வைத்தான்

இப்படியாக பத்து நாட்கள் தொட இவனுக்கும் வானதி ஏன் தன்னை வேண்டாம் என்று நிராகரித்தாள் அதை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் அதற்கு முன் பள்ளிக்கு யார் வந்தது என தெரிந்து கொள்ள வேண்டும் என்று தேடத் தொடங்கினான்.

மறுநாள் பள்ளிக்கு வந்து வானதியை தேடி யார் வந்தது என்று விசாரிக்க அவர்கள் பிரசாந்தின் போன் நம்பர் அட்ரஸ் கொடுக்க நம்பரை பார்த்ததுமே புரிந்துகொண்டது அவனின் பள்ளி கல்லூரி தோழிகள் பிரசாந்த் என்று

அவனின் நலனில் அக்கறை கொள்பவன் அவனின் பேரை பார்த்ததுமே ஸ்ரீதருக்கு எல்லா முடிச்சுகளும் விடுபட தொடங்கியிருந்தது தன் நிழல் போல் இன்றும் அவன் தன்னை தொடர்வது அவனுக்கு நன்கு தெரியும் ஆனால் இவன் தான் கண்டுகொள்வதில்லை.

அவன்தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக வானதியை பாதுகாத்து வந்திருக்கிறான் ஒரே காரணம் அவள் தனது நண்பனின் காதலி என்பதற்க்காக

மானசீகமாக தனது நண்பனுக்கு நன்றி தெரிவித்தவன் இதற்குப் பிறகும் ஏன் ஈகோ என்னும் சுமையை தூக்கி சுமக்க வேண்டும் என்றோ நடந்த ஒரு சிறு விபத்து அதற்கு ஏன் தண்டனை அவனுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்த ஸ்ரீதர் பிரசாந்தின் நம்பருக்கு அவனின் பெயர் போட்டு தேங்க்ஸ் டா மச்சி தேங்க்ஸ் ஃபார் எவ்ரி திங் என்று அனுப்பினான்…



சற்று நேரத்திற்கெல்லாம் பிரசாத்திடம் இருந்து ஃபோன் வந்தது …


சந்தோஷத்துடன் பல விஷயங்கள் பேசிய பிரசாத்திடம் இவன் வானதி பற்றி மட்டுமே பேசினான் அவனும் பொறுமையாக இரண்டு வருடங்களாக அவனுக்காக அவள் காத்திருப்பது தன்னிடம் முகவரியை பெற்றுக் கொண்டு மூணாருக்கு ஸ்ரீ யை தேடிவந்தது அங்கு உனது திருமண வரவேற்பை பார்த்து விட்டு திரும்பியது என்று பல விஷயங்களை கூறினான்.


ஆனால் உனது திருமணம் நின்றது இன்னும் அவளுக்குத் தெரியாது ஏனோ தெரியவில்லை தற்சமயம் எனது நம்பரை அவள் பிளாக் பண்ணி இருக்கிறாள் அதுமட்டுமின்றி போன் நம்பரையும் மாற்றிவிட்டாள் போல என்று கூறியவன் சந்தோசத்துடன் தனது குடும்ப புகைப்படத்தை அனுப்புவதாக கூறி விட்டு வைத்தான்


சற்று நேரத்திற்கெல்லாம் குடும்ப புகைப்படம் ஒன்றும் ஹார்டின் இமோஜி ஒன்று அனுப்பி வைத்தான்.


முதன்முறையாக அவன் நண்பனின் குடும்பத்தை புகைப்படமாக ஸ்ரீதர் பார்க்கிறான் அவன் நண்பன் அச்சு அசல் இவனைப் போலவே இருக்கிறான் அதே கலர் அதே உடல்வாகு

முகத்தோற்றம் மட்டுமே வேராக இருக்கிறது அழகான மனைவி ஒரு ஆண் குழந்தை இப்பொழுது மனைவி இரண்டாவதாக நிறைமாத கர்ப்பிணி ...வாஞ்சையுடன் அந்த புகைப்படத்தை வருடியவன்
படத்திற்கு ஒரு ஹார்டின் இமேஜினை அனுப்பி விட்டு போனை அணைத்து வைத்தவன்

வானதி திருமணத்தை ஏன் நிறுத்தினாள் என்ற காரணத்தை அவளின் வாயால் தான் கூற வேண்டும் அந்தக் காரணம் கண்டிப்பாக ஏற்கும் பட்சத்தில் யோசிக்காமல் வரும் முகூர்த்தத்திலேயே அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் வீட்டிற்குச் சென்றான்


வீட்டில் மீனாட்சியும் வானதியும் சேர்ந்து வீட்டை சுத்தப்படுத்தி கொண்டிருந்தனர் மீனாட்சிக்கு கோவை சலித்துவிட்டது மூணாறுக்கே செல்லலாம் என்று மனமாற்றத்திற்கு வந்திருந்தார்

கடந்த பத்து நாட்களாக வானதியிடம் இருந்த நெருக்கம் இப்பொழுது அவரது மனதை மாற்றியிருந்தது

ஆனாலும் ஒரு சிறு உறுத்தல் வானதி இடம் கேட்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே இருந்தார்

ஏன் தனது மகளை வேண்டாம் என்று ஒதுக்கினாள் அது மட்டும் தெரிந்தால் போதும் நிம்மதியாக ஊர் போய் சேரலாம்


இந்த பத்து நாட்களில் அவளுடன் நெருங்கி பழகிய பின்பு தான் தெரிகிறது வானதி மிகவும் அருமையான பெண்

அவளுக்கு எந்த சூதுவாதும் தெரியாது இவ்வளவு நல்ல பெண் தன் மகளை நிராகரித்ததுக்கு கண்டிப்பாக ஏதாவது ஒரு காரணம் இருக்கும்

இவ்வளவு நடந்தும் கூட இப்பொழுதும் கூட தன் மகனை துளியும் வித்தியாசமாகப் பார்ப்பதில்லை அவள் பார்வையில் ஒரு மரியாதை கண்ணியம் இருக்கிறது தன்னிடம் மிகவும் அன்பாக பழகுகிறாள் சரியான காரணத்தை கூறினாள் அது தனது மனம் ஏற்கும் பட்சத்தில் அவளை மன்னித்து தனது மகனுக்கு அவளை திருமணம் செய்து வைக்கக்கலாம் என்று காலையிலிருந்து அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறார்

வானதி வீட்டை மிக அழகாக சுத்தப்படுத்தி விட்டு கடைசியாக பூஜை அறையில் உள்ள விளக்குகளை துடைத்து வைத்தவள்


மீனாட்சியிடம் வந்து பூஜை ரூம் சுத்தம் பண்ணிட்டேன் தீபம் வைச்சிடுங்க என்று கூற

நீயே வச்சிடேன்

அம்மா நா எப்படி உங்க வீட்டு பூஜை ரூம்ல….வேணாம்மா எப்பவும் போல நீங்களே வைங்க…

இல்ல வானதி இன்னைக்கு ஒருநாள் நீயே வைய்யேன்


ம்ம்...சரி வைக்கிறேன்…என்று தீபம் ஏற்றிவிட்டு வந்தவளிடம் தீபம் ஏற்றும் போது ஏதாவது வேண்டுவியா என்று கேட்டார்

உடனே அவள் ம்ம்... எப்பவும் எல்லாரும் நல்லா இருக்கணும் என்னை சுத்தி இருக்கிறவங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்னு வேண்டிக்குவேன்

ஒஒ…இப்போ உன்ன சுத்தி யார் இருக்காங்க

இப்போ என்ன சுத்தி யார் இருக்காங்க
நீங்க ஸ்ரீ சார் அவ்ளோதான்


அப்போ நாங்க நல்லா இருக்கணும்னு பிரார்த்தனை பண்ணிக்குவ அப்படிதான்


ஆமா அம்மா என்றவள் மணி பார்க்க ஆரம்பித்தாள் வானதி…

ஏன் வானதி இங்கே இருக்க பிடிக்கலையா

ஐயோ அப்படி எல்லாம் இல்ல அம்மா வீட்டுக்கு போக நேரம் ஆயிடுச்சு ஆட்டோ வந்தா கிளம்பிடுவேன் அதான் நேரம் பாக்கறேன்…

ஏன் வானதி என்னோட மூணாருக்கு வந்திடறீயா

அம்மா என்ன சொன்னீங்க சரியா கேக்கல…

என்னோட மூணார் வந்திடறீயா என் பொண்ணா என்னோடு இருந்துக்கோ உனக்கு ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என் வாழ்க்கை முடிகிற வரைக்கும் என்னைக்குமே ஸ்ரீ பத்தி உன்கிட்ட பேசமாட்டேன்…

ஆனா ஒரே ஒரு உறுத்தல் என் மனசுல அது மட்டும் தெளிய வச்சிடு போதும்

ஏன் வானதி நீ என் பையனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்ன ஏன் என் பையனோட கல்யாணத்தை நிறுத்தன

என மகனை உண்மையாவே நீ காதலித்து இருந்தா நீ எங்களை இப்படி அவமானப்படுத்தி இருக்க மாட்ட இல்ல

உன் மேல எனக்கு அவ்வளவு கோபம் உன்னை எப்படி எல்லாமோ காயப்படுத்தும் னு நினைச்சேன் ஆனா உன் முகத்தைப் பார்த்தா அது எதுவுமே எனக்கு தோனல அதும் இந்த பத்து நாளும் உன் கூட பழகுனதுக்கப்புறம் நீ எவ்ளோ நல்ல பொன்னுன்னு தெரிஞ்சுது

இவ்வளவு நல்ல பொண்ணா இருக்கற நீ எப்படிமா எங்களுக்கு அவ்வளவு பெரிய துரோகத்தை பண்ணின நானும் என் பையனும் உனக்கு என்னம்மா பண்ணினோம்
என்று அழ

அதுவரை அவர் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த வானதி அம்மா என்னை மன்னிச்சிடுங்க

எதையுமே நான் வேணும்னு பண்ணல
அந்த சமயத்துல எது சரினு பட்டுச்சோ அதை தான் செஞ்சேன்…


எனக்கு ஸ்ரீ யை ரொம்ப பிடிக்கும் மா வாழ்க்கைல எதுமே வேணாம் அவர் மட்டும் போதும்னு தான் நினைச்சி காதலிச்சேன்

ஆனா அவரோட சேர்ந்து வாழற கொடுப்பினை எனக்கில்லம்மா…

ஏன் வானதி உனக்கு அப்படி தோணிச்சி ஸ்ரீ கிட்ட அப்படி என்ன குறையை பாத்த என்று மீனாட்சி ஆர்வமாக கேட்டார் அவரின் மனதில் இப்பொழுது துளி நம்பிக்கை பிறந்தது.


குறையா அவர் கிட்ட என்ன குறை அம்மா எல்லாமே நிறை தான் அதுதான் என்ன அவர் கிட்ட இருந்து பிரிச்சது..

கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு வானதி


உங்க பையன பாத்ததுமே வாழ்ந்தா இவர் கூட தான் வாழனும்னு நினைச்சு தான் நான் அவரை காதலிக்க ஆரம்பிச்சேன் அவர் ரொம்ப நல்லவர் அதிர்ந்து கூட பேச தெரியாது

அவர் ஆரம்பத்தில் என்கிட்ட ரொம்ப யதார்த்தமாகவும் பிரெண்ட்லியாவும் தான் பழக ஆரம்பிச்சாரு

போகப்போக நான் அவரை காதலிக்கிறேன்னு தெரிஞ்சதும் என் கிட்ட இருந்து விலக ஆரம்பிச்சாரு

அவரு விலகிப் போகவும் தான் எனக்கு இன்னுமே அவர் மேல காதல் வந்துச்சு விரட்டி விரட்டி காதலிக்க ஆரம்பிச்சேன்

ஒருகட்டத்தில் என்னோட காதலை பார்த்து அவரும் என் காதலை ஏத்து கிட்டு என்னை காதலிக்க ஆரம்பிச்சாங்க


காதலிக்க ஆரம்பிச்சதுமே என்னை கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டாரு சரின்னு சொல்லி திரும்பி பார்க்கறதுக்குள்ள கல்யாண ஏற்பாடுகளை பண்ணி வச்சுட்டாங்க ரொம்ப சந்தோஷமா இருந்தது


ஆனா திடீர்னு ஏன் அம்மா ஸ்ரீதரை பற்றி விசாரிக்கவும் எனக்கு எதுவுமே தெரியல

முதல் தடவையா அப்போ தான் எனக்கு ஒரு குழப்பம் வந்தது ஸ்ரீதர் எனக்கு சரியானவரானு

நான் ஸ்ரீதரை தேர்ந்தெடுக்கிற விஷயத்துல தப்பு பண்ணிட்டேனோனு ஒரு குழப்பம் இருந்தது ஆனா காலைல நீங்க வந்து என் குழப்பத்தை எல்லாம் சரி செஞ்சிங்க கொஞ்சம் என் காதல் மயக்கத்தையும் தெளிய வச்சிங்க

என்ன வானதி சொல்ற காதல் மயக்கத்த நான் தெளிய வச்சேனா,அப்போ உங்களோட பிரிவுக்கு நானா காரணம்... கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லு மா…

எங்க பிரிவுக்கு நீங்க காரணம் கிடையாது ஆன்ட்டி ஆனா நீங்க சொன்ன விஷயமும் ஒரு காரணம்

நீங்க பார்கவியை பற்றி சொன்னீங்கல்ல அப்போ தான் முதல் தடவை என் மேலேயே எனக்கு கோபம் வந்தது

ஒரு லட்சியத்தோட ஒரு கனவோட வாழ்ந்துட்டு இருக்கற ஒரு மனுஷனோட வாழ்க்கையை சலன படுத்திட்டனோனு என் மேல எனக்கு ரொம்ப குற்றவுணர்ச்சி

சரி இதுக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம் கல்யாணத்துக்கு அப்புறம் அவரோட சேவையை அவர் தொடரட்டும் நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பத்தை நாம பாத்துக்கலாமானு மனசை தேத்திகிட்டேன்

ஆனா ஸ்ரீ போன் பண்ற வரைக்கும் நான் இந்த எண்ணம் என் மனசுல இருந்தது ஸ்ரீ ஃபோன் வரவும் எல்லாம் ஒட்டு மொத்தமா உடைஞ்சு போச்சு

அவர் கல்யாணத்துக்கு அப்புறம் அவருடைய லட்சியம் கனவு எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு எனக்கு சேவை செய்ய காத்திருக்கிறதா சொன்னாரு

அதை எப்படி அம்மா என்னால தாங்கிக்க முடியும் நான் அந்த அளவுக்கு கல்நெஞ்சக்காரியா

எந்த எதிப்பார்ப்பும் இல்லாம கல்யாணம் மட்டும் போதும்னா எனக்கு ஆயிரம் மாப்பிள்ளை கிடைப்பாங்க ஆனால் பார்கவி மாதிரி குழந்தைகளுக்கு ஸ்ரீ மாதிரி யாரோ ஒருத்தர் தான் கிடைப்பாங்க

அவர் செய்கிற நல்ல விஷயத்தில் தான் என்னால ஏதும் செய்ய முடியல அட்லீஸ்ட் சேவை செய்யற ஒரு மனுஷனையாவது அவர் பாதையிலிருந்து விலகாமல் அவர் பாதையிலேயே போக விடலாம்னு நினைச்சு தான் நான் கல்யாணம் பண்ணிக்கல

எனக்கு அப்போ தெரியலம்மா கல்யாணத்துக்கப்புறம் ஸ்ரீதருக்கு புத்தி சொல்லி அவர் வேலையை எப்பவும் போல செய்ய வச்சிருக்கலாம்னு

அந்த நேரத்துல அவர் வாழ்க்கையை விட்டு விலகிப்போன போதும் மட்டும்தான் நினைச்சேன்‌

ஸ்ரீயோட லட்சியம் தொடரனும்னு முட்டாள்தனம் பண்ணிட்டேன்

ஆனா என் அம்மா என்னை விட்டுப் போனதுக்கு அப்புறம்தான் ஸ்ரீதரை பிரிச்சு எவ்வளவு பெரிய தப்புன்னு புரிஞ்சது


ஸ்ரீதரை மறக்க முடியாம ரெண்டு வருஷம் அவருக்காக காத்திருந்தேன் அவரோட நண்பர் மூலமா உங்க வீட்டு அட்ரஸ் கண்டு பிடிச்சு நான் வந்த நின்னப்போ ஸ்ரீயோட ரிசப்ஷன்…


ஸ்ரீதரை ஜோடியா மேடையில் பார்த்திட்டு மனசு உடைஞ்சு போய் மறுபடியும் ஊருக்கு வந்துட்டேன்

அதுக்கு அப்புறம் பார்த்தா ஸ்ரீ எங்க ஸ்கூலுக்கு ஹெட்டா வராது

அவரை எப்படி என்னால் நேருக்கு நேர் பார்த்து முடியும்

அவரை பார்த்து என்னால பேச கூட முடியல நான் அவருக்கு பண்ணின பாவம் என்ன கொஞ்சமா?

எவ்வளவு பெரிய அவமானத்தை தேடிக் கொடுத்திருக்கேன் ஆசை காமிச்சி ஏமாத்திருக்கேன்


சரி வேலையை விடலாம்னு பார்த்தா அவரே என்னை வேலையை விட்டு நிறுத்திட்டாரு


ஏதோ ஒரு வேலை செஞ்சி பொழச்சிக்கலாம்னு இந்த வேலைக்கு வந்தா விதி மறுபடியும் அவர் வீட்டுக்கே என்னை வேலைகாரிய கொண்டுவந்து விட்டிருக்கு

அவர் கையாலேயே காசு வாங்கி சாப்பிட வச்சிடுச்சி போதும்மா நான் பண்ணின தப்புக்கு தண்டனை இது போதும் உங்களோட மூணாறு வந்து மேலும் என்னால தண்டனை அனுபவிக்க முடியாது


உங்களோட நான் வந்தா எப்படி என்னால குற்ற உணர்ச்சியில்லாம ஸ்ரீ முன்னாடி நடமாட முடியும்

அங்க அவர் மனைவியோட சந்தோஷமாக இருக்கிறத பார்த்து என்னால எப்படி இயல்பா இருக்க முடியும் சொல்லுங்க

அதனால் தயவுசெய்து ஊருக்கு கூப்பிடாதீங்க நான் வரல என்னை மன்னிச்சிடுங்க

நீங்க நாளைக்கு ஊருக்கு போறப்ப சந்தோசமா போயிட்டு வாங்க இனிமே உங்க முன்னாடியும் உங்க பையன் வாழ்க்கையிலயும் என்னைக்குமே குறுக்க வர மாட்டேன்


ஸ்ரீ இலட்சியமும் கனவும் அவரை விட்டு போகூடாதுன்னு தான் அவரை விட்டு பிரிஞ்சேன் அவரோடு லட்சத்துக்கும் கனவுக்கும் குறுக்க வராத ஒரு மனைவிதான் அவருக்கு அமைச்சுருக்காங்க அவங்களோடு சேர்ந்து ஸ்ரீதர் அவர் சேவையை தொடரட்டும்

மறுபடியும் உங்க எல்லார் முன்னாடியும் வந்து எல்லாரோட சந்தோஷத்தையும் நான் கெடுத்துட்டேன் என்ன மன்னிச்சிடுங்க என்று கதற மீனாட்சி சோபாவில் சாய்ந்திருக்க அவர் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது


வானதி நீ எவ்வளவு நல்ல பொண்ணு அவனோட ஆசைகளுக்காக உன் காதலை தியாகம் பண்ணிருக்க…. அவனுடைய லட்சியம் கனவு உன்னால கலையக்கூடாதுனு ஒதுங்கி போயிருக்க இது புரிஞ்சிக்காம நான் உன்னை எந்த அளவு சபிச்சிருக்கேன் உன்னை எவ்வளவு திட்டு திட்டி இருப்பேன் ஒருவேளை நீ இந்த பத்து நாள் இங்கே என்னோட இல்லாம இருந்திருந்தா காலத்துக்கும் என்னோட நினைவுகள்ல நீ ஒரு கெட்ட பொண்ணா தான் வாழ்ந்துட்டு இருந்திருப்ப


கடவுளோடு செயல் எல்லாத்துக்குமே ஒவ்வொரு நியாயம் இருக்குமா அதனால்தான் அவர் உன்னை இங்கே வேலைக்கு அனுப்பி இருக்கிறார்


நீ இங்க வராம இருந்திருந்தா உன்னை பத்தி தெரியாமலே போயிருக்கும்

ஸ்ரீ காக நான் இப்போ உன்கிட்ட ஒரு மடிப்பிச்சை கேக்குறேன் என் பிள்ளையை கட்டிக்கிறியா அவனோட கனவு லட்சியம் எல்லாத்திலேயும் கடைசி வரைக்கும் கூட இருப்பேனு எனக்கு வாக்கு குடு வானதி என்று அவளின் முன் மண்டியிட்டு தனது முந்தானையை பிச்சை வாங்குவது போல் விரித்தபடி கேட்க

அம்மா என்ன செய்றீங்க நான் எப்படி ஸ்ரீதரை கல்யாணம் பண்ணிக்க முடியும் அவருக்கு தான் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு அவருக்காக ஊர்ல ஒருத்தர் காத்துட்டு இருக்காங்க என்று கூற

இல்லம்மா அவனை இந்தளவுக்கு காதலிக்கிற ஒரு பொண்ணை விட்டுட்டு அவனால வேற ஒரு பொண்ண எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்

நீ ஸ்ரீதரை புரிஞ்சுகிட்டு இவ்வளவுதானா என்று கேட்க

என்னம்மா சொல்லறீங்க ஸ்ரீதருக்கு கல்யாணம் ஆகலையா அப்போ அன்னைக்கு….. அதிர்ச்சியில் வானதி கேட்க


ரிசப்ஷன் மட்டும் தான் நடந்தது கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டான் என்றார் அவனின் தாய்


எல்லாம் சரி ஆனா என்னை மன்னிச்சி கல்யாணம் பண்ணிக்க ஸ்ரீ ஒத்துப்பாரா என்று கேட்க

இவர்கள் உரையாடல் அனைத்தையும் ஒன்று விடாமல் கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீதர் கண்களில் நீருடன் வாசல் தாண்டியபடி உள்ளே வந்தான்.

அவனைக் கண்டதும் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி எழுந்து நிற்க


மீனாட்சி ஸ்ரீதர் இந்த வானதி இருக்காளே என்று பேச்சை ஆரம்பிக்கும் பொழுது கைநீட்டி அவரை பேசாதீர்கள் என்பதுபோல் தடுத்ததவன்..

யோசிக்காமல் வானதியின் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டான்

அடிதாங்காமல் வானதி கீழே விழ டேய் என்னடா பண்ற என்று மீனாட்சி வானதியை தூக்குவதற்காக அவளின் பக்கம் போக

ஸ்ரீதர் கோபமாக அம்மா உங்களுக்கு என்ன பத்தி நல்லா தெரியும் இதுவரைக்கும் எந்த பொண்ணுகிட்டயும் கோபமா நடந்து கிட்டதில்ல

ஆனா இன்னைக்கு இவளை அடிக்கற அளவுக்கு வந்திருக்கறேனா அது என் ரெண்டு வருஷத்தோட வலி
இதுல நீங்க தலையிடாதீங்க முதல்ல உள்ள போங்க என்று கோபமாகக் கூறினான்.

அவனின் கோபத்தைக் கண்டவர் இருவரையும் மாறி மாறி பார்த்தபடி சற்று தள்ளி நின்றுகொண்டார்

வேகமாக வந்து வானதியை தூக்கி நிறுத்தியவன் அறிவிருக்கா உனக்கு எவ்ளோ அழகா வாழவேண்டிய வாழ்க்கை இப்படி ரெண்டு வருஷம் தனித்தனியா மன நிம்மதி இல்லாம வாழ வச்சிட்டியே

ஒரு வார்த்தை என் கிட்ட சொன்னியா நீங்க வேலையை விடறேன்னு சொல்றது எனக்கு பிடிக்கல
அப்படி சொல்லாதீங்க நீங்க உங்க வேலையை எப்பவும் போல பாருங்க நான் உங்களுக்கு துணையா இருக்கேன்னு அத விட்டுட்டு கல்யாணம் வேணாம்னு சொல்லி


என்னை விரக்தியோட உச்சத்துக்கு தள்ளி விட்டு ரெண்டு வருஷமா ஊர் ஊரா அலைய விட்டு எப்படி வானதி அந்த வலியை உன்கிட்ட சொல்லுவேன் உனக்கும் எனக்குமான ரெண்டு வருஷ
வாழ்க்கையே காணாம போச்சு



நீ என்ன குழந்தையா தெரியாம பண்ணிட்டனு மன்னிச்சி விட நீ பண்ணின லூஸு தனத்தோட பலன் என்ன தெரியுமா உன் அம்மாவோட உயிர்...சந்தோஷமா போக வேண்டியவங்கள கவலையோட போக வச்சிருக்க…


அறிவில்லாம அவசரப்பட்டு முடிவு எடுத்துவிட்டு ரெண்டு வருஷமா உன்ன நீயே கஷ்டபடுத்திகிட்டு என்ன கோலம் வானதி இது வாழ்க்கையே முடிஞ்சி போனதுபோல டிரஸ் பண்ணிக்கிட்டு சரியா சாப்பிடாம ஏதோ வாழனும்ங்கறதுக்காக இருந்துகிட்டு

உன்னை ஸ்கூல்ல பாத்த அன்னைக்கே நான் இதை செஞ்சிருந்தா இந்த பத்து நாள் வேதனையாவது குறைஞ்சிருக்கும்…

நல்லவேளை எனக்கு ஒரு பிரண்டு இருந்ததால உன் வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் இல்ல

இந்த ரெண்டு வருஷத்தையும் கடந்து வந்துட்ட ஒருவேளை எனக்கு பிரசாந்த் மாதிரி ஒரு பிரண்ட் இல்லாம இருந்திருந்தா உன் வாழ்க்கை என்ன ஆயிருக்கும் கண்ணம்மா நினைச்சுப் பார்க்கவே எனக்கு பயமா இருக்கு


நீ கல்யாணத்தை நிறுத்திய உடனே நானாவது புத்தியோட உன் கிட்ட வந்து கேட்டுக்கணும் ஏன் என்னை வேணாம்ங்கறனு அப்படி உன் முகத்தை பாத்து கேட்டிருந்தா
கண்டிப்பா உன்னால பொய் சொல்லி இருக்க முடியாது


நான் தப்பு பண்ணிட்டேன் உன்னை வந்து சந்திச்சிருக்கனும்
உன் பயத்தை போக்கி இருக்கனும் எதுவுமே பண்ணாம சுயநலமா உன்ன நா அப்படியே விட்டுட்டு போயிட்டேன் இல்ல

அறிவில்லாம முடிவு எடுத்தது நீயின்னா

அக்கறையில்லாமல் உன்ன விட்டுட்டு போனது நானு கல்யாணம் நின்னதும் எனக்கு மிகப்பெரிய அவமானமா நினைச்சேனே தவிர

அதுக்கு பின்னாடி உனக்குன்னு ஒரு நியாயம் இருக்கும் அதைக் கேக்க மறந்துட்டேன்

தப்பு என்னோடது தான் உன்னையும் உன் அம்மாவையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து நான் கடமை தவறிட்டேன் என்ன மன்னிச்சிடு

இதுவரைக்கும் நீ அழுதது போதும் இனி உன் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட நான் வர விடமாட்டேன்


ஸ்ரீதர் அப்ப நீங்க என்ன மன்னிச்சிட்டிங்களா?


மன்னிக்கற அளவுக்கு நீ என்ன தப்பு செஞ்ச சொல்லு சேவை செய்யறவனோட மனசை சலனப்படுத்தினதா நீயே தப்பா புரிஞ்சிகிட்ட

உண்மைய சொல்லனும்னா முதல் தடவை உன்னை ரோட்டில சந்திச்சேனே அப்பவே என் மனசு உன் பின்னாடி வந்துருச்சு நீ குழிக்குள்ள விழுந்த நான் உனக்குள்ள விழுந்தேன்...கீழ விழுந்தும் கூட நீ என்ன கோவிச்சிகல அதான் மறுபடியும் உன்கிட்ட வந்து பேச வச்சது


அடுத்தமுறை உன்னை சந்திச்சா கண்டிப்பா நீ எனக்கானவள்னு நினைச்சுதான் அன்னைக்கு கார்ல ஏறினேன் அடுத்த முறை இல்ல அதுக்கு அடுத்த அடுத்த முறை உன்னை நான் சந்திக்கவும் நீ எனக்கானவளே தான்னு
அந்த கடவுள் எனக்கு புரிய வச்சிட்டாரு


ஒருவேளை நீ என்னை விட்டு விலகிப் போய் இருந்தா கூட நான் உன்னை விரட்டி விரட்டி காதலித்து உன்னை கல்யாணம் பண்ணி இருப்பேன் அவ்ளோ காதல் உன்மேல எனக்கு ஆனாலும் ஏதோ ஒரு ஈகோ என்னை தடுத்தது பன்னிரெண்டு வருஷமா தனியா இருந்ததால கூட இருந்திருக்கலாம்

உன் காதலை நீ வெளிப்படையாக ஒத்துகிட்ட நான் ஒத்துக்கல அவ்வளவுதான் விஷயம்…

சரி இப்ப நான் உன்கிட்ட கேக்குறேன் வானதி
நீ கல்யாணம் வேணாம்னு சொன்னதும் ஏதோ ஒரு கோபத்தில் உன் பக்கத்து நியாயம் என்னன்னு கேட்காமலேயே உன்ன விட்டுட்டு போயிட்டேன் அதுக்காக நீ என்னை மன்னிக்கனும்


அதை எல்லாம் மறந்து என்னை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா என்று கேட்க

அது வரை ஓரமாக இவர்கள் இருவரின் உரையாடல்களையும் கேட்டுக் கொண்டிருந்த அவனின் தாய்

ஸ்ரீதர் இது எல்லாத்துக்கும் நான்தான் காரணம் முதல்ல நீங்க ரெண்டு பேரும் என்னை மன்னிக்கணும் என்று கேட்டார்

உடனே ஸ்ரீதர் எதுக்குமா நாங்க உங்கள மன்னிக்கவும் என்று கேட்க

நான் தானடா அன்னைக்கு உன்னை அவளை போய் பார்க்க வேண்டாம்னு தடுத்தேன்

அது மட்டும் இல்ல நமக்கு வானதி இருக்கிற இடம் தெரியும் ஆனா அவளுக்கு நாம இருக்கிற இடம் தெரியாது


நானாவது கொஞ்ச நாள் கழிச்சு அவ பக்கத்து நியாயத்தை தெருஞ்சிக்க முயற்சி பண்ணியிருக்கணும் எதுவுமே பண்ணாம நான் இருந்துட்டேன் என்று கூற

இப்பொழுது வானதி மீனாட்சியின் பக்கம் வந்து அம்மா என்னை மன்னிச்சிடுங்க நான் உங்களை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன் ரெண்டு வருஷமா உங்க பையனுக்கு ஒரு நிம்மதி இல்லாத வாழ்க்கையை கொடுத்து உங்களை ரொம்ப அழ விட்டுட்டேன் அதுக்காக நீங்க என்ன தண்டனை குடுத்தாலும் ஏத்துக்க தயாரா இருக்கேன்


நீ இப்படியெல்லாம் பேசினா நான் உனக்கு தண்டனை கொடுக்காம இருப்பேனு நினைக்காத வானதி நீ என் பையன் கல்யாணத்தை நிறுத்தினதுக்கும் என் பையனை அத்தனை பேர் முன்னாடி அவமான படுத்தினதுக்கும் உனக்கு கண்டிப்பா தண்டனை இருக்குது என்று கூற சற்று பயந்த படி ஸ்ரீதரை பார்த்தாள் வானதி

ஸ்ரீதரும் அம்மா அத மறந்திடுங்களேன் இனி எதுக்கு அத பத்தின பேச்சி

இல்ல ஸ்ரீதர் அது மறக்கணும்னா மறுபடியும் அதே இடத்தில் உனக்கும் வானதிக்கும் கல்யாணம் நடக்கனும் அப்போதான் அந்த கசப்பு என்னை விட்டு போகும்

அதுக்கப்புறம் என்ன ரெண்டு வருஷமா அழ வச்சதுக்கு தண்டனையா ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே வருஷத்துல ரெட்டை பிள்ளையா பெத்து கொடுக்கணும்

அதுக்கு அப்புறமா ரெண்டு பேரும் ஸ்கூல் நடத்துங்க இல்ல ஊரு ஊரா சுத்துங்க இல்ல உலகத்துல இருக்குற எல்லா குழந்தைகளையும் தத்தெடுத்து வளத்துங்க அது உங்க பிரச்சனை எனக்கு என் ரெண்டு பேர பிள்ளைங்க போதும் அதுகளை நான் தங்கமாக வளர்த்த போறேன் என்று கூற

இவ்வளவுதானா நான் என்னவோனு நினைச்சு பயந்துட்டேன் என்று ஸ்ரீதர் சிரிக்க வானதியும் சேர்ந்து கொண்டாள் அதன் பிறகு அந்த வாரத்திலேயே ஒரு நல்ல நாளில் அவனின் நண்பனான பிரசாந்தின் குடும்பம் அவனின் தாய் தந்தை ஸ்ரீதரின் குடும்பம் காயத்ரி உள்பட முக்கிய நண்பர்களை அழைத்து அதே கோவிலில்
எளிய முறையில் திருமணம் நடந்தது

அதன் பிறகு மூணாரில் மிக பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது…

அதன் பிறகு வந்த ஒவ்வொரு நாளும் அவர்களின் வாழ்வில் வசந்தம் வீசிக்கொண்டே இருந்தது ஸ்ரீதரோ குடும்பத்தையும் அவனுடைய பொதுநல சேவையையும் அழகாக கையாண்டு கொண்டு இருக்கிறான் அவனுக்கு சில சமயம் தோன்றுகிறது இதை ஏன் முதலிலேயே செய்யவில்லை ஏன் குடும்பத்தையும் வேலையையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொண்டோம் என்று அடிக்கடி நினைத்து சிரிப்பது உண்டு


வானதி திருமணமாகி முதலாம் ஆண்டு முடிவில் அழகிய பெண் குழந்தைக்கு தாயாகி இருந்தாள்
அடுத்த இரண்டாவது ஆண்டு முடிவில் இரண்டாம் குழந்தையை அவளது மணி வயிற்றில் தாங்கியிருக்கிறாள்….

இப்பொழுது அவளுக்கு ஒரே ஒரு ஆசை மட்டுமே முதல் முதலாக ஸ்ரீதரை எங்கு சந்தித்தாலோ அந்த இடத்தைக் காணவேண்டும் என்று திருமணமாகி இரண்டு ஆண்டுகள் முடிந்த தருவாயில் மாமியாரிடம் முதல் குழந்தையை கொடுத்துவிட்டு ஸ்ரீதர் அவளை அந்த இடத்திற்கு கூட்டி வந்தான்…

அந்த இடமே இப்பொழுது அடையாளம் தெரியாமல் மாறி இருந்தது அவள் விழுந்த குழியும் இல்லை அந்த ரோடும் இல்லை அந்த அளவுக்கு ஜன நெருக்கடி ஆகியிருந்தது


சரி இடத்தை தான் பாத்தாச்சே வானதி இனி போகலாமா என்று ஸ்ரீதர் அவளைப் பார்த்து கேட்க இல்லல்ல காரை ஓரமாக பார்க் பண்ணுங்க

நாம இங்கிருந்து கோவிலுக்கு நடந்தே போறோம் நாம எங்க வச்சு நம்ம காதலை வளர்த்தோமோ அங்க

எனக்காக நீங்களும் உங்களுக்காக நானும் மணிக்கணக்கா காத்திருந்த அந்த இடத்தில இன்னைக்கு நாள் முழுசும் உக்காந்து பேசணும்


அதுக்கு அப்புறமா தான் நாம இன்னைக்கு வீட்டுக்கு போறோம் என்று அவள் செல்லமாக அவனுக்கு கட்டளையிட


மகாராணி அவர்கள் கட்டளையிடும் போது சேவகன் நான் என்ன செய்யமுடியும் வாங்க போகலாம் என்று அவளை பத்திரமாக கோவிலுக்கு அழைத்து வந்தவன்

அன்றைய நாள் முழுவதும் அவர்களுடைய பழைய கதைகளைப் பேசியும் சிரித்தும் அழுதும் போக்கினர்


அந்த மண்டபத்தின் தூணோ மௌனமாக சிரித்துக் கொண்டிருந்தது எத்தனையோ நாள் வானதியின் கண்ணீரை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த அந்த தூண் முதல் முறையாக அவளின் சிரிப்பு சத்தத்தை உள்வாங்கிய படி இருக்கிறது இருவரின் வாழ்க்கையிலும் வசந்தம் வீசியதற்க்காக அந்த தூணிற்கு நன்றி சொல்லியபடி அந்த இடத்தில் இருந்து இருவருமே சந்தோஷமாக கிளம்பி வெளியே வர அழகான தென்றல் காற்று ஒன்று அவர்களை வழியனுப்பி வைக்க
கோவிலில் இருந்த அத்தனை மரங்களும் பூக்கள் தூவி அவர்களின் வசந்தத்தை கொண்டாடியது
அவர்கள் இருவரது வாழ்க்கையிலும் இனி வசந்தம் மட்டுமே வீசும்.

முற்றும்.

அகிலா வைகுண்டம்
 
Top