கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காத்திருந்த காதல்-1

Akila vaikundam

Moderator
Staff member
காத்திருந்த காதல்.

1
மீண்டும் ஒருமுறை தன்னை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள்..வானதி…

"அம்மா நா பாக்கற மாதிரி
இருக்கேனா?"…

"உனக்கென்னம்மா ராசாத்தி"….

என நெட்டி முறிந்தாள் …..அதிக விலை இல்லாத ஒரு கைத்தறி புடவை .. புடவையில் வெட்டி தைத்த ரவிக்கை….அதிலேயே தன் மகள்...பேரழகியாய் தோன்றியது தேவகிக்கு…

கணவரை இழந்தவள்…
ஆதரவு வானதி மட்டுமே…

அவளுக்குமே இருபத்திஏழு வயதை நெருங்க,திருமணம் செய்ய வசதி இல்லா காரணத்தால் அவளின் திருமணம் தள்ளிப்போய் கொண்டிருந்தத.இதோ தற்பொழுது ஒரு வரம் தகைந்து வர அருகில் உள்ள சாய்பாபா கோவிலில் பெண் பார்க்கும் படலம்...

வானதிக்கு அருகினில் உள்ள ஒரு கம்பெனியில் கணக்காளர் வேலை...கனினியில் நல்ல தேர்ச்சி பெற்றவள்….கல்லுரி படிப்பை முடிக்கும் முன்பே விபத்தில் ஒன்றில் தந்தை இறந்துவிட தனது தாயின் விடா முயற்ச்சியால் கல்லுரி படிப்பை முடித்தாள்...

தனது தாய் வீட்டு வேலை செய்யும் உரிமையாளரின் சிபாரிசின் பெயரிலேயே இப்பொழுது பார்த்துக்கொண்டிருக்கும் வேலை அவளுக்கு கிடைத்தது…

ஆயிற்று ஆறு ஆண்டுகள் ‌..தனது வருமானத்தில் சிறுக ,சிறுக சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு அவளுக்கு திருமணம் செய்ய நேரம் கூடி வந்துள்ளது…

இப்பொழுது
தெரிந்த புரோக்கர் பெண்மணி முலம் மாப்பிள்ளை பார்க்க இதோ கிளம்பியாயிற்று ….

தேவகிக்கு அவளுடன் செல்ல சிறு பயம்..எங்கே தன்னுடைய விதவை கோலத்தால் தன் மகளுக்கு அமையவிருக்கும் வாழ்க்கை தடை பட்டு விடுமோ என்று..

அதனால் இந்த வரனை கொண்டு வந்த பெண்மனியுடனே அவளை அனுப்பி வைக்கிறார்...

"தேவகி"….
"வானதி ரெடி ஆயிட்டாளா"...என்று புரோக்கர் பெண்மணி கேட்டபடியே வானதியின் வீட்டுக்குள் வந்தார்..வந்தவர் வானதியின்
அழகை பார்த்து அசந்து தான்
போனார்.

அவரைப் பார்த்ததும் வானதி
"என்னை அவங்களுக்கு பிடிக்கும்ல ஆன்ட்டி "என்று சிறு தயக்கத்துடனே கேட்டாள்.

"என்னடிம்மா இப்படி சொல்லிட்ட...என் கண்ணே பட்டுவிடும் அவ்ளோ அழகா இருக்கற,கண்டிப்பா மாப்பிள்ளைக்கு உன்னை பிடிக்கும்.
சரி வா கோவிலுக்கு நேரமாயிடுச்சி மாப்பிள்ளையும் அவரோட அம்மாவும் வந்து கிட்டே இருக்கறதா எனக்கு இப்போதான் ஃபோன் பண்ணி சொன்னாங்க சீக்கிரமா வா"... என்று அவளை அழைத்துக்கொண்டு அவர் அழைத்து வந்த கால் டாக்சியில் புறப்பட்டார்.

அன்று வியாழக்கிழமை என்பதால் சாய்பாபா கோவில் வழக்கம்போல் பரபரப்புடனும் கூட்டத்துடனும் காணப்பட்டது…இருவரும் சென்று காலணி விடும் இடத்தில் காலணிகளை விட்டு டோக்கன் வாங்கியபின் இருவரும் அங்கிருந்த கடையில் ஒரு நெய் தீபம் வாங்கி பாபாவின் முன்பு ஏற்றினார்கள்..

"நல்லா திருப்தியா சாமி கும்பிட்டியா வானதி" ?...

"ம்ம்...கும்பிட்டுட்டேன் ஆன்ட்டி"...


"சரி...அப்போ அந்த மண்டபத்து
பக்கத்தில தான் நாம வெயிட் பண்ணறதா சொல்லிருந்தேன்.. நீ அந்த மண்டபத்துக்கு பக்கத்தில போய் வெயிட் பண்ணு.

நான் கோவிலோட முன் பக்கம் அவங்க வர்றாங்களானு பார்த்ததுண்டு வர்றேன் தற்சமயம் என்னுடைய ஃபோன் நம்பர் தான் அவங்க கிட்ட இருக்கு அதனால அவங்க என்னை தான் கூப்பிடுவாங்க நான் வர்ற வரைக்கும் நீ அங்க இரு " எனக்கூறிவிட்டு கோயிலின் முன்புறம் நோக்கி வேகமாக நடந்து சென்றார்…..

வானதி அந்தப் பெண்மணி சொன்ன மண்டபத்தின் தூண் அருகில் சென்று சுற்றியும் பார்க்க ஒரு இளைஞன் இவளை நோக்கி வருவது தெரிந்தது அவனைக் கண்டதும் வானதியின் முகம் கோபத்தில் சிவக்க
ஆரம்பித்தது …

ஏனென்றால் கடந்த வாரம் மழை பொழிந்து ஓய்ந்து இருந்த ஒருநாளில் தன் தோழியின் திருமணத்திற்காக இருப்பதிலேயே மிக விலை உயர்ந்த நல்ல புடவை ஒன்றை அணிந்தபடி இவள் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்தாள்…

அப்பொழுது அவ்வழியாக வந்த அந்த இளைஞனின் கார் ஹாரனை விடாது ஒலித்தபடி இவள் அருகில் வேகமாக வர இவள் பயந்து அருகில் உள்ள ஒரு குழியில் காலை விட்டு கீழே விழுந்தாள்.


இவள் விழுந்ததை பார்த்த அந்த காரை ஓட்டி வந்த இளைஞன் காரை நிறுத்திய படி இவளை நோக்கி வேகமாக வர இவள் அதற்குள் சுதாரித்து எழுந்து நின்றாள்

அதைப்பார்த்ததும்
"அடி எதும் பலமாக பட்டுடிச்சா"? எனக்கேட்டான்...இவள் இல்லை என தலை அசைக்க

"அப்ப சரி பார்த்து,கவனமாக போங்க " என்று சொன்னபடியே மீண்டும் அவன் காரில் ஏறி பறந்து விட்டான்…

அவளின் உடல் முழுவதும் சேறும் சகதியும் அப்பிக்கொள்ள... 'திருமணத்திற்கு செல்ல முடியவில்லையே' என்ற ஏமாற்றமும் 'தன்னுடைய உடை
பாழாகி விட்டதே' ...என்ற கவலையும் சேர்த்து கொள்ள
அழுகையுடன் வீடு வந்து சேர்ந்தாள் அதன்பின் இன்று தான் அந்த இளைஞனை கோவிலில் காண்கிறாள்…

தொடரும்...
 
Last edited:

Anantha jothi

Active member
அருமையான ஆரம்பம்👌👌👌
சகதியில் விழச் செய்தவர் தான் அவளை பார்க்க வந்திருக்கும் மாப்பிள்ளையா?
 
Top