கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காத்திருந்த காதல்-10

Akila vaikundam

Moderator
Staff member
10

அவன் மிகவும் தயங்கியபடியே உள்ளே வந்தான்..வந்ததுமே அவர்களின் நிலமை அவனுக்கு நன்கு விளங்கியது…
மிகவும் ஏழ்மையான குடும்பம்..
அவளின் வருமானம் மட்டுமே அக்குடும்பத்திற்கு பிரதானம் என்று புரியவும் அவளின் மீது அவனுக்கு மிகப்பெரிய அபிப்பிராயம் உருவாயிற்று.

மகள் இரவு நேரத்தில் ஒரு ஆணை வீட்டிற்கு அழைத்து வந்ததிற்காக மகளின் மீது சிறு கோபம் கொண்டாலும்..நாகரிகம் கருதி அவனிடம் தேவகி காட்டிக்கொள்ள வில்லை…

'அக்கம் பக்கத்தில் யாரேனும் தங்களை தவறாக எண்ணி விடுவார்களோ' என்று அவளின் உள்மனம் அஞ்சுவதை ஸ்ரீதரால் நன்கு உணர முடிந்தது…

இருபெண்கள் கௌரவமாக வசித்துவரும் இடத்தில் இந்த இரவு நேரத்தில் மகள் ஒரு ஆடவனை அழைத்து வந்தால் எந்த தாய் ஒத்துக்கொள்வாள்...என்பதை நன்கு உணர்ந்திருந்த ஸ்ரீதர் மரியாதைக்காக சில வார்த்தைகள் பேசிவிட்டு உடனே கிளம்பி விட்டான்..வாசல் வரை வழியனுப்ப சென்ற மகளையே ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தாள்…

வெளியில் வந்த ஸ்ரீதர் தனது காரில் ஏறி அமரும் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை...காரை இயக்க ஆரம்பிக்கவும் அவனையே ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்து
"சரி வானதி நா கிளம்பறேன்...இனி இன்னைக்கு போல என்னைக்குமே எனக்காக எங்கேயும் காத்திருக்கக்கூடாது புரியுதா...யாருக்காகவும் உன்னுடைய நேரத்தையும் கண்ணீரையும் வீணடிக்காதே…

இந்த அளவு அன்பு யார் மேலயும் வைக்காத வானதி.அது உனக்கு கஷ்டத்தை மட்டுமே தரும் நீ ரொம்ப நல்ல பொண்ணு உனக்கானவனை நீ விரைவில் சந்திக்கனும்னு கடவுள் கிட்ட நா வேண்டிகறேன்".

"ம்ம்... எனக்கானவனை எப்பவோ அந்தக் கடவுள் என் கண்ணில காட்டிட்டாரு...ஏனோ அவருக்கு தான் அது புரியல...புரிஞ்சும் புரியாதது போல நடிக்கறாரு... ஏன்னு காரணம் தெரியல தெரிஞ்சிக்க
முயற்சிக்கிறேன்...ஆனா இதுபோல் இனி நீங்க என்னை காக்க வைக்காதிங்க...சரி நீங்க கிளம்புங்க...ரொம்ப நன்றி ஸ்ரீ... எனக்காக கோவிலுக்கு,வந்ததற்க்கும்..இப்போ என் வீட்டுக்கு வந்ததுக்கும்...அடுத்த வாரம் அதே மண்டபத்தில் சந்திக்கலாம்"..என்று அவனின் அனுமதி கேளாமலேயே அவர்களின் சந்திப்பிற்கான நாளைக் கூறியவள்..
குட்நைட் என்று கூறிய படி உள்ளே சென்று விட்டாள்.

ஹேய் என்னால வரமுடியாது,எனக்காக காத்திருக்காத எனக்கூறி முடிக்கும் பொழுது அவள் அங்கில்லை இவளிடம் தன்னிலையை எப்படி கூறுவது என்ற புதுக்கவலை சேர்ந்து கொள்ள குழப்பத்துடனே தன்னுடைய வாகனத்தை இயக்கினான்...


தேவகிக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது...தனது மகள் ஒரு ஆணுடன் வருவதும்...அவனை வீடு வரை அழைத்து வந்ததையும் நம்ப முடியாமல் வாயடைத்து நின்று கொண்டிருந்தாள்..

அவளை விசாரிக்கலாம் என்றாள் அன்று‌போல் ஏதேனும் வார்த்தைகளை வீட்டுவிட்டாள் என்ன செய்வது...ஏற்கனவே பெண் பார்க்கும் நிகழ்வுக்கு பின் மகள் தன்னுடன் சகஜமாகப் பேசுவதை நிறுத்திவிட்டாள்..

மீண்டும் தான் ஏதேனும் கேட்டு‌ மகள் அன்று சொன்னதைப்போல் சொல்லாமல் எங்கேனும் சென்று விட்டாள் என்ன செய்வது….அவளே சொல்லும் வரை காத்திருக்கலாம்..என்று நினைத்துக்கொண்டாள்..

பாராமுகமாக தாயிடம் சரிவர பேசாமலிருந்த வானதி உள்ளே வரவும் தாயிடம் தயங்கியபடியே. "அம்மா இன்றைக்கு நான் ஆபிஸ் போகல"...என்றாள்…

ஆச்சரியமாக திரும்பிப்பார்த்த தேவகி எதுவும் சொல்லாமலிருக்கே…

"ஏன்னு கேக்கமாட்டாயா"?
அதற்க்கும் தேவகி மௌனம் காக்க…
"அட்லீஸ்ட் எங்கபோன...இந்த பையன் யாரு ...இது கூட கேக்கமாட்டியாமா….அந்த அளவிற்கு நான் உனக்கு பாரமாயிட்டேனாம்மா"?…என்று சற்று கோபமாக கேட்டாள் வானதி

"அப்படியே ஒன்னு வாயில் போட்டேனா பாரு…. அது நாக்கா இல்லைன்னா தேள் கொடுக்கா?
எப்பப்பாரு மனசு நோக அடிக்கிற மாதிரி பேசிட்டு...ஏதாவது தப்புன்னு சொன்னா சொல்லாம போயிடுவேனு மிரட்ட வேண்டியது…
அப்புறம் ஏன் கேக்கலனு... அதுக்கும் கேட்க வேண்டியது... கழுதைக்கு 28 வயசு ஆச்சு இன்னும் ஒரு நல்லது நடக்கலையே ன்னு மனசுக்குள்ள நான் படுற பாடு எனக்குதான் தெரியும்" ..

"ஆனா உனக்கு என்ன?...
நீ பாட்டுக்கு பார்க்கிற மாப்பிள்ளையை வேணாம்னு சொல்லுவ.. மீறிக் கேட்டா சொல்லாம கொள்ளாம எங்காவது போயிடுவேன்னு மிரட்டுவ...எதுக்கு வம்பு அதான் இந்நேரத்துக்கு ஒருத்தனைக் கூப்பிட்டு வந்தற்கு தொடப்பத்தை தூக்காம… வாயை முடிட்டு இருக்கேன்…
கேட்க பயந்து போய்"….


"அம்மா...அன்னைக்கு ஏதோ கோபத்தில் பேசிட்டேன்...சாரிம்மா… அதையெல்லாம் இன்னுமா நீ மனசுல வெச்சுட்டு இருக்க சாரிமா நான் தெரியாம பேசிட்டேன்"….

"சரி இப்ப சொல்லு யார் அவன்… காலையிலிருந்து எங்க போயிருந்த... ஏன் ஆபிஸ் போகல"..

"அம்மா இப்ப வந்தார்ல அவரு பேரு ஸ்ரீதர்... அவரை... என்று சிறிது தயங்கியவள் ஆழ ஒரு முச்சை இழுத்து விட்டபடி...அவரை நான் காதலிக்கறேன்மா....உங்க சம்மதத்தோட கல்யாணம் செஞ்சிக்க ஆசைபடறேன் என்று ஒரே மூச்சாக சொல்லி முடித்தவள்....தாயின் முகத்தைப் பார்க்க தேவகியோ எந்த ஒரு சலனமுமின்றி அதிர்ச்சியில் இவளின் முகத்தையையே பார்த்தபடி நின்றார்...
தாயின் அதிர்ச்சி தெளிவதற்குள் அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தாள்.

"அவரை பாக்கறதுக்காக தான் நான் இன்னைக்கு ஆபீஸ் போகாம கோவிலுக்கு போனேன்.. காலைல இருந்து அங்கேயே வெயிட் பண்ணிட்டு இருந்தேன். ஆனா அவரு கடைசி பூஜை டைம்ல தான் வந்தாரு!.

அப்புறமா ரெண்டு பேரும் வர்ற வழியிலேயே ஒரு டிபன் சென்டர்ல சாப்பிட்டோம்….ரொம்ப லேட் ஆயிருச்சு ன்னு அவர்தான் என்னை வா என் கார்ல உன்னை டிராஃப் பண்ணறேனு சொல்லி கூட்டிட்டு வந்து விட்டார்மா…

வீட்டுக்குள்ள வரமாட்டேன்னு தான்மா சொன்னாரு ஆனா நான் தான் வற்புறுத்தி கூப்பிட்டு வந்தேன் என்மேல கோபமா அம்மா?"என்று தேவகியின் தோளின் மீது கைகளை வைத்தபடி கேட்டாள்.
மகள் கூறியவற்றை பொறுமையாகவும் சற்று அதிர்ச்சியாகவும் கேட்டுக் கொண்டிருந்த தேவகி மகள் தோளை தொட்டு கேட்கவும் தான் இயல்புக்கு வந்தாள்...

"ஹான்....என்ன கேட்ட...?கோபமானியா?
கோபம் தான் வானதி ஆனா நா கேக்கற கேள்விக்கு சரியா பதில் சொல்லு" என்ற தேவகி சிறு யோசனைக்குப்பின்...




ஏன்டி இந்த பையனை பார்க்கவா காலையிலிருந்து ஒரே இடத்தில சாப்பிடாம கொள்ளாமல் காத்துக் கிடந்தே அந்த அளவுக்கு அவனை உனக்கு புடிச்சிருக்கா"!…என்று சற்று ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியிலேயே கேட்டாள்.
"ஆமாம்மா"

"அந்த பையன் கிட்ட உன்ன எனக்கு பிடிச்சிருக்குனு சொன்னியா"?..
"நேரடியா சொல்லல...ஆனா ஜாடையா சொன்னேன்..."

"ஓ....இந்த பையனுக்காகதான் நீ காத்திருந்தேனு அவனுக்கு தெரியும்ல"?..

"தெரியும்மா ஆனா இனிமே காத்திருக்க வேணாம்னு சொல்லி இருக்காரு"

" என்ன தெரியுமா? வேற ஏதாவது சொல்லுச்சா"?….

"இல்லம்மா"..

'ரொம்ப அழுத்தகாரனா இருப்பான் போல ...ஒருத்தி தன்னை காதலிக்கறானு புரியுது...அவ காலைல இருந்து தனக்காக காத்திருக்கிறாள்னு தெரிந்தும் கூட அதை வெளி காட்டிக்கலனா என்ன மாதிரி மனுஷன்...கடவுளே இந்த பொண்ணு வேற ஆசைய வளர்த்துக்கறா...என் பொண்ணுக்கு நீ தான்பா துணை இருக்கனும்' என்று மகளுக்காக புதிதாக ஒரு கவலையையும் மனதினில் சேர்த்துக்கொண்டார்….பிறகு அவளிடம் திரும்பியவள்

"இங்க பாரு வானதி நாம மட்டும் ஆசையை வளர்த்துக் கிட்டா போதாது...அந்த தம்பி மனசிலேயும் நீ இருக்குறியானு தெரிஞ்சிக்கோ...பார்த்தா பெரிய இடம் போல் தோணுது...கொஞ்சம் கவனம் மகளே….அவன் மனசில என்ன இருக்குன்னு முதல்ல தெரிஞ்சிக்கோ... தேவையில்லாமல் ஆசையை வளர்த்துக்காதே"...என்று சிறு கண்டிப்புடன் மகளுக்கு தேவகி அறிவுறை வழங்கினாள்…
தாயின் இந்த அறிவுறுத்தல் வானிதிக்கு எரிச்சலை ஏற்படுத்த தாயை சமாதானப் படுத்த சரி என போலியாக தலையசைத்தவள்
இனி ஸ்ரீதரை சந்திப்பதென்றால் தாயிடம் கூறக்கூடாது என முடிவெடுத்தாள்..

அதன் பின் வந்த வியாழனில் அவனை சந்திக்க கோவிலுக்குச் சென்றாள்….அவன் அன்று வரவில்லை ஏமாற்றத்துடன் வீடு வந்தவள்... மறுவாரம் ‌வருவானோ என்று மீண்டும் கோவிலுக்கு சென்றாள்…அவளை ஏமாற்றாமல் அவனும் வந்தான்…. வந்தவரின் முகமோ….சொல்லென்னா சோகத்தில் இருந்தது.‌..இவள் அவனின் அருகில் செல்ல எத்தனிக்கும் வேளையில் வராதே எனும் ஜாடை செய்தபடி வந்தவன்…

"ஏன் வானதி இப்படி என்னை கொல்லாம கொல்லற...நா என்ன செய்தா என்னை நீ வெறுப்ப"?.. என்று நேரடியாகவே கேட்டான்…

"எதுக்காக நான் உங்களை
வெறுக்கனும் "?..என அப்பாவியாக கேட்டாள்…

"ஒன்னும் தெரியாத மாதிரி என்னால போக முடியாது வானதி..
நீ யாருக்காக காத்திருக்கற எதற்காக காத்திருக்கற...எல்லாம் என்னால் புரிந்து கொள்ள முடியுது...ஆனால் நீ நீனைப்பது போல என்னால இயல்பான ஒரு வாழ்க்கை வாழ இயலாதும்மா….புரிஞ்சிக்கோ,

உனக்கானவன் நான் அல்ல...நான் உன் அம்மாட்ட பேசறேன்... வேணும்னா நானே உனக்கு ஏற்றவனாக பார்த்து கல்யாணம் செஞ்சி வைக்கிறேன்...இதுபோல் எனக்காக காத்திருந்து எனைக் கொல்லாதே"…

அவனின் பேச்சில் கோபமுற்றவள் வீராப்பாக
"நான் ஒன்னும் உங்களுக்காக கோவிலுக்கு வரல...சாமி கும்பிட தான் வந்தேன்,யாரும் எனக்காக மாப்பிள்ளை பாத்து கஷ்டபட வேணாம் இங்க யாரும் கல்யாணத்துக்கு அலையல"…என்று கூற அவளின் இந்த பேச்சில் மேலும் கோபமுற்றவன்

"அரைஞ்சேனா பாரு பொண்ணுனு கூட பார்க்க மாட்டேன்... கிளிப்பிள்ளைக்கு சொல்வதுபோல் சொல்லிட்டு இருக்கேன் நீ என்னனனா சொன்னதையே சொல்லற...எனக்காக நீ வெயிட் பண்ணலல்ல ...அப்போ இப்போவே உன் வீட்டுக்கு போ ..இனி நான் உன்னை இங்கு பார்க்கவே கூடாது"…என்று விரட்டினான்..

அவனைகாண ஆசையாக காத்திருந்த அவளுக்கு அவனின் இப்பேச்சும் செயலும் மிகுந்த ஏமாற்றத்தை தர எப்படியாவது தனது மனதினை அவனுக்கு புரிய வைக்கும் நோக்கில் கண்கலங்க "ஆமா...நா உங்கள தான் பார்க்க வந்தேன்...
நா வருவேன் ..நீங்க யாரு? என்னை கேள்வி கேட்க….எனக்கு உங்கள பிடித்திருக்கு….காரணம் தெரியல…
உங்கள் பார்க்க வருவேன்….நீங்க என்னோடு பேசலனாலும் நா உங்களை தூரத்தில் இருந்து பார்த்திட்டு போவேன்...நீங்க வேணா என்னோடு பேசாதீங்க …. அதுக்காக என்னை இங்க வராதேனோ உங்களை பார்க்கவேணாம்னுல்லாம் சொல்லாதீங்க அது என்னால் கண்டிப்பா முடியாது"..என்ற படி அழ ஆரம்பித்தாள்…

பெண்களின் ஆயுதம் கண்ணீர்... ஆண்களின் பலகீனம்...அக்கண்ணீரைக் காண்பது…

இனி இவளுக்கு பேசிப் புரிய வைப்பது கஷ்டம் என புரிந்து கொண்டவன் அவளின் கண்ணீரில் மனம் இளக ஆரம்பித்தான் அவன் அடிமனதில் குடியிருந்த வானதி மெதுவாக அவனின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து தொடங்கியிருந்தாள் ஏதோ ஒன்று அவனுக்கும் அவளை பிடிக்க தொடங்கியாயிற்று...ஆனால் உடனடியாக அவளைப் போல் அவன் மனதில் இருப்பதை வெளிப்படையாக அவனால் கூற முடியவில்லை தற்போது அவளின் அழுகையை நிறுத்தி, சமாதானப்படுத்தி அவளின் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் அது மட்டுமே கடமையாக தெரிந்தது அவனுக்கு,அழும் அவளிடம் ஆறுதலாக பேசத் தொடங்கினான்.

"போதும்மா அழாத….
உன்னை சந்தோஷப் படுத்திதான் பார்க்க முடியவில்லை…அட்லிஸ்ட் என் முன்னாடி யாவது அழாமல் இரு"…

"எனக்கு ஒரு வாரம் யோசிக்க டைம் குடு... அதுக்கப்புறம் பேசிக்கலாம்...அது வரைக்கும் எதையும் என கிட்ட இருந்து ஏதிர் பார்க்காதே…இதுல என்னுடைய மொபைல் நம்பர் இருக்கு...என்று ஒரு விசிட்டிங் கார்டை அவளிடம் தந்தவன்….அவசியம்னா மட்டும் என்னை கூப்பிடு... இப்படி நீ வந்து காத்துகிடக்காதே"…
என்ற படி அவன் சென்றுவிட்டான்…
 
Top