கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காத்திருந்த காதல்-11&12

Akila vaikundam

Moderator
Staff member
அவன் கொடுத்துச் சென்ற அலைபேசி என்னையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள் அதை தனது ஹேண்ட் பேக்கில் பத்திரப்படுத்தி கொண்டவளின் இதழ்கள் தானாக புன்னகையை சிந்தியது…

இப்பொழுது அவளுக்கு சிறிது நம்பிக்கை பிறக்கலாயிற்று... அவனின் அலைபேசி எண்ணை கொடுத்த அவனால் விரைவில் அவள் மீது கொண்ட காதலையும் தன்னிடத்தில் வெளிப்படுத்துவான் என்ற நம்பிக்கையுடன் செல்லும் அவனை காதலுடன் பார்த்தவள் இனி அவனாக தன்னை தேடி வரும் வரை அவனை தொந்தரவு செய்யக்கூடாது அவன் மனதில் தனக்கான இடம் இருப்பது உறுதி என்று நம்பியவள் அந்தக் காதலே அவனை தன்னிடத்தில் சேர்க்கும் என்று அந்த இடத்தை விட்டு ஒரு முடிவுடன் சென்றாள்...

ஆனால் இங்கு ஸ்ரீதரின் நிலையோ வேறு விதமாக இருந்தது அவளிடம் கோபமாக பேசிவிட்டு தனது அலைபேசி எண்ணை கொடுத்து விட்டு வந்தவனின் மனமோ காரணமே இல்லாமல் அவனின் அலைபேசியை நொடிக்கொருமுறை எடுத்து பார்க்க சொல்லியது…

ஏன் என்று அவனுக்கு புரியவில்லை இரண்டு மூன்று நாட்கள் அவளின் அலைபேசி குறுஞ்செய்திகளுக்கும் அவளின் குரல் வழி செய்தியை கேட்பதற்காகவும் காத்திருந்தவன் நான்கு நாட்களுக்குப் பிறகுதான் புரிய தொடங்கியது எதற்காக அவளிடமிருந்து குறுஞ்செய்தியும் அவளின் அழைப்பையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். என்று கண் மூடி யோசிக்கும் பொழுது தான் தெள்ளத் தெளிவாக விளங்க ஆரம்பித்தது

ஆம் அவனும் வானதியை காதலிக்கிறான் இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது மறு வியாழன் வர கண்டிப்பாக அவள் தனக்காக வந்து காத்திருப்பாள் வழக்கம்போல அவளை சற்று சீண்டிப் பார்க்க வேண்டும் ஆனால் இம்முறை அவளை அழ வைத்து பார்க்க கூடாது என்று எண்ணியவன் அந்த வார வியாழக்கிழமை மிகவும் காலையிலேயே பல ஆண்டுகளுக்குப் பிறகு தன்னை மிகவும் அழகாக அலங்கரித்துக் கொண்டு உயர் ரக பெர்பியூம் ஒன்றையும் உடல் முழுவதும் அடித்துக் கொண்டு கோயிலுக்குச் செல்ல அங்கோ வானதி வரவில்லை காலை பூஜை முடியும் வரை சாமிகும்பிடுவது போல் இருந்தவனின் கண்கள் என்னவோ தேடியது வானதியைத்தான்.

அவள் வரவேயில்லை கோவிலில் அவனுக்கு என்று ஒரு பெயர் இருக்கிறது அந்த பெயரையும் அவனால் கெடுத்துக் கொள்ள முடியவில்லை அதனால் சற்றே ஏமாற்றத்துடன் வீடு வந்தவன் மதியம் மற்றும் இரவு நேரங்களில் பூஜை செய்யும் குழுக்களிடம் வானதியை பற்றி ஜாடையாக விசாரித்தான் அவள் வரவில்லை என்று கூறவும் ஏனோ மனம் அவனுக்கு வெம்ப தொடங்கியது…

இதுவரை அவன் கண் மூடினால் வானதி அவன் நினைவிற்கு வரவே மாட்டாள் ஆனால் இன்றோ கண்மூடினால் அவளின் ஒவ்வொரு முகபாவங்களும் அவனுக்கு வந்து வந்து மறையத் தொடங்கியது முதல் முறை அவள் பயந்தபடி குழிக்குள் விழுந்ததாகட்டும் பிறகு கோவிலில் அவனிடம் சண்டையிட்டது ,
அதன்பிறகு அழுதபடியே சென்றது, மீண்டும் அவனிடம் மன்னிப்பு கேட்டது, அவனை காதலிக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லியது இப்படி பல விதமான நினைவுகள் அவனை வாட்டத் தொடங்கியது இதுதான் காதலா?

தனது மனதுக்குள் வந்து ஒரு வாரத்திலேயே தன்னை இந்த அளவு இம்சை செய்யும் இந்தப் பெண்ணை தான் என்ன செய்தால் தகும் என்று சிறிதளவு வானதி மேல் கோபம் கூட வந்தது அவனுக்கு

பிறகு யோசிக்கும் பொழுது தான் ஒரு விஷயம் அவனுக்கு புரிந்தது.

காதல் வந்த ஒரு வாரத்திலேயே தனக்கு அவளின் நினைவுகள் இவ்வளவு வேதனையைக் கொடுக்கும் பொழுது கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளாக அவள் இந்த விஷயத்தை தானே தன்னிடம் கூறிக் கொண்டிருக்கிறாள் அவளுக்கு இந்த காதல் எவ்வளவு வேதனையை கொடுத்திருக்கும்?

தன்னுடைய நினைவுகளும் அவளை இப்படித்தானே பாடாய் படுத்தியிருக்கும் என்று எண்ணியவன் ஒரு முடிவுடன் மறுவாரம் கோவிலுக்கு சென்று அவளுக்காய் காத்திருக்கத் தொடங்கினான்...இம்முறையும் அவள் கோவிலுக்கு வரவில்லை அவளின் அலைபேசி எண்ணை வாங்கிக் கொள்ளாத தனது முட்டாள்தனத்தை எண்ணி தனக்கு தானே நொந்து கொண்டாள் பிறகு அவள் முன்னோரு நாள் அவளின் தாயாருக்கு அவனின் ஃபோனில் இருந்து அழைத்த நம்பரை தேடித்தேடி சோர்வுற்றான்…

இரு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் அவனுக்கு பள்ளி வேலைகளும் சில சொந்த வேலைகளும் வர தற்காலிகமாக அவனின் கவனத்தை அதில் செலுத்த அவன் மனதில் இருந்து வானதி மெல்ல மறையத் தொடங்கி இருந்தாள்



அதன் பின் இருவாரமாக இருவருமே சந்தித்துக் கொள்ளவில்லை..இருவாரங்கள் கழித்த பின் மீண்டும் ஒரு நாள் கோவிலில் வைத்து சந்தித்துக்கொண்டனர்...ஆனால் இம்முறை..
அதிக அளவு உணர்ச்சி வசப்பட்டது என்னவோ ஸ்ரீதர் தான்...அவளைக்கண்டவுடன் வேகமாக ஒடிவந்தவன்...அவளின் கைகளை பிடித்து படி

"ஏன் நீ இவ்ளோ நாளா கோவிலுக்கு வரல"?.. என குரல் தழுதழுக்க கேட்டான்...புரியாமல் அவள் விழிக்க கோவிலென்றும் பாராமல் அவளின் முகத்தை கைகளில் தாங்கியவன் அவளின் நெற்றியில் இதழ் பதிக்கச்செல்ல... சுதாரித்துக் கொண்ட அவள்…

"ஸ்ரீதர் என்னபண்ணறிங்க"...என அதிர்ச்சியில் கேட்டாள்…
அப்பொழுதுதான் சுற்றிலும் கவனித்தவன்….

"ஒஒஒ சாரி…. மன்னிச்சிடு...
இங்கே இப்போவே கல்யாணம் செய்துக் கலாமா....

இந்த சின்ன பிரிவே எனக்கு உணர்த்திடுச்சி நீ இல்லாம நா இல்லனு
உன்ன பாக்காம எனக்கு பைத்தியமே பிடிச்சிடுச்சி…..

இப்போ தான் உன்நிலமை என்னனு எனக்கு புரியுது….இனிமேலும் உனக்காக என்னால காத்திருக்க முடியாது...நீ உன் அம்மாகிட்ட பேசு ….நானும் என் அம்மாகிட்ட பேசிட்டு உனக்கு அடுத்த வாரம் நா சொல்லறேன் …உன்னோட ஃபோனை குடு"...என்றவன் அதிலிருந்து தனக்கு ஒரு அழைப்பு கொடுத்து தனது போனில் அவளுடைய எண்ணை...மை வேர்ல்டு என்று சேவ் செய்தவன்…

அப்பொழுதுதான் கவனித்தான்..அவனின் நம்பரை அவள் சேவ் செய்யவில்லை என்று...புருவம் சுருக்கி அவளைக் காண…

அவளோ "மனப்பாடம்
ஆகிவிட்டதென" சிரித்தாள்…

"அழகி"...என்று வாய்விட்டு கூறியவன்..

"வா உன் வீட்டில விடறேன்"...என்று அவளை அழைத்துச்சென்றான்…

இம்முறை சிறிதும் தயக்கம் இன்றி அவனால் தேவகியிடம் பேச முடிந்தது...அவர்களின் குடும்பம் பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டவன்… தனக்கு வானதியை மிகவும் பிடித்திருப்பதாகவும் அவளை திருமணம் செய்து கொள்ள ஆசை படுவதாகவும் கூறினான் ...நீங்கள் ஒத்துக்கொண்டால் அடுத்த வாரமே கோவிலில் மிக எளிமையான முறையில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என அவரிடம் சொன்னான்...தேவகியும் தனது சம்மதத்தை உடனே
தெரியப்படுத்தினார் .ஏனென்றால் தன் மகள் அவனுக்காக உருகிக் கொண்டிருப்பதை அறிந்தவள் ஆயிற்றே..

"வானதியிடம் ஒருவாரம் வரை எதைப்பற்றியும் யோசிக்காத ...நான் எனது அம்மாவிடம் பேசிய பின் நமது திருமணத்தை வைத்துக்கொள்வோம்...அடுத்த வாரம் மறக்காமல் கோவிலின் அந்த மண்டபத்திற்கு வந்துவிடு...காத்திருக்க வைத்துவிடாதே" என்று கோரிக்கையை வைத்துச்சென்றான்….

அதன் பின் வந்த நான்கு நாட்களும் போனில் கதை பேசினார்கள்... எதையும் விடவில்லை...அவ்வளவு கதைகள்...நான்கு ஜென்மங்கள் வாழ்ந்த உணர்வு இருவருக்குமே….ஒருவரை பிரிந்து மற்றவர்களால் வாழ்வே முடியாது என்னும் நிலையில் இருந்தனர்... இருவருமே வெளிப்படையாக அவர்களின் காதலைச்சொல்லவில்லை…

ஆனால் உருகி உருகி காதலித்துக்கொண்டிருந்தனர்..
அவன் இல்லாத வாழ்க்கையை அவளால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை...அவனோ ஒரு படி மேலே சென்று இப்பொழுதே அவளை ஆண்டுவிடவேண்டும் என்ற எண்ணம்…

தங்களின் காதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல இருவருமே நாள்பார்த்துக்காத்துகொண்டிருக்க….
அவனிடத்தில் இருந்து அழைப்பு….பல விசாரிப்புகள் முடிந்ததும்…

12

வானதி நான் எனது அம்மாட்ட பேசிட்டேன் அவங்களுக்கு உன்னை நான் கல்யாணம் செய்றதுல பரிபூரண சம்மதம் நீ உன் அம்மாகிட்ட கேட்டியா... என்னைக்கு நம்மளோட திருமணத்தை வைக்கலாம்னு???

அம்மா தான் அன்னைக்கே சொல்லிட்டாங்களே அவங்களுக்கும் முழு சம்மதம்...நீங்க என்னைக்கு சொல்லறீங்களோ அன்னைக்கே வைச்சிக்கலாம்னு சொல்லிட்டாங்க..

என்னோட அம்மா எப்போ வேணாலும் உன்னை பார்க்க உன் வீட்டுக்கு வருவாங்க அதனால நீ எங்கேயும் போயிடாத நாளை மறுநாள் நம்மளோட திருமணம்
நாளை மறுநாள் மறக்காமல் கோவில் மண்டபத்திற்கு வந்து வீடு….நான் உனக்காக முதல்முறையாக காத்திருக்க போகிறேன்….அதிகம் காக்க வைத்துவிடாதே வானதி"…

" காத்திருங்க….எவ்ளோ நாள் என்னை காக்க வச்சிருக்கீங்க…. சரி கல்யாணத்துக்கு ஏன் மண்டபத்தில
காத்திருக்கனும்
"…தெரிந்தே அவனிடம் வம்பு வளர்த்தாள்….

"ம்ம்….ரொம்ப நாளா ஒரு புள்ள தனியா சுத்தறாளாம் அவளுக்கு அந்த மண்டபத்தில் வச்சி தான் நான் தாலி கட்டப்போறேன்".‌‌

"ஒஒஒ தனியா சுத்தற பொண்ணுக்கெல்லாம் தாலி கட்டுவீங்களா"?

"மொதல்ல வா அப்புறமா பேசுற இந்த வாய்க்கு தெரியும் ஏன் என்று"..என்றபடி சரசமாடினான்….

"வருவல்ல...உன்னைபார்க்காத ஒவ்வோரு நொடியும் ஒரு யுகம் போல தோணுது பா"….என்றான்


"நாம இது வரை ஐ லவ் யூ சொல்லிக்கவே இல்லை"…

"ம்ம் ஆமா"…

"அது ரொம்ப தப்பாச்சே...கண்டிப்பா சொல்லிஆகனுமே"...

வானதியோ "என்ன சொல்லனும் இப்பவே சொல்லுங்க?….எதுக்கு நாளை மறுநாள்வரை காத்திருக்கனும் சொல்லுங்க?"…

"ம்ஹூம்….அது உன் கண்களை பார்த்துதான் சொல்லனும்...அந்த நிமிஷம் உன் முகபாவத்தை ரசிக்கனும்...‌அதனால நேரில் தான்….ஆனா நீ வேணா இப்போ சொல்லலாம்"….

"என்ன சொல்லனும்"?….

"ஏதாவது சொல்லனும்னு தோணிச்சின்னா"…

"அப்படியெல்லாம் எதுவுமில்லை"…

"நிஜமா எதுவுமே இல்லையா"

"எதுவுமே இல்லை நான் என்ன சொல்லனும்னு சொல்லுங்க…. நா வேணும்னா உங்களுக்கு திருப்பி சொல்றேன்"…

"நாளைக்கு மறுநாள் வரைக்கும் காத்திருந்து அப்புறம் பாரு அந்த பேசுற வாய்க்கு இருக்கு"…..

"நான் வெச்சிட்டேன்...பை"
என்று வெட்கப்பட்டபடி அழைப்பை துண்டித்தவள்….

அம்மா கல்யாணத்துக்கு அவங்க அம்மா வர்றாங்களாம் ,நாளைக்கா ,இல்ல நாளை மறுநாளானு தெரியல...என்றாள்

தேவகியோ... "மாப்பிள்ளை வீட்டில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள்... மாப்பிள்ளைக்கு எந்த வேலை"அவனின் தாயார் எங்கிருக்கிறார்..இப்படி பல

அப்பொழுதான் வானதிக்கே தோன்றியது தனக்கு ஸ்ரீதரை பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை பெயரைத் தவிர ……
முன்பு எப்போதோ ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் என்று சொன்னதாக ஞாபகம் மற்றபடி எவ்வளவோ பேசியிருக்கிறார்கள்….

ஆனாலும் அவனின் குடும்ப நிலவரங்கள் பற்றி அவன் இதுவரை வாய் திறக்கவில்லை முதல்முறை அவளுக்கு ஸ்ரீதரின் மேல் ஒரு சிறு சந்தேகம் உருவாயிற்று….

இவளின் முகம் மாறுதலை கவனித்த தேவகி பூஜை அறையில் உள்ள சாமி படத்தின் முன்பு நின்று கொண்டு படி 'ஆண்டவா எங்களை சோதிக்காத இந்த வரனையாவது என் மகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லாம முடித்து வை...உனக்காக நான் காசு எடுத்து வைக்கிறேன் என்று காணிக்கை எடுத்து வெள்ளை துணியில் முடிந்து வேண்டிக் கொண்டாள்'…..

தாய் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாத வானதி…….ஸ்ரீதரிடமே கால் செய்து அவனின் விபரங்களைக் கேட்கலாம் என நினைத்து போன் செய்தாள்….ஆனால் நீங்கள் தொடர்பு கொண்ட நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்...என மீண்டும் மீண்டும் வந்தது‌….இவளுக்கோ முதல் முறை அவனின் மேலும் அவள் காதல் மேலும் சந்தேகம் வந்தது…

தூங்க எவ்வளவு முயன்றும் அன்று இரவு அவளுக்கு தூங்கா இரவானது…


தொடரும்...
 
Top