கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காத்திருந்த காதல் -13&14&15

Akila vaikundam

Moderator
Staff member
13



முதல் நாள் உறக்கம் இல்லாமல் தவித்தவள் அவனின் அழைப்பிற்க்காய் காத்திருந்தாள்

அவனைப்பற்றி அறிந்து கொண்டே ஆக வேண்டும் இல்லையென்றால் அவளாள் முழுமனதாக திருமணத்திற்கு தயாராக முடியாது…

இப்பொழுது திருமணம் செய்யலாமா வேண்டாமா என்று குழப்பத்துடனே இருக்கும் பொழுதுதான் காலையில் அவன் இடத்தில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துவிடுகிறது… அவனின் திருமணத்திற்காக தாய் வந்து கொண்டிருப்பதாக…

இது தெரியாமல் தேவகியோ
மகளின் திருமணத்திற்கு க்காக முன்பு எப்பொழுதுதோ மருதமலைக்கு நடந்து வருகிறேன்...என்று வேண்டி இருக்க… அருகில் உள்ள ஒரு பெண்மணியை அழைத்துக்கொண்டு அதிகாலையிலேயே நடந்து செல்ல ஆரம்பித்துவிட்டார்….அவரின் வேண்டுதல் முழுக்க மகளின் இத் திருமணம் கண்டிப்பாக ஸ்ரீதருடன் நடைபெறவேண்டும் என்பதே….

நாளை திருமணம் ஆனால் அதைப்பற்றிய எந்த சித்தனையும் அவளுக்கில்லை
என்பதால் மிக மெதுவாகவே எழுந்தவள் தன்னுடைய அன்றாட பணிகளை மெதுவாக செய்து கொண்டிருந்தாள் அப்போது வீட்டின் வாசலில் ஒரு சொகுசுக் கார் ஒன்று வந்து நின்றது யாரென உள்ளிருந்து பார்க்க ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி இறங்கினார்….பார்த்ததுமே வானதியால் புரிந்துகொள்ள முடிந்தது அப்பெண்மணி ஸ்ரீதரின் தாயார் என்று…

கழுத்தில் கனமான ஒரு சங்கிலியும் பெரிய அளவிலான ஒரு வைரக்கல் பொருத்திய கம்மலும் கைகளில் வைரத்தால் ஆன வளையல்களுடன்... பாந்தமான ஒரு சாப்ட் சில்க் புடவையுடன் பார்க்கவே அப்பெண்மணி மிக உயர்ந்த இடத்துப் பெண் என்பதை பறைசாற்றியது…. அவரைப் பார்க்கவும் வானதியின் மனதில் சிறு நிம்மதி... சந்தோஷத்துடன் அவரை வரவேற்க வாசலுக்கு சென்றாள்.

உள்ளே வந்ததுமே இவளைப் பார்த்து புன்னகை செய்தார்…

" வானதி"?...

"ஆ...ஆமாம் ஆன்ட்டி"..


"அம்மா இல்லையா வானதி"

"அம்மா கோவில் போயிருக்காங்க வர எப்படியும் மதியம் ஆயிடும்"

"அடடா ஃபோன் பண்ணிட்டு வந்திருக்கலாமோ? அம்மாவையும் பாக்கனும்னு வந்தேன்...பரவால்ல சாயங்காலமா கூட வந்து பாத்துக்கலாம்"...என்று பேசியவரை சற்று குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்த வானதியிடம்


"மொதல்ல நான் யாருன்னு சொல்லுறேன் நான்தான் ஸ்ரீதரோட அம்மா மீனாட்சி….என்றவரிடம்



" பார்த்ததுமே ஜாடை தெரியுது ஆன்ட்டி... வாங்க...உக்காருங்க" என்றவள் அவர் அமரும் முன்பு அவரின் காலில் விழுந்து "என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க ஆன்ட்டி" என்றாள்…


"நல்லாயிரும்மா...கடவுள் உனக்கு எந்த குறையும் வைக்ககூடாது "என்று வாழ்த்தினார்

"ஏதாவது சாப்பிடறிங்களா ஆன்ட்டி"?..‌

"இல்லமா ஒன்னும் வேணாம்" ...

"இருங்க ஒரு நிமிஷம் ஆன்ட்டி வர்றேன்" என்று உள்ளே சென்று வானதி அவசரமாக ஒரு எலுமிச்சை பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தாள்…

மறுக்காமல் வாங்கிக் குடித்த வானதியை பார்த்த மீனாட்சி ரொம்ப "நல்லா வளர்த்திருக்காங்க உன்னை என் சம்மந்தியம்மா"...என்றவரைப்பார்த்து சங்கோஜத்துடன் நின்று கொண்டிருந்தாள் வானதி...அவளை இது போலெல்லாம் யாரும் பாராட்டியது இல்லை முதல் முறையாக முகத்திற்கு நேராக மீனாட்சி பாராட்டியதும் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் கைகளைப் பிசைந்தபடி நின்று கொண்டிருந்தாள்...


"உன்னை பார்த்ததுமே என் மனசு
வயறு ரெண்டுமே நிறைத்தது...முதல்ல இப்படி நீ உட்காரு என்ன பற்றியும் ஸ்ரீதர் பற்றியும் எங்க குடும்பத்தைப் பற்றியும் நீ தெரிஞ்சுக்கோ அப்பதான் நீ சந்தோஷமா எங்களோட வந்திருக்க முடியும் "என்றவர் அவர்களின் குடும்ப விவரங்களை வானதியிடம் சொல்ல தொடங்கினார்.



‌என் பூர்வீகம் தென்காசி
பக்கத்தில …
ஒரு சின்ன கிராமம் தான் வானதி என் ஊரு…கட்டிக் கொடுத்தது மூணாறுமா"…

ஸ்ரீதர் எனக்கு ஒரே பையன் அதுவும் வரம் வாங்கி வந்த பையன் வானதி
அவனுக்கு முப்பத்தி நாலு வயது ஆச்சிம்மா...கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டு இருந்தான்….எந்த பொண்ணை பாத்தாலும் போட்டோவ பாக்கறதுக்கு முன்னாடியே பொண்ணு புடிக்கலனு சொல்லிடுவான்…

இத்தனை வருஷத்துக்கு அப்புறம் மொத மொதல்ல வாய்திறந்து எனக்கு ஒரு பொண்ணு புடிச்சிருக்கும்மா...வந்து பாருங்கனு சொன்னான்.

அப்படி என்னதான் இருக்குன்னு தான் உன்னை பார்க்க வந்தேன்.

ஆனா உன்ன பாத்ததும் தான் புரிந்தது அவன் கல்யாணத்துக்கு ஏன் ஒத்துகிட்டு இருக்கான்னு…..

நான் பார்த்திருந்தா கூட உன்னை மாதிரி வராதும்மா.


பார்க்க ரொம்ப லட்சணமா இருக்க...எவ்வளவு பாந்தமாக மரியாதையா பெரியவர்களை மதிக்க தெரிஞ்சிருக்கு

என் மகன் உன் போட்டோவை வாட்ஸ் ஆப் பில் அனுப்பினான்…..அதுல பார்க்கறதை விட நேரில ரொம்ப அழகா இருக்க…


ரொம்ப நன்றி ஆன்ட்டி என்றவள் இப்பொழுது கொஞ்சம் பயத்தை விட்டபடி அவரின் அருகில் அமர்ந்தாள்...


ஆமா நீ என்ன படிச்சிருக்க….

வானதி அவளின் படிப்பு விவரங்களை கூறியவள் பிறகு தயங்கியபடியே ஸ்ரீதரை பற்றிய சில விஷயங்களை கேட்கத் தொடங்கினாள் ஆனால் மீனாட்சியோ அவள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக அடுத்தடுத்த பதில்களை கொடுக்க தொடங்கினார்...



"ஆன்ட்டி‌….நான் இப்போ உங்க கிட்ட இதை கேட்கறது சரியா தப்பான்னு கூட எனக்கு தெரியல ஸ்ரீதரை பத்தின விஷயங்களை அவர் கிட்ட தான் கேக்கணும் அவர் இல்லாத சமயத்துல உங்ககிட்ட விசாரிக்கிறது தப்புதான் என்ன மன்னிச்சிடுங்க ஆனாலும் சில விஷயங்கள் தெரிஞ்சுக்காம என்னால முழு மனசா கல்யாணத்துக்கு சம்மதிக்க முடியாது நேத்து ராத்திரியிலிருந்து எனக்கு ரொம்ப குழப்பம் ப்ளீஸ் ஆன்ட்டி என்னை தப்பா நினைக்காம நான் கேட்கிற ஒரு சில விஷயங்களுக்கு கொஞ்சம் பதில் சொல்லுங்க என்று அவளின் உள்ளதை மறைக்காமல் வெளிப்படையாக மீனாட்சியிடம் கேட்டாள்


அவளின் இந்த வெளிப்படையான பேச்சு மீனாட்சிக்கு இன்னும் பிடித்துப்போனது ஏனென்றால் சில பெண்கள் எதையும் வெளிப்படையாக கேட்காமல் மனதிற்குள் வைத்துக்கொண்டு தான் இருப்பார்களே தவிர இதுபோல் வெளிப்படையாக கேட்டு தங்களை தெளிவுபடுத்திக் கொள்ள மாட்டார்கள் இதுவரை மீனாட்சி அது போன்ற பெண்களை தான் பார்த்திருக்கிறார்.


அம்மாதிரியான பெண்களை கண்டு சில சமயம் சலித்தும் இருக்கிறார் என்ன பெண்கள் இவர்கள் எதையும் வெளிப்படையாக கேட்காமல் தனக்குள்ளேயே வைத்து புழுங்குவது என்று….


ஆனால் வானதி அப்படி இல்லை எனக்கு சில விஷயங்கள் தெரிய வேண்டும் அதை எனக்கு கூறு என்று மறைமுக கட்டளையுடன் ஒரு கோரிக்கையை வைத்தபடி பேசிக்கொண்டிருக்கிறாள்.


புன்னகையுடன் சொல்லு வானதி... எதுவாயிருந்தாலும் உனக்கு நான் தெளிவுபடுத்தறேன்
இந்த விஷயம் என்னையும் உன்னையும் தவிர என்னைக்கும் ஸ்ரீதர் கிட்டயும் போகாது என்று உறுதியும் கொடுத்தார்…

அய்யோ ஆன்ட்டி அந்த அளவுக்கு பெருசால்லாம் எதுவும் இல்ல சும்மா சாதாரணமா ஸ்ரீதர் பத்தின விஷயங்களைத் தெரிஞ்சுகதான்

எப்படி இருந்தாலும் இந்தக் கல்யாணம் நடக்கத்தான் போகுது சில விஷயங்கள தெளிவு படுத்தி கிட்டா கொஞ்சம் சந்தோஷமா கல்யாணத்தை பண்ணிக்க போறேன் அவ்ளோதான்


தாலி கட்டற சமயத்துல ஸ்ரீதர் கையால ஒரு உறுத்தலோட ஏன் தாலியை வாங்கிக்கனும்ங்கற எண்ணம்…

நான் தெரிஞ்சிக்கிட்டா என் அம்மா கிட்டயும் சொல்லிவிடுவேன் ஏன்னா இந்த கல்யாணத்துல என்னை விட அதிக சந்தோஷமும் கலக்கமும் அம்மாகிட்ட தான் இருக்கு…


இப்போ இந்த கல்யாணம்
சரியா தப்பான்னு யோசிச்சு கிட்டு இருக்காங்க…

ஸ்ரீதர் பத்தின விஷயங்களை அவங்க கிட்ட சொல்லிட்டா மாப்பிள்ளையோட குடும்பம்... சுபாவம்... இப்படித்தானு அவங்களும் புரிஞ்சுபாங்க

எப்படி இருந்தாலும் ஸ்ரீதர் தவிர வேற ஒருத்தர் என் வாழ்க்கையில் வரப்போறதில்ல

அவர பத்தி தெரியாம ஏன் நாளைக்கு வரைக்கும் நிம்மதி இல்லாம இருக்கணும்னு சொல்லுங்க... நீங்க புரிஞ்சிப்பீங்கனு நினைக்கிறேன்
என்றவளை பார்த்து சிரித்த மீனாட்சி

"ஏனோ உன்னை எனக்கு ரொம்ப பிடிக்குது வானதி நீ ரொம்ப தெளிவா இருக்க எல்லாத்தையுமே நேரடியாக கேட்டு தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிற ரொம்ப சந்தோஷமா இருக்கு எதுவா இருந்தாலும் தைரியமா கேளு என்று அவர் கூற வானதியும் ஸ்ரீதர் பற்றிய கேள்விகளை முன்வைக்க தொடங்கினாள்


ஆன்ட்டி ஸ்ரீதர் என்ன படித்திருக்கிறாரு….
இப்போ அவர் வேலை செய்ற ஸ்கூல் ஒரு அறக்கட்டளையோடதுனு தெரியும் ஆனா அந்த அறக்கட்டளை உங்களோடதா இல்லனா ஸ்ரீதர் வேலைல இருக்காரா... ?

அப்படி இருந்தா அவரு சம்பளம் என்ன?


அவருக்கு எந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் பிடிக்கும் அவரு அசைவம் சாப்பிடுவாரா…


ஏதாவது கெட்ட பழக்கம் மாதிரி உங்களுக்கு விருப்பம் இருந்தா சொல்லுங்க ஆன்ட்டி இல்லன்னா ஸ்ரீதர் கிட்டயே கேட்டுக்குறேன் என்று வேகமாகவும் படபடப்புடன் கேட்டு முடித்தாள்…

இத்தனை கேள்விகளையும் கேட்டு முடிக்கவும் ஆச்சரியத்தில் நெற்றியை சுருக்கியபடி பார்த்துக்கொண்டிருந்த மீனாட்சி என்ன வானதி அவன பத்தி எதுவுமே தெரியாதா...நா ஏதோ குடும்பத்த பத்தியும் பிஸினஸ் பத்தியும் கேப்பனு பாத்தா ஏதுமே தெரியாம இருக்க? அப்புறம் எப்படி காதல் ...இந்த கல்யாணம் எல்லாம் என்று கேட்டார்.

உடனே வானதி சற்றும் தாமதிக்காமல் ஆன்ட்டி காதலிக்கும் போது அவரைப் பற்றி எந்த விஷயமும் தேவைப்படல‌.. ஆனா கல்யாணம்னு வரும்போது என் அம்மா நிறைய கேள்வி கேக்குறாங்க என் அம்மா கேட்ட எந்தக் கேள்விக்கும் என்கிட்ட பதில் இல்லை...


அப்புறம் தான் எனக்கே தோணுச்சு ஆமால்ல இதெல்லாம் நமக்கு எதுவுமே தெரியாதுனு …

இப்படி நாளைக்கு வேற யாராவது வந்து என்கிட்ட கேட்டா...அவங்க கேள்விக்கு பதில் சொல்றதுக்கு எனக்கு கொஞ்சமாவது தெரிஞ்சு இருக்கணும் இல்ல இது எல்லாமே ஸ்ரீதர் கிட்ட தான் கேக்கணும் நினைச்சேன் ஆனா ஸ்ரீதரோடட ஃபோன் நேத்து இருந்து நாட் ரீச்சபிள்னு வருது அவர் இப்ப எங்க போயிருக்காரு... உங்களுக்கு அதைப்பற்றி ஏதாவது தெரியுமா???


ஸ்ரீதர் அவன் வேலை விஷயமா வடக்கு பக்கம் போறதா எனக்கு சொன்னான்…

அனேகமா இப்போ வந்திருக்கலாம்னு நினைக்கிறேன் நான் இங்க வர்ற விஷயத்தை மட்டும் தான் சொன்னேன் நேரா உன் வீட்டுக்கு வருவதை சொல்லல இனி தான் அவர் ரூமுக்கு போய் பார்க்கணும் அவன் வந்துட்டானா வரலையா….


அப்புறம்
ஸ்ரீதர் என்ஜினியரிங் முடித்து இருக்கான்….


ஒஒ ...எஞ்சினியரிங்க்கும் டீச்சீங் லைனிங்க்கும். எப்படி என்று குழம்பியவள் இது பற்றி அவனிடமே கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.பிறகு தயங்கியபடி

ஆன்ட்டி ஏன் அவர் கல்யாணமே பண்ணிக்கல? ஏதாவது காதல் தோல்வி இல்லன்னா வேற ஏதாவது காரணம் உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் இல்லனா நா ஸ்ரீதர் கிட்டயே கேட்டுக்குறேன்"…

"அவனுக்கு காதலிக்கவே நேரம் இல்லமா அப்புறம் எங்கிருந்து காதல் தோல்வி அவன் காதலிச்ச முதல் பொண்ணும் நீ தான் கடைசி பொண்ணு நீ தான்"….

அவள் புரியாமல் அவரைப் பார்க்க

"அவன் இது வரை எந்த பொண்ணையுமே திருமணம் செய்யனும்னு பாத்ததில்லைமா" என்றார்..உனக்கு இப்படி தனித்தனியா சொன்னா குழப்பம் தான் வரும்
நா எல்லாத்தையும் ஆரமாபத்தில இருந்து சொல்லறேன் பொறுமையா கேளு அப்போ தான் உன் குழப்பம் தீரும்
என்றவர் ஸ்ரீதரின் பிறப்பு முதல் சொல்லத் தொடங்கினார்.

14

"ஸ்ரீதரோட அப்பாக்கும் பூர்வீகம் மதுரை பக்கம்மா ...ஆனா அவங்க தாத்தா காலத்திலேயே மூணாறில் ஒரு சின்ன ஃகாபி எஸ்டேட்டை வாங்கிட்டு அங்கேயே செட்டில் ஆயிட்டாங்க...அப்புறமா அவங்களோட கடுமையான உழைப்பால இப்ப நிறைய டீ எஸ்டேட், ஃகாபி எஸ்டேட்,ஏலக்காய் தொட்டம்னு , நிறைய இருக்குமா"

"பணத்துக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது...ஸ்ரீதர் ஓட அப்பா படித்தது வளர்ந்தது எல்லாமே மூணாறு தான் வானதி.. என்னையும் வந்து பார்த்தவுடனே பிடிச்சிருச்சு ..
கல்யாணம் பண்ணி மூணாறுக்கே கூட்டிட்டு போயிட்டாங்க….கல்யாணம் ஆகி மூணு வருஷம் கழிச்சுதான் ஸ்ரீதர் பிறந்தான்"...

"அப்படிஒரு அழகும்மா இயற்கையிலேயே அவனுக்கு ரொம்ப உதவும் குணம் தோட்டத்துல வேலை செய்றவங்க குழந்தைகளோட விளையாடுவான் அஞ்சாவது வரைக்கும் மூணாறில் தான் படிச்சான்"….

"அப்புறமா ஊட்டில ஒரு எஸ்டேட் விலைக்கு வரவும் அதை வாங்கி போட்டோம்,ஆனா அங்க நிர்வகிக்க சரியினா ஆள் கிடைக்கல‌..அதனால நாங்களே ஊட்டியில கொஞ்ச நாள் இருக்கற மாதிரி இருந்தது….அப்போ ஸ்ரீதரை கோவையிலுள்ள ஒரு தனியார் பள்ளியோட ஹாஸ்டலில் சேர்த்து விட்டோம்….அங்க தான் அவனுக்கு பிரசாந்த்னு ஒரு நண்பண் கிடைச்சிருக்கான்…. அந்த பையனுக்கு கோயமூத்தூர் தான் ஸ்கூல் முடியற வரைக்கும் இருவரும் ஒரே ஸ்கூல்ல தான் படிச்சாங்க‌"..

"அப்புறமா ரெண்டு பேருமே ஒரே காலேஜில்தான் சேருவேணு அடம்... ரெண்டு பேருமே கோயம்புத்தூர்ல இருக்கிற பெரிய இன்ஜினியரிங் காலேஜ் பார்த்து சேர்ந்தாச்சு…
பிரசாந்த் வீட்ல இருந்து காலேஜ் வருவான்... ஸ்ரீதர் ஹாஸ்டல்ல இருந்து போவான் வானதி‌…. கொஞ்ச நாளிலேயே ஸ்ரீதருக்கு அந்த ஹாஸ்டல் ஒத்துக்கல…

சரி தனியா வீடு பாத்து குடுக்கலாம்னு யோசிக்கும் போது
அவன் ஃபிரண்ட் பிரசாந்த் அவனோட வீட்டுக்குப் ஸ்ரீதரை வற்புறுத்தி கூப்பிட்டு போய் தங்க வைச்சிகிட்டான்…

அங்க போனதும் தான் தெரிஞ்சிருக்கு பிரசாந்துக்கு ஒரு தங்கச்சி இருக்கிற விஷயம் ஆனா அந்த பொண்ணு ஒரு சிறப்பு குழந்தை…….

ஆட்டிஸ்ம்னு கேள்விப்பட்டு இருக்கறல்ல"….

"கேள்விப்பட்டுருக்கேன் ஆன்ட்டி"…

"அவ பேரு பார்கவி அந்தக் குழந்தை இவன் போன உடனே இவன் கிட்ட ரொம்ப அதிகமா ஒட்டிக்கிட்டா...பத்து வயசு பொண்ணு ஆனா வயசுக்கு மீறின வளர்ச்சி…. மூணு வயசு குழந்தை மாதிரி நடந்துபாளாம்...ஆனா அவங்க வீட்ல அடிக்கடி வேலை செய்யறவங்க பொறுப்புல விட்டுட்டு எங்காவது போயிடுவாங்கலாம்…இவன் போனதும் அவள இவன் பொறுப்புல எடுத்துகிட்டான்...அவங்க எங்காவது போனா கூட அன்னைக்கு இவன் காலேஜ்க்கு லீவ் போட்டுட்டு அவளை பித்துப்பான் போல அவனால அவள தனியா விட்டுட்டு எங்கயும் போக முடியல... அப்படி ஒரு பாசம் அவ மேல அவனுக்கு...


ஆனா அவங்க வீட்ல இந்த பொண்ணை கொஞ்சம் சரியா கவனிக்கலையோனு இவனுக்கு ஒரு எண்ணம்..அதனால இவன் அங்க போகவும் அந்த பொண்ணுக்கு சாப்பாடு தர்றது,தலை வாருவது இது போல் சின்ன, சின்ன வேலைகளை இவன் தான் பார்க்கவிக்கு செய்வானாம்.. இவனுக்கோ தங்கை இல்லாத குறை அவ முலமா திர்ந்தது"….

கொஞ்ச நாளிலே அவ பெரிய பொண்ணும் ஆயிட்டாளாம் அதனால அவங்க வீட்ல அவள பத்தின கவலை அதிகம் போல …

ஆனா இவனுக்கு பொறுப்பு அதிகம் வந்ததா நினைச்சி கிட்டு அவளோட எல்லா தேவைகளை முக சுழிப்பு இல்லாம இவன் தான் செய்வானாம்...அவளும் அண்ணா அண்ணானு இவன் மேல உயிரையே வச்சிருக்கா.‌‌. ஸ்ரீதர் சொல்லுவான் பார்த்தா அவ ஒரு சிறப்பு குழந்தைனு தெரியாது மா பழகினா மட்டும் தான் புரியும்னு…நாலு வருஷமா அவங்க வீட்டுல இருந்து ஸ்ரீதர் அந்த பொண்ணை இவனோட குழந்தையாகவே பாக்க ஆரம்பிச்சிட்டான்"…அவ்ளோ பந்தம் ரெண்டு பேருக்குள்ளேயும்...ஆனா அவங்களோட புரிதல் எனக்கு தெரில ஏதோ ப்ரண்ட் தங்கச்சி இப்படி இருக்கறதால பரிதாபப் பட்டு பேசறான்னு நினைச்சிகிட்டேன்.

"பைனல் இயர் வந்ததும்... ஸ்ரீதரோட அப்பாக்கு முடியாம போயிருச்சு… கோயம்புத்தூர் கூட்டிட்டு வந்து ஒரு ஹாஸ்பிடல்ல தான் வெச்சு பாத்துட்டு இருந்தோம் ஸ்ரீதர் ஹாஸ்பிடல் ...கடைசி வருஷம் படிப்பு செமஸ்டர் எக்ஸாம்…..இதுல எங்க பிஸினஸ்ல வேற பொறுப்புனு ரொம்ப பிஸி ஒரு மூணு மாசம் பிரசாந்த் வீட்டுக்கு போகல இதுல ஃபைனல் இயர் எக்ஸாம் எல்லாம் முடிஞ்சுது... பிரசாந்த் செமஸ்டர் எக்ஸாம் வரலேன்னு தெரிஞ்சு இவன் என்னன்னு விசாரிப்பதற்காக அவங்க வீட்டுக்கு போய் இருந்தான்….அப்பதான் தெரிஞ்சது பிரசாந்த்வோட தங்கச்சி இறந்து போன விஷயம்"….

"அவங்க வீட்டில் எல்லாரும் கேரளாக்கு டூர் போய் இருக்காங்க….கூடவே பார்கவியையும் அழைச்சிட்டு போயிருக்காங்க….போனவங்க கடைசியா அங்க இருக்கற பீச்சுக்கும் போய்ருக்காங்க.‌.. கடலோட அழகுல அந்த பொண்ண கவனிக்கத் தவறிட்டாங்க ... அந்த பொண்ணு தெரியாம கடலில் இறங்கிருக்கா‌‌...யாருமே கவனிக்கலபோல"...

"கடல் அலை அந்த பொண்ணை இழுத்துட்டு போயிடுச்சி…
அங்க இருக்கற மீனவர்கள் பாத்து காப்பாத்த போயிருக்காங்க அப்போகூட இவங்க மூனு பேருமே பார்க்கல...கடைசில உடலை காப்பாத்த முடிஞ்ச அவங்களால் உயிரைக் காப்பாத்த முடியல"…

"ஸ்ரீதருக்கு பரிட்சை டைம்….அப்பாவுக்கு முடியலனு வேற இருக்கற இந்த நேரத்தில ஏன் ஸ்ரீதருக்கு இதை சொல்லனும்னு அவங்க சொல்லல….கொஞ்ச நாள் கழிச்சு எனக்குதான் கூப்பிட்டு சொன்னாங்க...எனக்கு இவங்க பழக்கம் தெரியாதுல்ல ஏதோ பதினாலு வயசு பொண்ணு ப்ரண்டோட தங்கை இறந்திருக்கானு நினைச்சு சொல்ல மறந்துட்டேன்...அது ஒன்னுதான் மா நா செஞ்ச தப்பு"….

"இந்த விஷயம் தெரிந்த பின் அவன் என் கிட்ட வந்து கேட்டான் .

"பார்கவி இறந்த விஷயத்தை என் கிட்ட நீங்க சொல்லி
இருக்கலாம் இல்லம்மா ஏன் சொல்லலனு "? …..

15

நான் "அப்பாவிற்கு முடியாத சமயத்தில தான் இந்த விஷயம் தெரிந்தது. அந்த நேரத்தில் உன்கிட்ட சொன்னா உன் படிப்பு பாதிக்கப்படும்னு நினைச்சு சொல்லல….. அது இல்லாம நீ பிஸினஸும் பாத்துட்டு இருக்கே.. பிசினஸை அப்படியே விட்டுட்டு நீ எப்படி அங்க போக முடியும் அதுதான் நான் உங்கிட்ட சொல்லல….அதும் இல்லாம ஃப்ரண்ட் டோட தங்கை தானேபா அதற்கு நீ ஏன் இவ்ளோ இமோஷனல் ஆகற."?

"எப்படிம்மா உங்களால இவ்ளோ சுயநலமா பேச முடியுது…. நா அங்க போகும் போது அவளுக்கு வயசு பத்துதான்...நாலு வருஷம் அங்க நான் இருந்திருக்கேன்...அவ பெரிய பொண்ணு ஆகும் போது கூட யாரும் அவள கவனிக்கல நான் தான் முதல்ல கவனிச்சி அவங்க அம்மாகிட்ட சொன்னேன் ஏன்னா பார்க்கவியை நான் என் பொண்ணு மாதிரி பார்த்துட்டு இருந்தேன். அவளோட எல்லா தேவைகளையும் நான்தான் பூர்த்தி செய்வேன்...‌அப்படிபட்ட குழந்தை இன்னைக்கு இல்ல …

கடைசியா உங்க எல்லாரோட சுயநலத்தாலயும் அவ முகத்தை கூட பார்க்குற கொடுப்பினை எனக்கு இல்லாம போயிடுச்சு... ஒருத்தரோட அஜாக்கிரதையால் ஒரு உயிர் போயிருச்சு,

என்னுடைய சுயநலத்திற்காக நான் அவளை அங்க விட்டுட்டு வந்துருக்க கூடாது அவளையும் என்னுடனே கூட்டிட்டு வந்திருக்கணும் நான் அவளை அங்கு விட்டுட்டு வராம இருந்திருந்தா அவளுக்கு சாவு வந்திருக்காது.அதனால அவளோட சாவிற்கு... முழுக்க முழுக்க நான் மட்டுமே காரணம்...

ஒருவேளை நான் சுயநலமாக இல்லாமல் அங்கே இருந்திருந்தா பார்கவிக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு இருக்காது தானே…
நான்தான் அவளை
கவனிக்காமல் விட்டுட்டேனு ".ஒரே புலம்பல்...


அவனை சமாளிக்க முடியாம நானும் பேச ஆரம்பிச்சேன்
"என்ன பேசுற ஸ்ரீதர் நீ பேசறதுல கொஞ்சமாவது நியாயம் இருக்குதா?
பார்கவி அவங்களோட பொண்ணு அவளைப் பார்த்துக் கொள்வது பராமரிக்கறது அவங்களோட கடமை அவளை கவனிக்க தவறினது அவளோட பெற்றோரின் அஜாக்கிரதை.. இதற்கு நீ எப்படி பொறுப்பாவ?...

நம்முடைய குடும்பத் தொழிலை கவனிப்பதும் பெற்றவர்களுக்கு முடியாமல் போகும் போது அவர்களுக்கு பணிவிடை செய்வதும் உன்னுடைய தேர்வை எழுதுவதும் உனக்கு சுயநலமா"?

"அம்மா ப்ளீஸ் இதற்கு மேல பேசாதீங்க இங்க நம்ம பிசினஸை பாத்துக்க நிறைய பேர் இருக்காங்க‌.. அதுவுமில்லாம அப்பாவையும் பார்ப்பதற்கு ஹாஸ்பிடல் ல டாக்டர்ஸ்.. நீங்க இருக்கீங்க ஆனா பார்கவிய அவங்க வீட்ல யாருமே சரியா கவனிக்க மாட்டாங்க தெரியுமா..

நான்தான் அவளை பத்து வயசில் இருந்து இப்ப வரைக்கும் பார்த்து இருக்கேன்...அவங்க வீட்ல யாரு எங்க போனாலும் நான் தான் பார்த்துக்கொள்வேன்...அவ எப்பவுமே என் கூட தான் இருப்பா தெரியுமா அவ பிரண்டோட தங்கச்சி மட்டும் இல்ல. அவ எனக்கும் தங்கை தான்...தங்கை என்பதையும் தாண்டி அவ மேல எனக்கு ஒரு பாசம் …
ஏன் என் பொண்ணுனு கூட நான் சொல்லுவேன்"..


உங்களுக்கு உங்க பிசினஸ் தானே முக்கியம்



அந்த பிசினஸை நான் பார்த்துக்கிறேன் அதே சமயம் இந்த மாதிரி குழந்தைகளையும் நான் பாத்துக்குறேன் இனிமே என் வாழ்க்கையில வேற எந்த பிடிப்பும் இல்ல" ….

"இனிமேல் எனக்கு பார்கவி மாதிரி குழந்தைகள் மட்டும் தான்….
என்னுடைய வாழ்க்கை‌...எனக்குனு இனி தனி பட்ட வாழ்க்கையே கிடையாது...இது நான் பார்கவிக்காக பண்ற கைமாற நினைக்க போறேன். நான் படிப்பு ,பிஸினஸ், குடும்பம்னு சுய நலமாய் இருந்தது தானே அவள நான் இழக்க காரணம்"….
இனிமே அந்த மாதிரி குழந்தைங்க எங்கேயுமே அஜாக்கிரதையால் சாகக்கூடாது"….



"இனிமே என் வாழ்க்கைல எனக்குனு என்ற ஆசை பாசமும் கிடையாது... சென்டிமென்ட்டுக்கு இனிமே இடம் கொடுக்கமாட்டேன் .என்னோட வாழ்க்கை ஃபுல்லா பார்கவி மாதிரி குழந்தைகளுக்காக நான் அர்ப்பணிக்கப் போகிறேன்... நான் போறேன்…அப்பப்போ வந்து பிசினஸ் கவனிச்சுக்கிறேன்...இனிமே என்னை தேடி கொண்டு வராதீர்கள் நான் இனி இங்கு அதிகம் வர மாட்டேன் என்று வந்துவிட்டான்..வானதி.
இன்றுடன் பனிரெண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது".

"இங்கே வந்தவன் பார்கவி எந்த ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தாலோ அந்த ஸ்கூலுக்கே டீச்சரா போய்
சேர்ந்துட்டான் .அங்க வர்ற கொஞ்சம் வருமானத்தையும் அங்கிருக்கிற குழந்தைகளுக்கு செலவு செய்ய ஆரம்பிச்சுட்டேன் .
பிஸினஸில் இருந்து வரும் வருமானத்தையும் முக்கால்வாசி இது போல இருக்கிற குழந்தைகளுக்கு தான் செலவு செஞ்சுட்டு இருக்கான்..ரொம்ப கோவக்காரன் ,ரொம்ப பிடிவாதக்காரன் கூட"…

"அதற்கப்புறம் எத்தனையோ பெண் பார்த்தோம்...எதுக்குமே அவன் ஒத்துக்கல வானதி.. எந்த பெண்ணையும் பார்க்க கூட வரமாட்டான்..ஒருநாள் அவன் அங்க வரும்பொழுது கோபத்தில் நான் கூட பயங்கரமாக சண்டை போட்டேன்"

"இப்படியே கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டு இருக்கியே எங்க காலத்துல பின் உன்னை யார் பார்த்துக்குவா?..எங்களுக்கும் பேரன் பேத்தையை கொஞ்சனும்னு ஆசை இருக்காதாஎன்று கேட்டதற்கு அவன் சொன்ன பதில் இன்னும் எனக்கு அதிர்ச்சியா இருந்தது"…


"பார்கவி போல ஒரு இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க போவதாகவும் இந்தியா ஃபுல்லா இதே மாதிரி ஆட்டிசம் பாதிக்கப்பட்ட எல்லா குழந்தைகளை ஒன்றிணைத்து ஒரு அறக்கட்டளை மூலமா ஸ்கூல் நடத்துபோவதாகவும் சொன்னான்."

"அதற்காக கிராமம் கிராமமாக சென்று இடம் தேடி அங்கு ஒவ்வொரு இடத்திலேயும் சின்னச் சின்னதா ஸ்கூல் கட்ட போவதாகவும் சொன்னான்...அதற்கான முயற்சிகளில் தான் இப்போ கொஞ்ச நாளா ஈடுபட்டிருக்கிறான்"…


"அப்போதான் அவன் உன்னை சந்தித்திருக்கிறான்.. சந்தித்ததுமே அவனுக்குள்ள மாற்றங்கள் வர ஆரம்பிச்சுடுச்சு .
அதுக்கு கண்டிப்பா உன்னோட அன்பு மட்டும்தான் காரணம். வானதி உன்னுடைய அன்புதான் அவனை மாத்திடுச்சு இப்போ அவனோட பிடிவாதத்தில் கொஞ்சம் தளர்வு வந்து இருக்கு".

"அது என்னன்னா இந்த மாதிரி குழந்தைகளுக்காக அவன் நடத்தற அறக்கட்டளை மூலமாகவே பண்ணனும் அதுக்காக எல்லா இடத்திலேயும் சேவை மனப்பான்மையோடு இருக்கிறவங்களுக்கு சம்பளம் கொடுத்து வெச்சுக்கணும்"..

"அவன் உன்னுடன் ஒரு சராசரி குடும்ப வாழ்க்கையை வாழனும் உங்களுக்கான ஒரு குழந்தையும் உருவாக்கிக்கொள்ளனும் அப்படின்னு"…

"போன வாரத்துல ஒரு நாள் எனக்கு ஃபோன்ல கூப்பிட்டு பேசினான். உன்னை பத்தி எல்லா விஷயங்களையும் சொன்னான் .
உன் போட்டோவை வாட்ஸ் அப்ல அனுப்பி வெச்சான்.. எனக்குப் அவனுக்குள்ள ஒரு ஒரு மாற்றம் வந்ததே பெரிய
சந்தோஷம் .அதும் இல்லாமல் உன் போட்டோவை எனக்கு அனுப்பி வைத்து இந்தப் பொண்ணு அழகா
இருக்காளா ?உங்க அபிப்பிராயம் என்ன? என்று கேட்கும் போது ஒரு பெத்தவளா எனக்கு எவ்வளவு சந்தோஷம் இருக்கும் சொல்லு…
எங்க நம்ம ஏதாவது சொல்லி அவன் இதையும் மறுத்து விடுவானோனு பயந்து நான் எதுமே சொல்லல மா நல்லா இருக்கா ..இந்த பொண்ணு யாருன்னு ? மட்டும் கேட்டேன்"..

"அதுக்கு ஸ்ரீதர் வெட்கப்பட்டுக்கொண்டே சொல்றான்.. இவ தான் அம்மா உன் மருமகள் பேரன் பேத்தியை கொஞ்சனும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டல்ல.?உனக்கு முதல்ல பேரன் வேனுமா? பேத்தி வேணுமா ?னு ஜாடையா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான்"..

"நான் என்ன சொல்லுவேன் கையும் ஓடல காலும் ஓடல உடனே கிளம்பி வந்துட்டேன்... ஸ்ரீதரோட அப்பா கிட்ட கூட சொல்லல அவரு ஏதோ வெளியூரில் இருக்கார்...முதல்ல பையனையும் மருமகளையும் கூட்டிட்டு போனதுக்கப்புறம் சொல்லிக்கொள்ளலாம்னு
வந்துட்டேன்".

"உன் அம்மா எப்ப வருவாங்க
வானதி ?அவங்க கிட்டயும் பேசிட்டேனா மனசு நிம்மதியா ஆயிடும்.. எப்படியும் இப்போ வரலனாலும் இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள ஸ்ரீதர் ஊர்ல இருந்து வந்துருவான்.. நாளைக்குள்ள கல்யாணத்தை பண்ணி நான் நாளைக்கு சாயங்காலம் உன்னை என் ஊருக்கு கூட்டிட்டு போயிடுவேன்"…

" இப்ப நா ஸ்ரீதர் தங்கி இருக்கும் ரூமிற்கு போறேன்மா நீ அம்மா வந்ததும் மறக்காம எனக்கு கூப்பிட்டு சொல்லு இந்தா இது என்னோட நம்பர் நீ உன் நம்பர் எனக்கு கொடு... இல்லையென்றால்
பரவால்ல நான் ஸ்ரீதர் கிட்ட வாங்கிக்கிறேன்" என்று சந்தோஷமாக அந்த முதிய பெண்மணி கிளம்பிச் சென்றுவிட்டார்…

அவர் பேசியதை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த வானத்திற்கு ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபுறம் மிகப் பெரிய அதிர்ச்சிக்கு ஆளாகி இருந்தாள்..

தொடரும்….
 
Top