கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காத்திருந்த காதல்-16

Akila vaikundam

Moderator
Staff member
16

மீனாட்சி செல்லவும்

'தான் எவ்வளவு பெரிய முட்டாள்தனத்தை செய்து கொண்டிருக்கிறோம்' என எண்ணியபடி அப்படியே சிலையாக அமர்ந்திருந்தாள்

'அவன் செய்யும் செயல் எவ்வளவு பெரிய தியாகம் நிறைத்தது.. அவனுடைய வயதிற்க்கு உண்டான எந்த ஒரு உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்காமல் அவன் இவ்வளவு காலம் வாழ்ந்து வந்தது அவனின் மீது அவளுக்கு மிகப்பெரிய மதிப்பு ஒன்று உருவாயிற்று..
தெளிந்த நீரோடையாக இருந்த அவனுடைய வாழ்க்கையில் தான் ஒரு சிறு கல்லாய் மாறி அவனை சலனப்படுத்தியதை நினைத்து அவளின் மீதே அவளுக்கு மிகப்பெரிய கோபம் வந்தது'…

'அவன் ஏன் தன்னை விட்டு விலகி விலகி சென்றான் என்பது புரியத் தொடங்கியது...தான் அவனை தேடிச்சென்று அவனின் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டதை நினைத்து அவளின் மீது அவளுக்கு அருவருப்பு தோன்றியது'..

ஸ்ரீதரை பற்றி எவ்வளவு நேரம் தன் மனதிற்குள்ளேயே நினைத்து உழன்று கொண்டிருந்தாலோ..ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் அவனே அலைபேசியில் அவளை அழைத்திருந்தான்…

காலை அட்டெண்ட் செய்து காதில் வைத்தவள் ..
மிக மெல்லிய குரலில் "ஹலோ"
என்றாள்.

என்னப்பா வானதி குரல் ஒரு மாதிரி இருக்கு என்னாச்சு உனக்கு உடம்பு ஏதும் சரியில்லையா என்று சிறு படபடப்புடன் கேட்டான்.

நல்லா தான் இருக்கேன் நீங்க எங்க போயிருந்தீங்க நேத்தெதெல்லாம் உங்க போன் நாட் ரீச்சபிள்னு வந்தது


ஓ அதான் உனக்கு கோபமா சாரி வானதி என் வேலை விஷயமா சில முடிவுகள் எடுக்க வேண்டியிருந்தது அதுக்காக கொஞ்சம் வெளிய போற மாதிரி ஆயிடுச்சு நான் போன இடத்துல நெட் வொர்க் கவர் ஆகல அதனாலதான் உன்னை காண்டாக்ட் பண்ண முடியல


என்ன வேலை விஷயமா நெட்வொர்க் கவராகாத இடத்துக்கு போனீங்க நீங்க ஒரு டீச்சர் உங்களுக்கு என்ன பெருசா வேலை என்று தெரியாதது போல் கேட்டாள்

வானதி என்னை நீ நம்பனும் நான் கண்டிப்பா தவறானவன் இல்ல புரியுதா எல்லாமே கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு தெளிவா சொல்றேன் இப்பதான் ஊர்ல இருந்து வந்திருக்கேன் ப்ளீஸ் கொஞ்சம் ரிலாக்ஸா வேற எதாவது பேசலாமா என்றவன் உடனே பேச்சை மாற்றினான்….


இவளோ ஸ்ருதியே இல்லாமல் ஏன் பேச வேண்டும் என்ற கோணத்தில் சரி என்று கூற



எதிர்முனையில் இவளுக்கு நேர்மாறாக சந்தோஷத்துடன் அவன் கேட்டிருந்தான் "வானதி அம்மா வந்தாங்களா"?…

"ம்ம் வந்தாங்க"…


"என்ன சொன்னாங்க?...உன்னை புடிச்சிருக்குன்னாங்களா?"

*****"
"நல்லா பேசினாங்களா".?

*****

"எனக்கு ஒரே பயம் எங்க அவங்களுக்கு உன்னை பிடிக்காமல்
போயிடுமோன்னு ... நல்லவேளை அவங்களுக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருச்சு எங்க பிடிக்கலன்னு சொல்லி என்னை சங்கடப்படுத்தி விடுவார்களோ என்று ரொம்ப பயந்துட்டு இருந்தேன்...அதற்கான சந்தர்ப்பத்தை கடவுள் குடுக்கல...கடவுளுக்கு நன்றி"..


"அப்புறம்
உனக்கு புடவை எடுக்கனும்னாங்க...ரெடிமேட் பிளவுஸ்னா உனக்கு ஒகே தான?...நாளைக்கு ஒரு நாள் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ...என்ன கலர் வேணும்...ரெண்டு பேரும் கடைக்கு தான் கிளம்பறோம் நீயும் வாயேன்...உனக்கு வேணுங்கறத எல்லாத்தையுமே வாங்கிக்கலாம்...கிளம்பி இரு நாங்க வந்து உன்னை பிக்அப் பண்ணிக்கறோம்" என்றான்…

"இல்ல நீங்க வர வேணாம் உங்களுக்கு என்ன பிடிச்சு இருக்கோ அதையே வாங்கிட்டு வாங்க"…

"அப்பாடா ஒரு வழியா நார்மலா பேசிட்டியா.. ஏன் இன்னைக்கு ஒன்னுமே பேச மாட்டேங்கற…அப்படியே பேசினாலும் எல்லாமே வெட்டு தெறிக்கறது போல பேசற வானதி"

******

"சரி நாங்க போறோம் நீ அத்தை வந்ததும் சொல்லிட்டு...காலைல ஆறரைக்கு முகூர்த்தம்..
பக்கத்தில் யாருக்காவது சொல்லனும்னா சொல்லிக்கோங்க"….என்றான்

****"

"நமக்கான எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன் காலையில கல்யாணம் டிபன் சாப்பிட்டுட்டு கிளம்பி போனா ரெண்டு மூணு மணிக்கெல்லாம் என் வீட்டுக்கு போயிடலாம் அப்புறமா ரெண்டு நாள் கழித்து ஒரு ரிசப்ஷன்...உன் அம்மாட்ட சொல்லி உங்க ரெண்டு பேருக்கும் முக்கியமா தேவைப்படும் பொருளை எடுத்து வெச்சுக்கோங்க... ஏன்னா உங்க அம்மாவையும் நாம நம்மளோட கூட்டிட்டு போறோம் இனிமே அவங்க கடைசிவரை நம்மளோட மூணாறில் இருக்கட்டும்"…

"நம்மோடு மூணாரிலேனா…
உங்களோட டீச்சர் வேலை"?…

"அதை நான் ரிசைன் பண்ணிட்டேன் அங்கிருந்தே கூட பாத்துக்கலாம் அப்பப்போ ஒரு நாள் வந்து நிர்வாகத்தை மட்டும் கவனித்துக்கொண்டால் போதும்"…

"அந்த வேலை உங்களுக்கு ரொம்ப புடிக்கும் இல்ல அந்த வேலைக்காக தானே நீங்க இவ்ளோ நாள் கல்யாணம் பண்ணிக்காம இருந்தீங்க"….

"ம்ம் உண்மைதான் அது நான் உன்னை பாக்குறதுக்கு முன்னாடி வரை அப்படிதான் இருந்தேன். எப்போ உன்னை பார்த்தேனோ அப்பவே அந்த வேலையை என்னால இனி முழு மனசோட செய்ய முடியும்னு தோணல..
அதுவுமில்லாம அந்த குழந்தைகளுக்காக வேறு ஏற்பாடுகள் நான் பண்ணிட்டேன் இனிமே நீ இதை பற்றியெல்லாம் யோசிக்க வேண்டாம் நமக்கான வாழ்க்கையை மட்டும் நீ யோசிச்சா போதும் சரியா"…

"இது எல்லாமே நீங்க எனக்காக பண்ணுறீங்களா?"

"இல்லை நமக்காகவும் நம் எதிர்காலத்துக்கும் பண்ணுகிறேன்..என்றான்"…

"உங்க டீச்சர் வேலை எனக்கு புடிச்சிருக்கு கல்யாணத்துக்கு அப்புறமும் நீங்க தொடரலாமே ஏன் விட்டிங்க"?

"நீயே சொல்லு வானதி நான் உன்னை திருமணம் செய்த பிறகு என்னால் எப்படி நாள் முழுவதும் அங்கு இருக்க முடியும்...அது உனக்கு செய்யும் பாவம் அல்லவா?திருமணத்திற்கு பின் கணவனுடைய புறக்கணிப்பு ஒரு பெண்ணிற்கு அந்த கணவன் செய்யும் மிகப்பெரிய கொடுமை நானே பலபேருக்கு இதை சொல்லி அனுப்பியிருக்கிறேன்...அதை என்னையே என் மனைவிக்கு நீ செய்ய சொல்கிறாயா வானதி"?

"நான் தனியாக இருக்கும் வரை என்னுடைய நேரம், வருமானம் ,
தனிமை ,எல்லாமும் எனக்கு
சொந்தம் .ஆனால் உன்னை கை பிடித்த பின்பு என்னுடைய நேரம்,
வருமானம் ,என்னுடைய தனிமை, எல்லாமே உன்னுடையது உனக்கு சொந்தமான ஒன்றை உன் அனுமதி இல்லாமல் என்னால் எப்படி பிறருக்கு தர இயலும்."?

அவனின் இப்பதிலைக் கேட்ட அவளின் கைகளில் இருந்த ஃபோன் தானாக நழுவிக் கீழே விழுந்து நொறுங்கியது.. கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வர அப்படியே அமர்ந்தவள் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.. இது எத்தகைய அன்பு இந்த அன்பிற்கு தான் என்ன கைமாறு செய்யப் போகிறோம் ? பன்னிரெண்டு ஆண்டுகளாக அவன் லட்சியம் கனவு அனைத்தையும் தன் ஒருத்தியால் உடைத்தெரிய முடிகிறது என்று சிறு கர்வமும் பிறந்தாலும்..அவனின் இத்தகைய முடிவில் மனதளவில் நொறுங்கி விட்டாள்..

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாலோ தெரியாது சிறிது நேரத்திற்கெல்லாம் தனது தாய் உள்ளே வரவும்

"என்னடி இது? நாளைக்கு கல்யாணத்தை வச்சுக்கிட்டு இப்படி உக்காந்து இருக்கற..நீ இன்னும் குளிக்க கூட இல்லையா?"என கேட்டபடியே உள் சென்றார்..

"ஆமா சம்மந்தி வந்தார்களாம்?... சாப்பிட ஏதும் குடுத்தியா..? அவங்க முன்னாடியும் இந்த கோலத்தில் தான் இருந்தாயா?
என்கிட்ட மாப்பிள்ளை தம்பியும் பேசினாங்க சம்மந்தி அம்மாவும் பேசினாங்க புடவை எடுக்கணும்னு கூப்பிட்டாங்களாம் போய் இருக்கலாம்ல பேசப்பேச வே போன் கட்டாயிடுச்சு போல"! ...

"மறுபடியும் கூப்பிட்டா சுவிட்ச் ஆப்னு வந்துச்சாம்.. என்னவோ ஏதோனு எனக்கு போன் பண்ணி சொன்னாங்க கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்குப் போங்கன்னு இங்கே வந்து பாத்தா நீ நான் போகும் போது எந்தக் கோலத்தில் இருந்தாயோ அதே கோலத்தில் இருக்கிறாய்..என்னடி ஆச்சு உன் ஃபோனுக்கு?".

"ஏதாவது வாய தொறந்து சொல்லு"...என்றவள் அப்பொழுது தான் அவனின் கால்கள் கீழ் அவளின் ஃபோன் உடைந்து கிடப்பதை பார்த்தாள்..

"என்னடி இது? ஃபோன் உடைஞ்சி கிடக்குது.!
என்ன ஆச்சு?...
எப்படி உடைஞ்சது,?
நீயா போட்டு உடைச்சியா?
இல்ல தானா கீழே விழுந்து உடைஞ்சதா?..
பதில் சொல்லடி…
வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திருக்கிறாய்?" என்று கோபத்துடன் கேட்டாள்…

தாய் பேசும் வரை பொறுமையாக இருந்த அவள் திடீரென கத்த தொடங்கினாள்.

" ஐயோ அம்மா கொஞ்சம் பேசாம இருக்கியா?"
ஏன்தான் நீ இவ்ளோ பேசுவியோ? இப்படித்தான் பேசிக்கிட்டே இருப்பியா? நான் இப்ப இங்க இருக்கனுமா?
இல்லை எங்காவது போகனும்னு நினைக்கிறியா? "என்று கத்தியபடி உள்ளே சென்றாள் தேவகிக்கு மகள் திருமணத்தை எண்ணி பயப்படுகிறாள். என்று நினைத்து அவனை சமாதானப்படுத்த தேவகியும் உள்ளே சென்றாள்.

"வானதி நீ அம்மா பத்தி கவலை படுறியா?.

எங்க கல்யாணம் பண்ணி போனா அம்மாவை பிரிஞ்சி போயிடுமோன்னு பயப்படாத வானதி..

அப்படியெல்லாம் இல்ல வானதி மாப்பிள்ளை தம்பி என்னையும் உன்னுடைய கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டார் நா முதல்ல வர மாட்டேன்னு மறுத்தேன்மா, ஆனா அவரு என்னையும் அழைத்துப் போய் விடுவேன் இதுக்கு நீங்க மறுக்கக்கூடாது உங்களுக்கு ஒரு பையன் இருந்தா நீங்க வேணாம்னு சொல்லுவீங்களானு?.

அதுமட்டுமில்லாம சம்பந்தியம்மா இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி போன் பண்ணி பேசினாங்க அவங்க ரொம்ப நல்ல மாதிரி நீ இந்த கல்யாணத்தை பத்தி பயப்படாத வானதி,

நான் அந்த மாப்பிள்ளை தம்பி பேசிட்டு போன உடனே அவங்க வேலை பாக்குற ஸ்கூல்ல போய் அவரைப் பத்தி விசாரிச்சுட்டு வந்துட்டேன் அவங்க எல்லாருமே அவரப் பத்தி ரொம்ப நல்ல விதமா சொல்றாங்க அதனால நீ கண்டதை பற்றி யோசிக்காமல் நல்லபடியா கல்யாணம் பண்ணி அவரோட குடும்பம் நடத்தும் வழியைப்பாரு சரியா" என்றவள் மகளுக்கு புரிந்திருக்கும் என்று எண்ணி மறுநாள் ஆக வேண்டிய வேலையை கவனிக்க சென்றார்…

மறுநாள் அதிகாலை வேளையில் பரபரப்புடன் தேவகி கிளம்பிக் கொண்டிருந்தாள் அருகிலிருந்த அக்கம் பக்கத்து வீட்டாரும் ஒரு ஐந்தாறு பேர் இருக்க வாசலில் ஸ்ரீதரின் கார் டிரைவர் காருடன் தயாராக காத்துக்கொண்டிருந்தார்..


வானதியை அழைக்க வந்தவர் அவள் கிளம்பாமல் இருப்பதை பார்த்து

என்ன என்று விசாரிக்க அவளோ நான் வரவில்லை என்று கூற

அதிர்ச்சி அடைந்த
தேவகியோ உள்அறையில் வானதியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்
"என்ன வானதி இப்படி பண்ற கடைசி நேரத்தில் கல்யாணத்துக்கு வர மாட்டேனா என்ன அர்த்தம் யாருக்கோ ஒருத்தருக்கு கல்யாணம் இல்லை ‌... கல்யாணம் உனக்குத்தான் கல்யாண மாப்பிள்ளை பையன் வெயிட் பண்ணிட்டு இருக்காரு அவரு தெரிஞ்சவங்க எல்லாருமே வந்திருக்காங்க ஏம்மா இப்படி அவங்கள அசிங்க படுத்துற எல்லார் முன்னாடியும்"...எனக் கெஞ்சியபடி நின்று கொண்டிருந்தாள் அவள் எதுவும் பேசாது மௌனமாக தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்..

"ஏன் வானதி எதுவுமே பேச மாட்டேங்கற ஏதாவது வாய் திறந்து சொல்லு! சொன்னா தானே அம்மாவுக்கு புரியும்"...என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே
அவள் கையில் இருந்த செல்போன் அழைத்தது ஸ்ரீதர் தான் கூப்பிட்டு இருந்தான்..

" அத்தை என்ன ஆச்சு ஏன் இன்னும் கிளம்பலையா" ?

"இங்கு நல்ல நேரம் போய்க்கிட்டு இருக்குனு ஐயர் சொல்றாரு…அங்க டிரைவர் கிட்ட கேட்டா நீங்க இன்னும் வெளியவே வரலன்னு சொல்றாரு..
என்னாச்சு? ஏதும் பிரச்சனையா? நான் வேண்டுமானால் வரட்டுமா?". எனக் கேட்க என்ன சொல்வதென தெரியாமல்

"அது ஒண்ணுமில்ல தம்பி இப்ப எதுக்கு கல்யாணம்னு வானதி நினைக்கிறா போல"

"இப்ப எதுக்கு கல்யாணம்னா?.

"ஒன்னும் புரியல!" நீங்க ஃபோன் கொஞ்சம் வானதி கிட்ட குடுங்க"

"வானதி உன் போன் என்ன ஆச்சு? நேத்து நான் உனக்கு புடவை நகை எல்லாம் வாட்ஸ் அப் பண்ணி இருந்தேன் நீ இப்ப வரைக்கும் பாக்கல கூப்பிட்டா சுவிட்ச் ஆப்னு வருது என்னாச்சு?...உன் போனுக்கு?". என்று கேட்டான்..

அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை அவள் கையில் இருந்து போனை வாங்கிய தேவகி தான் பேசினார்

"தம்பி அவ ஃபோன் உடச்சிடுச்சி"

"எப்படி உடஞ்சது"?..

"கை நழுவிடுச்சி போல மாப்பிள்ளை"..

"சொல்லியிருந்தா வேற வாங்கிருக்கலாம்ல…பரவால்ல விடுங்க"..

"இப்போ ஏன் கிளம்பாம இருக்கீங்க? சீக்கிரமா வாங்க!...உங்களுக்காகதான் அத்தனை பேரும் காத்திருக்கின்றோம்"..என்றான்

"தப்பா எடுத்துக்காதீங்க... அவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை நான் அவளை சமாதனம் பண்ணி கூட்டிட்டு வரேன்" என்று போனை ஆப் செய்தவர் ..

"ஏன்மா இப்படி பண்ணிட்டு இருக்க சொல்லு உனக்கு என்ன பிரச்சனை ஏன் நீ கல்யாணத்துக்கு வர மாட்டேன்னு சொல்லற?..
என்று மீண்டும் மீண்டும் அவளை வற்புறுத்தி கேட்டுக் கொண்டிருந்தார் கடைசியாக வானதி .

"எனக்கு இந்த கல்யாணம் வேணாம் எனக்கும் ஸ்ரீதர் வேணாம் ஸ்ரீதரை தவிர வேற யார வேணாலும் மாப்பிள்ளையா வேணும்னாலும் நிறுத்துங்க நான் கல்யாணம் பண்ணிக்க தயார் ஆனால் ஸ்ரீதர் எனக்கு வேண்டாம்"..

"நீங்கள் மறுபடியும் ஸ்ரீதரை தான் கல்யாணம் பண்ணிக்கணும் என்னை வற்புறுத்தினால் நான் உயிரோடே இருக்க மாட்டேன்"…

"என்ன வானதி பண்ணிக்கிவ ?சொல்லு எத்தனை நாள் இப்படி மிரட்டுவ?.. ஒன்னு எங்காவது கண்காணாத இடமா போய்டுவ..இல்லன்னா தற்கொலை பண்ணிக்குவ...எங்க பண்ணிக்கோ பார்க்கலாம்" என தேவகியும் அவளுக்கு சரிக்கு சரியாக நிற்க

"உங்களுக்கு நான் சொன்னா புரியாது நான் செஞ்சாதான் புரியும்னா நல்லா பாத்துக்கோங்க" என்றபடி...
அருகில் இருந்த கத்தியை எடுத்து தனது கையை கிறிக் கொள்ள சென்றாள்…

அவளின் இச்செயலைக் கண்ட தாய் கதறி அழ "வேண்டாம் வானதி வேணாம்.. உனக்கு இந்த கல்யாணம் வேணாம்னா விடு இனிமேல் நான் உன்கிட்ட கல்யாணத்தை பத்தி என்னைக்குமே பேச மாட்டேன் எனக்கு இருக்கிற ஒரே ஆதாரம் நீ மட்டும் தான் நீ எனக்கு உயிரோட வேணும் அதனால எனக்கு யாரும் முக்கியம் இல்ல இப்பவே நான் சொல்கிறேன் என்று ஆவேசத்துடன் வெளியே ஓடி அவர் கார் டிரைவரிடம் தம்பி நீங்க போய் ஸ்ரீதர் தம்பி கிட்ட சொல்லிடுங்க இந்த கல்யாணம் நடக்காது என் பொண்ணுக்கு ஸ்ரீதர் பிடிக்கலன்னு இன்னொரு தடவை அவரை இந்த வீட்டு பக்கம் வர வேணாம்னு சொல்லிடுங்க அங்க யாரும் எங்களுக்காக காத்திருக்க வேண்டாம் இந்த கல்யாணம் நடக்கப் போறது இல்ல எனக்கு என் பொண்ணோட உயிர் முக்கியம் எனக்கு என் பொண்ணு தான் முக்கியம் மத்தவங்க எல்லாரும் அப்புறம் தான்" என்று கூறியபடியே வானதியிடம் வந்தவள் ,

"இனி இது மாதிரி முட்டாள் தனம் பண்ண மாட்டேனு அம்மாக்கு சத்தியம் பண்ணிதா வானதி...இனி ஒரு முறை இதுபோல் நீ செய்தாள் உனக்கு முன் அம்மா ஏதாவது செஞ்சிப்பேன்" என்று அவளைக் கட்டி பிடித்தபடி கதறிக்கொண்டிருந்தாள்...எதுவுமே காதில் விழாதது போல் மௌனமாக வேடிக்கை பார்த்த படி வானதி உட்காந்திருந்தாள்…

இங்கு கோவிலில் டிரைவர் வந்து சொன்ன விஷயத்தை கேட்டவுடன் ஸ்ரீதரின் தாய் அதிர்ச்சியில் அமர்ந்தபடி உட்கார்ந்திருந்தார்...ஸ்ரீதருக்கு சொல்லேன்னா கோபம் நேற்றுவரை அவனிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் இன்று காலையில் அனைவரும் திருமணத்திற்கு தயாராகி இங்கு காத்திருப்பதை தெரிந்தும் கூட அவனை வேண்டாம் என்று கூறியதுடன் இல்லாமல் ஸ்ரீதரை தவிர வேறு யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்வேன் மீறி ஸ்ரீதரை திருமணம் செய்ய சொன்னால் தற்கொலை செய்து கொள்வேன் என கத்தியைக் கையில் எடுத்தாள் எனக் கேட்கவும் அவனுடைய இதயம் சுக்கு நூறாக உடைந்தது அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பே அவனுடன் வந்த சில நண்பர்களுக்கு விஷயம் புரிய அனைவரும் கலைந்து சென்றனர்..

எல்லோரும் அவனையே பார்ப்பது போல் ஒரு எண்ணம் அவமானத்தில் முகம் இருக்க தலைகுனிந்து நின்றிருந்த ஸ்ரீதர் அப்படி நின்றது என்னமோ சில வினாடிகள் மட்டுமே... நேராகச் சென்று தன் தாயின் முன்பு மண்டியிட்டு அமர்ந்தவன் தனது தாயின் கைகளை பிடித்துக் கொண்டு

"அம்மா என்னை மன்னித்துவிடுங்கள் இதுபோல் நான் உங்களை அவமானப்படுத்தி இருக்கக்கூடாது உங்களுடைய மனதினில் நான் ஆசைகளை விதைத்து இருக்கக்கூடாது... நான் சொல்வதைக் கேட்பீர்களா அம்மா"? என்று கேட்டான்..

அதற்கு மீனாட்சியும் அழுதபடி அவனின் கைகள் மீது தன்னுடைய முகத்தை வைத்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்

"நீதான் என்னை மன்னிக்கணும் ஸ்ரீதர் நான்தான் உன்னை ரொம்ப கட்டாயப்படுத்திட்டேன்.. நீ உன் வாழ்க்கை,உன் கனவு , லட்சியம்னு ரொம்ப நிம்மதியா தெளிந்த நீரோடையாய் போயிட்டு இருந்தது..
உன் வாழ்க்கை".


"ஆனால் நான் தான் கல்யாணம் பேரன் பேத்தி இப்படி எல்லாம் உன்ன கட்டாயப்படுத்தினேன் அதனால நீ அவசரப்பட்டு தெரியாமல் வானதி மாதிரி ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து விட்டாய் என்னை மன்னிக்கணும்" ..

"ஸ்ரீதர் இந்த பொண்ணு இல்லன்னா என்ன நான் உனக்கு அருமையான ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் நீ என்னோட ஊருக்கு வாப்பா இந்த காயம் ஆறும் போது கண்டிப்பா உனக்கு வானதியை விட ரொம்ப நல்ல பொண்ணை உனக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன் இந்த காயத்துக்கு மருந்து கண்டிப்பா ஒரு பெண்ணால்தான் கொடுக்க முடியும்" என சொன்னார்..

"அம்மா அத பத்தி நாம பின்னாடி பேசிக்கலாம்" ‌..

"இப்போ நீங்க ஊருக்கு கிளம்புங்கள்".

"நான் ஊருக்கு போனா நீ வரவில்லையா? நீ எங்க போக போற? நீ வேலையை கூட விட்டுட்டியே..அந்த வானதி வீட்டுக்கு போய் ஏதும் பிரச்சனை பண்ண போறியா வேண்டாப்பா...உன்னை வேணாம்னு சொன்ன பொண்ணு கிட்ட போய் இனி பேசி என்ன ஆகப் போகுது தற்கொலை பண்ணிக்கப் போறேன்னு கத்தியைக் கையில் வைத்து மிரட்டின பொண்ணை கல்யாணம் பண்ணி எத்தனை நாளைக்கு சந்தோஷமா இருக்க முடியும் சொல்லு அந்த பொண்ணு உனக்கு வேணாம்பா. என்னோட நம்ம வீட்டுக்கு வந்திடு"...என கெஞ்சினார்…

"இல்லம்மா... நான் அங்க எப்பவும் போக மாட்டேன்...இனி அவளே வந்தால் கூட இனி அவள் எனக்கு வேணாம்"….

"நான் இப்போ உங்களோட ஊருக்கும் வரல ..ஒரு பெண்ணால் ஏற்பட்ட காயத்துக்கு இனி ஒரு பொண்ணுதான் மருந்து என்பதை என்னால இப்போதைக்கு ஏற்றுக்கொள்ள முடியல"..

"எனக்கு கொஞ்சம் தனிமை தேவைப்படுகிறது அதனால என்ன கொஞ்ச நாள் தனியா இருக்க விடுங்க அம்மா நான் கண்டிப்பா உங்கள வந்து சந்திப்பேன் நம்முடைய தொழிலையும் கவனிப்பேன்…. மனதை தளற விடாதீங்க...நம் எல்லோரையும் கடவுள் எப்பவும் கை விட மாட்டார்.நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்..கடவுள் எனக்கான கடமைகளை செய்ய வழி விடுகிறதா நான் நினைக்கிறேன் நீங்க இப்போ ஊருக்கு கிளம்புங்கள் என்ன கொஞ்ச நாளைக்கு தேடாதீங்க நானே உங்களை தொடர்பு கொள்கிறேன்" என்று சொன்னவன் தாயின் பதிலை எதிர் பார்க்காமல் கோவிலை விட்டு வேகமாக வெளியே சென்றவன் அவனின் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றான்...

ஆயிற்று இது நடந்து இரண்டு ஆண்டுகள் இன்று வானதி சாய்பாபா கோவிலுக்கு தான் சென்று கொண்டிருக்கிறாள்…

அவள் திருமணத்தை நிறுத்திய பிறகு.. ஒரு வாரத்திலேயே தன்னை சீர்படுத்திக் கொண்டவள்... ஸ்ரீதர் வேலை செய்யும் பள்ளியில் சென்று ஸ்ரீதரை விசாரித்தாள் அங்கு அவன் இல்லை என்று சொன்னதும் இல்லாமல் எங்கு சென்று இருக்கிறான் என்ற விபரமும் அவர்களுக்கு தெரியவில்லை..

ஆனால் வட மாநிலத்தில் எங்கோ ஒரு சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியை அவன் தொடங்க உள்ளான் என்னும் செய்தி மட்டும் அவளுக்கு கிடைத்தது…

அவளின் எதிர்பார்த்ததும் இதுதானே மிகுந்த மனநிறைவுடன் வீடு வந்து சேர்ந்தாள்

வானதியின் தாய் அவளிடம் பேசுவதை சுத்தமாக நிறுத்திக்கொண்டார் தனது மகளுக்கு ஒரு திருமணம் நடக்கவில்லையே என்று உள்ளுக்குள்ளேயே மருகிக்கொண்டிருந்த தேவகி அடுத்த சில வாரங்களிலே இறந்தும் விட்டார்..

தாய் இறந்த பின்பு தான் வானத்திற்கு நிதர்சனம் புரிய தொடங்கியது தனது தாய் அவளை எந்த அளவு பாதுகாத்துக் கொண்டு இருக்கிறாள் என்பதும் புரிந்தது அவர் இறந்த சில நாட்களிலேயே அக்கம்பக்கம் இருக்கும் ஆண்கள் அவளை தவறாக பார்ப்பதும் அவளிடம் காரணமே இல்லாமல் ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டு வரும் பொழுது தான் அவளுக்கு புரிய தொடங்கியது


தன்னைச்சுற்றி கேடயம் போல் தாய் என்னும் உறவு எந்த அளவு பாதுகாப்பாக அரவணைத்து வைத்திருந்தார் என்பது சரி அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தான் இதுபோல தொல்லை என்றால் அவள் வேலை செய்யும் முதலாளியும் இப்பொழுது அவளிடம் வேண்டும் என்றே அருகில் வந்து அவளை சில்மிஷம் செய்வது போல் அருகில் வருவதும் அவளை தேவையில்லாமல் சீண்டிப் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது.

வயதில் மூத்தவர் தந்தை போல் இருந்தவர் தன்னிடம் இப்படி சில்மிஷம் செய்வது அவளுக்கு ஏற்புடையதாக இல்லை அவரிடம் ஒருமுறை இவள் எதிர்த்து கேள்வி கேட்கப் போய் ஆபீஸில் இருந்த முக்கியமான சில பைல்களை திருடி விட்டாள் என அவர் காவல்துறையில் கம்ப்ளைன்ட் செய்து இவளை காவல்நிலையம் வாசல் வரை ஏற்றி விட்டார்…

அவள் காவல் நிலையத்தில் வாசல் சென்ற சில நேரத்திலேயே அவளின் முதலாளி அவளிடம் மன்னிப்பு கேட்டதுடன் மட்டுமின்றி அவளை வீடு வரை கொண்டு வந்து விட்டார்.
அவளுக்கு மிகப்பெரிய குழப்பம் என்ன நடந்தது என்று கூட அவளால் யோசிக்க கூட முடியவில்லை எப்படியோ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என்று மனதில் நிம்மதி அடைந்தாள்

மறுநாளே
வேலை செய்யும் இடத்தில் இருந்து தன்னை முற்றிலுமாக விடுவித்துக் கொண்டாள்...

தனக்காக இருந்த ஒரு ஆதரவும் கிடையாது என்று ஆன பின்பு நிராதரவாக நின்ற வானதிக்கு தோன்றியது எல்லாம் ஒன்றுதான்…

ஸ்ரீதரை தேவையில்லாமல் தவற விட்டு விட்டோமோ என்று…

ஆனால் மற்றொரு மனமோ அவளுக்கு உடனடியாக ஆறுதல் கூறியது
தன்னைப்போல் பெண்களுக்கு கண்டிப்பாக வேறொருவன் கிடைப்பான் ஆனால் பார்கவியைப் போல் இருக்கும் குழந்தைகளுக்கு ஸ்ரீதரை போல் யாரோ ஒருவர்தான் கிடைப்பார்கள் ….என்று

அதனால் தான் எடுத்த முடிவு சரி தான் என மிகத் தீவிரமாக நம்பினாள்..


சரி பிழைப்புக்கு என்ன செய்வது அவளின் தாய் மறைந்த பிறகு தான் குடும்பத்திற்கு இத்தனை செலவு ஆகும் என்பதே அவளுக்கு புரிந்தது அவளின் தாய் சிறிதளவில் இவளுக்கு சேமித்து வைத்திருக்கிறார் ஆனால் அந்த சேமிப்பு எத்தனை நாள் இவளால் வீட்டில் அமர்ந்து கொண்டு சாப்பிட முடியும் யோசித்தவள் ஒவ்வொரு இடமாக வேலை தேடத் தொடங்கி இருந்தாள்

எங்கேயும் வேலை கிடைக்கவில்லை ஒரு இடத்தில் இவளுக்கு 28 வயதை தாண்டி விட்டது என்றும் அதிகப்படியான குவாலிபிகேஷன் இல்லை என்றும் அனுப்பிவிட ஒருகட்டத்தில் சோர்ந்து போனவள் எங்காவது சாதாரணமான வேலைக்குச் செல்லலாமா என்று கூட தேடிப்பார்த்தாள்

ம்கூம் எங்கேயும் அமையவில்லை ..

இது ஒரு பக்கம் என்றால் தன்னைச் சுற்றி அலையும் மனித கழுகுகளின் பார்வையில் இருந்து தப்பிப்பது இவளுக்கு மிகப்பெரிய வேலையாக இருந்தது எங்கும் இவளின் திறமைக்கான வேலை கொடுக்கப்படவில்லை எங்கு சென்றாலும் ஒரு வாரம் பத்து நாட்களுக்கு மேல் அவளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை


அவர்களுக்கெல்லாம் இவளின் தனிமை மிகப்பெரிய வரப்பிரசாதமாக தெரிந்தது ஏன் இவளிடம் அத்துமீறினால் தான் என்ன இவளுக்காக யார் இருக்கிறார்கள் நாம் இவளை ஏதேனும் செய்தால் கூட யார் வந்து நம்மை கேட்டு விடப் போகிறார்கள் என்று திமிரில் சிலபேர் அத்துமீற தொடங்கியிருந்தனர்


கடைசியாக ஏதாவது ஒரு வீட்டில் வேலை செய்யலாம் என்று சென்றால் அங்கும் அவளின் உரிமையாளர் அவளை வேலை செய்ய விடவில்லை..

அங்கேயும் சென்று ஒரு வாரத்திலேயே அந்த வீட்டு வேலை செய்யும் உரிமையாளரின் மனைவியால் துரத்தி விடப்பட்டாள், எனது கணவனை மயக்க வந்திருக்கிறாயா? என்ற அவப்பெயருடன் வெளியேறினாள். வாழ்க்கையை வெறுத்து விட ஒரு கட்டத்தில் தனிக்கான வாழ்க்கையை வாழ்ந்து தானே ஆகவேண்டும் என்று வைராக்கியத்தும் மீண்டும் வேலை தேடும் படலத்தில் இறங்கினாள்…


நாள் முழுவதும் வேலை தேடிய களைப்பில் பஸ்ஸில் கூட வர தோன்றாமல் நடந்து வந்து கொண்டிருந்தாள் வானதி அவளின் தோற்றம் இப்பொழுது முப்பதுக்கு மேல் காட்டும்படியாக இருந்தது தாய் இறந்து ஒரு வருடம் கூட இன்னும் முடிவடையவில்லை ஆனால் அவளுக்குத் தான் எத்தனை சோதனைகள்

கையிலிருந்த சேமிப்புகள் அனைத்துமே கரைந்தாயிற்று எங்குமே அவள் ஒரு மாதம் முழுவதும் வேலை செய்யவே இல்லை பத்து நாள் பதினைந்து நாள் இப்படியாக வேலை செய்ததால் எங்குமே அவளால் வேலைக்கான ஊதியத்தையும் பெற முடியவில்லை ஒவ்வொருவரும் இவள் வேலையிலேயே குறைகளைக் கூறி அதற்கான ஊதியத்தைக் கொடுக்க மறுத்துவிட்டனர்

மிகவும் நலிந்து காணப்பட்டாள் சோர்வுடன் நடந்து வந்த பொழுது தான் ஸ்ரீதர் வேலை செய்த அந்தப் பள்ளி கண்ணில் பட்டது ஒரு முடிவுடன் அங்கே சென்று அவனின் பள்ளியில் தன்னையும் ஓரு ஆசிரியராக சேர்த்துக் கொள்ளும்படி வேண்டினாள்...அவர்களும் உடனே சம்மதிக்க அதே பள்ளியில் அவளும் சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியையாக மாறிப்போனாள்…


ஆனால் அவளுக்கு இன்று வரை அந்தப் பள்ளியில் எப்படி தான் சென்றதும் உடனே வேலை கொடுத்தார்கள் என அவ்வப்போது நினைத்து பார்ப்பாள்


அந்தப் பள்ளியில் மிகவும் சொற்ப வருமானம் தான் வரும் என எதிர்பார்த்து தான் இவள் சென்று கேட்டது ஆனால் அவர்களோ இவள் முதலில் அலுவலகத்தில் வேலை செய்யும் பொழுது எவ்வளவு சம்பளம் வாங்கினாளோ அதே அளவு இவளுக்கு கொடுக்கப்பட்டது

குழந்தைகளை கவனிப்பதுதான் சிறுசிறு அலுவலக வேலைகளையும் கவனித்துக் கொள்ள அவளை பணியில் சேர்ந்துக் கொண்டனர்


அலுவலக வேலை செய்யும் போதெல்லாம் அவளின் கண்கள் ஸ்ரீதரை பற்றி ஏதாவது தகவல்கள் அந்த கோப்புகளில் கிடைக்குமா என தானாகவே அவனைத் தேட ஆரம்பித்து இருந்தது


அவள் என்றுமே ஸ்ரீதரை வெறுக்கவில்லை அவனை காதலிக்காமலும் இல்லையே அவன் இலட்சத்திற்கு தான் குறுக்கே நிற்கக் கூடாது என்று எண்ணினாள் அதனால் ஒதுங்கியும் வந்துவிட்டாள்.

ஆனால் இப்பொழுது தாயின் மறைவு மற்றவர்களின் பார்வை இது எல்லாம் அவளை புரட்டி எடுக்க தானாக மனம் ஸ்ரீதரை நாடிச் செல்கிறது

இப்பொழுது மனம் எங்கிலும் ஸ்ரீதர் மட்டுமே ஸ்ரீதரை என்றாவது ஒரு நாள் காணவேண்டும் அவனிடம் மனமுருக மன்னிப்பு கேட்க வேண்டும் இது மட்டுமே அவளின் எண்ணம்.

கடந்த இரு ஆண்டுகளாக வாராவாரம் அவள் கோவிலுக்கு வருகிறாள்.கடவுளிடம் எனது ஸ்ரீதரை பத்திரமாக பார்த்துக்கொள் என்னும் ஒற்றை கோரிக்கையை மட்டும் வைத்துவிட்டு அவர்கள் எப்போதும் அமரும் அந்த மண்டபத்தில் வந்து சிறிது நேரம் கண்மூடி அமர்வாள் அவளுடைய உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கின்றது என்றேனும் நீ அவனை காண்பாய் உன்னுடைய மனம் அவனுக்குப் புரியும் அன்று உன்னை அவன் மன்னிப்பான்...அவனின் வாழ்க்கை ஒட்டத்தில் உன்னையும் இணைத்துக்கொள்வான்….ஏன் என்றாள் இப்பொழுது இருவருக்குமே ஒரே லட்சியம், கனவு,எனவே இருவரும் சந்திக்கும் பொழுது உன்னை ஒரு நல்ல தோழியாக நல்ல காதலியாக நல்ல மனைவியாக ஏற்றுக் கொள்வான் என்று.


இன்று வரை காத்துக் கொண்டிருக்கிறாள்...முழுதாக இரண்டு ஆண்டுகள்... இதோ கோவிலுக்கு வந்தவள் தன்னுடைய கோரிக்கையை கடவுள் முன்பு வைக்கிறாள்.. வைத்தவள் நேராகச் சென்று மண்டபத்தில் அமர்ந்தபடி அவனுடன் அவள் பேசிய இனிமையான நாட்களை நினைவு கூறுகிறாள் .. அவர்களின் வாழ்வில் வசந்தம் வீசிய சில நாட்கள் அவனுடன் பேசிய தொலைபேசி உரையாடல்கள் என் அனைத்தையும் கண்மூடியபடி நினைத்துக் கொள்கிறாள்... அன்று போல் என்றாவது ஒருநாள் தன் வாழ்க்கையில் வசந்தம் வீசும் என நினைத்துக் கொண்டவள் அவனின் வரவை எதிர்பார்த்து அமர்ந்திருக்கிளாள்...

தொடரும் ‌….
 
Last edited:
Top