கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காத்திருந்த காதல் 17

Akila vaikundam

Moderator
Staff member
காத்திருந்த காதல் 17



இங்கே கோவிலில் வானதி காத்துக் கொண்டிருக்கும் அதே நேரம்


அங்கே ஸ்ரீதர் மூனாறில் அவனுடைய வீட்டின் டைனிங்டேபிளில் அமர்ந்த படி உணவருந்திக் கொண்டு இருந்தான்



திடீரென அவனுக்கு புரையேற பரிமாறிக் கொண்டிருந்த அவனது தாய் மீனாட்சியை தலையில் தட்டியபடி சாப்பிடற நேரத்திலே யாரு என் பிள்ளையை நினைக்கிறது என்று கூறியவர்


மெதுவா சாப்பிடு ஸ்ரீதர் என்று தலையை தட்டியபடி அப்படியே அவனுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுக்க தண்ணீரை வாங்கியவனின் ஞாபகம் வானதியிடம் சென்று வந்தது


அவனை இந்த நேரத்தில் நினைப்பது என்றால் வானதியை தவிர வேறு யார் இருக்கிறார்

தனது தாய்க்கு அடுத்தபடி வானதி மட்டும்தானே அவனின் நலனில் அக்கறை கொண்டவர்

அவளின் ஞாபகம் வரவுமே தட்டினியில் கைகளைக் கழுவியவன் பேசாது எழுந்து செல்ல பின்னே வந்த மீனாட்சிக்கு தான் பேசியது ஞாபகத்துக்கு வர தன் தலையிலேயே தானே தட்டிக் கொண்டவர்
அவனின் பின்னே சென்றார்

என்னப்பா ஸ்ரீதர் பாதி சாப்பாட்டுலேயே எழுந்துட்ட சாப்பாடு நல்லா இல்லையா


அப்படியெல்லாம் ஒன்னும் இல்லம்மா சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தது எனக்கு தான் நேரமாயிடுச்சு மழை வேற வர்ற மாதிரி இருக்கு சீக்கிரம் கிளம்பணும் அப்படி இல்லன்னா கீழே போகப் பாரஸ்ட் காரங்க பர்மிஷன் தர மாட்டாங்க

நீ கண்டிப்பா கோயம்புத்தூர் போய்த்தான் ஆகணுமா எனக்கு என்னமோ வேணாம் தோணுது ஸ்ரீதர்


அங்கிருந்து வந்தாச்சு இனிமே அந்த ஊரோட நிழல் கூட வேணாம்னு தோணுது என்று சிறு கலக்கத்தை மறைத்தபடி கூறினார்

அதற்கு ஸ்ரீதரும் என்னமா இப்படி பேசுறீங்க அந்த ஊரை மறக்க முடியுமா நா படிச்ச ஊர்,எனக்கு நல்லது கெட்டது புரிய வச்ச ஊர்,எனக்கு நல்ல நட்புகளை உருவாக்கி கொடுத்த ஊர்
அங்க நான் எப்படி போகாம இருக்க முடியும்…

அதுமில்லாம நான் வேலை செஞ்ச ஸ்கூல் இப்போ தனியார் மையத்துக்கு போகுது
கிட்டத்தட்ட 12 வருஷமா நான் அந்த ஸ்கூல்ல வேலை செஞ்சிருக்கேன்

இவ்வளவு நாள் மனிதாபிமானத்தோடு இயங்கிக்கிட்டிருந்த அந்த ஸ்கூல்

இன்னைக்கு வியாபார நோக்கத்தோடு தனியாருக்கு விக்கறாங்கனு தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் எப்படிமா சும்மா இருக்க முடியும் சொல்லுங்க


என்ன ஆளாக்கி விட்ட ஒரு பள்ளி என்னை ஒரு மனுஷனா மாத்தின ஒரு பள்ளி

என் கண் முன்னாடி அந்த ஸ்கூல் யாரோ ஒருத்தருக்கு போறது என்னால ஏத்துக்க முடியல


இது போல எத்தனையோ பள்ளியை உருவாக்கின என்னால நான் வேலை செஞ்ச அந்த பள்ளியை தனியாருக்கு குடுக்க விட்டுட்டா அதுக்கப்புறம் இத்தனை நாள் நான் பட்ட கஷ்டத்துக்கு அர்த்தம் இல்லாமல் போயிடும்

எப்படியாவது அந்த ஸ்கூல்லை நம்ம டிரஸ்டோட சேர்க்கனும் என்ன தடுக்காதீங்க மா ஆசிர்வாதம் பண்ணுங்க என்று அவர் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க சென்றவரை பாதியிலேயே தடுத்தவர்


நல்லா இருப்பா ஆனாலும் அந்த ஊர்ல அந்த பொண்ணு இருப்பால்ல என்று கூறியவர் தவறை உணர்ந்து பட்டென தனது நாக்கை கடித்துக்கொண்டார்


நொடி நேரத்தில் கோபத்தை மறைத்தவன்

எந்த பொண்ணுமா

என்ன காதலிக்கிறேன்னு பொய் சொல்லி என்ன கல்யாணம் வரை கொண்டு வந்து விட்டு அவமானப்படுத்தினாலே அந்த பொண்ணையா

அவளை மறந்து முழுசா ரெண்டு வருஷம் ஆயிடுச்சு

இனிமே அவளை பற்றின விஷயங்கள் எதையுமே இங்கே பேசாதீங்க
என்று முகத்தைக் கடுமையாக வைத்துக் படி தாய் மீனாட்சியிடம் கூறினான் ஸ்ரீதர்.

அவனின் கோபத்தை அறிந்த மீனாட்சி உடனே அவனை சமாதானப் படுத்தும் பொருட்டு


ஐயோ நான் உன்ன கோபப்படுத்த சொல்லல….அங்கிருந்து வந்தாச்சு மறுபடியும் ஏன் தேவையில்லாம மறுபடியும் அந்த பொண்ணு முகத்தில முழிக்கனும்னு நினைச்சேன் என்றவர் மேலும் தொடர்ந்தார்.


ஒரு விதத்தில் நீ சொல்லறதும் சரிதான் நாம என்ன கொலையா பண்ணிட்டு வந்தோம்


உன்னை காதலிக்கிறேனு பொய் சொல்லி நம்ப வச்சு உன் மனசு உடைச்ச அந்த பொண்ணே தைரியமா அந்த ஊரில் இருக்கும்போது எந்த தப்பும் பண்ணாத நீ போறதுல நான் ஏன் கவலை படனும்…


போதும் நீ இவ்ளோ நாள் பட்ட கஷ்டம் தைரியமாப் போயிட்டு வா இன்னும் எத்தனை நாள் அந்த பொண்ணுக்காக அங்க போகாம இருக்க முடியும் என்று ஸ்ரீதரிடம் கூறியவர் பிறகு சற்று தயங்கிய படியே


அப்புறம் ஸ்ரீதர் இந்த விஷயத்தை பத்தி பேசினா உனக்கு கோபம் வரும்னு தெரியும் இருந்தாலும் பேசாம இருக்க முடியாது இல்லையா அதனால தான் இதை சொல்றேன்


ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு பார்த்து நிச்சயம் பண்ணி வெச்சோம் ஞாபகம் இருக்கா சக்தினு பேரு

நம்ம பக்கத்துக்கு எஸ்டேட்காரரோட பொண்ணு இப்போ பொண்ணு வீட்டுல நேத்து வந்து என்னை கேட்டாங்க

எப்போ கல்யாணம் வச்சுக்கலாம்னு அவங்களுக்கு நான் என்ன பதில் சொல்ல

நீ சொன்னதால தான் நான் அங்களுக்கு சம்மதம் சொன்னேன் இவ்வளவு நாள் கல்யாணமே வேணாம்னு இருந்த பொண்ணு


ஏதோ மீட்டிங்ல உன்னை பார்த்து பேசிருக்கா அதுல உன்னை பிடிச்சு போய் அவங்க அப்பா மூலமா நம்ம கிட்ட கல்யாணத்துக்கு கேட்டு வந்தாங்க நானும் உடனே முடிவு சொல்லாம உன் கிட்ட கேட்டுட்டு நீ சரின்னு சொன்னதுக்கு அதுக்கப்புறம் தான் முடிவு சொன்னேன்


கல்யாணம் மட்டும் ஒரு ஆறு மாசம் கழிச்சி வைங்கனு சொன்ன நானும் அதே போல அவங்ககிட்ட சொன்னேன்


அவங்களும் இதுவரை எதுமே கேட்டுக்கல நாம கேட்ட ஆறு மாசம் முடிஞ்சு போச்சு

இப்போ நேத்து கேட்டாங்க நான் என்ன சொல்லட்டும் என்று பரிதவிப்புடன் அவனிடம் கேட்டார்.

உடனே ஸ்ரீதர் சில வினாடிகள் நின்று கண்மூடி யோசித்தவன்

நான் சொன்ன கண்டிஷன் எல்லாம் அந்த பொண்ணு கிட்ட சொன்னீங்களா என்று கேட்டான்.

ஓ சொல்லிட்டேனே ரெண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கறது
தானே அவ ஓகே சொல்லிட்டா என்று சற்று பதட்டத்துடன் சொன்னாள்.


ம்ம்... என்கிட்டயும் எல்லாத்துக்கும் தலையை ஆட்டினா தான் ஆனாலும் அவ முழுமனசோட சரினு சொன்னாளா அப்படிங்கறது தான் கேள்வி

எனக்கென்னவோ ஏதோ கட்டாயத்துக்காக சரினு சொன்னது போல இருந்தது அதான் யோசிக்கறேன் நீஜமாவே அவ முழுமனசோட ஒத்துக்கறதா இருந்தா அவளை கல்யாணம் பண்ணறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லமா என்றவன் பிறகு


அம்மா எனக்காக ஒன்னு மட்டும் செய்ங்க முதல்ல ஸ்கூல் பிரச்சனை சரியாகட்டும் அப்புறமா நாம கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம் இப்போ நா கிளம்பறேன்
என்றவனை தடுத்தவள்

டேய் அவங்க கேட்டா என்ன சொல்லறது…

சீக்கிரமா கல்யாணம் வெச்சுக்கலாம்னு சொல்லிடுங்க என்று கூறியபடியே தனது காரை இயக்கியவன் கோவையை நோக்கி செலுத்த தொடங்கினான்…

சந்தோஷத்தில் மீனாட்சி பெண்ணிடம் கூற ஃமொபைல் போனை கையில் எடுக்கவும் அது இசைக்கவும் சரியாக இருந்தது

ஆச்சரியத்துடன் யார் அழைப்பது என்று பார்க்க அதில் சக்தி காலிங் என வந்தது சந்தோஷத்துடன் காலை அட்டெண்ட் செய்த மீனாக்ஷி புன்னகையுடன் ஹலோ சக்தி இப்போ தான் உனக்கு ஃகால் பண்ணணும்னு நினைச்சேன் அதுக்குள்ள நீயே கூப்பிட்டுட்ட என்று கூற

ஓஓ... ஆன்ட்டி ஸ்ரீ இருக்காரா?

இல்ல சக்தி இப்போதான் கோயம்புத்தூர் போறேனு கிளம்பினான்.

ம்ம்...ஒகே….
ஆன்ட்டி நான் உங்கள மீட் பண்ணனும்னு இப்ப நீங்க ப்ரீயா ஆன்ட்டி

என்னமா கேள்வி இது உன் வீடு நீ எப்போ வேணாலும் வரலாம் நான் எப்போவும் ஃப்ரீ தான் சக்தி

சரி ஆன்ட்டி இன்னும் பத்து நிமிஷத்துல நான் அங்க இருப்பேன் என்று கூற வரப்போகும் மருமகளுக்காக காத்திருக்க ஆரம்பிதாதார்.


சற்று நேரத்திற்கெல்லாம் சக்தியின் கார் ஸ்ரீயின் வீட்டு வாசல் முன்பு வந்து நிற்க வாசலிலேயே நின்று மீனாக்ஷி அவளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்


ஆர்ப்பாட்டமில்லாத அழகியாய் வந்து இறங்கினாள் சக்தி ஐந்தரையடியில் அழகிய தோற்றம்...மாநிறம், வெளிநாட்டில் படித்து வந்தவள் என்று கூறினால் யாரும் நம்ப முடியாததொரு தோற்றம்…


அழகிய ஒரு காட்டன் புடவையில் நீட்டாக மடிப்பெடுத்து பின் செய்து படி இருந்தவளின் ஆடையில் ஒரு கண்ணியம் இருந்தது

சக்தி முப்பது வயது இருக்கும் அவளின் நீண்ட அழகிய கூந்தலை அழகாக பின்னலிட்டு இருந்தாள்.


தந்தைக்கு துணையாக கடந்த நான்கு ஆண்டுகளாக அவர்களின் குடும்ப தொழிலை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

தாய் கிடையாது தந்தை மட்டுமே அதனால் அதிகப்படியான செல்லமும் கூட தந்தையை விட்டு மிக நீண்ட தூரம் செல்லக்கூடாது என்பதாலேயே இதுநாள் வரை திருமணம் செய்யாமல் இருக்கிறாள்.


இப்பொழுது ஸ்ரீதரின் பால் ஒரு காதல் அவளுக்கு ஏனோ பார்த்த நொடியிலேயே அவனைப் பிடித்திருந்தது... தனது வாழ்க்கையில் திருமணம் என்று ஒன்று இருந்தால் அது ஸ்ரீதர் மட்டுமே என்ற உறுதியோடு அவனை காதலித்து கொண்டிருக்கிறாள்

ஒரு காரணம் அவனைக் கண்டதும் காதலில் விழுந்தது என்றால் மற்றொரு காரணம் அவன் தங்கள் வீட்டின் அருகிலேயே இருக்கிறான் அவள் அவனை திருமணம் செய்யும் பொழுது அவள் எங்கும் தந்தையைப் பிரிந்து செல்ல வேண்டாம் நினைத்த நேரம் தந்தையை சென்று பார்த்துக்கொள்ளலாம் தந்தையும் தன்னை வந்து பார்த்துக்கொள்ளலாம் அதுமட்டுமின்றி ஸ்ரீதரின் அழகும் அவனின் வசதிகளும் ஒரு காரணம்.



கையில் மொபைல் போனை பிடித்தபடி மீனாட்சியை நோக்கி வர அவரோ சந்தோஷத்தில் அவளை கட்டி அணைத்தவர் உள்ள வா சக்தி என்று அன்பாக அழைத்துச் சொல்ல

அவளும் புன்னகையுடனே வீட்டின் உள்ளே வந்து அமர்ந்தவள் இயல்பாக வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அறைக்கும் சென்று படி ஸ்ரீதரின் புகைப்படங்கள் ஸ்ரீதர் உபயோகிக்கும் பொருட்கள் என அனைத்தையும் பார்த்தும் கைகளால் தொட்டும் ரசித்துக்கொண்டிருந்தாள்.

பின்புறமாக வந்து மீனாட்சி அவளின் செயல்களைப் பார்த்து ரசித்த படி என்னமா சக்தி திடீர்னு வீட்டுக்கு வந்து இருக்க ஏதாவது முக்கியமான விஷயமா என்று கேட்டார்.


அவள் திருப்பி புன்னகைத்தபடி பெருசா ஒன்னும் இல்ல ஆன்ட்டி ஸ்ரீதர் கிட்ட பேசலாம்னு கிளம்பினேன்


அவர் கிளம்பினதால ஜஸ்ட் உங்கள பாத்துட்டு போலாம்னு வந்தேன்

ஆமா நீங்க என்னமோ எங்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னிங்க என்ன அது என்று கேட்க

அதுவா ஸ்ரீதர் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான் அடுத்த வாரமே ஒரு நல்ல நாள் இருக்கு அதான் உன்கிட்ட சொல்லலாம்னு….
இதை உன்கிட்ட சொல்லக் கூடாது தான் உன் அப்பா கிட்ட தான் சொல்லனும் ஆனாலும் உங்க வீட்ல எல்லாமே நீதானே பாத்துக்கற அதனால உன் முடிவு தான் முக்கியம்

உன் கிட்ட போன் பண்ணி சொல்லிவிட்டு வீட்டுக்கு வரலாம்ன்னு இருந்தேன் அதுக்குள்ள நீயே வரவும் உன் கிட்ட சொல்லியாச்சி இனிஉன் அப்பாகிட்ட சொல்லிட்டு மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பாக்கணும் என்று கூறினார்


பெரியதாக எந்த ஒரு சந்தோஷத்தையும் காட்டிக் கொள்ளாத சக்தி ஓ அப்படியா என்றபடியே அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தவள் டிபாயில் மேல் இருந்த ஒரு மேகசீனை எடுத்து மும்மரமாக புரட்ட தொடங்கியிருந்தாள்

இதை கவனித்த மீனாட்சியும் என்ன சத்தி இவ்ளோ பெரிய சந்தோஷமான விஷயத்தை சொல்றேன் ஆனா உன் முகத்தில எந்த ஒரு சந்தோஷத்தையும் காணோமே என்று கூற



எல்லாம் சரி ஆன்ட்டி ஸ்ரீதர் அழகா இருக்காரு என்னோட வயசுக்கு ஏற்றவாறு இருக்காங்க வசதி அந்தஸ்து எல்லாத்தையும் ஓகே ஆனா அவர் என்கிட்ட இந்த ஆறு மாசத்துல ஒரு தடவை கூட அதைப்பற்றிப் பேசல


அதுவுமில்லாம ஆறு மாசத்துக்கு முன்னாடி என் மனசுல இருக்குறத நான் அவர்கிட்ட சொல்லும் போதும் அவர் பெருசா எந்த ஒரு ரியாக்ஷனும் காமிக்கல இப்போ கூட நீங்க தான் சொல்றீங்க அவர் என்கிட்ட சொல்லல அந்த ஒரு வருத்தம் தான்


என் காதலை அவர் கிட்ட சொன்னப்போ அவர் முகம் துளிகூட சந்தோஷமில்ல அது கூட பரவால்ல ஆனா அதுக்கு பதிலா ஏகப்பட்ட கண்டிஷன் வெச்சாங்க

அவர் மேல் இருந்த காதல்ல நானும் எல்லாத்துக்கும் தலையாட்டினேன் ஆனா இப்போ யோசித்துப் பார்க்கும்போது கொஞ்சம் அவசரப் பட்டிட்டேனோனு தோணுது ரொம்ப குழப்பமா இருக்கு


எனக்கு அம்மா கிடையாது ஒரு வேளை அம்மா இருந்திருந்தா இதெல்லாம் அவங்க கிட்ட சொல்லலாம் அந்த கொடுப்பினையும் எனக்கில்ல
ஓகே ஆன்ட்டி நான் வீட்டுக்கு கிளம்புறேன் அப்பா தேடுவாங்க
அப்பா கிட்ட நான் சொல்லிவிட்டு வரல என்று கூறியவள் வெளியே செல்ல எத்தனிக்கும் போது

மீனாட்சி குறுக்கிட்டு ஒரு நிமிஷம் நில்லு சக்தி

என்னமா நீ பாட்டுக்கு ஏதேதோ பேசிட்டு போறேன்ங்கற என்ன பத்தி கொஞ்சம் யோசித்துப் பாத்தியா சாகுறதுக்குள்ள அவன் கல்யாணத்தைப் பார்க்க மாட்டேனானு ஒவ்வொரு நிமிஷமும் ஏங்கிட்டு இருக்கேன்

ஆனா நீ ரொம்ப சுலபமா அவசரப்பட்டுடேனோனு வருத்தமா சொல்லற ஸ்ரீதர் ரொம்ப நல்லவன் அதை நீ நம்பனும்,அவன் உனக்கானவன் சக்தி


நீ என் மருமக தயவு செஞ்சு கண்டதை போட்டு மனசுல குழப்பிக்காத நான் உன் அப்பாகிட்ட வந்து பேசுறேன்

ஆன்ட்டி அப்பா கிட்ட வந்து என்ன பேச போறீங்க என்று படபடப்புடன் சக்தி கேட்க

அதற்கு மீனாட்சி சிரித்தபடி நீ என்கிட்ட பேசினத எதையும் நான் சொல்லப்போறது இல்லமா உன் அப்பா கிட்ட வந்து கல்யாண விஷயத்தை தான் பேச போறேன் அதுக்கு முன்னாடி ஸ்ரீ வந்து உன்கிட்ட வந்து உன் முகத்தைப் பார்த்து அவனோட சம்மதத்தை சொல்லுவான் , அதுக்கப்புறம் தான் உங்க கல்யாணம் நடக்கும்.இந்த குழப்பதோட கண்டிப்பா நீ என் மகன் கையால தாலி வாங்கிகறத என்னால ஏத்துக்க முடியாது ‌..


குழப்பம் இல்லாமல் சந்தோஷமா வீட்டுக்கு போய் கல்யாண பொண்ணா லட்சணமா இரு உன் அம்மா நான் சொல்றேன் புரியுதா என்று அவளை அனுப்பி வைத்தவர் ஸ்ரீ வந்தவுடன் முதல் வேலையாக சக்தியைப் பற்றிய விஷயங்களை பேசி புரிய வைக்க வேண்டும் என எண்ணிக் கொண்டார்.

தொடரும்….
 
Top