கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காத்திருந்த காதல் 18 &19

Akila vaikundam

Moderator
Staff member
காத்திருந்த காதல்-18

கண்மூடி ஸ்ரீதரை நினைத்துக்கொண்டிருந்த வானதியின் செல்போனில் இருந்து சிறு அதிர்வு தெரிந்தது.

உடனே தனது கைப்பையில் வைத்திருந்த மொபைலை எடுத்து பார்க்க அவள் பணி செய்யும் பள்ளியிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்திருந்தது

கோவில் என்பதினால் மொபைலை சைலெட் மட்டும் வைப்ரேஷன் மோடில் போட்டு இருந்தவள்

ஃபோனில் தெரியும் நம்பர் யார் என பார்க்க அவளுடன் பள்ளியில் ஒன்றாக பணிசெய்யும் காயத்ரி தான் அழைத்திருந்தாள்…

சமீபத்தில் வேலைக்கு சேர்ந்த பெண் அவளுடன் மட்டுமே வானதி கொஞ்சம் இயல்பாக பழகுவாள்…

வானதியின் வயதை ஒத்தவள் திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்பவள்...ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

காயத்ரியின் மகளும் ஒரு சிறப்பு குழந்தைதான் அந்த குழந்தையை எதாவது ஆசிரமத்தில் சேர்த்து விட சொல்லி கணவர் தொல்லை செய்ய அதனால் அவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவாகாரத்துவரை கொண்டு வந்து விட்டது.


குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு வெளியில் அவள் காத்திருப்பதை பார்த்து வானதிதான் அவளுக்கு இந்த வேலையை வாங்கித்தந்தாள்..அதனாலே காயத்ரிக்கு வானதியின் மீது அளவுகடந்த மரியாதை மற்றும் பாசம் வானதியின் நிலை நன்கு அறிந்தவள் அதானாலோ என்னவோ இவளுக்கு அவளும்,அவளுக்கும் இவளும் நல்ல ஆறுதல்.


காயத்திரின் நம்பரை கண்டதுமே வேகமாக
ஃகாலை அட்டெர்ன் செய்தாள் வானதி

பிறகு யாருக்கும் கேட்காத வண்ணம் அலைபேசியை காதினில் வைத்து மெல்லிய குரலில் சொல்லுங்க காயத்ரி என்றாள்.

ஹலோ வானதி மேடம் உங்கள பாக்குறதுக்காக ஒருத்தர் நம்ம ஸ்கூல்ல வந்து காத்துகிட்டு இருக்கிறாரு

என்ன என்னை பாக்குறதுக்கா?
யார் அவரு?

தெரியல மேம் உங்கள பாக்கணும்னு சொன்னாங்க

நா இன்னைக்கு லீவுனு சொன்னீங்களா

சொன்னேன் மேடம் பரவால்ல அவங்கள லீவை கேன்சல் பண்ணிட்டு வர சொல்லுங்கனு சொல்லறாரு

என்னது லீவ கேன்சல் பண்ணிட்டு வர சொல்றாங்களா யாரு அது இவ்வளவு அதிகாரமா என்ன வர சொல்றது


தெரியல மேடம் நம்ம ஸ்கூல் டீச்சர்ஸ் எல்லாம் போய் பேசுறத பாத்தா அவரு நம்ம ஸ்கூலுக்கு நல்ல பரிச்சயம் மாதிரி தெரியுது என்று கூற

வானதியின் மனதில் திடீரென்று ஒரு மின்னல் அடித்தது ஒருவேளை அது ஸ்ரீ யாக இருப்பானோ என்று உடனே பதட்டம் அடைந்தவள்

காயத்ரி அவர் பாக்குறது எப்படி இருக்கிறாரு என்று கேட்டாள்

உடனே காயத்ரியும் பாக்குறதுக்கு நல்லா கலரா இருக்காரு நல்லா படிச்ச மாதிரி தெரியறாரு பெரிய இடத்துப் பிள்ளை மாதிரி இருக்காரு எப்படியும் 35 வயசு இருக்கும் என்று கூற

உடனே பரபரப்பான வானதி காயத்ரி நான் வந்துட்டு இருக்கேனு சொல்லுங்க

அவருக்கு ஏதாவது குடிக்க வாங்கி கொடுங்க அப்புறம் அவரு நான் வர்றதுக்குள்ள கிளம்பிட போறாரு நான் வர்ற வரைக்கும் அவரை எங்கேயும் போக விடாதீங்க ப்ளீஸ் என்று கெஞ்சுவது போல் கூறியவள் கோவிலை விட்டு கிளம்பத் தொடங்கியிருந்தாள்

வானதி யாரை இரண்டு வருடம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாளோ அவன் இப்பொழுது அவளை தேடி வந்து விட்டான்

அவளின் வசந்தம் வந்து விட்டது என்று நடந்தபடியே கடவுளை வேண்டியவள் ஃபோனை அணைத்து வைத்தவள் பள்ளியை நோக்கி விரைவாக நடக்கத் தொடங்கியிருந்தாள்.

ஃபோன் பேசி முடித்த காயத்ரி வானதி ஏன் இன்று சற்று வித்தியாசமாக பேசுகிறாள் யாரோ ஒரு சாதாரண நன்கொடையாளர் வந்து இருப்பதற்கு ஏன் இவ்வளவு பதட்டம் ஏற்படவேண்டும் என்று புரியாமல் தோள்களை குலுக்கியபடி வந்திருந்த ஆடவனிடம்

சார் அவங்க வந்துகிட்டு இருக்காங்க ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க அதுக்குள்ள வந்துடுவாங்க ஏதாவது குடிக்கறீங்களா என்று சம்பிரதாயமாக கேட்க

அந்த ஆடவன் அவளை பார்த்து பளீரென புன்னகை சிந்தியபடி பத்து நிமிஷம் இல்ல பத்து மணி நேரம் ஆனா கூட அவங்கள நான் பார்த்துட்டு தான் போவேன் அதனால நான் வெயிட் பண்றேன் என்று கூற அவள் சிரித்தபடி நகர்ந்து சென்றாள்


அந்த ஆடவன் தன் முன்னால் இருந்த அன்றைய நாளிதழை எடுத்து விரித்தபடி படிக்கத் தொடங்கி இருந்தான் கண்கள்தான் பேப்பரில் இருந்ததே ஒழிய மனம் எங்கிலும் வானதியின் வருகையை பற்றியே இருந்தது.

அவன் யோசித்துக் கொண்டிருந்த சில நிமிடங்களிலேயே வானதி பரபரப்புடன் பள்ளிக்குள் நுழைந்தாள்
வானதியின் பதட்டத்தை கண்ட காயத்ரி அவளின் எதிர்ப்புறம் சென்று என்னாச்சு வானதி மேடம் ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க அவர் உங்களுக்கு முக்கியமானவராக என்று கேட்க வானதியோ எல்லாம் நான் உங்களுக்கு அப்புறமா சொல்றேன் அவர் வந்து ரொம்ப நேரம் ஆச்சா என்று கேட்டு படி வேகமாக அலுவலக அறைக்குள் நுழைந்தாள்.

அங்கு அவளுக்கு முதுகைக் காட்டியபடி அலுவலக டேபிளில் பேப்பரை படித்துக் கொண்டிருந்த அந்த ஆடவனின் தோற்றத்தைக் கண்ட ஒரு நிமிடம் நெஞ்சை அடைப்பது போல் இருந்தது அது அவளின் ஸ்ரீதர் தான் அதே தோற்றம் ஒவ்வொரு முறையும் அவளை கடந்து செல்லும் போது அவள் ரசித்த அவனின் தோற்றம் கண்கள் கலங்க அவனைய கதவில் சாய்ந்த படி பார்த்துக் கொண்டிருக்கிறாள்…


நின்றபடியே அவனை ஆராய தொடங்கியிருந்தாள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவனை எப்படி விட்டுப் பிரிந்தாலோ அதே போல தான் இன்றும் இருக்கின்றான் என்ன
உடல் எடை மட்டும் சற்று போட்டதுபோல் தோன்றியது

உடனே குனிந்து தன்னைப்பார்க்க பத்து வயது கூடியது போல் அவளுக்கு தோன்றியது புடவை முந்தானையை எடுத்து முதுகுப்புறமாக போர்த்தி இருக்க கொண்டை போட்டபடி 30வயது தோற்றத்தை 40 வயதாக மாற்றியிருந்தாள்.

எப்படி பெண்களால் மட்டும் உடனடியாக பத்து வயதைக் கூட்டிக் காட்ட முடிகிறது என்று அவளுக்கு நினைக்கையில் சிரிப்பு வந்தது ஆனால் அவனோ இரண்டு வயது குறைந்தது போல் காட்சியளிக்கிறான்



பெண்களுக்கும் ஆண்களுக்கும் தான் எத்தனை வித்தியாசம் என்று நொந்தபடியே கதவில் அழுத்தி சாய அது அவளின் பாரம் தாங்காமல் பின் நகர இவள் சுதாரிப்பதற்க்குள் சற்று நிலை குழைந்து கதவின் மீதே சாய


அந்த சத்தத்தில் அந்த ஆடவன் திரும்பிப்பார்க்க அவனைக் கண்டதும் அதிர்ச்சியில் கதவை கெட்டியாகப் பிடித்தபடி இவள் நின்று கொண்டிருக்க அந்த ஆடவனும் வேகமாக எழுந்து என்னாச்சு வானதி பார்த்து வர மாட்டீங்களா என்றபடி அவளின் கைகளை தூக்கி விட வந்தான்

அதற்குள் சுதாரித்து நின்றவள் அவனையே உற்றுப் பார்த்தபடி நீங்க யாரு உங்களுக்கு எப்படி என் பெயர் தெரியும் என்றபடி அதிர்ச்சியில் கேட்டாள்
அவனும் பளீரென்று புன்னகையில் எதுக்கு வானதி இவ்ளோ ஷாக் ஆகறீங்க என்று கேட்க

நீங்க யாருனு கேட்டேன் இன்னும் பதில் வரல எதுக்காக என்னை வரச்சொன்னீங்க உங்களுக்கு என்ன வேணும் என்று சற்று கோபமாக கேட்டாள்.

எதுக்காக இவ்ளோ கோபம் பொறுமையா ஓவ்வொன்னா எவ்ளோ கேள்வி வேணும்னாலும் கேளுங்க எல்லாத்துக்கும் பதில் சொல்லறேன் என்று கூறியவன் மேற்கொண்டு ஏதோ கூற வருவதற்குள்


அந்த பள்ளியில் தலைமை பொறுப்பில் இருக்கும் பெண்மணி ஒருவர் அந்த ஆடவனை பார்த்து புன்னகைத்தபடியே உள்ளே வந்தார்



வந்தவர் அப்புதியவனிடம் சாரி சார் உங்கள ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேனா அங்க ஒரு குழந்தை ரொம்ப அழுகை அதான் போன என்னால உடனே வர முடியல நீங்க வந்ததும் உங்களை விசாரிக்க கூட முடியல

எப்படி இருக்கீங்க என்ன சார் இவ்வளவு தூரம் ஏதாவது முக்கியமான விஷயமா என்று கேட்க


அவனும் இயல்பாக நத்திங் மேம் ஸ்கூல் எப்படி இருக்குன்னு பாத்துட்டு போலாம்னு வந்தேன் என்று கூறியவன் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு கவரை எடுத்து அந்தப் பெண்மணியின் கையில் கொடுக்க அவரும் சந்தோஷமாக பெற்றுக்கொண்டவர்

உங்கள மாதிரி ஆளுங்க இருக்கறதால
தான் இன்னும் மனிதம் உயிரோடு இருக்கு நீங்க மட்டும் மாதமாதம் உதவி செய்யாம உங்களுக்கு தெரிஞ்சவங்க நண்பர்கள் மூலமாகவும் ஒரு குறிப்பிட்ட தொகையை இந்த பள்ளிக்காக சேகரித்து அதை டிடியா எடுத்துக் கொடுக்கலாம் பெரிய மனசு வேணும் என்று அவன் கொடுத்த கவரை காட்டியபடி அவர் நன்றி தெரிவிக்க


அவனோ தயவு செஞ்சு பெரிய வார்த்தை எல்லாம் பேசாதீங்க மேடம் இது என்னோட கடமை என்று கூறினான்

பேசிக்கொண்டிருந்த பெண்மணி அப்பொழுதுதான் வானதியை கவனித்தார் யோசனையுடன் வானதியை பார்த்தவர் இன்னைக்கு நீங்க லீவ் சொல்லி இருந்தீங்கல்ல

ஏன் லீவ் கேன்சல் பண்ணிட்டிங்களா
சரி போய் கிளாஸ் அட்டென்ட் பண்ணுங்க ஆபிஸ் ஒர்க் இன்னைக்கு நான் பாத்துக்குறேன் என்று கூறியபடி அவர் கூற


குறுக்கிட்ட அப்புதியவன் மேம் நான் தான் வானதியை பாக்கனும்னு வரச்சொன்னேன் அவங்க இன்னைக்கு லீவ்ல தான் இருக்காங்க இப்போ என்னோட கிளம்பிடுவாங்க என்று கூறவும் அவர் சிறு தலையசைப்புடன் உள்ளே செல்ல

வானதிக்கோ அவன் யார் என தெரிந்துகொள்ள ஆர்வம் தோன்றியது அவனும் இயல்பாகப் கொஞ்சம் வெளிய போயி பேசலாமா வானதி என்று கூறியபடி காரின் முன்பக்க கதவை இவளுக்கு திறந்து விட்டபடி ட்ரைவர் இருக்கையில் சென்று அமர்ந்து கொள்ள இவள் காயத்ரியை பார்த்து என்ன செய்வது என்பது போல் பார்த்தாள்.


காயத்ரி வேகமாக அருகினில் வந்து அப்புதியவனிடம் யார் நீங்க எதுக்காக எங்க வானதி மேடமை கூட்டிட்டு போறேன்னு சொல்றீங்க அவங்க எங்கேயும் வர மாட்டாங்க என்று கறாராகக் கூறினாள்.


அதற்கு அவன் உங்க வானதி மேடத்தை நான் கடிச்சு சாப்பிட்ற மாட்டேன் அவங்க நல்லதுக்காக தான் வெளிய கூட்டிட்டு போறேன்.சில முக்கியமான விஷயம் பேசனும் அதுக்கு இந்த இடம் சரி வராது


உண்மையிலேயே நீங்க அவங்க நல்லா இருக்கணும்னு நினைச்சா ப்ளீஸ் இப்போ என்னோட அனுப்பி வைங்க உங்களுக்கு ஒருவேளை என் மேல சந்தேகம் ஏதாவது வந்தா நீங்களும் வேணா கூட வாங்க என்று அவளைக் கூப்பிட அவளோ தனது மகளை விட்டுட்டு எப்படி இவனோட செல்ல என்று யோசித்தாள்.

அவளது யோசனையை கண்ட புதியவன் மெல்ல சிரித்தபடி அவன் பர்சில் இருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து காயத்ரியின் கைகளில் திணித்தான் ஒருவேளை இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க வானதி மேடத்துக்கு ஏதாவது ஒன்னு ஆயிடுச்சுனு நீங்க பயந்தாலோ இல்ல என் மேல உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தாலோ தாராளமா இது என்னோட விசிட்டிங் கார்டு இதை வச்சு நீங்க போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிக்கலாம் அப்புறம் நாங்க போனதுக்கு அப்புறம் ஸ்கூல்ல என்னை பத்தி விசாரிங்க உங்க பயம் காணாம போயிடும் என்றவன் இன்னமும் இரு பெண்கள் இடத்திலும் குழப்பம் இருப்பதை அறிந்தவன் முகத்தை கெஞ்சுவது போல் வைத்துக்கொண்டு
ப்ளீஸ் நம்புங்க நீங்க நினைக்கிற அளவுக்கு எல்லாம் நான் கெட்டவன் கிடையாது வானதியோட வாழ்க்கைப் பிரச்சினை இது ஸ்ரீதரை பற்றி முக்கியமான விஷயம் பேசணும்

கொஞ்சம் என்னோடு அனுப்பி வைங்க என்று காயத்ரியிடம் தன்மையாக கூறியவன் வானதியைப் பார்த்து போகலாமா என்பதுபோல் தலையசைத்து கேட்டான்

ஸ்ரீதரின் பெயரைக் கேட்டதுமே வானதி நொடியில் தெளிவு பெற்றாள்.


இவனுக்கும் ஸ்ரீதருக்கும் ஏதோ ஒரு வகையில் சம்மந்தம் இருக்கிறது அதுமட்டும் உறுதி இப்பொழுது இவன் பின்னால் சென்றால் மட்டுமே அவனைப் பற்றிய தகவல்களை பெற முடியும் என்று உணந்தவள் காயத்ரியைப் பார்த்து போய் வருகிறேன் என்பது போல் தலையசைத்தவள் யோசிக்காமல் காரில் வந்து ஏறிக்கொண்டாள்.

காரின் உள்ளே ஏறி அமர்ந்தவள் கதவை மெல்ல மூடியபடியே அவனைப் பார்த்து நீங்க யாரு

திடீர்னு பார்த்தா எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் மாதிரி இருக்கீங்க எப்படிக் கேட்கறதுன்னு தெரியல உங்களுக்கும் ஸ்ரீதருக்கும் என்ன சம்மந்தம்


ஒருவேளை அவரோட அண்ணா,தம்பி,இப்படி ஏதாவது உறவுமுறையா?



அவனோ புன்னகைத்தபடியே காரை லாவகமாக ஓட்டியவன் எனக்கு அண்ணன் தம்பியெல்லாம் கிடையாது ஒரே ஒரு தங்கைதான் அவளும் இப்போ இல்ல தொலைச்சிட்டோம் என்று கண்கலங்கியவனிடம்


ஒஒஒ சாரி என்று இவள் வருத்தம் தெரிவிக்க அவனோ நொடி நேரத்தில் தன்னை சமன்படுத்தி கொண்டவன் இட்ஸ் ஓகே தங்கச்சி பெயர் என்னன்னு கேக்க மாட்டீங்களா என்று ஓரக்கண்ணில் அவளைப் பார்த்து கேட்டான்

உடனே அவளும் என்ன பேரு என்று கேட்க பார்கவி என்று அழுத்தமாகக் கூறினான்

பார்கவியின் பேரை கேட்கவும் வானதி இந்த பேர நான் எங்கேயோ கேட்டு இருக்கறேனே என்று பார்கவி என்று தனக்குத் தானாகவே கூறி முடிக்கும் முன்னே அவளின் மூளையில் மின்னல் வெட்டியது அப்படினா நீங்க என்று கேட்க


ஆமா நானே தான் பிரசாந்த் ஸ்ரீ யோட பெஸ்ட் பிரெண்ட் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் பிரசாந்த்.

19

தன்னைத் தேடி வந்திருப்பது ஸ்ரீயின் நண்பன் பிரசாந்த் என்று தெரியுமே வானதிக்கு இருந்த அத்தனை கவலைகளும் காணாமல் போயிற்று மனதில் ஒரு பெருத்த நிம்மதியும் வர நெஞ்சின் மீது கை வைத்து அப்படியே கண் மூடி சில வினாடிகள் காரின் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்

அவளைப் பார்த்தபடியே வாகனத்தை ஒரு சிறுவர் பூங்காவில் நிறுத்தினான்.

வாகனம் நிற்கவும் கண் விழித்து பார்த்தவள் குழப்பத்துடன் பிரசாத்தை பார்க்க நான் உங்ககிட்ட ஸ்ரீதரை பத்தி கொஞ்சம் பேசனும் அதான் இங்க நிறுத்தினேன் என்று கூறவும்

சரி என்பது போல் தலையசைத்து படி கீழே இறங்கினாள்.


உள்ளே சென்று இருவருக்கும் வசதியான இடத்தை தேர்வு செய்து அமர்ந்தனர்.பிறகு நேரடியாகவே பிரசாந்த் அவளைப்பார்த்து கேட்டான்.

இது என்ன கோலம் வானதி ஏதோ வாழ்க்கை எல்லாம முடிஞ்சி போய் ஏன் வாழறோம்ங்கறது போல ஒரு தோற்றம்

என்ன வயசு உங்களுக்கு?
முப்பதா….
இல்ல அறுபதா …
என்று கோபப்பட்டவன் என்னைப்பற்றி எப்பவாவது ஸ்ரீதர் உங்ககிட்ட பேசி இருக்கிறானா என்று கேட்க


அவள் நெற்றி சுருக்கி குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள் பிரசாத்தை பற்றி ஒரு தடவை கூட ஒரு வார்த்தைகூட ஸ்ரீதர் பேசியதே இல்லை ஏன் என்பது போல் யோசனையாக அவனைப் பார்க்க

ஸ்ரீதர் என்ன பத்தி ஒரு வார்த்தை கூட உங்க கிட்ட பேசினது இல்ல ஆனா ஸ்ரீ பத்தின எல்லா விஷயமும் எனக்கு தெரிஞ்சிருக்கு எப்படினு தான பாக்குறீங்க என்று கேட்க


அவள் ஆமாம் என்பது போல தலையசைத்தாள்

அதற்கு பிரசாந்த் அவன் என்னோட ஆருயிர் நண்பன் அவன் தான் எனக்கு எல்லாமே அவன் வேணும்னா என்னை கண்டுக்காம இருக்கலாம் அதுக்காக அவன் எப்படி வேணாலும் போகட்டும்னு என்னால விட முடியாது அதனால தான் இப்போ உங்க கிட்ட பேச வந்தது

சரி முதல்ல என்னை பத்தி முதல்ல தெளிவா சொல்லிடறேன் என்றவன்

நான் பிரசாந்த் ஸ்ரீ ஓட சின்ன வயசு பிரெண்ட் ஆறாவது லிருந்து காலேஜ் முடிக்கிற வரைக்கும் ஒன்னாதான் படிச்ச காலேஜ் டைம்ல அவன் எங்க வீட்டிலதான் இருந்தான் எனக்கு ஒரு தங்கை இருந்தானு சொன்னேன்லயா அவ பேரு பார்கவி என்று அவன் கூற தொடங்கும் பொழுது இடையில் குறிக்கிட்ட வானதி


எனக்கு ஸ்ரீயோட அம்மா உங்க பிரண்ட்ஷிப் பார்கவி மரணம் அதுக்கப்புறமா ஸ்ரீயோட முடிவு இது எல்லாத்தையும் சொல்லி இருக்காங்க என்று தலையைக் குனிந்தபடி கூற அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த பிரசாந்த் அதனால்தான் தியாகம் பண்றதா நினைச்சு ஸ்ரீயை ஏமாத்தினிங்களா என்று கோபமாக கேட்க அவள் வெடுக்கென முகத்தை தூக்கி அவனைப் பார்த்தவள் இல்லை என்பது போல் தலையசைத்து விட்டு மீண்டும் குனிந்து கொண்டாள்.


ஓகே அப்புறம் உங்களுக்கு எல்லாமே ஒரு அளவுக்கு தெரியுது இல்லையா ரைட் அப்ப நான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிடறேன்



என் தங்கை இறந்ததும் அவங்க வீட்ல சண்டை போட்ட ஸ்ரீ நேரா இங்க வந்து ஸ்கூல்ல வேலைக்கு சேர்ந்துட்டான்.


இங்க வேலைக்கு வந்த கொஞ்ச நாள் எங்க மேல் இருந்த கோபத்தில் யாரோடையும் பேசல நான் அப்பப்போ அவனோட பேச முயற்சி பண்ணினேன் ஆனா அவன் என் நம்பரைப் பார்த்தாலே கட் பண்ணி விடுவான்


அதுக்கப்புறம் என் அம்மா மூலமா அவன் கிட்ட பேச முயற்சி பண்ணேன் அதுல கொஞ்சம் பலன் கிடைச்சது ஏன்னா அவன் பொண்ணுங்க கிட்டயும் குழந்தைக கிட்டயும் அவனோட கோபத்தை என்னைக்குமே காட்டமாட்டான்


என் அம்மாவோட அழுகை சமாதான பேச்சால கொஞ்சம் பலன் கிடைச்சது ஸ்ரீ அப்பப்போ அம்மாவோட பேச ஆரம்பிச்சான் அதுக்கு அப்புறமா அம்மா மூலமா அவன் என்ன பண்ணறான் எப்படி இருக்கறாங்கற விஷயம் எல்லாமே தெரிஞ்சுது


அந்த சமயத்துல என்னோட அரியர்ஸ் கிளியர் பண்ணின எனக்கு பெங்களூரில் ஒரு பெரிய கம்பெனியில வேலை கிடைச்சது அங்கு ட்ரெய்னிங் போன இடத்தில ஒரு பொண்ணை பிடிச்சு போய் அவளை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அதுக்கப்புறமா நான் இங்கே அம்மா அப்பாவை பார்க்க வரும்பொழுது தான் அம்மா எதார்த்தமா ஒரு விஷயத்தை சொன்னாங்க


கூட பொறந்த தங்கைக்காக நீ எதுவுமே பண்ணல ஆனால் எந்த சம்பந்தமும் இல்லாமல் ஸ்ரீ இன்னைக்கு ஒரு சிறப்பு குழந்தைகள் பள்ளியில் சொற்ப வருமானத்தில் அவன் சக்தியையும் மீறி அங்க சமாளிச்சுட்டு இருக்கிறான்னு விஷயத்தைச் சொல்லவும் எனக்கு

அவன் மேல மிகப்பெரிய மதிப்பு வந்தது அதுக்கப்புறம் நானும் அவனோட இந்த சேவையில் கொஞ்சம் பங்கெடுத்துக்கனும்னு நினைச்சு மாசம் மாசம் ஒரு குறிப்பிட்ட தொகையை இது போல சில ஸ்கூல் களுக்கும் எனக்கு தெரிஞ்சவங்க மூலமாகவும் பணம் கலெக்ட் பண்ணி கொடுத்துட்டு வர்றேன்...ஆனாலும் அப்பப்போ எனக்கு மிகப்பெரிய குற்ற உணர்ச்சி…

பார்கவி யோட விஷயத்துல நேரடியா சம்பந்தப்பட்ட நான் கல்யாணம் குடும்பம் குழந்தைனு செட்டில் ஆகும் போது எந்த வகையிலும் சம்பந்தப்படாத ஸ்ரீ அவனுடைய வாழ்க்கையோட வட்டத்தை குறுக்கிட்டானேனு...

உண்மையிலேயே ஸ்ரீதரோட முடிவு எனக்கு ரொம்ப சந்தோஷம் அவனை நினைச்சு ரொம்ப பெருமையாவும் இருக்கு ஆனா அவனுக்காக ஒரு குடும்பத்தை ஏற்படுத்திகிட்டு இது போல சேவை செஞ்சா இன்னும் ரொம்ப சந்தோஷம்...



எங்களுக்கு முதல் குழந்தை பிறந்து அஞ்சு வருஷம் ஆகற டைம்ல தான் திடீர்னு ஒருநாள் என் அம்மா கிட்ட இருந்து போன் ஸ்ரீக்கு கல்யாணம்னு ரொம்ப சந்தோஷம் அவன் கூப்பிட்டாலும் கூப்பிடலனாலும் நான் அந்த கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும்னு என் மனைவி குழந்தையை அழைச்சிட்டு இஙக வர லேட் ஆயிடுச்சி


நான் என் குடும்பத்தோட இங்க வரும் பொழுது தான் இந்த கல்யாணத்தை நீங்க நிறுத்தினா விஷயம் எனக்கு தெரிஞ்சது

பயங்கர ஷாக் எங்க எல்லாருக்குமே


நாங்க எல்லாரும் இங்க வர்றதுக்கு முன்ன கோயில் இருக்குற எல்லாருமே கலைஞ்சி போயிட்டாங்க அவங்க அம்மா மட்டும் தான் இருந்தாங்க அவங்க என்னைப் பார்த்ததும் கதறி அழ ஆரம்பிச்சிட்டாங்க

இப்படியெல்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்தா நான் ஸ்ரீயை உன் வீட்டுக்கு அனுப்பியிருக்கவே மாட்டேன் அவனுக்கு ஹாஸ்டல் ஒத்துப்போகலனு தான் உங்க வீட்டுக்கு அனுப்பினேன் இப்படி வாழ்க்கையே ஒத்துப் போகாத மாதிரி பண்ணிட்டிங்களேன்னு கதறினாங்க


எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா போயிருச்சு நான் அவங்ககிட்ட பலமுறை மன்னிப்பு கேட்டேன்

எனக்கொரு வாய்ப்பு தாங்க நான் அவனோட வாழ்க்கையை சரி செய்யறேனு ஆன்டிக்கு சத்தியம் செஞ்சி குடுத்தேன்


அதுக்கு அவங்க உண்மையிலேயே நீ அவனோட நல்ல பிரண்டா இருந்தா உன்னை மாதிரி அவனுக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சிக் குடு நான் சாகுறதுக்குள்ள என் கையால என் பேரன் பேத்தியை தூக்கிக் கொஞ்சற பாக்கியத்தைக் குடு அதுக்கப்புறம் நீ என்கிட்ட வந்து பேசுனு அவங்களும் கோவமா கிளம்பி போய்ட்டாங்க…

அதுக்கப்புறமா என் மனைவி குழந்தைகளை பெங்களூர் அனுப்பி வைச்சிட்டு அவனோட கல்யாணத்தை நிறுத்தின உங்களோட சண்டை போட உங்கள தேடி உங்க வீட்டுக்கு
வந்தேன்


அப்போ நீங்க வீட்ல தனியா உக்காந்து சத்தமா அழுதுட்டு இருந்தீங்க

என்ன மாதிரி பொண்ணுக்கு யார் வேணும்னாலும் கணவரா கிடைப்பாங்க ஸ்ரீ ஆனா பார்கவி மாதிரி இருக்குற குழந்தைகளுக்கு உங்கள தவிர வேறு யாரும் கிடைக்க மாட்டாங்க
உங்கள தேவையில்லாமல் சலன படுத்தின க்கு என்ன மன்னிச்சிடுங்க காயப்படுத்தி இருந்தா என்ன மன்னிச்சிடுங்க ஸ்ரீ னு தனியா நடுக்கூடத்தில கீழே விழுந்து கதறிட்டு இருந்தீங்க சண்டை போட வந்த நான் உங்களுக்கு ஆறுதல் சொல்ல வழி தெரியாம அப்படியே திரும்பி வந்துட்டேன்…


அதுக்கப்புறம் தனியாக உட்கார்ந்து யோசிக்கும் போதுதான் சில விஷயங்கள் என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது ஸ்ரீயோட லட்சியம் என்னங்கறது எனக்கு தெரியும்


அவன் உங்களுக்காக அவன் லட்சியத்தை தூக்கி வீச தயாராக இருந்ததும் புரிஞ்சுது அதை ஏற்காத நீங்க கல்யாணத்தை நிறுத்திருக்கீங்கனு புரிஞ்சுது உங்களோட பிரிவு தற்காலிகமானதா இருக்கணும் நிரந்தரமானதாகி விடக்கூடாதுன்னு நான் மறைமுகமா போராட ஆரம்பிச்சேன்…

முதல்ல உங்களையும் அம்மாவையும் வந்து சந்திச்சு ஸ்ரீ பத்தின விஷயங்களை உங்களுக்கு புரிய வைக்கணும் அதன் பிறகு உங்க பயத்தை போக்கி ஸ்ரீ யை சமாதானம் செஞ்சி மீண்டும் உங்களை சேர்த்து வைக்கலாம்னு வரும் போது உங்கம்மா தவறுன விஷயம் எனக்கு தெரிஞ்சது


இந்த சமயத்தில் போய் எப்படி திருமண விஷயத்தைப் பேசுறதுன்னு நான் பழையபடி பெங்களூர் போயிட்டேன் அதுக்குப் பிறகு கொஞ்ச நாள் கழிச்சு வரும்போது எதேர்ச்சையா உங்கள போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல பார்த்தேன்


ஸ்ரீ காதலிச்ச பொண்ணை அப்படியே விட்டு விட்டுப் போக எனக்கு மனசு வரல என்னனு விசாரிக்கும் போது வேலை செய்யற இடத்தில் உங்களுக்கு பிரச்சினைனு தெரிஞ்சது…தேவையில்லாம திருட்டு பட்டம் கட்டி உங்கள ஸ்டேஷன் வாசல் வரை கொண்டு வந்து விட்டதும் புரிஞ்சது...ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் என் ஃபிண்டோட அண்ணன்ங்கறதால ஈஸியா என்ன கேஸ்னு கேட்டதும் விஷயத்தை எனக்கு சொன்னாங்க

அந்த நாய் உங்கிட்ட வாலாட்டின விஷயம் தெரிஞ்சதும் என் பிரண்டோட அண்ணன் மூலமா அவனை நல்லா கவனிக்க வச்சி அதுல இருந்து உங்களை வெளிய கொண்டுவந்தேன் என்று கூறவும் வானதியும் அவனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி ரொம்ப நன்றி அண்ணா


இன்னும் எனக்கு அது ஒரு சின்ன உறுத்தல் தான் என்னை ஸ்டேஷன் வரைக்கும் கூட்டிட்டு போய் எதுவுமே நடக்காத மாதிரி அந்த ஆள் என் வீட்டில் கொண்டு வந்து விட்டது என் கிட்ட சாரி கேட்டது ஏன்னு அப்பப்போ யோசிப்பேன் யாரோ எனக்கு உதவறாங்கனு தெரியும் அது யாருனு இப்போ தெரிஞ்சுது ரொம்ப நன்றி அண்ணா


என் அம்மா இந்த உலகத்தை விட்டுப் போனதும் எனக்கு யாருமே இல்லைன்னு நினைச்சேன் அப்படியெல்லாம் இல்ல எனக்கு நீங்க இருக்கீங்க இப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு

அப்புறமா அண்ணா இந்த ஸ்கூல்ல வேலை கூட…. என்று வானதி இழுக்க

அவன் சிரித்தபடியே ஆமாம் என்பது போல் தலையசைத்தான்

ஸ்டேஷன்ல அந்த பிரச்சினை முடிந்ததுமே நான் தான் ஸ்கூலுக்கு உங்க ரெஸ்யூம் அனுப்பி வச்சேன். இந்த ரெஸ்யூம் ல இருக்கிற பொண்ணுக்கு ஏதாவது வேலை இருந்தா ஏற்பாடு பண்ணி குடுங்கனு அவங்களும் உன்னோடதை பெண்டிங் லிஸ்டில் வெச்சிருந்தாங்க சரியா நீங்க போய் கேட்ட நேரம் பார்த்து அங்க வேக்கன்சி இருக்கவும் உங்கள உடனே அந்த வேலையில வெச்சிகிட்டாங்க…

மாசமாசம் நா கணிசமான ஒரு தொகையை அந்த ஸ்கூலுக்கு அனுப்புவேன் அந்த ஐடில இருந்து உங்க ரெஸ்யூம் தல ைஅனுப்பதால உடனே அவங்க உங்களுக்கு வேலை குடுத்திருப்பாங்க…

அண்ணா இத்தனை நாள் அந்த ஸ்கூலுக்கு டொனேஷன் பண்ணறீங்க ஒரு தடவை கூட வா ஸ்ரீ உங்ககிட்ட பேசல என்று இவள் அப்பாவியாக கேட்க


பொதுவா இந்த மாதிரி உதவி பண்றதை சம்பந்தப்பட்ட டிரஸ்ட் கிட்ட வெளிய சொல்ல வேணாம்னு சொல்லி வச்சிருக்கேன் வானதி இரண்டாவது ஸ்ரீ இங்க ஒரு சாதரண டீச்சர் அந்த வகைல அவனுக்கு என்னையெல்லாம் தெரிய வேண்டிய அவசியமே கிடையாது... மாதாமாதம் ஸ்ரீயே அந்த ஃபண்ட் மேனேஜ் பண்ணியிருந்தா கூட
நான்தான் அனுப்புறேன்னு ஸ்ரீக்கு தெரியாது…

என்னோட சம்பளம் கூட அதிகப்படியோனு எனக்கு பல தடவை தோணியிருக்கு அண்ணா

என் சம்பளம் கூட நீங்கதான் கைக்காசு போட்டு கொடுத்துட்டு இருக்கீங்களா என்று இவள் மேலும் அவளின் சந்தேகத்தை அவனிடம் கேட்க


ஐயோ அம்மா உனக்கு சம்பளம் கொடுக்கற அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது இப்ப நீ எவ்வளவு சம்பளம் வாங்குற என்று கேட்க அவளும் கூறினாள்.


இவ்வளவு தான் தர்றாங்களா

இதுதான் உனக்கு பெருசா என்று சிரித்தவன் நீ முதல்ல வேலை செஞ்ச இடத்தில அவன் உன்ன நல்லா ஏமாத்தி இருக்கான் அதனாலதான் இந்த சம்பளமே உனக்கு பெருசா தெரிது


இங்கே அடிப்பபடை சம்பளமே இதுதான் னு நினைக்கறேன் அதிகமா எல்லாம் கொடுக்கல

இது சேவை மனப்பான்மையோடு நடத்துவதாக இங்கு நீ சம்பளத்தை அதிகம் எதிர்பார்க்க முடியாது ..

சரி வானதி உனக்கு நா உதவி பண்ணினது இப்ப நீ இருக்கிறது இது எல்லாத்தையும் ஒதுக்கி வைக்கலாம் அது எல்லாம் நடந்து முடிஞ்சு கதை இப்போ நான் ஏன் உன்னை தேடி வந்தேனு சொல்லிடறேன்.


முதல்ல. உன்கிட்ட ஒரு கேள்வி உண்மையை மட்டும் தான் சொல்லனும் பொய் சொல்லக்கூடாது மாற்றிப் பேச கூடாது அப்படி ஏதாவது சொன்னனு தெரிஞ்சா இப்போ என்னை பாத்து கூப்பிடறல்ல அண்ணானு அந்த ஊரிமையை எடுத்துக்க வேண்டி வரும் என்று மிரட்டியவன் எதுக்காக கல்யாணத்தை நிறுத்தின…
உண்மையை சொல்லு அவனோட சொத்துக்காகவா அது கிடைக்காதுனு தெரிஞ்சதும் நிறுத்தினியா
இல்ல நீஜமாவே அவனோட லட்சியத்துக்கு குறுக்க நிக்ககூடாதுன்னா

எது உண்மை சொல்லு வானதி

உன் வாயால அதை கேக்கனும்

அவனைத் திருமணம் செஞ்சுக்க உனக்கு விருப்பம் இல்லேன்னா நீ முதல்லயே அதை தடுத்து நிறுத்தி இருக்கலாம்ல ஏன் ஊரை அழைச்சி அவனை அவமானப்படுத்தின

நீ என்ன பண்ணி வச்சிருக்கனு புரியுதா...உன் தப்பு தெரிஞ்சும் கூட ஸ்ரீ காதலிச்சாங்கற ஓரே ஒரு காரணத்திற்காக இந்த ரெண்டு வருஷமும் உன்னை நான் பாதுகாத்து வச்சுக்கிட்டு இருக்கேன் இப்போ உன் மனசுல இருக்குறத நீ என்கிட்ட சொல்லலைன்னா இந்த நிமிஷமே உன் வாழ்க்கையில் இருந்து நான் ஒதுங்கி விடுவேன் அதுக்காக ஸ்ரீ யை விட்டு ஒதுங்கிடுவேனு மட்டும் நினைக்காதே அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையற வரை அவனோட நீழலா கூட இருப்பேன் சொல்லு ஏன் கல்யாணத்தை நிறுத்தின வானதி என்று கொஞ்சம் சத்தமாக கேட்டான்.

உடனே அவள் கண்களில் நீர் பெருக அண்ணா என்ன மன்னிச்சிடுங்க என்று கூறியவள் ஸ்ரீ யை காதலிக்கும் போது என் மனசுல எந்த வித எதிர்பார்ப்பும் கிடையாது பார்த்ததுமே எனக்கு அவர பிடிச்சது அவர் என்னை விட்டு விலகிப் போக போக எனக்கும் அவர்மேல அதிகமான ஈர்ப்பு தான் உண்டாச்சு தவிர குறையல

விரட்டி விரட்டி காதலிச்சேன் அவரை கல்யாணம் செஞ்சி சந்தோஷமா வாழலாம்னு நினைச்சேன் எல்லாமே கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி வரைக்கும் தான்

என் அம்மா ஸ்ரீ யை பத்தின விஷயங்களை கேட்கவும் தான் எனக்கே புரியுது ஸ்ரீ யை பத்தி எதுமே எனக்கு தெரில முதன்முதலா நான் ஸ்ரீதரை தேர்ந்தெடுக்கிற விஷயத்துல தப்பு பண்ணிட்டேனோனு தோணிச்சு
ஆனா மறுநாள்


ஸ்ரீ யோட அம்மாவ பாக்கற வரைக்கும் தான் அந்த குழப்பம் எல்லாம் அவர்களைப் பார்த்ததும் எல்லாமே காணாமப் போயிடுச்சு

அவங்க என் கிட்ட அன்பா பேசினாங்க அப்பதான் ஸ்ரீ பத்தி கேட்டேன் அவங்க தான் உங்களுடைய நட்பு பார்கவியோட மரணம் அதால அவருக்கு ஏற்பட்ட மன வருத்தம்


அந்த கோபத்திலே ஸ்கூல்ல வந்து ஜாயின் பண்ணி கல்யாணமே வேணாம் இருந்துது இதெல்லாம் தெரிஞ்சுது

மீனாட்சி அம்மா சொல்லி முடிக்கிற வரைக்கும் எதுவுமே தப்பா தோணலை ஆனா கடைசில அந்த ஸ்கூல் மாதிரியே நிறைய ஸ்கூல் ஆரம்பிக்கனும்

நிறைய குழந்தைகளுக்கு உதவனும்ங்கற ஸ்ரீ யோட லட்சியம் தெரிஞ்சது கல்யாணத்தால அது கெட போறதில்ல கல்யாணத்துக்கு அப்புறமாவும் அவர் வேலையை செய்யலாமேனு மனச தேத்தி கிட்டேன் ஆனா அவரு கல்யாணம் முடிஞ்சதும் எல்லாத்தையும் விட போறதா சொல்லவும் தான் எனக்கு அதிர்ச்சி அவர் என்ன கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் அதே மாதிரி சேவையை செய்யறதா சொல்லி இருந்தாங்கன்னா எனக்கு எந்த பிரச்சினையும் இருக்காது

ஆனா அவரு என்னை கல்யாணம் பண்ணினதும் எனக்காக எல்லாத்தையும் விடறேன்னு சொன்னததை தான் என்னால ஏத்துக்க முடியல

ஓரு இலட்சியத்தோட இருந்த ஒருத்தரை சலன படுத்தி திருமணம் செஞ்சிக்கனுமானு யோசிச்சேன் அதனாலதான் அன்னைக்கு இந்த கல்யாணத்தை நிறுத்தினேன்.


அவசரப்பட்டுடியே வானதி நீ அவன் கிட்ட சொல்லி இருக்கலாமே உன் வேலைக்கு நம்ம கல்யாணத்துக்கும் எந்த பிரச்சினையும் இல்லனு

இல்லன்னா நான் அவர் கிட்ட கேட்டேன் ஆனா அதுக்கு அவர் என்ன சொன்னார்னா கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட நேரம் வருமானம் எல்லாமே உனக்கானது அதனால நான் எல்லாதையும் தள்ளி வைக்கறேனு எதோ சொன்னாரு…

அன்னக்கி இருந்த மன நிலைமைக்கு அந்தக் கல்யாணத்தை நிறுத்தறது தான் சரினு எனக்கு பட்டது ஆனா இன்னைக்கு இருக்கிற இந்த பக்குவம் அன்னைக்கு இருந்திருந்தா திருமணத்திற்கு பிறகு அவர் கிட்ட பேசி அவரோட வேலையை செய்ய விட்டிருப்பேன்

தொலைச்சிட்டேன் அண்ணா முழுசா அவரை தொலச்சிட்டேன் என் அம்மா என்ன விட்டு போனதுக்கு அப்புறம் தான் எனக்கு புரியுது என் வாழ்க்கையில தொலைக்க கூடாத ஒன்னை தொலைச்சுட்டு நிக்கிறேன்

இன்னைக்கு யாருமே இல்லாம அனாதையா நிக்கும் போதுதான் தெரியுது நான் இழந்தது எவ்ளோ பெரிய இழப்புனு இப்போ அவரை என் மனசு தேடுது ஆனா அவர் இங்கயில்ல எங்க இருக்காருனு கூட தெரியல என்னால அவர் காதலை மறுக்கவே முடியாது
எனக்கு அவர் வேணும்...ஒருவேளை அவருக்கும் என்னோட காதல் நியாபகம் வந்தா இல்ல என் துரோகம் நியாபகம் வந்தா அட்லீஸ்ட் என்னோட சண்டை போடவாவது என்ன தேடி வருவாருல்ல அதுக்காக தான் அவரை தேடி கோவில்ல காத்துகிட்டு இருக்கேன் என்று கூறி அழுபவளுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் கவலையுடன் அவளைப் பார்த்தான் பிறகு



நீ இன்னும் எத்தனை நாள் காத்திருக்க போற …
நீ காத்திருக்கற விஷயம் ஸ்ரீக்கு தெரியாத போது இங்க நீ இலவு காத்த கிளிபோல காத்திருக்கறதுல என்ன பிரயோஜனம் சொல்லு…


தப்பு செஞ்சது நீ இது வரைக்கும் அது தப்புனு உணராம அவன்கிட்ட உன் நிலைமையை புரிய வைக்காம இப்படி வாரா வாரம் கோவிலில் காத்துக் இருக்கிறதால என்ன நடந்திட போகுது


இந்த ரெண்டு வருஷம் காத்திருந்தது போல காலத்துக்கும் காத்து இருக்க போறியா என்று கேட்டான்.

அவள் புரியாமல் விளிக்க

சொல்லு வானதி ஒருவேளை அவன் வராம போயிட்டானா?

இல்லனா அவர் வருவாரு என் உள் மனசு சொல்லுது அவர் கண்டிப்பா என்னை தேடி வருவாரு


எந்த நம்பிக்கையில் சொல்ற வானதி கொஞ்சம் யோசிச்சு பாரு பொருளை தொலைச்சவ நீ தொலைச்ச நீ தேடனுமா இல்ல பொருளே வந்து நான் இங்க இருக்கேன் வந்து எடுத்துக்கனு உங்கிட்ட வருமா?

இப்போ இங்க ஸ்ரீ மை வேணாம்னு தூக்கி வீசினது நீ

ஏன் அவனை வேணாம்னு சொன்னது கூட ஸ்ரீ க்கு தெரியாது அப்படியிருக்கும் போது நீ இங்க காத்திருக்கறதுல என்ன யூஸ் சொல்லு வானதி என்றவனிடம்


என்னதான் சொல்ல வர்றீங்க அண்ணா கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க என்றாள்

ஸ்ரீ க்கு அவங்க அம்மா கல்யாண ஏற்பாடுகளை தீவிரமாக செஞ்சுகிட்டு இருக்காங்க


நீ இங்க காத்துகிட்டு இருக்கறதால எந்த ஒரு முன்னேற்றமும் இருக்கப் போறது கிடையாது

அங்க அவங்க அம்மா பாத்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவன் செட்டில் ஆனதுக்கு அப்புறமும் நீ இப்படி காத்திருந்தா யாருக்கு நஷ்டம்


ஒன்னு ஸ்ரீ மை நேரில் சந்தித்து உன் பக்க நியாயத்தை சொல்லி அவன் கிட்ட மன்னிப்பு கேளு அவன் உன்னை ஏத்துக்கிட்டா சந்தோஷம் அப்படி இல்லையா


உனக்கான ஒரு வாழ்க்கையை நீ ஏற்படுக்கனும்

எனக்கு இது சுத்தமா பிடிக்கல இப்படி நீ அவனுக்காக காத்து இருக்கிறது


போதும் கடந்த ஒரு வருஷமா உனக்கு நிழல்போல பின்னாடியே வந்து நான் ரொம்ப நொந்து போயிட்டேன் எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப் படுது


என் மனைவி குழந்தைகளோடு நேரம் செலவு பண்ணனும்னு நினைக்கிறேன் என் மனைவிக்கு அடுத்த மாதம் 2-வது குழந்தைக்கான பிரசவம் அவ கூட நான் இருக்கனும்னு ஆசைப் படுறா


உன்னை இங்க விட்டுட்டு என்னால என் மனைவியோட சந்தோஷமா இருக்க முடியல


இப்ப நான் சொல்றது உனக்கு புரியுதா என்று அவளை பார்த்து பிரசாந்த் கேட்க


அவளோ நல்லா புரியுது அண்ணா கூடப் பிறந்த தங்கை மாதிரி இவ்வளவு நாளா என்னை பாதுகாத்து இருக்கீங்க உங்களுக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப் படுது

எங்கே என்னை இப்படியே விட்டுட்டு போகவும் உங்களுக்கு மனசு வரல எனக்காகவும் ஸ்ரீகாகமும் நீங்க யோசிக்கிறீங்க

நான் இப்போ ஸ்ரீதரை தேடிப் போகணும்னு சொல்றீங்க நான் போறேன் ஆனா எனக்கு அவங்க எங்க இருக்காங்க எதுவுமே தெரியாது மூனாறுல இருக்கறது மட்டும் தெரியும் அவங்க அம்மா ஒரு முறை சொன்னாங்க


மூனாறுல எந்த பக்கம்னு கூட தெரியாது அண்ணா


அந்தக் கவலை உனக்கு வேண்டாம் வானதி நீ கிளம்பற மாதிரி இருந்தா உடனே எனக்கு சொல்லு

நீ அவனைத் தேடிப் போற மாதிரி இருந்தா ஒரு பிரச்சனையும் உனக்கு வராதது போல நான் பாத்துக்கறேன் எனக்கு தெரிஞ்ச ஒருத்தரோட வண்டியிலும் உன்னை அனுப்பி வைக்கிறேன்

அவனோட அட்ரஸை நான் உனக்கு தர்றேன் நீ போய் அவன பாரு அவங்க அம்மாவை சமாதானப்படுத்து


அவனை சமாதனப்படுத்தி திருமணம் செய்யற வழியைப் பாரு அடுத்த முறை நான் உன்னை சந்திக்கும் போது நீயும் ஸ்ரீ யும் ஒரு குடும்பமா இருக்கனும் அவங்க அம்மாவுக்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாத்தணும் அதுக்கு நீ உதவி பண்ணனும் செய்வியா ?

அப்படி இல்லையா நீ அவன் வாழ்க்கையில் இருந்து முழுசா ஒதுங்கிடு அவன் அவங்க அம்மா பாத்த பொண்ணை திருமணம் செஞ்சு செட்டில் ஆகட்டும்

எனக்கு இந்த இரண்டில் ஏதாவது ஒன்று மட்டும் பண்ணி கொடு என்று அவளிடம் கேட்டு சத்தியம் வாங்கியவன்

எப்போ அவனை சந்திக்க போகலாம்னு இருக்க என்று கேட்டான்

உடனே அவள் யோசிக்காமல் அண்ணா இந்த வாரம் முடியட்டும் எங்களுடைய ஸ்கூல் வேறு ஒருவருடைய கை மாறுது அந்த வேலைகள் கொஞ்சம் போய்கிட்டு இருக்கு அது முடிஞ்சதுக்கு அப்புறமா தான் நான் தொடர்ச்சியா லீவு போட முடியும்


மூனாறு போனா எப்படியும் ஒரே நாள்ல முடிகிற வேலை கிடையாது ஸ்கூல் வேலையையும் விட்டுட்டு அங்க போகவும் முடியாது என்று கூற


அதற்கு பிரசாந்த் எத பண்ணாலும் சீக்கிரமாப் பண்ணு நீ காலம் தாழ்த்தற ஒவ்வொரு நிமிஷமும் உனக்கு எதிரா அமைய வாய்ப்பிருக்கிறது


நீ கிளம்பும் போது எனக்கு போன் பண்ணி சொல்லு நான் என் பிரண்ட் கிட்ட சொல்லி உனக்கு வண்டி அனுப்பி வைக்கிறேன் என்று கூறி அவன் விடைபெற்றுச் சென்றான்


வானதிக்கு இப்பொழுது மிகப் பெரிய நிம்மதி வந்து சேர்ந்தது கடந்த ஒரு வருடமாக ஸ்ரீ முற்றிலும் தொலைத்து விட்டோம் என்ற எண்ணம் அவள் மனதில் வந்து கொண்டே இருந்தது இப்பொழுது அவளுக்கு மகிழ்ச்சி

ஒன்று அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இரண்டாவது அவளின் தவறை உணர்ந்து ஸ்ரீயை தேடிச்செல்ல போகிறார் ஸ்ரீதரின் தாயையும் அவனையும் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று ஒரு மூலையில் கலக்கம் இருந்தாலும்

பழகிய சில நாட்களிலேயே ஸ்ரீதரை பற்றி முற்றிலும் தெரிந்து வைத்திருந்தாள் கண்டிப்பாக அவன் எந்த சந்தர்ப்பத்திலும் தன்னிடம் கடுமையாக நடந்து கொள்ளமாட்டான்

தன்னுடைய நிலை பற்றி அவனிடம் கூறி அவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் கண்டிப்பாக அவன் மன்னித்து தன்னை ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு வந்தது அந்த சந்தோஷத்துடன் வீடு வந்து சேர்ந்தாள்.

தொடரும்
 
Top