கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காத்திருந்த காதல்-2

Akila vaikundam

Moderator
Staff member
2

அருகினில் வந்த அந்த இளைஞனுக்கு வயது முப்பதில் இருந்து முப்பத்தைதந்துக்குள் இருக்கும்...பார்த்ததும் பசை போல் ஓட்டிக்கொள்ளகூடிய முகம் அது..

அவனைக் கண்டதும் வானதி சற்று நகர்ந்து நின்றாள்...

ஆனால் அவன் நேராக வானதியிடம் வந்தவன்,

"ஹாய் மேடம் ஐயாம் ஸ்ரீதர் நா இங்கேதான் கோயம்புத்தூரில் ஒரு பிரைவேட் ஸ்கூல்ல டீச்சரா இருக்கேன்"..

"அன்னைக்கு தெரியாம உங்களை பயமுறுத்திட்டேன்…
மன்னிச்சிக்கோங்க ..நான் வேணும்னு செய்யல..என் ஸ்கூல்ல படிக்கற ஒரு குழந்தைக்கு உடம்பு சரியில்ல, அதான் வேகமா போகும்போது நீங்க ரோட்ல வழிவிடாம நடந்து போய்க்கிட்டு இருந்தீங்க..

நான் மெதுவா தான் ஹாரன் அடிச்சேன் நீங்கள் சரியா கவனிக்கல்ல... அதனால் தான் வேகமாக ஹாரனை அடிக்கவேண்டியதாயிடுச்சி … ஆனா நீங்க பயந்து கீழ விழுந்து...ஐ ஆம் ரியலி சாரி பார் தட்" என முடித்தான்….

அவன் கூற ஆரம்பிக்கவும் கோபமாக கேட்டுக்கொண்டிருந்த வானதி அவன் குழந்தைக்கு உடல்நலம் இல்லை என சொல்லும் பொழுதே கோபத்தை கைவிட்டிருந்தாள்...

"இல்ல பரவால்ல அன்னைக்கு நான் ஒரு கல்யாணத்துக்கு தான் போயிட்டு இருந்தேன் ஒரு குழந்தையோட உடல்நலத்தை விட ஃபிரண்டோட கல்யாணம் பெருசு இல்ல சோ பிரச்சினையில்லை" ... என்று கூறியபடி நகர ஆரம்பித்தாள்.

ஸ்ரீதரோ ஒரு பளீர் புன்னகையுடன்
"ரொம்ப தேங்க்ஸ்ங்க "
என்றவன்...நகர்ந்தவளை பார்த்து

"என்னங்க அதுக்குள்ள கிளம்பிட்டீங்க சாமிகும்பிடலயா?..
நான் உள்ள தான் போறேன் வாங்களேன் சேர்ந்து வேணா உள்ள போகலாம்" என அவன் இயல்பாக கூப்பிட்டான்…
அவனின் உரிமை வானதிக்கு எரிச்சலை ஏற்ப்படுத்த

"எனக்கு கோவில் உள்ள போக வழி நல்லாவே தெரியும் எனக்கு சாமி கும்பிடனும்னு தோணினா நானே போய் சாமி கும்பிட்டுக்க போறேன் அதனால நீங்க உங்க வேலைய பாத்துட்டு
போங்க "என்று கோபமாகக் கூறினாள்.

"ஐயோ பாத்தீங்களா மறுபடியும் தப்பா நினைச்சுட்டீங்க நான் இந்த கோவிலோட டிரஸ்டிங்க என்னோடு வந்தா நீங்க ஈசியா சாமிய பார்க்கலாம்,
இப்பவே இவ்வளவு கூட்டம் அதுக்கு தான் கேட்டேன் உங்களுக்கு விருப்பம் இல்லனா விடுங்க சாரி... அப்புறம் தேங்க்ஸ் ...இவ்ளோ நேரம் நா சொன்னதை பொறுமையாக கேட்டதற்கு" என்று கூறியபடி அவன் கோவிலின் உள்ளே சென்றான்….

அவன் உள்ளே செல்வதையே இமை கொட்டாமல் பார்த்து கொண்டிருந்த அவள் மனதில்…. ஏதோ ஒன்றை தான் இழப்பது போல் அக்கணம் தோன்றியது..

அவன் செல்லும் வரை பார்த்துக் கொண்டிருந்தவள் சிறு பெருமூச்சுடன் திரும்பிப் பார்க்க அவள் முகத்தில் வந்து அதிர்ச்சி ஒட்டிக்கொண்டது..

ஏனென்றால் அவளைக் காண வந்த மாப்பிள்ளையும் அவனது தாயாரும் இவளையே முறைத்தவாறு நின்றுகொண்டிருந்தனர் அவர்களின் அருகில் அவளை அழைத்து வந்த பெண்மணி செய்வது அறியாது கைகளைப் பிசைந்தபடி
தர்மசங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்தார்…

"இதுதான் நீங்க பாத்து இருக்கிற பொண்ணோட லட்சணமா இன்னைக்கு நாங்க வரோம்ன்னு தெரிந்தே எவனோ ஒருத்தன் கூட நின்னு பல்லை காமிச்சு பேசிட்டு இருக்கு இந்த பொண்ணு எப்படி எங்க குடும்பத்துக்கு ஒத்துவரும் எங்களுக்கு இந்த பொண்ணு வேணாம்" என்று கோபமாகவும் சத்தமாகவும் பேசியபடி அந்தப் பெண்மணி தனது மகனின் கைகளை பிடித்து இழுத்தவாறு சென்றுவிட்டார்….

வானதியை அழைத்து வந்த பெண்மணியோ அவர்களை சமாதானம் செய்யும் நோக்கோடு அவர்களின் பின்னே கெஞ்சியபடி செல்லலானார்.. "நீங்க நினைக்கிறது போல இல்லங்க இந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு நான் என்னன்னு விசாரிக்கிறேன் நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க அவசரப்படாதீங்க" என அவர்களின் பின்னால் சென்று கொண்டிருந்தார்…

நடக்கும் சம்பவங்களை பார்த்துக்கொண்டிருந்தவள்….தன்மீது என்ன தவறு எனப்புரியாமல் அதிர்ச்சியில் தான் என்ன செய்வது என்று தெரியாமல் கண்களில் நீருடன் அவ்விடத்திலேயே தூணில் சாய்ந்தபடி அமர்ந்து கொண்டாள் வானதி..

தொடரும்....
 
Last edited:
Top