கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காத்திருந்த காதல் 20

Akila vaikundam

Moderator
Staff member
காத்திருந்த காதல் 20

ஸ்ரீதரை சமாதானம் செய்து விடலாம் என்று வானதி நினைத்துக் கொண்டிருக்க அதைப் பற்றி எதையுமே கவலை கொள்ளாமல் கோவை வந்திருந்தான் ஸ்ரீதர்

அவனின் தற்போதைய எண்ணம் எல்லாம் பள்ளியை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது மட்டுமே யாருக்கும் அதை விட்டுக் கொடுக்க கூடாது என்று நினைத்தான்.

பள்ளி யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அவரை நேரடியாகச் சந்தித்துப் பேச அவர் அலுவலகத்தில் காத்திருந்தான்.

சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க பளீர் வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக ஒருவர் வரவும் அவரைப் பார்த்து எழுந்து கைகூப்பினான்.

என்ன இருந்தாலும் 12 ஆண்டுகள் அவரின் கீழ் பணிபுரிந்து இருக்கிறான் அல்லவா அந்த மரியாதை


ஆனால் அவருக்கு ஸ்ரீ யின் செல்வாக்கும் நன்றாகவே தெரியும் அதனால் வாப்பா ஸ்ரீதர் என்னப்பா இன்னும் ஸ்கூல்ல வேலை செஞ்ச நினைப்பிலேயே என்னை பார்த்து கைகூப்பிட்டு இருக்க கையை கீழ இருக்குப்பா முதல்ல என்று உரிமையாக கடிந்து கொண்டார்

அதற்கு ஸ்ரீயும் நீங்க வாய்ப்பு கொடுத்தால் மறுபடியும் அந்த ஸ்கூல்ல வேலை செய்ய நான் காத்துட்டு இருக்கேன் சார் என்று கூற


அவர் எந்த அர்த்தத்துல கேட்கிறேன்னு புரியலையே என்று கேட்டார்

அதற்கு அவன் நான் சொல்ல வருவது உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன் சார் இத்தனை வருஷமா உங்க கிட்ட இருந்த அந்த ஸ்கூல் இன்னைக்கு வியாபார நோக்கத்தோடு வெளியே போறதா கேள்விப்பட்டேன்

அதை என்னால ஏத்துக்க முடியல அதான் நேரடியாக உங்க கிட்ட பேசி அதற்கான தீர்வை கண்டுபிடிப்பதற்காக வந்திருக்கேன் என்று கூறவும்


யாரோ உன் கிட்ட தப்பா சொல்லி இருக்காங்க ஸ்ரீதர் வியாபார நோக்கத்தோடு அந்த ஸ்கூல் எங்கேயும் போகலியே என்று கூற

இல்ல சார் ஏதோ ஒரு கார்ப்பரேட் கம்பெனி வாங்க போறதா கேள்விப்பட்டேன் என்று அவன் கூற

ஓஓ அத சொல்லறியா அவங்க ரொம்ப பெரிய டிரெஸ்ட் இந்தியா ஃபுல்லா இது போல இப்பதான் ஆரம்பிச்சிட்டு இருக்காங்க இதுபோல் இருக்கற ஸ்கூல் எல்லாத்தையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த போறாங்க

அவங்க கிட்ட போனா இன்னும் சிறப்பாக செயல்படும்னு நெனச்சேன் இது அப்பா காலத்துல ஆரம்பிச்ச ஸ்கூல் என் அப்பா இருந்த வரைக்கும் ரொம்ப நல்லா போயிட்டு இருந்தது என் கட்டுப்பாட்டுக்குள்ள வந்ததுக்கப்புறம் கூட என்னோட பங்களிப்பு ரொம்ப கம்மி தான்

ஆனாலும் என்னால என்ன முடியுமோ அதை பண்ணினேன் ஆனா இப்ப என் பையன்

பையனுக்கு அப்புறம் பேரனும் வந்துட்டாங்க அவங்களுக்கு எல்லாம் இதுல விருப்பமில்லை

ஒரு ரூபாய் கூட குடும்ப சொத்து வெளிய போக கூடாதுனு நினைக்கிறார்கள் அவங்ககிட்ட என்னால போராட முடியல ஸ்ரீதர் எனக்குமே வருத்தம் தான் அது வெளியே கொடுக்கறது


அதுக்கு பதிலா வேறு ஏதாவது ட்ரெஸ்டோட சேர்த்து விடலாம்னு ஆனால் என்ன செய்ய நம்ம நினைக்கறதும் கடவுள் நினைக்கிறதும் ஒரே போல இருக்காது இல்லையா என்று அவர் கூற

இவனோ கடவுளும் நம்மல மாதிரி தான் நினைக்கறதா நான் நம்பறேன் சார் அதனால தான் என்ன அனுப்பி இருக்கறாரு என்று அவன் கூற

அவர் யோசனையாகவே பார்த்து என்ன சொல்ல வர்ற ஸ்ரீதர் என்று கேட்டார் அதற்கு அவன் நீங்க விருப்பப்பட்டா அந்த ஸ்கூல்ல நான் எடுத்து நடத்த ஆசைப்படுறேன் நீங்க அதற்காக எவ்வளவு பணம் கேட்டாலும் நான் கொடுக்க தயாரா இருக்கேன்


வெளிய என்ன விலைக்கு கொடுக்கறீங்களோ அதே விலையை நான் கொடுக்க தயாரா இருக்கேன் சார் என்று இவன் கூறவும்


இங்க பணம் பிரச்சினையில்ல ஸ்ரீதர் அதை நிர்வாகம் செய்ய தான் முடியல

அந்த ஸ்கூல் எப்பவும் போல நல்ல முறையில் நடக்கணும் அது மட்டும் தான் என் விருப்பம் அதுவும் நீ அந்த ஸ்கூல்ல ஏற்கனவே வேலை செஞ்சிருக்க உனக்கு அங்க இருக்கிற நடைமுறைகள் குழந்தைகள் பத்தி நல்லாவே தெரியும்

யாரோ ஒருத்தருக்கு குடுக்கற அந்த ஸ்கூலை உனக்கு தர்றதுல எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது அது மட்டும் இல்ல நான் இப்பவே சம்பந்தப்பட்டவங்களோட பேசி அந்த டீலை கேன்சல் பண்ண சொல்றேன்

எப்ப நீ எடுத்துக்கிற இப்பவேனாலும் நான் எழுதி கொடுக்க தயாரா இருக்கேன் என்று அவர் கூற அவனோ

ரொம்ப தேங்க்ஸ் சார் நான் எதிர்பார்த்து வந்த விஷயம் இவ்வளவு சீக்கிரம் முடியும்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவே இல்லை உங்க மேல ஏற்கனவே எனக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம் அது இன்னும் அதிகமாகுது என்று கூறியவன்

தயங்கிபடி சார் அப்புறம் ஒரு விஷயம் என்றான்

என்ன ஸ்ரீதர் தயங்குறீங்க என்று அவர் கேட்டார்

சார் என் அம்மா என்னோட கல்யாணத்தை உடனே முடிகனும்னு ரொம்ப ஆசைப் படுறாங்க…

ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்தாங்க இப்ப நானும் சரி சொல்லிட்டு வந்துட்டேன்

எப்படியும் ஒரு வாரம் இல்லை பத்து நாள்ல என்னோட திருமணம் இருக்கலாம்


ரொம்ப நல்லது ஸ்ரீதர் அப்படின்னா ஒன்னு செய்யலாம் நீங்க போய் உங்களோட கல்யாண ஏற்பாடுகளை செஞ்சு முடிச்சிட்டு இந்த வாரத்துல மறுபடியும் வாங்க அதுக்குள்ள நடைமுறை சிக்கலை தீர்த்து வைச்சிடறேன்


அதுக்கப்புறம் நீங்க நல்லபடியாக திருமணம் செஞ்சிட்டு வாங்க அதுக்குள்ள இங்க எல்லா பேப்பரையும் ரெடி பண்ணி இங்க இருக்குற எல்லா பிரச்சினையும் சரி பண்ணிட்டு அந்த ஸ்கூல்லை உங்க கல்யாணப்பரிசா ஒப்படைக்க வேண்டியது என்னோட பொறுப்பு... உங்க திருமணத்திற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ஸ்ரீதர்
என்று கூற இவன் ரொம்ப நன்றி சார் என்று கூறியபடி அங்கிருந்து விடை பெற்றான்.

ஸ்கூல் பற்றிய பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிவடைந்ததால் உடனடியாகவே ஸ்ரீதர் மூணார் கிளம்பி சென்றுவிட்டான்

இங்கு வானதிக்கு பள்ளியில் வேலை அதிகரிக்க ஆரம்பித்தது அந்த பள்ளி ஸ்ரீயின் வசம் செல்வது தெரியாது ஆனால் பள்ளி கைமாறுகிறது அது மட்டும் அவளுக்கு தெரியும்

இதுவரை தனியாரிடம் இருந்து மட்டுமே நிதி பெறப்பட்டு வந்த அந்தப் பள்ளி இனிமேல் அரசின் உதவியும் பெற்று செயல்படப் போகிறது என்ற ஒரு செய்தியும் அவர்களுக்கு கிடைத்ததால் ஏற்கனவே செய்துவந்த வேலையை விட இருமடங்காக அவளுக்கு அலுவலகப் பணி இருந்தது.

அதனால் ஸ்ரீயைக் காண மூணாறு செல்லும் திட்டத்தை சற்று தள்ளி வைத்தாள் ஒரு வாரம் கழித்து விட்ட நிலையில் பெங்களூருவிலிருந்து பிரசாந்த் அவளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவனைச் சென்று பார் என்று அறிவுரை கூறவும் மீண்டும் பள்ளியில் வந்து அவளுக்கான விடுமுறையை போராடி பெற்றாள்.

உடனடியாகவே பிரசாந்த் அனுப்பி வைத்த வாகனத்தில் மூணார் நோக்கி பயணமானாள்.

இங்கு மூணாரிலோ ஸ்ரீயின் தாய் திருமண ஏற்பாட்டை முற்றிலும் தயார் செய்து வைத்திருந்தார் இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் ஆனால் அங்கு சக்திக்கு மிகப்பெரிய குழப்பம் அன்று மீனாட்சியை நேரில் சந்தித்து தன் நிலையைப் பற்றி கூறி வந்தும் கூட இன்றுவரை ஸ்ரீ அவளிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை

நேரிலும் வந்து பார்க்கவில்லை உண்மையிலேயே ஸ்ரீயை தான் திருமணம் செய்வது சரியா என்றபடி அவள் யோசிக்கத் தொடங்கி இருந்தாள்

ஆனால் இங்கு ஸ்ரீயின் தாய் மீனாட்சி அவனிடம் பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறார் ஒருமுறை சக்தியை பார்த்து எனக்கு இந்த திருமணத்தில் பரிபூரண சம்மதம் சக்தி உன்னை எனக்கு மிகவும்பிடித்திருக்கிறது என்று
ஆனால் ஸ்ரீயோக பிடிவாதமாக மறுத்துவிட்டான்.

ஏற்கனவே அவன் வானதியிடம் இதேபோல் கூறியிருந்ததால் அவனுக்கு சக்தியை பார்த்து அந்த வார்த்தையை சொல்ல தைரியம் வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும்


தாயிடம் நாசுக்காக மறுத்துவிட்டான் அம்மா திருமணத்திற்கு பிறகு நான் அவளிடம் இதை கூறிக் கொள்கிறேன் அது வரை என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டான்.


இப்படியாக நாளை அதிகாலை திருமணம் என்னும் நிலைக்கு வர அப்பொழுது மண்டபத்தில் அனைவரும் கூடி இருந்தனர் மதிய உணவு முடியவும் சக்திக்கும் ஸ்ரீதருக்கும் வரவேற்பு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது.

இங்கு வானதி மூணார் வந்து அடையும் பொழுது மதியத்தை தாண்டியிருந்தது அவள் உணவருந்திய ஹோட்டலிலேயே பாத்ரூம் சென்று தன்னை பிரஷ் ஆக்கிக் கொண்டவள் ஸ்ரீ யின் வீட்டை நோக்கிச் சென்றாள்

அவன் வீட்டுக்கு செல்லும் ஒரு கிலோ மீட்டர் முன்பிருந்தே பயங்கர ஆடம்பரமாக சீரியல் செட்களும் பந்தலும் போடப்பட்டிருக்க அந்த இடத்தின் பிரம்மாண்டத்தை பார்த்து அவள் சற்று மிரண்டுதான் போனாள் என்ன விஷேசம் என்று விசாரிக்க எல்லாம் தோன்றவில்லை இவள் காரில் சென்றதால் ஸ்ரீயின் திருமணத்திற்கு தான் வருகிறாள் என்று அங்கிருந்த அனைவருமே இவளையும் பார்த்து நட்புடன் அழைத்துச் செல்கின்றனர் வீட்டின் அமைப்பு முகப்பு என எல்லாமே பிரம்மாண்டத்தில் உச்சத்தில் இருந்தது


ஸ்ரீ யின் வீடு முழுவதும் அழகிய பந்தலிட்டு சீரியல் லைட்டுகள் போட்டு வாழை மரங்களும் தென்னம் குலைகளுமாக திருமண வீட்டிற்கு உண்டான அனைத்து லட்சணங்களுடன் இருந்தது

அவளுக்கு உள்ளே செல்லச் செல்ல வே சிறு நடுக்கமும் பயமும் வந்தது வீட்டின் பிரம்மாண்டத்தை பார்த்து சற்று பயந்துதான் போனாள்

இவ்வளவு பெரிய வீட்டில் இருந்தவனா அங்கு அந்த சிறிய பள்ளியில் வேலை செய்து சிறிய அறையில் தங்கி இருந்தான் உண்மையிலேயே அவனின் சகிப்புத்தன்மையை நினைத்து அவளுக்கு பெருமையாகத் தான் இருந்தது


இருந்தாலும் வீட்டின் அலங்காரம் அவளை சற்று பயமுறுத்த அங்கு வேலை செய்யும் ஒரு பெண்மணியை பார்த்து என்ன என்று விசாரிக்க அப்பொழுதுதான் அவளுக்கு ஒரு உண்மை தெரிந்தது

நாளை ஸ்ரீ யின் திருமணம் இன்று மண்டபத்தில் அனைவரும் கூடி இருக்கின்றனர் சாயங்காலம் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி என்று இவளுக்கு மனம் துடிக்க ஆரம்பித்தது திருமணத்திற்கு முன்பு எப்படியாவது அவனை தடுத்து நிறுத்தி விட முடியாதா என்று மண்டபத்திற்கு சென்றாள்

ஆனால் இவள் அங்கு செல்லும் பொழுது மணமகனும் மணமகளும் அழகாக ஆடை அணிந்து மேடையில் காட்சி தர ஒரு நிமிடம் தூரத்திலிருந்து அவர்களின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து பிரமித்து விட்டாள்


ஸ்ரீகாகவே பிறந்தது போல் இருந்தது சக்தியின் தோற்றம்

சற்று குனிந்து தன்னையும் பார்த்தாள். போன வாரத்திற்கும் இந்த வாரத்திற்குள் அவளின் தோற்றத்தில் நிறையவே மாற்றங்கள் வந்து இருந்தது


தன் வயதுக்கு ஏற்றதுபோல் இப்பொழுது ஆடை அணிந்திருக்கிறாள் சிகை அலங்காரமும் அப்படித்தான் இருந்தாலும் சக்திகள் முன்பு தான் மிகவும் பின்தங்கி இருப்பது போல் அவளுக்கு தோன்றியது

மீண்டும் மேடையைப் பார்க்க ஸ்ரீ மிகவும் சந்தோஷமாக இருப்பது போல் தோன்றியது

மிகுந்த கவலையுடன் கண்களில் கண்ணீருடன் ஊர் திரும்ப எண்ணினாள் ஸ்ரீ யின் பக்கத்தில் தன்னுடைய பெயர் எழுதப்படவில்லை அப்படி எழுதி இருந்தால் கண்டிப்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர்களின் திருமணம் நடந்து இருக்கும் என்று நினைத்தவள் மனதார அவர்கள் இருவரும் நன்றாக இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தாள்.


இங்கு மண்டபத்தில் நல்லபடியாக வரவேற்பு முடிந்தது ஆனால் சக்தி மட்டும் களையிழந்து காணப்பட்டாள்.


தலை வலிப்பதுபோல் இருக்கிறது தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறிய சக்தி அவளுடைய அறையில் வந்து தனிமையில் அமர்ந்து இருக்க அவளையே பார்த்துக் கொண்டிருந்த தந்தைக்கு ஏதோ தோண்ற மகளைத் தேடி அவளின் அறைக்குச் சென்றார்.


தனிமையில் கவலையாக அமர்ந்திருந்த தனது மகளை பார்த்த அத்தந்தை
சக்தி...என்று அழைத்தபடி உள்ளே வந்தார்.

அவர் வரவும் கண்களில் வழிந்தோடிய கண்ணீரை அவசரமாக துடைத்த சக்தி என்னப்பா சொல்லுங்க என்று எழுந்து நிற்க


மகளின் முக வாட்டத்தை அறிந்து கொண்டவர் ஏன் சக்தி கண் கலங்குற என்று கேட்டார்.

உடனே அவள் சமாளிக்கும் விதமாக அம்மா ஞாபகம் வந்திடுச்சிப்பா என்று கூறினாள்

உடனே அவர் சிரித்தபடி பொய் சொல்லாதமா அம்மாவ மட்டும் நினைச்சி நீ அழல வேறு ஏதோ காரணம் இருக்கு

உன்னை பொறந்ததுல இருந்து பாத்துட்டு இருக்கேன் என் கிட்டயே பொய் சொல்லறியா என்று கேட்க

இல்லப்பா ஒன்னுமில்ல நீங்க போங்க...என்றவள் நீங்க சாப்டிங்களா என்றாள்.

என்னைக்கு மா உன்னை விட்டுட்டு நான் ஸசாப்பிட்டு இருக்கேன் என்று கேட்க மீண்டும் அவளுக்கு அழ வேண்டும் போல் தோன்றியது


எனக்கு பசிக்கல இன்னைக்கு ஒரு நாள் நீங்க போய் சாப்பிடுங்க அப்பா என்று கூற அவர் தலையை அசைத்தபடியே வாசல் வரை சென்றவர் பிறகு திரும்பி ஏம்மா உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா என்று நேரடியாகக் கேட்டார்

உடனே அவள் என்னப்பா திடீர்னு இப்படி கேக்கறீங்க எனக்கு முழு சம்மதம்தான் என்று கூற

பொய் சொல்லாதம்மா உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருந்தா இந்நேரம் உன் முகம் சந்தோசத்தில் பூரித்துல இருக்கணும் என்று கூறியவர் மகளின் அருகில் வந்து அவள் தோளின் மீது கைவைத்து இங்க பாரு சக்தி அப்பா நான் இருக்கேன் எதுவா இருந்தாலும் தைரியமா சொல்லு

பக்கத்து எஸ்டேட் இருக்காங்க உனக்கு அந்த பையனை பிடிச்சிருக்கு நீ எப்ப வேணாலும் இங்க வரலாம் போகலாம் இந்த ஒரு சலுகைக்காக தான் உன் கல்யாணத்துக்கு நான் ஒத்துக்கிட்டேன் மத்தபடி இதுல உன் சந்தோஷம் எனக்கு ரொம்ப முக்கியம் சொல்லுமா... இந்தத் திருமணப் பேச்சு ஆரம்பிக்கும்போது இருந்த சந்தோஷம் இப்போ உன் முகத்தில் இல்ல சொல்லுமா எதுவா இருந்தாலும் சொல்லு என்று அவர் வற்புறுத்தி கேட்கவும்

தனது தந்தையின் முகத்தை நேருக்கு நேர் சந்திக்க முடியாத சக்தி திரும்பி நின்றபடி அப்பா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுங்க என்று கேட்டாள்.

உடனே அதிர்ச்சியடைந்தவர் நாளைக்கு கல்யாணம் இப்ப போய் கல்யாணத்தை நிறுத்தினா உனக்கு மட்டும் இல்லமா அந்த தம்பியோட வாழ்க்கையும் பாதிக்கப்படும் எதுவா இருந்தாலும் பேசிக்கலாம் இந்த கல்யாணத்தை வேணும்னா ஒரு பத்து நாள் இல்லனா ஒரு மாதம் தள்ளி கூட வைக்கலாம் அதற்காக நிறுத்தனுமா என்று அவர் மகளிடம் அழுத்தி கேட்கவும்

அவள் திரும்பி தீர்க்கமாக அப்பா எனக்கு இந்த கல்யாணத்துல துளிகூட விருப்பம் இல்லை நான் ஸ்ரீயை கல்யாணம் பண்ணிக்கிட்டா கண்டிப்பா சந்தோஷமா இருக்க மாட்டேன்


நான் உங்கள விட்டு பிரிந்து போக கூடாது ஆனால் உங்க சந்தோஷத்துக்காக ஒரு கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கறதா இருந்தா நீங்க யாரை வேணும்னாலும் எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க ஆனால் ஸ்ரீ மட்டும் வேண்டாம் என்று உறுதியாக கூறினாள்.

சற்று நேரம் யோசித்த சக்தியின் தந்தை பிறகு ஸ்ரீ யின் தாயாரை சந்திக்க சென்றார் கூடவே தனது மகளையும் அழைத்து சென்றார்.


அங்கு ஸ்ரீயோ லேப்டாபில் ஏதோ வேலை செய்து கொண்டிருக்க மீனாட்சியோ சக பெண்மணிகளுடன் சேர்ந்து காலை திருமணத்திற்கு தேவைப்படும் தட்டுக்களை எல்லாம் வரிசைப்படுத்தி கொண்டிருந்தார்


சக்தியும் அவளது தந்தையும் அங்கே வர வாங்க அண்ணா என்ன இந்த நேரத்தில

சாப்பிட்டாச்சா என்று கேட்டபடி அருகில் வர

சக்தியின் தந்தையோ ஒரு முக்கியமான விஷயம் பேசனும் அதற்காகத்தான் இப்ப வந்தோம் என்று கூற

ஸ்ரீ முதல் முறையாக சக்தியின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தான் அவனின் முகத்தை பார்க்க முடியாமல் சக்தி தலை குனிந்து கொள்ள அவனுக்கு சகலமும் விளங்க தொடங்கியாயிற்று

உதட்டோரம் வந்த சிறு புன்னகையுடன் தோள்களைக் குலுக்கியபடி அவன் பணி செய்ய அந்த ஒரு உடல்மொழியே சக்தியின் தந்தைக்கு சொல்லாமல் சொல்லியது


ஸ்ரீக்கு இத்திருமணத்தில் விருப்பம் இல்லை அவனின் தாயின் கட்டாயத்தின் பேரில் தான் மகளை திருமணம் செய்ய முன் வந்திருக்கிறான் நல்லது தன் பெண்ணின் வாழ்க்கை காப்பாற்றப்பட்டு விட்டது என்று அதுவரை திருமணத்தை நிறுத்த போகிறோமே என்று அவர் மனதில் இருந்த குற்ற உணர்ச்சி மறைய தைரியமாக மீனாட்சியை எதிர்கொள்ள தயாரானார்.

என்ன அண்ணா சாப்பிட்டாச்சானு கேட்டேன் நீங்க பதிலே சொல்லல என்று கேட்டபடி மீனாக்ஷி அருகில் வர

அவரோ பாருமா தங்கச்சி ஒரு விஷயம் சொல்லணும் அதை நீ எப்படி எடுத்துக்க போறேன்னு தெரியல என்று சொன்னார்


உடனே மீனாக்ஷி முதல்ல சொல்லுங்க அண்ணா அதுக்கு அப்புறம் என்னன்னு பார்க்கலாம் கல்யாணத்தில் ஏதாவது குறையா

இல்லனா சக்திக்கு ஏதாவது வேணுமா என்னம்மா உனக்கு வேணும் என்று சக்தியை பார்த்து கேட்க

அவளோ அவருக்கு பதில் சொல்ல விரும்பாமல் தனது தந்தையின் பின் சென்று ஒளிந்து கொண்டாள்


அவளின் இந்த நடவடிக்கையை கண்டு வருத்தமடைந்த மீனாட்சி சக்தியின் ஒதுக்கத்தை எங்கே தனது மகன் கண்டு கொண்டானோ என்று ஸ்ரீதரை பார்க்க ஸ்ரீயோ எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் லேப்டாப்பில் வேலை செய்வதிலேயே குறியாக இருந்தான்.

என்னாச்சு அண்ணா எனக்கு ஏதோ தப்பா படுது எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க பீடிகை போடாதீங்க என்று சற்று பதட்டம் அடைத்தபடி மீனாட்சி கேட்க

அது ஒன்னுமில்ல மீனாட்சி சக்தியோட அபிப்பிராயம் என்னனா இப்போதைக்கு இந்த கல்யாணம் வேணாம்னு நினைக்கறா என்று கூற

என்ன அண்ணா சொல்றீங்க என்று நெஞ்சில் கை வைத்தபடி அருகில் இருந்த சுவற்றில் மீனாட்சி சாய்ந்துகொள்ள

அதுவரை பொறுமையாக லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த ஸ்ரீதர் முதல் முறையாக சக்தியை பார்த்தபடி இப்போதைக்கு இந்த கல்யாணம் வேண்டாமா இல்ல எப்பவுமே வேண்டாமா அதை கொஞ்சம் தெளிவா எங்க அம்மா கிட்ட சொன்னா எங்க அம்மா ஒரேடியா அதிர்ச்சி அடஞ்சிப்பாங்கல என்று சக்தியை பார்த்து கூற முதல் முறையாக ஸ்ரீதரிடம் சக்தி பேச தொடங்கினாள்


எப்பவுமே எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் ஸ்ரீதர் கண்டிப்பா உங்களுக்கும் எனக்கும் கல்யாணத்துக்கு அப்புறம் ஒத்துப் போகாது

கல்யாணத்துக்கு அப்புறம் நமக்குள்ள ஒரு பிரச்சனை வந்து நான் நிரந்தரமாக அப்பா வீட்டிலேயே தங்கறதுக்கு பதிலா இப்படியே இருந்துக்கறேன் என்று ஒரேடியாக போட்டு உடைத்தாள்.

உடனே கோபமடைந்த மீனாட்சி சக்தியை பார்த்து உனக்கு இப்பதான் தெரிஞ்சுதா அவனோட ஒத்துப் போகாதுன்னு அவன வேணாம்னு சொல்றது ஒரு காரணம் சொல்லு போதும் சினிமாவிலேயும் கதையிலேயும் வர்ற மாதிரி என்கிட்ட காதல் சொல்லல மூஞ்சி பாத்து பேசல, வெளிய கூட்டிட்டு போகல ஃபோன் பண்ணலனு
சப்பைக்கட்டு கட்டாத தெளிவான ஒரு காரணம் சொல்லு இந்த கல்யாணத்தை நானே நிறுத்தறேன் என்று கேட்டார்.


தெளிவான காரணம் தானே சொல்றேன் ஆன்ட்டி இவர் சொல்ற கண்டிஷன் எதுவுமே எனக்கு ஒத்துவராது ஆன்ட்டி குழந்தைகளை தத்தெடுத்து வளக்கறது எனக்கும் அப்பாக்கும் விருப்பமே கிடையாது.

அப்பா ஏற்கனவே இது பத்தி என்கிட்ட பேசினாங்க அவரை தாத்தானு கூப்பிடற உறவு என் மூலமா வர்ற குழந்தையா தான் இருக்கணும் அது மட்டும் இல்ல அவரோட நேரம் சம்பாத்தியம் எல்லாமே கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கனும்


ஆனா அவர் மாசத்துக்கு ஒரு முறை மட்டுமே என்னை பார்க்க வருவாராம் அவர் வர்ற வரைக்கும் விருப்பப்பட்டா உங்களோட நான் அந்த வீட்டில் இருக்கணும்மாம் இல்லன்னா நான் என் அப்பா வீட்டிலேயே தங்கிக்கறதாம்

மாசத்துக்கு ஒரு நாள் கணவனுக்காக காத்திருந்து வாழற வாழ்க்கை எனக்கு வேணாம்

அந்த மாதிரி வாழ என்ன அவசியம் வந்தது ஆன்ட்டி உங்க பையன் எனக்கு வேண்டாம் போதுமா என்று கூற


மீனாட்சி ஸ்ரீதரை பார்த்து குழந்தையை மட்டும் தானடா தத்தெடுக்கனும்னு சொன்னா இப்படி எல்லாமா அவகிட்ட சொன்னே என்று கேட்க அவன் ஆம் என்பது போல் தலை அசைத்தான்.


ஏன்டா இப்படி பண்ற உனக்கு ஒரு கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்படுறேனே தெரியுதடா உனக்கு இப்படி ஒவ்வொரு தடவையும் கல்யாண மேடை வந்து நிக்கவா நான் உயிரோட இருக்கறேன் என்று அழுதார்.

பிறகு சக்தியைப் பார்த்து என்ன மன்னிச்சிடு அம்மா என் பையனுக்கு கல்யாண ராசி இல்ல போல அதுதான் இரண்டாவது முறையாக மண்டபம் வரை வந்து இந்தக் கல்யாணம் நிக்குது இவன் கடைசி வரைக்கும் அனாதை குழந்தைகளோடயும் சிறப்பு குழந்தைகளோடயுமே வாழனும்னு அவன் தலையில எழுதிருக்கு என்று கண்ணீருடன் கூறியவர் அங்கிருந்த ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்தார்.


சக்தியும் அவளது தந்தையும் என்ன செய்வது என ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க சக்தி இங்கிருந்து செல்லலாம் என்பது போல் ஜாடை செய்து இருவரும் அங்கிருந்து நகரும் வேலைக்கு ஸ்ரீ குறுக்கிட்டு சக்தி ஒரு நிமிஷம் என்று கூப்பிட அவளோ என்ன என்பது போல் அவனை பார்த்தாள்


நீ இப்படி வெளிப்படையா சொல்லனும்னுதான் நான் உனக்கு உன் கிட்ட அந்த ரெண்டு கண்டிஷன்ஸ் வச்சேன் உண்மையை சொல்லப் போனா திருமணத்துக்குப் பிறகு என் வருமானம் எனது நேரம் இரண்டுமே என் மனைவிக்கு சொந்தமானதுனு நினைக்கிறவன்..‌.

என்னைப் பார்த்ததும் என்னை பிடிச்சுப் போய் நீ வந்து என்கிட்ட காதலை சொல்லும்போது மூஞ்சியில் அடித்தது மாதிரி உன்னை எனக்கு கல்யாணம் பண்ணிக்கலாம் விருப்பம் இல்லைன்னு சொல்ல முடியல

ஏனோ தெரியல யாரையும் காயப்படுத்த தெரியல அதேபோல உனக்கு என் மேல பெருசா காதல் எல்லாம் இருந்த மாதிரி தெரியல

அப்பா கூடவே வளர்ந்து பொண்ணு வெளி உலகம் தெரியாத பொண்ணு புதுசா என்ன மாதிரி ஒரு ஆணைப் பார்க்கும்போது கொஞ்சம் அன்பா பேசும் போது ஒருவித பாசம் வரும்


அதுதான் உனக்கு என் மேல வந்தது அது எனக்கு ரொம்ப நல்லா புரிஞ்சது ஆனால் அத அட்வண்டேஜ்ஜா எடுத்துக்க கூடாது இல்லையா

அதனால தான் உன்கிட்ட அந்த ரெண்டு கண்டிஷன்ஸ் வச்சேன் அதுமில்லாம உனக்கு ஆறு மாசம் டைம் கொடுத்தேன்


உண்மையிலேயே நீ என்னை முழுசா காதலிச்சு இருந்தா இந்த ரெண்டு விஷயம் உனக்கு பெருசாவே தெரிஞ்சு இருக்காது

உன்கிட்ட நான் எதிர்பார்த்து என்ன தெரியுமா

நான் கண்டிஷன் வைக்கும் போது சண்டை போட்டிருக்கனும் என்னை திருப்பி கேள்வி கேட்டிருக்கும்

நம்ம ட்ரஸ்ட்ல இருக்கற எல்லா குழந்தைகளுமே நம்ம குழந்தைகள் தானே அப்புறம் ஏன் தனியா ரெண்டு குழந்தைகளை எடுத்து வளர்க்கனும்னு நீ கேட்டிருக்கலாம்

அப்படி இல்லேன்னா ஏன் மாசம் எல்லாம் ஊர் சுத்திட்டு ஒரு நாள் என்னை தேடி வரணும் மாசம் எல்லா என்னையும் உங்க கூட ஊர் சுத்த கூட்டிட்டு போங்கனு சொல்லிருக்கனும் ரெண்டுமே கேட்கல


இப்படி எல்லாத்துக்கும் யோசிக்காம தலையாட்டிட்டு பின்னாடி வருத்தபடற பொண்ணு எனக்கு கண்டிப்பா செட்டாக மாட்ட சக்தி கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்காதுனு எனக்கு தெரியும் அதனால தான் நான் ரொம்ப ரிலாக்ஸ்டா இருந்தேன் என்று கூற

சக்தியின் தந்தையோ உடனடியாக எங்களை மன்னிச்சிடுங்க மாப்பிள சக்தி ஏதோ புரிஞ்சுக்காம அவசரப்பட்டு பேசிட்டா
ஒண்ணும் கெட்டு போகல

இந்த பேச்சுவார்த்தை நமக்குள்ள தானே நடந்தது சக்திக்கு இப்போ எல்லாமே புரிஞ்சிருக்கும் கல்யாணத்துக்கு ஆக வேண்டிய வேலையை பார்க்கலாம் மனசில எதையும் வச்சிக்காம எங்களை மன்னிச்சிடுங்க என்று கூற


இல்ல சார் இது ஒத்துவராது இந்த கல்யாணம் நடக்க வேண்டாம் இன்னுமே உங்க பொண்ணு தெளிவாகல இப்போ பழையபடி அவளுக்கு குழப்பம் வந்திருச்சு

பரவால்ல இவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னனு யோசிக்கிறாங்க இப்போ வேணும்னு தோணறது நாளைக்கு வேணாம்னு தோணும் இது சரி வராது சார் உங்க பொண்ணுக்கு ஏத்த மாப்பிள்ளை நான் இல்ல

அவங்க முதல்ல என்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப் பட்டதுக்கு காரணமே எப்பவுமே உங்களை விட்டு பிரிஞ்சு இருக்க கூடாதுன்னு தான்

ஆனா என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா கண்டிப்பா அது பாஸிபில் கிடையாது நான் அடிக்கடி வெளியூர் போறவன் கூட உங்க பொண்ணையும் கூட்டிட்டு போற மாதிரி இருக்கும் அவங்களுக்கும் சிரமம் உங்களுக்கு சிரமம் ஏன் ஒரு அப்பா பொண்ணை பிரிச்ச பாவம் எனக்கு வரணும் சொல்லுங்க


அதுமில்லாம உங்க பொண்ணு மேல எனக்கு அப்படி ஒரு அபிப்பிராயம் இந்த நிமிஷம் வரைக்கும் வரல


நீங்க உங்க பொண்ணு கிட்ட விசாரிங்க அவங்க மனசிலே என்ன எதிர்பாக்கறாங்கனு அது போல ஒருத்தரை தேடி திருமணம் செஞ்சி வைங்க மறுபடியும் பக்கத்துல மாப்பிள்ளை வேணும்னு அவங்களுக்கு விருப்பமில்லாத தகுதியில்லாத மாப்பிள்ளை தேர்ந்தெடுக்காதீங்க


கண்டிப்பா உங்க பொண்ணுக்கு தகுதியான மாப்பிள்ளை நான் இல்ல அத புரிஞ்சுக்கோங்க தயவுசெஞ்சு மன்னிச்சிடுங்க உங்க பொண்ணு எடுத்த முடிவு நல்ல முடிவு


அதனால அவங்களுக்கு சப்போட்டா இருங்க என்று கூறியவன் தனது தாயைப் பார்த்து அம்மா கிளம்பலாமா என்று கேட்க அவரும் என்னடா அவங்க தான் மனசு மாறி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்கல்ல கல்யாணம் பண்ணிக்கோடா எல்லார் கிட்டேயும் உனக்கு கல்யாணம்னு சந்தோஷமா சொன்னியேடா இப்படி மண்டபம் வரை வந்து நின்னா நீ எப்படி இந்த அவமானத்தை தாங்குவ என்று நா தழுதழுக்க கேட்டார்.

அதற்கு அவன் இது ஒன்னும் எனக்கு புதுசு இல்லை அம்மா எப்பவும் நடக்கிறது தானே உண்மையிலேயே இந்த தடவை திருமணம் செஞ்சிக்கற மனநிலமைல தான் இருந்தேன்

என்ன பண்றது சக்தி தெளிவா இல்லையே ஒருவேளை இன்னைக்கு அவங்க அப்பாகிட்ட இதுபோல சொல்லாம இருந்திருந்தா கண்டிப்பா இந்த கல்யாணத்தை பண்ணி அவங்களுக்கு ஏத்த மாதிரி என்னை நான் மாத்தி இருந்திருப்பேன்


ஆனா அவங்க தான் எனக்கு வாய்ப்புக் கொடுக்கலையே என்ன செய்ய வாங்க என்று அவனின் தாயை அங்கிருந்து அழைத்துச் சென்றான்

சக்தியின் தந்தையோ அங்கேயே அமைதியாக சென்று ஒரு ஓரமாக அமர பின்னால் வந்து சக்தியோ அப்பா என்ன மன்னிச்சிடுங்க நான் அவசரப்பட்டுடேனு நினைக்கிறேன் என்று கூற


இல்லம்மா நீ அவசரப்பட்டியோ இல்லையோ அந்த தம்பி ரொம்ப தெளிவா இருந்திருக்கு விடுமா உன் பேர் பக்கத்துல அந்த தம்பி பேர் எழுதல அவ்வளவுதான் இனியாவது அப்பா சொல்ற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணுவியா என்று அவர் கண்களில் நீர் பெருக அவளைப் பார்த்து கேட்க

சரி என்பது போல் தலையசைத்தாள் .

ஆனா நான் எப்பவும் உங்களுக்கு விட்டு பிரிஞ்சு இருக்க கூடாது அது மாதிரியான மாப்பிள்ளையா இருந்தா எப்ப வேணாலும் நீங்க சொல்ற மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட தயாரா இருக்கேன் என்று ஒரு மகளாக தனது தந்தையிடம் கூற

அவரும் நிஜமாவா சொல்ற அப்பா இந்த மண்டபத்திலேயே யாரை கை காட்டினாலும் கல்யாணம் பண்ணிக்க தயாராக இருக்கியா என்று கேட்க

அவளோ கண்டிப்பா அப்பா எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல என் கல்யாணம் நின்னது எல்லாருக்கும் தெரியும்

அப்போ நீங்க அவமானப்படுவதை என்னால பார்க்க முடியாது ஒருவேளை உங்க மனசுல வேற யாராவது இருந்தா நீங்க தாராளமா அவர் கிட்ட பேசி என்னை அவருக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம் நீங்க எந்த முடிவெடுத்தாலும் அதுக்கு கட்டுபடறேன் என்று அவள் கூற

உடனே நொடியில் தெளிவடைந்தவர் மண்டபத்தின் கூட்டத்தில் ஒருவரை தேடினார் பிறகு சக்திக்கு நின்ற இடத்திலிருந்தே அவரை அடையாளம் காட்டினார் அங்கு தூரத்தில் தெரியறால்ல அவ என் ஒன்னு விட்ட தங்கை

அவ பையன் தான் ஐஞ்சி வருஷத்துக்கு முன்னாடி நம்ம எஸ்டேட்ல மேனேஜரா இருந்தான்

அவன் உன்னை ரொம்ப காதலிக்கறதா சொல்லி ஐந்து வருஷத்துக்கு முன்னாடியே பெண் கேட்டு வந்தாங்க நான்தான் எதை வச்சி பொண்ணு தர்றது முதல்ல உன் அந்தஸ்தை உயர்த்திட்டு வந்து பொண்ணு கேளுனு
திட்டிவிட்டேன் மறுபடியும் ஒருவருஷம் கழிச்சி ஒரளவுக்கு முன்னேறி மறுபடியும் பொண்ணு கேட்டு வந்தாங்க நா பழைய படி அந்தஸ்தை காரணம் காட்டி அவனுக்குப் பெண் தர மாட்டேன்னு சொல்லி அவங்கள அவமானப்படுத்தி அவனை வேலையை விட்டே நிறுத்திட்டேன் ஆனா அவன் அதையே சவாலா எடுத்து கிட்டு பயங்கரமா உழைச்சு இப்போ நாலு எஸ்டேட் தள்ளி இருக்கிற ஒரு எஸ்டேட்டை விலைக்கு வாங்கிட்டு வந்து இருக்காங்க

போன மாசம் மறுபடியும் வந்து உன்னை பெண் கேட்டாங்க நான் தான் உனக்கு ஏற்கனவே நிச்சயமான விஷயத்தையும் திருமணத்திற்கு நாள் பார்த்துட்டு இருக்கற விஷயத்தையும் சொல்லி அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டு அனுப்பி வெச்சேன்

எனக்குமே சில வருத்தம் தான் உழைச்சு முன்னேறி வந்த பையன் அதும் உன் மேல ஐந்து வருஷமா ஆசை வச்சிருக்கற பையன் தவற விட்டுட்டோமேனு இப்போ மட்டும் நீ ம்ம்..னு ஒரு வார்த்தை சொல்லு


தங்கச்சி கிட்டயும் அந்த பையன் கிட்டயும் பேசறேன் என்று கேட்க அவளோ அப்பா நான் காதலிக்கறவரை விட என்னை காதலிக்கறவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா என் வாழ்க்கை நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் உங்களுக்கு எது விருப்பமோ அதை செய்ங்க நீங்க என்ன சொன்னாலும் அதுக்கு கட்டுபட நான் தயாராக இருக்கேன் என்று கூறினாள்.


சில நிமிடங்களிலேயே சக்தியின் தந்தை அவரின் ஒன்றுவிட்ட தங்கையை தேடிச் சென்று பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விட மறுநாள் காலையில் குறித்த நேரத்தில் ஸ்ரீதருக்கு பதிலாக சக்தியின் கழுத்தில் அவளின் அத்தை மகன் தாலி கட்டினான் அதன்பிறகு அங்கிருந்த அனைவருமே மிகுந்த சந்தோஷம் அடைந்தனர்


ஆனால் இங்கு ஸ்ரீயின் வீட்டிலோ அவனின் தாய் இரண்டு நாட்களாக எதுவுமே சாப்பிடாமல் படுத்த படுக்கையாக அழுதபடியே இருந்தார் ஸ்ரீதரும் அவனுடைய அப்பாவும் எவ்வளவோ சொல்லியும் கூட மீனாட்சி தெளியவில்லை


பிறகு ஸ்ரீதர் கட்டாயப்படுத்தி அம்மா கோயம்புத்தூர் ஸ்கூல்ல நான் கொஞ்ச நாள் இருந்து வேலை செய்யறது போல இருக்கு அதனால நான் கோயம்புத்தூர் போறேன் நீங்களும் கண்டிப்பா என் கூட வரணும்னு கட்டாயப்படுத்தி கோயம்புத்தூர் அழைத்து வந்தான்...


வானதி மூணாரில் இருந்து வந்து ஒரு வாரம் ஆயிற்று வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறாள் ஏனோ இம்முறை அவளுக்கு மிகவும் சோர்வாக இருக்கிறது பள்ளியிலிருந்து மீண்டும் மீண்டும் அவளுக்கு அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது வேறு ஒருவருக்கு பள்ளி கைமாறி விட்டது

புதிய அறக்கட்டளையின் பொருளாளர்,பள்ளிக்கு வர இருக்கிறார் அனைவரும் விடுப்பு எடுக்காமல் வர வேண்டும் என்று குறுஞ்செய்தியை கண்டவள் இன்று பள்ளிக்கு செல்லலாம் என்ற முடிவுடன் பள்ளிக்கு கிளம்ப ஆயத்தமானாள் அப்பொழுது பிரசாத்திடம் இருந்து அழைப்பு வந்தது வானதி நீ மூணாறு போனியா என்று கேட்க

அவள் ஆமாம் அண்ணா ஆனா ஸ்ரீயை பாக்கமுடில என பொய் சொன்னாள்

இல்ல வானதி அங்க ஸ்ரீக்கு என்று ஆரம்பிக்கும் போதே இவள் குறுக்கிட்டு அண்ணா என் வாழ்க்கைல எல்லாம் முடிஞ்சது இனி ஸ்ரீ பத்தி எதுவும் பேச வேண்டாம்


நீங்க ஆசை பட்டது போல் என்னோட வயசுக்கேத்த மாதிரி நான் வாழ ஆரம்பிச்சுட்டேன் கூடிய சீக்கிரமே திருமணம் கூட செய்து கொள்ள போறேன் அதனால இனிமே என் வாழ்க்கைல ஸ்ரீ கிடையாது என்று கூற


எதிர்முனையில் இருந்த பிரசாந்திற்கு என்ன இந்த பெண் முட்டாள் போல் பேசுகிறாள் ஸ்ரீ யின் திருமணம் நின்றிருக்கிறது இவளோ அவனைக் பார்க்கவேயில்லை என்று கூறுகிறாள் உடனடியாக வானதியை சென்று தெளிவு படுத்தலாம் என்று பார்த்தால் தனது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள் என்று குழம்பியன்



மெதுவாக அவசரப்படாதே வானதி ஒரு மாசம் காத்திரு நான் வந்து எல்லாம் புரிய வைக்கிறேன் என்று கூற

சரி அண்ணா நான் ஸ்கூல் போகணுமே என்று முடித்துக் கொண்டவள் பிரசாத்தின் நம்பரை பிளாக் லிஸ்டில் போட்டாள் இனி ஸ்ரீ சம்பந்தப்பட்ட யாரும் தனக்கு தேவை இல்லை மற்றொரு வேலை தேடிக் கொண்டு இந்த வேலையையும் ராஜினாமா செய்துவிட்டு ஏதாவது கண்காணாத இடத்தில் சென்று பிழைத்துக் கொள்ள வேண்டும்என்று நினைத்தபடி பள்ளிக்கு சென்றாள்.
 
Top