கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காத்திருந்த காதல் 21&22

Akila vaikundam

Moderator
Staff member
21

வானதி காலை பள்ளிக்கு வரும்போது பள்ளியே பரபரப்பாக காணப்பட்டது

இன்றுதான் ஸ்ரீ இங்கு பொறுப்பிற்கு வருகிறான் அவன் இரு நாட்களுக்கு முன்பே கோவை வந்து விட்டான்

அவனும் அவன் அம்மாவும் தங்குவதற்கு ஏற்பாடு செய்தவன்
முறையாக இன்றுதான் வந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறான்.

இவளைப் பார்த்ததுமே பள்ளி தலைமை நிர்வாகி இவளிடம் வந்து வானதி
பஸ்ட் பெல் ஓவர் ஆனதும் எல்லாரையும் ஆபீஸ் ரூம் வர சொல்லிடுங்க சார் வர்ற நேரம் ஆயிடுச்சு அவர் வரும்போது எல்லாருமே சேர்ந்து அவரை வெல்கம் பண்ணனும் என்று கூறிவிட்டு சென்றுவிட

இவள் தலைமை நிர்வாகி சொன்ன செய்தியை அனைவருக்கும் சொல்லிட்டு அவளது இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

அணைவருக்குமே புதியதாக யார் வரப்போகிறார்களோ வருகிறவர்கள் வியாபார நோக்கத்தோடு செயல்பட்டால் தங்களின் வேலை பறிபோய் விடுமோ என்று ஒரு சிலர் கவலை கொள்ள

ஒரு சிலரோ இவ்வளவு நாள் சேவை மனப்பான்மையோடு இந்தப் பள்ளியில் பணியாற்றி விட்டோம் மீதி நாட்களும் அதேபோல் இருந்து விட்டுச் செல்ல வேண்டியதுதான் யார் வந்து ஆண்டால் தங்களுக்கு என்ன என்று இரு வேறு மனநிலையில் நின்று கொண்டிருந்தனர்

இவர்களின் எண்ண ஓட்டம் இப்படி இருக்க சற்று நேரத்திற்கெல்லாம்
பழைய அறக்கட்டளையின் தலைவரின் கார் உள்ளே வர அனைவருமே அவரை வரவேற்று அமர வைத்து இருந்தனர்

அவர் தன்னால் இந்தப் பள்ளியை நிர்வகிக்க முடியவில்லை என்று ஏற்கனவே உங்களிடம் கூறியிருந்தேன் அதேபோல் இன்று நான் முழுவதுமாக இதில் இருந்து விடை பெறுகிறேன்


ஆனால் பள்ளிக்கு ஏதாவது தேவை இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக உதவுவேன் என்று வாக்குறுதி கொடுத்தார்

பிறகு புதிதாக இங்கு வருபவரை உங்களுக்கு அறிமுகப்படுத்தி விட்டுச் செல்லவே வந்திருக்கிறேன் இது நாள் வரை எனது குடும்பத்துக்கும்,இந்த பள்ளிக்கும் நீங்கள் அளித்த ஆதரவையும் பங்களிப்பையும் இனி வரும் புதிய அறக்கட்டளை நிர்வாகிக்கும் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார்


இப்பொழுது வருபவருக்கு இது போல் பல பள்ளிகள் இருக்கிறது ஆனாலும் நம் பள்ளியின் மீது மிகுந்த பாசம் கொண்டதால் இதையும் அவரே எடுத்து நடத்த இருக்கிறார்..

அவர் சற்று காலம் இங்கு பணியும் செய்திருக்கிறார் இது கூடுதல் தகவல் எனக்கூற

ஆசிரியர்கள் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது யாராக இருக்கும் என்று அவர்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டிருந்தனர் இங்கு ஏற்கனவே பணி செய்தவர் என்று கூறவுமே வானதி ஓரளவுக்கு யூகிக்க ஆரம்பித்து விட்டாள்

ஆனால் ஸ்ரீதர் எப்படி இங்கு வருவான்
அப்படியே அவன் இங்கு பொறுப்பாளராக வரும்பட்சத்தில் தன்னால் இப்படி இங்கு பணி செய்ய இயலும்

அவனுக்குத் திருமணம் ஆன ஒரு விஷயத்தையே தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இதில் அவனை நேருக்கு நேர் சந்தித்து எப்படி தன்னால் வேலை செய்ய முடியும் என்று அவள் கவலைப் பட்டுக் கொண்டிருக்கும் பொழுதே ஸ்ரீதரின் கார் பள்ளி வளாகத்திற்குள் வந்தது

அவனைக் கண்டதும் அனைவருமே மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்க பழைய நிர்வாகி அவரை சென்று அழைத்து வந்தார்


அவனும் புன்னகையுடன் எதுக்காக சார் நீங்க வரணும் நானே வருவேனே என்று கூறியபடி உள்ளே வர


வானதி ஸ்ரீதரை பார்த்தவுடன் தலையை குனிந்தபடி அமர்ந்து கொண்டாள்,அவளுக்கோ பயங்கரமான அதிர்ச்சி...அதன் காரணமாக வேர்க்க ஆரம்பித்தது... கைகள் நடுங்க அவனை எப்படி எதிர்கொள்வது என யோசித்தபடி அமர்ந்திருக்க

பழைய நிர்வாகி பொதுவாக அனைவரிடத்திலும் இவர்தான் இப்பொழுது இந்தப் பள்ளியின் பொறுப்பாளர் ,இவரிடம் தான் இந்தப் பள்ளியை நான் ஒப்படைக்கிறேன் இவருக்கும் உங்களுடைய ஒத்துழைப்பை கொடுங்கள் என்று கூறியவர் அங்கிருந்து விடை பெற்று செல்ல


காயத்ரி வானதி இருவரையும் தவிர்த்து அங்கிருந்த அத்தனை ஆசிரியர்களுக்கும் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கும் ஸ்ரீதரை நன்றாகவே தெரிந்து இருந்தது

அதனால் சந்தோஷத்தில் அனைவருமே அவனை சுற்றி நின்றபடி பேசிக் கொண்டிருந்தனர் காயத்ரியும் சிறிது நேரம் வானதியின் அருகில் அமர்ந்திருத்தவள் பிறகு மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டாள்.


இப்பொழுது வானதி மட்டுமே தனிமையில் அமர்ந்து இருக்கிறாள் முகம் முழுவதும் வியர்த்து கை கால் நடுங்க என்ன செய்வது என்று புரியாமல்

இப்பொழுது இங்கே இருக்கவா? இல்லை சென்று விடவா?...என்ற யோசனையுடன் இருக்க


தனியாக ஒரு பெண் ஏன் அமர்ந்திருக்கிறார் என்றபடி ஸ்ரீதர் அவளைத்தான் பார்த்தான் பார்த்ததுமே அவனுக்கு பயங்கர அதிர்ச்சி வானதி இங்கே வேலை செய்வது அவனுக்கு தெரியாது.


அதிர்ச்சி என்னவோ சில வினாடிகள் மட்டுமே அடுத்த வினாடியே கோபம் வந்தது அவளை கண்டதும் தானாகவே முகம் இறுக்கத்துக்கு செல்ல கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தன் இரு உள்ளங்கைகளையும் அழுத்தி மூடியபடி தன்னை சமன் செய்ய முற்பட்டான்

என்ன இருந்தாலும் அவனால் கோபத்தை கன்ட்ரோல் செய்யவே முடியவில்லை

அவன் ஊடுருவும் பார்வை வானொலியை துளைத்தெடுத்தது.

எவ்வளவு தைரியம் இருந்தால் என்னை காதலிக்கிறேன் என்று கூறி திருமணம் வரை இழுத்து விட்டு எதுவுமே நடவாதது போல் என் எதிரிலேயே அமர்ந்து இருக்கிறாள் என்று படியாக அவனின் பார்வை இருந்தது


அவனின் பார்வை வீச்சு அவள் தலைகுனிந்து அமர்ந்தாலும் அவளுடைய உள்ளுணர்வு கூறியது அவன் தன்னை நோக்குவது


அவனின் பார்வை வீச்சை தாங்கமுடியாதவள் தலை குனிந்தபடியே எழுந்து அங்கிருந்து சென்று விடலாம் என்று இரு அடி எடுத்து வைக்கவும்


ஸ்ரீதர் சத்தமாக அவங்க யாரு தனியா உக்காந்து இருக்காங்க எங்க கிளம்பிட்டீங்க மேடம் என்று கேட்க


இவளின் கால் ஆணி அடித்ததுபோல் அங்கேயே நின்றது சக ஊழியர்களும் வானதி இங்கே வா சார் ஏற்கனவே இங்கே வேலை செய்பவர்தான் சூப்பர் டைப் வா என்று அவளை அவனிடத்தில் இழுத்து வர


என்ன சொல்வது என்று தெரியாமலே தலையை குனிந்த படியே கைகளை எடுத்து
வணக்கம் வைத்தாள்.

அவன் தனது கோபத்தை கட்டுப்படுத்த வழி தெரியாமல் தன் இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டவன் பற்களைக் கடித்தபடி எல்லாரும் என்ன பார்த்து ரொம்ப சந்தோஷபடறாங்க

என்கிட்ட வந்து பேசிட்டு இருக்காங்க நீங்க மட்டும் ஏன் இவ்வளவு நேரம் தனியா இருக்கீங்க அதுவும் சத்தமில்லாம கிளம்புறீங்க


ஏன் நான் இங்க வந்தது உங்களுக்கு பிடிக்கலையா இல்லை இவனெல்லாம் ஒரு ஆளுன்னு நினைச்சிட்டிங்களா என்று கேட்க

பட்டென்று அவன் முகத்தை பார்த்து அப்படியெல்லாம் இல்லை என்று கூறி விட்டு மறுபடியும் தலை குனிந்து கொண்டாள்


ஸ்ரீதரும் சரி எல்லாரும் போய் அவங்கவங்க வேலையை பாருங்க குழந்தைகிட்ட நல்லவிதமா நடந்துக்கோங்க எந்த குழந்தை பதுசா அட்மிஷனுக்கு வந்தாலும் அவங்ககிட்ட பணமோ பொருளோ எதுவும் வாங்காமல் உடனடியா அட்மிஷன் கொடுங்க என்று வேலை சம்பந்தமாக சில கட்டளைகள் இட்டவன்

தலைமை நிர்வாகியிடம் கடைசி ரெண்டு வருஷ ரெக்கார்ட்ஸ் பாக்கனும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணறீங்களா என்று கேட்டான்.

உடனே அவர் வானதியை காமித்து லாஸ்ட் ஒன் இயர் இவங்கதான் ரெக்கார்ட்ஸ் எல்லாம் பாத்துக்கிட்டு இருக்காங்க பீரி டைம்ல கிளாஸ் அட்டென்ட் பண்ணுவாங்க

நீங்க போனதுக்கப்புறம் ஆபீஸ்ல வேலை செஞ்சுட்டு இருந்த பொண்ணு வேலையை விட்டு நின்னதால அவங்களுக்கு பதிலா இவங்களை வேலைக்கு சேர்த்தோம் என்று வானதியை அறிமுகப்படுத்தியவர்

வானதி சாருக்கு கொஞ்சம் ரெக்கார்ட்ஸ் எல்லாம் எடுத்துக் கொடுங்க எனக்கு கொஞ்சம் கிளாஸ் ரூம்ல வேலை இருக்கு என்று அவர் நகர்ந்து சென்று விட வானதி இப்பொழுது ஸ்ரீதரின் முன்பு தனித்து விடப்பட்டாள்.


என்ன மேடம் பழைய கணக்கெல்லாம் கொஞ்சம் சரி பார்த்துடலாமா என்று ஸ்ரீதர் வானதியைப் பார்த்து இரு பொருள்பட கேட்க

அவள் சரி என்பது போல் தலையை ஆட்ட

அப்புறம் என்ன போங்க போய் எல்லாத்தையும் ஞாபகபடுத்தி முன்னாடி எடுத்து வைங்க அப்பதான் எனக்கும் சீக்கிரம் சரி பார்க்க வசதியா இருக்கும் என்று பல்லைக் கடித்தபடி கூற


சரி என்றபடி வேகமாக அவள் அலுவலக அறைக்குள் ஒடினாள்.

செல்லும் அவளையே உணர்ச்சியின்று பார்த்தவன் அவளின் தோற்றத்தை ஆராய்ந்தான் இரண்டு வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தாள் இன்று ஏதோ இருக்கிறேன் என்பது போல் இருக்கிறாள்


சாப்பிடுவாளா இல்லையா முகத்துல கண்ணும் மூக்கும் தவற ஒன்னும் தெரில எழும்பெல்லாம் வெளிய தூருத்திகிட்டு பாக்க சகிக்கல

நல்ல ஆடைகள் கூட வாங்க மாட்டா போல இருக்கு வாங்குற சம்பளத்தை செய்யறானு தெரியல என்று அவன் இயல்பான மனநிலை அவளுக்காக சற்று பரிதாபட்டது.

ஆனாலும் பழைய வானதி உடனடியாக சட்டென்று ஞாபகத்துக்கு வர எனக்கு பதில் சொல்லனும் வானதி நீ என்னை காதலிக்கிற மாதிரி நடிச்சி ஏன் என்னை ஏமாத்தின…


ஒருவேளை அந்த பதிலுக்காக தான் கடவுள் மறுபடியும் உன்னையும் என்னையும் ஒரே நேர்கோட்டில் நிக்க வச்சு இருக்காரு போல என் அம்மா எந்த அளவு கதறினாங்க அதே அளவு நீயும் கதறப்போற எந்தளவுக்கு என் மனசை சாகடிச்சியோ அதைவிட பலமடங்கு உன் மனசை சாகடிக்க போறேன் வானதி தாங்கிக்க தயாராக இரு என்று மனதிற்குள் அவளிடம் எச்சரிக்கை செய்தான்.

அப்பொழுது ஸ்ரீதரின் தாயிடமிருந்து அழைப்பு வந்தது…


டேய் ஸ்ரீதர் எங்க இருக்க?


ஏன்மா நான் ஸ்கூல்ல தான் இருக்கேன்

வீட்டு வேலைக்கு ஆள் அனுப்புறேன்னு சொன்னியே இன்னும் யாரும் வரல டா எல்லாம் போட்டது போட்டது மாதிரி இருக்கு அம்மாக்கும் முடியலடா கொஞ்சம் சீக்கிரம் யாரையாவது அனுப்பி விடுடா


ஐயோ அம்மா சாரிமா மறந்துட்டேன் மத்தியானம் வரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க நான் இன்னும் கொஞ்ச நேரத்துல யாராவது பார்த்து அனுப்பிவிடறேன்

அம்மா ஸ்கூல்ல கொஞ்சம் வேலை இருக்கு மத்தியானம் எனக்காக வெயிட் பண்ண வேணாம் சாப்பாடு ஆர்டர் பண்ணறேன்

வீட்டுக்கே வரும் எனக்காக காத்திருக்காம சாப்பிடுங்க நல்லா ரெஸ்ட் எடுங்க என்று தனது தாயிடம் கூற

என்னவோ போடா எனக்கு இங்க வந்ததே பிடிக்கல ஆனால் நீ என்னன்னா சாப்பிடு ரெஸ்ட் எடுன்னுட்டு முதல்ல ஹெல்ப்க்கு யாரையாவது கூட்டிட்டு வா அது போதும்
என்று அவர் போனை வைத்துவிட

தலையில் கை வைத்து தேய்த்தபடி யோசித்தான் தீடிர்னு வீட்டு வேலைக்கு யார் வருவா பேசாம மத்தியானத்துக்கு மேல போய் நாமலே அம்மாவுக்கு ஹெல்ப் பண்ண வேண்டியதுதான் என்று நினைத்தவன் அலுவலக வேலையை செய்ய ஆயத்தமானான்.

வானதியை உதவிக்கு அழைத்தவன் மதியம் வரை ஒழுங்காக அலுவலக வேலையை கவனித்தான் இடைக்கிடையே வானதியிடம் அவள் எழுதி வைத்திருந்த கோப்புகளை கேட்டான்.

அவள் எழுதி வைத்தது எதுவுமே அவனுக்கு புரியவில்லை நக்கலாக எதையுமே தெளிவா எழுதுற பழக்கமே கிடையாதா என்று கேட்க அதற்கு பதில் சொல்லத் தெரியாமல் விழித்தாள்

அவளைப் பார்த்தபடியே கொஞ்சம் நீட்டா எக்ஸ்ப்ளைன் பண்ணுங்க என்று அவள் எழுதியதை அவளிடமே காட்டி கேட்க அவனிடம் சொல்ல மிகவும் திணறிப் போனாள்

காதலிக்கும் போது மணிக்கணக்காக கதை பேசியவள் தான் அவனின் கடைக்கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று அவனை துரத்தி துரத்தி காதலித்தவள் தான் ஆனால் இன்று அவனின் அருகாமை அவளை பாடாய் படுத்தியது அவன் பார்வை பயமுறுத்தியது எப்பொழுது இவன் தன்னை விடுவான் தான் இங்கிருந்து ஓடலாம் என்று எண்ணும் படியாக படுத்தி எடுத்தான்.


மதிய உணவு வேளை வரை அவளை திரும்ப விடவில்லை வேண்டும் என்றே பல வேலைகளை அவளிடம் வாங்கினான்.காலையிலிருந்து நடந்து,நடந்து கால்கள் இரண்டும் ஓய்வுக்காக ஏங்கியது.

எதிலாவது சற்று நேரம் அமர்ந்தால் கூட பரவாயில்லை என்று தோன்றியது.


மதிய உணவுக்காக பள்ளியில் மணி ஒலிக்கவுமே குழந்தைகளின் பெற்றோர் உணவு கொடுக்க வர ஆரம்பித்தனர்.

ஆசிரியர்கள் ஊழியர்கள் என அனைவரும் மதிய உணவுக்காக செல்ல
வானதிக்கும் பசிக்கத் தொடங்கியது
ஆனால் ஸ்ரீதருக்கு அப்படி ஒன்று இருப்பதாகவே காட்டிக்கொள்ளவில்லை அவனுக்கு பசிக்கவே செய்யாதா என்று கூட தோன்றியது அவளுக்கு



மற்ற ஆசிரியர்கள் உணவருந்தி விட்டு வரும் வரை அவளை அந்த பக்கம் இந்த பக்கம் திரும்பவே விடவில்லை காயத்ரி வந்த நாளிலிருந்து வானதியுடனே சாப்பிட்டு பழகியதால் இன்று வரவில்லை என்று காத்துக் கொண்டிருந்தாள் அவள் அலுவலக வாசலில் வெளிப்புறம் போடப்பட்டிருந்த ஸ்டூலில் அமர்ந்து இருக்க
உள்ளே ஸ்ரீதர் வேலையில் மும்முரமாக செய்து கொண்டிருக்கிறான்

அங்கிருந்தபடியே வானதி காயத்ரிக்கு ஜாடை செய்தாள் நீ போய் சாப்பிட்டு விட்டு வா நான் பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று காயத்ரிக்கு தான் மனம் வரவில்லை இவளை விட்டுவிட்டு சாப்பிட தயங்கியபடி அவள் வெளிப்புறம் இருந்த ஜன்னல் வழியே இவளைப் பார்க்க இதை கவனித்த ஸ்ரீதர் மெதுவாக கைக்கடிகாரத்தை திருப்பி பார்க்க மணி இரண்டை நெருங்க தொடங்கி இருந்தது

அங்கிருந்தபடியே வானதியை பார்த்துவிட்டு காயத்ரியையும் எட்டிப் பார்த்தவன் என்ன என்று கேட்டான்

உடனே காயத்ரி ஒன்னும் இல்ல சார் வானதி மேடம் இன்னும் சாப்பிடல அது தான் என்று கூற

நீங்க சாப்டிங்களா என்று கேட்டான்

உடனே காயத்ரி நானும் வானதி மேடமும் ஒன்னா தான் சாப்பிடுவோம் அதான் அவங்க வந்ததும் என்று இழுக்க


முதல்ல நீங்க போய் சாப்பிடுங்க உங்க மேடம்க்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வருவாங்க என்று இரக்கமே இல்லாமல் கூற

காயத்ரி தயங்கிபடி வேறு வழியில்லாமல் சாப்பிட சென்றாள்‌

மேலும் அரைமணிநேரம் வேலை வாங்கியவனுக்கு பசியில் அவதிபடும் வானதியை பார்க்க பாவமாக இருந்தது அவளின் இயல்பான இரக்க குணம் வெளியில் எட்டிப் பார்க்க சரி போய் அரை மணி நேரத்தில் சாப்பிட்டு வந்ததும் லேட் பண்ண கூடாது என்று கூறி அவளை சாப்பிட அனுப்பி வைத்தான் பிறகு தனது இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி சோம்பல் முறித்தாள் தனது தாயின் ஞாபகம் வர சட்டென தலையில் அடித்துவிட்டு தாய்க்கு கால் செய்யத் தொடங்கினான் அவனின் தாயோ ஸ்ருதியை இல்லாமல் எதிர்முனையில் பேச ஆரம்பித்தார் அம்மா சாப்பிட்டிங்களா என்று இவன் கேட்க

ம்ம்...என்று மட்டும் வார்த்தை வந்தது

அம்மா சாப்பிட்டீங்களா ன்னு கேட்டேன் ம்ம்..னு பதில் சொன்னா நா எப்படி எடுத்துக்கறது

முதல்ல சாப்பாடு வந்துச்சா,

என்று சற்று அழுத்தமாக கேட்கவும் உடனே அவனின் தாய்


சாப்பாடெல்லாம் ஒரு மணிக்கே வந்திடுச்சி எனக்கு தான் சாப்பிட பிடிக்கல என்று சொன்னார்


அழுதிருப்பார் போல் தொண்டை கரகரப்பு காணப்பட்டது உடனே


இவன் ஏம்மா சாப்பிடல அழுதீங்களா,எத்தனை முறை சொல்லிட்டேன் அழாதீங்கனு ஏன் இப்படி அழுது உங்க உடம்பை கெடுத்துக்கறீங்க என்று கோபப்பட்டார். உடனே அதற்கு அவள்

நீ இப்படி இருக்கும்போது என்னால எப்படி சாப்பிட முடியும் எப்படி என்னால் அழாமல் இருக்க முடியும் சொல்லு என்று கேட்டவர் மீண்டும் அழ தொடங்கினார்.


அம்மா….ஏன் அழறீங்க ப்ளீஸ் அழாதீங்க


போடா இந்த வீட்டில் எனக்கு அழகூட உரிமை இல்லையா மருமக கையால சாப்பிடதான் கொடுத்து வைக்கல மனசுக்கு நிம்மதியா அழக்கூட குடுப்பினை இல்லையா

யாருக்குடா வேணும் இந்த கடை சாப்பாடு எடுத்துட்டு போய் யாராவது சாப்பாடு இல்லாம கஷ்டப்படறவங்களுக்கு கொண்டுபோய் கொடு எனக்கு வீட்டு சாப்பாடு தான் வேணும் என்று சிறு பிள்ளையாய் கோபித்துக் கொண்டார்

அம்மா எனக்குனு யார் இருக்காங்க உங்களை தவிர
நீங்களும் இப்ப பிடிவாதம் பிடிச்சி சாப்பிடாமல் இருந்து உங்க உடம்பை கெடுத்துகிட்டா நான் என்ன செய்யமுடியும் சொல்லுங்கம்மா


இப்போ எனக்கு என்ன ஆயிடுச்சுன்னு நீங்க இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி சாப்பிடாம கஷ்டப்பட்டு இருக்கீங்க சொல்லுங்க


உங்களுக்கு கடை சாப்பாடு பிடிக்கலனா நாளைல இருந்து வீட்ல சமைக்கிறக்கு ஆள் ஏற்பாடு பண்ணறேன் ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுங்க அம்மா எப்படியும் எனக்கு இங்க வேலை சாயங்காலம் வரைக்கும் இருக்கும் என்று இவன் தாயை சமாதானம் செய்ய அவரோ


ஒன்னும் வேணாம் நீ அந்த ஸ்கூலையும் குழந்தைகளையும் கட்டிபிடிச்சு அழு உனக்கு அம்மா எல்லாம் ஒரு ஆளா சொல்லு

நான் இல்லனா கூட உனக்கு ஸ்கூல் இருக்கு குழந்தைங்க இருக்காங்க எனக்கு தான் உன்னைத் தவிர யாருமில்லை என்று அவர் பாட்டுக்கு பேச இவனுக்கோ அதன்பின் துளி அளவு கூட வேலை ஓடவில்லை மொபைலை அனைத்து வைத்துவிட்டு இரு கைகளாலும் தலையை அழுத்திப் பிடித்தபடி அமர்ந்து விட்டான்.


சற்று நேரத்திற்கெல்லாம் சாப்பிட்டு முடித்ததும் வானதி காயத்ரியுடன் ஏதோ பேசிக் கொண்டு வர அவளைப் பார்த்ததும் சட்டென்று அவனுக்கு கோபம் ஏறியது.

சாப்பிட்டாச்சா என்று சாதாரணமாக கேட்டான்

அவள் தயங்கியபடி ம்ம் ஆச்சு என்று கூற


ரெண்டு பேரும் ரொம்ப நல்ல பிரண்ட்ஸோ ஒருத்தரை விட்டு ஒருத்தர் விட்டுட்டு சாப்பிட கூட போறதில்லை என்று இருவரையும் பார்த்து பொதுவாக கேட்க

இருவருமே என்ன பதில் கூறுவது என்று தர்மசங்கடத்தில் நெளிந்தனர்…

அப்புறம் காயத்ரி எப்படி இந்த ஸ்கூல்ல தொடர்ந்து வேலை செய்யறதா ஐடியா இருக்கா இல்ல வேலையை விட்டு போற ஐடியா இருக்கா ஏன் கேக்கறேன்னா நான் காலையில இருந்து உங்களை பார்த்துகிட்டு இருக்கேன்

நீங்க ஸ்கூலுக்கு வேலை செஞ்ச மாதிரியே தெரியல உங்க பிரண்டுக்கு வேலை செய்யறத தான் அதிகம் பாக்குறேன்.

அவங்களுக்கு தண்ணி பிடிச்சு கொடுக்கிறதும் அவங்களுக்கு எடுபிடி வேலை செய்யுறதுக்கு தான் ஸ்கூலுக்கு வேலைக்கு வந்தீங்களா இல்ல உங்க ஃபிரண்டுக்கு தனிப்பட்ட முறையில் வேலை செய்ய வந்தீங்களா என்று கேட்ட படியே அவளை முறைக்க


அவனின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் காயத்ரி நைசாக நழுவி கொண்டாள்.

அது எப்படி எல்லாம் பண்ணிட்டு திருப்தியா உன்னால சாப்பிட முடியுது அழகா சிரிச்சு பேச முடியுது என்கிட்ட மட்டும் தான் ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிற ஆனால் மனசெல்லாம் விஷம்

உன் நல்ல நேரம் ஸ்கூல் ல வெச்சு உன்ன பார்த்தேன் அதனால நீ தப்பிச்ச வேறு ஒரு இடத்தில் உன்னை பார்த்திருந்தேன்னா நடந்திருக்கிறதே வேற இது வரைக்கும் யார்கிட்டயும் கோவமா கூட பேசி எனக்கு பழக்கம் இல்லை

ஆனா உன்ன பார்த்தாலே என் உடம்புல தானா பிபி ஏறுது என்று கூறியவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவளின் முழங்கைக்கு மேலான கையை அழுத்திப் பிடித்து


எதுக்காக மறுபடியும்
என் கண்ணுல வந்து மாட்டின இது என்ன ட்ராமா ஸ்கூல்ல வந்து டீச்சர் வேலை பார்க்கிற மாதிரி

புதுசா யாரை பைத்தியக்காரனா ஆக்கலாம்னு இது மாதிரி நடந்துக்கற உண்மைய சொல்லு எல்லாம் பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு நீ சுத்திட்டு இருக்க

ஆனா அங்க என் அம்மா இவ்வளவு நேரமாகியும் ஒரு வாய் சாப்பாடை வாயில வைக்காம பட்டினியா அழுது கிட்டு இருக்காங்க


என் அம்மாவோட அழுகைக்கும் கவலைக்கும் யார் காரணம் தெரியுமா நீ தான்

ஆனா உன்ன மாதிரி ஆளுகளுக்கு சாப்பாடு உடனே ஜீரணமாகிடுது

என் அம்மா மாதிரியான நல்லவங்களுக்கு ஒருவாய் சாப்பாடு கூட வாயில வைக்க முடியல

அவ்வளவு சொத்து பத்து இருந்து கூட எங்களுக்கு நிம்மதி இல்லை ஆனா ஒண்ணுமே இல்லாம நீ சந்தோஷமா சிரிச்சு பேசி ஜாலியா சுத்திட்டு இருக்க எப்படி உன்னால முடியுது சொல்லு சொல்லு என்று அவளின் கையை பிடித்து உலுக்கியவன் சட்டென்று அவளை தள்ளி விடுவது போல் விட்டு விட
நிலை தடுமாறி கீழே விழப்போனாள்

அவள் சுதாரித்து தன்னை நிலைபடுத்திக் கொள்ளும் போது ஸ்ரீதர் முற்றிலும் கோபத்தை கட்டுப் படுத்தியிருந்தான்.

ஒரு கையை கட்டிக்கொண்டவன் மற்றொரு கையால் தனது நெற்றியை நீவி தன்னை சமாதானப் படுத்திக் கொண்டவன் சாரி என்ன மன்னிச்சிடு என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டான்.


அவனின் கோபத்தை கண்டு பயந்த வானதி யாருக்கும் தெரியாமல் தனது கண்களில் இருந்து வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு இனிமேலும் இங்கு தான் வேலை செய்வது சரி வராத ஒரு விஷயம்

தினம்தினம் ஸ்ரீதரை நேருக்கு நேர் சந்தித்து அவனின் ஒவ்வொரு கேள்விக்கும் தன்னால் பதில் கூற இயலாது என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டாள்

ஆனால் அவளுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை ஸ்ரீதருக்கு கடந்த வாரம் தான் திருமணம் ஆகியிருக்கிறது அப்படி இருக்கும் பொழுது அவனின் தாய் ஏன் அழுது வடிய வேண்டும் ஏன் சாப்பிடாமல் இருக்க வேண்டும் இவன் ஏன் நிம்மதி இல்லாமல் இருக்க வேண்டும்


அதைப் பற்றிய சிந்தனை அப்போதைய மனநிலையில் வானதிக்கு இல்லை ஏன் அவளால் யோசிக்க கூட முடியவில்லை அவள் சற்று யோசித்து இருந்தால் அவனின் திருமணம் என்னவாயிற்று நடந்ததா இல்லையா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருப்பாள்

ஆனால் அவளோ அவனுக்கு திருமணம் முடிந்து அவனுக்காக குடும்பம் ஆன பிறகும் கூட அவனால் அவளை மறக்க முடியாமல் கஷ்டப்படுகிறான் என்பதை தான் அவள் புரிந்து கொண்டாள்


அவனுக்கு திருமணமாகி விட்டது அவனுக்கு என்று ஒரு வாழ்க்கையும் ஆரம்பித்தாகிவிட்டது இனி அவனுடைய வாழ்க்கையில் குறுக்கிட்டு அவனுடைய பழைய நினைவுகளை தான் கிளற கூடாது அதனால் நாளையிலிருந்தே இந்தப் பள்ளிக்கு வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் அவளின் தலைமையாசிரியரை காணச் சென்றாள்.

ஆனால் தலைமை ஆசிரியரோ அவள் வேலையை விட்டு செல்வதற்கு சரியான காரணம் வேண்டும் புதிதாக ஒருவர் பொறுப்பேற்கும் பொழுது வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் வேலையை விட்டு சென்றால் பல சந்தேகங்களைக் கிளப்பும் அதனால் கண்டிப்பாக சற்று காலம் வேலை செய்தே ஆக வேண்டும் அதுவும் இப்பொழுது வந்தவருக்கு இங்கிருந்த கணக்கு வழக்குகளை எல்லாம் சொல்லி புரிய வைத்து விட்டு ஒரு மூன்று மாதம் கழித்து வெளியே சென்று கொள் என்று பிடிவாதமாக கூறிவிட்டார் சோர்வுடன் திரும்பிய வானதி அன்றைய நாளின் மீதி இருந்த நேரத்தை கழிக்க குழந்தைகளுக்கு பாடம் எடுக்கச் சென்றாள்.

22

இங்கு ஸ்ரீதர் வானதியிடம் கடுமையாக நடந்து கொண்டு அந்த கோபத்துடனே வீடு வந்து சேர அங்கு வீட்டில் எல்லாம் போட்டது போட்டபடி இருக்க அவன் தாய் காலையில் எந்த நிலையில் படுக்கையில் சாய்ந்து இருந்தாரோ அதேபோல் சாய்ந்திருந்த அவரைப் பார்த்ததுமே இவனின் மொத்த சக்தியும் வடிந்தது போல் தோன்றியது



அதுவரை இருந்த கம்பீரம் தொலைந்து போய் சோர்வுடன் தாயை தேடி வந்து அவளின் தலை மாட்டில் அமர்ந்தவன் தாயின் தலையை வருடியபடி ஏம்மா இப்படி பண்றீங்க

நீங்க இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கன்னா நான் எங்காவது போய் விடுவேன் இந்தக் கொடுமை என்னால பார்க்கவே முடியல

மூணாறுல தான் இப்படி இருந்தீங்கனு மாற்றத்துக்காக இங்க கூட்டிட்டு வந்தா இங்க வந்த ரெண்டு நாளும் நீங்க இப்படியே பண்ணிட்டு இருந்தா நான் என்ன பண்ணமுடியும் சொல்லுங்கம்மா


என்னால ப்ரீயா வேலையைக் கூட செய்ய முடியல இன்னும் ஒரு வாரத்துக்கு மேல இங்க வேலை செஞ்சாகனும்

ஆனா நீங்க இப்படி என்னை கஷ்டப்படுத்தினால் நான் எப்படி வேலை செய்ய முடியும் என்று இவன் கண்கலங்கியபடி பேச அவனின் தாயோ அவனுக்கு பதில் கூறாமல் தலையை அந்தப் பக்கம் திருப்பி வைத்தபடி படுத்துவிட்டார்

அம்மா என்ன தான் பிரச்சனை முதல்ல அது சொல்லுங்க சொன்னாதானே எனக்கு தெரியும் இப்படி பண்ணினா நான் என்ன பண்ண முடியும் என்று இவன் கெஞ்ச தொடங்க

அப்படினா நீ உடனே கல்யாணம் பண்ணிக்கோ…

என்னமா விளையாடுறீங்களா‌ முழுசா பத்து நாள் கூட ஆகல என்னோட கல்யாணம் நின்னு போயி அதுக்குள்ள மறுபடியும் எனக்கு கல்யாணமா நானும் மனுஷன் தான் எனக்கும் மனசு இருக்குது


கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க தயவுசெஞ்சு கொஞ்ச நாளைக்கு கல்யாணத்தை பத்தி என்கிட்ட பேசாதீங்க ஒருவேளை என்னோட வாழ்க்கையில கல்யாணம் அப்படிங்கிற ஒரு விஷயம் நடக்காமல் கூட போகலாம் நீங்க ரொம்ப எதிர்பார்க்காதீர்கள் இதை நான் உங்ககிட்ட பலதடவை சொல்லியாச்சு இப்பவும் சொல்றேன் கேட்டுக்கோங்க இனி சும்மா சும்மா உங்க கிட்டே இது பத்தி நான் பேசிகிட்டு இருக்க மாட்டேன்.

அப்படியா இனிமே நானும் கல்யாணத்தை பத்தி பேசல நீயும் என்ன சாப்பிடுங்க அழாதீங்கனு சொல்ல வேண்டாம் நான் உடனே மூணாறுக்கு போறேன் இனிமே நான் உன்னோடு இருக்க முடியாது என் பேச்சு கேட்காத பிள்ளை எப்படி போனால் எனக்கென்ன என்று கோபமாக அவர் எழ

அவரின் கையை பிடித்து தடுத்தவன் அம்மா ஏம்மா எல்லாத்துக்கும் இப்படி கோப படுறீங்க இன்னைக்கு கல்யாண வாழ்க்கையை வெறுத்து இருக்கேன்னா அதுக்கு நீங்களும் ஒரு காரணம் அது உங்களுக்கு புரியவே இல்ல

முதல் தடவை நான் தான் ஒரு தவறான பொண்ண தெரிந்தெடுத்தேன் இரண்டாவது முறையாவது நீங்க யோசிச்சீங்களா அந்த பொண்ணு நம்ம பையனுக்கு ஒத்து வருவானு எத பத்தியும் யோசிக்காம எடுத்த உடனே கல்யாணம் தாலி கட்டிட்டா மட்டும் சந்தோஷம் வந்திடுமா


பாருங்க இப்ப நான் தான் மறுபடியும் தனியா நிக்கிறேன் என்னை யூஸ் பண்ணிக்கிட்டு ரெண்டு பொண்ணுங்க ரொம்ப நல்லா இருக்காங்க சக்தி ஹனிமூன் போயிட்டாங்க இனி ஒருத்தி என்று வானதியைப் பற்றிக் கூற வந்தவன் தன் தாயிடம் எதற்கு அவன் தங்களுடைய பள்ளியில் தான் வேலை செய்கிறாள் என்று கூறி அவரை மீண்டும் கோபப்படுத்த வேண்டாம் என்று எண்ணியவன் அப்படியே வார்த்தைகளை முழுங்கி விட்டான்.


உடனே மீனாட்சி டேய் சக்தி பொண்ணு உண்மையிலேயே ரொம்ப நல்ல பொண்ணு டா நீ தான்டா அவள வேண்டாம்னு சொல்லிட்ட நாம புத்தி சொன்ன உடனே அந்த பிள்ளை மறுபடி உன்ன கல்யாணம் பண்ணிக்கிறது தயாராக இருந்தது நீதான்டா பிடிவாதமா கல்யாணம் வேண்டாம்னு அங்கிருந்து வந்திட்ட

அவங்க உடனே வேறு ஒரு பையனை பாத்து கல்யாணம் பண்ணி வைச்சிட்டாங்க ஒரு பொண்ணுக்கு கல்யாணம் நின்னதுனா உடனே ஒரு மாப்பிள்ளை கிடைக்குது ஆனா என் பையனுக்கு ஒரு தடவைக்கு ரெண்டு தடவை கல்யாணம் நின்னுடிச்சி


ஆனா பையனை கட்டிக்க ஒரு பொண்ணு கிடைக்க மாட்டேங்கறா என்று ஆதங்கப்பட்டு கூற

அம்மா சக்தி விஷயத்தை முதல்ல மறந்துடுங்க நீங்க அப்படியே கட்டாயப்படுத்தி எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிருந்தா கூட ஒரு வருஷம் கூட நாங்க தாக்குப்பிடித்திருக்க மாட்டோம்

சக்தி எனக்கு ஏத்த பொண்ணு இல்லம்மா அவளுக்கு எதுவுமே தெளிவா முடிவு எடுக்கத் தெரியாது


எல்லாத்துக்கும் அவங்க அப்பா பின்னாடி சுத்திட்டு இருக்கிறவ

அவங்க அப்பா என்ன சொன்னாலும் சரினு தலையாட்டுவா அவளுக்கு நான் செட்டாக மாட்டேன் இனிமே சக்தியை பத்தி பேசாதீங்க அவர் வேற ஒருத்தரோட மனைவி ஆயிட்டா என்று கூறியவன் முதல்ல சாப்பிடலாம்மா ப்ளீஸ் எனக்கு பசிக்குது என்று கூற


மகன் பசிக்கிறது என்றதும் வேகமாக எழுந்த மீனாட்சி நீ இன்னுமா சாப்பிடல வர்ற வழியில் ஏதாவது வாங்கி சாப்பிட்டு இருப்பனு நினைச்சேன் சரி வா முதல் உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்று கூறியபடி அவள் எழுந்து முன்னே செல்ல


இவனுக்கு மீண்டும் பயம் தொற்றிக்கொண்டது


இப்போதைக்கு தனது தாயை சமாதானப்படுத்தி ஆகிவிட்டது மீண்டும் தனது தாய் தனது திருமணத்தைப் பற்றிப் பேசினால் தான் என்ன செய்ய வேண்டும்


அவனுக்கு இப்போது சுத்தமாக திருமணத்தின் மீது ஆசை கிடையாது அவனின் எண்ணம் எப்பொழுதுமே பிறப்பும் இறப்பும் எப்படி ஒன்றோ அதே போல் தான் காதலும் திருமணமும் என்று நினைத்துக் கொண்டிருந்தான்


அவன் வாழ்க்கையில் ஒரு முறை காதல் வந்து சென்றுவிட்டது திருமணம் என்பது இரண்டு முறை வந்தும் கூட எட்டாக்கனியாகி விட்டது ஒருமுறை பெண் இவனை வேண்டாம் என்று சொல்லி விட்டாள்

இரண்டாம் முறை இரண்டு பேருமே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டனர்

தன் தாயை எப்படி சமாளிப்பது வரும் காலங்களில் பேசாமல் தாய்க்காகவாவது விவாகரத்து ஆன பெண்ணையோ இல்லையென்றால் கைம்பெண்ணையோ திருமணம் செய்து கொள்ளலாமா?


தனது வயதொன்றும் குறைவு கிடையாது இனி தனது வயதுக்கு ஏற்ற பெண்ணை தேடுவது கடினம் இதுபோன்ற பெண்கள் என்றாள் அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை அமையும் தனக்கும் ஒரு நிம்மதி என்று கூட யோசிக்க தொடங்கியிருந்தான்.

சரி எதுவாக இருந்தாலும் வருவது வரட்டும் வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் இப்பொழுதைக்கு தனது தாய் சமாதானமாகி விட்டார்
அதுவே போதும் என்று நினைத்தவன் உணவருந்த சென்றான்.

எப்படியோ அன்றைய பொழுது பல குழப்பங்களும் திருப்பங்கள் நிறைந்த பொழுதாக முடிந்தது மறுநாள் காலை வழக்கம்போல காலை நேரத்திலேயே பள்ளிக்கு ஸ்ரீதர் வந்திருந்தான்.

வானதியோ மிகவும் தயங்கித் தயங்கி வந்தாள் எப்படி இருந்தாலும் இன்னும் மூன்று மாதம் அவள் இங்கு தான் வேலை செய்தாக வேண்டும் எப்படி ஸ்ரீதரை நேருக்கு நேர் சந்தித்து வேலை செய்வது அவனின் முதல்நாள் கோபத்தை கண்ட பிறகு இன்று அவளுக்கு பள்ளி செல்லவே பயம்


அவனுக்கு என்ன தெரியும் அவள் இரண்டு ஆண்டுகளுக்கு அவனுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள் என்று வாரவாரம் கோவிலில் அவனுக்காக பிராத்தனை செய்தது…

அவனை தூரத்தில் இருந்தாவது காண மாட்டோமா என்று ஏங்கியது அவனின் திருமணத்திற்கு முன்பாக அவனைத் தேடிச் சென்றது அவனை மணக்கோலத்தில் கண்டுவிட்டு இதயம் நொறுங்க ஏக்கத்தோடு திரும்பியது இப்படி எதுவுமே தெரியாமல் அன்று செய்த சிறு தவறை பிடித்துக்கொண்டு இன்னுமும் அவளை வஞ்சித்து கொண்டிருக்கிறான் அவனை என்ன செய்ய என்று மனதுக்குள் நினைத்தபடி நேராக பள்ளிக்கு வந்தாள்.


வாசலிலே அவளை எதிர்பார்த்து காத்திருந்த காயத்ரி இவளைக் கண்டதும் வாங்க மேடம் எப்படி இருக்கீங்க நேத்து ரொம்ப வேலையா எப்போ வீட்டுக்கு போனீங்க என்று சகஜமாகப் பேசிக் கொண்டு வர

வானதி காயத்ரி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் கூறியபடி வந்தாள் கடைசியாக காயத்ரி வானதியைப் பார்த்து நேற்று எதுக்காக மேடம் சார் உங்க கிட்ட அப்படி முரட்டுத்தனமாக நடந்து கிட்டாரு….


அவர் உங்க கிட்ட அவ்ளோ கோபமா நடந்துகிட்டு இருக்கும் போது நீங்க எதுவுமே சொல்லாம பொறுமையா இருக்கீங்க உங்களுக்குள்ள என்ன பிரச்சனை,

அவர் நேத்து உங்ககிட்ட நடந்து கிட்டத பார்த்தா கண்டிப்பா ஆபீஸ் வேலையா சண்டை போட்ட மாதிரி தெரியல வேற என்னமோ இருக்கு


ஏற்கனவே உங்க ரெண்டு பேருக்கும் பழக்கம் இருக்கா என்று கேட்க


அவளின் இந்த கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் வானதி என்ன உளர்றீங்க காயத்ரி அவர் எங்க முரட்டு தனமா நடந்துகிட்டாரு,

அவர் ஏன் என்கிட்ட கோபப்படனும்


நான் பார்த்தேன் அவர் உங்க கைய புடிச்சு தள்ளி விட்டதை நான் பார்த்தேன் என்று அவள் கூற

அது வந்து…. வேலைல ஏதோ தப்பு பண்ணிட்டேன் அதான் அது பத்தி கொஞ்சம் கோபமா விசாரிச்சாரு அதுக்கப்புறம் என் கிட்ட சாரி கூட கேட்டாரு அது நீங்க பாத்தீங்களா


இல்ல அவர் அப்படி உங்ககிட்ட கோபமாக நடந்து கிட்டத பாத்து நான் பயந்துட்டேன் யாரையாவது கூப்பிட்டு வரலாம்னு ரேவதி மிஸ் கிட்ட போனேன் அவங்க இரு ஒரு நிமிஷம் கழிச்சு வரேனாங்க


மறுபடியும் உங்களை பாக்க நா ஓடி வந்தேன் ஆனா சார் அதுக்குள்ள கிளம்பி போய்ட்டாங்க


நீங்க நேராகப் ஹெட் மிஸ் கிட்ட போயிட்டீங்க சரி சாரை பத்திதான் கம்ப்ளைன்ட் பண்றீங்கன்னு பார்த்தா நீங்க சாரை பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லல அதுக்கு பதிலா வேலையை விட்டு போறேன் னு சொல்றீங்க


சரி அதுக்கு தான் காரணம் ஏதாவது சொல்லுவீங்கன்னு பாத்தா உடம்பு முடியல இங்கே வேலை செய்ய பிடிக்கல சம்பளம் பத்தல இன்னும் ஏதேதோ காரணம் சொல்றீங்க


நல்ல வேளை இன்னும் மூணு மாசம் வேலை செய்யனும்னு சொன்னாங்க இல்லனா நான் என்ன செய்யறது... அதுக்குள்ள உங்க மனசை நான் மாத்திடுவேன் இல்லனா உங்களுக்கே மாறிடும்னு நம்பறேன் வானதி மேடம் தயவு செஞ்சு எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்காதீங்க...



என் பொண்ணுக்காக நான் கண்டிப்பா கடைசி வரை இங்கு வந்துதான் ஆகணும் அதுக்காக உங்களை கட்டாயப்படுத்த முடியாது இருந்தாலும் நீங்க ஒரு கல்யாணம் பண்ணிட்டு போற வரைக்கும் வேலைக்கு வந்தீங்கன்னா எனக்கு ஆறுதலா இருக்கும் அவ்வளவுதான் என்று பேசிவிட்டு அவள் சென்றுவிட


இவளோ கல்யாணம் என்றதும் காரணமே இல்லாமல் ஸ்ரீதரின் ஞாபகம் வந்தது ஸ்ரீதரின் ஞாபகம் வருவுமே ஸ்ரீதரும் சக்தியும் மணக்கோலத்தில் இருந்தது ஞாபகத்திற்கு வர குப்பென்று வேர்த்தது ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண்ணுக்கு சொந்தமானவனையா இன்னும் தனது மனம் நினைத்துக்கொண்டு இருக்கிறது என்று அவள் மீது அவளுக்கே கோபம் வந்தது.


காயத்ரி பேசிவிட்டு சென்றதும் குழப்பத்துடனே அங்கேயே நின்று கொண்டிருக்கும் பொழுது ஸ்ரீ அவளை அழைத்த விஷயத்தை சக ஊழியர் ஒருவர் வந்து கூற வேகமாக அலுவலகத்திற்குள் சென்றாள்.

அவளைக் கண்டதும் தனக்கு எதிராக இருந்த நாற்காலியில் அமருமாறு ஜாடை செய்ய வானதிக்கு சற்று அதிர்ச்சிதான்


ஏனென்றால் நேற்று முழுவதும் தன்னை உட்காரக்கூட அனுமதிக்காமல் வேலை வாங்கியவன் இன்று முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாமல் பொம்மை போல் அமர்ந்தபடி அவளையும் எதிரில் அமர சொல்கிறான்

புருவ முடிச்சுகளுடன் யோசனையாக அவன் எதிரில் அமர


நீங்க இந்த வேலையை விட்டு போறதா சொல்லீருக்கீங்க... என்று சுற்றி வளைக்காமல் நேரடியாக அவளின் முகத்தை பார்த்து கேட்டான்


அவள் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் ஆமாம் என்பது போல் தலை குனிய

நீங்க சொல்லியிருக்கிற காரணம் சம்பளம் பத்தல இங்க வேலை செய்ய பிடிக்கல ப்ளா... ப்ளா... ப்ளா…

சோ வேலை செய்ய பிடிக்காத ஒருத்தர இங்கு பிடித்து வைக்க எங்களுக்கும் விருப்பம் இல்ல அதனால நீங்க மூணு மாசம் வேலை செய்யணும்னு அவசியம் கிடையாது


நியாயமான காரணத்துக்காக வேலையை விட்டுப் போறேன்னு சொல்றவளுக்காக தான் மூணு மாச கணக்கு ஆனா உங்கள மாதிரி மனசுக்கு பிடிக்காத ஒரு வேலையை செய்யறவங்களுக்கு அந்த சிரமம் தேவைப்படாது

மூணு மாசம் இல்ல மூணு மணி நேரம் கூட இந்த ஸ்கூல் உங்களை வேலைல வெச்சுக்க விரும்பல இப்பவே உங்க செட்டில்மெண்ட் முடிச்சி தர்றேன் நீங்க இந்த வேலையை விட்டுப் போகலாம் என்று கூறியவன் எதையும் யோசிக்காமல் அவளின் கணக்கு வழக்குகளை எடுத்துப் பார்த்து அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து நோட்டின் மீது வைத்து அவள் புறம் தள்ளி வைத்தான்


இந்த வேலையை விட்டு போறதுக்காக நீங்க எந்தக் காரணத்தைச் சொல்லி இருந்தாலும் நா உங்கள கன்வின்ஸ் பண்ண முயற்சி பண்ணி இருப்பேன்


சம்பளம் பத்தலையா சம்பளம் சேர்த்து கொடுத்து இருப்பேன்


நேரம் ஜாஸ்தினா நேரத்தை குறைத்து இருப்பேன்


வேலை அதிகம் செய்ய முடியலையா உங்களுக்கு ஏதுவா சுலபமான வேலையை கொடுத்து இருப்பேன்

ஆனால் எப்போ இந்த வேலை செய்ய பிடிக்கலன்னு சொன்னீங்களோ அப்பவே உங்களுக்கு இங்க வேலையில்ல

இங்க சேவை மனப்பான்மையோடு இருக்கிறவங்களுக்கு மட்டும்தான் வேலை உங்கள மாதிரி மனசுக்கு பிடிக்காம வேலை செய்யறவங்களுக்கு கிடையாது


இதுல ஒரு கையெழுத்து போட்டுட்டு இந்த பணத்தை எடுத்துகிட்டு நீங்க தாராளமா கிளம்பலாம் என்று வாசலைப் பார்த்து கை காட்ட வானதியின் அதிர்ச்சி அப்பட்டமாக முகத்தில் தெரிந்தது


அதைப் பொருட்படுத்தாத ஸ்ரீதர் ஒரு கோப்பை எடுத்து கையில் வைத்தபடி வேலை பார்க்கத் தொடங்க வானதியும் கண்களில் பெருகும் கண்ணீரை கடினப்பட்டு உள்ளே இழுத்துக் கொண்டாள்.


நேற்று என்னமோ வேலைக்கு வரவில்லை என்று கூறிவிட்டாள் தான் ஆனால் இப்படி முகத்தில் அடித்தது போல் உடனே வேலையை விட்டுப் போக என்றால் அவள் எங்கே செல்வாள், எப்படியும் மூன்று மாதத்திற்குள் வேறு வேலையை தேடிக்கொள்ளலாம் அதன் பிறகு இங்கிருந்து கிளம்பலாம் என்று சற்று முன்பு தான் முடிவெடுத்திருந்தாள்



தனது முந்திக்கொட்டை தனத்தை எண்ணி சிரிப்பதா அழுவதா என்று கூட தெரியவில்லை

நேற்று மட்டும் இவள் சற்று பொறுமை காத்திருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது இதற்கு முன்பு வேலை தேடிய அனுபவம் அவளுக்கு தெரியும் ஒரு வேலை கிடைக்க அவள் எவ்வளவு சிரமப்பட்டாள் என்பது இன்னும் அவளது ஞாபகத்தில் இருக்கிறது


தனது அவசர புத்தியால் இன்று இந்த வேலையும் போய் விட்டது நாளையிலிருந்து தான் என்ன செய்வது என்று எல்லா கவலையும் அவன் கையெழுத்துப் போட சொன்ன அந்த சிறிது நேரத்திற்குள் கண் முன் வந்தது.


எதிர்காலம் அவளைப் பார்த்து பயமுறுத்தியது தனது வாழ்க்கைக்கான மிச்ச நாட்களை வாழ்ந்துதான் ஆகவேண்டும் வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் கையில் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மூன்று வேளை பசிக்குமே


பசிக்கும் வயிற்றுக்கு என்ன சொல்லி ஆறுதல் கூறுவது பசிக்காதே என்று சொன்னால் அது கேட்டு விடவா போகிறது இப்படி பலவாறான எண்ணங்கள் ஆனால் இவன் முன்பு தான் அழுது விடக்கூடாது என்று தன்னுடைய உணர்வுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கடும் முயற்சி எடுத்தாள்.

எதுவும் பேசாமல் கண்களில் நீருடன் கையெழுத்திடும் நோட்டையே பார்த்துக் கொண்டிருந்தவளை பார்க்க ஸ்ரீதருக்கு வருத்தமாகத்தான் இருந்தது

ஆனாலும் அவள் இந்த வேலை செய்யப் பிடிக்கவில்லை என்று கூறிய பிறகு எப்படி அவளை இந்த வேலையில் வைத்துக் கொள்வது என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது


ஏற்கனவே உன்னை காதலிக்கிறேன் திருமணம் செய்கிறேன் என்று ஏமாற்றிய கோபம் வேறு

தனது தாயும் தனது குடும்பமும் கடும் மன கஷ்டத்தில் இருக்கும் பொழுது இவள் மட்டும் அது போல் எதுவுமே இல்லாமல் சிரித்து உலா வருவது இரண்டாவது கோபம்

தான் இந்த வேலை செய்ததால் தான் தன்னை அவள் திருமணம் செய்ய மறுத்து இருக்கிறாள் என்று அவளை தவறாக புரிந்து கொண்டான்



அதை அவளிடம் நேரடியாக கேட்டிருக்கலாம் ஏன் திருமணம் செய்கிறேன் என்று கூறிவிட்டு கோவிலுக்கு வரவில்லை என்று அவன் அதை இது வரை கேட்கவில்லை அவள் தன்னை ஏமாற்றி விட்டாள் அது மட்டுமே அவனின் அடி மனதில் ஆழமாக பதிந்து விட்டது


ஒரு நிமிடம் அவன் யோசிக்க மறந்துவிட்டான் அவள் காதலிக்கும் பொழுது அவனைப் பற்றி எதையுமே கேட்டதில்லை ஒருவேளை அவன் இதுபோல் ஒரு பள்ளியில் வேலை செய்வது தெரிந்ததால் தான்


தன்னை திருமணம் செய்ய மறுத்திருக்கும் பட்சத்தில் எப்படி மீண்டும் இங்கே வேலைக்கு வந்திருப்பாள் என்று ஒரு வினாடி யோசித்திருந்தால் அவளைப் பற்றி தவறாக கணித்து இருக்கமாட்டான்.

இன்னும் போகலையா என்பது போல் சலிப்புடன் அவளைப் பார்க்க இப்பொழுதும் அதே போல் தான் நின்றபடி இருக்கிறாள் உடனே பேனாவை எடுத்து அவளின் கை அருகில் வைத்து தட்ட உணர்வுக்கு வந்தவள் சிறு திடுக்கலுடன் அவனைப் பார்த்தாள்

கையெழுத்து போட்டுட்டு கிளம்பலாம் எனக்கு நிறைய வேலை இருக்கு என்று இரக்கமே இல்லாமல் கூற யோசிக்காமல் பேனாவை எடுத்து கையெழுத்திட்டவள் பணத்தை எடுக்காமலே விடுவிடுவென வெளியே சென்று விட்டாள்.

அவள் அறையை விட்டு செல்லும் வரை தலைதூக்கி பார்க்காதவன் அறையை விட்டு சென்று விட்டாள் என்று தெரிந்ததும் தலைதூக்கி வெளியே எட்டிப் பார்க்க அவள் இப்பொழுது பள்ளி வளாகத்தை விட்டே வெளியே சென்று விட்டாள்


பிறகுதான் டேபிளில் இருந்து பணத்தைப் பார்த்தவன் அவசரமாக எழுந்து பணத்தை கையில் எடுத்து வாசலில் நின்று பார்க்க இப்பொழுது ரோட்டில் கண்களை துடைத்தபடி வேகமாக நடந்து சென்று கொண்டிருக்கிறாள்


அவனுக்கு மிகவும் கஷ்டமாக போய் விட்டது அவன் இது போலெல்லாம் நடந்து கொள்பவன் கிடையாது ஏனோ வானதி விஷயத்தில் மட்டும் இப்படி நடந்து கொள்கிறான்

உதடுகள் தானாகவே முனுமுனுத்தது. அடடா கஷ்டப்பட்டு வேலை செஞ்ச பணத்தை விட்டுட்டு போறாளே என்று செலவுக்கு என்ன பண்ணுவா என்று அவளின் மீது இரக்கம் வந்தது


சரி இதை யாரிடமாவது கொடுத்து அனுப்பிவிடலாம் என்று நினைத்தவன் மீண்டும் அதை பேண்ட் பாக்கெட்டில் எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டான்


வானதி வேலையை விட்டு வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது நாளின் ஒவ்வொரு மணி நேரத்தையும் கடினப்பட்டு தள்ளி கொண்டிருந்தாள்

வேலை செய்து பழகி விட்டதால் வீட்டில் இருக்க அவளுக்கு பிடிக்கவில்லை ஏனோ வேறு வேலை தேடவும் தோன்றவில்லை

ஏற்கனவே வேலை தேடிய அனுபவம் அவளை கண் முன் வந்து பயமுறுத்தியது என்ன செய்வது என்று யோசித்த படி அருகில் கொஞ்சம் பழக்கமான பெண்களிடம் தனக்கு ஏதாவது வேலை பார்த்து தரும்படி கூறினாள்

இந்த முறை அவள் படித்த படிப்புக்கு வேலை தேட வில்லை வாழும் வாழ்க்கைகாக வேலை தேடினாள்

எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை அது கவுரவமாக இருக்கவேண்டும் என்று ஒரு கோரிக்கையை மட்டும் வைக்க அருகிலிருந்த ஒரு பெண்மணி அவளிடம் வந்து

நான் வேலை செய்யற ஆபீஸ்ல எல்லாம் கேட்டு பார்த்தேன் எங்குமே இப்போ வேலைக்கு ஆள் வேணாம்ங்கறாங்க

ஒரு ஆபீஸ்ல வேணா அடுத்த மாசம் மாதிரி ஒரு ஆள் தேவைப்படுது அந்த பொண்ணு படிச்சது,வேலைபாத்த விவரங்களை வாங்கிதாங்க...அத பாத்துட்டு நாங்க அந்த பொண்ணை வேலைக்கு எடுத்துக்கறேன்னு சொன்னாங்க அவங்க கேட்டதை தரிறியா வானதி என்று கேட்டார்

உடனே வானதி சந்தோஷத்துடன் இருங்கக்கா ஒரு நிமிஷம் எடுத்துத் தரேன் என்று கூறியபடி உள்ளே சென்றவள் அவளின் ரெஸ்யூமை எடுத்துக்கொண்டு வந்து அவரிடம் கொடுத்தாள் ரொம்ப நன்றி க்கா இந்த உதவியை நான் என்னிக்குமே மறக்க மாட்டேன் என்று கூற

அவர் தயங்கிபடி
அவங்க உன்னை வேலைக்கு கூப்பிடற வரைக்கும் வீட்ல சும்மா தான் இருக்க போறே என்று கேட்டார்

இல்லக்கா அதுக்கு முன்னாடி ஏதாவது சாதாரண வேலை கிடைச்சாலும் போகலாம்னு தான் இருக்கேன் அவங்க கூப்பிடற வரை வீட்டிலிருந்து என்ன செய்யறது என்று அவள் கூற


உடனே அவர் மீண்டும் தயங்கியபடி நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே என் மேல கோபப்பட மாட்டேல்வ என்று கேட்டார்


உடனே அவள் நான் எதுக்கு கோபப்பட போறேன் எதுவா இருந்தாலும் சொல்லுங்க என்று கேட்க

ஒரு வீட்டுக்கு வேலைக்கு ஆள் வேணும்னு கேட்டாங்க என்னதான் முதல்ல கூப்பிட்டாங்க ஏற்கனவே நான் நிறைய ஆபீஸ்ல கூட்டறேன் ரெண்டு வீடுகளுக்கும் வேலைக்கு போறேன் அதனால என்னால முடில



நல்ல சம்பளம் வேலை ரொம்ப கம்மி ஆஃபிஸ்க்கு போற மாதிரி இங்கே முழுநேரம் கேக்குறாங்க ஒரு அம்மாவும் பையனும் மட்டும் தான்

பெருசாலாம் எந்த வேலையும் இல்லை எல்லாத்துக்கும் வீட்டுக்குள்ள மெஷின் இருக்கு நாம பார்த்து பத்திரமா வெச்சுக்கிட்டா போதும்


சாப்பாடும் அங்கே குடுத்துடுவாங்களாம் ஆனால் என்னன்னா ஒரு பத்து நாளோ இல்லனா பதினைந்து நாளோ தான் இருப்பாங்களாம் அந்த பதினஞ்சு நாளைக்கே பெரிய தொகையை சம்பளமா தர காத்திருக்காங்க


உனக்கு அடுத்த வேலை கிடைக்கிற வரைக்கும் வேணா நீங்க போய் வேலை செய்யேன் தப்பா எடுத்துக்காத எந்த வேலையும் குறைவாக நினைக்காத வானதி என்று சொல்ல


தப்பா எடுத்துக்க என்ன இருக்குகா உண்மைய சொல்லப் போனா நான் உங்களுக்கு நன்றி தான் சொல்லணும் பத்து நாளா இருந்தா என்ன?

ஒரு நாளா இருந்தா என்ன

நியாயமா செய்கிற எந்த வேலையானும் அது நல்ல வேலை தான் இந்த பத்து நாள் வேலைக்கு அவங்க கொடுக்கிற சம்பளம் எனக்கு அடுத்த வேலை கிடைக்கிற வரைக்கும் கொஞ்சம் உபயோகமாக இருக்கும்

அதுவும் இல்லாம இந்த வேலையில என்ன குறைச்சல் இந்த வேலை செஞ்சு தானே அம்மா என்ன படிக்க வச்சாங்க எனக்கு சாப்பாடு போட்டாங்க என்ன இந்த நிலைமைக்கு ஆளாகி விட்டாங்க


அதனால என்னைக்குமே வீட்டு வேலை செய்யறது எனக்கு இழிவில்ல அக்கா நீங்க அட்ரஸ் கொடுங்க நான் போறேன் என்று அவள் கூற

இருமா அங்க வேலைக்கு கூப்பிட்ட ஏஜன்ட் நம்பர் இருக்கு நான் ஒரு தடவை பேசிட்டு நாளைக்கு நானே கொண்டு போய் விட்டுட்டு வரேன்


நீ வந்து போற செலவை கூட அவங்களே பார்த்துப்பாங்க அதனால நீ பஸ்ல அலைய வேண்டாம் டெய்லி ஆட்டோலயே போய்ட்டு வந்திடு நா ஆட்டோக்கும் சொல்லி வைக்கிறேன் எனக்கு தான் அங்க வேலை செய்ய கொடுத்து வைக்கல நீ போனா கூட போதும் வேற யாருக்கும் இந்த வேலையை விட்டு குடுக்க மனசு வரல நாளைக்கு காலையில நேரமா கிளம்பி இரு நான் உன்ன அங்க விட்டுட்டு ஆஃபிஸ்க்கு போய்க்கறேன்என்று கூற


இவள் சரி என தலையாட்டினாள்.

தொடரும்...
 
Top