கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காத்திருந்த காதல்-3

Akila vaikundam

Moderator
Staff member
3

சற்று நேரத்திற்கு எல்லாம் கோவிலில் பூஜை முடியும் சத்தம் கேட்க ஒவ்வொருவராக பிரசாரத்தை வாங்கிய வண்ணம் பேசியபடி நடந்து வந்து கொண்டிருந்தனர் அப்பொழுது ஸ்ரீதரும் அவளை கடக்கும் பொழுது அவளைக்கண்டான்...சிறு யோசனையுடன்…..

'வரும்பொழுது சிரித்த முகமாக
இருந்த பெண் 'தற்போது அவ்விடத்திலேயே அமர்ந்து
அழுதபடி இருக்க அவன் மனம் கேளாமல் அவளை கடந்து சென்றவன் மீண்டும் திரும்பி வந்து சற்று தள்ளி அவள் அருகில் வந்து அமர்ந்தான்…

ஒருவன் தன் அருகில் அமர்வதை கூட காணாது அவள் தலை குனிந்து அழுத வண்ணமே உட்கார்ந்திருந்தாள்…

அப்பொழுது அவளை அங்கு அழைத்து வந்த பெண்மணியும் வர இருவரையும் சேர்ந்து பார்த்தவர் இருவரும் காதலிக்கிறார்கள் என்று நினைத்தபடி சற்று கோபமாக

"என்னமா வானதி உனக்கு இந்த பையனை ஏற்கனவே தெரியும்னா நீ உன் அம்மாகிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல?இப்போ பாரு தேவையில்லாம எனக்குதான் அசிங்கம் ...நான் கூட உனக்கு தெரியாத பையன்னு நினைச்சிட்டு இருந்தேன்!..
இப்பதான் எல்லாம் தெரியுது நல்ல பொண்ணு வளர்த்தா போ உன் அம்மா"என்று அவளையும் அவளின் தாயையும் திட்டியபடி அப்பெண்மணியும் அவ்விடத்தை விட்டு வேகமாக நகர்ந்து சென்றார்…..

மீண்டும் ஒரு பெரும் அழுகைக்கு அவள் தயாராக பக்கத்தில் எதுவுமே தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீதர்

" என்னங்க ஆச்சி
ஏன் அழறிங்க? ..

எதுக்காக அந்த அம்மா உங்கள திட்டிட்டு போறாங்க...?
ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க அதுக்காக இப்படி பொது வெளியில் அழாதிங்க"…. என்று அவன் கூறி முடிக்கும் முன்பே

அழுதபடியே…இருந்த வானதி கோபத்தில் அவனை மரியாதையில்லாமல் பேச தொடங்கினாள்...
"நீ பேசாத எல்லாம் உன்னால தான் முதல் தடவை உன்னை பார்த்தேன் அன்னைக்கும் நான் அழுதேன் இப்போ ரெண்டாவது தடவை பார்க்கிறேன் இன்னைக்கும் நான் அழறேன்! ...

என்னை அழ வைக்கனும்னியே நீ வருவியா அன்னைக்கு என்னை கீழே தள்ளி விட்டு என் ஃபிரண்டோட கல்யாணத்துக்கு தான் என்னை போக விடாம பண்ணின..
ஆனா இன்னிக்கு நீ என்னோட கல்யாணமே நடக்க விடாம பண்ணிட்ட...
உனக்கு இப்போ சந்தோஷமா இங்கிருந்து போ"….என்றவள்...அவன் எதும் பேசாமல் அவளையே பார்த்த வண்ணம் இருக்க..
"நீ போகமாட்ட? அப்போ நான்
போறேன்!" ….என்றவள் அழுதபடியே

"எனக்கு வழி விடு "என்றபடி கோபத்தில் சிவந்த முகத்துடனும்…. கலங்கிய விழிகளுடன் அவனை விட்டு வேகமாக எழுந்து சென்றாள்….

நடந்த சம்பவங்கள் ஒன்றுமே புரியாமல் முழித்தவன்...அழுதபடியே சென்று கொண்டிருந்த அவளைப் பார்க்கும் பொழுது அவனின் மனதில் ஏதோ ஒரு பாரம் ஏறி நின்றது….

ஆயிற்று இச்சம்பவம் நடந்து சரியாக மூன்று மாதங்களுக்கும் மேலாக அதன் பிறகு அந்தப் பெண்மணி உன் மகளுக்கு என்னால் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேட இயலாது என கூறிவிட்டு சென்று விட்டார்…

வானதி கோவிலில் நடந்த விஷயம் எதையும் தனது தாயிடம் கூறவில்லை
புரோக்கர் பெண்மணி பேசியதை சொன்னாலோ அல்லது மாப்பிள்ளை வீட்டார் பேசியதை சொன்னாலோ தனது தாய் தேவையில்லாமல் கலங்குவாரே என்று எண்ணியபடி அந்த விஷயத்தை முற்றிலும் தாயிடம் இருந்து மறைத்தாள்.

தேவகிக்கு இவளிடம் நேரடியாக கேட்க சற்று பயம் ஏன் என்றால் எதையும் மறையாது தனது தாயிடம் கூறிவிடும் பெண்... தனக்கு ஒரு பையனைப் பிடித்து இருக்கிறது என்றால் அதை முதலில் கண்டிப்பாக தேவகியிடம் மட்டுமே கூறி இருப்பாள்…

அவள் இதுவரை அப்படி எதுவுமே கூறவில்லை என்னும் பொழுது தாய் எப்படி வலிய சென்று அவளிடம் விசாரிப்பது என தேவகியும் அவ்விசயத்தை அப்படியே விட்டுவிட்டாள்…

இன்று வியாழக்கிழமை...உடல் நலம் சரியில்லை என விடுப்பு எடுத்திருந்தாள்...மிகவும் சோர்வாக உணர்ந்தாள் வானதி...சில நாட்களாகவே மனம் மிகவும் பலகினமடைவதாக வானதிக்கு தோன்றியது.. கோவில் சென்று வந்தால் சற்று ஆறுதல் கிடைக்கும் என நினைத்து தனது தாயிடம்

"அம்மா நான் கோவிலுக்குப் போயிட்டு வரேறேன்"..

"சரிமா போயிட்டு சீக்கிரமா வா"..என்ற தேவகிக்கு தனது மகளை நினைத்து சிறு கலக்கம்.

வழக்கம்போல் அன்றும் சாய்பாபா கோவிலுக்கே சென்றாள் காலணியை அதன் இடத்தில் வைத்தவள்.. ஒரு நெய் தீபத்தை வாங்கி ஏற்றியபடி கோவிலின் உள்ளே செல்லும் நேரத்தில் கண்கள் தானாக அந்த மண்டபத்தின் தூண் அருகில் சென்று திரும்பியது…..

அவள் உள்மனம் எதை ஏதிர் பார்த்ததோ...அதுவே அவளின் கண்களுக்கும் கிடைத்தது...கைகளை கட்டிய படி அவளையே பார்த்தபடி ஸ்ரீதர் நின்று கொண்டிருந்தான்…

தொடரும்....
 
Top