கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காத்திருந்த காதல்-4

Akila vaikundam

Moderator
Staff member
4

அவனைப் பார்த்ததும் சற்று பதட்டத்துடன் கோவிலின் உள்பிரகாரத்திற்க்குள் வேகமாக நுழைந்தாள்... கண்களை மூடி தனது பதட்டத்தை தணித்துக்கொண்டு.. ஒருவிதக் கலக்கத்துடனே சுவாமி தரிசனம் முடித்தவள் வெளியே வந்தாள்..

வெளியில் வரும் வழியிலேயே ஸ்ரீதர் நின்று கொண்டிருக்க அவனை காணாததுபோல் அவனை தாண்டி சென்றாள் ..

"ஹலோ ஒரு நிமிஷம் நில்லுங்க"!.."
அவனை அழைத்ததை கவனிக்காதது போல் வானதி வேகமாக செல்ல இவனும் அவளின் பின்னே வேகமாக சென்று அவளின் முன்பு வழி மறிப்பது போல் நின்றான்

"ப்ளீஸ் கொஞ்சம் நிக்கறீங்களா சகிக்கல ஏதோ டீனேஜ் புள்ளைங்க மாதிரி இப்படி பிகேவ் பண்ணறது".. என்று சொன்னவனை … முறைத்தவள்
"எதற்காக நிக்கணும் !நீங்க யாரு?.. உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்.. உங்க கூட பேசி எனக்கு ஆனதெல்லாம் பத்தாதா இன்னும் வேற ஏதாவது நடக்கணும்னு ஆசைப்படுறீங்களா?"...என்று கோபத்துடன் கேட்டாள்…..

"என் கூட பேசி அப்படி என்னங்க ஆச்சு கொஞ்சம் தெளிவா புரியற மாதிரி சொல்லுங்க!
ஏங்க அன்னைக்கு என்ன நடந்துச்சுனு நீங்க பாட்டுக்கு அழுதுகிட்டு போறீங்க ...அந்த அம்மா வேற என்னமோ சொல்லிட்டு போனாங்க….என்னால உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா?…
என்னால தான் உங்களுக்கு பிரச்சனைனா அது என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சுக்கணும் அப்போதான் அதை என்னால சரி பண்ண முடியும் அதை தெரிஞ்சுக்க தான் மூணு மாசமா கன்டினியூவா இந்த கோயிலுக்கு வந்துட்டு இருக்கேன் இன்னையோட பதிமூன்றாவது வியாழக்கிழமை,
இந்த பதிமூன்று வியாழக்கிழமையும் வாராவாரம் இதே மண்டபத்தில் நீங்க வருவீங்கன்னு காத்துட்டு இருக்கேன்... அன்னைக்கு அழுதுட்டே போன அந்த முகம் என்னை என்னமோ பண்ணிடுச்சு... ரொம்ப டிஸ்டர்ப்ங்க….கண்ணை மூடினாலே அந்த முகம் தான் நியாபகத்துக்கு வருது,
ரெண்டு முறை உங்களை நான் பார்த்திருக்கேன் ரெண்டு முறையும் எனக்கு உங்களோட கலங்கிய முகம் தான் தரிசனம் கிடைத்தது...ஒரு முறை உங்களோட சிரிச்ச முகத்தை பார்த்தாலே போதும்ங்கற மாதிரி ஒரு எண்ணம்..
நீங்க அழுததுக்கு காரணம் எல்லாம் சொல்ல வேண்டாம் அன்னைக்கு நீங்க அழுதுட்டு போனதற்கு நான்தான் காரணம்னு நீங்க நினைச்சா என்னை மன்னிச்சிடுங்க என்னை சந்தித்ததால தான் பிரச்சனைன்னு சொன்னீங்க அதனால இனிமே நான் உங்களை என்னைக்குமே எப்பவுமே சந்திக்க மாட்டேன் அதை சொல்லிட்டு போகத்தான் இத்தனை நாள் இந்த கோவிலுக்கு வந்து நான் காத்துக் கிடந்தேன் இன்னைக்கு உங்கள பாத்துட்டேன் சொல்லிட்டேன் சரி போயிட்டு வரேங்க….
ஆனா என்னால ஏதோ உங்களுக்கு பிரச்சினைனு மட்டும் தெரியுது...அது என்னனு சொல்லவும் உங்களுக்கு பிடிக்கல அதும் புரியுது பரவால்லங்க...முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும் இனி அதை பேசி மறுபடியும் உங்க மூட் ஸ்பாயிலாக வேணாம்...எதுவா இருந்தாலும் மறந்திடுங்க அதான் நல்லது...
இப்போ நான் ஏதாவது தப்பா பேசி உங்களை காயப்படுத்தி இருந்தா அதற்கும் சேர்த்து என்னை மன்னிச்சிடுங்க"..என்று சொன்னவன் அவளைக் கடந்து வேகமாக முன் சென்றான்...சில வினாடிகள் அவ்விடத்திலே நின்ற படி அவனையே பார்த்து நின்றவளின் மனமோ அவனின் பின் செல்லலாயிற்று….
இச்சம்பவம் நடந்து இருவாரங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கூட அவளின் மனம் மட்டும் அவனிடத்தில்…

மீண்டும்,மீண்டும் அவனையே நினைத்துக் கொண்டிருந்தவளாள் அவளின் இயல்பு வாழ்க்கை பாதிக்க ஆரம்பித்தது...அவனை நேரில்பார்த்தால் மட்டுமே அவளின் என்ன ஓட்டத்தைத் தடை செய்ய இயலும் என்னும் நிலைக்கு ஆளானாள். அவனைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு இருந்ததாலோ என்னவோ அவள் அலுவலகம் சென்று வரும் பொழுது எதிரினில் அவனைக் கண்டாள்‌..

கைகளில் எதோ அட்டை பெட்டி யில் ஏதோ கணமான பொருளைத் தூக்கிக் கொண்டுவந்தவன் எதிர்புறம் அவளைக் காணவும் என்ன செய்யதென்று தெரியாமல்
தலை குனிந்தபடி அவளைக் கடந்து சென்றான்..
இம்முறை அவனின் பின் செல்வது அவளின் முறையாயிற்று…

தொடரும்...
 
Last edited:
Top