கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காத்திருந்த காதல்-5

Akila vaikundam

Moderator
Staff member
5

"ஸ்ரீதர் சார் ஒரு நிமிஷம் நில்லுங்க"!..

கையில் இருக்கும் கனமான பொருளின் சுமை ஒருபுறம் இவளின் அழைப்பு மறுபுறம்…. திரும்பி பார்த்தவனின் முகத்தில் சிறிதளவு கூட சினேகம் இல்லை…அவ்வளவு இறுக்கம்..

அவனின் முகத்தை பார்த்தவளின் மனம் அவளையும் மீறி உடைய ஆரம்பிக்கவும்.. கண்கள் தானாக கலங்கியது…

'ம்ம்ச்சு…..இப்போ எதுக்கு இவ முஞ்சி இப்படி போகுது'? ...என் மனதிற்க்குள் சலித்தவன்...

"அவளின் கலங்கிய கண்களை பார்த்தபடியே இதுக்குதாங்க உங்கள நா கடந்து போனது ...என்னனு சொல்லுங்க...கை வலிக்குது...நிறையா வேலை இருக்குது"...என சலிப்பாக கூறவும்…

கோபத்துடன் "இல்ல சார் ஒன்னும் இல்ல நீங்க போங்க ….ஏதோ அன்னைக்கு எனக்காக கவலை பட்டு பேசனிங்க...
சாரி கேட்ட உங்களுக்கு நா பதில் கூட சொல்லல...ஒரே கில்ட்டி பீல்...அதுமில்லாம கோவமா வேற போனிங்க அதான் உங்கள பார்த்தா அன்னைக்கு நீங்க கேட்ட சாரி அக்ஸெப்ட் பண்ணிட்டேனு சொல்லனும் தோனிச்சி...அப்புறமா முதல் தடவை உங்களை மரியாதை இல்லாம பேசினதுக்கு சாரி கேக்கணும்னு தோனிச்சி ...

ஆனா அதுக்கெல்லாம் உங்களுக்கு நேரமில்லைனு இப்பதான் தெரியுது...தெரியாம கூப்பிட்டுட்டேன் போங்க"...என்றவள் திரும்பி நடந்தாள்…

"ஹலோ கேக்கனும்னு சொல்லிட்டு கேக்காம போறிங்களே"? ...என இவன் சற்று சத்தமாக கத்தவும்

முன் சென்ற வானதி அங்கிருந்தபடியே "என்ன கேக்கணும்"?.. அவளும் சத்தமாகவே கேட்டாள்

"அதாங்க சாரி….
ஆமா இவ்ளோ நாள் கழிச்சி ஏன் சாரி கேக்கணும் "?.என ஆச்சரியமாக கேட்டான்…

அதற்கு வானதி "இப்போ உங்களுக்கு கை வலிக்கலையா?...வேலை இல்லையா "?என திருப்பிக்கேட்டாள்…

அவளின் பதிலைக் கேட்டு சிரித்தவன்…."கேள்விக்கு இன்னும் பதில் வரல...பேச்சை மாத்தறிங்க சரி ஒகே....இப்படியே ரோட்டில நின்னுகிட்டு எல்லாருக்கும் ஃபீரி ஷோ வா"? ….என சுற்றிலும் கண்களால் ஜாடை செய்தான்…

அவனின் ஜாடையை கவனித்தவள் தர்மசங்கடத்தில் நின்ற இடத்திலே நெளிந்தாள்….
"அப்படியே பின்னாடி வாங்க"... என்று கூறியவன் அவளை திரும்பிப் பார்க்காமலே முன் சென்றான்..
மந்திரத்திற்கு கட்டுபட்டவள் போல் இவள் பின் தொடர்ந்து சென்றாள்.. அவனின் கார் டிக்கியில் அட்டை பெட்டியை வைத்தவன்..

"நீங்க இப்போ ஃபீரினா என்னோட வந்து ஒரு ஃகாபி குடிக்கலாமே"!…என்று கேட்டான்.

"ம்ம்..சரி" .. என்றாள்.

"அப்போ வாங்க அந்த பக்கம் ஒரு ஃகாபி ஷாப் இருக்கு ஃகாபி நல்லா இருக்கும்"…என்று அழைத்துச் சென்றவன்
இருவருக்கும் ஒரு டேபிளை தேர்வு செய்து அவன் ஏதிரே அமர வைத்தான்.

பிறகு "நீங்க என்ன இந்தபக்கம்"?...என கேட்டான்

"என்னோட ஆபிஸ் இந்த பக்கம்தான்...நீங்க"?..என அவனை திருப்பி கேட்டாள்.

"என் ஸ்கூல்ல படிக்கற ஒரு பொண்ணோட பேரண்ட்ஸ் க்கு கொஞ்சம் திங்க்ஸ் கேட்டாங்க..அதான் வாங்கிட்டு போலாம்னு ...ஒவ்வொன்னு ஒவ்வொரு பக்கம் கிடைக்கறதால வண்டிய ஒரு பக்கமா பார்க் பண்ணிட்டு மெதுவா நடந்து போய் வாங்குவேன்...அத விடுங்க உங்க பேர் என்ன"?..

"வானதி சார்"..

"ம்ம் சரி வானதி இப்போ சொல்லுங்க .... என்கிட்ட என்ன கேட்கணும்"! என்று கேட்கவும் குழப்பமாக முழித்தாள்...

"அதாங்க சாரி கேக்கனும்னிங்களே..ஆனா எதுக்குன்னு மட்டும் சொல்லுங்க" என்று புன்னகைத்தபடி சொன்னான்…

"ஒஒ அதுவா"... என்று சிரித்தவள்
"முதல் தடவை மரியாதை இல்லாம பேசிட்டேன் ரெண்டாவது முறை காரணமே இல்லாம உங்ககிட்ட எரிஞ்சி விழுந்துட்டேன்...அதும் இல்லாம என்னால வருத்தபட்டுட்டு போனிங்களா... அப்போ இருந்து உங்க நியாபகமாகவே இருந்தது...உங்கள எப்படா பாக்கலாம்னு இருந்தது...
உங்களை பார்த்ததும் அந்த இடத்திலேயே உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்னு தோணுச்சு ஆனா இன்னைக்கு பார்த்ததும் எனக்கு பேசவே வாய் வரல...கொஞ்ச நாளாவே என் மனசுக்குள்ள காரணமே இல்லாம உங்க முகம் வந்து வந்து போகுது அதுக்கு என்ன காரணம்னு எனக்கு தெரியல உங்களுக்கு என்னை பற்றிய ஞாபகம்....அதாவது என் முகம் ஏதாவது நியாபகத்துக்கு வருதா? அப்படி வந்தா அதுக்கு என்ன அர்த்தம்னு எனக்கு தெரியல உங்களுக்கு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுறீங்களா?" என அவனின் முகத்தைக் காண
அவனின் முகம் பாறைபோல் இறுகியது..

அவள் என்ன கூற வருகிறாள் என புரிந்தவன் பதில் பேசாது ஆர்டர் செய்த ஃகாபி வர அமைதியாக குடித்தவன் ஏதும் பேசாமலே பில் தொகையினை வைத்தவன்
"நா உங்களை மன்னிச்சிட்டேன்‌...இனி அதைப்பற்றி யோசிக்காதீங்க..
சரி நீங்க கிளம்புங்க வானதி..எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு" எனக்கூறியவன் அவளின் பதிலை எதிர்பாராது வெளியேறினான்…

செல்லும் அவனை ஏமாற்றத்துடன்பார்த்துக் கொண்டிருந்தவள்...மனதின் ஏக்கம் அதிகரித்தே தவிர குறையவில்லை

தொடரும்...
 
Top