கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காத்திருந்த காதல்-6

Akila vaikundam

Moderator
Staff member
6

அவனை நேரில் காணும் போது அவனிடம் பேச வேண்டும் என நிறைய கற்பனைகள்…அவனின் செயல்கள்
அணைத்தையும் பொய்யாக்கிவிட.. ஏமாற்றதுடனே வீடு வந்தாள்..

வீட்டிலோ அவளின் தாய் தேவகி சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தாள்.. இவளின் வரவை எதிர்பார்த்தபடி…

உள்ளே வரவும் புரோக்கர் பெண்மணியுடனான உரையாடல் வாசலைத்தாண்டி கேக்கவும்..ஆச்சர்யத்துடன் அவளின் அம்மாவிடம் கேட்டாள்…

"என்னமா விஷேசம்"?.." இவ்ளோ சவுண்ட்..ரோட்டுக்கு கேக்குறது உன் வாய்ஸ்"…

"அட வானதி வந்துட்டியா"!….

"யாரு வந்திருக்காங்கனு பாரு"…."ஆன்டிய வாங்கனு கேளு" …

அன்று கோவிலில் அப்பெண்மணி நடந்து கொண்ட முறை தெரிந்தும்கூட தாய் சொன்ன காரணத்திற்க்காக…

"ம்... வாங்க ஆன்ட்டி.என்ன விசயமா வந்திங்க"?..என்று சிறு கோபத்துடனே கேட்டாள்…

அப்பெண்மணி சிரித்தபடியே "இப்போதான் வரியாமா... அம்மாட்ட விவரமா சொல்லிருக்கேன் கேட்டுக்கோ எனக்கு இப்போ வேலை இருக்கு" என்றபடி கிளம்பிவிட்டார்...

தேவகி சந்தோஷத்துடனே சிக்கிரமா "கை,கால் கழுவிட்டு வா...சூடா பாயசம் செஞ்சிருக்கேன் சாப்பிட வா"..என்றபடி சமையல் அறை செல்ல பின் சென்றவள்..

"முதல்ல என்ன விஷயம் மா அத சொல்லுங்க" என எரிந்துவிழுந்தாள்…

"பாத்தியா சந்தோஷத்தில் அதை சொல்ல மறந்துட்டேன்... அன்னைக்கு உன்னை பார்த்துட்டு வேணாம்னு போனாங்கல்ல...இப்போ அந்த சம்மந்தம் தானா தேடி வந்திருக்கு"...என்றாள்..

இவளுக்கோ தற்போதைய மனநிலையில்
"என்ன திடீர்னு"…

"அது ஒன்னும் இல்லமா இந்த மூனுமாசமா வேற பொண்ணு பாத்திருக்காங்க..ஒன்னும் சரியா அமையலபோல அதும் இல்லாம மாப்பிள்ளைக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு"…

"நா அவளை சரி பண்ணிக்கறேன் திருமணத்துக்கு ஒரு பவுன் மட்டும் சேத்திபோடுங்கனு சொல்லிருக்காருமா......நாம சரினு சொன்னா போதும் உடனே வந்து நிச்சயம் பண்ணிக்கறாங்களாம்….

இப்போ தான் இந்த சந்தோஷமான விஷயத்தை அக்கா வந்து சொன்னாங்க..சொன்னதும் எனக்கு கையும் ஓடல..காலும் ஓடல..அதான் பாயாசம் பண்ணினேன்" என தேவகி சொல்லிக்கொண்டே செல்ல இவளுக்கு அணைத்தும் புரிய ஆரம்பித்தது…

"ஒஒஒ பத்து பவுன் தான் பிரச்சனையா...என்னவோ அன்னைக்கு அவ்ளோ பேசினாங்க இன்னைக்கு நா நல்ல பொண்ணு ஆயிட்டேனாமா?..
ஆமா அது என்ன கல்யாணத்துக்கு அப்புறமா என்னை சரி பண்ணறது?….எனக்கு புரியல இதை ஏன் அந்த மாப்பிள்ளை சொல்றான்…..
இரு அவனுக்கு ஒரு நாள் இருக்கு" என்றவள்…...

"அந்த புரோக்கர் ஆன்ட்டி அன்னைக்கு உன்னை எப்படியெல்லாம் கோவில்ல திட்டினாங்க தெரியுமா...எந்த முஞ்சிய வச்சிகிட்டு இங்க வந்தாங்களாம் நீ என்னனனா பாயசம் வச்சி தர்ற போ மா"...என்று சலித்தபடியே இவள் உள்ளே சென்றாள்..

சற்று பயத்துடனே பின் சென்ற தேவகி "இங்க பாரு வானதி உனக்கு ஒரு வாழ்க்கை அமையாதானு நா போகாத கோவில் இல்ல ...இப்போ அவங்களே தேடி வர்றாங்க வேணாம்னு சொல்லாதமா….ஏதோ பேச்சி வாக்குல அந்த தம்பி ஏதோ பேசிடுச்சி போல அது ஏன்னு நா மெதுவா விசாரிக்கிறேன்..நீ மட்டும் வேணாம்னு சொல்லிடாத ராஜாத்தி" என தேவகி அவளிடம் கெஞ்சினாள்..

"ம்மா...கொஞ்சம் டைம் குடும்மா...எனக்கு இப்போதைக்கு இதெல்லாம் வேணாம்னு தோனுது கொஞ்சநாள் போகட்டுமா" என ஸ்ரீதரை மனதில் வைத்துக்கூறினாள்..

ஆனால் அவளின் மனதை அறியாத தேவகி "இங்க பாரு வானதி இனி உன்னைநான் கெஞ்ச போறதில்ல….உனக்கு பத்து நாள் தான் டைம் அதுக்குள்ள நல்ல முடிவாச்சொல்லு."..என்று கோபமாக கூறிய படி உள்ளே
சென்றாள்.


"ம்ம்மா...ஏம்மா இவ்ளோ கோபபடற...இப்போ நகைக்கு என்னமா பண்ணுவ….அவங்க கேக்கற அளவுக்கு நம்ம கிட்ட இல்லையே"…

"அதப்பத்தி உனக்கென்ன அம்மாக்கு எல்லாம் தெரியும் ...என்ன பண்ணணும்னு ....
நீ கவல படாம கல்யாணத்துக்கு மட்டும் சம்மதி….
பணத்துக்கு என்ன பண்ணனும்னு அம்மாவுக்கு நல்லாவே தெரியும்...
நீ தேவையில்லாம பயப்படாத...
நா என்னவோனு நினைச்சி பயந்துட்டேன்!!
என் தங்கம்ல என் பொண்ணு‌.... என்று செல்லம் கொஞ்சிய தேவகி அவளின் கன்னத்தை தன்னிருகைகளால் தாங்கிய படி இதனால தான் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேங்கறியா இப்பவே நா போய் அந்த அக்கா கிட்ட உனக்கு சம்மதம்னு சொல்லிட்டு வரேன்" என்றவர்..
விறுவிறு வென சென்றுவிட….
ஸ்ரீதரின் மீது கொண்ட ஒருதலைக் காதலை உணர்ந்தும் வேறுவழியில்லாமல் திருமணத்திற்கு தயாரானாள்…வரும் வாரத்திலேயே தங்களுக்கு தோதான ஒருநாளில் அவர்கள் மீண்டும் அவளை பார்ப்பதாக சொல்லிவிட மானசீகமாக அந்த நாள் தன் வாழ்க்கையில் வரவே கூடாது என வேண்டிகொண்டிருந்தாள்.
ஆனால் காலம் யாருக்கும் காத்திருக்கா வண்ணம் திரும்பி பார்ப்பதற்குள் வந்தது அந்த வார வியாழக்கிழமை ..

காலையிலேயே தேவகி பரபரப்புடன் காணப்பட வானதியோ எதையும் கவனிக்காதவாறு அலுவலகம் செல்ல தயாராகி கொண்டிருந்தாள்...இதை கவனித்த தேவகி வானதியிடம்
"வானதி நீ இன்னைக்கு ஆபிஸ் லீவ் சொல்லிடுமா இன்னைக்கு கோவிலில் உன்னை பெண் பார்க்க வாங்க"….தாயின் இந்த தீடிர் தாக்குதலை எதிர்பார்க்காதவள் அதிர்ச்சியில்

"என்னமா நீ விளையாடுறியா"?
"இப்போ போய் சொல்லற பொண்ணு பார்க்க வர்றதா...ஏற்கனவே தான் என்னை பார்த்துட்டாங்கல்ல...அப்புறம் என்ன மறுபடியும்….முடியாது மா நா ஆஃபிஸ் போகனும்"…

"அதெல்லாம் எனக்குதெரியாதுமா..இப்போதான் மாப்பிள்ளை வீட்ல நேராகவே என் கிட்ட பேசினாங்க...அவங்க சொந்தத்தில் யாரோ உன்னை பார்க்கனுமாம்... அதற்க்காக ஊரில் இருந்து வந்திருக்காங்களாம்..நீ கிளம்பற அவ்ளோ தான்"...

"எப்படிமா இப்போ நா லீவ் சொல்லறது, ஓனர் திட்டுவாருமா...நா மாட்டேன்"...

"பொல்லாத வேலை! ஒனர் திட்டினா..எனக்கு கல்யாணம் நா இனி வேலைக்கு வரலனு சொல்லிட்டு"
"அம்மா இது அநியாயம்... மாப்பிள்ளை வீட்ல நான் வேலைக்கு போறதால தான என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துகிட்டாங்க..இப்போ நீ இப்படி சொல்லற"!…

"அதெல்லாம் மாப்பிள்ளை தெளிவா சொல்லிட்டாரு...கொஞ்ச நாளைக்கு நீ வேலைக்கெல்லாம் போக வேண்டாமாம்,அப்புறமா தேவைபட்டா போயிக்கலாம்னு"…

"வேலைக்கும் கல்யாணத்துக்கும் என்னமா சம்மந்தம்...வேலையை விட்டுட்டா நம்ம தேவைக்கு யாரும்மா வேலை தருவாங்க.? அப்புறம் உன்னை யாருமா பாத்துப்பா...நான் வேலைக்கு போனாதானம்மா உன்னோட தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்"..

"கூட கூட பேசாத வானதி இன்னைக்கு லீவ் போடற...நாளைக்கு வேலைக்கு வரலனு சொல்லிட்டு வர்ற... என்னைப் பார்த்துக்க எனக்குத்தெரியும்... கல்யாணத்துக்கு அப்புறம் நீ வேலைக்கு போய் தான் என்னை பாத்துக்கணும்னு அவசியம் இல்ல...இப்போ நீ கிளம்பு"…

"அம்மா உன்னோட" ...என்றவள் எந்த கோவில் அதையாவது சொல்லிட்டுப்போ

"அதே சாய்பாபா கோவில் தான்"…

காலை ஒன்பது மணி‌அளவினில் மாப்பிள்ளையின் வீட்டினர் ஒரு ஐந்துபேரும்...இவளின் பக்கம் புரோக்கர் பெண்மணியுடம்..தனது தாய் தேவகியும் வந்திருந்தார்…

அன்று போல் இன்றும் ஏதேனும் சங்கடங்கள் நேரக்கூடாதன வேண்டியபடி ஆலையத்தின் உள்ளேயே இருந்து கொண்டார்.

மாப்பிள்ளையின் குடும்பத்தாருக்கு முழு திருப்தி எனவும் அடுத்தவாரம் முறைப்படி நிச்சயதார்த்தம் விழாவை வைத்துக்கொள்ளலாம்..என்ற மாப்பிள்ளையின் தாயார் தான் கோண்டு வந்த பூவை வானதியின் தலையில் சூடிவிட்டார்..

அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்க வானதியின் மனம் மட்டும் எதையோ இழந்தது போல் வெறுமையாக, ஆர்ப்பரிக்கும் கடல் அலை போல் நிம்மதியின்றி இருந்தது…

"என்னமா கல்யாணப் பொண்ணே கொஞ்சம்தான் சிரியேன்"...என கூட வந்த பெண்மணி கேலி பேசவும் கடமைக்காக சிரித்தவள்...ஏனோ காரணமே இல்லாமல் அழுகை வந்தது….பற்களை கடித்து அழுகையை உள் இழுத்தவளால் அதற்கு மேல் அங்கு நிற்கப்பிடிக்காமல் தனது தாயைத் தேடிச்சென்றாள்.

"ஏய் ஏன்டி இங்க வந்துட்ட?...
அங்க தான உன்னை இருக்கச் சொன்னேன்
அங்க போய் நில்லு அவங்க ஏதாவது தப்பா நினைச்சுக்க போறாங்க "என்று வானதியின் தாயார் கூறினார்…

"ம்மா ப்ளீஸ் மா காரணமே இல்லமா அவங்களே பேசிக்கறாங்க..அவங்களே சிரிச்சிக்கறாங்க...எனக்கு அவங்க முன்னாடி நிற்க்கவே பிடிக்கல...நீ வேணா அங்க போ நா இனி வர மாட்டேன்...நா சாமி கூம்பிட்டிட்டு வர்றேன்" என்று தாயின் அனுமதி கேளாமல் இறைவனை வழிபட சென்றாள்..

சிறிது நேரத்திற்கெல்லாம் தேவகி ஓட்டமும் நடையுமாக வர இவள் ஆச்சர்யமாக பார்த்தாள்..

"ஏம்மா இப்படி ஒடி வர்ற அவங்க போய்ட்டாங்களா?
இல்ல வானதி அவங்க யாருமே காலையில் சாப்பிட்டுட்டு வரலையாம் பக்கத்துல எதாவது நல்ல ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு போகலாம்னு கூப்பிடறாங்கமா...அதான் உன்னையும் கூப்டிட்டு போகலாம்னு வந்தேன்மா..நீயும் கூட வா".
"நா இன்னும் சாமி கும்பிட்டு முடிக்கல நீ அவங்களோட போ"
"பரவால்ல நா எல்லா சாமியையும் நல்லாவே கூப்பிட்டுட்டேன் அதுவே போதும் நமக்கு நீ இன்னொரு நாள் வந்து மிச்ச சாமிகளை கும்பிட்டுக்கோ" ..என்றாள்..

" ம்மா...உன்னோட...நிம்மதியா சாமி கூட கும்பிட விடமாட்ட"என்று சலித்தவள்...
"ஏன்மா அவங்க வீட்ல போய் சாப்பிட்டுக்க சொல்ல வேண்டியது தான...உண்மைய சொல்லுமா நீ தான அவங்கள சாப்பிட கூப்பிட்ட"?
"போடி இவளே பொண்ணு வாழ போற வீடு அவங்களுக்கு ஒரு நாள் சாப்பாடு வாங்கித்தந்தா ஒன்னும் குறைஞ்சிட மாட்டோம்"..
"அம்மா ஹோட்டல் னா நிறையா செலவாகும்மா...உன் கிட்ட இப்போ அவ்ளோ பணம் இருக்கா"?
"அதெல்லாம் இருக்குமா..நா காலைல வரும்போது எடுத்துட்டு தான் வந்தேன்...சரி வா அவங்க வெயிட் பண்ணறாங்க பாரு"….

"அம்மா எனக்கு பசியில்ல...நீ போய்ட்டு வா...நா கோவில்ல வெயிட் பண்ணறேன்"...

"வானதி தயவு பண்ணி என்னோட வாம்மா மாப்பிள்ளை உன்னையே பாக்கறாரு...ஏதாவது நினைச்சிக்க போறாரு" என்னவளின் மனதில் எங்கே தனது மகளை மறுபடியும் பிடிக்கலனு சொல்லிடுவிடுவார்களோ என்ற பயம் இருந்தது...

"அவங்க என்ன வேணாலும் நெனச்சுக்கிட்டும் நான் வரமாட்டேன் என்ன பெரிசா பண்ண போறாங்க?...
மறுபடியும் பிடிக்கலன்னு சொல்லிட்டு மூணு மாசம் கழிச்சு வந்து நிற்க போறாங்க அவ்ளோதான ஒன்னும் பிரச்சனை இல்லை,அவங்க என்ன என்ன பிடிக்கலைன்னு சொல்றது நான் இப்ப சொல்லிக்கிறேன் எனக்கு அவன பிடிக்கல போக சொல்லு நான் உன்னோட சாப்பிட வறேன் என்று முகத்தை கடுமையாக வைத்தபடி கூறினாள்.

மகளின் இந்த பேச்சி ஓருவித பயத்தை கொடுக்க மேற்கொண்டு அவளிடம் வாதாடாமல் "உன்னை வச்சிகிட்டு நா என்ன பண்ண போறேனோ...உன்னை ஒருத்தன் கையில் புடிச்சி குடுக்கறதுக்குள்ள என் ஆவி போய்டும் போல...ஈஸியா பிடிக்கல போகச் சொல்லுங்கற இந்த வரன் மறுபடியும் வரனும்னு நான் எத்தனை சாமியை குப்பிட்டேனு உனக்கெப்படி தெரியும்?
நல்ல குடும்பம் வானதி, நல்ல வசதி , நீ எந்த வேலையும் செய்ய வேண்டாமாம்...கேக்கவே எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா
இவங்க வீட்டுக்கு மட்டும் நீ போனா ராணி மாதிரி வாழலாம் யோசிச்சு பாரு அம்மா ஒரு வேலைக்காரி ஆனால் இந்த வேலைக்காரியோட மகள் வாழப்போற வீட்டுல எல்லாத்துக்குமே வேலைக்கு ஆள் இருக்கறாங்க...நினைத்து பார்க்கவே எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா... அதை ஏதாவது பண்ணி கெடுத்து வச்சிடாத...
கொஞ்சம் சிரிச்ச முஞ்சியா வந்து அவர்களை வழியாவது அனுப்பிவை ...மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்"..
என்று அவளை போராடி அழைத்துச் சென்றாள்.

சம்பிரதாயமாக அனைவரையும் புன்னகைத்து அனுப்பிவைத்தவளுக்கு தலை வலிக்க ஆரம்பித்தது.

சிறிது நேரம் எங்காவது அமரலாம் என இடம் தேட கண்ணில் பட்டது அவளும் ஸ்ரீதரும் இருமுறை அமர்ந்திருந்த அந்த மண்டபத்தின் தூண் .

அந்த மண்டபத்தின் தூணைக் காணவும் அவளுக்கு தானாக ஸ்ரீதரின் ஞாபகம் மனதில் வந்து உட்கார்ந்து கொண்டது..

தலைவலியுடன் மனதின் பாரமும் சேர்த்துக்கொள்ள சோர்வுடன் வந்து அந்த மண்டபத்தில் இருந்த தூணில் சாய்ந்தபடி கண்மூடி அமர்ந்தாள்.

சிறிது நேரத்திற்கு எல்லாம் தன் அருகில் யாரோ வந்து அமர்வது போல் எண்ணம் தோன்ற

"ம்மா அதுக்குள்ள நீ வந்துட்டியா" என கேட்டபடியே கண் திறந்தாள்…
ஆனால் அருகினில் அமர்ந்து இருந்தது அவளது தாய் தேவகி அல்ல ஸ்ரீதர்..

தொடரும்....
 
Top