கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காத்திருந்த காதல்-7

Akila vaikundam

Moderator
Staff member
7

அவனைக்கண்டதும் கவலை மறந்து சிரித்தவள் ...உடனே சிரிப்பை தொலைத்து விட்டு அமைதியாக தலைகுனிந்தாள்..

"என்ன ஆச்சு?...பெரிசா ஒரு ஸ்மைல்..பின்னாடியே இவ்ளோ பெரிய
சைலண்ட்..ம்ம்"...என் புருவம் உயர்த்தி கேட்டான்..

"ஆமா பேசுவிங்க அப்புறமா கோவமா எதும் சொல்லாம கிளம்பி போயிடுவீங்க காரணம் தெரியாம நான் தான் முழிச்சுட்டு இருக்கணும்"..

"ஓ காபி ஷாப்ல நடந்ததை மனசுல வெச்சுட்டு பேசுறீங்களா...அது ஒன்னும் இல்ல அன்னைக்கு சின்னதா மைண்ட் டிஸ்டர்ப் அதான் கிளம்பி போயிட்டேன்.. அதுக்காக பெருசா ஒரு சாரி போதுமா"..

"சரி உங்க விஷயத்துக்கு வரலாம்
என்ன இது?
எப்ப பார்த்தாலும் ஏதாவது ஒரு சோகம்
ஒரு தடவை கூட இந்த முகத்தில் ஒரு பிரைட் ஸ்மைலேயே பாக்கலையே? என்ன காரணம் தெரிஞ்சுக்கலாமா"... என்றவனிடம் தன்னை இன்று பெண் பார்க்க வந்ததை சொல்வதா வேண்டாமா என யோசிக்கும் போதே அவன்

"வெயிட் மா அத கேக்க நீ யாருன்னு கேக்காத"…. எதோ ஒன்னு மறுபடியும் மறுபடியும் உங்களை சந்திக்க வைக்கிறது அந்த உரிமையில் தான் கேட்கிறேன் விருப்பம் இருந்தா சொல்லுங்க இல்லன்னா
வேணாம்"..என்றான்.

"மறைக்கிற அளவுக்கெல்லாம் பெருசா என்கிட்ட ஒன்னுமில்ல எனக்கு ஒரு சின்ன குழப்பம் அதான் அப்படியே உட்கார்ந்து இருக்கேன்"….என்றாள்.

"ஒஒ அப்போ சரி அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி "என்றவன்

"இப்ப நான் உங்களோடு பேசிட்டு இருக்கும்போது யாராவது வந்து உங்களை திட்டி நீங்க உடனே அழுதுட்டு அப்படி எல்லாம் ஓடிட மாட்டீங்களே"..

"இல்லல்ல... இன்னைக்கு என்னை தேடிட்டு அம்மா தான் வருவாங்க...அதனால நீங்க தைரியமாகப் பேசலாம்.".
"சரி சொல்லுங்க முகத்தில் ஒரு சோகம் குழப்பம்"…
"பெருசா ஒன்னும் இல்ல உங்களை முதல் தடவையாக இந்த இடத்தில் வைத்து பார்த்தேன் இல்லையா அன்னைக்கு தான் என் பொண்ணு பாக்க வந்திருந்தாங்க"…

"ஒஒஒஒ"….

"அப்புறம் நான் உங்களோட பேசிட்டு இருக்கிறது பார்த்து அவங்க... உங்களையும் என்னையும்"… என்று சொல்ல தயங்கியவள்

"உங்களையும் என்னையும்"…என்று மேற்கொண்டு கூற அவளை ஊக்குவித்தான்..
மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொண்டே சொல்ல ஆரம்பித்தாள்…

"நம்ம பேசிக்கொண்டிருப்பதை பாத்துட்டு நம்ம ரெண்டு பேருக்குள்ளே என்னவோ இருக்குன்னு நினைச்சு என்ன வேணான்னு சொல்லிட்டு போயிட்டாங்க,
அதனால்தான் நான் அன்னைக்கு உங்ககிட்ட அழுதுகிட்டே கோவமா பேசிட்டு போயிட்டேன்"..

எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தவனின் உதடுகள் தானாக அவளிடம் மன்னிப்பு கேட்டது…

"சாரிங்க நா சாதாரணமாக தான் பேசினேன் அன்னைக்கு உங்கள பெண் பார்க்க வந்தது எனக்கு தெரியாது.. என்னால் உங்களுக்கு அமைய இருந்த வாழ்க்கை தடைபட்டதற்க்காக என்ன மன்னிக்கனும்".

"பரவாயில்லைங்க...அவங்க இப்ப மறுபடியும் வந்து இன்னைக்கு என்ன பொண்ணு பாத்திருக்காங்க…. அடுத்த வாரம் நிச்சயம்"..

"ஒஒஒ சந்தோஷம் நா வர்றேங்க"... என்ற அவன் கிளம்ப எத்தனிக்கும் நேரம்

இவள் இடைமறித்து
"பார்த்தீங்களா இதுக்கு தான் நான் முதலில் உங்க கிட்ட பேச கூடாதுன்னு நினைச்சேன்"…

"இல்லங்க எனக்கு கோபம் அதிகமா வந்தா நானாக இருக்க மாட்டேன் ஏதாவது பேசிடுவேன்...அதனால் கிளம்பிடுவேன் எதாவது கோபத்தில் இருக்கும் போது சொல்லிட்டா அது சம்பந்தப்பட்டவங்கள ரொம்ப காயப்படுத்தும் அதனால தான் "…

"இப்போ எதற்க்காக கோபம்"?…என்று வானதி கேட்டாள்

"நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க அன்னைக்கு உங்கள வேணான்னு சொல்லிட்டு போனாங்க இன்னைக்கு மட்டும் எப்படி மனசு மாறி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க இப்போ உங்க மேல் இருந்த சந்தேகம் போயிடுச்சா"….
"அப்படி தான் இருக்கும் அம்மா என்ன சொல்றாங்கன்னா என்ன பத்தி எல்லார்கிட்டயும் விசாரிச்சாங்கலாம் எல்லாருமே நல்ல மாதிரின்னு சொன்னதால அவங்களே மனசு மாறி வந்ததா சொன்னாங்க"
"அப்புறமென்ன சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான சோகமாக ஏன் முகத்தை வச்சிருக்கீங்க"
"ல்ல...ஏதோ இடிக்கிது என்னனு தான் புரியல புரியலன்னு சொல்லறத விட சொல்ல தெரியல...

ஏன்னா முதல்ல வேணாம்னாங்க... அப்புறம் விசாரிச்சோம் நல்ல பொண்ணா இருக்கு விட மனசு வரலங்கறாங்க...சரினு மனசு ஏத்துகிட்டாலும் அம்மாகிட்ட ஏன் அதிகமா 10 பவுன் சேர்த்து போட சொல்றாங்கன்னு புரியல அதுவுமில்லாம எங்க அம்மா பொண்ணு தர மாட்டாங்கனு பயந்துக்கிட்டு பொண்ணு ராணி மாதிரி வீட்ல இருக்கலாம் எல்லாத்துக்குமே வேலைக்கு ஆள் போடுறோம் உங்க பொண்ணை கட்டி கொடுங்கன்னு எங்க அம்மா கிட்ட பேசி இருக்காங்க... அதுவுமில்லாம முதல்ல என்ன வேலைக்கு போகனும்னு சொன்னவங்க இப்போ வேலைக்கு போக வேணாம்னு சொல்லறாங்க முதல்ல அவங்க குடும்பத்தை ஏழ்மையா காமிச்சுக்கிட்டவங்க இப்ப ஏதோ ரொம்ப வசதி மாதிரியும் பாவப்பட்டு எனக்கு வாழ்க்கை கொடுக்கிற மாதிரியும் நடந்துக்கிறாங்க இதெல்லாம் எனக்கு சின்ன உறுத்தல் அவ்வளவுதான்
ஆனா இப்போ உங்கள பார்த்ததும் எல்லாம் எங்க போச்சினே தெரில அவ்ளோ ப்ரஷ் ஸா பீல் பண்ணறேன்" என்றாள்.
"ம்ம்..புரியுது...ஆனா உங்க வாழ்க்கை நீங்க தான் யோசிச்சு முடிவெடுக்கனும்"...
"அதான் என்ன முடிவெடுக்கறதுன்னு தெரியாம முழிக்கறேன்...நீங்க ஏதாவது சொல்லுவீங்கனு பாத்தா நீங்களும் ஒன்னும் சொல்ல மாட்டேங்கறீங்க"...என்று சலித்தவளிடம்

"சரி நான் ஒன்னு சொன்னா கேப்பீங்களா"?…

"கேக்கறேன் சொல்லுங்க"…

"அந்த மாப்பிள்ளை வேணாம்னு சொல்லுங்க"…

"ம்ம் சரி"…..

"இப்போவே "…
"ம்ம்"..என்றவளிடம்
"அப்புறமா உங்க மனசில இருக்கறதையும் அவங்க கிட்ட கேக்கணும்"...
"அது எதுக்கு பிடிக்கலனு சொன்னா பத்தாதா"?
"பத்தாது...இனி ஒரு பொண்ணை அவங்க வேணாமானு சொல்லறது,சில நாள் கழிச்சி வேணும்னு சொன்னதும் கட்டிகொடுப்பாங்கனு நினைக்கறதை நிறுத்தனும்...

கல்யாணத்துக்கு ஆணோட சம்மதம் மட்டுமில்ல பொண்ணோட சம்மதமும் முக்கியம்னு புரிய வைக்கனும்...
ஏழ்மையான குடும்பம்னா எப்படி வேணாலும் வளைக்கலாம்னு நினைக்க கூடாது...
ஒரு பொண்ணு பொது இடத்தில ஒரு ஆணோட பேசினாலே சம்பந்தப்பட்ட ரெண்டு பேருக்கும் ஏதோனு நினைக்கறது தப்புனு தெரியனும்...
அப்படியே அந்த பொண்ணு ஒரு ஆணோட பேசினா கூட அதை கண்டுக்காம பிடிக்கலனு நாகரீகமா சொல்லனும்,அதை விட்டுட்டு பொது இடத்தில அடுத்த வீட்டு பொண்ணை வாய்க்கு வந்த படி பேச கூடாதுங்கறதை புரிய வைய்ங்க...

இன்னைக்கு நீங்க அவங்களுக்கு சொல்லற பதில்ல இனி எந்த பொண்ணோட வளர்ப்பையும் தப்பா பேசக்கூடாது ..

வெறும் பத்து பவுன் நகை,ஒரு பொண்ணொட கேரக்டரை முடிவு செய்யாதுங்கறது அவங்களுக்கு புரியனும்...
ஆரம்பரமான வாழ்க்கை ஒரு பொண்ணுக்கு சந்தோஷம் தராது,மனசுக்கு புடிச்ச திருமண வாழ்க்கைதான் ஒரு பொண்ணுக்கு நிஜமான சந்தோஷத்தை கொடுக்கும்ங்கறது உங்க அம்மாவுக்கு புரியனும் அதான் சொல்லறேன்...

இப்போ தைரியமா ஃகால் பண்ணுங்க மனசில என்னலாம் தோனிச்சோ எல்லாத்தையும் கேளுங்க" என்று அவனின் மொபைல் ஃபோனை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

அவனின் இந்த வார்த்தைகளில் தைரியம் பெற்றவளாக அவளின் தாய் தேவகிக்கு அழைத்தவள்
"அம்மா நான் தான் வானதி இப்போ நீ எங்க இருக்கற"?..
"என்னடி கேள்வி...இது எல்லாரும் சாப்பிட போறோம்னு சொல்லிட்டு நானே வந்தேன்..சாப்பிட்டுட்டு இருக்கறோம் ஆமா எதுக்கு ஃபோன் பண்ணின,உன் ஃபோனை காலைல வீட்டிலயே வச்சிட்டு வந்தல்ல? இது யார் நம்பர்? புதுசா இருக்கு? ,".
"அம்மா இத்தனை கேள்விய ஒன்னா கேக்காத... எல்லாத்தையும் வீட்டுக்கு வந்து சொல்லறேன்...இப்போ ஃபோன் ஐ ஸ்பீக்கர்ல போடுமா" என்றாள்..
"அது எப்படி போடறது"?..
"அம்மா ஃபோனை மாப்பிள்ளை கைல கூடும்மா"…
"சரி"...என்றவள் மாப்பிள்ளையிடம்..
"மாப்பிள்ளை பாப்பா பேசனுங்கறா"
என்று அவளின் பட்டன் ஃபோனை அவனிடத்தில் கொடுத்தாள்…

"சார் கொஞ்சம் அத ஸ்பீக்கர் மோட்ல போட்டு அம்மாகிட்ட தாங்க"!...என்று உத்தரவிட்டவள்…

"அம்மா போட்டாச்சாம்மா"?..என்று கேட்டாள்.

"போட்டாச்சிடி இப்போ சொல்லு" அவளை கடித்து படி அனைவரின் முன்பும் வைத்தாள்…

"அம்மா எனக்கு அந்த மாப்பிள்ளையை பிடிக்கல எனக்கு இந்த கல்யாணம் வேணாம்.. அவங்க கிட்ட சொல்லிட்டு நீ கிளம்பி வாம்மா....அப்புறம் மாப்பிள்ளை சார் எனக்கு உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி".

"அது என்ன சார் பத்து பவுனு அதிகமா போட்டோ நான் உங்களுக்கு நல்ல பொண்ணா ஆயிட்டேன்ல?... அன்னைக்கு நான் தப்பா தெரிஞ்ச உங்க கண்ணுக்கு எப்படி சார் நா இவ்ளோ சீக்கிரமா நல்ல பொண்ணா மாறினேன்?".

"வெறும் நகை தான் என்னோட கேரக்டரை முடிவு பண்ணுதா? அப்புறம் என் அம்மா கிட்ட அன்னைக்கு என்ன சொன்னிங்க திருமணத்திற்கு அப்புறம் நீங்க என்னை சரி பண்ண போறிங்களா.?.. அப்படி என்ன தப்பு பண்ணினேன்? அப்படியே தப்பு பண்ணினா கூட எதுக்காக என்னை நீங்க சரி பண்ணனும்?...
என்னை ஏன் வேலைக்கு போக வேணாம்னு சொல்லறிங்க தெரியுமா"?….
"உங்க அடி மனசுல இருக்குற சந்தேகம்…
எங்க நான் வேலைக்கு போனா யார்கிட்டயாவது போய் விடுவேனோனு... அதனால தானே முதல்ல வேலைக்கு போற பெண்தான் வேண்ம்னு என்னை தேடி வந்துட்டு இப்போ வேணாம்னு சொல்லறிங்க…
உங்களமாதிரி சந்தேகப் பேயோட என்னால் காலம் புரா வாழ இயலாது‌...இந்த உறுத்தலோட உங்களை என்னால கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்களுக்கு ஓரு உறுத்தலான வாழ்க்கையை தர விரும்பல... எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் என்னை மன்னிச்சிடுங்க"…என்றவள் தனது தாயிடம்

"அம்மா பில் செட்டில் பண்ணிட்டு வீட்டுக்கு போ நான் வீட்டுக்கு வந்ததும் நாம மீதியை பேசிக்கலாம்" என்று கூறியபடி அலைபேசியின் அழைப்பை துண்டித்தாள்...

தொடரும்...
 
Top