கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காத்திருந்த காதல்-8

Akila vaikundam

Moderator
Staff member
8
அவள் பேசி முடிக்கும் வரை அமைதி காத்தவன்…
"எப்படிங்க என் மனசில் தோனினதை அப்படியே போட்டு உடச்சிங்க"என்று ஸ்ரீதர் கேட்டான்…

"அப்படியா!….தெரில ஶ்ரீதர்
இதெல்லாமே என் மனசில் இருந்த ஒரு உறுத்தல்,அம்மாக்காக ஒத்துக்கிட்டேன்"...

"ஒருவேளை இன்னைக்கு உங்கள பார்க்கலனா ஒரு உறுத்தலோடவே இந்த கல்யாணத்தை பண்ணிட்டு வாழ்ந்து முடிச்சிருப்பேனோ என்னவோ...உங்கள பாத்ததும் ஏதோ ஒரு தைரியம் நீங்க இருக்கீங்க நீங்க பாத்துப்பீங்கனு"...என்று கூறிக்கொண்டே வர அவளின் எண்ண ஒட்டங்கள் புரிய அதிர்ச்சி அடைந்தவனுக்கு வேர்க்க ஆரம்பித்தது…

அவள் போக்கிற்கு மனதில் தோன்றியதை கூறிக்கொண்டே வந்தவளுக்கு தான் உளறிகொண்டிருப்பது புரிய பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு அவளும் அதிர்ச்சியுடனே அவனின் முகபாவத்தை கவனித்தாள்..

"சாரி நா ஏதோ உளறிட்டேன்..
நான் என்ன சொல்ல வர்றேனா நீங்க சொன்னா என்ன வேணாலும் செய்வேன் கல்யாணத்தை நிறுத்த மாட்டேனானு சொல்ல வந்தேன்"...என்றவள்...
"சாரி மறுபடியும் உளர்றேன்" போல...
"இட்ஸ் ஓகே...நன்றி... நா சொன்னதும் கல்யாணத்தை நிறுத்தினதுக்கு, என் கண்ணு முன்னாடி ஒரு பொண்ணோட வாழ்க்கை அழிஞ்சி போறதை நா விரும்பல...அதனால தான் இந்த கல்யாணத்த நிறுத்த சொன்னேன் தேவையில்லாம கற்பனையை வளத்துக்காதீங்க" என்றபடி முகத்தை கடுமையா வைத்துக் கொண்டு கூறியவன் எழுந்து சென்று விட்டான்…

ஸ்ரீதரிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்று வானதிக்கே தெரியவில்லை ஸ்ரீதரின் இந்த வெட்டுதறிக்கும் பேச்சால் பெருத்த ஏமாற்றமடைந்த வானதி வீட்டிற்கு சென்றாலோ தாய் தேவகி அவளை பேசியே ஒரு வழி ஆக்கினாள்…

" வா வானதி உனக்காக தான் காத்திட்டு இருக்கேன்,சாமிகும்பிட இவ்ளோ நேரமாயிடுச்சா...அவங்க முன்னாடி என்ன இப்படி அவமானப் படுத்த தான் அவங்க கூட என்ன அனுப்பி வைச்சிட்டு நீ கோவில்ல உட்கார்ந்துட்டு இருந்தியா சொல்லு எவ்ளோ தைரியம் உனக்கு …இப்படி எடுத்தெரிஞ்சி பேசற...

அப்பா இல்லாத பொண்ணுன்னு செல்லம் கொடுத்து உன் இஷ்டத்துக்கு விட்டது தப்பா போச்சு...அதான் சாப்பிட்டு இருக்கிறோம்னு சொல்லியும் கூட முகத்தில அடிச்ச மாதிரி பேசிருக்க
யாருமே சரியா சாப்பிடலை...சாப்பாட்டை பாதிலேயே வச்சிட்டு போய்ட்டாங்க...அதுமில்லாம எனக்கும் சேர்த்து பில்லுக் காண பணத்தை கேஷ் கவுண்டர்ல குடுத்துட்டு போறாங்க...எவ்ளோ சங்கடம் தெரியுமா எனக்கு...பாவம் பாதி சாப்பாட்ல எந்திருச்சாங்க...பாதி சாப்பாட்டுல எழுப்பறது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா..அது தெரிஞ்சா இப்படி மனசாட்சி இல்லாம பேசி இருப்பியா...ஒருத்தரை இப்படி மனசு நோக பேசுற அளவிற்கு அவ்ளோ தைரியம் உனக்கு எங்கிருந்து வந்தது...
யார் உனக்கு இப்படியெல்லாம் பேச சொல்லித்தர்றாங்க,
நீ இப்படியெல்லாம் பேசுவாயா? …
என் பொண்ணு இப்படியெல்லாம் மத்தவங்ககிட்ட பேசாது, யாரோ உன்னை இப்படியெல்லாம் பேச சொல்லி தூண்டிவிட்டிருக்காங்க அதனால தான் நீ இப்படியெல்லாம் பேசிருக்க யார் உன்னை தூண்டி விட்டது,அது யாரா இருந்தாலும் நல்லா அனுபவிப்பாங்க...ஒரு பொண்ணோட வாழ்க்கையில தேவையில்லாம விளையாடிட்டமேனு கண்டிப்பா ஒரு நாள் வருத்தபட போறாங்க பாரு...
உனக்கு ஃபோன் குடுத்த அந்த ஆளுதான் உன்னை இப்படி எல்லாம் பேச தூண்டிருக்கனும் இரு நானே அந்த நம்பருக்கு கூப்பிட்டு கேக்கறேன் என் பொண்ணோட வாழ்க்கையை கெடுத்த உனக்கு என்ன கிடைச்சதுன்னு,ஏன் வானதி இப்படி பண்ணின,நான் சாகுறதுக்குள்ள உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பாக்கணும்னு ஆசைப்படறது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது அம்மா உனக்கு நல்லது தானே செய்வேன்... இந்த அம்மாவ நீ என்னைக்கும் புரிஞ்சிக்க மாட்டியா ," என்று கோபத்தில் பேசியவள் அழுகையில் முடித்தாள்…

தன் மனதினை வெளிபடுத்திகூட அதை கண்டு கொள்ளாமல் சென்ற ஸ்ரீதரையே நினைத்துக்கொண்டவளுக்கு அவளின் தாயின் இப்பேச்சு எரிச்சலை ஏற்ப்படுத்த இவளும் கோபத்தில் கத்த தொடங்கினாள்…

"போதும் பேசறதை நிறுத்துமா,உன் பொண்ணு ஒண்ணும் குழந்தை கிடையாது ஒருத்தர் சொல்லித்தான் இந்த கல்யாணத்த நிறுத்தனும்னு... எனக்கும் அறிவிருக்கு...கோவிலுக்கு வந்த யாரோ ஒருத்தரோட போனை வாங்கி பேசினா உடனே நீ ஃபோனை குடுத்தவங்களுக்கு சாபம் விடுவியா...நல்லா இருக்குமா உன் நியாயம் அவசரத்துக்கு ஃபோன கொடுத்து உதவினதுக்கு பிரதியுபகாரம் உன் போன்ல இருந்து கூப்புடு சண்டை போடுவியா...ஏன் பேசாம இருக்கற கூப்பிட்டு சண்டை போடு...முடியாது...ஏன்னா உனக்கே தெரியும் நீ பண்ணறது தப்புன்னு...
என்ன தப்பு சொல்லறியே நீ செஞ்சது நியாயமா... உன் இஷ்டத்துக்கு ஒருத்தனை கூட்டிட்டு வந்து இவன் தான் மாப்ளனு சொல்லுவ, அவனும் வேணாம் பொண்ணு சரியில்லம்பான்….. மறுபடியும் ஒரு மூனு மாதம் கழிச்சி வருவான்... பரவால்ல உங்க பொண்ணை நானே கட்டிக்கிறேன்பான்... ..
நானும் உடனே சரினு சொல்லனும்... ஏன்னா கல்யாணம்னா ஆம்பளைக்கு மட்டும் படிச்சா போதும்,...பொம்பளைக்கு புடிக்க வேண்டிய அவசியமில்லை‌…. அவ வெறும் ஜடம் தானே அவளுக்குனு ஒரு மனசு இருக்காது அதுல அவளுக்கும் ஆசைகள் கனவுகள் இருக்காது அப்படித்தானே?"….

"என்ன கல்யாணம் செஞ்சதுக்கப்புறம் சந்தேகப்பட்டுட்டு வேணாம்னு என்னை அவங்க இங்க விட்டுட்டு போனா என்ன செய்வம்மா... அப்பவும் உனக்காக நா அவங்க செஞ்சதை சகிச்சிகிட்டு உன்னோட இருக்கனும் அப்படித்தானே…இது மாதிரி சந்தேக புத்தி கொண்டவனோட தான் என் திருமண வாழ்க்கைனா அப்படி ஒரு திருமணமே வேண்டாம்…
அவங்களோட மனது காயப்பட்டுடிச்சினு கவலபடறியேம்மா... இதையெல்லாம் பார்த்துட்டு இருக்கற என் மனது எவ்வளவு காயப்பட்டு இருக்கும் அதை ஏன் மா நீ புரிஞ்சிக்கல….
நீ சாகுறதுக்குள்ள எனக்கு கல்யாணம் பண்ணனும்னு சொல்லலறியே அப்போ நான் உனக்கு பாரமாயிட்டேனா...அதனாலதான எவன் கிட்டையாவது என்ன புடிச்சு கொடுக்கணும்னு வர்றவன் போறவனை எல்லாம் கல்யாணம் பண்ணிக்க சொல்லி என்னை கட்டாயபடுத்தற...அப்பா இருந்திருந்தா கண்டிப்பா இவனுக்கு என்ன கல்யாணம் பண்ணி குடுக்க ஒத்துக்கவே மாட்டாங்க அது தெரியுமா உனக்கு...
அப்பா இல்லாத பொண்ணு, வா.. ன்னா வருவா போ.. ன்னா போவானு நினைச்சு தானே அவங்களும் வேண்டாம்னு போனவங்க மறுபடியும் வந்து இருக்காங்க...என்ன பண்ணினாலும் கேக்குறதுக்கு ஆள் இல்லைன்னு நினைச்சு தானே கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம கோயில்ல வெச்சு என்ன அசிங்கமா திட்டிட்டு போனாங்க... அப்புறம் ஏன் இப்ப வந்து இருக்காங்களாம்...
நான் இங்க இருக்கறது உனக்கு பாரம்னு நினைச்சா என் கிட்ட சொல்லிடும்மா. நான் எதாவது ஹாஸ்டல் பாத்து போய்க்கறேன்.
அதற்காக இப்படியெல்லாம் மாப்பிள்ளை பார்த்து என்னை கல்யாணம் செய்ய சொல்லி வற்புறுத்தாதே...இதுபோல மறுபடியும் என்ன கல்யாணத்துக்கு கட்டாயப் படுத்தினா கண்டிப்பா உன் கிட்ட சொல்லாம நான் எங்காவது போய்டுவேன்"
என அழுதபடியே மிரட்டிவிட்டு சென்றாள்…

ஏனோ ஸ்ரீதரின் புறக்கணிப்பு அவளை மீண்டும் மீண்டும் மன அழுத்தத்துக்கு ஆளாக்கியது….

இனிமேல் எங்கு சந்தித்தாலும் அவனை புறக்கணிக்க வேண்டும் என்ற முடிவுடன் மறு நாளிலிருந்து அவளின் தினசரி வேலைகளை கவனிக்கத் தொடங்கினாள்...

தொடரும்...
 
Last edited:
Top