கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

காத்திருந்த காதல்-9

Akila vaikundam

Moderator
Staff member
9

முடிந்த அளவிற்கு அவனைப் பற்றிய நினைவுகளை ஒதுக்கி விட்டு வேறு வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினாள்.. தனது தாயின் பாராமுகமும் ஸ்ரீதரின் புறக்கணிப்பும் மனதளவில் பாதிக்க அழும் சிறுகுழந்தை ஆறுதலுக்காக தனது தாயை தேடுவதுதான் அவளின் மனமும் ஆறுதலுக்கு ஸ்ரீதரை தேடியது…

அவனை தூரத்தில் இருந்து பார்த்தால் கூட போதும் எனும் நிலைக்கு அவளது காதல் அவளை தள்ளியது…

ஒருவாரம் கடந்த நிலையில். தனது தாயிடம் வேலைக்குச் செல்கிறேன் என்று பொய் சொல்லி விட்டு கோவிலுக்கு சென்றவள் அவள் வழக்கமாக அமரும் மண்டபத்தின் தூணில் சாய்ந்த படி அவனின் வரவுக்காய் காலைமுதல் இரவு வரை ஒரே இடத்தில் காத்திருக்க ஆரம்பித்தாள்...அங்கு பூஜை செய்யும் குருக்கள் கூட அவளிடம் வந்து விசாரித்து விட்டு சென்றார்.

இரவு பூஜை செய்யும் நேரம் நெருங்க நெருங்க இவளுக்கு பயம் தொற்றிக் கொண்டது..எங்கே ஸ்ரீதர் வராமல் சென்று விடுவானோ என்று...ஆனால் அவனின் பயத்தைப் போக்கும் வண்ணம் பூஜை தொடங்கும் சில வினாடிகள் முன்பு மின்னல் போல ஸ்ரீதர் உள்ளே வந்து கொண்டிருந்தான்...அவனை மண்டபத்திலிருந்து அப்படியே பார்த்துக் கொண்டிருந்த அவளின் மனம் சந்தோஷத்தில் துள்ளி குதித்தது..

அவனின் வரவைக் கண்டு அவனை நோக்கி செல்ல எத்தனிக்கும் நேரம் ஸ்ரீதரும் அவளைப் பார்த்துவிட்டான் ஆனால் அவனின் முகம் இவளைப் போல் பிரகாசமாக இல்லை இவளைக் கண்டதும் இருண்டுவிட்டது…

அவனின் முக மாற்றத்தை கண்டவளின் மனமோ வேதனையில் கதற ஆரம்பித்தது விழிகள் கண்ணீரை சுமந்தபடி அமைதியாக அங்கேயே அமர்ந்து விட்டாள்…..

உள்ளே சுவாமி தரிசனம் முடித்து வெளியே வந்த ஸ்ரீதர் அவளைக் கண்டதும் காணாததுபோல்
மௌனமாக கடந்து சென்றான்...
அவன் கடந்து செல்வதை கண்டதும் மௌனமாக அழுது கொண்டிருந்த அவளின் மனம் சிறு விசும்பல் சத்தத்துடன் அழ ஆரம்பித்தாள்... அவளின் விசும்பல் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவன் அவள் அருகினில் வேகமாக வந்து அமர்ந்தான்…

"ஏய் இப்போ எதுக்கு அழற"என்று பற்களை கடித்து வார்த்தைகளை துப்பியவன்...அவளின் அழுகை அதிகமாவதை கண்டு சற்று மென்மையை கடைபிடித்தான்...
"ஹேய் அழாதிங்க வானதி...ப்ளீஸ் எல்லாரும் நம்மளதான் பார்க்கறாங்க பாருங்க"..என்று சுற்றும் முற்றும் பார்த்த படியே கூற…

அவளோ..
தலை குனிந்தவண்ணம்
குலுங்கிஅழ ஆரம்பித்தாள்…
என்ன சொல்லி அவளை சமாதானம் செய்ய….என விடை தெரியாமல் முழித்தவன்..அவளிருகில் இயல்பாக அமர்ந்த வண்ணம் தனது தோள்வளைவில் அவளை சாய்த்துக்கொண்டான்….

அவனின் இச்செயலில் அதிர்ச்சியுற்று அழுகையை நிறுத்தியபடி சிவந்த கண்களால் உதடுகள் துடிக்க அவனை குழப்பத்துடன் பார்க்க...அவன் இயல்பாக

"உங்க அழுகையை நிறுத்த வழி தெரியல...உங்களை தனியா அழ விட்டுட்டு போக மனசு வரல... உங்க பக்கத்தில நான் இருக்கும் பொழுது நீங்க அழுதா பாக்கறவங்க என்ன தப்பா நினைப்பாங்க…
இப்படி நீங்க அழுதீங்கனா உங்களுக்கும் ஒரு ஆறுதல்...நம்மளையும் யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க" என்று நீண்ட தொரு விளக்கம் கொடுத்தவன்..அவளின் முகத்தை பார்த்தபடி அவளிடத்தில் இருந்து சற்று தள்ளி அமர்ந்த படியே தன்னுடைய கைக்குட்டையை அவளின் கைகளில் தினித்தான்….

"முகத்தை துடைச்சிக்கோங்க….உங்க முகம் இன்னைக்கு ரொம்ப சோர்வா இருக்கு ...என்ன காரணம்னு தெரியல...எதுவா இருந்தாலும் இதுபோல சோர்வாகற அளவிற்கு யோசிக்காம இருப்பது நல்லது"..எனகூறிக்கொண்டு இருக்கும் பொழுதே அவளின் கண்களில் இருந்து மீண்டும் கண்ணீர் வரத்தொடங்கியது…

"நான் ஏன் அழறேனு உங்களுக்கு புரியலையா ஸ்ரீதர்?" என்று ஆர்வமுடன் கண்ணீருடன் கண்கள் பளபளக்க அவனைப் பார்த்துக் கேட்டாள்...
அது உங்களோட பர்சனல் அது எதுக்குங்க எனக்கு தனியா உக்காந்து அழுதீங்க மனசு கேட்கல அதான் பக்கதில உக்காந்து ஆறுதல் சொல்ல வேண்டியதா போயிடுச்சு உங்க அனுமதி இல்லாமல் உங்களை தொட்டு தோளில் சாய்த்துகிட்டதுக்காக என்னை மன்னிச்சிடுங்க மறுபடியும் இந்த மாதிரி தனியா அழாதீங்க அப்புறம் வரவங்க போறவங்க எல்லாம் ஆறுதலுக்கு உங்க பக்கத்துல உட்கார வேண்டியதாகி விடும் என்று அவளின் காத்திருப்பை கண்ணீரை கொச்சைப்படுத்துவது போல் அவன் கூற

அவனின் பேச்சைக் கேட்டு கோபத்துடன் முகத்தை அழுத்தி துடைத்தவள்
'இனி நான் அழமாட்டேன்...என் கண்ணீருக்கான தகுதி உனக்கில்லை என்று எண்ணியவள்'...

"நீங்க போங்க சார்...எனக்கு கொஞ்சம் மனசு சரியில்லை அதனால தான் அழனும்னு தோனிச்சி...அதான் அழுதேன்….அப்போ நீங்க கிராஸ் பண்ணவும்…. உங்களுக்கு டிஸ்டர்ப்‌ ஆயிடுச்சி போல "...என்றபடியே எழுந்தவள் அவனின் பதில் எதிர்பாராமல் நடக்க தொடங்கினாள்…

பின் சென்ற அவனும் "சரி வாங்க ஏதாவது சாப்பிடலாம்"...என்றான்

"இல்ல எனக்கு பசியில்லை"..

"அதெப்படிங்க ஒருத்தருக்கு காலையில் இருந்த பசிக்காம இருக்கும்,

உங்களுக்கு வேணும்னா பசிக்காம இருக்கும்
ஆனா எனக்கு பசிக்குதே"...என்று கூறினான்

அவள் திரும்பி முறைக்கவும்…

"நீஜமாங்க நானும் காலைல இருந்து சாப்பிடலங்க "என்றான்..

"அப்போ "என்று அவள் இழுக்க...

"ம்ம்….காலையிலேயே கோவிலுக்கு வந்தேன்...உங்களை பார்க்கவும் அப்படியே திரும்பிட்டேன்...மத்தியம் குருக்கள் கிட்ட ஃபோன் பண்ணி விசாரிச்சேன்...அப்பவும் அதே இடத்தில சாப்பிடாம இருக்கறதா சொன்னாரு"…

"சரி சாயங்காலமா போயிருப்பீங்கனு பார்த்தா...நீங்க என்னடான்னா...நைட் வரை காத்திருக்கீங்க...சரி நமக்காகதானோனு ஒடி வந்தா இப்பதான் புரியுது...எனக்காகவேதான்னு,

இதுக்கு நா கவலை படனுமா இல்லைனா சந்தோஷபடனுமானு எனக்குத்தெரில‌...ஒரு பொண்ணு எனக்காக அவளோட இயற்கை உபாதைகளை கூட தாங்கிக்கிட்டு முழுசா பன்னிரெண்டு மணிநேரம் ஒரே இடத்தில் உக்காந்து கிட்டு இருக்கும் போது நான் மட்டும் எப்படி அங்க நிம்மதியாக சாப்பிட்டுகிட்டு சந்தோஷமா இருக்கமுடியும்!….
சொல்லுங்க வானதி...நான் சொன்ன உடனே உங்களோட திருமணத்தையே நிறுத்தறீங்க...விலகி போனா போய்டுவீங்கனு பார்த்தா முன்ன விட அதிகமாக என்னிடம் நெருங்குகறீங்க.. இதற்கு நான் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யமுடியும்...
இந்த அன்புக்கு முன்னாடி நான் என்ன செய்தாலும் அது மிகக் குறைவு தான்,ஏன் வானதி அப்படி என்ன நான் உங்களுக்கு ஸ்பெஷல் "...என்று கேட்டவன் மேலும் தொடர்ந்தான்…

"அன்னைக்கு காஃபி ஷாப்பிலே உங்களுடைய அன்பு எனக்கு புரிய ஆரம்பிச்சாச்சி ...ஏதோ விளையாட்டா பேசறீங்கனு பார்த்தா உங்க திருமணத்தை நிறுத்தும் பொது தான் புரியுது உங்களோட அன்பின் அளவுகோல்….எல்லையில்லாததுனு,

சரி இப்போ சொல்லுங்க... எதற்காக இந்த பட்டினி? ...
காத்திருப்பு" என்றவனுக்கு புரியவேயில்லை...அவனின் மனதிலும் வானதி அவனையறியாமல் குடி புகுந்திருந்ததை...
ஸ்ரீதரின் கேள்விக்கு பதில் தெரியாது விழித்தவள்…

"தெரில உங்கள் பாக்கனும் போல இருந்தது….உங்க கிட்ட மட்டும் பேசிகிட்டே இருக்கனும் போல இருக்கு…
ஏனோ நீங்க என்னோடே இருக்கனும் போல தோனுது...உங்களை தவிர வேற எந்த நினைப்புமே இல்ல,உங்கள பாக்காத நிமிஷம் நரகம் போல தோணுது,

எங்க உங்களை இழந்திடுவேணோனு பயமா இருக்கு...இது ஓரு மாதிரியான உணர்வு...இதுக்கு எனன பேருனு கூட தெரியல..
எனக்கு உங்க பேரைத்தவிர எதும் தெரியாது...தெரிஞ்சிக்கவும் விரும்பல, நா ஏதாவது தப்பு பண்ணினா எங்கிட்ட சண்டை போடுங்க இல்லையா ரெண்டு அடி வேணாலும் அடிச்சுகோங்க ஆனா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதீங்க என்னை பார்க்க வராம இருக்காதிங்க...
என்ன அவாய்ட பண்ணாதீங்க..அது என்னால் தாங்க முடியாது".என்று உள்ளத்தை மறைக்காமல் கூறினாள்..

அவனுக்கு அவளின் உள்ளம் தெளிவாக புரிந்தது..அவள் தன்னைக் காதலிக்கிறாள்...தாம் ஓருவரால் காதலிக்கப்படுவது எவ்வளவு பெரிய ஆனந்தம்...அவன் மனதிலும் அவளிருப்பதை உணரவில்லை அதனாலோ என்னவோ அவனால் அந்த சந்தோஷத்தைக் கொண்டாட முடியவில்லை…

இயல்பாக அவளை விட்டு தள்ளி நடந்தவன் அவளிடம்..

"அதிகமாக எதுவும் கற்பனை செய்துகாதீங்க வானதி...என்றுமே அதித கற்பனை நம்முடைய இயல்பு வாழ்க்கையை பாதிக்கும்"...ஒரு தெருவோர கடையின் அருகினில் நின்றவன்.

" இங்க இட்லி நல்லா இருக்கும்...இன்னைக்கு இங்க சாப்பிடலாமா"?...என்று கேட்டான்...

அவள் சரி என தலையாட்டவும்..
இருவருக்கும் சென்று வாங்கி வந்தவன்...இயல்பாக அவளின் வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டான்…தாய் மட்டும் தான் தந்தை இல்லை என தெரியவும் காரணமே இல்லாமல் அவள் மீது ஒரு இரக்கம் வந்து குடிகொண்டது.

"சரி வாங்க நான் உங்களை உங்க வீட்டில கொண்டு போய் விடறேன் ரொம்ப லேட் ஆயிடுச்சு ...தனியே போக வேணாம்".என்று அவனது காரில் வீடுவரை சென்று விட்டான்…

கீழே இறங்கியதும்…
"சார் ப்ளீஸ் ‌உள்ள வாங்களேன்...அம்மாகிட்ட உங்களை அறிமுகபடுத்துகிறேன்" … என்னவள் அவன் மறுக்க முடியாத வண்ணம் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்..

"ம்ம் வர்றேன் ஆனா ஒரு கண்டிஷன்"…

"என்ன சார்...அது"?…

"அது….இந்த சார் தான்….என்னவோ போல் இருக்கு...ஸ்கூல்லேயும் எல்லாரும் அப்படியே கூப்பிடறாங்களா….நீங்களும் அப்படியே கூப்பிடும் போது ஏதோ மிஸ் ஆகுது"...என்றான்

"அப்போ நீங்க கூடதான் என்னை வாங்க போங்கன்னு கூப்படறீங்க...அது மட்டும் எனக்கு பிடிக்குமா"? என்று ஏதிர் கேள்வி கேட்டாள்.

"சரி நானும் உங்களை...சாரி உன்னை வாங்க,போங்கன்னு கூப்பிடல ..நீயும் இந்த சார் மோர் எல்லாத்தையும் கட் பண்ணு சரியா"…


"அப்போ நா உங்கள எப்படி கூப்பிட"?…

"ஸ்ரீ..அப்படினு கூப்பிடு ...எனக்கு நெருங்கமானவங்க எல்லாருமே அப்படிதான் கூப்பிடுவாங்க"...என்று சொல்லியவன்... "எப்படி இப்படியே ‌ரோட்டில் நின்றபடியே பேசலாமா...எல்லாருமே நம்மையே பார்ப்பதுபோல் ஒர் எண்ணம்"…..

"ஒஒ சாரி..சா…. ஸ்ரீ உள்ள வாங்க
ப்ளீஸ்" என்றவள் உள்ளே அவளின் தாயை அழைத்தபடி சென்றாள்..

தொடரும்...
 
Top