குறள் 39 அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல. விளக்கம்: அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.