குறள் 77 என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். விளக்கம்: எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.