கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

குளிர்கால உணவுகள்:

Rajasree Murali

Moderator
Staff member
குளிர்கால உணவுகள்:

குளிர்காலம் வருகிறது. அதற்கேற்ற மிளகு குழம்பு ஐந்து நிமிடத்தில் செய்யும் இன்ஸ்டன்ட் பொடி்.



மிளகு குழம்பு பொடி: தேவையான பொருட்கள்:

மிளகு 50 கிராம்

துவரம் பருப்பு 50 கிராம்

உளுத்தம் பருப்பு 50 கிராம்

புளி எலுமிச்சை பழ அளவு (கொட்டை , நார் சுத்தம் செய்தது)

பெருங்காய தூள் சிறிதளவு

பச்சரிசி 1 ஸ்பூன்

பொடி செய்முறை: புளியை தவிர மற்ற அனைத்தையும் எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு சிறிதளவு எண்ணெய் விட்டு புளியை வறுத்துக்கொள்ளவும். சூடு ஆறிய பிறகு மிக்சியில் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து நன்கு பொடி செய்து காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜ்ல் வைத்துக்கொண்டால் இரண்டு மாதம் வரை கெடாது.

குழம்பு செய்முறை: ஒரு நபருக்கு ஒரு ஸ்பூன் வீதம் பொடியை தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கலந்து வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பிறகு கடுகு கறிவேப்பிலை சேர்த்து சேர்த்து கடுகு வெடித்ததும் கலந்து வைத்துள்ள மிளகு குழம்பு போடி கரைசலை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்தால் சுவையான மிளகு குழம்பு தயார்.

 

Attachments

  • 1. MILAGU KUZHAMBU PODI.jpg
    1. MILAGU KUZHAMBU PODI.jpg
    189.2 KB · Views: 0
  • 1. MILAGU KUZHAMBU.jpg
    1. MILAGU KUZHAMBU.jpg
    38.2 KB · Views: 0
Top