இப்பொழுது குளிர் காலம். அதற்கேற்ற மிளகு சீரக ரசம், வத்தக்குழம்பு ஐந்து நிமிடத்தில் செய்யும் இன்ஸ்டன்ட் பொடி.
1. இன்ஸ்டன்ட் மிளகு சீரக ரசப்பொடி பொடி:
தேவையான பொருட்கள்:
மிளகு 50 கிராம்
சீரகம் 50 கிராம்
துவரம் பருப்பு 2 ஸ்பூன்
தனியா 4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 5
பெருங்காய தூள் சிறிதளவு
புளி எலுமிச்சை பழ அளவு (கொட்டை, நார் சுத்தம் செய்தது)
பொடி செய்முறை: புளியை தவிர மற்ற எல்லாவற்றையும் வாணலியில் எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். பிறகு சிறிதளவு எண்ணெய் விட்டு புளியை நன்கு வறுக்கவும். சூடு ஆறிய பிறகு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்சியில் பொடி செய்து காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜ்ல் வைத்துக்கொண்டால் இரண்டு மாதம் வரை நன்றாக இருக்கும்.
ரசம் செய்முறை: ரசம் செய்யும் பாத்திரத்தில் ஒரு நபருக்கு ஒரு ஸ்பூன் வீதம் பொடியை தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து கலந்து நன்றாக கொதித்த பிறகு சிறிதளவு தண்ணீர் விட்டு இறக்கி நெய்யில் கடுகு கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். சுவையான மிளகு சீரக ரசம் தயார்.
2. இன்ஸ்டன்ட் வத்தக்குழம்பு பொடி:
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு 50 கிராம்
கடலை பருப்பு 50 கிராம்
தனியா 25 கிராம்
காய்ந்த மிளகாய் 15
வெந்தயம் 1 ஸ்பூன்
பச்சரிசி 1 ஸ்பூன்
பெருங்காய சிறிதளவு

குழம்பு செய்முறை: ஒரு நபருக்கு ஒரு ஸ்பூன் வீதம் பொடியை தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை சேர்க்கவும். பிறகு மணத்தக்காளி அல்லது சுண்டைக்காய் வத்தலை சேர்த்து பொன்னிறமாக வறுபட்டவுடன் கலந்து வைத்துள்ள வத்தக்குழம்பு கரைசலை சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க வைத்தால் சுவையான வத்தக்குழம்பு தயார்.