கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கொடிமலர் 26

நந்தாவை பொறுத்தவரை சரி தவறு என்றெல்லாம் பெரியதாக வரையறைகள் வைத்துக் கொள்ளவில்லை. அவள் மனதிற்கும், அவளது வாழ்க்கைக்கும் எவை எல்லாம் பொருந்தி வருகிறதோ அவையெல்லாம் சரி... பொருந்தாத மற்றவைகள் தவறு. இதில் தான் அவள் வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருக்கிறாள்.

இதை ஞாயத்தை தான் அவள் ராமிடமும் தன் குழந்தை இடமும் கூட கடைப்பிடிக்கிறாள்.
வீட்டில் இப்பொழுது பெரியவர்கள் யாரும் இல்லை. மூன்று மாதங்கள் வரை அந்த வீட்டில் இருந்த ராமின் வீட்டு பெரியவர்கள் மனதை தேற்றிக்கொண்டு, அவன் வீட்டில் இருந்து சென்று ஒரு வாரம் ஆகிவிட்டது.

தன் கொழுப்பை ஏத்தியை விட்டு செல்வதற்கு முன் அந்த மூதாட்டியின் கண்களில் கண்ணீர் தான்! கண்டிப்பாக நந்தா குழந்தையை சரியாக கவனிக்க போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்!

ராமிடம் பலமுறை 'வேறு வழி இல்லன்னா பேசாம, மும்பை வந்திடு குழந்தைய தூக்கிட்டு ' என்று விட்டு கிளம்பி விட்டார்கள்.

வழக்கம்போல், அவனுக்கு நந்தாவை விட்டுச் செல்ல மனம் இல்லை. அத்துடன் இன்று இல்லாவிடில் என்றேனும் ஒருநாள் ஏதாவது பேச்சுகள் கிளம்பினால் என்ன செய்ய என்ற ஒருவித குற்ற உணர்ச்சியும் அவனுக்குள் உண்டு.

சில சமயங்களில் இது போன்ற சிறு சிறு விஷயங்களுக்கு கொடுக்கும் இடம் ஆனது, வாழ்க்கையில் பெரிய பெரிய இடர்களையும் துன்பங்களையும் கணக்கு இல்லாமல் கொடுத்து விட்டு சென்றுவிடும்.

இந்த இடத்தில் ராம், தன் மரியாதை என்ன ஆகும் என்று யோசித்தான், கூடவே தன் மனைவி நந்தா பற்றி யோசித்தான். ஆனால் பிறந்திருக்கும் புது குருத்து பற்றி அவன் யோசிக்க தவறியது பற்றி இன்னும் என்ன சொல்ல முடியும்?

ராம் அவன் குழந்தை இருவருமே இன்று சூழ்நிலை கைதிகள்.

ஆரம்பத்தில் நந்தா, எல்லோரும் சென்றுவிட்ட குஷியில் குழந்தையை ஓரளவிற்கு நன்றாகவே பார்த்துக் கொண்டாள்.
ராமின் பாட்டி செய்த ஏற்பாட்டின் படி, தினமும் இரண்டு வேளைகள் பசும்பால் பாட்டிலில் வீட்டிற்கு வந்துவிடும்.
வீட்டில் சமையலுக்கு ராமின் அம்மா, ஒரு நடுத்தர வயதான பெண்மணியை வேலைக்கு வைத்து விட்டு சென்றாள். அந்த பெண்மணி காலை மாலை ராமின் வீட்டுக்கு வந்து ஏதாவது சமையல் செய்து விட்டு செல்வாள்.
ராம் சைவ உணவு சாப்பிடுவதை விரும்புபவன். அசைவம் அவனுக்கு பிடிக்காது.அதற்கு நேர்மாரானவள் நந்தா.
தினமும் வீட்டில் ஊர்வன, பறப்பன, நடப்பன என்று வித்யாசம் இல்லாமல் எல்லா வகை அசைவ உணவுகளையும் சமையல்கார அம்மாவிடம் செய்ய சொல்லி சாப்பிட்டாள் நந்தா.
வீட்டுக்குள் நுழைந்தாலே அசைவ உணவின் வாசனை தான்!
இப்போதெல்லாம் ராம் வீட்டில் சாப்பிடுவதில்லை. லீலாவதி தன் வீட்டில் இருந்து காலை மாலை இருவேளைகளிலும் ராமுக்கும் சேர்த்தே உணவு எடுத்து வருவதை வழக்கமாக்கி கொண்டு விட்டார்கள்.
இரவு வரும்போது ஆபீஸ் கேன்டீனிலேயே எதையாவது சாப்பிட்டு விட்டு வந்து விடுவான்.

சில சமயங்களில், ஷ்யாமின் அலுவலகம் செல்லும் பொழுது, ஷியாம் ராம் இருவருக்கும் சேர்த்து சியா உணவு சமைத்துக் கொண்டு வந்து தருவாள்.
இன்னும் சியா, முழு நேரமும் அலுவலகம் வருவதில்லை.

வீட்டிலிருந்தே ஷாம் செய்து கொடுக்கச் சொல்லும் வேலைகளை செய்து விடுவாள். தினமும் ஓர் இருமுறை அலுவலகம் வந்து ஷ்யாமை பார்த்து விட்டு செல்வாள்.
தனக்கு அலுவலகத்தில் இல்லாவிட்டால், ஷ்யாம் பலமுறை சியாவிற்கு போன் செய்வதும், காபி சாப்பிட என்று நான்கு முறை வீட்டுக்கு வந்துவிடுவதையும் பார்த்த ஷ்யாமின் பாட்டிதான் நீயே அவனுக்கு போய் பாத்திட்டு வந்துடு என்று கிண்டலாக சொல்லிவிட, சியாவுக்கு தான் வெட்கமாகி போயிற்று.

முன்பெல்லாம் கண்டிப்பின் மொத்த உருவமாக இருந்த அதே ஷ்யாம் தான், இன்று மனைவி முகம் பாராமல் தவித்து போகிறான். காலம் எப்படி எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது.. காதல் இதுதான் என்று உணராமலேயே, அவன் தன் காதலை மனைவி மீது கொட்டுவதும், அவன் காதலிக்கிறான் என்று முழுமையாக உணர்ந்து கொண்டவள், தன் வாயாலே அதை உனக்குச் சொல்லாமல், மனதார அனுபவிப்பதும்.. ம்ம்ம் இது ஒரு பரம சுகம்.

இது போன்ற ஒரு காதலை தான் ராம் தன் வாழ்க்கையில் எதிர்பார்க்கிறான். சியா வை பார்த்த நொடியில், ஷ்யாம் அவனது கண்களில் மீளும் ஒளிகீற்று.. அதை அப்படியே தனக்குள் உள்வாங்கிக் கொள்ளும், சியாவின் உணர்வுகள்..இதை எத்தனை முறை ராம் பார்த்திருக்கிறான்..
அவனைப் பொறுத்தவரை இந்த காட்சி தெவிட்டாத கவிதை! அவன் ரசிக்கும் பல விஷயங்களில் ஒன்று ஷ்யாம் -சியா.

அவனுக்குள் அந்த சமயங்களில் நிச்சயம் தோன்றும், சியாம்சியா மீது வைத்திருக்கும் காதலுக்கு குறைந்ததல்ல நான் நந்தா மீது வைத்திருக்கும் காதல்!
அதற்கு ஏன் அவளிடம் இருந்து எந்த பிரதிபலிப்பும் இல்லை?
எந்த இடத்தில் நான் தவற விட்டேன்?
இந்த கேள்விக்கு காலம் வாழ்வதற்கும் அவனுக்கு எந்த விடையும் கிடைக்கப் போவதில்லை. தெரிந்துதான் மீண்டும் மீண்டும் இதே கேள்வியை அவன் தனக்குள் கேட்டுக்கொள்கிறான்.

தன் காதல் தோற்ற வலி அவனுக்கு.
ஷியாம்- சியா குழந்தை கிருஷ்ணாவுக்கு முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட அவர்கள் வீட்டில் முடிவு செய்யப்பட, ராமுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டது.

ராம் மனதில் நந்தாவிடம் சொல்லி அவளையும் குழந்தை தாராவையும் எப்படி கூட்டிக்கொண்டு வருவது என்ற குழப்பம். அத்துடன் நந்தாவை கூப்பிட்டுக் கொண்டு விழாவுக்கு செல்ல மனதுள் சங்கடம்.

ஒருவழியாக ராம், ஷ்யாமின் வீட்டு விழா பற்றிய விஷயங்களை சொல்லிவிட்டு நந்தா முகத்தை பார்க்க, அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.

" நீயும் குழந்தையும் வரணும் நந்தா " என்றவனை வித்தியாசமாக பார்த்த அவன் மனைவி ...
" என்ன கண்டிப்பா கூட்டிட்டு வர சொல்லி சியா சொன்னாளா " என்ற நக்கலான இரட்டை அர்த்தம் கொண்டு கேள்வி ஒன்றைக் கேட்டு வைத்தாள்.

இந்தக் கேள்வியின் சற்றும் எதிர்பார்க்காத ராமிற்கு முதலில் ஏற்பட்ட உணர்வு நந்தா மீதான அருவருப்பு.
மீண்டும் மீண்டும் அந்த பெண்ணுடன் தன்னை இணைத்து பேசுவதில் இவள் இன்பம் காணுவது,அவனால் சற்று கூட ஜீரணம் செய்து கொள்ள முடியவில்லை.
" ச்சீ.. உனக்கு என்ன ஏதாவது ஃ போபியா வா... கல்யாணம் ஆன பொண்ணோட எப்ப பார்த்தாலும் என்னை சேர்த்து வச்சு பேசுற?
ஏதாவது யோசிச்சு தான் பேசுறியா.. நான் உன்னுடைய ஹஸ்பண்டுன்னு ஞாபகம் இருக்கா, எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு பேசுறதுக்கு உனக்கு மனசு கஷ்டமா இல்லை.."
"வாட் எவர், இந்த மாதிரி வார்த்தைகளை கேக்குறதுக்கு எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. இன்ஃபக்ட் இப்போஎல்லாம் நான் எதுக்காக உன்னை தேர்ந்தெடுத்து, உன் சம்மதம் கஷ்டப்பட்டு வாங்கி கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்னு இதுவரைக்கும் எனக்கு புரியல."
"ஐ அம் வெரி டையர்ட். எதையும் புரிஞ்சுக்கிற சக்தியே உனக்கு இல்லையா... இல்லை யாரையும் மரியாதையாக நடத்தனுங்குற எண்ணம் இல்லையா.. " என்று மனதிற்குள் நினைத்தவன் நந்தாவிடம் எந்த பதிலும் சொல்ல பிடிக்காதவனாக தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

அவனது அமைதி தன் மீதான உதாசீனமாக புரிந்து கொண்ட நந்தா, பழிவாங்குவதற்கு தேர்ந்தெடுத்த இடம் குழந்தை.
நந்தா அறையில் குழந்தை பசியில்
வீறிட்டு அழ, சற்று மழை கண்டு கொள்ளாது தனது லேப்டாப்பில் மூழ்கி விட்டாள் நந்தா.

நேரமாக ஆக குழந்தையின் அழுகுரல் பெரியதாவதை கேட்டு, தனது அறையில் இருந்து வெளிவந்த ராம், குழந்தைக்கு ஆகா ரம் கொடுக்காமல் வேறு ஏதோ செய்து கொண்டிருக்கும் நந்தாவை பார்த்து கோவம் கொண்டான். ஆனால் இப்பொழுதும் அவனுக்கு பேசுவதற்கு எதுவும் இல்லை.
நேராக அடுக்களைக்குள் நுழைந்தவன், அன்று மதியம் ஹாஸ்பிடலின் தாய்ப்பால் வங்கியில் இருந்து வாங்கி வந்து குளிர்சாதனப்பெட் டியில் வைத்திருந்த பாலை, லேசாக வெந்நீரில் வைத்து, மிதமான சூட்டில், குழந்தைக்கு புகட்டினான். பசியாறிய பிறகு குழந்தையை தனது தோளில் போட்டு லேசாக முதுகை நீவி கொடுத்தவனுக்கு கண்கள் கலங்கி இருந்தது.
அவன் மனதில், ஐந்தறிவு உயிரினங்கள் கூட தங்களது குட்டிக்கு பால் கொடுப்பதை முன்னிலைப்படுத்தி வாழும் நிலையில், தான் பெற்ற மகவு இப்படி அழும்போதும் கண்டுகொள்ளாமல் இருக்கும் இவள் மனது எவ்வளவு கடினமான அரக்கிக்கு கூட இருக்காது என்று புலம்பியது.

இப்போதெல்லாம் வெளியே சென்று விட்டு வரும்போது, சியா சொன்னபடிக்கு தாய்ப்பால் வங்கியில் இருந்து தாய்ப்பால் வாங்கி வந்து ஒரு நாளைக்கு ஒரு முறையாவது குழந்தைக்கு கொடுத்து விடுவதை வழக்கமாக்கி கொண்டு விட்டான் ராம்.
நந்தா தன் இஷ்டப்படிக்கு எல்லாவற்றையும் சாப்பிடுவதால், என்றாவது ஒரு நாள் அவள் பால் புகட்டினால் கூட, அது குழந்தைக்கு ஒவ்வாமையை தர, அவளுக்கும் இஷ்டம் இல்லாத நிலையில் நந்தா பால் தருவதை நிறுத்தி விட்டாள்.
ஏற்கனவே ஆரோக்கியக் குறைவுடன் பிறந்து இருக்கும் குழந்தை.. தாய்ப்பால் கண்டிப்பாக தேவை எனும் பொழுது, ராமால் செய்ய முடிந்தது இதுதான்!

நல்ல வேளையாக இதற்காவது குழந்தைக்கு கொடுப்பினை இருக்கிறதே..என்று ராம் தனது மனதை தேற்றிக்கொண்டு விட்டான்.
இவ்வளவு நிகழ்ந்த பொழுதும் நந்தாவை மாற்றி விடலாம் என்ற எண்ணம் அவனுக்கு மனதில் ஒரு மூலையில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
அவள் மீதான காதல் அவள் மீதான வெறுப்பு இரண்டிற்கும் நடுவில் ஊசலாடும் அவன் மனது.
இருவரையும் சேர்க்கும் பாலமாக குழந்தை இருக்கும் என்றுதான் அவன் நினைத்திருக்கிறான். ஆனால் நந்தா தனது குழந்தை இடம் நடந்து கொள்ளும் முறையானது, அவளது சுய ரூபத்தை ராமுக்கு தோல் உரித்து காட்டும் இந்த நிலையில், குழந்தை இந்த உறவுக்கு பாலமாக இருக்கப் போகிறதா.. இல்லை குழந்தையின் காரணமாகவே இருவரும் பிரிந்து விடும் சாத்தியம் இருக்கிறதா என்பதை காலம் தான் நிர்ணயம் செய்யும்.

ராம் போன்ற மென்மையான மனது உடையவனுக்கு நந்தா நடந்து கொள்ளும் முறை சற்றும் சரிபட போவதில்லை.

இத்தனை நடந்து கொண்டிருக்கும் பொழுதும், ராம் தனது குழந்தையை, கையாளும் விதத்தை நந்தா ஏதோ ஒரு நாடகத்தை பார்க்கும் பாவனையில் நின்று கொண்டிருந்தாள்.

ராமின் மனதில் கோபம் தான்! ஆனால் அந்த கோபத்திற்கு வார்த்தை வடிவம் கொடுத்து, நிலைமையை இது மோசமாக்கிக் கொள்வதற்கு அவன் விரும்பவில்லை. எப்பொழுதும் அமைதியாகவே சந்தோஷ சூழ்நிலையில் வளர்ந்திருந்த ராம், இப்பொழுதெல்லாம் அதிகமாக கலங்குகிறான், அவன் மனதில் பயம் வந்து விட்டது. 'தான் வளர்ந்த சூழ்நிலைக்கு நேர் எதிரான சூழ்நிலையை தன் குழந்தை தாராவுக்கு,''தான் உருவாக்கி விடுவோமா?'
அது எந்த காலத்திலும் நடக்கக் கூடாது என்பதற்காகவே, முடிந்தவரை பொறுமையாக விஷயங்களை கையாள பார்க்கிறான்.

ஒரு பக்கம் மட்டும் முயற்சி செய்து, பயன் ஏதும் இருக்க கூடுமா...

 
Top