கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கொலை (காதலன்) - 2

மே 14 காலை 7.35am:

இறந்த சடலத்தின் மேல் வெள்ளைதுணி கொண்டு மூடி வைத்திருந்தனர். அருகில் சிதறிகிடந்த செங்குருதியின் மீது ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தது, சில மணி நேரத்திற்கு முன்பு தான் இறந்திருக்க வேண்டும் வயிற்றில் இருந்து கசிந்த இரத்தம் சிறிது தூரம் சென்று காய்ந்து உறைந்திருந்தது, சிறிது நேரம் ஆராய்ச்சி பார்வை பார்த்த ரவி ஏதேனும் தடயங்கள் உள்ளனவா என சோதித்தும் பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். அவன் சந்தேகப்படும்படி சிறு துரும்பு கூட அங்கு இல்லை.
அதற்குள் அங்கு வந்த பத்திரிக்கையாளர்கள் பிணத்தை வகைவகையாக போட்டோ எடுத்து தனது கேமராவில் அடைத்துவிட்டு ரவியை சூழ்ந்து கொண்டனர் ,
அவர்களின் கற்பனை கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்லி ஓய்ந்த பின் பிரேதத்தை உடற்கூறு பரிசோதனைகாக ஆம்புலன்ஸ்சில் மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு கமிஷ்னர் அலுவலகத்திற்கு விரைந்தான் ரவி.

மே 14 காலை 10am:

வாங்க மிஸ்டர் ரவி உட்காருங்க, அந்த கேஸ் சம்மந்தமா எதும் தகவல் கிடச்சுதா?

இல்லை சார். பாடிய போஸ்ட்மாட்டத்துக்கு அனுப்பிருக்கு, ரிப்போர்ட் வந்ததும் தான் அடுத்தகட்ட நடவடிக்கைய முடிவு செய்யனும். டாக்டர் சதீஷ்குமார் தான்
இத ஹேன்டில் பன்றாரு இன்னைக்கு ஈவ்னிங்குள்ள ரிப்போர்ட் நம்ம கைக்கு வந்துடும்..
அப்ரம் பாடி கிடந்ததுக்கு பக்கத்துல ஒரு பேக்கரி இருக்கு அதுல சிசிடிவி புட்டேஜ் செக் பன்ன சொல்லிருக்கு சார்.

வெரிகுட் ரவி. சீக்கிரம் இந்த கேஸ்ல குற்றவாளிய கண்டுபுடிக்கனும், உங்களுக்கே தெரியும் பாடி கிடந்த ஏரியா எம்எல்ஏ வீட்டு பக்கம். அதுவும் இல்லாமா செத்துபோனவ அந்த நவீனோட கார் டிரைவராம், அதனால நமக்கு மேலிடத்தில இருந்து பிரஷர் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கும்.சோ எவ்ளோ ஸ்பீடா இந்த கேஸ்ஸ முடிக்க முடியுமோ முடுச்சுருங்க, ரிப்போர்ட் வந்ததும் எனக்கு கால் பன்னுங்க.

சரியென தலையசைத்துவிட்டு வீரமாய் அவருக்கு ஒரு சல்யூட் வைத்துவிட்டு ஸ்டேசனுக்கு கிளம்பினார் ரவி, பாவம் அவர் இந்த கொலை இத்துடன் முடியாது இது ஆரம்பம் தான் என அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ரவி ஸ்டேசனுக்கு உள் நுழையும் போதே அங்கு ஐம்பது பேர் கான்ஸ்டபிள் மூர்த்தியிடம் சலசலத்து கொண்டிருந்தனர், இறந்தவனின் உறவினர்கள் போல தெரிந்தது, அவர்களை சமாளித்து அனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது,

சிறிது நேரத்தில் உயர்தர சொகுசு பென்ஸ் கார் ஒன்று ஸ்டேஷன் வாசலில் வந்து நின்றது, அதிலிருந்து பகட்டாய் இறங்கி வந்தான் நவீன், பணத்தின் தோரனை அவன் உடலெங்கும் மின்னியது, அவனை கண்டதும் தானாக ஒரு கடுமை வந்து ஒட்டிக்கொண்டது ரவியின் முகத்தில்.

நேராக ரவியிடம் வந்து
வணக்கம் இன்ஸ்பெக்டர் சார், நான் நவீன் உங்களுக்கு தெரியும்னு நினைக்கற ஏளனமாய் வந்தது வார்த்தைகள், காலைல செத்துபோனவன் என்னோட பர்ஸ்னல் டிரைவர் மணி, என்கிட்டதான் பத்து வருசமா வேலை செய்றான் ரொம்ப விஸ்வாசமானவன் , அவன் இறப்புல எனக்கு நிறைய சந்தேகம் இருக்கு எனக்கூறி தன்னுடன் வந்த வக்கீல் ரமேஷை ஒரு பார்வை பார்த்தான்,

உடனே ரமேஷ்!
இந்தாங்க சார் கம்ப்ளைன்ட் லெட்டர், இத எடுத்துக்கிட்டு சீக்கிரம் அந்த குற்றவாளி யாருனு கண்டுபிடிங்க, என தன் பங்கிற்கு பேசிவிட்டு ரவியின் கடுமையை புரிந்துகொண்டு அமைதியாகிவிட்டான்,

ஆல்ரெடி கேஸ் பைல் ஆகிருக்கு மிஸ்டர் நவீன், கூடிய சீக்கிரம் அந்த கொலைகாரன கண்டுபுடுச்சுருவோம், வார்த்தைகள் வெப்பமாக வெளிவந்தது ரவிக்கு, நவீனும் வேறு வழியின்றி ஒரு கனல்பார்வை பார்த்துவிட்டு கிளம்பினான்.

அவன் வெளியே கிளம்பவும் மூர்த்தி சிசிடிவி புட்டேஜ்ஜை கொண்டுவரவும் சரியாக இருந்தது, தலையை சிலிப்பிவிட்டு கோபத்தை மட்டுபடுத்தி தனது லேப்டாப்பில் புட்டேஜ்ஜை பிளே செய்து ஒடவிட்டான்,
சரியாக அதிகாலை மூன்றேகால் மணிக்கு கருப்பு நிற ஆம்னி ஒன்று பேக்கரியை தாண்டி நூறு மீட்டர் தொலைவில் நின்றது.
அதிலிருந்து நீண்ட நெடிய உருவம் ஒன்று கீழ்இறங்கி பின்கதவை திறந்து பிணத்தை வெளியே எடுத்து போடுவது தெரிந்தது,

ஆம்னியின் நம்பர் பிளேட் மறைக்கபட்டிருந்தது, இறங்கிய உருவம் கருப்பு கோட்டால் தனது உடல் முழுவதையும் மறைத்திருந்தது, முகத்தில் மாஸ்க், கைகளில் உறை என சிறிதும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கன கச்சிதமாக இருந்தது.

சரியாக இரண்டு நிமிடங்கள் தான், அந்த வண்டி வந்த தடயமே இல்லாமல் சென்றுவிட்டது, ரவிக்கு இந்த கேஸ் சாமானிய பட்டதல்ல என மெல்ல புரிந்தது.

மே 14 மாலை 4.00pm:

டாக்டர் சதீஷ்குமாரிடம் இருந்து போன் வந்தது ரவிக்கு, அவசரமாக மருத்துவமனைக்கு வருமாறு கூறவும் அவர் பேச்சில் தெரிந்த பதட்டத்தை கண்ட ரவி விரைவாக அங்கு சென்றார்,

வாங்க மிஸ்டர் ரவி, காலைல வந்த அந்த பாடியோட ரிப்போர்ட் வந்துருச்சு என் சர்வீஸ்ல இப்படி ஒரு கொடூர கொலைய நான் பாத்ததே இல்லை என கலக்கமாக விவரிக்க ஆரம்பித்தார் ,

கைகால்கள அசைக்க முடியாதபடி இறுக்கமா கட்டி வெச்சுட்டு
கூர்மையான ஆயுதம் கொண்டு இரண்டு கண் இமைகள அறுத்துருக்காங்க, பிறகு கண்ணோட கருவிழியில ஊசியால குத்தி கிழுச்சுருக்கு, ஒரு பல்லு விடாம அடுச்சு ஒடச்சுருக்காங்க, உள்நாக்க கூட விடாம இழுத்து அறுத்துருக்காங்க மிஸ்டர் ரவி,

கை அப்ரம் கால்ல நகங்களோட சேத்து பாதி சதை பிச்சு எடுக்கப்பட்ருக்கு, அவனோட உறுப்பு பகுதில கொடூரமா வெட்டிருக்காங்க, இதுல முக்கியமான விஷயம் என்னனா இதெல்லாம் உயிரோடு இருக்கப்ப நடந்துருக்கு. கடைசியா வயித்துல குத்தி கொல பன்னிருக்காங்க. இட்ஸ் ஹன்றேடு பர்சன்ட் பிளேனுடு மர்டர் என கூறி ரிப்போர்ட்டை ஒப்படைத்தார் சதீஷ்.

டாக்டரிடம் சொல்லிவிட்டு கிளம்பும் போது,
ஒன் மினிட் ரவி? இந்த பேப்பர் பாடியோட பாக்கெட்ல கிடச்சுது, மறந்துட்ட என ஒரு துண்டு காகிதத்தை தந்தார்,

பிரித்து பார்த்த ரவிக்கு சற்று அதிர்வாகத்தான் இருந்தது, காகிதத்தில்
"மரணம் உயிர்த்தெழும் " என இரத்தத்தால் எழுதப்பட்டிருந்தது.

கமிஷ்னரிடம் சென்று ரிப்போர்ட்டை தந்துவிட்டு கொலை விதத்தை சொன்ன போது அவரும் சற்று விதிர்து தான் போனார், கொலையாளியை சீக்கிரம் கண்டுபிடிக்கனும் ரவி இது என்னமோ க்ளு மாதிரி இருக்கு. அடுத்து இது மாதிரியான அசம்பாவிதம் நடக்குறதுக்கு முன்னாடி நம்ம அவனை அரஸ்ட் பன்னிருக்கனும். அதுக்கான நடவடிக்கைய உடனே ஸ்டார்ட் பன்னுங்க என கூறிவிட்டு, கமிஷ் னர் ராஜவேல் சென்றுவிட்டார்.

மே 14 மாலை 6.00pm:

ஸ்டேசன் வந்த ரவிக்கு ஏனோ மனது பிடிபடவில்லை,
சப் இன்ஸ்பெக்டர் கார்த்தியை அழைத்து இறந்து போன மணியை பற்றி விசாரித்து நாளை காலைக்குள் அறிக்கை தரும்படி கூறிவிட்டு பாடி கிடந்த இடத்திற்கு சென்றார்,

சிறிது நேரம் அங்கு நின்றவர் எதாவது தடயம் இருக்கிறதா என மறுபடியும் ஆராய்ந்து ஏமாந்துதான் போனார், பக்கத்தில் இருந்த வீடுகளில் விசாரித்த போது யாருக்கும் எதுவும் தெரியவில்லை.


மே 15 காலை 9.00am:

காலையில் ஸ்டேஷன் வந்த ரவிக்கு இறந்து போன மணியின் தகவல்கள் டேபிளில் தயாராக இருந்தது, நவீனுக்கு வலதுகை இவன்தான் ,பத்துவருடமாக அவனிடம் டிரைவராக வேலைசெய்பவன் என நினைத்திருக்க,
நவீனுக்கு அனைத்து அன்டர்கிரவுன்ட் வேலைகளையும், அவனுக்கு பிடித்த பெண்களை கடத்தி சென்று தருவது போன்ற கீழ்தரமான வேலைகளும் செய்து வந்தது தெரிந்தது.

இவனை போன்ற விஷ கிருமிகள் உயிரோடு இருப்பதற்கு இறந்ததே மேல் என நினைத்தவன் அந்த தகவலை தூர எறிந்துவிட்டு கொலையாளியை வேறு எந்த வகையில் நெருங்குவது என சிந்திக்கலானான்.

மண்டையை குடைந்து யோசித்து கொண்டிருந்த நேரம் தீடீரென அவன் மூளையில் பல்பு எரிந்தது,
ஒருவேளை நவீனால் இறந்த பெண்களின் குடும்பத்தின் மூலம் இந்த கொலை நடந்திருக்குமோ என சரியாக நூலை பிடித்தான். ஏற்கனவே நவீன் வழக்கை விசாரித்திருந்த ரவிக்கு இது சிரமமாக தெரியவில்லை,

தான் விசாரித்த இறந்த பெண்களின் வீட்டிற்கு சென்றால் ஏதேனும் தகவல்கள் கிடைக்கலாம் என எண்ணியவன் அதை செயல்படுத்தவும் செய்தான்..

மே 15 இரவு 11.00pm:

உன்னாலதான்டா எனக்கு இவ்வளவு பிராபளம், உன்ன யாருடா அவங்க அப்பன் கூட இருக்கும் போது அந்த நிஷாவ தூக்க சொன்னது?
நாந்தா அவ்ளோதூரம் சொன்னனே! பொறுமையா இருடா டைம் கிடைக்கும் போது தூக்கலாம்னு , தேவையில்லாமா கோர்ட் கேஸ்ஸுன்னு, நல்ல வேலை உன்பேரு வெளியே வரல இல்லனா இன்னும் 100கோடி அவனுக மூனு பேருக்கும் தந்திருக்கனும்.

நா என்னடா பன்றது மச்சி பாத்ததும் புடுச்சு போச்சு! அன்னைக்கே தூக்கலாம்னு சொன்ன. நீதான் ஆளுக இருக்காங்கனு தடுத்த , அன்னைக்கு நைட் நானும் மணியும் வண்டியில வரும்போது பச்சி அந்த கிழவன் கூட வந்துட்டு இருந்தா அதா ஈஸியா தூக்கிட்ட.

மேட்டர முடுச்சுட்டு விட்டர்லாம்னு பாத்தா ஓவரா துள்ளுனா அதா அறுத்து போட்டுட்ட, அவங்கப்பன் கோர்ட் கேஸ்ஸூ போவானு தெருஞ்சுருந்தா அன்னைக்கே அவனையும் முடுச்சுருப்ப,
விடுடா மச்சி ,இதுவர எத்தன பேர்த்த சைலன்டா முடுச்சுருப்போம் இது கொஞ்சம் ஸ்லிப் ஆகிடுச்சு, அதா எல்லாத்தையும் பணத்த வெச்சு சரி கட்டிட்டோமே, நம்பள யாராது எதாவது பன்ன முடியுமா என மப்பும் மந்தாரமாய் உளரிக்கொண்டிருந்தான் நவீனின் உயிர் சினேகிதனும் தொழில் பங்குதாரனுமான
விதுரன்.

இப்ப அது பிராபளம் இல்லடா ஹாஸ்பிடல் ல நம்ம ஆளு ஒருத்தன் மணியோட ரிப்போர்ட் அனுப்பி வெச்சுருக்கான், அவன யாரோ கொல பன்னிருக்காங்க , அதுவும் ரொம்ப கொடூரமா.
நேத்து நைட்கூட சொல்லிட்டு தான போனான் நாளைக்கு ஒரு குட்டி இருக்கு தூக்கிடலாம் சார்னு. ஆனா காலைல செத்துட்டான் ஒரு வேல நம்ம மேட்டர் தெருஞ்ச எவனாது ??

அப்டியெல்லாம் இருக்காதுடா எதுக்கும் நம்ம ஆளுகள விட்டு விசாரிக்க சொல்லுவோம் டா,
அன்னைக்கே சொல்லிட்டு இருந்தான் அவன் சின்னவீட்டோட புருஷனுக்கும் அவனுக்கும் சண்டைனு, அதுல எதும் ஆகிருக்கும் என இயல்பாக கூறினான் விதுரன் தங்களுக்கு வரப்போகும் ஆபத்தை அறியாமல்...

மே 16 அதிகாலை 2.00am:

நல்ல தூக்கத்தில் இருந்த ரமேஷிற்கு ஓயாமல் கத்தி கொண்டிருந்த நாயின் சத்தத்தை கேட்டு விழுப்பு தட்டியது,
அரை தூக்கத்தில் வெளியே வந்து பார்த்த போது வீட்டிற்கு பின்புறத்தை பார்த்து நாய் விடாமல் கத்தி கொண்டிருந்தது,

என்னவென்று பார்க்க சென்றபோது அங்கே கும்மிருட்டாக இருந்தது, சரி லைட்டை போட்டு பாக்கலாம் என திரும்பிய நொடி?

அங்கே,

தொடரும்...
 
Top