கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

கொலை (காதலன்) - 3

நீண்ட நெடிய ஆஜானுபாகுவான உருவமொன்று கண்களில் வெறியுடன் அவனை உற்று வெறித்துகொண்டிருந்தது, திடீரென அவனை பார்த்ததும் , அவன் நின்றிருந்த தோரனையும், உடல் விரைப்பையும் பார்த்து ரமேஷிற்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது,

இருந்தும் அதை புறம் தள்ளி வீராப்பாய்,
ஏய் யார்டா நீ?? இங்க என்ன பன்ற??
நா யாரு தெரி.....யு . .... காற்றில் மெல்ல கரைந்தது அவன் குரல். அந்த நெடிய உருவம் தன் கையில் வைத்திருந்த கட்டையால் மண்டையில் பட்டென இடிபோல் ஒரு அடியை தர அதிர்வை தாங்காமல் மூளை செயலிழக்க அங்கேயே மயங்கி சரிந்தது ரமேஷின் உடல்.

மே 16 காலை 6.00am:

மெல்ல விழிப்பு தட்டிய ரமேஷிற்கு இருட்டில் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை.. சில நொடிகளுக்கு பிறகே இரவு நடந்தது மெதுவாய் நினைவுக்கு தட்ட
மூளை ஆபத்திற்கான சமிக்கைகளை தர,
தப்பிக்க வேகமாய் எழ முயல
கை கால்களை சிறிது கூட அசைக்க முடியவில்லை. அப்போது தான் தெரிந்தது கை கால்கள் இறுக்கமாக கட்டப்பட்டிருந்ததை,
மெதுவாக பயம் நெஞ்சை கவ்வியது, கதவு திறக்கும் சத்தம் கேட்டு பார்த்த போது அங்கே அந்த நெடிய உருவம் ரமேஷை நோக்கி வந்து கொண்டிருந்தது,

வந்ததும் வணக்கம் தி கிரேட் பேமஸ் கிரிமினல் லாயர் ரமேஷ் சார், எப்டி இருக்கீங்க என பேசிகொண்டே மெதுவாக தனது கையில் வைத்திருந்த பெட்டியை திறந்து அதிலிருந்து சில பொருட்களை வெளியே எடுத்து வைத்துக்கொண்டிருந்தான் அந்த நெடியவன், பேச்சில் ஏகபோக வன்மமும் அளவறியா கோபமும் போட்டிபோட்டது,

நெடியவன் வெளியே எடுத்து வைத்த பொருட்களை பார்ததும் ரமேஷிற்கு ஒரு நொடி இதயம் வெளியே விழும் அளவிற்கு அதிவேகமாக துடித்தது, இதய துடிப்பு அதிகமாகவும் வியர்வை சுரப்பிகள் வேகமெடுத்து வேர்வையை வெள்ளமாக ஓட விட்டது.............
ரிலாக்ஸ் சார் ஏன் இவ்வளவு பதட்டம், இன்னும் நீங்க பார்க்க வேண்டியது எவ்வளவு இருக்கு என அசட்டையாய் வாய் கூறினாலும் கண்களில் ஒரு கணல் எரிந்து கொண்டே இருந்தது.

ரமேஷிற்கு என்ன ஓட்டம் பலவாறாய் பலகீனமாய் இருக்க, அந்த நெடியவன் அனைத்து பொருளையும் வெளியே எடுத்து வைத்து விட்டு,, சொல்லுங்க லாயர் சார் இதுல உங்களுக்கு எந்த பொருள் புடிக்கும்னு சொன்னீங்கனா எனக்கு வசதியா இருக்கும் என அந்த கூர்மையான ஆயுதங்களை பார்த்து அவனிடம் கேட்க லாயருக்கோ
நெஞ்சம் பந்தயக்குதிரையை விட வேகமெடுத்து பாய்ந்தது பயத்தில்.

ஓ.... சாரி சார் எதுக்கு இந்த கேள்விய உங்ககிட்ட கேட்கறனு சொல்ல மறந்துட்ட பாருங்க ... சோ சிம்பிள் உன்ன மாதிரி கேடுகெட்டவன கொல்றதுக்குதான்டா என ஆவேசமாய் கர்ஜித்துவிட்டு சட்டென விட்டான் ஒரு அறை வலது கண்ணத்தில்,
காதின் ஓரத்தில் இரத்தம் மெதுவாய் நகர்ந்து தாடையின் ஊடே மெல்ல வழிந்தது.

நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி டா, ஏன்னு கேட்கறயா உன்னோட சாவ நீயே லைவ்வா பாக்க போறியே அதான் என கூறிவிட்டு அறை அதிர கொடூரமாய் சிரித்தான் அந்த நெடியவன், தீடீரென சிரிப்பை நிறுத்தியவன் கோபமாய் ரமேஷை நெருங்கி ஏன்டா அந்த நாய் எத்தன பொன்னுக வாழ்க்கைய நாசம் பன்னீருக்கான், காசுக்காக அவன ஈசியா எல்லா கேஸ்ல இருந்தும் தப்பிக்க விட்றீங்க நீயும் அந்த பொறுக்கி ஜட்ஜ் பிரபாகரனும்,

இதே உன்னோட பொன்ன நா தூக்கிட்டுபோய் எல்லாத்தையும் முடுச்சுட்டு சங்க அறுத்து தூக்கி போட்டுட்டு போற, உன்கிட்ட வந்து இப்டி பன்னீட்டேன் என்ன காப்பாத்துனு பணம் கோடி கணக்குல தர, என்னயும் கேஸ்ல இருந்து வெளிய கொண்டுவந்துடு சரியா என உறுமலுடன் கேட்டான்..

ம்கும்.... ம்கும்.... என தன் கோபத்தை வெளிபடுத்த உடலை அசைத்த ரமேஷிற்கு அடுத்த நொடி நெஞ்சினில் மரண மிதி ஒன்று விழுந்தது, ஏன்டா பரதேசி உன்னோட புள்ளைனா பத்திரம்,
ஊரான் வீட்டு புள்ளையினா எப்டிபோனாலும் பரவாயில்லை அப்டிதான்டா என கடுங்கோபமாய் நெஞ்சிலேயே மிதித்தான் அந்த நெடியவன்,

உயிர் வலி என்ன என்பதை அந்த நெடியவனின் அடியில் புரிந்து ரமேஷிற்கு, குறுத்தெழும்பு ஒன்று உடைந்து வலியை ரணமாக்கியது, கீழே விழுந்துவனை தூக்கி சேரில் அமர்த்தி விட்டு உனக்கொரு விஷயம் தெரியுமா
என்று சொல்லிவிட்டு பக்கத்து அறைய திறந்து காட்ட அங்கே கந்தலாய் கிழிக்கப்பட்ட பிணம் ஒன்று இரத்த வெள்ளத்தில் கிடந்தது,

அந்த பிணத்தை பார்த்த ரமேஷிற்கு உலகமே இடிந்து தன் தலைமேல் விழுந்ததை போன்ற உணர்வு, ஆம் அங்கு பிணமாய் கிடந்தது நேற்று இரவு ஒன்றாய் மது அருந்தி சிரித்து பேசி அரட்டை அடித்த பிரபாகரனே தான்,

என்ன ரமேஷ் இந்த ஜட்ஜ் இங்க எப்டி வந்தானு யோசிக்கிறயா, உனக்கு
போட்ட அதே பிளான் தான், என பேசிக்கொண்டே ஒரு கூர்மையான கத்தியை எடுத்து கொண்டு அவனிடம் நெருங்கினான் அந்த நெடியவன்.
எவ்வளவு திமிறியும் ஒரு இன்ஞ் கூட அசைய முடியவில்லை பாவம் ,, தனக்கு மரணம் அருகால் இருக்கிறது என அறியும் நொடி மனதிற்குள் எப்படி இருக்கும் அப்படித்தான் இருந்தது ரமேஷிற்கு,,

ஜட்ஜ் எப்டி செத்தான்னு யோசிக்கிறயா ரமேஷ்??? கவலபடாத இன்னும் கொஞ்ச நேரத்துல தெரியும் என அர்த்தமாய் கூறிவிட்டு தலையை கால்களால் சுவற்றோடு அழுத்திகொண்டு சலாரென இமைகளை சீவினான்,, வாய் ஒட்டப்பட்டிருந்தும் அந்த வலியின் வேகத்தால் வந்த கதறல் அறையில் எதிரொலித்தது, சீத்தென தெரித்த இரத்தம் கண்களை நிரப்பி வேகமாக கீழ் நோக்கி ஓடி கொண்டிருந்தது,

அந்த கதறல் அந்த நெடியவனின் செவியை எள்ளளவும் எட்டவில்லை, மாறாக நெரம் செல்ல செல்ல ஒரு மூர்க்கம் வந்து முடிவிலியாய் ஒட்டிக்கொண்டது, கத்தியை வைத்துவிட்டு இரண்டு ஊசியை கையில் எடுத்த அந்த நெடியவன்,
இரத்தம் வழிந்து ஓடி கொண்டிருந்த கண்களின் மையத்தில் உள்ள கருவிழியின் பூ பகுதியில் சட்டென ஓங்கி குத்த அரைஜான் ஊசி கண்களில் இறங்கியது, ஒரு பேய் அலறல் தொண்டை கிழியும் அளவிற்கு , அந்த அறை முழுவதும் மரணஓலம் ஓயாமல் ஒலித்தது.

மெதுவாய் ரசனையாய் சுத்தியலை எடுத்தவன் ஒட்டப்பட்டிருந்த டேப்பை வெடுக்கென்று பிடுங்கி
பட்டு பட்டென பற்களை தட்டவும் இரத்தத்தோடு சேர்ந்து பற்களும் கொட்டியது வேகமாக, மறுபடியும் கத்தியை எடுத்தவன் சரக்கென ஒரு கோடு உள்நாக்கில் , மளமளவென குருதி கொட்டியது நாக்கு வெட்டப்பட்ட இடத்திலிருந்து, கிட்டத்தட்ட உயிர் பிரிந்த நிலையில் அசைவற்று கிடந்தான் ரமேஷ். மேல்மூச்சு மட்டுமே இழுத்து கொண்டிருந்தது ..
வேகமாக கட்டிங் பிளேடை எடுத்தவன் கை கால்களின் நகங்களை சதையுடன் சேர்த்து வெடுக்கென்று பிச்சு பிச்சு எடுக்கவும் துடி துடித்து போய் வெதும்பினான் ரமேஷ். இன்னமும் ஆத்திரம் தாளாமல் கருக்கருவாளை கொண்டு அவனது உறுப்பு பகுதியில் கணக்கு வழக்கின்றி சரமாரியாக வெறி தீரும் வரை வெட்டினான் அந்த நெடியவன்.. இரண்டு முறை மேல் எழும்பி பின் நிரந்தரமாக அடங்கியது ரமேஷின் உடல்.


மே 16 காலை 10.00am:

கமிஷ்னர் அலுவலகம் வந்த ரவி அவரை சந்தித்து தன் சந்தேகங்களை விவரித்து விட்டு, இறந்து போன பெண்களின் வீட்டிற்கு விசாரணைகாக கிளம்பிய போது,
ஒரு நிமிஷம் ரவி, இந்த கேஸ்ல உங்களுக்கு சப்போர்ட்டா இருக்க புதுசா ஒருத்தவங்கள அப்பாய்ன்ட் பன்னீருக்க, ரொம்ப அறிவாளி பெங்களூர்ல இருந்து வந்துருக்காங்க, இந்த கேஸ்ல உங்களுக்கு ரொம்பவும் யூஸ்புல்லா இருப்பாங்க ...
மீட் மிஸ்ஸஸ் ஜெயலட்சுமி ஆதிசேகர் என்று ஒரு பெண்ணை அறிமுகபடுத்தினார்.

ஜெய் அவர்களின் கண்களில் கண்ட கூர்மையிலேயே தெரிந்தது சாதுரியமான பெண்மணி என்று, என்ன ஒன்று சாப்பாட்டை கண்களால் கூட கண்டிருக்க மாட்டார்கள் போல மெலிந்து போய் இருந்தார், அவருக்கு வணக்கம் கூறவும் அவரும் ரவிக்கு திரும்ப தமிழ் முறைப்படி வணக்கம் கூறவும் சந்தோசமாக தான் இருந்தது ரவிக்கு....

நாளை டுயூட்டில ஜாய்ன்ட் பன்னிகோங்க என தகவல் தெரிவித்துவிட்டு கமிஷ்னர் சென்றுவிட, சரி மேடம் நீங்க நாளைக்கு காலைல ஸ்டேஷன் வந்து ஜாய்ன்ட் பன்னிக்கோங்க, இப்போ நா அந்த கொல கேஸ் சம்மந்தமா தா வெளிய போற
நாளைக்கு ஸ்டேஷன் ல சந்திக்கலாம் என ஒரு புன்னகையுடன் விடைபெற்றார் ரவி.

மே 16 மதியம் 1.00pm:

மொத்தம் நவீனால் இறந்த ஆறு பெண்களின் வீட்டிற்கும் செல்ல திட்டமிட்டிருந்த ரவிக்கு மூன்று வீடுகளையே முழுதாய் விசாரிக்க முடியவில்லை, பிள்ளையை எமனுக்கு தாரைவார்த்து விட்டு வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொண்டு ஓலமிடும் அவர்களை பார்க்க பார்க்க தானாய் கண்கள் கலங்கியது..

பாவம், அனைவரும் நடுத்தர மக்கள்... எத்தனை கனவுகோட்டை கட்டி அழகு பார்த்திருப்பார்கள் தத்தம் மகள்களை பற்றி, அனைத்தும் கல் பட்ட கண்ணாடி போல சிதறிபோனது ,, அவன்தான் குற்றவாளி என அறிந்தும் தண்டனை தர முடியாத தன் கையறு நிலை எண்ணி வெட்கித்தான் போனான். மிச்சத்தை நாளைக்கு பார்க்கலாம் என கணத்த மனதுடன் வெறுமையாய் திரும்பினான்..

மே 17 காலை 2.00am:

மெதுவாய் வீதியில் ஊர்ந்து வந்து கொண்டிருந்தது அந்த கருப்பு நிற ஆம்னி,
நேராக அங்கு இருந்த மருத்துவமனைக்கு சில அடி தூரம் தாண்டி நின்றது. அதிலிருந்து நெடிய உருவம் மெதுவாக கீழ் இறங்கி வண்டியின் பின் கதவை திறந்து இரண்டு சடலத்தையும் தூக்கி வீசிவிட்டு மருத்துவமனையின் பெயர் பலகையில் இருந்த நிறுவனர் காசி என்ற பெயரை உற்று நோக்கிவிட்டு ஒரு வன்மத்துடனே வேகமாய் கிளம்பியது..

ஒரு பங்களாவிற்குள் நுழைந்த ஆம்னி மூலையில் உள்ள இருட்டு அறைக்குள் தஞ்சம் புகுந்தது, மெதுவாக அதிலிருந்து இறங்கிய அந்த நெடியவன் வேகமாக உள்ளே சென்று தனது வேசங்களை கழட்டி தூர எறிந்துவிட்டு குளிர்ந்த நீரால் தன் கோபத்தை குறைத்து கொண்டு இருந்தான்.. மனமெங்கும் மந்திரமாய் நிஷா நிஷா நிஷா என்று ஓயாமல் ஒலித்து கொண்டே இருந்தது...

குளித்தவுடன் வந்து மெத்தையில் சரிந்தவனின் மனமோ மெல்ல தன் இனியவளின் இனிமையை ரசித்த காலத்திற்கு இழுத்து சென்றது. . ..


மே 17 காலை 5.00am:

ஓயாமல் அடித்து கொண்டிருந்த தன் மொபைலை எரிச்சலுடன் எடுத்து பார்த்துவிட்டு , முகத்திரையில் நவீன் நம்பரை பார்த்தவுடன் வேகமாக அட்டன் செய்தான் காசி,

வணக்கம் சார் சொல்லுங்க என பவ்யமாய் பேசியவன் ,, அந்தபுறம் இருந்து வந்த பதட்டமான கட்டளையை பார்த்து உடனே தன் வாட்ஸ்ஏப் ஜ ஓபன் செய்து நவீன் அனுப்பியிருந்த புகைபடத்தை பார்த்தவன் ஒரு நிமிடம் உறைந்து தான் போனான். ரமேஷும் பிரபாகரனும் இரத்த வெள்ளத்தில் கிடக்கும் காட்சிதான் அது....
கண்கொட்டாமல் அந்த புகைபடத்தை பார்த்தவன் இன்னொரு புகைபடம் வந்ததற்கான குறிப்பை பார்த்தவன் அதை திறந்து பார்த்தவன் அப்படியே அதிர்ந்து சிலையாகி போனான்!!!!!!!!!!!!!!!!

அந்த போட்டோவில்?
 
Top