கோடுகள் 1
நமக்கு எவ்ளோ பேர் புகழ் கிடைச்சாலும் நாம அடுத்தவங்களை பார்த்து பொறாமைப் படாம இருக்கும் போது மட்டும் தான் நாம செய்யற நல்லதுக்கான பலன் நம்மை வந்து சேரும். மனசோட அடி ஆழத்தில கூட பொறாமை இருக்கக் கூடாது. அப்படி இருந்துட்டா நமக்கு வரவேண்டிய புண்ணியத்தை நாமளே வேண்டாம்ன்னு சொல்றதுக்கு சமம்.
- பொதுமறையில் பொதிந்தவை
◆1◆
"சர்வா.. சர்வா.. சர்வா.." என்று அந்த சிறிய ஸ்டேடியத்தை சுற்றி குதூகலமாக குரல் கொடுத்து அவனை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த ரசிகர் ரசிகைகளின் மேல் துளி கூட கவனம் இல்லாமல், தனக்கு முன்னே இருக்கும் டார்ட் போர்டின் மேல் முழு கவனம் வைத்திருந்த சர்வாவின் நெற்றியில் இருந்த வியர்வைத்துளி எங்கே தான் இறங்கி வந்து அவன் கவனத்தைக் கலைத்து விடுவோமோ என்று அஞ்சி ஆங்காங்கே துளிர்த்த இடத்தில் நின்றிருந்தது.
தன் கையில் இருக்கும் நவீன ரக வில்லை இடது கரத்தால் வலுவாகப் பிடித்திருந்த சர்வா, வலது கரத்தை அம்பின் நுனியோடு வில்லின் நாணில் அழுத்தமாய் பின்னோக்கி இழுத்து தன் இலக்கை குறி பார்த்து வலக்கரத்தின் பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் விடுவிக்க, அவன் குறி வைத்த இலக்கை தப்பாமல் சென்று சரியாக நடுவில் உள்ள சிகப்புப் புள்ளியை குத்தி நின்றது அவ்வம்பு.
"எஸ்" என்று அவன் தலை சாய்த்து வலது கையை மடக்கி வெற்றிக்குறியை கூறி தன்னை ஊக்குவித்தவர்களைக் காண, அவர்களோ அவனுக்கு மேல் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.
"வெல் டன் மை பாய்" என்று அவன் தோளில் தட்டிக்கொடுத்து வாழ்த்தினார் அவனின் பயிற்சியாளர் போஸ்.
அவன் அவரிடம் ஸ்நேகமாக சிரிப்பை வழங்கிவிட்டு, தன் துவலையை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டான்.
பெண் ரசிகைகள் "சர்வா" என்று குரல் எழுப்ப, அவர்களை நோக்கி கையசைத்தவன், சற்று தள்ளியிருந்த நாற்காலியை ஆக்ரமித்தான்.
அவன் அருகில் அமர்ந்து அவன் நண்பன் சார்லி, "டேய் சர்வா கஷ்டப்பட்டு அது யாருன்னு கண்டுபிடிச்சிட்டு வந்துட்டேன் டா." என்று மெல்லிய குரலில் அவனுக்கு மட்டுமே கேட்குமாறு சொன்னான்.
"என்ன டா சொல்ற? என்ன டா உன் கண்டுபிடிப்பு? சொல்லு கின்னஸ்ல போட சொல்லுவோம்" என்று கிண்டல் அடித்தவனை, முதுகில் செல்லமாய் ரெண்டு அடி போட்டு,
"டேய் விளையாடாதே, ஆர்ச்சரி அசோசியேஷன்ல உன் மேல கம்ப்ளெய்ண்ட் கொடுத்தது யாருன்னு கண்டு பிடிச்சிட்டேன் டா" என்று வேகமாகக் கூறினான்.
அதற்கு மெலிதாய் சிரித்த சர்வேஸ்வரன், "அதை ஏன் போய் நோண்டுற நீ?"என்று அவனை கழுத்தோடு வளைத்து கைபிடிக்குள் வைத்துக்கொண்டான்.
அதை தூரத்தில் இருந்து கண்ட போஸ், "பாய்ஸ், கொயட்" என்று சத்தமிட,
"சர்வா விளையாடாத டா. உன்னை செலெக்ஷன்ல உள்ள விடக்கூடாதுன்னு வேணும்ன்னே செஞ்சிருக்காங்க. அது யார்ன்னு தெரியணும்ல. அதான் கண்டுபிடிச்சேன்" என்று ஆதங்கத்தோடு கூறிய நண்பனை கன்னத்தில் முத்தமிட்டான் சர்வா.
அதை தொலைவிலிருந்து கண்ட அவன் ரசிகைகள், அங்கே வில்லம்பு விடும் வீரனை மறந்து "சர்வா.. சர்வா.." என்று மீண்டும் குரலெழுப்ப, கடுப்பான போஸ், "கெட் அவுட் பாய்ஸ்" என்று கத்திவிட்டு, "நீ இங்க ஏய்ம் பண்ணாம ஏன் ஆடியன்ஸை கவனிக்கிற.. ஃபோக்கஸ்" என்று அந்த வீரனை விரட்டினார்.
அந்த அரங்கை விட்டு இருவரும் வெளியே வர, அவனை கண்ணெடுக்காமல் பார்த்த ஒருத்தியின் கவனைத்தை செல்போன் மணியடித்துக் கலைத்தது.
உச்சுக்கொட்டி அதை எடுத்தவள் அதில் தெரிந்த பெயரைக் கண்டதும், 'ஐயோ' என்று அலறி " சாரி ஹர்ஷி" என்று மன்னிப்பு வேண்ட,
"ஓடிபோயிடு குரங்கே. போனா போகுதுன்னு உன்னை பிரெண்டா வச்சுக்க நெனச்சேன். ஆனா நீ பண்ணுன வேலையில செம கோபத்துல இருக்கேன். நான் உன்னை என்ன செய்ய சொன்னேன்? நீ என்ன பண்ணிட்டு இருக்க?" என்று கடித்துக் குதறினாள் ஹர்ஷி.
"ப்ளீஸ் ப்ளீஸ் கோச்சுக்காத. நீ சொன்ன வேலையை செய்ய தான் கிளம்பினேன். கண்டிப்பா இன்னிக்கு நைட்டுக்குள்ள உங்க வீட்ல அதை கொடுத்துடுவேன். ப்ளீஸ் பேசு டி." என்று கெஞ்சிய பிரேமலதாவை பெரிய மனது செய்து மன்னித்தாள் ஹர்ஷி.
"சரி போய்த் தொலை. நான் சொன்ன வேலையை விட அப்படி என்ன டி தலை போகற வேலை உனக்கு?" என்று இலகுவாக அவள் கேட்டதும் தான் தோழியவளுக்கு மூச்சே முழுமையாக வந்தது.
"அதுவா?? அது.. அது.. வந்து.."என்று அவள் வெட்கத்தில் குழைய,
"அடச்சி.. நீ வெட்கப்படுறது போன்ல கேட்டுட்டு இருக்கற எனக்கே ஒரு மாதிரி இருக்கு. பக்கத்துல யாரும் பார்த்து மயக்கம் போட்டுட போறாங்க. எருமை. வெட்கப்படுறேன்னு கொடுமை பண்ணாம விஷயத்தை மட்டும் சொல்லு" என்றதும்
"அது ஒன்னும் இல்ல. வர வழியில என்னோட கிரஷ்ஷ பார்த்தேனா அதான் என் வண்டி அவனை பாலோ பண்ணி நேரா அவங்க இருக்குற இடத்துக்கு வந்துட்டேன்"
"என்னது க்ரஷ்ஷா? அது யாருடி ஊர்ல இல்லாத அந்த அழகன்?", நக்கல் வழிந்தது ஹர்ஷி குரலில்.
"ஏ உண்மைடி. செம அழகு தெரியுமா?" என்று சிலாகித்த தோழியை பக்கத்தில் இருந்திருந்தால் மூக்கிலே குத்தி இருப்பாள் ஹர்ஷி.
"அழகை விட்டுத்தள்ளு, அவன் பின்னாடியே போகற அளவுக்கு அவன் கிட்ட என்ன டி இருக்கு? அவன் பேர் கூட அவ்ளோ நல்லா இல்லையே" என்று இழுத்தாள்..
"நான் எங்க அவங்க பேரை சொன்னேன்.. சொல்ல மாட்டேன் டி. நீ எப்படி கேட்டாலும் நான் சொல்ல மாட்டேன்." என்று போனில் சண்டைக்கு நின்றாள்.
"ஏன் டி உன் க்ரஷ்.. பிறக்கும் போதே க்ரிஷ்ன்னு தான் பிறந்தானா? அவங்க அப்பா அம்மா அவ்ளோ கஞ்சமா? போனா போகுதுன்னு ஒரு பேர் கூடவா வைக்கல?" என்று மீண்டும் தூண்டில் போட்ட தோழியிடம்,
"அரட்டையை குறை டி. உனக்கு என்ன வீட்டுக்கு கொண்டு போய் காசு கொடுக்கணும் அவ்ளோ தானே. நான் கொடுக்கறேன். இப்போ போனை வை. அவங்க கிட்ட வர்றாங்க. ஐயோ அந்த கூட்டத்தைப் பார்த்து சிரிக்கிறாங்க. அப்போ என்னைப் பார்த்தும் சிரிப்பாங்க தானே?" என்று போனை காதில் வைத்திருப்பதை மறந்து அவள் சர்வாவைப் பார்த்து ஜொள்ளு விட, எதிர்புறம் ஹர்ஷி காதில் புகை வர நின்றாள்.
"மவளே அவன் உன்னை மட்டுமில்ல எல்லாரையும் பார்த்து சிரிப்பான் போல. ரோட் சைட் ரோமியோவாடி? நேர்ல வர மாட்டேன்னு தானே இப்படி சுத்திட்டு இருக்க. வந்தேன்னு வை தீபாவளி தான்." என்று கோபம் கொள்ள,
"ச்சி என்ன ஹர்ஷி பேசுற, பசங்க சிரிச்சாலே ரோட் சைட் ரோமியோவா? கண்ணியமான சிரிப்புக்கும் வழிசலுக்கும் வித்தியாசம் இல்லையா? மேல விழுந்து பழக பல பேர் தயாரா இருந்தும் அவங்க எவ்வளவு டிசென்ட்டா தள்ளி நீன்னு பேசுவாங்க தெரியுமா?" என்று சர்வாவின் புராணத்தைப் பாடினாள்.
"போதும் டி உன் க்ரஷ் புராணம். எனக்கு காது வலிக்கிது. நான் இன்னும் பத்து நிமிஷத்துல டிப்பார்ட்மெண்ட் போய்ட்டு கால் பண்ணுவேன். நான் சொன்ன வேலையை நீ முடிச்சிருக்கணும். இல்ல, உன்னையும் உன் கிரஷ்யும் சேர்த்து முடிச்சிடுவேன்." என்று பட்டென்று போனை வைத்தாள்.
"என்கிட்ட வாங்கிக்கிறதே உதவி, இதுல இவளுக்கென்ன இவ்ளோ அதிகாரம்?" என்று நினைக்க முடியாத அளவுக்கு ஹர்ஷி அவளின் உயிர்த்தோழி.
ஆனால் ஹர்ஷிக்கு தான் அப்படி அல்ல என்றும் அவள் அறிவாள். என்ன தான் அவள் தன்னை அப்படி நினைக்காமல் போனாலும் அவளுக்கு ஹர்ஷி என்றால் கொள்ளைப் பிரியம். அதற்கு அவளின் துணிச்சலும், எடுத்த முடிவில் தெளிவாகவும் பிடிவாதமாகவும் இருப்பதே காரணம்.
சர்வா அவனின் நண்பனோடு மரத்தடியில் நின்று பேச, அதைக் கண்டு பெருமூச்சு விட்டபடி, "இன்னிக்கும் பேச முடியல. எல்லாம் அந்த டாக்டர் கொரங்கால வந்தது." என்று திட்டிக்கொண்டே கைகடிகாரத்தைப் பார்த்தவள்,
"ஐயோ அவ போன் பண்றதுக்குள்ள போகணுமோ" என்று அடித்துப்பிடித்து சென்னை சாலை நெரிசலில் சிக்கி வியர்க்க விறுவிறுக்க அவள் சொன்ன வீட்டை அடைந்தாள்.
மரத்தடியில் நின்று சாவகாசமாக தன்னைப் பார்த்துச் சிரிப்பவர்களுக்கு பதில் சிரிப்பு உதிர்த்துக் கொண்டிருந்தான் சர்வா. அவனை முறைத்த சார்லஸ், "ஏன்டா எவ்ளோ சீரியஸ் விஷயம் சொல்லிட்டு இருக்கேன், என்னவோ புன்னகை மன்னன் மாதிரி எல்லாரையும் பார்த்து இளிச்சுகிட்டு இருக்க?" என்று யார் மீதோ இருக்கும் கடுப்பை தன் நண்பன் மீது காட்டினான்.
"சாரு.." என்று சர்வா ஆரம்பிக்க, "செப்பல்ஸ் பிஞ்சிடும்.. ஒழுங்கா சார்லஸ்ன்னு கூப்பிடுன்னு எவ்ளோ தடவை சொல்றது?" என்று மீண்டும் காய்ந்தவனிடம்,
"ஏன்டா சாருன்னா கூப்பிட வசதியா சின்னதா இருக்குல்ல?" என்று சிணுங்கல் போல சொன்னவனை தலையில் தட்டிய சார்லஸ்,
"பொம்பளப்பிள்ளை பேர் போல இருக்கு டா" என்று கூறி, "பேச்சை மாத்தாதே சர்வா. உன் மேல கம்பலைன்ட் பண்ணினது யாருன்னு உனக்கு முன்னாடியே தெரியுமா?" என்று வேகமாக சொல்ல வந்தவனை, கை நீட்டித் தடுத்தவன்,
"எதுக்கு சார்லஸ் இந்த ஆராய்ச்சி? யாரா வேணாலும் இருக்கட்டும். நான் தப்பு பண்ணி இருந்தா தானே பயப்படணும்? நான் எந்த தப்பும் பண்ணல. என் மேல எத்தனை பொய்ப் புகார் கொடுத்தாலும் அது பொய்ன்னு தானே நிரூபணம் ஆயிடும். சோ.. இதை இப்படியே இங்கேயே விட்டுட்டு ஜாலியா வா பீசா சாப்பிட போகலாம்." என்று அவனுக்குப் பிடித்ததை வைத்து திசை திருப்ப முயன்றான்.
"நீ இன்னிக்கு எவ்ளோ சிக்ஸ் அடிக்க ட்ரை பண்ணினாலும் எல்லாத்தையும் கேட்ச் பிடிப்பேன். ஒழுங்கா உண்மையை சொல்லு. உனக்கு அப்போ அவன் கம்பளைன்ட் கொடுத்தது ஏற்கனவே தெரியும்? அப்படித்தானே??" என்று கேட்கும் போதே சார்லஸ் குரல் இறுகி விட்டது.
"டேய் சார்லஸ், நாம என்ன பள்ளிக்கூட பசங்களா, காலேஜ் விடலையா, இல்ல வெட்டிப் பசங்களா? நாம கவர்மெண்ட் உத்யோகம் பாக்கறோம் டா. அதுக்குன்னு ஒரு மரியாதை இருக்குல்ல? கை புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு டா? அவன் தான் செஞ்சிருக்கணும். எனக்கு நல்லாவே தெரியும். செஞ்சு என்ன ஆச்சு? நான் செலெக்ஷன் மேட்ச் போகாம இருந்தேனா? ப்ரைஸ் வாங்காம வந்தேனா? இல்ல தானே. தப்பை தப்பு தப்பு ன்னு சொல்லி நாமளே அதை மேடையில் ஏத்தி பிரபலம் பண்ண கூடாது. கண்டுக்காம விட்டா, தானே நாலு தரம் முட்டி மோதிட்டு துவண்டு காணாம போய்டும். என்ன நான் சொல்றது புரியுதா?" என்று நண்பனை உருட்டி விரட்டினான் சர்வா, சீப் என்ஜினியர், தமிழ்நாடு ரயில்வேஸ்.
அவன் படித்து வேலைக்கு வந்த பின்னாலும் அவன் மனதை மயக்கிய வில்லம்புக் கலையை விட முடியாமல் விளையாட, ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ரயில்வேஸ் அணிக்காக அவனை அனுப்பி வைப்பர். ஏற்கனவே மாநில அளவிலான வெற்றியாளன் என்பதால் இந்திய அளவிலான போட்டியில் முதல் முறையே வெற்றியைப் பெற்று, அதன் பின் எங்கு போட்டி வைத்தாலும், அவனை முன்னிறுத்தும் அளவுக்கு வந்துவிட்டான். ஆறே மாதத்தில் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான மாநில செலெக்ஷன் நடந்த போது, இவன் மீது புகார் என்று அவன் வெற்றி அறிவிப்பை தாமதப்படுத்தி பின் தவறில்லை என்று உணர்ந்து அறிவிப்பை வெளியிட்டது.
அதில் மிகுந்த வருத்தத்துக்கு ஆளானவன் சார்லஸ் தான். ஏனென்றால் சார்லஸ் அவனுடன் சேர்ந்து பணி புரிபவன் தான். ஒருவருக்கு விடுமுறை தந்தால் மற்றவருக்குக் கிடையாது என்பதில் நிர்வாகம் தெளிவாக இருந்துவிட, ஒவ்வொரு முறையும் சர்வாவின் போட்டியைப் பார்க்க முடியாது தவிப்பான்.
அவன் பயிற்சிகளை மகிழ்ச்சியாக கண்டு களிப்பவனால் ஏனோ அவனின் ஒரு போட்டியையும் நேரில் பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை. அதனாலேயே, அதில் அவனுக்கு இருக்கும் எதிரி பற்றி அறியாமல் போனான்.
அன்று அவனை நிறுத்தி வைத்து பின் அறிவிப்பு வெளியிட்டத்தில், தான் அவனுக்கு அருகில் இருந்திருந்தால் அந்த காலதாமதத்தையும் தடுத்திருப்போம் என்று நினைத்தவனாக அவன் அதற்குக் காரணமானவனை வலை வீசித் தேடிக் கண்டு பிடித்து வந்தான்.
சர்வாவோ வெகு அமைதியாக, "அது சிவா தான்னு எனக்கு தெரியும் டா. விடு." என்று அதை புறந்தள்ளினான்.
"டேய் விளையாடாத டா. அவன் உன் மேல உள்ள பொறாமையில் இப்படி செஞ்சிருக்கான் டா." என்று கோபத்தில் கொதிக்க,
"மச்சி கூல் டா. நீயே சொல்லிட்ட அவனுக்கு பொறாமைனு. திறமை இல்லாதவனுக்கு தான் மாமே பொறாமை வரும். அதே போல எதையும் சந்திக்கத் துணியாதவனுக்கு தான் கோபம் வரணும். நான் எது வந்தாலும் சந்திக்க தயாரா இருக்கேன். சோ நோ டென்ஷன் டா" என்று சார்லஸை மார்போடு அணைத்துக்கொண்டான்.
"அப்ப அவனை விட்டுடலமா? எனக்கு அது பிடிக்கவே இல்ல டா. அவன் அவ்ளோ செஞ்சு, நாம திருப்பிக் கொடுக்கலன்னா சப்பையா போய்டாதா?" என்று ஆதங்கத்தோடு கேட்க,
"யார் மச்சி அவனை சும்மா விடப்போறது?? படு பயங்கரமா திருப்பித் தரத் தான் போறேன்" என்று சர்வா கண் சிமிட்டிச் சிரித்தான்.
"போறேன் இல்ல டா போறோம்.. உனக்கு எதிரின்னா அவன் எனக்கும் அப்படித்தான்" என்று சிலிர்த்தான் சார்லஸ்.
"ரைட்டு விடு மாமே.. பங்கமா அவனை செய்வோம்" என்று இருவரும் தோள் அணைத்தபடி தங்கள் இல்லம் நோக்கி நடைபோட்டனர்.
-இணையுமா????
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
-குறள் 163
குறள் விளக்கம் தான் முதல்ல வந்தது. குறள் கடைசியில் சேர்த்து இருக்கேன்.