கோடுகள் 2
ஒருத்தருக்கு தகுதியே இல்லன்னாலும் அவங்களை மதிப்புடையவரா காட்றதுக்கும் அவங்களை தூக்கி வச்சு கொண்டாடுறதுக்கும் ஒரு பெரிய காரணம் இருக்கும் அப்படினா அது பொருள் அதாவது பணத்தை தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது.
-பொதுமறையில் பொதிந்தவை
◆2◆
ஆதவன் தன் வெளிச்சத் தோகையை பூமிப்பெண் மீது விரித்து மெல்லிய வெப்பத்தை பரிசளிக்க, அதை மகிழ்ச்சியாய் அனுபவித்தபடி தன் காலை நேர உடற்பயிற்சியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தான் அந்த மாளிகையின் இளவரசன் சுஷாந்த்.
ஜெய்பூரில் ஜெம்ஸ்டோன் என்று அழைக்கப்படும் மணிக்கற்கள் அல்லது ஆபரணக்கற்கள் கொண்டு ஆபரணம் தயாரித்து விற்கும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் இளவரசன் அவன்.
அவனை அதற்கு மகாராஜாவாக்கி அழகு பார்க்கத் துடிக்கிறார் அவனின் தந்தை சுக்லா .
ஆனால் சுஷாந்த்துக்கு அவ்வளவாக அதன் மேல் நாட்டம் இல்லாததால் அவன் படித்த சாப்ட்வெர் என்ஜினீரியரிங் சம்மந்தமான தொழிலை தானே நிறுவ முயன்று கொண்டிருந்தான்.
உடற்பயிற்சி முடிந்து உள்ளே வந்தவனை கையில் பேப்பரோடு சோபாவில் அமர்ந்திருந்தவர் பிடித்துக்கொண்டுவிட, லேசாக மண்டிய எரிச்சலுடன்,
"பப்பா, ஸ்டாப் அஸ்கிங் மீ தி சேம் கொஸ்டின். எனக்கு இப்போதைக்கு கம்பெனிக்கு வர விருப்பம் இல்லை.சோ ப்ளீஸ் ஸ்டாப் ஆல் திஸ் கிட்டிஷ் பிஹெவியர்" என்று அழுத்தமாக கூறியவன், "லீனா" என்று குரல் கொடுத்ததும், காலையில் அவன் பருகும் புரோட்டீன் ட்ரிங்க் வந்து சேர்ந்தது.
அதை கையில் எடுத்து வாயருகில் கொண்டு சென்றவன் லீனா அங்கேயே நிற்பதைப் பார்த்து,
"கியா?" என்று கேட்டதும் அவளோ, அவன் கையில் வைத்திருந்த கோப்பையை காட்டினாள்.
அவன் கோபத்துடன், "இந்தா எடுத்துட்டு போ. அதுக்கு தானே நிற்கற?" என்று அவள் கொண்டு வந்த தட்டிலேயே வைத்ததும், பதறியவள் தட்டை டீபாயில் வைத்து, மன்னிப்பு கேட்டுக்கொண்டு அங்கிருந்து அகன்றாள்.
சுக்லா அவன் கையில் அந்த புரதச்சத்து கஞ்சியை கொடுத்தவர், "காலைல என்ன கோபம் பேட்டா கோபம் உனக்கு?" என்று கனிவுடன் வினவினார்.
ஒரு பெருமூச்சை வெளியிட்டு, "ஒரு கேம் டிசைனிங் கம்பெனி ஆரம்பிக்கணும் பப்பா. நீங்க தான் புரிஞ்சுக்காம வந்து உங்க ஜிவல்லரில உட்கார வைக்க பாக்கறீங்கன்னு பார்த்தா, காலைல எக்சர்சைஸ் பண்ணும்போதே உங்க மாதாஜி வந்து என் பையன் சொல் பேச்சு கேட்டு இருக்கிறதுன்னா இரு. இல்லன்னா வெளில போன்னு சொல்றாங்க. எனக்கு புரியல பப்பா. நான் ஏன் வெளில போகணும். நான் இங்கேயே படிக்க தான் ஆசைபட்டேன். ஆனா அந்த ஓல்டு லேடியால தான் பப்பா நான் ஸ்டேட்ஸ் போனேன். ஏன் இப்படி ஏதாவது சொல்றீங்கன்னு கேட்டாலும் பதில் சொல்லாம முறைக்குது. எனக்கு கோபமா வருது பப்பா. ஒருநாள் நானும் கடுப்புல வெளில போறேன்னு சொல்லிடப்போறேன் பாருங்க" என்று சுக்லாவின் தாய் மீது இருந்த கோபத்தை சிறிதும் மறைக்காமல் தந்தையிடம் காட்டிவிட்டு, "பை பப்பா." என்று மாடியில் இருந்த தனது அறை நோக்கி நடந்தான்.
அந்த பெரிய ஹாலைக் கடந்து உணவு மேசை உள்ள அறையைக் கடந்து மாடிப்படிகளை எட்டும்போதே சுக்லா அவரின் தாயாரை கடிந்து கொள்வது சுஷாந்த் காதுகளை எட்டியது.
ஆனாலும் அவன் நடையை நிறுத்தவில்லை. அவனுக்கு அந்த பெண்மணி மேல் தீராத கோபம். அதிலும் அவன் தாயின் இறப்புக்கு அவரே காரணம் என்று இளம் வயதில் பதிந்து விட்டதால் அவரை அறவே வெறுத்தான்.
அவர் கிழக்கில் வந்தால் சுஷாந்த் வடக்கில் செல்வான். அவன் போவது அவருக்குத் தெரிய வேண்டும். அவரை அவன் உதாசீனம் செய்வதை அவர் உணர வேண்டும் என்று நினைத்தான் சுஷாந்த்.
அதற்கு அவன் மனதில் பல காரணங்கள் இருந்தது. அவனின் பிள்ளைப் பருவ நினைவுகளில் ஒரு சாதாரண தாதிஜியாக அவர் நடந்து கொண்டதே இல்லை. அவனின் அன்னை அவனை அரவணைத்துப் பிடிக்காமல் போயிருந்தால் சுஷாந்த் ஒரு பயந்த வெளிறிய குழந்தையாக வளர்ந்திருப்பான். ஆரம்பத்தில் அன்னையும், அதன் பின் அவனின் பாதுகாவல் ஆசிரியையும் அவனை அரவணைத்து நல்வழிப்படுத்தினர். அவனின் பயங்களை களைந்து எறிந்தனர்.
அதிலும் ஆசிரியை கொடுத்த அன்பு தாயன்புக்கு சற்றும் குறைந்தது அல்ல என்று அவன் பெருமிதம் கொள்வான். அவரை உயிராய் நேசித்தான். ஆனால் அவரையும் இதே தாதிஜி பேசியே வெளியே அனுப்பிவிட, அந்த நொடியில் இருந்து அவரை தாதிஜி என்று அழைப்பதை நிறுத்திக்கொண்டான்.
கூடவே அவர் சொல்வதை கேட்பதோ, மதிப்பதோ இல்லை. அவர் அழுத்தி அழுத்தி சுக்லாவின் நிறுவனத்தை கவனி என்று சொல்வதால் தான் சுஷாந்த்துக்கு அந்த தொழிலில் இறங்கப் பிரியம் இல்லை.
பழைய சிந்தனைகளை அசைபோட்டபடி அறைக்குள் வந்தவன் நேராக குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான். மேல்தட்டு வீட்டில் என்னென்ன வசதிகள் ஒரு குளியல் அறையில் இருக்க வேண்டுமோ எல்லாமே பத்து பொருத்தமும் சரியாக இருந்தது.
பாத் டப்பில் வெந்நீரை நிரப்பியவன், அதனுள் இறங்கி தன் உடலை சூடான நீருக்குள் மூழ்கடித்துக்கொண்டான். அவன் கண்களை மூடி தலை சாய்ததும் மனதிற்குள் மின்னலாய் அவளின் சிரிப்பொலி கிண்கிணி நாதமாகக் கேட்டது. இவ்வளவு நேரம் அவன் முகத்தில் இருந்த கடுமை விடைபெற்று மென்மை பரவியது. மெல்லிய இதம் பரவியது மனதில்.
முகமாறியா அவளை அகமறிந்து தன் வாழ்க்கை துணையாக என்று இணைத்துக்கொள்வோம் என்று யோசித்தவன் சிந்தனை மின்சாரத்தைத் தொட்டது போல விதிர்த்தது.
அவள் என் வாழ்க்கை துணையா? எப்போது முடிவு செய்தேன்? அன்று ஒருநாள் அவளின் சிரிப்பொலியைக் கேட்டதோடு சரி, பின் எப்படி அவள் எண்ணமே அவனுள் உழல்கிறது? இதில் வாழ்க்கை துணை வேறா? என்று தன் மனதை தானே கேலி செய்தவன், முதல்ல பிசினஸ் செட் பண்ணனும். இங்க இருந்து கிளம்பினா தான் நிம்மதி. என்று நினைத்தவனாக குளித்து முடித்து வெளியே வந்தான்.
கண்ணாடி முன் நின்றதும், தினமும் உடற்பயிற்சி செய்வதால் திரண்டிருந்த மார்பு, திணவேறிய தோள்கள், ஜில்லெட்டின் உபயத்தால் பளபளத்த தாடை, கருவண்டுக் கண்கள் என்று தன்னையே கண்ணாடியில் பார்த்துக்கொண்டவன், "பரவால்ல டா நீயும் நல்லா தான் இருக்க. அந்த சிரிப்பழகி ரிஜெக்ட் பண்ண மாட்டான்னு நினைக்கிறேன்" என்று தனக்குத் தாமே பேசிக்கொண்டவனுக்குத் தெரியவில்லை. அவனே அவளை ரிஜெக்ட் செய்வான் என்று.
சென்னை புறநகர் பகுதி:
அந்த தனி வீட்டின் சமயலறையில் கேட்ட கானம், ஒலிப்பெருக்கியிலோ, பண்பலையிலோ ஒலிக்கவில்லை என்பது கேட்போருக்கு சட்டென்று விளங்கிவிடும். அதே நேரம் புது நபருக்கு அக்கானம் மனதில் நுழைந்து செயலிழக்க செய்து மகுடிக்கு மயங்கிய பாம்பாக அப்படியே நிற்க வைத்துவிடும்.
சமையறைக்கு பக்கத்தில் இருந்த உணவு மேசையில் மாலை நேரக் காபியை கையில் ஏந்திக்கொண்டு, வாசலை எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான் சித்தார்த்.
உச் கொட்டிவிட்டு சமையறையில் கேட்கும் கானத்தில் கவனத்தை பதித்தான்.
"குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்டபின்னும்
குறையேதும் எனக்கேதடீ ஒரு சிறு
குறையேதும் என்க்கேதடீ
அழகான மயிலாடவும் (மிக) காற்றில்
அசைந்தாடும் கொடி போலவும் "
என்ற ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் பாடல் வரிகள் இனிமையாக காற்றில் அசைந்தாடி அவன் செவிகளை நிறைந்தது.
முழுமையாக சமையலறை பக்கம் திரும்பி அமர்ந்தான். காற்றில் கானத்தோடு கலந்து வரும் வடையின் நறுமணமும் நாசியை தீண்டி சுவை நரம்புகளை தூண்டி விட்டது.
பாடலை வாய் அதன் போக்கில் பாட, கைகள் தன் போக்காய் வடையைத் தட்டி எண்ணெய்க்குள் போட்டுக்கொண்டிருந்தது.
இவளா கச்சேரி மேடையில் சர்வ அலங்கார பூஷதையாக அமர்ந்து தாளம் தப்பாமல் பாடுவது என்று ஒரு நொடி ஸ்மிருதியைக் கண்கையில் சித்தார்த் மனம் எண்ணாமல் இருந்ததே இல்லை.
கச்சேரிக்கு புக் செய்ய வரும்போதும்,கச்சேரி நேரத்திலும் மட்டுமே அவளை பாடகி ஸ்மிருதி சித்தார்த்தாக பார்க்க முடியும்.
மற்ற நேரத்தில் எல்லாமே அவள் சர்வாவின் அன்னை மட்டுமே. சதா சர்வ காலமும் அவளுக்கு சர்வாவின் நினைவு மட்டும் தான். இதோ அவன் வரும் நேரமறிந்து சூடாக வடை போட்டு எடுத்துக்கொண்டிருக்கிறாள். சர்வா அவள் உயிர்நாடி என்றால் சித்தார்த் அவளின் காதல் குவிப்பிடம்.
அவள் சர்வாவுக்காக அவ்வப்போது சித்தார்த்தை டீலில் விடுவதுண்டு, ஆனாலும் சித்தார்த் அதை பெரிதாக எடுத்து சண்டைக்கு வர மாட்டான். காரணம் அவனுக்கும் சர்வா என்றால் உயிர்.
சர்வா அவர்கள் வாழ்வின் வரம். அது நாமெல்லாம் அறிந்த ஒன்று தான். ஆனால் அதை அறியாத ஒருவனென்றால் சர்வா தான். அவனிடம் சொல்லிவிடவேண்டும் என்று அவர்கள் ஆரம்பத்தில் முயன்றபோது, பார்வதியும் வேதாவும் தடுத்து விட்டனர். வயது வந்த பின் சொல்லிக்கொள்ளலாம் என்று நாளைக் கடத்தினர்.
அவர்களின் மறைவுக்குப் பின் ஸ்மிருதியும் சித்தார்த்தும் எவ்வளவோ முயன்றும் சர்வா அதை காது கொடுத்துக் கேட்க மறுத்து விட்டான்.
"உங்களை சங்கடப்படுத்தி என்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்" என்று கறாராக அவன் சொல்லிவிட, இருதலைக் கொள்ளி எறும்பாக இருவரும் தவிக்கின்றனர்.
ஸ்மிருதி ஒரு படி மேலே போய் அவனை நொடியும் அகலாது கூடவே இருக்க முயல்கிறாள். சித்தார்த் ஆண் என்பதால் சர்வாவின் தேவைகளை அறிந்து அவ்வப்போது மனைவியை அடக்கி தன்னோடு நிறுத்திக்கொண்டு சர்வாவை சுதந்திரமாக செயல்பட விடுவான்.
இப்படி இருவருக்குமே உயிரான சர்வா அவனின் பல்சர் பைக்கில் வந்து வாசலில் நிறுத்த, அதுவரை வடை போட்ட ஸ்மிருதி துரிதமாக அனைத்தையும் உணவு மேஜைக்கு மாற்றி, அவனுக்கு காபியையும் எடுத்துக்கொண்டு அவளும் நாற்காலியில் அமர்ந்தாள்.
அவள் அமர்ந்ததை வாசலில் ஷூவை கழற்றும்போது பார்த்துவிட்ட சர்வா. "மம்மி" என்று ஒரே ஓட்டமாக ஓடி அவளருகில் இடித்துகொண்டு அமர்ந்தான்.
"நான் ஒருத்தன் இங்க இருக்கேன்" என்று சித்தார்த் சோர்ந்த குரலில் கூற, அதை அப்படியே ஒதுக்கிய சர்வா,
"அம்மா வாசல் வரை வாசனை வந்து வா வான்னு கூப்பிட்டுச்சே.. என்ன செஞ்சிங்க?" என்று கேட்டு அவள் கொண்டு வந்து வைத்திருந்த பாத்திரத்தை திறந்தவன், "அட என் பேவரேட் வாழைப்பூ வடை" என்று சொன்னதோடு தாயை அணைத்துக்கொண்டான்.
"டேய் சர்வா. இது அநியாயம் டா. என்னை நீ கண்டுக்கவே இல்ல பார்த்தியா?" என்று சித்தார்த் உள்ளே போன குரலில் கூறியதும்,
"இருந்துட்டு போங்க டாடி. நான் என்ன பண்ணனும்? இன்னிக்கு பிராக்டிஸ் இருக்கு ஸ்டேடியம் வாங்கன்னு சொன்னேன்ல? வந்திங்களா?" என்று உரிமையாக கடிந்து கொண்டான்.
சித்தார்த் ஆபிஸ் வேலை என்று பதில் சொல்ல அதை காதில் வாங்காதவன்,
"மம்மி நாளைக்கு நான் ஆபிசர்ஸ் குவார்ட்ஸ போயிடலாம்ன்னு இருக்கேன்" என்று தந்தையை வம்பிழுத்து தன்னிடம் கெஞ்ச விட அவன் நினைத்து சித்தார்த்தை ஓரக்கண்ணால் பார்த்தபடி இருந்தான்.
மாறாக ஸ்மிருதி கண்ணீர் உகுக்கவும் பயந்தவனாக, "என்ன மம்மி நீ? நான் அப்படி போவேனா? அவரை என்கிட்ட கெஞ்ச விட பார்த்தா, நீ இப்படி அழற?" என்று ஸ்மிருதியின் கண்களை துடைத்துவிட்டு கண்ணத்தில் முத்தமிட்டான்.
சித்தார்த் வேகமாக முகத்தைத் திருப்பிக்கொள்ள," டாடி" என்று சின்னக் குழந்தையாக சிணுங்கியவன் சித்தார்த்தை இழுத்து இன்னொரு கையில் அணைத்தான்.
"நீங்க மட்டும் என் மேட்ச் பக்க வரல. நான் கொஞ்ச நேரம் உங்களை வம்பு பண்ணைக் கூடாதா? லவ் யூ டாடி, லவ் யூ மம்மி" என்று இருவரையும் இணைத்துப்பிடித்து கன்னத்தில் முத்தமிட,
என்றும் தங்கள் மகன் இது போலவே எங்களுடன் இணைந்து இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டது பெற்றோர் உள்ளம். ஆனால் விதியின் விளையாட்டோ வேறாக இருந்தது.
சென்னையின் சந்தடி நிறைந்த மைலாப்பூர் பகுதியில் அந்த சிறிய வீட்டினுள் அமர்ந்திருந்த அவளின் மனம் உலைகளமாக கொதித்துக்கொண்டிருந்தது.
படிப்பை நிறுத்தி விட்டு, தனக்கு சம்மந்தமே இல்லாத வேலைக்குச் சென்றது அவளின் தவறு இல்லையே, அவள் வெறியோடு படித்த படிப்பை நிறுத்தவேண்டிய சூழலில் தள்ளிய கடவுளின் குற்றம் தானே. ஆனால் அதற்கான பலனை அவள் மட்டுமே ஏன் அடைகிறாள். அவமானங்கள் எல்லாம் அவளுக்கு மட்டுமே தானா? தன்னை இப்படி நிறுத்திய சமுதாயத்துக்கு இல்லையா?
எங்கே சென்றாலும் 'முழுசா படிப்பை கூட முடிகாத நீ என்னத்த வேலை பார்க்கப்போற' என்று ஏளனம் செய்வதை அவளால் பொறுக்கவே முடியவில்லை.
இதுவே அவள் பழைய ஹர்ஷியாக இருந்திருந்தால் அதை கேட்டவர் வாய் வெத்தலை பாக்கு போட்டது போல உதிரத்தால் சிவந்திருக்கும். ஆனால் இன்றைய சூழலில் அவளால் கோபமெல்லாம் பட முடியாது. முக்கியமாக சுயமரியாதை பார்க்கவே முடியாத நிலையில் இருக்கிறாள்.
குடும்பத்தின் இன்றைய ஒரே ஒரு வருமானம் ஈட்டும் நபர் அவள் என்பதால் கோபத்தில் வேலையை விட்டுவிட்டு அடுத்த வேளை உணவுக்கும் தாயின் மருந்து செலவுக்கும் என்ன செய்வாள்? அவளும் இப்போது செய்யும் வேலையுடன் பகுதி நேரமாக ஒரு மருத்துவமனையில் உதவியாளராக சேர முயன்றாள். ஆனால் படிப்பு இல்லை என்ற காரணத்தால் அவளை ஆயா வேலைக்குக் கூட வரவேண்டாம் என்று அங்கிருந்த மனிதர் காலையில் இவளை தாழ்த்தி பேசியதில் இன்னும் அவளுக்குப் பொருமல் தான். அவள் மட்டும் இன்னும் இரு ஆண்டுகள் பல்லைக் கடித்து படிப்பை முடித்திருந்தால் அவளின் நிலையே வேறு. ஆனால்..
ச்ச.. நினைக்க நினைக்க அவளின் மனம் வெம்பியது. அவள் கனவுப் படிப்பை தூக்கி வீசிவிட்டு தாயின் உடல்நலனுக்காக கிடைக்கும் வேலையில் தன்னை பொருத்திக்கொண்டு படாத பாடுபடுகிறாள்.
அவள் அன்னை அவளுக்கு அருகில் வந்து அமர்ந்தவள், "நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்தறேனா டா?" என்றதும்,
"இல்லை" என்று தான் ஒன்றரை அடி கூந்தல் அசையச் சொன்னாள் ஹர்ஷி.
"நாங்க அப்படி நினைக்கல. ஆன்ட்டி அவங்களால முடிஞ்சதை நமக்கு செய்யறாங்க. நானும் என்னால முடிஞ்ச உதவியை அவங்களுக்கு செய்யறேன். எங்களைப் பத்தி விடு. உனக்கு இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு. வலி ஒன்னும் இல்லையே" என்று அவர் வயிற்றில் கை வைத்துக் கேட்ட மகளை ஆதுரமாக நோக்கினார் இந்து.
"இல்லம்மா இந்த வாரம் டயாலிசிஸ் கூட போக வேண்டாம். மருந்து மாத்திரைக்கே எனக்கு கொஞ்சம் பரவாயில்லாம இருக்கு" என்று சொன்ன தாயை முறைத்தவள்.
"ஏன் நிறுத்திட்ட, உன் கிட்னி தானே எல்லத்தையும் சரி பண்ணிக்கிச்சு. நாளைக்கு ஒலிம்பிக்ஸ்ல ஓடுற அளவுக்கு நீ நல்லா இருக்கன்னு அளந்து விட வேண்டியது தானே? பொய் சொல்றதுன்னு ஆயிடுச்சு. என்னவேனா சொல்லலாம்ல?" என்று முறைத்துவிட்டு எழுந்து உள்ளே போனாள் ஹர்ஷி.
படித்துக்கொண்டிருந்த படிப்பை பாதியில் மகள் விட்டுவிட்டு வரும் சூழல் தன்னால் வந்துவிட்டதே என்று குற்றவுணர்ச்சியில் துவண்டு போனார் அந்த பேதைத் தாய்.
-இணையுமா??
பொதுமறை :
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
- குறள் (751)