கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சங்கரி அப்பன்

siteadmin

Administrator
Staff member
அன்பு வாசகர்களுக்கு என்னைப் பற்றி சில வரிகள். என்னுள் எழுத்தார்வம் வந்தபோது அது எனக்கு இருக்கு என்றே நான் உணரவில்லை. கல்யாணம் ஆகி குழந்தைகள் பிறந்த பிறகு, அவர்களும் பள்ளி செல்ல ஆரம்பித்த பிறகு தான் எழுத ஆரம்பித்தேன். மனசு அமைதியாக இருக்கும்போது தான் எழுதுவேன். முதல் சிறுகதை பத்திரிகையில் வந்தபோது சந்தோசம் தாங்கவில்லை. நல்ல

விஷயங்களை சிந்திக்கும்போது அதை சிறுகதையாக , நாவலாக மினி தொடராக எழுத வேண்டும் என்ற ஆர்வமே என்னை எழுத்தாளி ஆக்கிற்று.



பிறகு சுமார் நாற்பது சிறுகதைகள் பிரபல பத்திரிகைகள் எல்லாவற்றிலும் வந்தது. நாலு குறுநாவல்கள் பிரசுரமாயிற்று.



கல்கி சிறுகதை போட்டியில் இரண்டு முறை கலந்து கொண்டு பரிசு கிடைத்தது. அடுத்து நாவல்கள் எழுத ஆரம்பித்தேன். முதலில் என்னால் நாவல் எழுத முடியுமா என்று மலைப்பாக இருந்தது. எங்கே போய்விடும் காலம்? தான் என் முதல் நாவல் . பாராட்டு கிடைத்தது . சமீபத்தில் லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகை நடத்திய குறுநாவல் போட்டியில் ஆறுதல் பரிசும் கிடைத்தது. எல்லாம் ஆண்டவன் கொடுத்த கொடை என்று தான் சொல்ல வேண்டும்.



வெளிவந்த சிறுகதைகள் ஒரு தொகுப்பாக வாழ்வியல் பூக்கள் என்று என் முதல் புத்தகம் வெளி வந்தது



எல்லா தமிழ் நாட்டு லைப்ரரிகளில் அது உள்ளது. பிறகு நட்சத்திர மாலை என்று ஒரு நூல் வந்தது. சீதா பதிப்பகம் மூலம் அந்தி நேரத்து உதயம் என்ற நாவல் சென்ற வருடம் வந்தது. நன்றாக போயிற்று என்று சொன்னார்.

இப்பொழுது ஸ்ரீ பதிப்பகம் மூலம் எனக்கு ஒரு புதிய ஆரம்பம் கிடைச்சிருக்கு. அன்பென்னும் ஊஞ்சலிலே"



எழுதுவது பெரிய விஷயம் இல்லை. அதை அழகாக தொகுத்து வாசகர்கள் கைகளில் கொண்டு சேர்க்கும் பணி சாதாரனமானதல்ல. ஸ்ரீ பதிப்பகத்துக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தாயில்லாமல் குழந்தைகள் இல்லை. பதிப்பகங்கள், அதை நடத்துபவர்கள் தாய் மாதிரி தான். எழுத்துக் குழந்தைகளை வாசகப் பள்ளியில் சேர்கிறார்கள் . வாசகர்கள் படித்து ஊக்குவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் .



நன்றி வணக்கம்

அன்புடன்

சங்கரி அப்பன்
 
Top