கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

சரோஜாபாட்டி கைவைத்தியம்.. கைவைத்தியம் 18

lathasridharss

Moderator
Staff member
கைவைத்தியம் 18



தினம் ஒரு நெல்லிக்காய்..



தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது, மூன்று ஆப்பிள் சாப்பிடுவதன் பலனைக் கொடுக்கிறது. வைட்டமின் சி சத்து அதிகமுள்ள நெல்லிக்காயைத் தினம் ஒன்று சாப்பிடுவதால், என்னென்ன பயன்கள் என்று கீழே பாருங்கள்.



** ஹுமோகுளோபின் அளவை அதிகரிக்கும். ரத்த சோகைக்கு நெல்லிக்காய் நல்ல மருந்து.

** தலைமுடி கருமையாக செழித்து வளர உதவுகிறது.

** சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது.

** உடல் பருமன் உள்ளவர்கள் எடையைக் குறைக்க, நெல்லிக்காய்ச் சாற்றுடன் இஞ்சி சாறை கலந்து அருந்தி வந்தால், தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றம் வரும்.

** கண்களுக்குக் குளிர்ச்சியைக் கொடுப்பதோடு உடல்சூட்டையும் தணிக்கும்.

** குடல் வாயுவை அகற்றுவதோடு, செரிமாணத்தைத் தூண்டி, சீறுநீரையும் பெருக்க உதவும்.

** முக்கியமாக புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் தடுப்பதில் நெல்லிக்காய்க்கு பெரும் பங்கு இருக்கிறது.


 
Top