பதினெட்டு மாதங்களுக்கு முன்பு
காலைக் கதிரவனின் வெப்பம் ஜன்னலினூடே ஆக்டோபஸ் கரங்களைப் போல் தவழ்ந்து வந்து உறங்கும் அமரிஷாவை மெல்லத் தழுவி, மூடியிருந்த அவளின் விழிகளின் மேல் முத்தமிட்டுக் கொண்டிருந்தது.
வெப்பமும், வெளிச்சமும் உறங்கிக் கொண்டிருந்த அவளின் மூளையைத் தட்டி எழுப்புவதற்குள், முந்திரிக் கொட்டையாய் அவளின் ஆழ்மனம் விழித்துக் கொண்டது. அதன் காரணமாய் அவளின் இருபுருவங்களும் நெளிந்து சுருங்கி, நெற்றியில் மூன்று வரிகள் கொண்ட ஹைக்கூ கவிதையைக் கிறுக்கிக் கொண்டிருந்தன.
அவள் கைகளும் இரண்டும் காற்றில் நர்த்தனமாடத் தொடங்கி எதையோத் துழாவிக் கொண்டிருந்தன.
"அடியேய்! ஆது இங்க வாடி அய்யோ இங்க சீக்கிரம் வாடி!" என அமரிஷா உறங்கிக் கொண்டிருந்த அறையின் ஒரு மூலையில் டேப் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த கண்ணம்மா ஆச்சி கத்தினார்.
அவரின் கூச்சலுக்குப் பதிலேதும் வராமல் போகவே, "அடியேய் ஆத்மிகா, அவ கைக்குப் பக்கத்துல என் மூட்டு வலி தைல பாட்டில் இருக்குடி வா சீக்கிரம்!" என கழுத்து நரம்புகள் புடைக்க, உச்சஸ்த்தாயியில் கத்தினார் கண்ணம்மா.
சமீபமாக பக்கவாதம் வந்ததன் விளைவாக அவரின் இடது கையும், காலும் வலுவிழந்து இருக்க, குரல் மட்டும் அதே பழைய கம்பீரத்துடன் கணீர் என்று வெண்கல மணியை அடித்தது போன்ற ஓசையுடன் இருந்தது.
"தோ வந்துட்டேன் ஐமாதா (ஐ- கண், மாதா - அம்மா) குளிச்சுக்கிட்டு தானே இருந்தேன் எதுக்குக் கத்துற!" என அப்போது தான் குளித்துவிட்டு வந்திருந்த ஆத்மிகா, கழுத்து வரை இருந்த முடியை உதறினாள். அவளின் முடியில் மிச்சம் இருந்த நீர்த்திவலைகள் பறந்தோடி அமரிஷாவின் முகத்தில் பட, அந்த உணர்வில் அவளது கரம் அருகில் இருந்த மேஜை மேல் இருந்த கண்ணாடிக் குப்பியை கபக்கென்று பற்றிக் கொண்டது.
"அய்யோ போச்சு!" என பதறியடித்தபடி ஆத்மிகா செயலாற்றுவதற்குள், அமிரஷா அவள் கையிலிருந்த கண்ணாடி குப்பியின் நுனிப்பகுதியை கையில் பிடித்தபடி அடிப்பகுதியை மேஜையில் ஓங்கி அடித்தாள்.
அது சிலீர் என உடைந்த சிதறி, அதனுள்ளே இருந்த எண்ணெய் முழுவதும் தரையெங்கிலும் ரங்கோலிக் கோலம் போட்டது. எண்ணெய் மணம் அவ்விடம் எங்கும் பரவி, அதை முகர்ந்து பார்ப்பவரின் கற்பனையில் ஒரு ஆயுர்வேத சிகிச்சை மையத்தை உருவாக்கியது.
கண்ணாடிக் குப்பி உடைந்த சத்தம் கேட்டதும், அறையின் ஒரு மூலையில் ஏகாந்த நிலையில் உறங்கிக் கொண்டிருந்த மஃபின் க்கும் என்கிற முனகலோடு எழுந்து தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு, மறுபடி படுத்துக் கொண்டது.
"அய்யய்யோ இன்னிக்கும் உடைச்சுட்டேனா!" என்று கண்கள் கலங்கியபடி எழுந்து அமர்ந்தாள் அமரிஷா. அவள் அகத்தில் இருந்த கவலை, அதிர்ச்சி, அழுகை, கழிவிரக்கம் என்ற அத்தனையையும் அவள் முகம் பிரதிபலிக்க, அவள் கண்கள் எப்போது வேண்டுமானாலும் என் அணையைத் திறப்பேன் என அச்சுறுத்தியது.
"ஐமாதா! எத்தனை தடவை உங்கிட்ட சொல்றது டேபிள் பக்கத்துல உன்னோட தைலத்தை வைக்காதன்னு சொன்னா கேக்குறியா நீ!" என சண்டைக்குத் தயாரான ஆது, தன் ஈர முடியை உதறியபடி கண்ணம்மாவைப் பார்த்து கண்ணடித்தாள்.
அவளின் கண் ஜாடையைப் புரிந்து கொண்ட கண்ணம்மா, "இப்ப என்ன செய்யச் சொல்ற, இந்த எண்ணெய் எல்லாம் வீணாகாம இருக்க நான் வேணும்னா தரையில் உருளவாடி என் சீனி மிளாகயே!" என சரிக்கு சமமாக சண்டையிட,
"நல்லா உருளுங்க எனக்கென்ன! நீங்க உருண்டா, உங்க உடம்புல அங்கங்க இந்த கண்ணாடித் துண்டுல்லாம் குத்தி, உடம்புல சேத்து வெச்சிருக்குற கொழுப்பு எல்லாம் வெளிய ஓடிடும், பரவாயில்லையா ஐமாதா!".
"சே! என் பெயரைக் கொலை பண்றா அமரி இவ! நீ என்னை எவ்வளவு அழகா ஆச்சின்னு கூப்பிடற, அவளை என்னன்னு கேளேன்" என தலைகுனிந்திருந்த அமரிஷாவைத் தன் கட்சிக்கு இழுக்கப் பார்த்தார் கண்ணம்மா.
ஆத்மிகா, "ஆமாம்டி அமர்! ஐமாதா உன்னையும் தான் அமரி, குமரின்னு கூப்பிடுது அதையும் ஏன்னு கேளு!"
கண்ணம்மா, "ஆமாம் அவளும் உன்னை அமரு, குமாருன்னு கூப்பிடறா அதையும் ஏன்னு கேளு!"
"அங்க கேளு அமர்!" என ஆது, கண்ணம்மா ஆச்சியின் புறம் கைகாட்ட,
"இல்ல அங்க கேளு அமரி!" என கையில் இருந்த கைத்தடியை ஆதுவின் புறம் நீட்டினார் அவர்.
"அய்யோ காலையிலேயே ஆரம்பிச்சுட்டீங்களா! உங்க ரெண்டு பேருக்கும் இதே வேலை. யாரை யாரு வேணா எப்படியும் கூப்பிட்டுட்டுப் போங்க! என்னை ஆளைவிடுங்க, நான் இந்த எண்ணெய் எல்லாம் சுத்தம் செய்யறேன்!" என தான் உறக்கத்தில் செய்த செய்கையை தற்காலிகமாக மறந்து, தன் வேலையைப் பார்க்கச் சென்றாள் அமரிஷா.
அமிரஷாவிற்கு அருகில் நின்று கொண்டிருந்த மஃபின், மற்ற இருவரையும் பார்த்து இரண்டு முறை வள் என்று குறைத்து விட்டு, அவளின் பின்னே ஓடிச் சென்றது.
"இதுக்கு பாரு திமிரை அமரிக்கு துணை போகுது, இருடா மபின்னு உனக்கு இன்னிக்கு கரி சோறு கட்டு" என அமரிஷாவின் பின்னே ஓடும் நாய்க்குட்டியைப் பார்த்துக் கத்தினார் கண்ணம்மா. அது அவரை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, எனக்கென வந்தது என்று வாலை ஆட்டியபடி ஓடிவிட்டது.
"ஏன்டி ஆது! இப்படி வாடி!" என அம்ரிதா அங்கிருந்து நகர்ந்ததும் ஆத்மிகாவை அவரின் அருகே அழைத்தவர், "பாவம் டி அமரி! அது வளர்ந்த குழந்தை, போ போய் கொஞ்சம் அவளுக்கு ஒத்தாசை செய்யேன்டி!" என எப்போதும் தனி ஆளாய் தான் உடைத்த பொருட்களை கூட்டி மொழுகும் அமரிஷாவிற்கு உதவச் சொன்னார் கண்ணாத்தா.
"முடியாது ஐமாதா! அவளே செஞ்சாத்தான் மறுபடி இப்படி செய்யமாட்டா!"
"என்னடி அவ என்ன வேணும்னா செய்யுற! ஆழ்மனசுல இருக்குற ஆதங்கம் தானே அவளை இப்படி செய்ய வைக்குது".
"அதுக்காக எத்தனை தடவை பாட்டிலை உடைப்பா! நம்ம வீடுன்னா பரவாயில்லை, நாளைக்கு அவளுக்கு கல்யாணம் காட்சி முடிஞ்சு புருஷன் வீட்டுக்கு போய் இதே மாதிரி ஒரு பாட்டிலை எடுத்து புருஷன் மண்டையை உடைச்சுட்டான்னு என்ன செய்யுறது ஐமாதா!" என எப்போதும் கல்யாணத்தைப் பற்றியே பேசும் கண்ணம்மாவிடம், அப்பாவியாக முகத்தை வைத்தபடி ஆசையைத் தூண்டிவிட்டாள் ஆது.
"ஆமாம்ல, அடியேய் அமரி வா வந்து விரசா துடைச்சு விடு" என கவனத்தை அமரிஷாவிடம் திருப்பினார் கண்ணம்மா.
இது தான் கண்ணம்மா. கணவனிடம் எத்தனையோ அடி உதை வாங்கி, தன் ஒற்றை சம்பளத்தில் குடும்ப பாரத்தை சுமந்து, லோல்பட்டு வாழ்ந்தாலும் திருமணம் தான் ஒரு பெண்ணை முழுமையானவளாக மாற்றும் என்ற அபாரமான (அவ) நம்பிக்கையைக் கொண்டவர்.
இந்த கண்ணம்மாவின் போக்கு தானே நிறைய பெண்களிடம் இருக்கிறது. இதனால் தானே காமுகன் ஆனாலும் கணவன், புல்லுருவி ஆனாலும் புருஷன் என்று சகித்துக் கொள்கிறார்கள் என மனதிற்குள் அனைத்தையும் நினைத்தபடி தலையில் அடித்துக் கொண்டாள் ஆத்மிகா.
"இந்தாடி சீனிமிளகா உனக்குத் தான் முதல்ல கல்யாணம்டி பெறவு தான் அமரிக்கு! நீ தானே அவளை விட மூத்தவ!" என உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா என்ற பாவனையில் ஒலித்தது கண்ணம்மாவின் குரல்.
"அதுக்கு வேற ஆளைப் பாரு ஐமாதா, வெவ்வெ! வெவ்வெ!" என தண்டவாளத்தில் தாளம் போடும் ரயில் போல, கீழ் உதட்டினை மடித்து அதில் பற்களைத் தட்டி தாளம் போட்டாள் ஆத்மிகா.
அமரிஷாவின் எண்ணங்களை திசை திருப்பி விட்டுவிட்டோம் என்ற நிறைவில் கண்ணம்மா ஆச்சியும், ஆத்மிகாவும் நிம்மதியாய் இருக்க, மேலே தூக்கி எறியும் பந்து மறுபடி கீழே விழுவது போல், அமரிஷாவின் எண்ணங்கள் மறுபடி தினம் தினம் வந்து தொல்லை செய்யும் கனவிலேயே வந்து நின்றது.
'நிஜத்தில் செய்ய முடியாத ஒரு விஷயத்தை கனவு நிறைவேற்றிக் கொள்ளுமா என்ன! அன்றே கையில் வைத்திருந்த உடைத்த பாட்டிலை, குடலுக்குள் சரக்கென்று சொருகி இருந்தால், இப்போது நிம்மதியா சுதந்திரமா சிறையில் இருந்திருக்கலாம். இப்படி நித்தம் நித்தம் எண்ணச் சிறையில் மாட்டிக் கொண்டு, தண்டனை அனுபவிக்க தேவையில்லை தானே!' என நினைத்துக் கொண்டவளின் இதழ்கள் கசப்பான சிரிப்பை சிந்தியது.
"ஹேய் பப்ளூ! நீ என்ன இன்னிக்கு புஷ்டியான ஒரு பூவைத் தந்திருக்க, உம்மா!" என வாயில் தோட்டத்தில் இருந்த செம்பருத்தி செடியின் கிளைக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தாள் ஆது.
"உன்னோட அழகான பர்பிள் கலர் இதழ்கள் இன்னிக்கு பிறந்த குழந்தை முகம் மாதிரி இருக்கு, அதுக்கு நடுவுல குங்குமம் வெச்சா மாதிரி ரெட் கலர், குட்டியா க்யூட்டா மஞ்சள் மகரந்தம் வெச்ச உன்னோட கொண்டை. அழகி தான்டி நீ, எப்புர்டி இவ்வளவு அழகா இருக்க!" என பறந்து விரிந்து பூத்திருந்த ஒற்றை அடுக்கு செம்பருத்தியை மென்மையாகத் தன் கன்னத்தில் தேய்த்துக் கொண்டிருந்தாள் ஆத்மிகா.
"எல்லாம் ஜெனிடிக்ஸ் மேடம்!" என்று மெட்டைமாடியில் இருந்து வந்த குரலில் நிமிர்ந்து பார்த்தவள், அங்கே உதிரன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
'இவன் வேற எல்லாத்துக்கும் தியரி சொல்லிக்கிட்டு' என ஓசை வராமல் முணுமுணுத்தவளிடம், "அந்த செடியோட மரபணு அமைப்புல அத்தனையும் இருக்கு மேடம், பட் உங்களோட இந்த அற்புதமான ரசனைக்கு என் பாராட்டுக்கள். நீங்க ஏன் நாங்க நடுத்துற மேகசினுக்கு கவிதை எழுதித் தரக்கூடாது!" என மாடியின் தடுப்புச் சுவரில் வலது கையை ஊன்றிக் கொண்டு, அதில் கன்னத்தை வைத்தபடி கேட்டவனை பற்களை நரநரத்தபடி பார்த்தவள்,
"ம்ம்! நான் ஈவ் டீசிங்கை எப்படி டீல் பண்ணனும்னு கட்டுரை வேணும்னா எழுதித் தரேன் மிஸ்டர் உதிரன்!" என்றவள், அவன் அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவான் என்று ஆவலுடன் காத்திருந்தாள். அப்படி பார்த்திருந்தவளுக்கு அவனின் சுடர் விடும் முகம் சலிப்பைத் தந்தது.
"வாவ் சூப்பர் மேடம்! பெண்ணியம் பத்துன பகுதியை யாருக்கிட்ட குடுக்கறதுக்குன்னு தேடிக்கிட்டு இருந்தோம் ரொம்ப தேங்க்ஸ். அப்படியே கவிதை எழுதறவங்க யாராவது தெரிஞ்சா சொல்லுங்க!" என மாடியில் இருந்து கருப்பு பனியனுடன் எட்டிப் பார்த்தபடி பேசுபவன் ஒரு கோணத்தில் தலைகீழாகத் தொங்கும் வௌவால் போல் அவளுக்குக் காட்சி அளித்தான்.
"ஆமாம் உங்க ஐடி வேலை என்னாச்சு. மாசம் பொறந்ததும் டான்னு மூணாம் தேதிக்குள்ள காசு குடுத்தீங்கன்னா தான் இங்க இருக்க முடியும். நீங்க பாட்டுக்கு மேகசினை நம்பி ஐ.டி வேலையை விட்டுடப் போறீங்க!" என கேலியாகச் சிரித்தபடி வீட்டினுள்ளே சென்றுவிட்டாள்.
வழக்கம் போல் தன் நண்பன் உதிரன், ஆத்மிகாவிடம் மூக்கு உடைபட்டதைப் பார்த்த யாழினியன், "டேய் நீங்க வாங்குன பல்பை எல்லாம் ஒண்ணா கோர்த்தா, வீட்டு வாசல்ல ஒரு சீரியல் பல்பு செட்டே கட்டலாம்!" என்றபடி புருவம் உயர்த்தியவனிடம், "நீ புலிக்குட்டியைப் பார்த்து இருக்கியா!" என்று சம்பந்தமில்லாமல் கேட்டான் உதிரன்.
யாழினியன், "நான் ஏன்டா புலிக்குட்டியைப் பார்க்கணும். எனக்கு பூனைக்குட்டி தான் பிடிக்கும்".
"டேய் நீ என்னிக்காவது புலிக்குட்டியை ரசிச்சு இருக்கியாடா!" என பார்வையை கீழ் வீட்டிலும், சிந்தனையை எங்கேயோ வைத்துக் கொண்டு பேசுபவனிடம், "இது சரியில்லடா, இந்த வீட்டுக்கு வந்து ரெண்டு மாசம் தான் ஆகுது அதுக்குள்ள எப்படிடா!" என புலிக்குட்டியிடம் வசமாக தன் நண்பனின் இதயம் சிக்கிக் கொண்டதோ என்ற ஐயத்துடன் கேட்டான் யாழினியின்.
"போடா இவனே! ஒரு பொண்ணோட தைரியத்தை ரசிச்சா உடனே அதுக்கு லவ்னு அர்த்தமா! நேத்து கூட தான் காய்கறிகார அக்கா, அவங்க குடிகாரப் புருஷனை வெளுத்து வாங்குறதைப் பார்த்து ரசிச்சேன். அதுக்காக அவங்களை லவ் பண்றேன்னு அர்த்தமா! நமக்கு ரஃப் அண்ட் டஃப் தான்டா ரொம்பப் பிடிக்கும்!" என கண் சிமிட்டினான் உதிரன்.
உதிரனின் ரசனையைக் கலைப்பது போல் இருசக்கர வாகனத்தை இயக்கும் ஒலி கீழிருந்து கேட்டது அதன் பின்னாலேயே "ஐமாதா பை! அமர் பை!" என்ற ஒலி வரும் என்பதைக் கணித்தவன், அக்குரலுக்கு மேலிருந்து அதே போல் வாயசைத்தான்.
"கிழிஞ்சுது போ! அந்த புள்ள கிளம்பி ஆபீஸ்க்கு போயிடுச்சு, நீ இன்னமும் ரசனையில இருக்க. மூணாந்தேதி வாடகையைக் குடுக்கலைன்னா வீட்டை விட்டு தொரத்திடும்டா!" என அலுவலகத்திற்குக் கிளம்பிய படி இனியன் புலம்ப, அதைக் கவனிக்காததைப் போல் உதிரன் தன் கை கடிகாரத்தைப் பார்த்தபடி மொட்டை மாடியின் மற்றுமொரு கோடிக்கு நடந்து சென்றான்.
மொட்டைமாடியின் ஒரு பகுதியில் மட்டுமே அவர்கள் வசித்துக் கொண்டிருந்த வீடு இருக்க, இன்னொரு பகுதி காலியாக இருந்தது. அதற்கு மேல் இன்னொரு மாடி முழுவதுமாக காலியாக இருந்தது.
'அங்கேர்ந்து இங்க எதுக்குப் போறான்' என உதிரனின் பின்னால் நடந்து சென்ற இனியன், அவன் செய்து கொண்டிருந்ததைப் பார்த்து மென்மையாகச் சிரித்தான்.
உதிரன் தன் கையை மடக்கி ஆர்ம்ஸைக் காட்ட, பக்கத்து வீட்டில் இருந்த மூன்று வயது சிறுவனும் அவ்வாறே செய்தான். உதிரன் தன் கட்டை மீசையை முறுக்க, அச்சிறுவனோ இல்லாத மீசையைக் காற்றில் முறுக்கினான். ஏய் என்பது போல் நாக்கை மடக்கி உதிரன் சைகை செய்ய, அவனும் அவ்வாறே செய்தான்.
"டேய் கணேஷ் ஸ்கூலுக்கு டைம் ஆச்சு, அங்க என்ன செய்யுற!" என அச்சிறுவனின் தாயின் குரல் கேட்டதும், உதிரனுக்கு ஒரு பறக்கும் முத்தம் தந்துவிட்டு அவன் ஓடிவிட்டான்.
"டேய் உதிரா ஏன்டா இப்படி?"
"அது வந்து..ரச" என உதிரன் முடிப்பதற்குள், "அய்யோ சாமி! ரசனையோ, ரஸ்னாவோ எனக்கு இதெல்லாம் செட்டாகாது. எனக்கு அவனோட குட்டி தங்கச்சி பயந்து பயந்து க்யூட்டா சிரிக்கும்ல, அதான் ரொம்பப் பிடிக்கும்" என்றான் இனியன்.
உதிரன் தகவல் தொழில்நுட்பத் துறையிலும், இனியன் ஒரு தனியார் வங்கியிலும் வேலை செய்து கொண்டிருந்தனர். காலையில் இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து, உதிரன் அவன் அலுவலக கேப் நிற்கும் இடத்தில் இறங்கிக் கொள்வான். இனியன் வண்டியை எடுத்துக் கொண்டு தன்னுடைய அலுவலகத்திற்கு சென்றுவிடுவான்.
மாலை உதிரன் கம்பெனி வண்டியில் இருந்து பொடி நடையாய் வீட்டிற்கு நடந்து வர, இனியன் வண்டியில் வந்துவிடுவான்.
"ஹலோ யாழினி! நேரம் ஆச்சுன்னு ஆளாப் பறந்துக்கிட்டு இருந்த, இங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்க!" என படியில் அசையாமல் நின்று கொண்டிருந்த யாழினியனின் காதில் பின்னால் இருந்து உதிரன் கிசுகிசுக்க, தூக்கி வாரிப்போடத் திரும்பினான் இனியன்.
மாடிப்படியின் சுவற்றில் சாய்ந்து நின்றால், கீழ் வீட்டில் பாடும் பாடல் துல்லியமாகக் கேட்கும் என்பதை எத்தனை முறை அனுபவித்துத் தெரிந்து கொண்டிருப்பான் யாழினியன். அதே போல் இன்றும் காற்றில் தவழ்ந்த வந்த அமுத கானத்தை ரசித்துக் கொண்டிருக்கையில், அதைக் கலைக்கும் காட்டாறாய் கேட்டது உதிரனின் கட்டைக் குரல்.
"ச்சுப் எங்கே எனது கவிதை பாட்டை எவ்வளவு அற்புதமா பாடுறாங்க பாரு! குரலா அது, வீணையின் தந்தி போல அப்படி ஒரு இனிமை!"
"ம்ம்ஹீம்! அதே படத்துல கொஞ்சும் மைனாக்களேன்னு ஒரு பாட்டு வரும் பாரு அது இதை விட க்யூட்டா எனர்ஜெடிக்கா இருக்கும்டா!" என்றபடி இனியனின் கழுத்தில் தன் கரங்களைக் கொண்டு மாலை போல் சுற்றி, அவனை நெட்டித் தள்ளி படியில் இருந்து கீழே இறக்கினான்.
வெளிர் நீல நிறத்தில் ஒளிர் விடும் அலுவலகக் கணினித் திரையில் பார்வையைப் பதித்தவனுக்கு, 'ஏன் நம் மனதில் கொஞ்சும் மைனாக்களே பாடும் போது ஆத்மிகா வருகிறாள்! ஐஸ்வர்யா ராய் தானே வர வேண்டும்' என்ற சந்தேகம் எழுந்தது.
புறக்கண்களைக் கசக்கிக் கொண்டவனின் மனக்கண்ணில், வெவ்வேறு நிற பாவாடை தாவணியில் மறுபடியும் ஆத்மிகாவே வந்து சிரித்தாள்.
'சே என்ன இது முட்டாள்தனம்!' என பின்னந்தலையில் லேசாக தன்னைத் தானே தட்டிக் கொண்ட உதிரனின் பார்வையும், சிந்தனையும் இப்போது அவனுக்கு முன்பிருந்த கணினித் திரையில் நிலைத்தது.
'அது... உதிரனா கொக்கா! நமக்கு இந்த சாஃப்ட் லவ் எல்லாம் செட்டாகுது. அதிரடி கல்யாணம் தான் செட்டாகும். ஏய் மனமே! லவ் கிவ்வுன்னு அலைஞ்சு வாழ்க்கையை ஜவ்வு மாதிரி ஆக்கிடாத! புயல் மாதிரி ஒரு பொண்ணை, குடும்பத்தோட கூட்டமா சூறாவளி சுற்றுப் பயணம் போய் பார்த்து, தடபுடலா கல்யாணம் செஞ்சு, இடியும் மின்னலுமா குடித்தனம் நடத்தி, சும்மா கெத்தா இரும்பு மாதிரி ஒரு பொண்ணும், கரும்பு மாதிரி ஒரு பையனையும் பெத்துப் போடணும் சரியா' என தன் இடது புற மார்பைத் தடவி தத்தளிக்கும் தன் மனதை சமாதானம் செய்தான் உதிரன்.
அவன் மனதோ லப் டப் என்று துடிப்பதற்கு பதில் மாட் டேன் என்று துடித்தது அவன் காதில் விழவில்லை.