"ஹேய் உதிரா இங்க பாருடா, நம்ம ப்ளாக்ல புதுசா போட்டுருக்குற கவிதைக்கு எவ்வளவு வியூஸ் வந்திருக்கு பாரு. சூப்பர்ல, நான் கவிதையைப் படிச்சப்பவே நினைச்சேன், ரொம்ப மென்மையா மயிலறகை வெச்சு இதயத்தை வருடறா மாதிரி ஒரு ஃபீல்டா!" என வார இறுதியான ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலையில் எழுந்தமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தான் யாழினியன்.
ஒரு சிறிய மடக்கு மேஜையைத் தரையில் போட்டு, அதன் முன் கால் நீட்டி அமர்ந்து கொண்டு கணினித் திரையில் தன்னைத் தொலைத்திருந்தான் இனியன். இருள் பிரியாத அந்நேரத்தில் மடிக்கணினியின் ஒளி, அவன் முகத்தில் பட்டதை அரைக் கண் உறக்கத்தில் பார்த்த உதிரன்,
"அடேய் அப்டியே ஜகன்மோகனன் மாதிரியே இருக்கடா! வெள்ளை லெங்கிங்ஸ் மட்டும் தான் மிஸ்ஸிங். இவனும் தூங்காமாட்டான், எவனையும் தூங்க விடமாட்டான், சே!" என்றபடி உடலைப் போர்த்தியிருந்த கம்பிளியால் தலையையும் முழுவதுமாக மறைத்துக் கொண்டான்.
"தூக்கத்துல உன்னால இவ்வளவு லெங்க்த்தி டயலாக் எல்லாம் பேச முடியுது! ஆனா அந்த கவிதை மட்டும் பாராட்ட முடியல அப்படித்தானே!" என போர்வையை விலக்கி அவன் தலையை உலுக்கிய இனியனைக் கண் திறந்து பாராமல், "எது அச்சமில்லை அச்சமில்லை தானே பிரமாதம்டா, போதுமா சொல்லிட்டேன், இப்பயாச்சும் தூங்க விடு" என தூரம் விலகி ஓட நினைத்த உறக்கத்தை எட்டிப் பிடித்து, கட்டிக் கொண்டு மறுபடி உறங்கினான் உதிரன்.
'இவனுக்கு இன்னிக்கு டிபனைக் கட் பண்ணாத்தான் புத்தி வரும்' என சத்தமாகப் புலம்பியவன் மறுபடி கவிதை வரிக்களுக்குள் ஆழ்ந்தான்.
முற்றத்தில் விழுந்த மார்கழிப் பனி
முதல் மகவை ஈன்ற பவளமல்லிக் கொடி
முகம் காட்ட மறுத்த முகிலில் ஒளிந்த நிலா
முற்றும் கனிந்த முற்றிய பலா
விட்டத்தில் விழுந்த முதல் மழைத்துளி
விடாமல் வருடிய மென் குளிர் காற்று
வியப்பில் உயர்ந்த ஒற்றைப் புருவம்
விளிம்பில் நின்றாடிய ஜோடிப் புறா
ஓயாமல் அழும் கைக்குழந்தை
ஓய்ந்து கிடந்த ஒற்றை சக்கர மிதிவண்டி
ஓராயிரம் கதைகள் பேசிய காக்கைக் கூட்டம்
ஓங்குதாங்காய் இருந்த இரட்டை தென்னை மரம்
சலிக்காமல் ஓடிய ரயில்
சகலத்தையும் உள்ளடக்கிய கடல்
இப்படி ஓராயிரம் விஷயங்கள்
சற்றே நின்று ரசியுங்கள்
ரசனைகள் மாறலாம்
ரசிகர்கள் மாறலாம்
ரசனை என்றும் மாறாதது
- அமர்
படிப்பவரை நிச்சயம் ரசனைக்குள் ஆழ்த்தும் கவிதை தான். அதனால் தானோ என்னவோ நிறைய பின்னூட்டங்களைப் பெற்றிருந்தது.
தென்றலைப் விரும்புவோர் இருக்கும் பொழுது புயலை விரும்புவோரும் இருப்பார்கள் தானே! எனவே அமரிஷாவின் கவிதையைப் போலவே, ஆத்மிகாவின் கட்டுரைக்கும் நிறைய பேர் கருத்து தெரிவித்து இருந்தனர்.
அச்சமில்லை அச்சமில்லை என்ற தலைப்பில் தான் ஆத்மிகா கட்டுரை எழுதியிருக்கிறாள் என்ற விவரத்தை, யாழினியனின் மூளை நரம்புகள் மிகத் தாமதமாக நினைவு படுத்தியது.
'ஓ! அதான் அச்சமில்லை அச்சமில்லை பிரமாதம்னு சொன்னானா! இருக்கு இவனுக்கு' என அருகில் இருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து உறங்கும் உதிரனின் தலையில் கவிழ்த்தான்.
"அறிவுருக்கா உனக்கு! அப்படியே கன்னக்தைக் காட்டி நாலு அப்பு அப்பினேன்னு வையு, உன்னை!" என இனியனின் முகத்திற்கு அருகே தன் முகத்தைத் கொண்டு வந்து பற்களைக் கடித்தபடி முறைத்த உதிரனைக் கண்டு, இடி இடியென சிரித்தான் யாழினியன்.
"யாழினி ஒழுங்கா ஓடிடு! நான் செம்ம கடுப்புல இருக்கேன், நீயென்ன இடுப்புல கிச்சுகிச்சு மூட்டுனா மாதிரி சிரிச்சுக்கிட்டு இருக்க!" என மறுபடி உதிரன் உறும,
"இல்லடா! நீ கோபத்துல கழுத்து நரம்பு புடைக்கக் கத்தும் போது அப்படியே சீறி பாயும் சிங்கம் மாதிரியே இருக்க' என்ற இனியனின் கழுத்தை தன் கரத்தால் வளைத்துப் பிடித்தவன், "சிங்கம் கழுத்து நரம்பு புடைக்கக் கத்துறதை நீ பாத்திருக்கியா! வர வர ரொம்ப ஓவராப் போற, இரு இப்பவே அம்மாவுக்குப் போன் பண்ணி உனக்கு ஒரு நல்ல பொண்ணா பாக்க சொல்றேன்" என உதிரன் சொன்னதும்,
"ஐயோ வேண்டாம்டா ப்ளீஸ்! பெரியம்மா நல்ல பொண்ணாத்தான் பார்ப்பாங்க, ஆனாலும் எனக்கு செட்டாகாது வேணும்னா உனக்கு பார்க்கச் சொல்வோம்".
"சரி வா, நம்ம ஓடிக்கிட்டே கல்யாணம் உனக்கா எனக்கான்னு பேசுவோம்!" என்று பேசியபடி ஓரமாக வீசப்பட்டிருந்த ஸ்போர்ட்ஸ் ஷூவை உதிரன் தூசி தட்டி மாட்டுவதைக் கண்டு, "எனக்குத் தெரியும்டா, நீ ஒருமுறை எழுந்துட்டா மறுபடி தூங்க மாட்டேன்னு அதான் அப்படி செஞ்சேன்!" என்றான் இனியன்.
"என்னடா பஞ்ச் டயலாக் எல்லாம் பேசி கொடுமை செய்யற வா சீக்கிரம் பார்க்ல ஜாகிங் போகலாம்" என வீட்டின் வெளியே சென்ற உதிரனை
"அப்பாடா! இன்னிக்கு போர் அடிக்காம ஜாகிங் போகலாம்" என்ற குதூகலத்தில் அவனைத் தொடர்ந்தான் இனியன்.
சில நிமிடங்களில் எங்கே போனான் நம்முடன் ஓடிக் கொண்டிருந்தவன் என இனியன் சுற்றும் முற்றும் பார்க்க, தூரமாய் இருந்த பார்க்கின் சிமெண்ட் பெஞ்சில், ஒரு வயதான தம்பதியருக்கு நடுவே அமர்ந்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான் உதிரன்.
'ஹ்ம்ம்' என இவன் இப்படித்தான் என்பது போல் இடமும், வலமுமாகத் தலையை அசைத்தவன், தன் ஓட்டத்தைத் தொடர்ந்த படி உதிரனை நோட்டம் விட, அவன் சிரித்தபடி தலையசைத்துக் கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் அவன் தலையில் கை வைத்து சிரிப்புடன் எதையோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அடுத்த ரவுண்ட் வருகையில் உதிரனும் சேர்ந்து கொள்ள, "என்னடா வந்ததும் வேலையை ஆரம்பிச்சுட்டியா! காலங்காத்தால அவங்ககிட்ட என்னடா கடலை போட்டுக்கிட்டு இருந்த!" என மூச்சு வாங்கிக் கொண்டு ஓடிய படியே இனியன் கேட்க,
"சீ! கடலைல்லாம் இல்லடா! ரெண்டு பேரையும் பார்த்ததும் மேட் ஃபார் ஈச் அதர்னு தோணுச்சு அதான் போய் சொல்லிட்டு வந்தேன்" என்று கூறிவிட்டு அவனைத் தாண்டி வேகமாய் ஓடியவனை, வேகத்தைக் கூட்டி எட்டிப் பிடித்தான் இனியன்.
"மேட் ஃபார் ஈச் அதரா! ஹா ஹா ஹா இதெல்லாம் கல்யாணம் நடக்குதுல்ல அப்ப சொல்லணும். இவங்களுக்கு அறுபதாம் கல்யாணமே முடிஞ்சிருக்கும் போலயே! இப்பப் போய் சொல்ற உதிரா!"
"இப்பத்தான்டா சொல்லணும். கல்யாணம் செய்யும் போது அநேகம் பேர், மேட் ஃபார் ஈச் அதர் மாதிரித் தான் தெரியுவாங்க, அதெல்லாம் அவங்களோட உருவ ஒற்றுமையைப் பார்த்துத் தான் பெரும்பாலும் சொல்லப்படுது. ஆனா எழுபது வயசு தாத்தா, அறுபத்தஞ்சு வயசு பாட்டியோட ஷூ லேஸை கட்டி விடுறதும். இவரோட முகத்தை வெச்சே மூட்டு வலி அதிகமாயிடுச்சுன்னு புரிஞ்சுக்கிட்ட பாட்டி, அவரோட சேர்ந்து கொஞ்ச நேரம் மரப்பெஞ்சுல உக்காருறதும் தான்டா மேட் ஃபார் ஈச் அதர்" என மெதுவாகப் பின்னால் நடை பயின்று கொண்டிருந்த அந்த வயதானத் தம்பதியரைத் திரும்பிப் பார்த்தபடி கூறினான் உதிரன்.
உதிரனைப் பார்த்து அந்த தாத்தாவும் உற்சாகத்தோடு கை அசைத்தார். உதிரனையே இனியன் ஆவென்று வாயைப் பிளந்தபடி பார்த்திருந்தான்.
"என்னடா முதலை மாதிரி வாயைப் பொளந்துக்கிட்டு பாக்குற!"
"இல்ல உனக்கு இந்த மாதிரி கூட ஃபீல்ங்க்ஸ் இருக்கான்னு ஆச்சர்யமாப் பாத்தேன் உதிரா. நீ சொன்னதுக்கு அப்புறம் தான் அவங்களை நல்லா கவனிச்சேன், எனக்கும் இவங்களைப் போல வாழணும்னு ஆசையா இருக்குடா!" என சிறுவயது முதல் தாய்க்கும், தந்தைக்கும் இடையே நிலவிய கை சண்டை மற்றும் வாய் சண்டையை மட்டுமே பார்த்திருந்த இனியன் ஏக்கத்துடன் பேசினான்.
மாவோடு சேர்ந்து பறக்கும் இட்லித் தட்டு, தட்டோடு தடுமாறிக் கீழே விழும் புதிதாய் வெட்டியிருந்த கேரட், சீறிப் பாயும் ஏவுகணையாகப் பாத்திரங்கள், வீசி எறியப்படும் பாதி எரிந்த விறகுக்கட்டை, அவ்வப்போது நிகழும் ரத்தக் காயங்கள், அடிக்கடி நிகழும் ஊமைக்காயங்கள் என இனியனின் தந்தையும், தாயும் சரிக்கு சமமாக சண்டையிடுவதை உதிரனே சில முறை பார்த்திருக்கிறான்.
அப்படி ஒருமுறை வீட்டுச் சண்டையில், இனியனின் தந்தை அவரின் மனைவியை நோக்கி வீசியெறிந்த கத்தி, எட்டு வயது இனியனின் வலது கண்ணிற்கு மிக அருகில் புருவ முடிவில் வந்து குத்தி நின்றது. அன்றே இனியவை மருத்துவமனையில் இருந்து தன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார் உதிரனின் தாய்.
"ஒரு உசுரோட மதிப்பு தெரியாத உங்களுக்கெல்லாம் எதுக்கு புள்ள! உதிரனோட சேர்ந்து இவனையும் நானே வளர்த்துக்குறேன்!" என அன்று தூக்கி வந்தவர் தான், இன்று வரை இரண்டு நாட்களுக்கு மேல் அவனுடைய சொந்த பொற்றோருடன் இருக்கவிட்டதில்லை.
உதிரனின் பெற்றோரின் ஒற்றுமையைக் கண்டு மகிழ்ச்சி ஒரு புறமும், தவிப்பு மறுபுறமும் என சிக்கிக் கொண்ட இனியனின் உள்ளத்திலுள்ள வலிகளை சொல்லாமல் உணர்ந்து கொண்டவன் தான் உதிரன்.
"டேய் யாழினி! நீயும் இதே மாதிரி உன் பொண்டாட்டிக்கு வயசான காலத்துல ஷூ லேஸ் கட்டிவிடுவ போதுமா!" என குரல் கம்மப் பேசி, சிரித்துக் கொண்டே அவனை அணைத்தான் உதிரன். உதிரனுக்குத் தெரியாமல் கண்ணீர் கசிந்த விழிகளைத் துடைத்துக் கொண்டான் இனியன்.
"டேய் ,அந்த ஷூ லேஸ் கட்டிக்குற பொண்ணு ஏன் அமரிஷாவா இருக்கக் கூடாது?" என கண்கள் மினுமினுக்கக் கேட்டவனிடம், "கண்டிப்பா உன் கையால ஷூ லேஸ் கட்டிப்பாங்க ஆனா உன் கையால தாலியைக் கட்டிப்பாங்களான்னு தெரியலியேடா யாழினி!" என அவனை இறுக்கத்தில் இருந்து விடுவிடுக்க, சிரித்தபடி அவன் கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு நடைபாதையில் ஓடினான் உதிரன்.
******
'இவளின் கையை இப்படிப் பிடித்து ஒரு பத்து வருடங்கள் இருக்குமா! அன்று இணக்கமாய் பற்றியிருந்த கரத்தை இன்று இறுக்கமாய் பற்றியிருக்கிறோம்' என மருத்துவமனை வளாகத்தில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அருகருகே அமர்ந்தபடி, அமரிஷாவின் கையை இறுகப் பற்றியிருந்தாள் ஆத்மிகா.
ஆக்ரோஷமாய் விழித்திக் கொண்டிருந்த அமரிஷாவின் வியர்வை சுரப்பிகள் அனைத்தும் ஆதுவின் கைகளையும் நனைத்துக் கொண்டிருந்தன.
"அமர்! என்னடா இது என்ன உனக்கு புதுசா இன்னும் ரெண்டோ மூணோ சிட்டிங் தானே. கவலைப்படாத!" என அவளின் தோளை ஆதரவாக அழுத்தினாள் ஆத்மிகா.
அமரிஷாவின் பெயரை செவிலியர் அழைத்ததும் அவள் உள்ளே செல்ல, 'உஃப்' என்ற பெருமூச்சோடு பின்னால் இருந்த சுவற்றில் தன் தலையை சாய்த்துக் கொண்டாள் ஆத்மிகா. அவளின் மனக்கண்ணில் அமரிஷாவை முதன்முதலில் பார்த்த கணம் நிழலாடியது.
'எப்போது தான் சென்னை மாநகரம் வருமோ!' என்கிற பதைபதைப்பில் கையைப் பிசைந்தபடி, ஜன்னல் வழியே காரிருளை வெறித்துக் கொண்டு பேருந்திற்குள் அமர்ந்திருந்த பதினாறு வயது ஆத்மிகாவின் அருகே விக்கிரவாண்டியில் ஏறி அமர்ந்தாள் அமரிஷா.
ஆத்மிகாவின் அகத்தின் அசைவை முகம் பிரதிபலிக்காமல் அழுத்தமாய் இருந்தது.
ஒடிசலான தேகமும் அதற்கு ஏற்றவாறு இருந்த உயரமும் ஆதுவை பனிரெண்டு வயது சிறுமியாகக் காட்ட, அவளின் அருகே இருந்த பதினைந்து வயது அமரிஷாவோ இருபது வயது பெண் போல் இருந்தாள்.
சுற்றும் முற்றும் பார்த்த அமரிஷா, ஆதுவின் முகத்தை பார்த்து எதையோ சொல்ல வருவதும் பின்பு தயங்குவதுமாக இருக்க, தன் குட்டி குத்தீட்டிக் கண்களால் அவளை முறைத்தாள் ஆது.
மறுபடியும் அமரி அதையே செய்ய, "என்ன மேடம் வேணும் உங்களுக்கு? வாயை வாயைத் திறக்கிறீங்க, ஆனா வார்த்தையை மட்டும் விழுங்கிடுறீங்க!" என கோபமாகக் கத்த, "அப்பாடா நீங்க தமிழா! இந்த பஸ் எங்க போகுதுங்க!" என்று கேட்டாள் தயங்கித் தயங்கி,
"நான் மட்டும் இல்ல, கண்டெக்டர் கூட தமிழ் தான். இந்த பஸ் எங்க போகுதுன்னு அவர்கிட்டயே கேளுங்க! ஏன் பஸ்ல ஏறும் போது வண்டி எங்க போகுதுன்னு பார்க்கலியா மேடம்!" என சுள்ளென்று விழுந்தவள், ஜன்னலின் புறம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
'நம்ம என்ன கேட்டுவிட்டோம்' என்று இச்சிறுபெண் இப்படி உறுமுகிறாள் என அமரி அமைதி காக்க, 'நம்மளே பெரிய கண்டத்துல இருந்து இப்பத்தான் தப்பிச்சு வந்திருக்கோம், இதுல இந்தம்மா வேற தொணதொணன்னு டீடெயில்ஸ் கேக்குது!' என நினைத்துக் கொண்டாள் ஆது.
பேருந்து நெடுஞ்சாலையில் இருந்த மேடு பள்ளத்தில் சடுகுடு விளையாடி, ஒருவழியாக இந்தியாவில் இரண்டாவது பேருந்து நிறுத்தமான கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தடைந்தது.
பேருந்து நின்று பெருமூச்சு வாங்குவதற்குள், அருகில் அமர்ந்திருந்த அமரியைத் தள்ளிக் கொண்டு வேக வேகமாக குதித்து இறங்கினாள் ஆத்மிகா. அங்கும் இங்கும் பார்த்து, தூரத்தில் இருந்த காயின் பாக்ஸ் தொலைபேசியில் ஏதோ நம்பருக்கு அழைத்து, 'நான் பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டேன் ஜமுனாவிடம் சொல்லிவிடுங்கள்!' என்று இந்தியில் தெரிவித்துவிட்டு இணைப்பைத் துண்டித்து, மறுபடி ஏதோ ஒரு நம்பரை குறுட்டான் போக்கில் தட்டி இணைப்பு போகும் முன்பே துண்டித்தாள்.
அவள் அழைத்த எண்ணை யாரும் மறுபடியும் தொடர்பு கொள்ளக்கூடாது என்பதற்காக இந்த யுக்தி. தன் செயலில் திருப்தியுற்றவள், ஒரு சிறு புன்னகையோடு போனை அதன் இணைப்பில் பொறுத்தி விட்டு திரும்ப, அவளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த அமரியின் மேல் மோதினாள்.
"சாரி!" என்று சொல்லிவிட்டு ஆத்மிகா வேகமாக முன்னேற, அவளைப் பின் தொடர்ந்தாள் அமரி.
'இதென்னடா வம்பாப் போச்சு!' என்று நினைத்துக் கொண்டு ஆத்மிகா பொதுக் கழிப்பறைக்குள் நுழைய அங்கேயும் பின் தொடர்ந்தாள் அமரி.
தன் கருப்பு பட்டியாலா பேண்டின் பையில் இருந்த பேனா கத்தி பத்திரமாக இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்ட ஆது, அமரி அவளை நெருங்கி வருவதற்காகக் காத்திருந்தாள்.
தயங்கித் தயங்கி அமரிஷா அவள் அருகே வர, சட்டென்று அவளின் இடது கரத்தைப் பற்றி வளைத்துத் திருப்பி, அவளின் முதுகுப் புறம் நின்றபடி, அவளின் கழுத்தில் பேனா கத்தியை வைத்தாள் ஆது. சட்டென்று நிகழ்ந்த தாக்குதலில் அமரி திமிற, கத்தியை ஆது அழுத்த அவளின் கழுத்தில் இருந்து ரத்தம் இரண்டு முத்துக்களாய் வெளிவந்தது.